Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மினுவாங்கொட பள்ளிவாசலில் நல்லிணக்க வெசாக் கொண்டாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

minivagoda.jpg

மினுவாங்கொட பள்ளிவாசலில் நல்லிணக்க வெசாக் கொண்டாட்டம்

வன்முறைச் சம்பவங்களினால் பாதிப்படைந்த கம்பஹா- மினுவாங்கொடயில் உள்ள பள்ளிவாசல்களில் நல்லிணக்க வெசாக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

சர்வமதத் தலைவர்கள் மக்களுடன் இணைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெசாக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மையில் அந்த பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் காரணமாக சிங்கள, முஸ்லிம் மக்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டிருந்தன. இந்நிலையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இவ்வாறு வெசாக் வாரம் கொண்டாடப்படுகிறது.

இலங்கையில் பௌத்தர்களினால் நேற்று முதல்  வெசாக் வாரம் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இதனைமுன்னிட்டு இலங்கை முழுவதும் என்றுமில்லாதவாறு வெசாக்கூடுகளும் பௌத்த கொடிகளும் தொங்கவிடப்பட்டு அழகாக காட்சியளிக்கிறது. எனினும் மக்கள் கூட்டம் மகவும் குறைவாகவே காணப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலஙங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்கள் காரணமாக 250 இற்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தனர்.

இதனையடுத்து நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவியது. அதன் பின்னர் இனங்களுக்கு இடையே முறுகல் நிலையேற்பட்டது. வடமேல் மாகாணத்தின் பல பகுதிகளில் கடந்த 13ஆம் திகதி வன்முறைச்சம்பவங்கள் பதிவாகின.

முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் பல தாக்கப்பட்டு, சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக மக்கள் பெரும் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டது. இவ்வாறான நிலையிலேயே இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இவ்வாறு வெசாக் வாரம் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/மினுவாங்கொட-பள்ளிவாசலில/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, outdoor

Image may contain: 3 people, people standing, wedding and outdoor

வெசாக் கொண்டாடும், முஸ்லீம்கள். 

குண்டு வெடிச்சது தேவாலயம். மத நல்லிணக்கம் பேசிப் போற இடம் விகாரையா? 

Edited by தமிழ் சிறி

36 minutes ago, தமிழ் சிறி said:

வெசாக் கொண்டாடும், முஸ்லீம்கள். 

குண்டு வெடிச்சது தேவாலயம். மத நல்லிணக்கம் பேசிப் போற இடம் விகாரையா? 

இது குண்டு வெடிப்பின் பின் சிங்கள பௌத்தர்களால் முஸ்லிம்கள் மேல் மேற்கொள்ளப்பட்ட வன்முறையை அடுத்து இடம் பெறும் நல்லிணக்க முயற்சி.

முஸ்லிம்கள் முதலில் முஸ்லிம்கள், பின் ஶ்ரீலங்கன்கள். அதனால் சிங்கள பௌத்தர்களுடன் நல்லிணக்க முயற்சியை மேற்கொள்கிறார்கள்.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்

எண்ட பாத்திமா டாத்தா, புத்தர்ட பஞ்சலைக்கு பூ கொண்டு போற அழகை பாருங்கவா.

Image may contain: 3 people, people standing, wedding and outdoor

அல்லாவை தவிர வேற யாரையும் வணங்க கூடாதே. வேறு பண்டிகைகள் கொண்டாடக் கூடாதே.

விவசாயிகள் திருநாள் ஆயினும், பொங்கலே கொண்டதா ஆக்கள்,  வெசாக் 'கொண்டு ஆடுகினம்'...அதுவும் நோன்பு காலத்தில்....

நாலு அடி விழுந்தால் மார்க்கம் எல்லாம், கடாசசப்படுமோ?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Nathamuni said:

எண்ட பாத்திமா டாத்தா, புத்தர்ட பஞ்சலைக்கு பூ கொண்டு போற அழகை பாருங்கவா.

Image may contain: 3 people, people standing, wedding and outdoor

உந்த உடுப்பைப் போட்டுக் கொன்டு.. உந்தக் கொடியோடு போவது அல்லாவுக்கு அடுக்காது. கராம். அல்லா கோவிச்சார்.. உங்களை சொர்க்கத்தின் வாசலில் வைச்சு.. நரகத்துக்கு டிப்போட் பண்ணிடுவாரே. ஐயகோ.  🤣

Edited by nedukkalapoovan

D64IwlTXkAALO8f?format=jpg&name=900x900

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Nathamuni said:

எண்ட பாத்திமா டாத்தா, புத்தர்ட பஞ்சலைக்கு பூ கொண்டு போற அழகை பாருங்கவா.

Image may contain: 3 people, people standing, wedding and outdoor

அல்லாவை தவிர வேற யாரையும் வணங்க கூடாதே. வேறு பண்டிகைகள் கொண்டாடக் கூடாதே.

விவசாயிகள் திருநாள் ஆயினும், பொங்கலே கொண்டதா ஆக்கள்,  வெசாக் 'கொண்டு ஆடுகினம்'...அதுவும் நோன்பு காலத்தில்....

நாலு அடி விழுந்தால் மார்க்கம் எல்லாம், கடாசசப்படுமோ?

இலங்கை வாழ்  முஸ்லிம்களுக்கு மார்க்கம் எவளவு முக்கியமோ அதே அளவு வியாபாரமும் முக்கியம்.இலங்கையின் தனியார் ஏற்றுமதி கிட்டதட்ட அவர்கள் கையில்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி எப்ப இருந்து பன்சலவுக்க கறுப்பு உடையில் போக அனுமதிக்கத் தொடங்கினவை..??!

27 minutes ago, nedukkalapoovan said:

அதுசரி எப்ப இருந்து பன்சலவுக்க கறுப்பு உடையில் போக அனுமதிக்கத் தொடங்கினவை..??!

பள்ளிவாசலில் வெசாக் கொண்டாடுகிறார்கள் என கூறப்பட்டிருப்பதால் கறுப்பு உடையுடன் செல்வோர் பள்ளிவாசலுக்கு தான் செல்கிறார்கள் என நினைக்கிறேன். அல்லது பொது இடங்களில் கொண்டாடுகிறார்கள்.

வெவ்வேறு இடங்களில் கொண்டாடப்பட்ட வெசாக் படங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டிருப்பதால் வந்த குழப்பம் என நினைக்கிறேன்.

பன்சலவுக்கு கறுப்பு உடையுடன் அனுமதிக்க மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் எங்கண்ட சிங்கன், அஞ்சாநெஞ்சன் ஞானசேரர் வெளில வருமட்டும் தான்.

இன்டைக்கு மைத்திரி போய் சந்தித்து, உடம்பை தேத்தி ரெடியா இருக்க சொல்லியிருக்கிறார்.

 http://www.dailymirror.lk/breaking_news/President-visits-Gnanasara-Thera-at-Prison-Hospital/108-167460

அநேகமா, அவர் ஜனாதிபதி தேர்தலில் நிற்பார்... :grin: 

2 hours ago, Nathamuni said:

அல்லாவை தவிர வேற யாரையும் வணங்க கூடாதே. வேறு பண்டிகைகள் கொண்டாடக் கூடாதே.

விவசாயிகள் திருநாள் ஆயினும், பொங்கலே கொண்டதா ஆக்கள்,  வெசாக் 'கொண்டு ஆடுகினம்'...அதுவும் நோன்பு காலத்தில்....

நாலு அடி விழுந்தால் மார்க்கம் எல்லாம், கடாசசப்படுமோ?

வெசாக் கொண்டாட்டத்தில் ஈடுபடும் முஸ்லிம்களை விமர்சிக்கும் ஒரு முஸ்லிமின் பதிவு. 😀

599AD130-F0EF-4C4C-9EAB-C1EA0C9B7204.jpg

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Lara said:

வெசாக் கொண்டாட்டத்தில் ஈடுபடும் முஸ்லிம்களை விமர்சிக்கும் ஒரு முஸ்லிமின் பதிவு. 😀

599AD130-F0EF-4C4C-9EAB-C1EA0C9B7204.jpg

புகை அடிக்க எலி வெளில வாற மாதிரி, இந்த மாதிரி பதிவு போடுறவயள், ஜிகாதிகளா இருக்க சான்ஸ் கூட...🥵

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Lara said:

வெசாக் கொண்டாட்டத்தில் ஈடுபடும் முஸ்லிம்களை விமர்சிக்கும் ஒரு முஸ்லிமின் பதிவு. 😀

599AD130-F0EF-4C4C-9EAB-C1EA0C9B7204.jpg

3 hours ago, Nathamuni said:

புகை அடிக்க எலி வெளில வாற மாதிரி, இந்த மாதிரி பதிவு போடுறவயள், ஜிகாதிகளா இருக்க சான்ஸ் கூட...🥵

சிலையை வணங்குவது  "காபீர்கள்"  என்று சொல்லிக் கொண்டே....
புத்தருக்கு... தாமரை பூ கொண்டு போய்  வணங்கியதன் மூலம், 
முஸ்லீம்களும் ஒரேநாளில்,  காபீர்களாக  மாறி விட்டார்கள். :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

குண்டு வெடிச்சது தேவாலயம். மத நல்லிணக்கம் பேசிப் போற இடம் விகாரையா? 

உண்மை சிறியர்.

இப்ப இவையின்ர பிரச்சனை சோனகருக்கு எதிராக கலவரம் ஏற்படகூடாது என்பதே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

உண்மை சிறியர்.

இப்ப இவையின்ர பிரச்சனை சோனகருக்கு எதிராக கலவரம் ஏற்படகூடாது என்பதே!

Image may contain: 1 person, smiling, standing

மீரா.... சிங்களவனின் அடி அந்தளவுக்கு வேலை செய்யுது.
தாங்கள் தப்புவதற்காக... மதத்தை கூட விட்டுக்  கொடுத்த அதிசயத்தை... இலங்கை முஸ்லீம்களிடம் கண்டேன். 🤠

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

குண்டு வெடிச்சது தேவாலயம். மத நல்லிணக்கம் பேசிப் போற இடம் விகாரையா

நல்லிணக்கம் என்ற போர்வையில் அடுத்த குண்டு வைக்க உளவு பார்க்க போயிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

உண்மை சிறியர்.

இப்ப இவையின்ர பிரச்சனை சோனகருக்கு எதிராக கலவரம் ஏற்படகூடாது என்பதே!

"தக்கன பிழைக்கும்" இதற்கு உதாரணம் இவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

"தக்கன பிழைக்கும்" இதற்கு உதாரணம் இவர்கள்

இது பம்மாத்து எண்டு எல்லோருக்கும் தெரியும்... ஒரு நாலு, ஐந்து பேர் வேலையை வைத்து... முடிவுக்கு வரேல்லாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, smiling, standing

மீரா.... சிங்களவனின் அடி அந்தளவுக்கு வேலை செய்யுது.
தாங்கள் தப்புவதற்காக... மதத்தை கூட விட்டுக்  கொடுத்த அதிசயத்தை... இலங்கை முஸ்லீம்களிடம் கண்டேன். 🤠

3 hours ago, ரதி said:

"தக்கன பிழைக்கும்" இதற்கு உதாரணம் இவர்கள்

எமது மூதாதையர்கள் தொப்பியை வைத்து ஒரு கதை சொல்வார்கள். அதை இங்கே சொல்ல முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, குமாரசாமி said:

எமது மூதாதையர்கள் தொப்பியை வைத்து ஒரு கதை சொல்வார்கள். அதை இங்கே சொல்ல முடியாது.

அதை யாழில் சொன்னால் உடனே முத்த்தலாக்தான்....நான் பலதடவை அனுபவிசிட்டன்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Lara said:

D64IwlTXkAALO8f?format=jpg&name=900x900

வாற  தீபாவளிக்கு... பாத்திமா விளக்கேத்த, முஸ்தபா வெடி கொளுத்த...  💥
ஒரே... கொண்டா ட்டமாக,  இருக்கப்  போகுது. :grin:

On 5/19/2019 at 1:54 PM, தமிழ் சிறி said:

Image may contain: 2 people, outdoor

Image may contain: 3 people, people standing, wedding and outdoor

வெசாக் கொண்டாடும், முஸ்லீம்கள்

முஸ்லிம்களுக்கு இப்பிடியொரு நிலை வருமென்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள்!
பள்ளிவாசல்களில் புத்தர் சிலைகளை வைத்தாலும் வைப்பர்!

  • கருத்துக்கள உறவுகள்

large.Image-1.jpg.cc995af8e69b20df38513d23acfa2158.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அடியைப்போல அண்ணன் தம்பி உதவாது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Nathamuni said:

large.Image-1.jpg.cc995af8e69b20df38513d23acfa2158.jpg

ஊரிலை சொல்லுவினம் எல்லே அடிச்ச அடியிலை மண்டை கலங்கிப்போச்சுது எண்டு....அதுதான் இது.....எப்பிடி பிளேட்டை மாத்துறாங்கள் பாத்தியளே......நல்லவங்களாம் ஆ.....புல் பூண்டுகளுக்கும் கெடுதல் நினைக்காத உத்தம கூட்டங்களாம்....அடிங்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.