Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஞாயிறு வகுப்பு என்ற போர்வையில் யாழில் மீண்டும் மதமாற்ற முயற்சி: விரட்டியடித்த கிராமமக்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் சிங்களவர் ஒரு பௌத்த விகாரையை கட்டி அங்கே இருக்கும் தமிழர்களை நோக்கி  "சில்" எடுக்க சொல்லி போதனை செய்தால் எப்படி பார்ப்போம்?
அதே உணர்வு இங்கேயும் வருவது தானே சரி. 
தேடுதல் உள்ளவன் தேடி வருவான்... வலிந்து போய் தலைக் கணக்கு தேடுதலை நடத்தினால் தேவையில்லாத சங்கடங்கள் தான் மிஞ்சும். 
- எனது ஆரம்பக்கல்வி ஒரு முஸ்லீம் பாடசாலை. என்னை திருக் குர்ஹான் ஓத சொல்லியோ , சுன்னத்து செய்யச்சொல்லியோ ... சொர்க்கத்தில் 120 கன்னியர்கள் பாய்விரிப்பார்கள் பற்றிய கதைகள்  சொல்லி ஆசை காட்டவில்லை, மோசம் செய்யவில்லை.

- வாழ்ந்தது முற்றிலும் பௌத்த சிங்களவர் மத்தியில், பன்சலைக்கு வந்து 'பந' கேட்கும் படியோ அல்லது 'சில்' எடுக்கும் படியோ,  'தாம் பாஹாசல்' வரும் படியோ  வற்புறுத்தவில்லை.

- பின்னாடி பெரும் பகுதி கல்வி,  சம்.பத்திரிசியார் கத்தோலிக்க கல்லூரியில்... எந்த பாதிரியாரும் பைபிளை படி, சுவிசேகம் கிடைக்கும், ஞானஸ்நானம் பெற்றுக்கொள் என்று அதிகாரம் செய்யவில்லை.

அவர்கள் அவர்களாகவும் , நாங்கள் நாங்களாகவும் இருந்தோம்.
இவர்கள் ஏன் இப்படியானார்கள்...?

Edited by Sasi_varnam

  • Replies 114
  • Views 7.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ பிர‌ச்ச‌னை என‌து ஊரிலும் ந‌ட‌ந்த‌து , ஜ‌ந்த‌ ஆறு  வ‌ருட‌த்துக்கு முத‌ல் , இந்து கோயிலுக்கு ப‌க்க‌த்தில் தேவாலைய‌ம் க‌ட்ட‌ போகிறோம் என்ர‌ , ஊர் பெடிய‌ங்க‌ள் எங்க‌ட‌ கோயில் இருக்கிர‌ இட‌த்தில் க‌ட்ட‌ விட‌ மாட்டோம் வேர‌ இட‌ம் பாருங்கோ என்று ச‌ண்டையில் இற‌ங்கிட்டாங்க‌ள் ஊர் ப‌ஸ்ச‌ங்க‌ள் , பிற‌க்கு என்ர‌ அத்தை த‌லையிட்டு அந்த‌ பிர‌ச்ச‌னையை தீர்த்து வைச்சா , பிற‌க்கு வேர‌ ஊரில் தான் தேவாலைய‌ம் க‌ட்டின‌வை 😉😉/

நான் சிறு வ‌ய‌தில் இருந்து இந்து சைவ‌ச‌ம‌ய‌ம் , எனக்குள் நான் எப்போதும் சொல்லி கொள்வ‌து ( தெய்வ‌ங்க‌ள் எல்லாம் ஒன்று தான் என்று 🙏)

என‌க்குள் ம‌த‌ வெறி சுத்த‌மாய் இல்லை , ம‌த‌ வெறி ச‌ண்டையை விரும்புவ‌தும் இல்லை 😓,

என‌க்கு தெரிஞ்சு என்ர‌ சொந்த‌த்துக்கை நிறைய‌ பேர் வேத‌ ம‌த‌த்துக்கு மாறின‌வை , 
அவையாய் முன் வ‌ந்து மாறின‌வை , அதுக்காக‌ நான் அவ‌ர்க‌ளை ஒரு போதும் த‌ள்ளி வைச்ச‌து இல்லை 😉😉
அவ‌ர்க‌ளின் வாழ்க்கையை தீர்மானிக்கிற‌து அவையே , 

என் வாழ் நாளில் ம‌த‌ம் மாறுவ‌து 
என்ர‌ பேச்சுக்கே இட‌ம் இல்லை 🙏🙏

ம‌ற்ற‌வ‌ர்க‌ளோடு ம‌த‌த்தை ப‌ற்றி முர‌ன் ப‌ட‌ப் போர‌தும் இல்லை இதுவ‌ர‌ முர‌ன் ப‌ட்ட‌தும் இல்லை 😉,

என‌க்கு எல்லா ம‌த‌த்திலும் ந‌ண்ப‌ர்க‌ள் இருக்கின‌ம் , நாங்க‌ள் ம‌த‌ க‌தையே க‌தைப்ப‌து இல்லை , ஜாலியா காமெடியா க‌தைப்போம் ப‌ழ‌குவோம் 😁😉/
 
  • கருத்துக்கள உறவுகள்

பரம்பரை பரம்பரையாக  இந்துக்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் வாழ்பவர்கள்

நாங்கள் தமிழர்கள் என்பதை தவிர வேறு எந்த அடையாளங்களையும் சுமந்து வாழ்வதில்லை ,வேற்றுமைகள்பற்றி சிந்திப்பதும் இல்லை.

அதனால்தான் தமிழர்களின் அரசியல் போராட்ட  காலத்தில் ஒரு கிறிஸ்தவர் செல்வாவை தமிழர்கள் தமது தந்தை என ஏற்றுக்கொண்டார்கள்.

ஆயுதபோராட்டகாலத்தில் புலிகளின் முதல் தாக்குதல் தளபதி சீலனும் ஒரு கிறிஸ்தவராகவே இருந்தார்.

சலனமற்று  தமிழர்களுக்கு இடையிலே மிஞ்சியிருந்த இந்த ஒரேயொரு ஒற்றுமையையும் குழிதோண்டி போட்டு புதைப்பது இந்த மதமாற்ற கோஷ்டிகளே. 

அம்மா அப்பாபோல மதமும் ஒரு மனிதனின் பிறப்போடு சம்பந்தப்பட்ட அடையாளம், அதை ஏன் மாற்ற முயற்சிக்கிறீர்கள், மாற்றவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

மதம் மாறினால் அனைத்து துன்பங்களும் நீங்குமென்றால் நீங்கள் குறிப்பிடும் மதத்தில் உள்ளவன் எல்லோரும் விடிய எழும்பி வேலைக்குபோகமாட்டான்.

எந்த மதத்தில் நீ இருந்தாலும் சொந்த கைகால்களும், சொந்த முயற்சியும் இல்லாதுபோனால் எந்த மதத்தவனும் ஏழையாகவும் நிம்மதி இல்லாதவனுமாகவே எப்போதும் இருப்பான், இறைவனுக்கு அவனிடம் ஒருபோதும் வேலை இருக்காது.

மதம் என்பது ஒரு நம்பிக்கை வழிபாட்டுமுறையே அன்றி  பொருளாதார ஆன்மீக சட்டமல்ல.

என்னுடைய அப்பா இருக்கும்போது இன்னொருவரை என்னை பெற்ற தந்தையாய் எப்படி ஒரு மனிதன் ஏற்றுக்கொள்ளமுடியும்?

அப்படி செய்தால் அது அநாகரிகம் அசிங்கம் மட்டுமல்ல ஆத்மார்த்தமான நம்பிக்கையும் அல்ல.

நல்லது ஒரு மக்கள் கூட்டத்திற்கு செய்யவேண்டுமென்றால் மத மாற்றம் ஒரு மனிதனுக்கு அவசியமில்லை, மனமாற்றம் மட்டுமே தேவை.

ஏற்கனவே மேய்ப்பனற்ற மந்தைகள்போல் அல்லாடிக்கொண்டிருக்கும் தாயக மக்களை மேலும் மேலும் குழப்ப நிலைகளுக்குள் தள்ளிவிடும் இந்த மதமாற்ற கூட்டங்கள் கொலைகாரர்களுக்கு சமம், 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, valavan said:

சலனமற்று  தமிழர்களுக்கு இடையிலே மிஞ்சியிருந்த இந்த ஒரேயொரு ஒற்றுமையையும் குழிதோண்டி போட்டு புதைப்பது இந்த மதமாற்ற கோஷ்டிகளே. 

குழம்பிய.. குட்டையில், மீன் பிடிப்பது என்பது இதனைத்தான்.
இவர்களின் செயலை அடியோடு...  தடுத்து, நிறுத்த வேண்டும்.
இல்லையேல்... இது எதிர்காலத்தில், பெரிய பிரச்சினை உருவாக வழி  வகுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை விரட்டியது மிகவும் தவறு. 

கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிளும் இத்தகைய ஊழியர்கள் ரெயில்வே ஸ்டேசன் போன்றவற்றின் அருகில் இருந்து பாடல்கள் பாடி, ஜெபித்து, பைபிள் வசனங்கள் வாசித்து கொண்டிருப்பார்கள். அவர்களை அங்குள்ள மக்கள் இப்படி விரட்டியடிப்பதில்லை.   

மேலும் யாரும் யாரையும் மதம் மாற்ற முடியாது. பலர் மனம் மாறியே இந்த கூட்டங்களில் சேர்கின்றார்கள். எனக்கு தெரிந்த சமூகத்திலுள்ள பல குற்றவாளிகள் / போதைவஸ்து பாவனையாளர்கள் பலர் இந்த கூட்டங்களுக்கு சென்று திருந்தி வாழ்க்கையில் நம்பிக்கையேடு வாழ்கின்றார்கள்.  

இப்படி விரட்டியடிப்பவர்கள்தான் மத வெறியர்கள்  

19 minutes ago, colomban said:

விரட்டியடிப்பவர்கள் மத வெறியர்கள் அல்ல. அங்குள்ள மக்களின் சூழ்நிலையை பயன்படுத்தி மதம் மாற்றுவோருக்கு எதிரான செயற்பாடு அது. 

ஒரு கிழமைக்கு முன் இதே ஊருக்கு சென்றவர்கள் இசை நிகழ்ச்சியுடன் கூடிய கூட்டம் நடத்த முயன்றனர். நோய் பிணி தீர்ப்பதற்கான கூட்டம் என கூறப்பட்டது. வெளியிடத்திலிருந்து நூற்றுக்கணக்கானோரை அழைத்துச்சென்றதாகவும் கூறப்படுகிறது.

அங்குள்ள சிறுவர்களிடம் பாதிரியார் காலையில் எழும் போது இயேசுவே என கூறியவாறு எழுங்கள் என கூறினாராம். சிவன், பிள்ளையார், முருகன் என வழிபடுவோரை ஏன் இயேசுவே என கூறியபடி எழும்ப சொல்ல வேண்டும்.

நாளைக்கு புத்த பிக்குகளும் தமிழர்களுக்கு புத்தரின் மகிமையை சொல்லி பௌத்தத்துக்கு மாற்றட்டும், தமிழர்களை சிங்களவர்களாகவும் மாற்றட்டும். அவர்கள் செய்வதும் சரி என ஆதரித்துக்கொண்டிருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

16 வயதுக்கு உட்பட்டவருடன் அவருடைய சம்மதத்துடன் உடலுறவு கொள்வது எப்படி பாலியல் வல்லுறவு என்று வருமோ அது போல் தான் இதுவும் . அதாவது ஒருவருடைய இயலாமையை (வறுமையையோ நோயையோ)  வைத்து மதமாற்றம் செய்வது. ஒருவருடைய இயலாமையையாரும் சாதகமாக எடுக்க கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஜேசு வாறார் வாறார் என்று காலம் காலமா சொல்லிக்கிட்டு.. மக்களை மூடநம்பிக்கைக்குள் தள்ளி.. அவர்களை மடையர்களாக்கும்.. இந்தக் கூட்டம்.. அடியோடு ஊர்களை விட்டு விரட்டப்படுவது அதுவும் மக்களால் விரட்டப்படுவது வரவேற்கத்தக்கது. இது இஸ்லாமிய முஸ்லிம் அடிப்படைவாதத்தை திணிப்பவர்கள் மீதும் காண்பிக்கப்பட வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

நான் இப்படி எழுதுவதால் உடனேயே கிறீஸ்த்தவன் என்பதால் இப்படி எழுதுகிறேன் என்று நீங்கள் சொல்வீர்கள், பரவாயில்லை.

எனது கேள்வி என்னவென்றால், நீங்கள் அனைவரும் சொல்வதுபோல இது ஒரு மதமாற்ற நிகழ்வாகவே இருக்கட்டும் (அதுகூட உண்மையா இல்லையா என்பதை இந்தச் செய்தியை விசமத்தனமாகப் பிரசுரித்தவரைத் தவிர ஏனையவர்களுக்குத் தெரியாது) மதமாற்றம் செய்வது யார்? சிங்கள பெளத்தர்களா அல்லது இஸ்லாமியர்களா? இல்லையே ? அவர்களும் தமிழர்கள் தானே?? அப்படியானால், கிறீஸ்த்தவத் தமிழர்களை நாம் தமிழர்கள் இல்லையென்கிறோமா? இதேயிடத்தில் ஒரு பெளத்தவிகாரையோ அல்லது மாபோதியோ (தையிட்டியிலும், கிண்ணியாவிலும், முல்லைத்தீவிலும் கட்டப்படுவது போல) கட்டப்பட்டு, பெளத்தர்களாக தமிழர்கள் மாற்றப்பட்டாலோ அல்லது தமிழ் பெளத்தர்களாக ஒரு சமூகம் உருவானாலோ நாம் என்ன செய்யப்போகிறோம்? இன்று இந்தக் கையாலாகாத கிறீஸ்த்தவ மதம் மாற்றும் பேர்வழிகளை அடித்துவிரட்டியது போல, சிங்கள பெளத்தர்களை எம்மால் விரட்ட முடியுமா?? 

மதங்கள் எதுவுமே உண்மையில்லை என்பதுதான் எனது எண்ணம், இதற்குள் ஒருவர் இன்னொரு மதத்தினை வசைபாடுவதும், எள்ளி நகையாடுவதும் அபத்தம். யேசு வருவார் வருவார் என்றார்கள், இன்னும் வரவில்லையென்பதும், அதேபோல இந்துக்கடவுள்களை விமர்சிப்பதும் ஒருவரின் மேல் ஒருவர் சேற்றைவாரி இறைக்க உதவுமேயன்றி வேறு எதுவும் செய்துவிடப்போவதில்லை.

மதமாற்றம் செய்கிறார்கள் என்றால், ஒருவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று மதம் மாறாவிட்டால் கொல்லப்படுவாய் என்று மிரட்டி மதம் மாற்றவில்லயே? மதம் மாறுபவர் தான் செய்வது என்னவென்பதை தெரிந்துகொண்டுதானே செய்கிறார்? அவரின் சுதந்திரத்தில் தலையிட நாம் யார்? 

மதச் சுதந்திரம் என்பது எந்த ஒருவனும் தனக்கு விரும்பிய மதத்தில் இருப்பது அல்லது இன்னொரு மதத்திற்கு மாறுவது. இன்னொரு மதம் மீதான ஈர்ப்பென்பது ஒருவரது தனிப்பட்ட அனுபவத்திலோ அல்லது இன்னொருவரின் மூலமாகவோ அல்லது இன்னொருவரின் அனுபவத்திலோதான் ஒருவருக்கு வருகிறது. மேலே ஜஸ்டின் கூறியபடி, ஐஸிஸ்கள் போன்று கழுத்தில் கத்திவைத்து பலவந்தமாக மாற்றினாலன்றி, இவை கட்டாயம் மதமாற்றங்கள் இல்லை.

ஒரு குழுவினர் தம் பாட்டில் செபிப்பதையும், அங்கே தமது விருப்பத்தின் பேரில் ஒன்றுசேர்வோரையும் அடித்துவிரட்டும் தெருச் சண்டித்தனம் புலிகள் காலத்தில் இல்லை. முன்னர் இருந்தது, இப்போது மீண்டும் உருவாகிறது.

மறவன்புலவு சச்சிதானந்தம் போன்றவர்களின் தூண்டுதல் நிச்சயம் இங்கே இருந்திருக்கும். இந்துத்துவா கொள்கையை விதைக்கும் சிவசேனையை தமிழினத்தில் வரவிட்டதன் மூலம் உருவாக்கப்படும் கண்மூடித்தனமான சண்டித்தனமே இங்கு நடந்திருக்கிறது. ஒருவன் தனது விருப்பத்தின்பேரில் மதம் மாறுகிறான் என்பது அவனது தனிப்பட்ட விருப்பம். அதில் தலையிட்டு அடாவடித்தனம் செய்வதை விடுத்து, சமூகத்தைச் சீரழிக்கும் இன்னும் எத்தனையோ செயற்பாடுகள் தாயகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன, அவற்றைக் குறைக்க முடியுமா என்று பாருங்கள். 

எமக்கு எமது எதிரிகள் யார், நண்பர்கள் யாரென்பதில் இன்னமும் தெளிவு பிறக்கவில்லை.  குழுக்கள் குழுக்களாகப் பிரிந்து கொம்பு சீவிக்கொண்டிருக்கிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ரகு

இதைத்தான் நானும் கூற வந்தேன்.
காலம் கால‌கமாக இவ்வாறு கிறிஸ்தவ ஊழியம் செய்யப்படுகின்றது. ஊழியர்கள் இவ்வாறு கிறிஸ்துவை பற்றி  போதிப்பார்கள், இது அவர்கள் கடமை  விருப்பமானவர்கள் அந்த மார்க்கத்தை பின்பற்றி வாழ்வார்கள். இல்லாவிட்டால் போய்விடுவார்கள் இதை எப்படி கட்டாயாமதமாற்றம் என்பீர்கள்? 

உங்களுக்கு முடியும் என்றால் நீங்களும் இவ்வாறு கிராமங்களுக்கு சென்று இந்து கடவுள்களை பற்றி போதியுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரஞ்சித் said:

மதமாற்றம் செய்வது யார்? சிங்கள பெளத்தர்களா அல்லது இஸ்லாமியர்களா? இல்லையே ? அவர்களும் தமிழர்கள் தானே??

யுத்ததின் பின்னரான காலப்பகுதியில் சிக்கி சின்னாபின்னமாகி யாருமற்ற அரசியல் அநாதைகளாய் எம் மக்கள் வாழும் இந்த சூழ்நிலையில், தமிழர்களான இவர்கள் 

அங்கவீனமுற்ற ஆயிரக்கணக்கான போராளிகள் பொதுமக்கள் வாழ்வை மேம்படுத்த ஏதாவது செய்திருந்தால் அவர்களை பெருமையுடன் தமிழர்கள் என்று சொல்லிக்கொள்ளலாம்.

வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கி திணறும் தாயபகுதியின் படித்த/படிக்காத இளைஞர் யுவதிகளுக்கு  அவர்களால் முடிந்த அளவு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க முயன்றிருந்தால் தமிழர்கள் என்று பெருமைபடலாம்,

சக தமிழர்களின் இந்து கடவுளை சிங்களவர்களும் முஸ்லீம்களும் அவமதித்தபோது நாங்களும் தமிழர்கள் என்று இந்த மதமாற்ற கோஷ்டிகள் எதிர்த்திருந்தால் இவர்களும் எங்கள் தமிழர்கள் என்று ஏற்றுக்கொண்டிருக்கலாம்.

ஆனால் தமிழர்களாய் அவர்கள் இருப்பதால் தமிழர்களுக்கு இவர்கள் செய்யகூடிய ஒரே  சேவை மதம் மாற்றுவது ஒன்று மட்டும்தானா? தற்போது தமிழர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் தீர்வு மதமாற்றம் ஒன்றுதானா?

யாழ்நகரில் தமிழ்பேசும் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள் எங்கே அவர்கள் வீட்டுக்கதவை தட்டி இயேசு அழைக்கிறார் என்று செய்தி சொல்லும் தைரியம் இந்த தமிழ்பேசும் மதமாற்ற கிறிஸ்தவர்களுக்கு உண்டா? 

அதெப்படி இந்தியாவிலும் இலங்கையிலும் இந்துமத மக்களை மட்டும்தான் இயேசு அழைக்க ஆசைப்படுகிறார்? அது ஏன் என்று உங்களிடம் ஏதாவது விளக்கம் இருந்தால் பகிருங்கள் அறிய என்னைபோல் பலர் ஆவலாய் இருக்கலாம்.

சுயவிருப்பின்பேரில் மதம் மாறியவர்களுக்கு எதிராய் தாயகத்தில் எவரும் போர்கொடி தூக்குவதில்லை, பிறர் விருப்பை கணக்கில் கொள்ளாது தமது மதத்தை திணிப்பவர்பவர்களின்மீதே வெறுப்பு உண்டாகிறது என்பதை நீங்கள் மறைத்து பேசுவதாய் நீங்கள் உணரவில்லையா?

பாரம்பரிய இந்து கிறிஸ்தவர்களாய் வாழும் தமிழர்களுக்கிடையில் மத பேதங்கள் மோதல்கள் இருந்ததில்லை, ஆனால் இனிமேல் அது உருவாகும் ,அதற்கு காரணம் இந்த மதமாற்ற கோஷ்டிகள்.

இஸ்லாமியரும் சிங்களவர்களும் தமது மதங்கள் சார்ந்த அரசியலை தமிழர்கள்மேல் திணித்ததனால்தான் காலம் முழுவது ம் இனபூசல் அவர்களுக்கும் தமிழர்களுக்குமிடையில் தொடர்கிறது, அதையே நீங்கள் சொல்லும் தமிழர்கள் எனப்படுவோர் தமிழர்கள்மீது செய்யலாம் தவறில்லை என்ற தொனியில் கூற வருகிறீர்கள்போலும். 

எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இதுபோன்ற செயல்கள் எதிர்காலத்தில் இந்து தமிழர்கள் கிறிஸ்தவ தமிழர்களுக்கும் நீண்டகால மோதல்  என்ற மிக ஆபத்தான எதிர்காலமொன்றை இந்த மதமாற்ற கோஷ்டிகள் உருவாக்குவார்கள்.

அப்போதும் புலிகள் இருந்திருந்தால் இந்த மதமாற்ற கோஷ்டிகளால் இப்படி நடந்திருக்காது என்று இதே வசனத்தை ஒரு எழுத்து  பிழைக்காமல் பகிர்வீர்கள்.

இயேசு பாவங்களை கழுவுவார் என்று அங்குள்ள மக்கள்  விரும்பாத ஒன்றை திணிக்கும் இந்த கோஷ்டிகளுக்கு, ஒன்று புரியவில்லை ஒற்றுமையாய் வாழும் ஒரு இனத்தை மதத்தின் பெயரால்  உடைத்துவிடுவதுதான் உலகிலேயே  மிக பெரிய பாவம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதம்/மார்க்கம் மாற விரும்புற சனம் தாங்களாகவே போய் மாறுவினம்.ஊர் ஊராய் போய் பிரசங்கம் வைக்க வேண்டிய அவசியமில்லை.பழைய பித்தளை பாத்திரத்துக்கு பேரிச்சம்பழம் விக்கிறவன் மாதிரி..... மதம் மாத்துற கோஷ்டியள் என்னென்ன திருகுதாளங்களையெல்லாம் புலம்பெயர்நாடுகளிலை செய்கிறார்கள் எண்டதை நேர்லையே பார்த்து துலைக்கின்றமே.அதாலைதான் சொல்லுறம் மதம் மாற்றுபவர்கள் கள்ளர்கள்.ஊரிலிருந்து அடித்து விரட்டப்பட வேண்டியவர்கள்.
பொன்னாலை மக்களுக்கு பாராட்டுக்கள்.

நான் சைவ சமயத்தவன். இதர எல்லா கடவுள்களையும்  வணங்குபவன்.நம்புபவன்.ஏனைய மதத்தினரை மதிப்பவன். இந்த மதம் சரியில்லை எங்கள் மதத்திற்கு வாருங்கள் என்று கூவி அழைப்பவர்களை அடியோடு வெறுப்பவன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

தாத்தாவின் க‌ருத்து தான் என் க‌ருத்தும் கூட‌ 🙏 /

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை மதத்தை வணங்காதவர்கள் சாத்தான்கள் அது சகோதரர்கள் ஆயினும் சாத்தானின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள் நோய் வந்தால் இயேசு பிரியாய் வந்து மருத்துவம் செய்து காப்பாத்துவார் இப்படியா பைபிளில் உள்ளது ? ஜஸ்ரின் ரகுநாதன் விடை தரனும் அப்படி இருந்தால் அறியத்தாருங்கள் .அப்படி சொல்வது உண்மயான கிறிஸ்தவமா ?  

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, valavan said:

யுத்ததின் பின்னரான காலப்பகுதியில் சிக்கி சின்னாபின்னமாகி யாருமற்ற அரசியல் அநாதைகளாய் எம் மக்கள் வாழும் இந்த சூழ்நிலையில், தமிழர்களான இவர்கள் 

அங்கவீனமுற்ற ஆயிரக்கணக்கான போராளிகள் பொதுமக்கள் வாழ்வை மேம்படுத்த ஏதாவது செய்திருந்தால் அவர்களை பெருமையுடன் தமிழர்கள் என்று சொல்லிக்கொள்ளலாம்.

வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கி திணறும் தாயபகுதியின் படித்த/படிக்காத இளைஞர் யுவதிகளுக்கு  அவர்களால் முடிந்த அளவு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க முயன்றிருந்தால் தமிழர்கள் என்று பெருமைபடலாம்,

சக தமிழர்களின் இந்து கடவுளை சிங்களவர்களும் முஸ்லீம்களும் அவமதித்தபோது நாங்களும் தமிழர்கள் என்று இந்த மதமாற்ற கோஷ்டிகள் எதிர்த்திருந்தால் இவர்களும் எங்கள் தமிழர்கள் என்று ஏற்றுக்கொண்டிருக்கலாம்.

ஆனால் தமிழர்களாய் அவர்கள் இருப்பதால் தமிழர்களுக்கு இவர்கள் செய்யகூடிய ஒரே  சேவை மதம் மாற்றுவது ஒன்று மட்டும்தானா? தற்போது தமிழர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் தீர்வு மதமாற்றம் ஒன்றுதானா?

யாழ்நகரில் தமிழ்பேசும் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள் எங்கே அவர்கள் வீட்டுக்கதவை தட்டி இயேசு அழைக்கிறார் என்று செய்தி சொல்லும் தைரியம் இந்த தமிழ்பேசும் மதமாற்ற கிறிஸ்தவர்களுக்கு உண்டா? 

அதெப்படி இந்தியாவிலும் இலங்கையிலும் இந்துமத மக்களை மட்டும்தான் இயேசு அழைக்க ஆசைப்படுகிறார்? அது ஏன் என்று உங்களிடம் ஏதாவது விளக்கம் இருந்தால் பகிருங்கள் அறிய என்னைபோல் பலர் ஆவலாய் இருக்கலாம்.

சுயவிருப்பின்பேரில் மதம் மாறியவர்களுக்கு எதிராய் தாயகத்தில் எவரும் போர்கொடி தூக்குவதில்லை, பிறர் விருப்பை கணக்கில் கொள்ளாது தமது மதத்தை திணிப்பவர்பவர்களின்மீதே வெறுப்பு உண்டாகிறது என்பதை நீங்கள் மறைத்து பேசுவதாய் நீங்கள் உணரவில்லையா?

பாரம்பரிய இந்து கிறிஸ்தவர்களாய் வாழும் தமிழர்களுக்கிடையில் மத பேதங்கள் மோதல்கள் இருந்ததில்லை, ஆனால் இனிமேல் அது உருவாகும் ,அதற்கு காரணம் இந்த மதமாற்ற கோஷ்டிகள்.

இஸ்லாமியரும் சிங்களவர்களும் தமது மதங்கள் சார்ந்த அரசியலை தமிழர்கள்மேல் திணித்ததனால்தான் காலம் முழுவது ம் இனபூசல் அவர்களுக்கும் தமிழர்களுக்குமிடையில் தொடர்கிறது, அதையே நீங்கள் சொல்லும் தமிழர்கள் எனப்படுவோர் தமிழர்கள்மீது செய்யலாம் தவறில்லை என்ற தொனியில் கூற வருகிறீர்கள்போலும். 

எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இதுபோன்ற செயல்கள் எதிர்காலத்தில் இந்து தமிழர்கள் கிறிஸ்தவ தமிழர்களுக்கும் நீண்டகால மோதல்  என்ற மிக ஆபத்தான எதிர்காலமொன்றை இந்த மதமாற்ற கோஷ்டிகள் உருவாக்குவார்கள்.

அப்போதும் புலிகள் இருந்திருந்தால் இந்த மதமாற்ற கோஷ்டிகளால் இப்படி நடந்திருக்காது என்று இதே வசனத்தை ஒரு எழுத்து  பிழைக்காமல் பகிர்வீர்கள்.

இயேசு பாவங்களை கழுவுவார் என்று அங்குள்ள மக்கள்  விரும்பாத ஒன்றை திணிக்கும் இந்த கோஷ்டிகளுக்கு, ஒன்று புரியவில்லை ஒற்றுமையாய் வாழும் ஒரு இனத்தை மதத்தின் பெயரால்  உடைத்துவிடுவதுதான் உலகிலேயே  மிக பெரிய பாவம் .

உங்களின் கருத்திலிருந்தே தெரிகிறது நீங்கள் இவர்களைத் தமிழர்களாகப் பார்க்கவில்லையென்று. அது நான் எதிர்பார்த்ததுதான்.

தமிழர்களுக்கு இவர்கள் ஏதாவது செய்தால்த்தான் தமிழர்களாக இவர்களை ஏற்றுக்கொள்வீர்களா? அப்படியானால் தற்போது இவர்கள் யார்? சரி, இவர்கள் மதம் மாற்றுவதைத்தவிர (உங்கள் கூற்றுப்படி) வேறு எதுவுமே செய்யவில்லையென்றால், இன்னும் ஊரில் இருக்கும் மற்றைய தமிழர்கள் எல்லோரும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இதுவரை என்ன செய்தார்கள் என்று நீங்கள் ஏன் கேட்கவில்லை? அப்படி அவர்கள் எதுவுமே செய்யவில்லையென்றால் தமிழர்கள் இல்லையென்று ஒதுக்கிவிட்டீர்களா?? இல்லையே? 
நீங்கள் இவர்கள் தமிழர்களுக்கென்று எதுவுமே செய்யாமல் மதம் மாற்றம் மட்டுமே செய்கிறார்கள் என்கிறீர்கள், ஆனால் மேலே பலரும் பணத்திற்காகவும், சலுகைக்காகவும் மதம் மாற்றுகிறார்கள் என்கிறார்கள். இதில் யார் சொல்வது உண்மையென்று தெரியவில்லை.

காலம் காலமாக வாழும் கிறீஸ்த்தவர்கள் என்கிற பதத்தினால் எதைச் சொல்ல வருகிறீர்கள்? அவர்கள் ஆதியிலிருந்தே கிறீஸ்த்தவர்கள் என்பதையா? அப்போ அவர்கள் இந்துக்களாகவிருந்து கிறீஸ்த்தவத்திற்கு மதம் மாற்றப்பட்டவர்கள் இல்லையா? அவர்களை எப்படி ஏற்றுக்கொண்டீர்கள்? அவர்களை ஏற்றுக்கொள்வதில் உங்களுக்கு ஒரு சிக்கலும் இல்லையென்றால், இவர்களை ஏற்றுக்கொள்வதில் என்ன சிக்கல்? இன்னும் சொல்லப்போனால், ஆரம்பத்தில் கிறீஸ்த்தவர்களாக மாறியவர்கள்தான் கட்டாயத்தின்பேரில் மாறியவர்கள், இன்று மாறுபவர்கள் அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா?

மதம் தொடர்பான அரசியலினால்த்தான் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே பிரச்சினை உருவானதென்கிறீர்கள். சரி, இன்று இந்த மதம் மாற்றும் பேர்வழிகள் செய்யும் அரசியல் என்ன? எவரின் ஊரைப் பிடிப்பதற்காக, எவரின் திட்டத்தின்கீழ் இவர்கள் அரசியல் செய்வதாக நினைக்கிறீர்கள்? சரி, இவர்களுக்கு முன்னதாக சில நூறு வருடங்களுக்கு முன்னதாக கிறீஸ்த்தவர்களாக மாறிய இந்துக்களால் அல்லது மதம் மாற்றப்பட்ட இந்துக்களால் இதுவரை தமிழினத்திற்கு வந்த இழப்பு என்ன?? அல்லது அவர்களுக்கு இந்துக்களுக்கு இடையே என்ன பிளவு இதுவரை இருந்தது? அப்படியில்லையென்றால், இந்தப் புதிய மதமாற்றுப் பேர்வழிகள் மூலம் தமிழினத்திற்கு வரப்போகும் ஆபத்து என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? 

இவர்கள் செய்வதாக நீங்கள் கூறும் மதமாற்றத்தைக் காட்டிலும் தமிழரின் தாயகத்தில் சிங்களப் பேரினவாதம் செய்துவரும் திட்டமிட்ட ஆக்கிரமிப்பு உங்களுக்கு ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லையா? இதே களத்தில் கிண்ணியாவிலும், தையிட்டியிலும், முல்லைத்தீவிலும் சைவ ஆலயங்களைத் தகர்த்தெறிந்து பெளத்த மடாலயங்கள் கட்டப்படுவதாகச் செய்தி வந்தும் உங்களில் எத்தனை பேர் இங்கே வந்து இவ்வளவு ஆக்ரோஷமாகக் கருத்துப் பகிர்ந்தீர்கள்? அப்போ எங்கே போனது உங்களின் மதவுணர்வும் இன உணர்வும்? எதுவுமே செய்யமுடியாது, சிங்களவனைப் பகைக்க முடியாது என்பதனால் அடக்கி வாசிக்கிறீர்கள் , அப்படித்தானே?? ஆனால், இவர்கள அப்படியல்ல, எந்தப் பின்புலமும் இல்லாத அப்பாவிகள். கையில் பைபிலூம் மெழுகுதிரியும் கொண்டு அலைபவர்கள், ஆகவே இலகுவாக அடித்து விரட்டலாம் என்கிற தைரியம்தானே? எமது இனத்தைக் கருவறுத்தவனுக்கு சலாம் போடும் நாம், எமதினத்திலேயே வேற்று மதத்தினைச் சேர்ந்தவன் என்பதற்காக அடித்து விரட்டுகிறோம். 

அதெல்லாம் சரி, இன்று வடமாகாண ஆளுநராக இருக்கும் சுரேன் வட மாகாணத்தில் பெளத்த சங்க மாநாட்டினை நடத்துகிறாரே, அது ஒரு பிரச்சினையில்லையா? அல்லது யாழ்ப்பாணத்தில் தமிழ் பெளத்தர்கள் என்கிற அமைப்பு உருவாகி வருகிறதே, அது ஒரு பிரச்சினயில்லையா? இந்த தமிழ் - பெளத்த - சிங்கள அமைப்புகள் செய்யவிருக்கும் அரசியலை விடவா இந்த மதமாற்றும் பேர்வழிகள் அரசியல் செய்து தமிழினத்தை அழிக்கப்போவதாக நீங்கள் நினைக்கிறீர்கள்? 

 தமது மதத்திற்கு மாறாதுவிட்டால் கொல்லப்படுவீர்கள் என்று இவர்கள் சொன்னார்களா? அல்லது வீடு வீடாகச் சென்று சைவர்களை கழுத்தில் கயிறு போட்டு இழுத்துவந்து கட்டாயமாக மதம் மாற்றுகிறார்களா?? எனது மதம்தான் சரியானது என்று தெளிவான கொள்கையோடு இருப்பவனுக்கு இன்னொரு மதத்தின்மேல் ஈர்ப்பு ஏற்படவேண்டிய தேவையென்ன என்பதை ஏன் கேட்க மறந்தீர்கள்? 

மனிதனின் அடிப்படை உரிமைகளில் அவன் தனக்கு விரும்பிய மதத்தில் இருக்கலாம், அல்லது இன்னொரு மதத்திற்கு மாறலாம். அதை நீங்களும் நானும் தீர்மானிக்கமுடியாது. இதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். உங்களின் அரசியலும், எச்சரிக்கைகளும் அதற்குப்பிறகுதான். 
 
19 minutes ago, பெருமாள் said:

எங்கடை மதத்தை வணங்காதவர்கள் சாத்தான்கள் அது சகோதரர்கள் ஆயினும் சாத்தானின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள் நோய் வந்தால் இயேசு பிரியாய் வந்து மருத்துவம் செய்து காப்பாத்துவார் இப்படியா பைபிளில் உள்ளது ? ஜஸ்ரின் ரகுநாதன் விடை தரனும் அப்படி இருந்தால் அறியத்தாருங்கள் .அப்படி சொல்வது உண்மயான கிறிஸ்தவமா ?  

எனது மதம் தான் சரியானது, மற்றையவர்கள் பிழையானவர்கள் என்பதோ சாத்தான்கள் என்பதோ தவறு. அப்படிச் சொல்வதே மதவாதம் தான். உங்களுக்கு வருத்தமென்றால் யேசு வந்து சுகமளிக்கப்போவதில்லை, நீங்கள்தான் மருத்துவரைச் சென்று பார்க்கவேண்டும், யேசு வந்து சுகமளிப்பாரென்று இருந்தால் முடிவில் நீங்கள் மடிவதே நடக்கும். இது சுத்த முட்டாள்த்தனமும் மூட நம்பிக்கையும்.  இதில் மாற்றுக்கருத்தில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

என‌து ம‌ச்சாளின் க‌ண‌வ‌ர் ( ஊரில் பாத‌ர் )

அவ‌ரின் க‌ட‌ந்த‌ கால‌ வாழ்க்கையை பார்த்தா ( பிராடு என்ற‌ சொல்லுக்கு அவ‌ர் த‌குதியான‌வ‌ர் )

பொய் /
அடுத்த‌வ‌ன் சொத்தில் ஆசை ப‌டுவ‌து /
ம‌ச்சாளை இர‌வோடு இர‌வாக‌ கூட்டிட்டு ஓடி போன‌வ‌ர் /
ஆர‌ம்ப‌ கால‌த்தில் ப‌த்தின‌து வீடி ம‌ற்றும் எங்க‌ட‌ இந்து கோயில‌ வாழை ப‌ழ‌த்தை க‌ள‌வ‌டுத்துட்டு ஓடி போன‌து என்று ப‌ல‌ குற்ற‌ சாட்டு அவ‌ர் மேல் வைக்க‌லாம் 😠😠😠😠/

பாத‌ர் என்ப‌வ‌ர் எப்ப‌டி இருப்பார்
என்ப‌து கூட‌ ஊரில் வாழும் ம‌க்க‌ளுக்கு தெரியாம‌ ம‌ச்சாளின்  க‌ண‌வ‌ர் பின்னால் போகின‌ம் /
புரித‌ல் இல்லா ம‌க்க‌ள் 😓/

அவ‌ரின் ந‌ல்ல‌ நேர‌ம் அவ‌ர் போட்ட‌ கேலி கூத்து என‌க்கு பின்னாளில் தான் தெரிய‌ வ‌ந்த‌து 😉/  அத்தையின் வீட்டை இருந்த‌ சாமி ப‌ட‌ங்க‌ளை கொண்டு போய் குப்பேக்கை போட்ட‌வ‌ர் 😉, அந்த‌ வீட்டில் சின்ன‌னில் நாங்க‌ள் அப்ப‌ம்மாவோடு இருந்த‌ போது , அப்ப‌ம்மா சொல்லுவா கால‌ இந்த‌ ப‌க்க‌ம் வைச்சு த‌லையை ம‌ற்ற‌ ப‌க்க‌ம் வைச்சு தான் ப‌டுக்க‌னும் , கார‌ண‌ம் சாமி ப‌ட‌ம் இருக்கும் இட‌த்தில் சாமிக்கு முன்னால் எங்க‌ளின் கால் இருக்க‌ கூடாது என்று 🙏/

அன்மையில் தான் தெரிய‌ வ‌ந்த‌து   அத்தையின்  வீட்டில் ப‌ல‌ வ‌ருட‌மாய் இருந்த‌ சாமி ப‌ட‌ங்க‌ளை வீட்டுக்கு பின்னால் கொண்டு போய் போட்ட‌வை என்று / கேக்க‌ க‌டும் கோவ‌ம் வ‌ந்த‌து / சொந்த‌ம் என்ர‌ ஒரு கார‌ண‌த்தால் பொறுமையை க‌டை பிடிச்ச‌ நான் 😉

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பையன்26 said:

இந்த விமர்சனம் இப்போது எதற்காக பையன்? மதமாற்றம்பற்றிய செய்திக்கும், இங்கே நீங்கள் குறிப்பிடும் உங்களின் மச்சாளின் கணவரான பாதருக்கும் என்ன சம்பந்தம்? இந்த அனுபவப் பகிர்வு இத்திரியில் உங்களின் வாதத்திற்கு வலுச் சேர்க்கும் என்று நம்புகிறீர்களா?? 

ஊரை விட்டு வெளியே வாருங்கள், எமகாதகர்கள் இருக்கிறார்கள். பாதிரியார்கள் என்கிற போர்வையில் சிறுவர்களைப் பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கிறார்கள். அது அவர்களின் மதத்தில் உள்ள பிரச்சினையல்ல, அவர்களின் தனிப்பட்ட மிருக உணர்வு. அவர்கள் மதத்தைக் கொண்டு தமது இச்சைகளை மறைக்கிறார்கள். இது கிறீஸ்த்தவ மதத்தில் மட்டுமேயல்ல, எல்லா மதத்திலும் ஏதோ ஒரு வடிவில் இருக்கிறது. ஏனெறால், பூசாரிகளாக, பாதிரிகளாக, போதகர்களாக இருப்பவர்கள் எல்லோருமே மனிதர்கள் தான். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது மக்கள் தினசரி செத்து மடிந்துகொண்டிருக்கும் போது வராத ஞாயிறு வகுப்புக்கூட்டங்கள் இப்போது வருவதன் காரணம் என்ன? அப்போது அவர்கள் தமிழர்கள் இல்லையா? பந்தி பந்தியாக எழுதுவதென்றாலும் பொருத்தமாக எழுத வேண்டும்.

2 hours ago, ரஞ்சித் said:

னது கேள்வி என்னவென்றால், நீங்கள் அனைவரும் சொல்வதுபோல இது ஒரு மதமாற்ற நிகழ்வாகவே இருக்கட்டும் (அதுகூட உண்மையா இல்லையா என்பதை இந்தச் செய்தியை விசமத்தனமாகப் பிரசுரித்தவரைத் தவிர ஏனையவர்களுக்குத் தெரியாது) மதமாற்றம் செய்வது யார்? சிங்கள பெளத்தர்களா அல்லது இஸ்லாமியர்களா? இல்லையே ? அவர்களும் தமிழர்கள் தானே?? அப்படியானால், கிறீஸ்த்தவத் தமிழர்களை நாம் தமிழர்கள் இல்லையென்கிறோமா? இதேயிடத்தில் ஒரு பெளத்தவிகாரையோ அல்லது மாபோதியோ (தையிட்டியிலும், கிண்ணியாவிலும், முல்லைத்தீவிலும் கட்டப்படுவது போல) கட்டப்பட்டு, பெளத்தர்களாக தமிழர்கள் மாற்றப்பட்டாலோ அல்லது தமிழ் பெளத்தர்களாக ஒரு சமூகம் உருவானாலோ நாம் என்ன செய்யப்போகிறோம்? இன்று இந்தக் கையாலாகாத கிறீஸ்த்தவ மதம் மாற்றும் பேர்வழிகளை அடித்துவிரட்டியது போல, சிங்கள பெளத்தர்களை எம்மால் விரட்ட முடியுமா?? 

கிறிஸ்தவ தமிழர்களை யார் தமிழர்கள் இல்லை என்று சொன்னது? மதப்பிரச்சினைக்கு ஒரே இனம் என்பதை குறிப்பிட்டு அவர்கள் செயலை நியாயப்படுத்த நீங்கள் முயல்கிறீர்கள். சிங்களவர்கள் தமிழர்களை பௌத்தர்களாக மாற்றுவதும், முஸ்லிம்கள் தமிழர்களை இஸ்லாமியர்களாக மாற்றுவதும் அரசியலின் ஒரு அங்கமாக நடக்கிறது. கிறிஸ்தவர்கள் இந்துக்களை மதம் மாற்றுவது வெளிநாட்டிலிருந்து இதற்கென பணம் அனுப்பி நடத்தப்படுகிறது. 

34 minutes ago, ரஞ்சித் said:

தமது மதத்திற்கு மாறாதுவிட்டால் கொல்லப்படுவீர்கள் என்று இவர்கள் சொன்னார்களா? அல்லது வீடு வீடாகச் சென்று சைவர்களை கழுத்தில் கயிறு போட்டு இழுத்துவந்து கட்டாயமாக மதம் மாற்றுகிறார்களா?? 

1 hour ago, colomban said:

நன்றி ரகு

இதைத்தான் நானும் கூற வந்தேன்.
காலம் கால‌கமாக இவ்வாறு கிறிஸ்தவ ஊழியம் செய்யப்படுகின்றது. ஊழியர்கள் இவ்வாறு கிறிஸ்துவை பற்றி  போதிப்பார்கள், இது அவர்கள் கடமை  விருப்பமானவர்கள் அந்த மார்க்கத்தை பின்பற்றி வாழ்வார்கள். இல்லாவிட்டால் போய்விடுவார்கள் இதை எப்படி கட்டாயாமதமாற்றம் என்பீர்கள்? 

உங்களுக்கு முடியும் என்றால் நீங்களும் இவ்வாறு கிராமங்களுக்கு சென்று இந்து கடவுள்களை பற்றி போதியுங்கள். 

இங்கு யாரும் கிறிஸ்தவர்கள் இந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்கிறார்கள் என கூறவில்லை. மூளைச்சலவை செய்து மதம் மாற்றுவது பற்றியே குறிப்பிடுகிறோம். அத்துடன் பணம்/வேறு உதவி செய்வதாக கூறி மதம் மாற்றுவதும் நடப்பது தான்.

2 hours ago, ரஞ்சித் said:

ஒரு குழுவினர் தம் பாட்டில் செபிப்பதையும், அங்கே தமது விருப்பத்தின் பேரில் ஒன்றுசேர்வோரையும் 

ஒரு குழுவினர் தம் பாட்டில் செபிக்கவில்லை. கிறிஸ்தவர்கள் அல்லாத இந்துக்கள் வசிக்கும் பகுதியில் ஆளில்லாத வீட்டிற்கு இதற்கென சென்று ஞாயிறு வகுப்பு என்ற பெயரில் போதனை செய்கிறார்கள். அவர்கள் தமது பகுதியிலேயே அதை செய்ய வேண்டியது தானே?

Edited by Lara

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, ரஞ்சித் said:

இந்த விமர்சனம் இப்போது எதற்காக பையன்? மதமாற்றம்பற்றிய செய்திக்கும், இங்கே நீங்கள் குறிப்பிடும் உங்களின் மச்சாளின் கணவரான பாதருக்கும் என்ன சம்பந்தம்? இந்த அனுபவப் பகிர்வு இத்திரியில் உங்களின் வாதத்திற்கு வலுச் சேர்க்கும் என்று நம்புகிறீர்களா?? 

சொந்த அனுபவங்கள் தான் முக்கியம். 
எழுந்தமானமாக வரும் எழுத்துக்கள் / அனுமானங்கள் எல்லாம்  படிக்க மட்டுமே நன்றாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரஞ்சித் said:

இந்த விமர்சனம் இப்போது எதற்காக பையன்? மதமாற்றம்பற்றிய செய்திக்கும், இங்கே நீங்கள் குறிப்பிடும் உங்களின் மச்சாளின் கணவரான பாதருக்கும் என்ன சம்பந்தம்? இந்த அனுபவப் பகிர்வு இத்திரியில் உங்களின் வாதத்திற்கு வலுச் சேர்க்கும் என்று நம்புகிறீர்களா?? 

ஊரை விட்டு வெளியே வாருங்கள், எமகாதகர்கள் இருக்கிறார்கள். பாதிரியார்கள் என்கிற போர்வையில் சிறுவர்களைப் பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கிறார்கள். அது அவர்களின் மதத்தில் உள்ள பிரச்சினையல்ல, அவர்களின் தனிப்பட்ட மிருக உணர்வு. அவர்கள் மதத்தைக் கொண்டு தமது இச்சைகளை மறைக்கிறார்கள். இது கிறீஸ்த்தவ மதத்தில் மட்டுமேயல்ல, எல்லா மதத்திலும் ஏதோ ஒரு வடிவில் இருக்கிறது. ஏனெறால், பூசாரிகளாக, பாதிரிகளாக, போதகர்களாக இருப்பவர்கள் எல்லோருமே மனிதர்கள் தான். 

இந்த‌ உல‌க‌கில் 
ந‌ல்ல‌ பாத‌ர் மாரும் இருக்கின‌ம் , 

அதே போல‌ எங்க‌ட‌ இந்து ம‌த்த‌திலும் நிறைய‌ ஜ‌ய‌ர் மார் இருக்கின‌ம் ( அப்ப‌டியான‌வையை குறை சொல்ல‌ வார்த்தை இல்லை )

பாத‌ர் என்ப‌ர் சிறு வ‌ய‌தில் இருந்தே ந‌ல் வ‌ழியில் ப‌ய‌ணிச்சு இருக்க‌னும் , அத‌ ம‌ச்சாளின் க‌ண‌வ‌ர் செய்ய‌ வில்லை 😠 /

குறைக‌ள் இருக்கும் இட‌த்தில் அதை வெளிப்ப‌டையாய் சொல்லுவ‌தில் த‌ப்பு  இல்லை /

நான் க‌ண் க‌ண்ட‌ தெய்வ‌ம் இந்த‌ நூற்றாண்டில் அது எங்க‌ட‌ காளி கோயிலை பூசை செய்த‌ ஜ‌யா /
வெள்ளிக் கிழ‌மை ஆனா ஜ‌யாவின் கோயிலுக்கு சிறு வ‌ய‌தில் இருந்து போய் இருக்கிறேன் , ஜ‌யா வேப்ப‌ இழையால் எங்க‌ளுக்கு அடிப்பார் , பூசை முடிஞ்ச‌தும் சாமிக்கு வைச்ச‌ குலைய‌ல் சோறு சாப்பிட‌ த‌ந்துட்டு தான் வீட்டுக்கு அனுப்புவார் / 
சின்ன‌னில் நோய் ப‌ட்டு இருந்த‌து இல்லை 🙏/

என்ர‌ ஆச்சி என்ர‌ அம்ம‌ம்மா எல்லாரும் சிறு வ‌ய‌தில் இருந்தே ஜ‌யாவின் கோயிலுக்கு போய் வ‌ந்த‌வை / ஆச்சி எம்மை விட்டு பிரியும் போது ஆச்சிக்கு 100 வ‌ய‌து 🙏/ அம்ம‌ம்மா எம்மை விட்டு பிரியும் போது 89 வ‌ய‌து 🙏/

இன்றும் என் ம‌ன‌சில் நான் நினைப்பது கோயிலில் பூசை வைச்சு கோயில‌ ப‌ராம‌ரிச்ச‌ ஜ‌யா உயிருட‌ன் இடுந்து இருந்தா அவ‌ரின் கால‌ தான் தொட்டு கும்பிடுவேன் / எங்க‌ட‌ ம‌த‌த்திலும் ந‌ல்ல‌ ஜ‌ய‌ர் மார் இருக்கின‌ம் என்ப‌துக்கு நான் மேல‌ எழுதின‌ ஜ‌யா ந‌ல்ல‌ ஒரு உதார‌ன‌ம் 🙏🙏🙏🙏🙏🙏🙏 /

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

எனது மதம் தான் சரியானது, மற்றையவர்கள் பிழையானவர்கள் என்பதோ சாத்தான்கள் என்பதோ தவறு. அப்படிச் சொல்வதே மதவாதம் தான். உங்களுக்கு வருத்தமென்றால் யேசு வந்து சுகமளிக்கப்போவதில்லை, நீங்கள்தான் மருத்துவரைச் சென்று பார்க்கவேண்டும், யேசு வந்து சுகமளிப்பாரென்று இருந்தால் முடிவில் நீங்கள் மடிவதே நடக்கும். இது சுத்த முட்டாள்த்தனமும் மூட நம்பிக்கையும்.  இதில் மாற்றுக்கருத்தில்லை. 

இதைத்தானே அவர்கள் செய்கிறார்கள் முடிந்தால் ஒரு முஸ்லீமை மாற்றிக்கொண்டு வரட்டும் முதலில் பார்க்கலாம் பனையாலை விழுந்து கிடக்குதுகள் அந்த சனம்கள் பாவம் விட்டு விடுங்கள் (இந்த கடுப்பெல்லாம் அடுத்தமுறை அல்லுலோயா பரப்பவருபவர்களை  வீட்டுக்குள் விட்டு செருப்பால் அடித்து விடியோவா முகநூலில் போடபோரானாம் நமது நண்பன் கறுவிக்கொண்டு நிக்கிறான் தேவையா இதுவும் ?)

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

உங்களின் கருத்திலிருந்தே தெரிகிறது நீங்கள் இவர்களைத் தமிழர்களாகப் பார்க்கவில்லையென்று. அது நான் எதிர்பார்த்ததுதான்.

தமிழர்களுக்கு இவர்கள் ஏதாவது செய்தால்த்தான் தமிழர்களாக இவர்களை ஏற்றுக்கொள்வீர்களா? அப்படியானால் தற்போது இவர்கள் யார்? சரி, இவர்கள் மதம் மாற்றுவதைத்தவிர (உங்கள் கூற்றுப்படி) வேறு எதுவுமே செய்யவில்லையென்றால், இன்னும் ஊரில் இருக்கும் மற்றைய தமிழர்கள் எல்லோரும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இதுவரை என்ன செய்தார்கள் என்று நீங்கள் ஏன் கேட்கவில்லை? அப்படி அவர்கள் எதுவுமே செய்யவில்லையென்றால் தமிழர்கள் இல்லையென்று ஒதுக்கிவிட்டீர்களா?? இல்லையே? 
நீங்கள் இவர்கள் தமிழர்களுக்கென்று எதுவுமே செய்யாமல் மதம் மாற்றம் மட்டுமே செய்கிறார்கள் என்கிறீர்கள், ஆனால் மேலே பலரும் பணத்திற்காகவும், சலுகைக்காகவும் மதம் மாற்றுகிறார்கள் என்கிறார்கள். இதில் யார் சொல்வது உண்மையென்று தெரியவில்லை.

காலம் காலமாக வாழும் கிறீஸ்த்தவர்கள் என்கிற பதத்தினால் எதைச் சொல்ல வருகிறீர்கள்? அவர்கள் ஆதியிலிருந்தே கிறீஸ்த்தவர்கள் என்பதையா? அப்போ அவர்கள் இந்துக்களாகவிருந்து கிறீஸ்த்தவத்திற்கு மதம் மாற்றப்பட்டவர்கள் இல்லையா? அவர்களை எப்படி ஏற்றுக்கொண்டீர்கள்? அவர்களை ஏற்றுக்கொள்வதில் உங்களுக்கு ஒரு சிக்கலும் இல்லையென்றால், இவர்களை ஏற்றுக்கொள்வதில் என்ன சிக்கல்? இன்னும் சொல்லப்போனால், ஆரம்பத்தில் கிறீஸ்த்தவர்களாக மாறியவர்கள்தான் கட்டாயத்தின்பேரில் மாறியவர்கள், இன்று மாறுபவர்கள் அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா?

மதம் தொடர்பான அரசியலினால்த்தான் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே பிரச்சினை உருவானதென்கிறீர்கள். சரி, இன்று இந்த மதம் மாற்றும் பேர்வழிகள் செய்யும் அரசியல் என்ன? எவரின் ஊரைப் பிடிப்பதற்காக, எவரின் திட்டத்தின்கீழ் இவர்கள் அரசியல் செய்வதாக நினைக்கிறீர்கள்? சரி, இவர்களுக்கு முன்னதாக சில நூறு வருடங்களுக்கு முன்னதாக கிறீஸ்த்தவர்களாக மாறிய இந்துக்களால் அல்லது மதம் மாற்றப்பட்ட இந்துக்களால் இதுவரை தமிழினத்திற்கு வந்த இழப்பு என்ன?? அல்லது அவர்களுக்கு இந்துக்களுக்கு இடையே என்ன பிளவு இதுவரை இருந்தது? அப்படியில்லையென்றால், இந்தப் புதிய மதமாற்றுப் பேர்வழிகள் மூலம் தமிழினத்திற்கு வரப்போகும் ஆபத்து என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? 

இவர்கள் செய்வதாக நீங்கள் கூறும் மதமாற்றத்தைக் காட்டிலும் தமிழரின் தாயகத்தில் சிங்களப் பேரினவாதம் செய்துவரும் திட்டமிட்ட ஆக்கிரமிப்பு உங்களுக்கு ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லையா? இதே களத்தில் கிண்ணியாவிலும், தையிட்டியிலும், முல்லைத்தீவிலும் சைவ ஆலயங்களைத் தகர்த்தெறிந்து பெளத்த மடாலயங்கள் கட்டப்படுவதாகச் செய்தி வந்தும் உங்களில் எத்தனை பேர் இங்கே வந்து இவ்வளவு ஆக்ரோஷமாகக் கருத்துப் பகிர்ந்தீர்கள்? அப்போ எங்கே போனது உங்களின் மதவுணர்வும் இன உணர்வும்? எதுவுமே செய்யமுடியாது, சிங்களவனைப் பகைக்க முடியாது என்பதனால் அடக்கி வாசிக்கிறீர்கள் , அப்படித்தானே?? ஆனால், இவர்கள அப்படியல்ல, எந்தப் பின்புலமும் இல்லாத அப்பாவிகள். கையில் பைபிலூம் மெழுகுதிரியும் கொண்டு அலைபவர்கள், ஆகவே இலகுவாக அடித்து விரட்டலாம் என்கிற தைரியம்தானே? எமது இனத்தைக் கருவறுத்தவனுக்கு சலாம் போடும் நாம், எமதினத்திலேயே வேற்று மதத்தினைச் சேர்ந்தவன் என்பதற்காக அடித்து விரட்டுகிறோம். 

அதெல்லாம் சரி, இன்று வடமாகாண ஆளுநராக இருக்கும் சுரேன் வட மாகாணத்தில் பெளத்த சங்க மாநாட்டினை நடத்துகிறாரே, அது ஒரு பிரச்சினையில்லையா? அல்லது யாழ்ப்பாணத்தில் தமிழ் பெளத்தர்கள் என்கிற அமைப்பு உருவாகி வருகிறதே, அது ஒரு பிரச்சினயில்லையா? இந்த தமிழ் - பெளத்த - சிங்கள அமைப்புகள் செய்யவிருக்கும் அரசியலை விடவா இந்த மதமாற்றும் பேர்வழிகள் அரசியல் செய்து தமிழினத்தை அழிக்கப்போவதாக நீங்கள் நினைக்கிறீர்கள்? 

 தமது மதத்திற்கு மாறாதுவிட்டால் கொல்லப்படுவீர்கள் என்று இவர்கள் சொன்னார்களா? அல்லது வீடு வீடாகச் சென்று சைவர்களை கழுத்தில் கயிறு போட்டு இழுத்துவந்து கட்டாயமாக மதம் மாற்றுகிறார்களா?? எனது மதம்தான் சரியானது என்று தெளிவான கொள்கையோடு இருப்பவனுக்கு இன்னொரு மதத்தின்மேல் ஈர்ப்பு ஏற்படவேண்டிய தேவையென்ன என்பதை ஏன் கேட்க மறந்தீர்கள்? 

மனிதனின் அடிப்படை உரிமைகளில் அவன் தனக்கு விரும்பிய மதத்தில் இருக்கலாம், அல்லது இன்னொரு மதத்திற்கு மாறலாம். அதை நீங்களும் நானும் தீர்மானிக்கமுடியாது. இதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். உங்களின் அரசியலும், எச்சரிக்கைகளும் அதற்குப்பிறகுதான். 
 
எனது மதம் தான் சரியானது, மற்றையவர்கள் பிழையானவர்கள் என்பதோ சாத்தான்கள் என்பதோ தவறு. அப்படிச் சொல்வதே மதவாதம் தான். உங்களுக்கு வருத்தமென்றால் யேசு வந்து சுகமளிக்கப்போவதில்லை, நீங்கள்தான் மருத்துவரைச் சென்று பார்க்கவேண்டும், யேசு வந்து சுகமளிப்பாரென்று இருந்தால் முடிவில் நீங்கள் மடிவதே நடக்கும். இது சுத்த முட்டாள்த்தனமும் மூட நம்பிக்கையும்.  இதில் மாற்றுக்கருத்தில்லை. 

ஆம், இவர்களை தமிழர்கள் என்று நான் ஏற்றுக்கொள்ளவில்லை, அவரவர்பாட்டுக்கு அவரவர் வழிபாடு மதம் என்று வாழ்பவர்களுக்கு இடையில் புகுந்து,அவர்கள் இது வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்தபோதும்  என்னோட மதம்தான் உண்மையானது என்று கூவி அங்குள்ள மக்களின் வெறுப்புக்குள்ளாகி குழப்பம் விளைவிக்கும்  இவர்களை தமிழர்கள் என்று நான் ஏற்றால்,தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்காய் சமூகத்தில் குழப்பம் விளைவித்த  டக்ளசையும் கருணாவையும் கதிர்காமரையும்கூட தமிழர்கள் என்று ஏற்றுக்கொள்ளவேண்டிவரும், நீங்கள் வேண்டுமென்றால் இந்த இரு பகுதியினரையும்  தாராளமாக அவர்களை தமிழர்களாய் ஏற்றுக்கொள்ளூங்கள்.

அடிப்படையில் நீங்கள் ஒன்றை கவனிக்கவில்லை இங்கு கருத்து பதிவிடுகிறவர்கள் ஒன்றும் இந்த கோஷ்டிகள் பற்றிய விவாதத்தை தன்னிச்சையாய் ஆரம்பிக்கவில்லை  அங்குள்ள மக்கள்தான் இந்த மதமாற்று வியாபாரிகளை அடியோடு வெறுத்து விரட்டியடிக்கிறார்கள், அப்போ உங்கள் பார்வையில் மதம் பரப்பபோவோர் தமிழர்கள் மதம் பரப்ப வராதே என்று கூறுபவர்கள் தமிழர்கள் இல்லையா?

ஊரிலுள்ள தமிழர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன செய்தார்கள் என்று கேட்கிறீர்கள்,ஊரிலுள்ள தமிழர்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள்,இங்கு நாம் கருத்து பகிரும் யாழ் உட்பட முழுதாய் இல்லையென்றாலும் முடிந்தவரை  தங்களால் இயன்ற பங்களிப்பை செய்துகொண்டுதானிருக்கிறார்கள் ,அதற்காக அவர்கள்  எந்த இறைவனையும் அதற்குள் இழுத்து பிரச்சாரம் செய்யும் மலினமான தொழிலை செய்வதில்லை.

தமிழர்கள் என்று எம்மை அடையாளபடுத்த உங்களுக்கு கிடைத்தது மதமாற்ற பிரச்சாரம் ஒன்றுதானா? பெரும்பான்மை மக்கள் இதனை எமது பகுதியில் செய்யவேண்டாம் என்று எதிர்த்தும் அதையெல்லாம் ஏற்கமுடியாது நாங்கள் பரப்புவோம் நாங்கள் தமிழர்கள் என்று அடம்பிடிக்கிறீர்களே உங்கள் வாதத்தில் ஏதாவது தர்க்கரீதியாக இருக்கிறதா?

அது எல்லாம் ஒருபுறமிருக்க என்ன காரணத்திற்காக இந்து மதத்தை சேர்ந்தவர்களிடம் தமிழர்கள் என்ற போர்வையின்கீழ் நின்று கிறிஸ்தவத்தை பரப்பவேண்டும் என்று அடம்பிடிக்கிறீர்கள் அல்லது அந்த செயலை நியாயப்படுத்துகிறீர்கள்  என்று கூற முடியுமா?  இந்து மதத்தில் என்ன இல்லையென்று அவர்களை  மாற்றியே ஆகவேண்டுமென்று ஒற்றைகாலில் நின்று அடம்பிடிக்கிறீர்கள்?

மதம்மாற்றும்கோஷ்டிகள் வீடுவீடாக சென்றார்களா கழுத்தில் கயிறுபோட்டு இழுத்தார்களா என்றெல்லாம் வினா தொடுக்கிறீர்கள் , அப்படியெல்லாம் நடப்பதேயில்லை அதைவிட  கேவலமாக அவசரமாக ஆயிரம் வேலைகளுக்கு போகும் மனிதர்களை, எந்த வேலை வெட்டிக்கும் போகாமல் கையில் கட்டுகட்டாய் பிரச்சார பிரசுரங்களை தாங்கி நல்ல செய்தி சொல்ல வந்திருக்கிறோம் என்று இடைமறித்து பண்ணும் எரிச்சலூட்டும் செயல்களை நீங்கள் இதுவரை அறிந்ததே இல்லை என்ற பாணியில் அடித்துவிடுகிறீர்கள் பாருங்கள், நீங்கள் மிக சிறந்த ஒரு கலைஞர் என்பதை நான் ஏற்றுகொள்கிறேன்.

சிங்களவன் செய்தான் கேட்டீங்களா பெளத்தன் செய்தான் கேட்டீங்களா என்று கேட்கிறீர்கள் , அதை 2009வரை கேட்டுக்கொண்டுதான் இருந்தோம், விதி மாறிபோனதால் இன்று நீங்கள் குறிப்பிடும் உப்பு சப்பில்லா மதமாற்ற கோஷ்டிகள்போன்ற அரசியல் கட்சிகளிடம் இனம் சிக்கி தவிக்கிறது,  தாயகத்தில் வாழும் பெரும்பான்மை மக்களுக்கு பிடிக்காத ஒன்றை சிங்களவனும் பெளத்தனும் செய்வதில் ஒன்றும் ஆச்சரியமில்லை

அவன் வேறு இனம், அன்று தொடக்கம் இன்றுவரை எதிரியாகவே எம்மை பார்ப்பவன் இன்று எம்மிடம் அவனை எதிர்க்க திராணியில்லை அதனால்  அவன் அப்படித்தான் பண்ணுவான். ஆனால்.தமிழர்கள் என்ற போர்வையில் அவன்பாணியிலேயே தமிழர்களுக்கு பிடிக்காத ஒன்றை சந்துல புகுந்து சிந்துபாடுவதுபோல்  நீங்கள் செய்வதுதான் அபத்தம் /அசிங்கம்..

மதம் மாறுவது ஒரு மனிதனின் அடிப்படை உரிமைதான் சகோதரரே,ஆனால் மதம் மாற்றுவதும் ஒரு மனிதனின் அடிப்படை உரிமையா ?

இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்பற்றித்தான் இதுவரை பேசிகிட்டிருக்கிறேன் புரியவே கூடாது என்று நீங்கள் முடிவெடுத்தபின் புரியவைக்கமுயற்சி செய்தால் என்  விசைபலகைக்குத்தான் நெறிகட்டும்.

இந்துமதத்தில் எந்த மதத்தையும் மதத்தவர்களையும்  சாத்தான்கள் என்று கூறுவதேயில்லை, அப்படி கூறுபவர்கள் யாரென்று என்னைவிட உங்களுக்கு தெளீவாகவே தெரியும், உங்களுக்கு அது தெரியும் என்பது எனக்கும் புரியும்.

எந்த இந்துமதத்தை சேர்ந்தவராவது வேற்று மதத்தவரின் படியேறி எங்கள் தேவார திருவாசகங்கள் நாயன்மார்கள் தெய்வ வழிபாடுகள்பற்றி கேளுங்கள் என்று கூறி அவர்களுக்கு சந்தனம் விபூதி கொடுக்க முயற்சித்திருக்கிறார்களா?

அல்லது எந்த இந்துக்களாவது ஒரு கிறிஸ்தவ கிராமங்களுக்குள் புகுந்து பஜனை செய்து சங்க்குதி சிவன் உங்களை அழைக்கிறார் ஓடி வாருங்கள் என்று உங்களை அழைத்ததுண்டா? நீங்கள் மட்டும் ஏன் இப்படி?

இருக்கவே வாய்ப்பில்லை, ஏனென்றால் என்னோட தந்தையை உன்னோட தந்தையாய் ஏற்றுக்கொள் என்று சொல்லும் முட்டாள்தனத்தை அவர்கள் செய்வதில்லை, தந்தை தாய்போல ஒருவனின் மதமும் அவன் பிறந்தநாளிலிருந்து சேர்ந்தே வருவது.

அடுத்தவனை வா வா என்று கூப்பிடுவது உலகில் இரண்டு தொழில்கள்தான் ஒன்று  தெரு வியாபாரம் மற்றையது தெரு விபச்சாரம், அதனோடு மதங்களும் இணைவது அருவெருப்பானது.

தனது மத வழிபாடுகளில்  ஈடுபட்டுகொண்டு நிம்மதியாக வாழும்  பிற மதத்தவரிடம்போய் எனதுமதத்தை ஏற்றுக்கொள்ளூங்கள் என்று இந்து மதத்தவர்கள்  பிரச்சாரம் செய்தால் அவர்களின் முதல் எதிரியாக நானிருப்பேன், உங்கள் தரப்பில் எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, valavan said:

உங்களின் கருத்திற்கு நன்றி

9 minutes ago, பெருமாள் said:

இதைத்தானே அவர்கள் செய்கிறார்கள் முடிந்தால் ஒரு முஸ்லீமை மாற்றிக்கொண்டு வரட்டும் முதலில் பார்க்கலாம் பனையாலை விழுந்து கிடக்குதுகள் அந்த சனம்கள் பாவம் விட்டு விடுங்கள் (இந்த கடுப்பெல்லாம் அடுத்தமுறை அல்லுலோயா பரப்பவருபவர்களை  வீட்டுக்குள் விட்டு செருப்பால் அடித்து விடியோவா முகநூலில் போடபோரானாம் நமது நண்பன் கறுவிக்கொண்டு நிக்கிறான் தேவையா இதுவும் ?)

உங்களின் கருத்திற்கு நன்றி பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரஞ்சித் said:

உங்களின் கருத்திற்கு நன்றி

 கருத்தாடல் வேண்டாம் வெறும் கருத்து பகிர்ந்தால் போதும் என்று ஒரு விருப்பில் இருந்தேன், இடையில் இந்த தலைப்பில் அந்த விரதம் முறிந்தது கவலைதான், இத்துடன் முடித்துக்கொள்கிறேன் உங்களுக்கும் உங்கள் நேரத்திற்கும் நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.