Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாடுகளிலுள்ள மருத்துவர்கள் வடக்கிற்கு வர 6 மாத இலவச வீசா : சுரேன் ராகவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

suren-ragavan-720x450.jpg

வெளிநாடுகளிலுள்ள மருத்துவர்கள் வடக்கிற்கு வர 6 மாத இலவச வீசா : சுரேன் ராகவன்

புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் மருத்துவர்கள் வடக்கு மாகாணத்திற்கு வந்து மருத்துவச் சேவை செய்ய விரும்பினால் 6 மாத இலவச வீசா மற்றும் தங்குமிடம் போன்ற ஒழுங்குகளைச் செய்து தருவதாக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கும் சற்ரன் நகரசபை உறுப்பினர் பரம் நந்தாவுக்கும் இடையிலான சந்திப்பின்போதே இந்த விடயத்தை வடமாகாண ஆளுநர் தெரியப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகியுள்ளபோதிலும் வடக்கில் மருத்துவத்துறை பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

எனவே நலிந்துபோயுள்ள மக்களுக்கு உதவும் நோக்கில் தாம் இந்தத் திட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக சுரேன் ராகவன் கூறியுள்ளார்.

சுரேன் ராகவனுடன் பரம் நந்தா மேற்கொண்ட இந்தச் சந்திப்பில் வடமாகாண ஆளுநரின் முன்னாள் செயலாளரும் தற்போதைய வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருமான L.இளங்கோவன் அவர்களும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/வெளிநாடுகளிலுள்ள-மருத்த/

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் வைத்தியர்கள் ஊரில் போய் பின் தங்கிய கிராமங்களில் இருந்து கொஞ்ச  காலமாவது சேவை செய்யலாமே 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ரதி said:

இங்கு ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் வைத்தியர்கள் ஊரில் போய் பின் தங்கிய கிராமங்களில் இருந்து கொஞ்ச  காலமாவது சேவை செய்யலாமே 

ஆசை தோசை அப்பளம் வடை.......கெப்பர் புடிச்ச கூட்டம் எப்பிடி போவினம்? 😀

Edited by குமாரசாமி

6 hours ago, ரதி said:

இங்கு ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் வைத்தியர்கள் ஊரில் போய் பின் தங்கிய கிராமங்களில் இருந்து கொஞ்ச  காலமாவது சேவை செய்யலாமே 

முதலாவது கேள்வி சம்பளம் 5 இலட்சம் தருவினமா என்று தான் இருக்கும்.

இலங்கையில் உள்ள கொள்ளையர் கோஷ்டிகளில் பெரும்பாலான தமிழ் வைத்தியர்களையும் அடக்கலாம்.

விதிவிலக்காக ஒருசில தமிழ் வைத்தியர்களே தமிழ் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

இங்கு ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் வைத்தியர்கள் ஊரில் போய் பின் தங்கிய கிராமங்களில் இருந்து கொஞ்ச  காலமாவது சேவை செய்யலாமே

3 hours ago, குமாரசாமி said:

ஆசை தோசை அப்பளம் வடை.......கெப்பர் புடிச்ச கூட்டம் எப்பிடி போவினம்?

இந்த சேவையை விரும்பாத வைத்தியர்கள்  உண்டு.

சேவையை விரும்பி ஏற்று வம்பையும்  விலைக்கு வாங்கி, ஏறத்தாழ அவர்களது வாழ்க்கையை தொலைக்கும் விளிம்பில் வந்தவர்களும் உண்டு.

நான் அறிந்த, தெரிந்த வரையில், இதை உள்ள பிரச்சனைகள்

1) எமது சமூகம், எந்த பிரதேசமாயினும், எத்தகைய சமூக பொருளாதர மட்டத்திலும், வெளி நாட்டில் இருப்பவர்களை ஏதோ பணமரமாக நோக்குவது. இது வைத்தியர்களின் உயிருக்கு உலையாக மாறுகிறது.

2) வைத்தியர்களின் சேவையை, உள்ளூர் மருத்துவ சேவையின் உள்வீட்டு அரசியலுக்குள் இழுப்பது. அங்குள்ள வைத்தியர்கள் சேவை சேயும் வைத்தியர்களை தமக்கு போட்டியாகவும் , அச்சுறுத்தலாகவும் நோக்குவது. காரணம், அங்கு மருத்துவ சேவையும், படிப்பும் இன்னும் முன்னேறுவதத்திற்கு இடமுண்டு. இங்கிருந்து சென்றவர்கள், இயன்றதை செய்ய முயலும் போது, அங்குள்ள வைத்தியர்கள்  வெளிப்படையாக ஏதிர்கிறார்கள். பெரும்பாலான அங்குள்ள வைத்தியர்கள், பட்டப்படிப்பை முடித்து, முழு வைத்தியர்கள் ஆகியவுடன், அவர்களின் தொழில் சம்பந்தமான அறிவு, திறன் மற்றும் நிர்வாக  வளர்ச்சியை, தேடலை நிறுத்திவிடுகிறார்கள். இதுவே அவர்கள் இங்கிருந்து வரும் வைத்தியர்களை அச்சுறுத்தலாக பார்ப்பதற்கு காரணம் என்று நோக்கத் தோன்றுகிறது.

3) இது அதிகார பகிரவுடன் தொடர்பு பட்ட விடயம். ஆளுநர் சுரேன் இராகவன், எப்போதும் சொறி சிங்கள  அரசால் மாற்றப்படக் பிடுங்கப்படக் கூடிய, தனது நிர்வாக அதிகாரத்திடகுள் (இந்த அதிகாரம் கூட இல்லை)  இதை செய்யமுடியாது. ஒப்பீட்டளவில் அமைதியும், பாதுகாப்பும், சுதந்திரமும் உள்ளவர்கள், அப்படிப்பட்ட நாட்டில் இருப்பவர்களை, எந்தவோர் சட்ட கட்டமைப்பும், உத்தரவாதமும் இல்லாமல், ஓர் (ஈத்ததமிழ்) இனத்தின் மீது வன்மம் கொண்ட இனத்தால் (சிங்களதால் ) ஆகிய அரசின் கீழ், சேவையின் நிமித்தம், வெளிநாட்டில் இருக்கும் வைத்தியர்களை (அல்லது வேறு எவராயினும்), தற்காலிகமாக இடம்பெயருமாறு விடும் அழைப்பை வெளிநாட்டில்  இருப்பவர்கள் ஏன் ஏற்க வேண்டும்? பிரச்னையை ஏன் விலை கொடுத்து வாங்க வேண்டும்?

இதையும்  விக்கி பல்வேறு வழிகளில் செய்ய முயன்றார். சொறி இலங்கை அரசு தடுத்து விட்டது. கனடா தற்போது சட்ட பூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கும் இனப்படுகொலை விசாரணைக்கான ஐ.நா வித்திற்கான அழைப்பு கடந்த  10 ஆண்டுகளில் சொறி சிங்கள அரச கட்டமைப்பை பற்றிய புரிதலே முக்கியமான பங்கை கொண்டிருக்கிறது.
                
4) இங்குள்ள வைத்தியர்கள் பணம், பதவி எதிர்பார்ப்பது என்பது உண்மையாயினும், அப்படிப்பட்டவர்கள் மிகவும் சொற்ப்பம். இதை சொறி சிங்கள அரசே பிரச்னையை திசை திருப்புவதற்கு கிளப்பிவிட்டது.   

இதில் 3 மிகவும் பூதாகரமான பிரச்னை ஆகும்.

இந்த தளத்தில் வைத்தியர்களும் உண்டு. அவர்களின் அனுபவம் மற்றும் கருத்துக்கள் எது என்பதை அறியத்தந்தால் மிகவும் நன்று.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kadancha said:

அங்கு இருப்பவர்களுக்கும்,இங்கிருந்து போபவர்களுக்கும் தொழில் ரீதியான போட்டி இருக்கும்...ஆனால் அங்குள்ள வைத்தியர்களும் தொடர்ந்தும் படித்துக் கொண்டும்,தங்கள் அறிவை விருத்தி செய்து கொண்டு இருப்பதை காண முடிகிறது.
இங்குள்ள வைத்தியர்கள் பணம்,பதவி எதிர்பார்ப்பதில்லையா?...என்ன கதை இது...ஒரு சிலர் விதி விலக்காய் இருக்கலாம்..இங்கிருப்பவர்கள் அங்கு போய் தங்களை பெரிதாக எண்ணி அதிகாரம் பண்ண நினைப்பது அங்குள்ளவர்களுக்கு பிடிப்பதில்லை...படித்து முடித்து வேறு நாடுகளுக்கு ஓடாமல் தங்கள் நாட்டில் இருப்பவர்களுக்கு சுய கெளரவம் அதிகமாய் இருக்கும்.அதில் பிழை இல்லை.
உங்கட கதையைப் பார்த்தால் அங்குள்ளவர்களுக்கு தான் பணம்,பதவி எல்லாம் தேவை...இங்குள்ளவர்கள் சுத்த தங்கம் என்பது மாதிரி அல்லவா இருக்கு 
சேவை செய்ய விரும்பினால் அமைதியாய் ஆர்ப்பாட்டமில்லாமல் போய் செய்திட்டு வரலாம்...அரசியல் செய்ய வெளிக்கிட்டால் அரசும் பதிலுக்கு ஏதாவது செய்யும் தான்..
புலிகள் இருக்கும் போது போய் படம் காட்டிய எத்தனை பேர் புலிகள் இல்லாத காலத்திற்கு போனார்கள்?
இங்கிருக்கும் ஒரு சிலர் சேவை மனப்பான்மை கொண்டவரை தவிர மற்றவர்கள் எதிர் பார்ப்பது பணம் ,பதவி,அதிகாரம் 
 
  • கருத்துக்கள உறவுகள்

1 hour ago, ரதி said:

னால் அங்குள்ள வைத்தியர்களும் தொடர்ந்தும் படித்துக் கொண்டும்,தங்கள் அறிவை விருத்தி செய்து கொண்டு இருப்பதை காண முடிகிறது.

இது நீங்கள் சொறி சிங்கள அரசின் மருத்துவ சேவையின் தொழில்சார் தன்மை பற்றி தெரியாமல் கதைகிக் றீர்கள் என்பது வெளிப்படை. தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற தொழில்சார் தேவை சொறி சிங்கள அரசின் மருத்துவ சேவையின் கட்டமைப்பில் இல்லை என்பதே உண்மை.

" Sri Lanka currently does not have a proper CPD process or a revalidation system for medical professionals."

1 hour ago, ரதி said:

புலிகள் இருக்கும் போது போய் படம் காட்டிய எத்தனை பேர் புலிகள் இல்லாத காலத்திற்கு போனார்கள்?

ஒரு சிலர் அப்படி இருந்திருக்கலாம். அது வெளிப்படையாகவும் தெரியும். அந்த சேவையை ஆரவாரமில்லால் செய்தவர்கள் எதனை பேர் என்பது உங்களுக்கு தெரியவில்லை. ஆனால் எவராயினும், பாதுகாப்பு பிரச்னைகள் இல்லை. வேறு தலையீடுகள் இல்லை. புலிகளின் மருத்துவ சேவை எழுத்து மூலம் கேட்டதை, இவர்களால் செய்ய முடிந்த அனைத்தையும், இங்குள்ளவர்கள் செய்திருக்கிறார்கள். புலிகளின் அணுகு முறையில், ஓர் சேவை உள்வாங்குவதற்கு ஓர் கட்டமைப்பு இருந்திருக்கிறது.

சேவையை உள்வாங்குவதற்கு கட்டமைப்பு இருக்குமாயின், இந்த பிரச்சனைகள் பொதுவாக வராது. 

மற்றும் படி, நீங்கள் கூறுவது, நான் சொன்ன பிரச்சனைகள் இருப்பதை ஆமோதிக்கிறது. சொறி சிங்களதின் திசை திருப்புவதையும் நீங்கள் சரி என்கிறீர்கள்.

ஒன்று வெளிப்படை, நீங்கள் எழுந்தமானமாக ஊகம் செய்கிறீர்கள். நான் சொல்லியவை, நேரடியாக அறிந்த  அனுபவங்களின் அடிப்படையில்.   

உங்களுடைய கருத்துப்படி, பிரச்சனைகளை விலை கொடுத்து வாங்கி இலவச சேவை செய்யவேண்டும் எதிர்பார்கிறீர்கள்.  சிலர் அப்படி இருக்க கூடும்.

18 hours ago, Kadancha said:

இந்த தளத்தில் வைத்தியர்களும் உண்டு. அவர்களின் அனுபவம் மற்றும் கருத்துக்கள் எது என்பதை அறியத்தந்தால் மிகவும் நன்று. 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kadancha said:

இது நீங்கள் சொறி சிங்கள அரசின் மருத்துவ சேவையின் தொழில்சார் தன்மை பற்றி தெரியாமல் கதைகிக் றீர்கள் என்பது வெளிப்படை. தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற தொழில்சார் தேவை சொறி சிங்கள அரசின் மருத்துவ சேவையின் கட்டமைப்பில் இல்லை என்பதே உண்மை.

" Sri Lanka currently does not have a proper CPD process or a revalidation system for medical professionals."

ஒரு சிலர் அப்படி இருந்திருக்கலாம். அது வெளிப்படையாகவும் தெரியும். அந்த சேவையை ஆரவாரமில்லால் செய்தவர்கள் எதனை பேர் என்பது உங்களுக்கு தெரியவில்லை. ஆனால் எவராயினும், பாதுகாப்பு பிரச்னைகள் இல்லை. வேறு தலையீடுகள் இல்லை. புலிகளின் மருத்துவ சேவை எழுத்து மூலம் கேட்டதை, இவர்களால் செய்ய முடிந்த அனைத்தையும், இங்குள்ளவர்கள் செய்திருக்கிறார்கள். புலிகளின் அணுகு முறையில், ஓர் சேவை உள்வாங்குவதற்கு ஓர் கட்டமைப்பு இருந்திருக்கிறது.

சேவையை உள்வாங்குவதற்கு கட்டமைப்பு இருக்குமாயின், இந்த பிரச்சனைகள் பொதுவாக வராது. 

மற்றும் படி, நீங்கள் கூறுவது, நான் சொன்ன பிரச்சனைகள் இருப்பதை ஆமோதிக்கிறது. சொறி சிங்களதின் திசை திருப்புவதையும் நீங்கள் சரி என்கிறீர்கள்.

ஒன்று வெளிப்படை, நீங்கள் எழுந்தமானமாக ஊகம் செய்கிறீர்கள். நான் சொல்லியவை, நேரடியாக அறிந்த  அனுபவங்களின் அடிப்படையில்.   

உங்களுடைய கருத்துப்படி, பிரச்சனைகளை விலை கொடுத்து வாங்கி இலவச சேவை செய்யவேண்டும் எதிர்பார்கிறீர்கள்.  சிலர் அப்படி இருக்க கூடும்.

நீங்கள் என்ன கிளிப்பிள்ளையா திரும்ப,திரும்ப சொல்வதற்கு...ஊரில் இருக்கும் வைத்தியர்களுக்கு இங்குள்ள மாதிரி வளங்கள் ,நவீன வசதிகள் இல்லை ...ஆனாலும் இருக்கின்ற வளங்களை கொண்டு அங்குள்ள மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர்...அவர்கள் எந்த ஒரு காரணத்திற்காகவும் நாட்டை விட்டு ஓடவில்லை...ஏதோ ஒரு காரணத்திற்காக நாட்டை விட்டு ஓடி வந்த நீங்கள் அல்லது உங்களை போன்றவர்கள் இங்கு நன்றாக உழைத்து,காசு சேர்த்து  உங்கள் குடும்பங்களை வளப்படுத்தி விட்டு ஓய்வு பெற்றவுடன் பொழுது போகாமல் சேவை செய்கிறேன் என்ற போர்வையில் அங்கு போய் அங்குள்ள வைத்தியர்களை அதிகாரம் செய்ய வெளிக்கிட்டால் உங்களை அவர்கள் எதிர்ப்பார்கள் தான் ...அவர்கள் அங்கு இருக்கிறார்கள்,அங்கு அவர்கள் வாழ்வதற்கு பணம் தேவை....உங்களை போன்றவர்கள் 3,6 மாசம் இருந்து போட்டு திரும்பி வர இருப்பவர்கள்.
குறைந்தளவு அறிவையும்,நிறைய தொ;ழில் நுட்பம்,நவீன மருத்துவ இயந்திரங்கள்  எல்லாவற்றையும் விட கணனியை அதிகமாய் பாவித்து  வைத்தியம் செய்யும் உங்களை விட , அதிகமாய் மூளையை பாவித்து குறைந்தளவு வளங்களோடு செயற்படும்  அவர்கள் எவ்வளவோ மேல்.
அங்கிருக்கும் நிறைய பேர் வெளி நாடுகளில் வந்து படித்து விட்டு திரும்ப போய் ஊரில் வேலை செய்கிறார்கள்...உங்களுக்கு முடிந்தால் போய் செய்யுங்கோ... அதிக பிரசங்கித்தனம் காட்டினால் பிரச்சனை தான்     

முடிந்தால் நவீன மருத்துவ கருவிகளை வாங்கிக் கொடுங்கோ 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஊரில் இருக்கும் வைத்தியர்களுக்கு இங்குள்ள மாதிரி வளங்கள் ,நவீன வசதிகள் இல்லை ...ஆனாலும் இருக்கின்ற வளங்களை கொண்டு அங்குள்ள மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர்...அவர்கள் எந்த ஒரு காரணத்திற்காகவும் நாட்டை விட்டு ஓடவில்லை

காலம் யாருக்கவேனும் நில்லாது. அது போலவே எந்த துறையின் வளர்ச்சியும். நான் சொல்லியது அங்கிருக்கும் மருத்துவ சேவை கட்டமைப்பில், தொடர்ந்து அறிவை விருத்தி செய்யவேண்டிய அவசியம் தொழில் சார்பாக இல்லை.  அதுவே பிரதான காரணம். மற்றும் படி தனிப்பட்ட முயதர்ஷி இருந்தால் செய்யமுடியும். மனித இயல்பு, தேவையில்லாமல் ஒன்றுமே நடைபெறாது.

1 hour ago, ரதி said:

ஏதோ ஒரு காரணத்திற்காக நாட்டை விட்டு ஓடி வந்த நீங்கள் அல்லது உங்களை போன்றவர்கள் இங்கு நன்றாக உழைத்து,காசு சேர்த்து  உங்கள் குடும்பங்களை வளப்படுத்தி விட்டு ஓய்வு பெற்றவுடன் பொழுது போகாமல் சேவை செய்கிறேன் என்ற போர்வையில் அங்கு போய் அங்குள்ள வைத்தியர்களை அதிகாரம் செய்ய வெளிக்கிட்டால் உங்களை அவர்கள் எதிர்ப்பார்கள் தான் ...அவர்கள் அங்கு இருக்கிறார்கள்,அங்கு அவர்கள் வாழ்வதற்கு பணம் தேவை....உங்களை போன்றவர்கள் 3,6 மாசம் இருந்து போட்டு திரும்பி வர இருப்பவர்கள்.

ஓடி வந்தது வராதது, உழைப்பை தேடுவது  அவரவர்  தனிப்பட்ட விருப்பம். என்ன தொடர்பு சேவை என்று வரும் போது?  

இலவச சேவைக்கு செல்பவர்கள்,  அந்த மருத்துவ சேவை கட்டமைப்பில்  இல்லாதவர்கள், எவ்வாறு அதிகாரம் செலுத்த முடியும்?

மறு வளமாக, அங்கிருப்பவர்கள்ளுக்கு சேவை செய்ய முடியாத நிலைமையில் உள்ளார்கள் என்பது தானே உங்கள் முடிவு.

ஆனால், சேவை செய்பவர்கள், அவர்களுக்குரிய சேவை/தொழில்  சார் சுதந்திரத்துக்கு தலையீடுகழும், குறுக்கீடுகளும் வந்தால், அதை எவ்வாறு பொறுப்பது?

இப்படிப்பட்ட சிலர் ஆபிரிக்க நாடுகளில், சேவை செய்கிறார்கள் என்பது நடக்கிறது.   அது எவ்வாறு சாத்தியமாகிறது? சேவையை உள்வாங்கும் சட்ட அடிப்படையிலான கட்டமைப்புக்கள் உள்ளது அந்த நாடுகளில்.

2 hours ago, ரதி said:

குறைந்தளவு அறிவையும்,நிறைய தொ;ழில் நுட்பம்,நவீன மருத்துவ இயந்திரங்கள்  எல்லாவற்றையும் விட கணனியை அதிகமாய் பாவித்து  வைத்தியம் செய்யும் உங்களை விட , அதிகமாய் மூளையை பாவித்து குறைந்தளவு வளங்களோடு செயற்படும்  அவர்கள் எவ்வளவோ மேல்.

அவர்கள் செயற்ப்படும் விதத்தை  நான் ஒருபோதுமே விமர்சிக்கவில்லை.

குறிப்பு: நான் வைத்தியரும் அல்ல.

இதற்கும், சேவை செய்ய விரும்பவரின் நடைமுறைப் பிரச்சனைகளுக்கும் என்ன தொடர்பு உள்ளது?

2 hours ago, ரதி said:

அங்கிருக்கும் நிறைய பேர் வெளி நாடுகளில் வந்து படித்து விட்டு திரும்ப போய் ஊரில் வேலை செய்கிறார்கள்...உங்களுக்கு முடிந்தால் போய் செய்யுங்கோ... அதிக பிரசங்கித்தனம் காட்டினால் பிரச்சனை தான்

இதுவும் தனிப்பட்ட விருப்பம். ஆனால், திரும்பி சென்றவர்கள், நான் அறிந்தவரையில், ஒப்பீட்டளவில் வேலைப் பழுவும், பொறுப்புமே  மிகப்  பிரதானமான காரணம். அங்கிருப்பவர்கள், ஒப்பீட்டளவில் வசதியான (அங்கு), மற்றும் சுமையற்ற வாழ்கைக்காவே அன்றி சேவையின் நிமித்தம் அன்று.  அங்கிருப்பவர்கள், வடக்கிலும்  மற்றும் கிழக்கில் நியமானதை விரும்புகிறார்கள் இல்லை என்று எத்தனையோ தடவை தனிப்பட்ட முறையிலும், மற்றும் செய்திகளின் வழியிலும் தெரிந்து கொண்டே இருக்கிறேன்.  இதற்கும், வெளி நாடு வருவதற்கும், ஒரே நாடு (அதுவும் சிங்களத்திற்கு சேவை)  என்பதை தவிர, என்ன வேறுபாடு?  அங்கிருப்பவர், அங்கிருக்கும் ஒப்பீட்டளவில்மிகவும் வசதியான, ஒப்பீட்டளவில் சுமையற்ற வாழ்க்கையை தேடுகிறார்.  இங்கிருப்பவர், பல தனிப்பட்ட  விட்டுக்கொடுப்புகளை செய்தே, பளுவை, பொறுப்பை  சுமந்தே   நீங்கள் கூறிய பணம் மற்றும் தொழில் விருத்தியை தேடுகிறார்.  

சிறிதளவில் விதிவிலக்கும் உண்டு. அதாவது, மருத்துவ சேவையாற்ற வேண்டும் என்று இருப்பவர்கள்.

2 hours ago, ரதி said:

அதிக பிரசங்கித்தனம் காட்டினால் பிரச்சனை தான்

பிரச்னைகளை தெரியாமல், பிரச்சனைக்குள் மூக்கை நுழைத்து சேவை செய்ய வேண்டும் எதிர்பார்ப்பது உங்களுக்கு பிழையாக தெரியவில்லை?  

எமது சமூகக்தில் உள்ள ஓர் எதிர்பார்ப்பு, ஒருவர் ஒப்பீட்டளவில் நல்ல நிலையில் இருந்தால், அவர் மற்றவர்களின் தேவைக்கு உதவி செய்வதற்க்கு கூட, வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் பரவாயில்லை என்பது.

3 hours ago, ரதி said:

முடிந்தால் நவீன மருத்துவ கருவிகளை வாங்கிக் கொடுங்கோ

இது  சிறிய உபகாரணளுக்கு பொருந்தும்.

இன்று வளர்ந்த நாடுகளில், மக்களின் மருத்துவ விபரங்கள் இலத்திரனியல் ரீதியாக அங்குள்ள மருத்துவர்களுக்கு கிடைக்கும். 

https://www.cerner.com/ உலகில் அவ்வாறான ஒரு பெரிய நிறுவனம். 

இவ்வாறூ வடக்கில் இல்லை கிழக்கில் செய்யலாம். சில கிராமங்களில் ஆரம்பிக்கலாம். வேலையில்லா படடதாரிகளை இதற்கு மீள் தகமை பெற வைக்கலாம். 

இந்த முறை மூலம் உலகின் எந்த மூலையில் உள்ள வைத்தியரும் உதவலாம். உலகில் இவ்வாறு பல நாடுகள் செய்தும் வருகின்றன.  

  • கருத்துக்கள உறவுகள்
On 7/25/2019 at 12:20 AM, ரதி said:

இங்கு ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் வைத்தியர்கள் ஊரில் போய் பின் தங்கிய கிராமங்களில் இருந்து கொஞ்ச  காலமாவது சேவை செய்யலாமே 

நல்லது ஆனால் வர நினைப்பார்களோ எனத்தெரியாது கன பேரின் நிலைகளென்பது காசுக்கு மருத்துவம் பார்க்கமுடியாமல் நோய்களை வெளியில் சொல்ல முடியாமலும் இறந்து போனவர்கள் அதிகம். தன் குடும்பத்திற்க்காக உழைத்த சில நல்ல மனிதர்களை சொல்லலாம் 

On 7/25/2019 at 3:43 AM, குமாரசாமி said:

ஆசை தோசை அப்பளம் வடை.......கெப்பர் புடிச்ச கூட்டம் எப்பிடி போவினம்? 😀

ம்ம் அப்படி இல்லை உங்கு வந்து வேலை செய்ய அவர்களுக்கு போதுமான வசதிகள் இல்லையென்பதும் முதலில் சொல்லலாம் ஆனால் எம்மக்களுக்கான பொதுசேவையென்னும் போது அதை செய்ய நினைப்பவர்கள் அதிகம் வடக்கு ஆளுனரின் இந்த அழைப்புக்கு யார்கரம் கொடுப்பார்கள் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் இனப்பற்று  ஒன்று இருக்கும் அது அழைக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
On 7/27/2019 at 4:55 AM, ரதி said:

முடிந்தால் நவீன மருத்துவ கருவிகளை வாங்கிக் கொடுங்கோ 

இதை போர்க்கலாத்திலிருந்து இன்று வரை அவுஸ்ரேலியாதமிழ் வைத்தியர்கள் தாயகத்திற்க்கு செய்து கொண்டிருக்கின்றார்கள்.....சிங்கள பகுதிகளுக்கும் செய்து கொண்டிருக்கிறார்கள்....

5 hours ago, putthan said:

இதை போர்க்கலாத்திலிருந்து இன்று வரை அவுஸ்ரேலியாதமிழ் வைத்தியர்கள் தாயகத்திற்க்கு செய்து கொண்டிருக்கின்றார்கள்.....சிங்கள பகுதிகளுக்கும் செய்து கொண்டிருக்கிறார்கள்....

தமிழ் பகுதிகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத போது எதற்காக சிங்கள பகுதிகளுக்கு செய்து கொண்டிருக்கிறார்கள்? விசா எடுப்பதற்கு வசதியாகவோ?

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, போல் said:

தமிழ் பகுதிகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத போது எதற்காக சிங்கள பகுதிகளுக்கு செய்து கொண்டிருக்கிறார்கள்? விசா எடுப்பதற்கு வசதியாகவோ?

சிறி லங்கா போன்ற ஊழல் சாதாரணமான நாட்டில் சேவை செய்யவும் சில நேரம் இலஞ்சம் கொடுக்க வேண்டும்! இந்த அவுஸ் மருத்துவர்கள் உங்கள் போல வெற்று அரசியல் கோஷம் போடுவதில் ஆர்வமற்ற ஆட்களாக இல்லாமல் யதார்த்த ரீதியில் சிந்தித்து இலஞ்சத்தை சிங்களப் பகுதிகளுக்கான சேவையாக வழங்குகிறார்கள்! வெளிநாட்டில் பாவனையற்ற நிலையில் இருக்கும் ஒரு மருத்துவம் சார்ந்த இயந்திரத்தை சிறி லங்காவுக்கு அனுப்பினால் சுங்கத்தில் மறித்து வைத்துக் கொண்டு இலஞ்சம் கேட்கும் நிலை இருக்கிறது! கையூட்டை சுங்க அதிகாரிக்குக் கொடுப்பதை விட ஏழை சிங்களவர்களுக்கு மருத்துவ உதவி செய்தால் ஒரு சிங்கள அரசியல் வாதி உதவ வருவார். அடுத்த இயந்திரங்கள் தடையின்றி தமிழ் பகுதிகளுக்குப் போகும்! இது pragmatic சிந்தனை! "அரசியல் தீர்வுக்குப் பிறகுதான் அபிவிருத்தி" என்று நிற்கும் உங்களுக்கு இது புரியாது! 

யாழ் மருத்துவ மனையில் உள்ள நரம்பியல் நிபுணர் மிகநல்ல அறிவு அனுபவம் கொண்டவர் அண்மையில் எனது உறவு முறையானவர் சத்திர சிகிச்சையின் போது  மூளைச்சாவு அடைந்தார் அவர் கூறிய காரணம் MRI ஸ்கான் இருந்து இருந்தால் என்னால் காப்பாற்றியிருந்திருக்க முடியும் ,யாழ் ஆஸ்பத்திரியில் இன்னும் இல்லை தெற்கு பகுதிகளிலும் சில வைத்தியசாலை களில் மட்டுமே உண்டு ( இவை எனது உறவினர்கள் அந்த டாக்டர் கூறியதாக எனக்கு கூறியவை சில தகவல் பிழைகள் இருக்க கூடும்)

மகரகம (புற்று நோய்) வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்கள் வாங்குவதற்கு (100கோடி ரூபா) பணம் சேகரிக்க முனையும் ஒன்லைன் விளம்பரம்/ தகவல் ஒன்றை அண்மையில் பார்த்தேன் (தமிழில தான் முன்னெடுப்போரும் தமிழர்கள் போல் இருந்தது)

22 hours ago, Justin said:

இது pragmatic சிந்தனை! "அரசியல் தீர்வுக்குப் பிறகுதான் அபிவிருத்தி" என்று நிற்கும் உங்களுக்கு இது புரியாது! 

மூளை குழம்பிவிட்டால் அல்லது பிசகிவிட்டால் இப்படித்தான் தாங்களே கற்பனை செய்துகொண்டு உளறிக் கொண்டிருப்பார்கள்! pragmatic ஆக சிந்தித்தால் மட்டும் தான் இந்த உண்மை உங்களுக்கு விளங்கும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.