Jump to content

நாம் தமிழர் - தேர்தல் 2019

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் - தேர்தல் 2019

தற்போது வரை 💪😍😍🔥🔥🔥

Arakkonam - 24495
Arani - 32151
Chennai Central - 30684
Chennai North - 49412
Chennai South - 34818
Chidambaram - 26049
Coimbatore - 58289
Cuddalore - 32785
Dharmapuri - 16769
Dindigul - 49741
Erode - 38849
Kallakurichi - 29806
Kancheepuram - 62390
Kanniyakumari - 13135
Karur - 32553
Krishnagiri - 27145
Madurai - 32178
Mayiladuthurai - 30721
Nagapattinam - 41361
Namakkal -38378
Perambalur - 52494
Pollachi - 31181
Ramanathapuram - 26762
Salem - 25376
Sivaganga - 56315
Sriperumbudur - 35627
Tenkasi - 58855
Thanjavur - 55643
Theni - 14317
Thiruvallur - 41207
Thoothukkudi - 43107
Thiruchirappalli - 64979
Tirunelveli - 49528
Tiruppur - 41670
Tiruvannamalai - 27192
Viluppuram - 24399
Viluppuram - 52552
Puducherry - 15568

Total - 14,18,481

L’image contient peut-être : 2 personnes, personnes souriantes
 
Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ( சுமார் 15 லட்சம் வாக்குகள்) 4 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

www.ns7.tv | #Results2019 | #Verdict2019 |#ElectionResultsWithNews7Tamil | #News7Tamil

L’image contient peut-être : 1 personne, sourit, texte
 
Link to comment
Share on other sites

ஒரு உண்மையான சனநாயக பண்பின் அடிப்படையில் 4% உறுப்பினர்கள் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்து இருக்கலாம். அந்த நிலைமை இங்கு  இல்லை.

ஆனால், அண்ணன் சீமான் கூறுவது போல இது ஒரு ஆரம்பமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய நிலவரப்படி #நாம்_தமிழர்_கட்சி சிறப்பாக வாக்குகள் பெற்றிருக்கும் தொகுதிகள்...

1. வட சென்னை (6.37%)
2. தென் சென்னை (4.38%)
3. திண்டுக்கல் (5.01%)
4. காஞ்சிபுரம் (5.39%)
5. மதுரை (4.55%)
6. நாகப்பட்டினம் (4.43%)
7. பெரம்பலூர் (4.46%)
8. இராமநாதபுரம் (4.79%)
9. சிவகங்கை (5.66%)
20. திருபெரும்புதூர் (6.55%)
11. தென்காசி (5.02%)
12. தஞ்சாவூர் (5.36%)
13. தூத்துக்குடி (4.15%)
14. திருச்சிராப்பள்ளி (6.37%)
15. திருநெல்வேலி (5.08%)
16. விருதுநகர் (4.98%)

அருமை... வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5 வீதத்திற்கே வாழ்த்துக்கள் என்பது டெபாசிட் போகவில்லை என்பதற்கான வாழ்த்தா அல்லது டெபாசிட் போனதுக்கான வாழ்த்தா?🤣😂

சீமானின் நாம் தமிழர் தொடர்ந்தும் இப்படியே 5 வீதக் கட்சியாக இருப்பதுதான் தமிழர்களுக்கு நன்மை பயக்கும்💪🏽💪🏽💪🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

5 வீதத்திற்கே வாழ்த்துக்கள் என்பது டெபாசிட் போகவில்லை என்பதற்கான வாழ்த்தா அல்லது டெபாசிட் போனதுக்கான வாழ்த்தா?🤣😂

சீமானின் நாம் தமிழர் தொடர்ந்தும் இப்படியே 5 வீதக் கட்சியாக இருப்பதுதான் தமிழர்களுக்கு நன்மை பயக்கும்💪🏽💪🏽💪🏽

பலவாறும் சொல்லி  வந்தார்கள்

புதுச்சின்னம்

அதை  மக்களுக்குள் கொண்டு போவது  கடினம்

இதனால் போனமுறையை  விட குறைவான  வாக்ககளே  கிடைக்கும் என.

5 வீதம் என்பது  சின்னத்தை  நிரந்தரமாக்க.

மற்றும்படி 5 வீதம்  என்பது தவிர்க்க  முடியாத  சக்தியாக்க.

ஒத்த ரூபாய் காசு கொடுக்காமல் வாங்கிய #சுத்தமான_வாக்கு...

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

சட்ட மன்ற தேர்தலில் 1% வாக்குகள்; இந்த முறை 5% வாக்குகள் ..........!!!!!  👍👍👍👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலினின் அரசியல் தோல்வி.  

பாராளுமன்ற தேர்தலில் வென்று, காங்கிரசுக்கு ஆதரவு தந்து மத்தியில் ஆட்சியிலும் பங்கு பற்றி க் கொண்டே, தமிழக அரசை கலைத்து தேர்தலை சந்தித்து முதல்வராக வரவேண்டும் என்பதே ஸ்டாலினின் திட்டமாக இருந்தது.

ஆனால், எடப்பாடியோ சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரும் கவனம் செலுத்தினார். மத்தியில் காங்கிரசும்  மாநிலத்தில் ஸ்டாலினும் முதல்வராக முடியவில்லை. அதவேளை திமுக க்கு கிடைத்த எம்பிக்கள் 20 மட்டுமே மிகுதி கூட்டணிகளுக்கே.

வாழ்வின் முதல் தடவையாக சரியான முடிவை எடுத்த வகையில், வைகோ மகிழ்வுடன் உள்ளார்.  

எடப்பாடி இப்போது தேவையான பெரும்பான்மையுடன், மத்தியில் ஆட்சியில் இருக்கப்போகும் பாஜக ஆதரவுடன் அசைக்க முடியாத ஆதரவுடன் 2021 வரை பதவியில் இருக்கப் போகிறார். தளம்பிக் கொண்டிருந்த 3பேரும் மறுபடி எடப்பாடி ஆதரவு நிலை எடுக்கப் போகின்றனர்.

அத்துடன் தினகரன் அரசியலும் முடியும் அல்லது முடித்து வைக்கப்படும். அவருடன் இருந்த செந்தில் பாலாஜி திமுக சென்று வென்று விட்ட நிலையில், தங்கத்தமிழ்செல்வன் போன்றோர் இனி இவருடன் இருப்பது சந்தேகமே.

மூன்றாவது இடத்துக்கு ஆன போட்டியில் கமலும் சீமானும் போட்டி இட்டாலும், கமல் நகர்புறத்தில் எடுத்ததை, சீமான் கிராமப்புறங்களில் எடுத்ததன் மூலம் தராசு சமநிலையில் உள்ளது. அநேகமாக நாளை சரியான புள்ளி விபரம் தெரியும்.

சீமானுக்கு அரசியல் இப்போது முழுநேர வேலை. கமலுக்கு அப்படி இல்லை. ஆகவே, அடுத்த இரண்டு ஆண்டுகள் கமல் களத்தில் ஓடி வேலை செய்வாரா, அல்லது சினிமா பக்கம் சென்று விடுவாரா தெரியவில்லை. இருப்பினும், குறுகிய காலத்தில் அவர், NOTA வுக்கு செல்ல இருந்த பல வாக்குகளை எடுத்துக் கொண்டார் என்பதால், சீமான் தனது வாக்கு வங்கியை அதிகரித்துக் கொண்டுள்ளார் என கூறலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கமல், தினகரன் இப்படிப் பல புதியோர் களத்தில் நிற்கும் போது, 5 சதவீதம் எடுப்பது லேசான விசயம் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சினிமாப் பிரபல்யம் உலக நாயகன்.. காசு நாயகன்கள் எல்லாம்... தங்கள் சில பல செல்வாக்குகளை இந்தத் தேர்தலில் காட்டியும்.. தி மு க.. அதிமுக என்பன வலுவான கூட்டணிகளோடு நின்றும்..

நாம் தமிழருக்கு வாக்குச் சதவீதம் 4% ஆல் அதிகரித்திருப்பது மக்கள் மாற்றத்தை நோக்கிப் போகிறார்கள் என்பதையே ஆகும். அதிலும் மக்கள் சரியான மாற்றம் ஒன்றை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கிறார்கள் என்று அர்த்தமாகும்.

இந்த வாக்கு வங்கியை... உள்ளூராட்சி சபைகள்.. நகர சபைகள்.. மாநகர சபைகள்.. பஞ்சாயத்து சபைகளுக்கான தேர்தலில் போட்டியிட்டு நாம் தமிழர் கட்சி.. தமக்கான மக்கள் சேவையை அடிமட்டத்தில் இருந்து ஆரம்பிக்குமாக இருந்தால்..

நிச்சயம் நாம் தமிழருக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

கிருபண்ணா போன்றவர்கள்.. தலைவரையும் கொடியையும் மறந்திட்டால்.. மறைச்சிட்டால் எல்லாம் கிடைக்கும் என்று சொல்லித் திருச்சிச்சினம்.. மீளாய்வு.. ஆராய்வுன்னு எழுதித் தள்ளிச்சினம்.. பின் புலித்தத்துவம்.. முன் புலித் தத்துவம்.. என்று பல தத்தக்கபித்தக்க போட்டிச்சினம்.. என்னத்தை கடந்த 10 ஆண்டுகளில் சாதிச்சவை என்று கேளுங்கோ... பூச்சியம்.

ஆனால்.. சீமான்.. நாம் தமிழராக.. ஒருங்கிணைந்து தமிழகத்தில்.. இத்தனை இலட்சம் மக்களை தேசிய தலைவரின் படத்துக்குப் பின்னால் அணி வகுக்க வைச்சிருப்பது.. சிலருக்கு கசக்கத்தான் செய்யும். குறிப்பாக.. அவரை.. மறைக்க மறக்க நினைப்பவர்களுக்கு. 

நாம் தமிழர் எனி தீர்மானிக்க வேண்டியது மக்களுக்கான பாதையில்.. மக்களோடு சேர்ந்து பயணிப்பதை தான். அதுவே அவர்களுக்கான.. அதிகாரத்தை மக்கள் ஏகோபித்து வழங்க உதவும். அதுக்கு பிரபாகரன் என்ன யார் அல்லது எது பலம் சேர்த்தாலும் இனத்தின் விடிவுக்காக நன்றி மறப்பின்றி.. பாவித்தால் அதுவும் அவர்களின் தியாகத்தால்.. கிடைக்கும் தமிழ் மக்களுக்கான.. ஓர் சின்ன நன்மையே ஆகும். 

Link to comment
Share on other sites

3 minutes ago, nedukkalapoovan said:

ஆனால்.. சீமான்.. நாம் தமிழராக.. ஒருங்கிணைந்து தமிழகத்தில்.. இத்தனை இலட்சம் மக்களை தேசிய தலைவரின் படத்துக்குப் பின்னால் அணி வகுக்க வைச்சிருப்பது.. சிலருக்கு கசக்கத்தான் செய்யும். குறிப்பாக.. அவரை.. மறைக்க மறக்க நினைப்பவர்களுக்கு. 

சீமான் விடுதலைப்புலிகளையும் தலைவர் பிரபாகரனது கருத்துக்களையும் உளப்பூர்வாமாக உள்வாங்குபவராகத் தெரியவில்லை. அவரைப்பொறுத்த வரையில் தன்னைப் பிரபல்யமாக்க தற்போதைக்கு தேவையானவை புலிகளின் பெயர். தமிழ்த் தேசியவாதம் பேசி தமிழ் உணர்வாளர்களை தனது படிக்கல்லாக்கி அதிகாரத்தில் அமர்வது தற்போதைய அவரது நோக்கு

அவரது வளர்ச்சி ஆரோக்கியமான தமிழ்த் தேசிய வளர்ச்சிக்கு ஒருபோதும் உதவப்போவதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nedukkalapoovan said:

நாம் தமிழர் எனி தீர்மானிக்க வேண்டியது மக்களுக்கான பாதையில்.. மக்களோடு சேர்ந்து பயணிப்பதை தான். அதுவே அவர்களுக்கான.. அதிகாரத்தை மக்கள் ஏகோபித்து வழங்க உதவும். அதுக்கு பிரபாகரன் என்ன யார் அல்லது எது பலம் சேர்த்தாலும் இனத்தின் விடிவுக்காக நன்றி மறப்பின்றி.. பாவித்தால் அதுவும் அவர்களின் தியாகத்தால்.. கிடைக்கும் தமிழ் மக்களுக்கான.. ஓர் சின்ன நன்மையே ஆகும்

 ஆனால் வாலுகளுக்கு எதுவும் ஏறாது! திமுக, அதிமுக போன்ற கட்சிகள் சிக்கலுக்குள் இருந்த இந்த காலகட்டத்திலேயே  ஐந்து வீதம் என்றால் அவர்கள் பலமாக மீண்டு வரும்போது  சீமான் மீண்டும் ஒரு வீதத்திற்கு போய்ச் சேருவார்🤣😂

இது ஓர் வாட்ஸப் பதிவு..

எமது இனத்தையும் தலைமையையும் வைத்து பிழைப்பு நடாத்திய சீமானிற்கு பலத்த அடி. வெறும் உணர்ச்சிப் பேச்சுக்களால் தமிழ்த்தேசியத்தை வைத்து ஊழிக்கூத்தாடிய சீமான் நிராகரிக்கப்பட்டமையானது எமது புலம் பெயர் தமிழ்த் தேசிய வாதிகளும் தங்களை மீளாய்வுக்குட்படுத்த வேண்டும். புலம்யெர் ஈழ  மக்களின் பணமும் இம் முறை சீமானின் தேர்தல் நிதிக்காக  அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.அவர் உயிரோடைஇருக்கிறார்...நம்புங்கள் நாளை நமக்கு ஒரு நாடு பிறக்கும் என்பதே சீமானின் இலட்சிய வாசகங்கள்...இனிமேல் தன்னும் எங்கள் தேசிய உணர்வை தலைமையை சீமான் கொச்சைப்படுத்த அனுமதிக்கக் கூடாது.அதனை வைத்து அரசியல் வியாபாரம் புரிய துணைபோகக் கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானுக்கு காசும் புகழும் தேவை என்றால்.. நாலு படத்தை எடுத்து அதை வெற்றி பெற வைப்பதில் தீவிரம் காட்டி இருக்கலாம். தேசிய தலைவரும் அவரை எல்லாம்.. கூப்பிட்டு ஒரு நட்புறவாடல் செய்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

எம்மவர்கள் எமது தலைவரையும்.. போராளிகளையும் போராட்டத்தையும் காட்டிப் பிழைத்ததை விடவா.. சீமான பிழைச்சிட்டார்..?!

பிரபாகரனை.. புலியை தூக்கிய படியால்.. அவர்கள் பட்ட வேதனையும் சோதனையும் தான் அதிகம். அதை தூக்காமல்.. பெரியார்.. அண்ணா.. திராவிடம் என்று சீமானும்.. வை.கோ ரேஷ்சில் பெரிய திராவிடக் கட்சிகளுக்குள் கலந்திருப்பாரானால்.. இப்போ... அவரின் பதவிகளை அனுபவித்துக் கொண்டிருப்பார். 

ஆனால்.. பிரபாகரனை புலியை தூக்கி சீமான் அனுபவித்தது சிறையும்.. வழக்குகளும் தான் அதிகம். 

எமக்காக குரல் கொடுப்பவர்களை எமது அரைகுறைப் புத்தியால் மட்டும் பார்க்கக் கூடாது. நியாயத்தோடு அவர்கள் தொழிற்படும் சூழலை கருத்திக் கொண்டு.. அந்த சூழலில்.. இன்றிருக்கும் நாம் அன்று எதிர்பார்த்த மாற்றங்களின் அளவு என்ன என்பதை எல்லாம் கணக்கிட்டு கருத்துச் சொல்லனுமே தவிர..

தமிழ் தேசிய அரசியலை நிராகரிக்க.. எனி எந்தத் தமிழனாலும் முடியாது. அப்படி நிராகரித்தால்.. தமிழன் என்ற இனம் இந்த உலகில்.. இல்லாமல் போகும். அவ்வளவும் தான். 

3 minutes ago, கிருபன் said:

ஆனால் வாலுகளுக்கு எதுவும் ஏறாது! திமுக, அதிமுக போன்ற கட்சிகள் சிக்கலுக்குள் இருந்த இந்த காலகட்டத்திலேயே  ஐந்து வீதம் என்றால் அவர்கள் பலமாக மீண்டு வரும்போது  சீமான் மீண்டும் ஒரு வீதத்திற்கு போய்ச் சேருவார்

இதை விட பலமா..?!

கிட்டத்தட்ட எல்லாரும் கூட்டணி.

மதிமுக.. பாமக.. தே திமுக.. காங்கிரஸ்.. இடதுசாரி தாடிக்காரக் கூட்டம்.. எல்லாமே.

இதில் கமல்.. சுதாகரன் அவரவர் வாக்கு வங்கியை இனங்காட்ட தனித்து நின்றார்கள். அதிலும் செல்வாக்கு.. பணம்.. தேர்தல் பொருள். சுத்தமா கொள்கை கிடையாது.

ஆனால்.. நாம் தமிழர் மட்டுமே கொள்கையோடு தனித்து நின்றார்கள். சல்லிக் காசும் மக்களுக்கு கொடுக்கவில்லை.. வாக்கு வாங்க.

எது பலம்.. எது பலவீனம்..??! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஸ்வரூபம் எடுத்த "மய்யம்" மெளர்யாவும்..வீறு கொண்டு போராடிய காளியம்மாளும்..வட சென்னையில் அனல் போட்டி

சென்னை: "யார் என்று தெரிகிறதா?" என்று வட சென்னையில் வைத்துக் காட்டி விட்டார் கமல்ஹாசன். அட்டகாசமான ஒரு போட்டியை வட சென்னை பார்த்திருக்கிறது. புதிதாக பிறந்து வந்த மக்கள் நீதி மய்யமும், அதற்கு சளைக்காமல் சலங்கை கட்டி ஆடிய நாம் தமிழர் கட்சியின் காளியம்மாளும் அதிமுக, திமுக கூட்டணிகளை அதிர வைத்துள்ளனர். வட சென்னையில் தேமுதிக அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்டது. திமுக சார்பில் கலாநிதி வீராசாமி போட்டியிட்டார். இவர்களுக்கு கடும் போட்டியைக் கொடுக்க மக்கள் நீதி மய்யம் முன்னாள் காவல்துறை அதிகாரி ஏஜி மெளர்யாவை களம் இறக்கியது. நாம் தமிழர் சார்பில் காளியம்மாள் அக்கா களம் கண்டார்.

மக்கள் நீதி மய்யமும், நாம் தமிழரும் என்ன வாக்குகளை பெற்று விடப் போகிறார்கள் என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால் இருவரும் அதிர வைத்து விட்டனர்.

திமுக வாரிசு வட சென்னையில் திமுகவுக்கே வெற்றி. அக்கட்சி வேட்பாளர் கலாநிதி வீராசாமி, முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன். திமுக காரர், வீராசாமி வாரிசு என்ற பலத்தின் பின்னணியில் போட்டியிட்ட அவரது வெற்றி பெரிய விசேஷம் இல்லை.

தேமுதிக மோகன்ராஜ் தேமுதிக சார்பில் அழகாபுரம் மோகன்ராஜ் போட்டியிட்டார். இவருக்காக விஜயகாந்த்தே களம் இறங்கி தெருத் தெருவாக வேனில் அமர்ந்து பிரச்சாரம் செய்தார். தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் செய்தார். ஆனால் மோகன் ராஜ் வெல்ல முடியவில்லை. 2வது இடமே அவருக்குக் கிடைத்தது.

புதிய சக்திகள் இப்படி இரு பெரும் கட்சிகள் போட்டா போட்டி போட்ட நிலையில் அத்தனை பேரையும் கவர்ந்திழுத்து தனி ஆட்டம் ஆடியுள்ளன மக்கள் நீதி மய்யமும், நாம் தமிழர் கட்சியும். இதுதான் படு ஆச்சரியமாக இருக்கிறது. பார்க்கவே வித்தியாசமாக இருக்கிறது. ஒரு பைசா கூட செலவு செய்யாமல் இந்த கட்சிகள் இறங்கி அடித்து அசத்தியுள்ளன.

மெளர்யாவுக்கு ஒரு லட்சம் ஒரு லட்சம் ஓட்டுக்களைத் தாண்டிப் பெற்று அதிர வைத்துள்ளார் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மெளர்யா. இவருக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. மோகன்ராஜை விட 25,000 ஓட்டுக்களே குறைந்து பெற்றுள்ளார் மெளர்யா என்பது முக்கியமானது. இது மிகப் பெரிய சாதனையாகும். எல்லாம் கமல் அடித்த டார்ச் லைட் வெளிச்சத்திற்கு மக்கள் கொடுத்த வரவேற்பு என்பதில் சந்தேகமே இல்லை.

கலக்கிய காளியம்மாள் அடுத்து நம்மைக் கவர்ந்தவர் காளியம்மாள்தான். அக்கா அக்கா என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் காளியம்மாள், குறுகிய காலத்தில் தமிழர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர். எளிய குடும்பத்தைச் சேர்ந்த மீனவப் பெண்மணி. அத்தனை அழகாக பேசுகிறார். புள்ளி விவரங்களை அடுக்கிப் பேசுகிறார். அடுக்குமொழி பேசத் தெரியாதவர். ஆனால் உலுக்கி எடுத்தது இவரது ஒவ்வொரு பேச்சும்.

பாசக்கார அக்கா காளியம்மாளின் பிரச்சாரம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. இவருக்காக சீமான் தொகுதியில் பிரச்சாரம் செய்தார். தமிழக அளவில் மிகவும் கவனிக்கப்பட்ட முக்கிய வேட்பாளர்கள் வரிசையில் காளியம்மாளும் இடம் பிடித்ததே நாம் தமிழர் கட்சியின் மிகப் பெரிய சாதனையாகும். காளியம்மாள் 59,000 வாக்குகளைத் தாண்டி போய் விட்டார். இது மகத்தான சாதனைதான்.

புதிய சக்தி இப்படி பெரிய கட்சிகளுக்கு மத்தியில் மக்கள் நீதி மய்யமும்,நாம் தமிழர் கட்சியும் புகுந்து விளையாடியிருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. வருங்கால அரசியலின் தவிர்க்க முடியாத சக்திகள் இவர்கள் என்பதையும் ஆணித்தரமாக நிரூபித்து விட்டனர். டாக்டர் தமிழிசை சொல்வது போல இவர்களுக்குக் கிடைத்திருப்பது நிச்சயம் வெற்றிகரமான தோல்விதான்!

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/ntk-and-mnm-shine-well-in-north-chennai/articlecontent-pf376887-351657.html?c=hboldsky

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

இது ஓர் வாட்ஸப் பதிவு..

எமது இனத்தையும் தலைமையையும் வைத்து பிழைப்பு நடாத்திய சீமானிற்கு பலத்த அடி. வெறும் உணர்ச்சிப் பேச்சுக்களால் தமிழ்த்தேசியத்தை வைத்து ஊழிக்கூத்தாடிய சீமான் நிராகரிக்கப்பட்டமையானது எமது புலம் பெயர் தமிழ்த் தேசிய வாதிகளும் தங்களை மீளாய்வுக்குட்படுத்த வேண்டும். புலம்யெர் ஈழ  மக்களின் பணமும் இம் முறை சீமானின் தேர்தல் நிதிக்காக  அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.அவர் உயிரோடைஇருக்கிறார்...நம்புங்கள் நாளை நமக்கு ஒரு நாடு பிறக்கும் என்பதே சீமானின் இலட்சிய வாசகங்கள்...இனிமேல் தன்னும் எங்கள் தேசிய உணர்வை தலைமையை சீமான் கொச்சைப்படுத்த அனுமதிக்கக் கூடாது.அதனை வைத்து அரசியல் வியாபாரம் புரிய துணைபோகக் கூடாது.

இப்படி வாட்ஸப்பில்.. பதிவு போடுறவை.. கடந்த 10 வருசமா தமிழ் மக்களுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் என்ன விடிவை பெற்றுக் கொடுத்திட்டு.. சீமானை திட்ட வெளிக்கிட்டினம்.

காணும்.. நீங்க ஒரு ஆணியும் புடுங்க வேணாம். சீமான்.. தலைவர்.. பெயர் படம்.. உயிர் எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு போய் அவர் தலைவரின் பெயரால்.. அரசியல் செய்து பிழைத்தாலும் பறுவாயில்லை..

எம்மவர்கள்.. போல தலைவரை ஒளிச்சு வைக்காமல்.. இருப்பதே அவரின் கொள்கைக்கு செய்யும் மறைமுக உதவியாக இருக்கும். தலைவர் ஒளிக்கப்பட வேண்டியவரல்ல. ஒரு இனத்துக்கான போராளி என்று நிரூபிக்கப்பட வேண்டியவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

 ஆனால் வாலுகளுக்கு எதுவும் ஏறாது! திமுக, அதிமுக போன்ற கட்சிகள் சிக்கலுக்குள் இருந்த இந்த காலகட்டத்திலேயே  ஐந்து வீதம் என்றால் அவர்கள் பலமாக மீண்டு வரும்போது  சீமான் மீண்டும் ஒரு வீதத்திற்கு போய்ச் சேருவார்🤣😂

இது ஓர் வாட்ஸப் பதிவு..

எமது இனத்தையும் தலைமையையும் வைத்து பிழைப்பு நடாத்திய சீமானிற்கு பலத்த அடி. வெறும் உணர்ச்சிப் பேச்சுக்களால் தமிழ்த்தேசியத்தை வைத்து ஊழிக்கூத்தாடிய சீமான் நிராகரிக்கப்பட்டமையானது எமது புலம் பெயர் தமிழ்த் தேசிய வாதிகளும் தங்களை மீளாய்வுக்குட்படுத்த வேண்டும். புலம்யெர் ஈழ  மக்களின் பணமும் இம் முறை சீமானின் தேர்தல் நிதிக்காக  அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.அவர் உயிரோடைஇருக்கிறார்...நம்புங்கள் நாளை நமக்கு ஒரு நாடு பிறக்கும் என்பதே சீமானின் இலட்சிய வாசகங்கள்...இனிமேல் தன்னும் எங்கள் தேசிய உணர்வை தலைமையை சீமான் கொச்சைப்படுத்த அனுமதிக்கக் கூடாது.அதனை வைத்து அரசியல் வியாபாரம் புரிய துணைபோகக் கூடாது.

தனது அரசியலுக்கு பிரபாகரன் பய்னன்படுத்துகிறார் என்று நம்மில் பலர் அதுவும் புலிகளை பிடிக்காதவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

சீமானுக்கு, பிரபாகரன் தேவையில்லை. அவரது பேச்சுவன்மைக்கு இன்றும் கூட ஒரு கூட்டணி சேர்ந்தால், பெரிய பெட்டி வாங்கிக் கொள்ள முடியும்.

தமிழகத்தில் சாதி பிரச்சனைகள் காரணமாக, வெளியார் தலைமை வருகிறது, வெல்கிறது. இதுவே ரஜனி ஆசைப்படவும், MGR, அவர் மனைவி ஜானகி, துணைவி ஜெயலலிதா பதவிக்கு வரவும். அண்ணாதுரை, கலைஞர் பதவிக்கு வரவும் முடிந்தது.

வெளிநாட்டவராக இருந்தாலும், தமிழர் என்ற காரணத்தினால் பிரபாகரன் காட்டப்படும் போது, சாதி வேறுபாடுகளுக்கு அப்பால் அவர் ஏற்றுக் கொள்ளப் படுகின்றார். அந்த ஒரு காரணத்துக்காகவே, சாதியம் கடந்து சீமான், பிரபாகரன் படத்துடன் சகல தமிழக, மறைந்த சாதிய தலைவர்களின் சிலைகளுக்கு அஞ்சலி செலுத்தி மாலை அணிவிக்க முடிகிறது. 

ஈழத்தில் சாதிய வேறுபாடுகளுக்கு அப்பால் போராட்டத்தில் ஈடுபட வைத்தவர் பிரபாகரன் என்கிற ஒரே காரணத்துக்காகவே பிரபாகரன் சீமானால், அதே காரணத்துக்காக அங்கே முன்னிறுத்தப்படுகின்றார்.

ஈழத்தில் பிரபாகரனை வெறுத்த நானறிந்த பலரும், சீமானின் இந்த நோக்கத்தினை ஏற்றுக் கொள்கின்றனர்.

அது புரியாமல், சீமான் பிரபாகரனை வைத்து பணம் சம்பாதிக்கின்றார் என்று தமக்கு தோன்றியதை எல்லாம் பேசுகின்றனர்.

எத்தனை பேர் கொடுக்கிறார்கள்? இந்திய அரசுக்கு தெரியாமல் பணம் போக முடியுமா? சீமானின் இயக்கத்தினுள் எத்தனை உளவாளிகள் உள்ளனர் என்பதை சீமானே வெளிப்படையாக சொன்னாரே.

ஒன்று புரிந்து பேசுவோம் அல்லது புரியாமல் பேசிக்கொண்டே இருப்போம்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nedukkalapoovan said:

சீமானுக்கு காசும் புகழும் தேவை என்றால்.. நாலு படத்தை எடுத்து அதை வெற்றி பெற வைப்பதில் தீவிரம் காட்டி இருக்கலாம்.

ம்க்கும்😁 சீமான் படமெடுத்து அது ஓடி தயாரிப்பாளர்களும் அவரும் கோடீஸ்வரர்களாகி விடுவார்களாக்கும்🤣😂

தமிழ்நாட்டில் தேர்தல்களில் தொடர்ந்தும் சீமானின் நாம் தமிழர் நிற்கவேண்டும். 5 வீதம் வாக்கு வாங்கி கிச்சுகிச்சு மூட்டவேண்டும். வாலுகள் அதை பெருமையாகக் கொண்டாடவேண்டும் என்று எல்லாம் வல்ல இயற்கையையும், ஆதி மூலர்களையும், எங்கபாட்டன் முருகப்பெருமானையும் வேண்டிக்கொள்கின்றேன்😆

10 minutes ago, Nathamuni said:

சீமானுக்கு, பிரபாகரன் தேவையில்லை. அவரது பேச்சுவன்மைக்கு இன்றும் கூட ஒரு கூட்டணி சேர்ந்தால், பெரிய பெட்டி வாங்கிக் கொள்ள முடியும்.

அட இப்படி சீமான்கூட யோசிக்கமாட்டார்.😛

நாம் தமிழர் பாகம் - 3 திரி ஒன்றை ஆரம்பிக்க நேரம் வந்துவிட்டது😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு இப்ப புலி இல்ல.. கழுவி ஊத்திறதுக்கு.. சீமானை ஊத்திக் காலத்தைக் கழிக்க வேண்டியான். இதை விட எதைச் சாதித்தீர்கள்.. புலிகள் இருக்கும் போதும் சரி.. இல்லாத கடந்த 10 ஆண்டுகளிலும் சரி. ஒரே தசாப்தத்தை.. இப்படி வெட்டி நக்கல் அடித்தே கழித்தது தான் மிச்சம். 

கடைசி சீமானாவது முன்னேறட்டும்.. விட்டு விடுங்கள். உங்களால் முடியாததை அவர் செய்ய முனைவது எரிச்சலாகத்தான் இருக்கும்.. என்ன செய்வது. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, கிருபன் said:

ம்க்கும்😁 சீமான் படமெடுத்து அது ஓடி தயாரிப்பாளர்களும் அவரும் கோடீஸ்வரர்களாகி விடுவார்களாக்கும்🤣😂

தமிழ்நாட்டில் தேர்தல்களில் தொடர்ந்தும் சீமானின் நாம் தமிழர் நிற்கவேண்டும். 5 வீதம் வாக்கு வாங்கி கிச்சுகிச்சு மூட்டவேண்டும். வாலுகள் அதை பெருமையாகக் கொண்டாடவேண்டும் என்று எல்லாம் வல்ல இயற்கையையும், ஆதி மூலர்களையும், எங்கபாட்டன் முருகப்பெருமானையும் வேண்டிக்கொள்கின்றேன்😆

அட இப்படி சீமான்கூட யோசிக்கமாட்டார்.😛

நாம் தமிழர் பாகம் - 3 திரி ஒன்றை ஆரம்பிக்க நேரம் வந்துவிட்டது😃

சீமானே வெல்ல இன்னும் காலம் இருக்கு, அதுவரை உழைக்கவேண்டும் ன்று எப்பவோ,  சொல்லீட்டார். 

கணக்க கவலைப்படாதீங்க.... இன்னும் பல திரி கொழுத்துவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

ஸ்டாலினின் அரசியல் தோல்வி.  

பாராளுமன்ற தேர்தலில் வென்று, காங்கிரசுக்கு ஆதரவு தந்து மத்தியில் ஆட்சியிலும் பங்கு பற்றி க் கொண்டே, தமிழக அரசை கலைத்து தேர்தலை சந்தித்து முதல்வராக வரவேண்டும் என்பதே ஸ்டாலினின் திட்டமாக இருந்தது.

ஆனால், எடப்பாடியோ சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரும் கவனம் செலுத்தினார். மத்தியில் காங்கிரசும்  மாநிலத்தில் ஸ்டாலினும் முதல்வராக முடியவில்லை. அதவேளை திமுக க்கு கிடைத்த எம்பிக்கள் 20 மட்டுமே மிகுதி கூட்டணிகளுக்கே.

வாழ்வின் முதல் தடவையாக சரியான முடிவை எடுத்த வகையில், வைகோ மகிழ்வுடன் உள்ளார்.  

எடப்பாடி இப்போது தேவையான பெரும்பான்மையுடன், மத்தியில் ஆட்சியில் இருக்கப்போகும் பாஜக ஆதரவுடன் அசைக்க முடியாத ஆதரவுடன் 2021 வரை பதவியில் இருக்கப் போகிறார். தளம்பிக் கொண்டிருந்த 3பேரும் மறுபடி எடப்பாடி ஆதரவு நிலை எடுக்கப் போகின்றனர்.

அத்துடன் தினகரன் அரசியலும் முடியும் அல்லது முடித்து வைக்கப்படும். அவருடன் இருந்த செந்தில் பாலாஜி திமுக சென்று வென்று விட்ட நிலையில், தங்கத்தமிழ்செல்வன் போன்றோர் இனி இவருடன் இருப்பது சந்தேகமே.

மூன்றாவது இடத்துக்கு ஆன போட்டியில் கமலும் சீமானும் போட்டி இட்டாலும், கமல் நகர்புறத்தில் எடுத்ததை, சீமான் கிராமப்புறங்களில் எடுத்ததன் மூலம் தராசு சமநிலையில் உள்ளது. அநேகமாக நாளை சரியான புள்ளி விபரம் தெரியும்.

சீமானுக்கு அரசியல் இப்போது முழுநேர வேலை. கமலுக்கு அப்படி இல்லை. ஆகவே, அடுத்த இரண்டு ஆண்டுகள் கமல் களத்தில் ஓடி வேலை செய்வாரா, அல்லது சினிமா பக்கம் சென்று விடுவாரா தெரியவில்லை. இருப்பினும், குறுகிய காலத்தில் அவர், NOTA வுக்கு செல்ல இருந்த பல வாக்குகளை எடுத்துக் கொண்டார் என்பதால், சீமான் தனது வாக்கு வங்கியை அதிகரித்துக் கொண்டுள்ளார் என கூறலாம்.

நாதம்ஸ்,

எனக்கென்னவோ நீங்கள் பிரண்ட பக்கத்துக்கு குறி சுடுறாப்ப்போல படுது.

நீங்கள் சொல்லியதை விட ஸ்டாலின் அசுர பலத்தோடு எழுந்துள்ளார் என்பதே உண்மை.

உடனே என்னை ஸ்டாலின்னின் கூஜா எண்டு சொல்ல வேண்டாம். திமுக வை நானும் வெறுக்கிறேன் ஆனால் அரசியல் அனுமானம் என்பது எமது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டதே.

ரத்தான கதிர் ஆனந்த் தொகுதி தவிர திமுக போட்டியிட்ட 19 இலும் 19/19 வெற்றி.

தமிழ்நாட்டில் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெல்லுவதே வழமை. அதிலும் 13/22 என்பது இடைத்தேர்தல் என்று பார்க்கும் போது கணிசமான வெற்றியே.

அடுத்த முக்கியமான விசயம், தானே வெல்லும் குதிரை என்பதை ஸ்டாலின் நிருபித்துள்ளார். குறிப்பாக மதுரையில் சிபிஎம் வேட்பாளர் வென்றது. அழகிரி ஆதிக்கம் திமுகவில் கிட்டத்தட்ட ஒடுக்கப் பட்டே விட்டதை சொல்கிறது.

இப்போ திமுக கூட்டணியில் உள்ள யாரும் அடுத்த சட்டசபை தேர்தலுக்கு முன் வெளியே போக மாட்டார்கள்.

தேமுதிக, பாமக இப்போதே திமுக பக்கம் வர நூல்விடத் தொடங்கி இருப்பார்கள்.

இந்திய அரசியலில் மோடி அலையில் மூழ்காத இரு தலைவர்கள் என்றால் அது நவீன் பட்நாயக்கும் ஸ்டாலினும்தான். எனவே இந்திய அரசியலிலும் ஸ்டாலினுக்கு ஏறுமுகமே.

காங்கிரசின் 70 எம்பிகளில் 10 தமிழ் நாட்டில். தமிழ் நாட்டில் தனித்து நின்றால் அதுவும் பூச்சியமே. அப்படி இருக்கு ஒரு தேசிய கட்சியின் நிலை.

எனவே இப்போதைக்கு பாஜக, அதிமுக, நாத, மநீம, அமமுக தவிர்ந்த ஏனைய அனைத்து தமிழ்நாட்டு கட்சிகளின் ஒரே போக்கிடம் திமுகவே.

ஸ்டாலின் கூட்டணி அமைப்பதில் அப்படியே அப்பன் போலவே செயல்படுகிறார். மத்திய தேர்தலில் 50% விட்டுக்கொடுப்பு ஆனால் சட்டசபை தேர்தலில் 65% கீழ் ஒரு சீட்டும் குறையாமல் திமுக போட்டியிடும்.

அநேகமாக அடுத்த ஆட்சி தனிப்பெரும்பான்மை அல்லது, மைனாரிடி திமுக அரசாகவே அமையக்கூடும்.

எதுக்கும் இந்த பதிவை favorite இல் போட்டு வையுங்கள். ஒன்றில் நீங்கள் அல்லது நான் I told you so என்று சொல்லப் போகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

ஈழத்தமிழராகிய நாம், உள்நாட்டுத் தேர்தல்களைக் காட்டிலும், இந்திய - தமிழகத் தேர்தல்களில் அதிக கவனம் செலுத்துவது ஏன் என்று நினைக்கிறீர்கள்?

உள்நாட்டுத் தேர்தல் முடிவுகள் எமது வாழ்வில் செலுத்தும் ஆதிக்கத்தை விட, இந்தியத் தேர்தல் எமது வாழ்வில் அதிக ஆதிக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் ஒரு சக்தியாக கடந்த 40 வருடங்களாக இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? இது உண்மையாகவே ஒரு சாபமாகத் தோன்றவில்லையா? எமது தலைவிதியை அந்நிய நாட்டு .... தீர்மானிப்பதற்கு நாம் செய்த தவறுதான் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

இல்லையே,

கடந்த முறை ஜெயலலிதா வென்ற 37, அணைத்துமே அதிமுகவினது.

இம்முறை கூட்டணி சேர்ந்த வெற்றி. தனியானதல்ல.

ஸ்ராலின் வெற்றி முதல்வராவதில் தானே உள்ளது. அதில் கோட்டை விட்டார் அல்லவா?

கடந்த முறை வெற்றியின் போதே மோடிக்கு ஜெயலலிதா தேவைப்படவில்லை. இந்த முறை அசுரவெற்றியால், ஸ்ராலின் தேவையே இல்லை.

ஆக.... வெற்றியாளர் ஸ்ராலின் அல்ல, எடப்பாடி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களை பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் நான் இப்படி எல்லா தேர்தல்களையும் அவதானிப்பேன். கிட்டத் தட்ட இது ஒரு spectator sport போல. உலக கிண்ணம் பார்பதில்லையா அப்படி.

ஆனால் என்ன பென்ஜமின் நெட்டன்யாஹு பற்றி யாழ்களத்தில் வந்து கதைக்க ஆளில்லாதபடியால் அதை வேற தளத்தில் பேசுவேன் 😂.

ஆனால் திரை, சின்னத்திரை, மெல்லிசை, சங்கீதம், நாட்டியம், நாவல், என சகலதிலும் இலங்கை படைப்புகளை விட இந்திய படைப்புகளை விரும்பி நுகரும் நாம், இதில் மட்டும் வேறுபடாமல் இருப்பது ஒன்றும் அதிசயம் இல்லையே.

6 minutes ago, ரஞ்சித் said:

ஈழத்தமிழராகிய நாம், உள்நாட்டுத் தேர்தல்களைக் காட்டிலும், இந்திய - தமிழகத் தேர்தல்களில் அதிக கவனம் செலுத்துவது ஏன் என்று நினைக்கிறீர்கள்?

உள்நாட்டுத் தேர்தல் முடிவுகள் எமது வாழ்வில் செலுத்தும் ஆதிக்கத்தை விட, இந்தியத் தேர்தல் எமது வாழ்வில் அதிக ஆதிக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் ஒரு சக்தியாக கடந்த 40 வருடங்களாக இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? இது உண்மையாகவே ஒரு சாபமாகத் தோன்றவில்லையா? எமது தலைவிதியை அந்நிய நாட்டு .... தீர்மானிப்பதற்கு நாம் செய்த தவறுதான் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

ஆனால் என்ன பென்ஜமின் நெட்டன்யாஹு பற்றி யாழ்களத்தில் வந்து கதைக்க ஆளில்லாதபடியால் அதை வேற தளத்தில் பேசுவேன் 😂.

அப்படி ஏன் நினைக்கிறீர்கள். இங்கே பல விடயங்கள் தெரிந்த பலரும் இருக்கிறார்கள். நீங்கள் இங்கும் பேசலாம்.😊

Link to comment
Share on other sites

ஒரு காணொளியில் இளையவர் ஒருவர் வாக்குக்கு கொடுத்த பணத்தை திருப்பி கொடுப்பதை பார்த்தேன் 
இந்த வாக்களித்த மக்களில் கணிசமானோர் இளையோர் 
இளையவர்கள் நாளைய பெரும்பன்மை வாக்காளார்கள் 

மாற்றம் ஒன்றுதான் மாறாதது 
மாறுவது எல்லாம் உயிரோடு 
மாறாதது எல்லாம் மண்ணோடு 

மாற்றம் என்பது இலகுவானது அல்ல
அதுவும் ஊறிப்போன எண்ணங்களில் மாற்றம் வருவது என்பது கடினம்
சரியான மாற்றத்தை கொண்டுவருவது அதைவிட கடினம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
    • கைக்காப்பு, கைப்பற்று மற்றும் தொலைநோக்கி பூட்டப்பட்ட ஏ.கே. 103 துமுக்கியால் சுட்டுப் பார்க்கிறார் தலைவர் மாமா காலம்: நான்காம் ஈழப்போர்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.