Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

751ef9266f6c01f973642af8acd66eb0....jpg
 
கண்கள் தேடிச் செல்லும் இடம் கால்களுக்குத் தெரியவில்லை, மென்மையான இப்பாதச் சுவடுகள் பாதையின் ஒருபுறமாகச் சென்று நிற்கிறது. வெம்மை குறைந்த மண்ணில், காற்றின் ஈரப்பதம் காதோரம் இரகசியம் சொல்லிச் செல்கிறது. வெளிர் பாதத்தில் ஓரிரு இலைகள் பதிந்தாலும், பழுத்த அவ்விலைகளால் எவ்வித பாதிப்புமில்லை.
 
தரையில் ஊர்ந்து செல்லும் செந்நிற எறும்புக் கூட்டமொன்று, போருக்குச் செல்லும் படைவீரர்களைப் போல சீராக அணிவகுத்துச் செல்கிறது, ஒரு கணம் தடம் மாறினாலும் வரிசையுடனான தொடர்பற்றுப் போய்விடும்.
 
நீண்ட தூரப் பயணத்தால் நாக்கு வறண்டிருக்கிறது, நிழலின் தேவையைக் காட்டிலும் நீரின் தேவை அதிகமாக இருக்கிறது. கச்சையில் கசிந்திருக்கும் மெல்லிய வியர்வை உடம்பையொட்டிச் செல்கிறது. களைப்பான கால்கள் நிழல் தரும் மரத்தின் மடியை நாடிச் செல்கிறது. 
 
பருவமெய்திய இளம்பெண்கள் பூத்து நிற்கும் மரத்தடியில் அதிக நேரம் இருத்தலாகாதென்று எதிர்வீட்டுக் கிளவி அம்மாவிடம் கூறியது ஞாபகத்திலுள்ளது.  அதற்கானக் காரணத்தை அம்மாவும் இதுவரைக் கூறியதில்லை. அம்மாவின் சேலை வாசனையில் கண் சொருகித் தூங்கும் குழந்தையைப் போல் இப்பேதையின் கண்களும் அயர்ச்சியில் சொருகி மூடின!
 
இதுபோன்ற கற்பனையும் கவலையுமில்லாத உறக்கம் எப்போதாவதுதான் வருகிறது. உறங்கிய சில கணங்களில், பூச்சிகளின் ரிங்காரம் காதில் விழிப்பு மணி போல் தொடர்ந்து ஒலிக்கிறது. அயர்ச்சி நீங்கி உடலில் புத்துணர்வுப் பிறக்கிறது. பாதச் சுவடு நின்ற இடத்திலிருந்து மீண்டுமொரு இரகசியப் பயணம் தொடர்கிறது.
 
பாதையின் குறுக்கே செல்லும் பட்டாம்பூச்சி, என்னைக் கண்டுகொள்ளாமலும், தனது பாதுகாப்பை எண்ணிக் கவலையுற்றதாகவும் தெரியவில்லை. இயற்கை அன்னையின் தொட்டிலான இவ்வழகிய வனம், பழக்கப்படாத எனக்கு பாதுகாப்பு அளிப்பதைப் போன்று பட்டாம்பூச்சிக்கும் அரணாக இருக்கிறது. நினைத்துப் பார்க்கும் போது ஆறறிவுடைய மனிதனின் பலம் உயிரற்ற ஜடங்கள் வாழும் நரகத்தில் (நகரத்தில்) மட்டுமே என்பது புலனாகிறது.

வழி நெடுகில் அருவியிலிருந்து விழும் நீரின் சத்தம் கேட்கிறது. இலக்கு இல்லாப் இப்பயணத்தின் முடிவுப்புள்ளி அறியாமல் துள்ளியோடும் மானாக, சத்தம் வரும் திசையை நோக்கி ஓடினேன். அதோ தெரிகிறது, அந்த பிரம்மாண்ட அருவி! அருவியின் மேலிருந்து கீழ்நோக்கி விழும் நீர்த்துளிகள் வழுக்கானப் பாறையில் விழுந்து சிதறிச் செல்கிறது. அதன் நுரைகள் ஈரம் நிறைந்த கரையிலிருக்கும் எனது பாதங்களைத் தீண்டிச் செல்கிறது. 

தாய்ப்பசுவின் காம்பை நோக்கி வாஞ்சையுடன் ஓடிவரும் கன்றைப் போல, இம்மெல்லிய உடல் அருவியை நோக்கி விரைகிறது. வனப்பு என்ற சொல்லின் பொருள் பெண்களுக்கு மட்டுமல்ல, என்றும் வற்றாத இளமையுடன் நிறைந்திருக்கும் இயற்கைக்கும் மிகப்பொருந்தும். குளிர்நீர் முழங்கால் மற்றும் நாபி வரை பரவியதில் சட்டென்ற சிலிர்ப்பு உடலெங்கும் பரவி விரிந்தது. இந்தப் படபடப்பு அடங்கும் முன், பெருகிவரும் நீர் இளமார்பில் பட்டு பருவக் கிளர்ச்சியூட்டிச் செல்கிறது. 
 
தீண்டலின் பரவசத்தில் எனை மறந்து கண்கள் சொருகி நின்றேன். கண்களிலிட்ட மை நீரில் சுவடின்றி கரைந்து ஒதுங்குகிறது. பெருகிவரும் நீரின் பிரவாகத்தில் மார்பில் கட்டியிருந்த மேலாடையும் கச்சையும் நிலைகுலைந்துச் சரிந்து சென்றதை உணர பல நொடிகளாயிற்று. எனைச் சுற்றிப் பிண்ணியிருந்த நாணம் என்ற வளையம், நீரில் அடித்துச் செல்லும் இலைச்சருகுகளைப் போல அரவமற்று கட்டவிழ்ந்துச் செல்கிறது.
 
ஆடை சரிந்ததில் திமிறிய மார்புகள் கூச்சத்தில் விடுதலையானதை எண்ணி உள்ளூர வெட்கம் கொண்டது. கார்க்கூந்தலின் சில மயிர்க்கற்றைகள் பிறை போன்ற நெற்றியில் சரிந்து, முகத்திலிருந்த வெட்கத்தை மறைத்து நிற்கிறது. 
 
நீரில் தொடர்ந்து இருப்பதனால் மெல்ல மெல்ல நடுக்கம் குறைந்து, தேகம் வெப்ப சமநிலை அடைந்து கதகதப்பானது. நீரினுள் பாசிகளைத் தேடித் திறியும் சின்னிஞ்சிறு மீன்கள், அடிவயிற்றில் ஆடை இறுக்கிய வரித்தடங்களையும் அல்குலையும் உரசிச் செல்வது இன்பங்கலந்த வேதனையை அளிக்கிறது. 
 
நீரின் அணைப்பிலான என் தழுவல்கள் நிகழ்ந்தெழுகையில், தேகத்தில் பரவிய இன்பத் தீயானது மின்னலின் பாய்ச்சலைப் போன்று உள்ளூரப் பரவிச் செல்கிறது. இதுதான் தீண்டலின் சுகமென்று எண்ணி மனம் அளவலாவிய மோகத்தில் சுழல்கிறது.   
 
குளிர்சுனையின் தழுவலில் இருந்த இவ்வுடல், ஆதவனின் கதகதப்பில் மொட்டவிழும் மலர் போன்று நீருக்கு வெளியில் உதயமானது. மருவி நிற்கும் பின்னழகை செந்நிறப் பாறையில் சாய்த்தும், கீழ்வயிற்றின் தொடர்ச்சியை நீருக்குள் கிடத்தியும், மேலுடலை நீருக்கு வெளியிலும் இருத்தி, அகண்ட வானத்தை கண்டு பிரமிப்புடன் நின்றேன்.
 
நீருக்கடியிலிருக்கும் மேடு பள்ளங்களை நீரானது மறைத்துச் செல்வது போல், பேதைப் பெண்கள் தத்தம் அங்க இலாவண்யங்களை உடை எனும் போர்வைக்குள் மறைத்துக் கொள்கின்றனர். மேலுதட்டின் மென்மயிர், குவிந்த உதட்டின் ஓரத்தில் ஒட்டி நிற்கும் சிறு நீர்த்திவலைகள் குளிர்க்காற்றில் கரைந்தும், காதோரம் சுருண்டிருக்கும் மயிர்கற்றைகள் தென்றலின் அசைவிலும் வளைந்தாடுகிறது.
 
நெற்றியிலிருந்த நீர்த்துளிகள் மெல்லச் சரிந்து திண்ணமான மார்பின் மேட்டில் செங்குத்தாய் வடிந்து செல்கிறது. ஆதவனின் ஒளிக்கற்றைகள் நீரின் மேற்பரப்பில் பட்டு உலோகப் பளபளப்பான மார்பில் எதிரொளிப்பது, கோயில் தூண்களில் வீற்றிருக்கும் பெண் சிலையின் தனங்களில் வடித்திருக்கும் காம்பு, விளக்கொளியின் பிரகாசத்தில் மிளிர்வது போன்றுள்ளது. இத்தகு நுட்பமான அழகை வடித்திருக்கும் சிற்பி நிச்சயம் பெண்ணாக இருக்க வாய்ப்பில்லை! 
 
அடிவயிறு குளிராகவும்  அதே கணத்தில் கனமாகவும் தோன்றுகிறது. தென்றலின் தொடர்ச்சியான ஸ்பரிசம் மேலுடலைத் தீண்டுகையில், மென்மையான வயிற்றின் மேல் படர்ந்து நிற்கும் பச்சை நரம்புகளின் உணர்ச்சி அணுக்கள் ஒருமித்து வெடிப்பது போன்று உள்ளது. 

ஆதவனின் கதிர்கள் அகன்று அந்தி சாயும் வேளையில், அருவி நீருடனான என் காதல் கலவரமின்றித் தொடர்கிறது. காதல் மோகத்தில் இலயித்திருந்த உடலும், மனமும் பயமென்ற போர்வையைக் கலைத்து மெல்லத் தவழ்கிறது.

மனம் உள்ளூர இன்பம் கொண்டிருந்த வேளையில், அதோ அப்பாறையின் பிளவிலிருக்கும் இரு கண்கள் இப்பூவுடலை சல்லடையாய்த் துளைக்கிறது. அந்த முயலின் கூர்மையான  பார்வை, பருவக் களிப்பை எதிர்நோக்கி திணவுடன் நிற்கும் ஆடவனின் பார்வையாக உள்ளது. அடிப்பெண்ணே, இதென்ன பொய் வெட்கம், தொடரட்டும் நீருடனான உன் ஆலிங்கனம் !
 
நாகரிகத்தின் எல்லை தாண்டாமல் அந்தரங்கங்களைத் திறந்து கொள்ளப் பழக்கப்பட்டிருந்த எனக்கு, நாகரிகம் என்ற சிறையினுள் இப்பூவுடலை மீண்டுமொருமுறை தாளிட மனமில்லை. அண்டவெளி அனைத்தும் திகம்பர நிலையில் இருக்கும்போது நான் மட்டும் விதிவிலக்கா? இதோ பூரண நிலவாக துகில் களைந்து நிற்கிறேன் இயற்கை அன்னையின் நிழலில் !
 
நீண்ட கனவிலிருந்து சட்டென்று விலகிப் பாயலில் புரளுகையில், அந்தரங்கத்தின் பூட்டவிழ்ந்தது போன்ற எண்ணத்தில் கன்னக்கதுப்புகள் வெட்கிச் சிவந்தன. 
 
சங்கப்பாடலொன்றில் குறிப்பிட்டது போல, புணர்தலின் போது தனங்களில் ஏற்பட்ட நகக்குறியை மகளிர் பகல் பொழுதுகளில் தடவிப் பார்த்து இரசிப்பது போன்று, அருவி நீருடனான காதலை எண்ணி இப்பேதையின் மனம் மீண்டுமொரு இரவிற்காக ஏங்கி நிற்கிறது!
 
  • தொடங்கியவர்

யாழ் வாசகர்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன..

  • கருத்துக்கள உறவுகள்

வாத்யாயனரின் ஓவியம் ஒன்று நீராடுவதை கம்பன் கண்டு களித்து கையில் தூரிகை எடுத்ததுபோல் மனதை கிறக்கத்தில் ஆழ்த்தி விட்டீர்கள் .......!  தொடர்ந்து எழுதுங்கள்.......!  👍

  • தொடங்கியவர்
Just now, suvy said:

வாத்யாயனரின் ஓவியம் ஒன்று நீராடுவதை கம்பன் கண்டு களித்து கையில் தூரிகை எடுத்ததுபோல் மனதை கிறக்கத்தில் ஆழ்த்தி விட்டீர்கள் .......!  தொடர்ந்து எழுதுங்கள்.......!  👍

நண்பருக்கு வணக்கம், வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்!

கற்பனைக் குதிரையை சற்றே அந்தரங்கத்துடன் ஆழமாக ஓடவிட்டதன் விளைவுவே இப்பதிவு.

பதிவின் பல்வேறு இடங்களில் பிழைகள் உள்ளதாகத் தோன்றுகிறது, யாழ் நண்பர்களின் சுட்டிக்காட்டுதலை இன்முகமாக வரவேற்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, அருள்மொழிவர்மன் said:

பருவமெய்திய இளம்பெண்கள் பூத்து நிற்கும் மரத்தடியில் அதிக நேரம் இருத்தலாகாதென்று எதிர்வீட்டுக் கிவி அம்மாவிடம் கூறியது ஞாபகத்திலுள்ளது.  அதற்கானக் காரணத்தை அம்மாவும் இதுவரைக் கூறியதில்லை

பூத்துக் குலுங்கும் மரத்தடியில் மகரந்தங்கள் நிறைந்திருப்பது பருவப்பெண்களை பாடுபடுத்துமோ?

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, கிருபன் said:

பூத்துக் குலுங்கும் மரத்தடியில் மகரந்தங்கள் நிறைந்திருப்பது பருவப்பெண்களை பாடுபடுத்துமோ?

பாடாய்ப் படுத்தும்.....!   👍

  • தொடங்கியவர்
27 minutes ago, கிருபன் said:

பூத்துக் குலுங்கும் மரத்தடியில் மகரந்தங்கள் நிறைந்திருப்பது பருவப்பெண்களை பாடுபடுத்துமோ?

நண்பருக்கு வணக்கம்.

என்றோ வாசித்தது போல உள்ளது. இதில் எவ்வித உண்மையுமில்லை, வெறும் மூடப்பழக்க வழக்கமாக பழங்காலத்தில் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. இதற்கான எந்தவொரு அறிவியல் விளக்கமும் இல்லை. .

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, அருள்மொழிவர்மன் said:

யாழ் வாசகர்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன..

நன்றாக எழுதுகிறீர்கள். தொடர்ந்தும் எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சத்தியமாய் ஒன்றுமே புரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

எனக்கு சத்தியமாய் ஒன்றுமே புரியவில்லை

இது வேறு ரகம் அக்கா. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வர்மனின் வர்ணனை பிரமாதம்.👍
இளந்தளிர் சிலிர்த்து நிற்க  அதன் மீது ஆங்காங்கே மழைத்துளிகள்  வீழ்ந்த பிரமை தோன்றுகின்றது

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

எனக்கு சத்தியமாய் ஒன்றுமே புரியவில்லை

இன்னொருமுறை நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய் ... என்ற பாடலை 
கேட்டு பாருங்கள் ..... கிட்ட தட்ட இதே சிட்டுவேஷன்.

கடல்புறா புத்தகம் இருந்தால் ...
முதல் முறை இளமாறன் காஞ்சனாவை காணுவதை இன்னொருமுறை 
வாசியுங்கள்  ........கிட்ட தட்ட இதே சிட்டுவேஷன்.

அப்போதும் புரியாவிட்டால் ..தேம்ஸ் நதியில் ஒருமுறை சென்று இறங்கி நின்றுவிட்டு வந்து 
வாசியுங்கள் ஏதும் மாறுதல் வருகுதா என்று பார்ப்போம் ....

  • தொடங்கியவர்
17 hours ago, ரதி said:

எனக்கு சத்தியமாய் ஒன்றுமே புரியவில்லை

இப்பதிவில் தனிமையிலிருக்கும் பருவமடைந்த பெண்ணொருத்தியின் அந்தரங்க எண்ணவோட்டங்களைக் கற்பனையாகப் பதித்துள்ளேன். பருவமாற்றங்களால் உடலில் ஏற்படும் இயல்பான மாறுதல்கள் அவள் கனவில் சஞ்சரித்து, ஒரு நீண்ட முடிவில்லாப் பயணமாகத் தொடர்கிறது.

ஆள்நடமாட்டமில்லாத அடர்ந்த வனப்பிரதேசத்தில் தனிமையில் செல்லும்போது, வழி நெடுகில் இயற்கையுடனான அவளது பிணைப்பையும், அதனால் விளையும் சுதந்திர உணர்வால் ஆடை களைந்து இயல்பாக இருப்பதாகக் கூறியுள்ளேன்.

தோழிக்கு இப்போது புரியும் என்று நம்புகிறேன் !!🙂

Edited by அருள்மொழிவர்மன்

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, அருள்மொழிவர்மன் said:

இப்பதிவில் தனிமையிலிருக்கும் பருவமடைந்த பெண்ணொருத்தியின் அந்தரங்க எண்ணவோட்டங்களைக் கற்பனையாகப் பதித்துள்ளேன். பருவமாற்றங்களால் உடலில் ஏற்படும் இயல்பான மாறுதல்கள் அவள் கனவில் சஞ்சரித்து, ஒரு நீண்ட முடிவில்லாப் பயணமாகத் தொடர்கிறது.

ஆள்நடமாட்டமில்லாத அடர்ந்த வனப்பிரதேசத்தில் தனிமையில் செல்லும்போது, வழி நெடுகில் இயற்கையுடனான அவளது பிணைப்பையும், அதனால் விளையும் சுதந்திர உணர்வால் ஆடை களைந்து இயல்பாக இருப்பதாகக் கூறியுள்ளேன்.

இப்போது நண்பருக்குப் புரியும் என்று நம்புகிறேன் !!🙂

நண்பி, நண்பா!!

  • தொடங்கியவர்
10 minutes ago, Nathamuni said:

நண்பி, நண்பா!!

😃...பிழையைத் திருத்திவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/31/2019 at 10:17 PM, அருள்மொழிவர்மன் said:

சங்கப்பாடலொன்றில் குறிப்பிட்டது போல, புணர்தலின் போது தனங்களில் ஏற்பட்ட நகக்குறியை மகளிர் பகல் பொழுதுகளில் தடவிப் பார்த்து இரசிப்பது போன்று, அருவி நீருடனான காதலை எண்ணி இப்பேதையின் மனம் மீண்டுமொரு இரவிற்காக ஏங்கி நிற்கிறது!

இப்படி காலம் காலமாச் சொல்லிச் சொல்லியே.. அவங்க வலில தடவுறதை எல்லாம் இவங்க.. தங்களின் கிளர்ச்சிக் களிப்பில் அடக்கிக் காட்டிக்கிட்டே வாறாய்ங்க. இதுக்கு ஒரு முடிவே இல்லையா...??!

பெண் அழகுதான். ஆனால் அவளும்.. நோ வலி குத்து எல்லாம் இருக்கும் ஒரு சராசரி சக மனிதன் என்ற உணர்வும் ஆண்களிடம் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த அழகுக்குள் இருக்கும் எச்சரிக்கைகளை இந்த அழகுக் கிளர்ச்சி வசனங்களுக்கு அப்பால் மனித ஆண்கள் புரிந்து கொள்ள முடியும். பெண்களை பாலியல் பாவைகளாக நோக்கி நொடித்துப் போடும்.. நிலை மாறும். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, அருள்மொழிவர்மன் said:

இப்பதிவில் தனிமையிலிருக்கும் பருவமடைந்த பெண்ணொருத்தியின் அந்தரங்க எண்ணவோட்டங்களைக் கற்பனையாகப் பதித்துள்ளேன். பருவமாற்றங்களால் உடலில் ஏற்படும் இயல்பான மாறுதல்கள் அவள் கனவில் சஞ்சரித்து, ஒரு நீண்ட முடிவில்லாப் பயணமாகத் தொடர்கிறது.

ஆள்நடமாட்டமில்லாத அடர்ந்த வனப்பிரதேசத்தில் தனிமையில் செல்லும்போது, வழி நெடுகில் இயற்கையுடனான அவளது பிணைப்பையும், அதனால் விளையும் சுதந்திர உணர்வால் ஆடை களைந்து இயல்பாக இருப்பதாகக் கூறியுள்ளேன்.

தோழிக்கு இப்போது புரியும் என்று நம்புகிறேன் !!🙂

எனக்கு அப்படி ஒரு எண்ணமும் வரேல்ல...ஒரு வேளை நான் பெண் இல்லையோ!😆

  • கருத்துக்கள உறவுகள்

பருவமமாற்றம் என்பது நேரம் காலம் எடுத்து 
இயற்கையின் வனப்பில் பிரவகிப்பது.

ஒரு மொட்டு ... மலர்ந்து 
பூவாகி ... கனியாகி ... கனிந்து பழமாகி 
பின் தன்னுள் இருக்கும் விதையை  வனப்பாக்கி 
மீண்டும் ஒரு மரத்தை உருவாக்கும்.

ஊரிலே பெரியவர்கள் சிலரை ஏசுவர்கள் 
பிஞ்சிலே முத்தினது என்று ....... 
சிலர் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது 
பருவங்களை கடந்து விடுகிறார்கள்.

சில பாவப்படடவர்கள் காதலை நம்பி 16-17 வயதில் 
குழந்தைக்கு தாயாகிவிடுவார்கள் அவர்களால் 17-21 வயத்துக்குமான 
பருவ மாற்றங்களை உணரமுடியாது.

சிலர் பிறருக்காக தமது வாழ்வை அர்ப்பணித்து விடுவார்கள் 
கிறிஸ்த்தவ கன்னியாஸ்திரிகள் ... விடுதலை போராளிகள் 
இவர்கள் பருவ மாற்றங்களை இடைஞ்சலாக எடுத்து அதை நின்று 
தரிசிப்பதில்லை  கடந்துவிடுவார்கள். 

  • தொடங்கியவர்
13 hours ago, nedukkalapoovan said:

இப்படி காலம் காலமாச் சொல்லிச் சொல்லியே.. அவங்க வலில தடவுறதை எல்லாம் இவங்க.. தங்களின் கிளர்ச்சிக் களிப்பில் அடக்கிக் காட்டிக்கிட்டே வாறாய்ங்க. இதுக்கு ஒரு முடிவே இல்லையா...??!

பெண் அழகுதான். ஆனால் அவளும்.. நோ வலி குத்து எல்லாம் இருக்கும் ஒரு சராசரி சக மனிதன் என்ற உணர்வும் ஆண்களிடம் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த அழகுக்குள் இருக்கும் எச்சரிக்கைகளை இந்த அழகுக் கிளர்ச்சி வசனங்களுக்கு அப்பால் மனித ஆண்கள் புரிந்து கொள்ள முடியும். பெண்களை பாலியல் பாவைகளாக நோக்கி நொடித்துப் போடும்.. நிலை மாறும். 

@ நெடுக்ஸ், நண்பருக்கு வணக்கம். எதிர்மறைக் கருத்தளித்தமைக்கு நன்றிகள்!

இதுபோன்ற விமர்சனங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். இப்பதிவில் பெண்களை ஆபாசப்  பொருளாக்கி வெறும் காம நெடியுடன் சித்தரிக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆபாசத்தை முன்னிறுத்தி கிளர்ச்சியூட்டும் நோக்கிலும் எழுதவில்லை. ஒரு சராசரி மனித உடலின் (ஆண்/பெண்) அழகியலை இயற்கையுடன் ஒப்பிட்டு இயல்பாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆபாசத்தையும் உடலின் அழகியலையும் பிரித்தறிய இயலாத நிலையிலிருப்பது வருத்தமளிக்கிறது.

"நாகரிகத்தின் எல்லை தாண்டாமல் அந்தரங்கங்களைத் திறந்து கொள்ளப் பழக்கப்பட்டிருந்த எனக்கு, நாகரிகம் என்ற சிறையினுள் இப்பூவுடலை மீண்டுமொருமுறை தாளிட மனமில்லை. அண்டவெளி அனைத்தும் திகம்பர நிலையில் இருக்கும்போது நான் மட்டும் விதிவிலக்கா? இதோ பூரண நிலவாக துகில் களைந்து நிற்கிறேன் இயற்கை அன்னையின் நிழலில்!"
 
உடலின் திகம்பர நிலையில் ஆபாசத்தை மட்டுமே காண முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அந்தரங்கப் பகுதிகளை வெளிப்படையாக எழுதினால் ஆபாச முத்திரைக் குத்தப்படுவது இயல்பானதே, தவறாகத் தோன்றவில்லை.
 
எண்ணத்தை பின்னூட்டமாக அளித்ததற்கு நன்றிகள்.
 
14 hours ago, ரதி said:

எனக்கு அப்படி ஒரு எண்ணமும் வரேல்ல...ஒரு வேளை நான் பெண் இல்லையோ!😆

என்ன சொல்வதென்றே தெரியவில்லை😌  !!

  • தொடங்கியவர்
12 hours ago, Maruthankerny said:

பருவமமாற்றம் என்பது நேரம் காலம் எடுத்து 
இயற்கையின் வனப்பில் பிரவகிப்பது.

ஒரு மொட்டு ... மலர்ந்து 
பூவாகி ... கனியாகி ... கனிந்து பழமாகி 
பின் தன்னுள் இருக்கும் விதையை  வனப்பாக்கி 
மீண்டும் ஒரு மரத்தை உருவாக்கும்.

ஊரிலே பெரியவர்கள் சிலரை ஏசுவர்கள் 
பிஞ்சிலே முத்தினது என்று ....... 
சிலர் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது 
பருவங்களை கடந்து விடுகிறார்கள்.

சில பாவப்படடவர்கள் காதலை நம்பி 16-17 வயதில் 
குழந்தைக்கு தாயாகிவிடுவார்கள் அவர்களால் 17-21 வயத்துக்குமான 
பருவ மாற்றங்களை உணரமுடியாது.

சிலர் பிறருக்காக தமது வாழ்வை அர்ப்பணித்து விடுவார்கள் 
கிறிஸ்த்தவ கன்னியாஸ்திரிகள் ... விடுதலை போராளிகள் 
இவர்கள் பருவ மாற்றங்களை இடைஞ்சலாக எடுத்து அதை நின்று 
தரிசிப்பதில்லை  கடந்துவிடுவார்கள். 

சிலர் பிறருக்காக தமது வாழ்வை அர்ப்பணித்து விடுவார்கள்
கிறிஸ்த்தவ கன்னியாஸ்திரிகள் ... விடுதலை போராளிகள்
இவர்கள் பருவ மாற்றங்களை இடைஞ்சலாக எடுத்து அதை நின்று
தரிசிப்பதில்லை  கடந்துவிடுவார்கள்.

உண்மை நண்பரே.. பருவ மாற்றங்களைக் கடந்து செல்வது கடினமானது.

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் கவிதையை உரைநடையாய் எழுதி வாங்கிக் கட்டுவார்கள். ஆனால் நண்பர் உரைநடை எழுதி "அட, இது கவிதை" என்று நம் பாராட்டைப் பெறுகிறார். உரையாற்றுங்கள். கவி பாடுங்கள்.

  • தொடங்கியவர்
32 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

சிலர் கவிதையை உரைநடையாய் எழுதி வாங்கிக் கட்டுவார்கள். ஆனால் நண்பர் உரைநடை எழுதி "அட, இது கவிதை" என்று நம் பாராட்டைப் பெறுகிறார். உரையாற்றுங்கள். கவி பாடுங்கள்.

நண்பரின் வாசிப்பிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. விடுமுறை நாளில் எழுதியது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.