Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆணுக்குப் பெண் தாலி கட்டுதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர் இளையோர் இருவர் பெண் ஆணுக்கு தாலி கட்டி  திருமண பந்தத்தில் இணைந்திருக்கின்றனர்  சுவிஸ்ஸில் ।
யாழ் வாசிகள் இதனைப் பற்றி ஏதும் அபிப்பிராயம் …...

  • Replies 59
  • Views 7.6k
  • Created
  • Last Reply

என்ன சொல்வதென்றே தெரியவில்லை, குழப்பமாக இருக்கிறது. இது வரவேற்கப்பட வேண்டியவையா என்பதைப் பற்றிய புரிதல்  இல்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இன்றைய பெண்கள் இதை விரும்புவார்கள்...தாலி என்பது ஆண், பெண் இரு பாலருக்கும் சுமையாகவே இருக்கும். ஆண்களால் முன்பு போல சட்டையை கழற்ற இயலாது !!

இன்றைய காலகட்டத்தில் புதுமையாக  எதையாவது செய்ய வேண்டும் என்று  நினைத்து பழமையான பழக்க வழக்கங்களுக்கு முரணாக நடக்கிறார்கள். அதில் இதுவும் ஒன்று. பழைமைவாதிகள் நிச்சயம் இதை எதிர்ப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

SudarSeithy-1-68.jpg

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

SudarSeithy-1-68.jpg

நானும்  இது  பற்றி  ஒரு  திரி  போட்டேன்

அதில் தாலி   மற்றும்  திருமணம் சம்பந்தமான  பல  தகவல்கள் இருந்தன

அதற்காகவே  அதை  இங்கு  இணைத்தேன்

அது  ஒரு முகநூல்  பதிவு  என்பதற்காக  மட்டும்   தூக்கி  விட்டார்கள்  போலும்

இந்த மாப்பிள்ளை  ஒரு  யாழ்  கள உறவு

அவரை  நான்  சந்தித்திருக்கின்றேன்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

70653597_2372265659508216_64385989596309

  • கருத்துக்கள உறவுகள்

ஆணை ஆணும், பெண்ணை பெண்ணும் திருமணம் செய்து வாழும் காலத்தில் இருக்கிறோம் என்பதை யாரும் மறந்துவிடவேண்டாம். சம்பந்தப்பட்டவர்கள் அவர்களுடைய தனிப்பட்ட விருப்பின் பேரில் செய்கிறார்கள். ஒரு பெண்ணையோ ஆணையோ மணப்பதற்கு முடிவெடுப்பது என்பது அந்த ஆண் பெண் இருவரிலேயே தங்கி இருக்கிறது அனைத்து முடிவுகளும். காலத்திற்கு ஏற்றாற்போல் மாறுவது கலாச்சாரமாகவும், சமயத்திற்குத் தகுந்தாற்போல் மாறுவது சம்பிரதாயமாகவும் மாறிவரும் இக்காலத்தில் இது ஒன்றும் பெரிய அதிசயம் இல்லையே.... மணமக்களை வாழ்த்துவோம்.  நமக்கென்று நம்முன்னோர்கள் அவர்களும் நம்மைப்போல்தான் ஏற்படுத்திய ஒரு சம்பிரதாய நிகழ்வை இடம் மாற்றி செயல் வடிவம் கொடுத்திருக்கிறார்கள். அவ்வளவுதான். எதிர்காலத்தில் இவர்களையும் முன்னோர்களாகக் கருதி பின்பற்ற எங்கள் சந்ததிகள் வரும்.

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, வல்வை சகாறா said:

உங்களிடமிருந்து இதை  எதிர்பார்க்கவில்லை  சகோதரி

ஒன்று  தவறு  என்றால்  அதை  இல்லாமல் செய்யணுமே  தவிர

இன்னொரு  இடத்துக்கு  மாற்றக்கூடாதல்லவா???

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

தவறாக எதைக் கருதுகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வல்வை சகாறா said:

தவறாக எதைக் கருதுகிறீர்கள்?

தாலி??

  • கருத்துக்கள உறவுகள்

தாலி????

முழுமையாகச் சொல்லுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வல்வை சகாறா said:

தாலி????

முழுமையாகச் சொல்லுங்கள்

ஒன்று  தவறு  என்றால்  அதை  இல்லாமல் செய்யணுமே  தவிர

இன்னொரு  இடத்துக்கு  மாற்றக்கூடாதல்லவா???

49 minutes ago, வல்வை சகாறா said:

ஆணை ஆணும், பெண்ணை பெண்ணும் திருமணம் செய்து வாழும் காலத்தில் இருக்கிறோம் என்பதை யாரும் மறந்துவிடவேண்டாம். சம்பந்தப்பட்டவர்கள் அவர்களுடைய தனிப்பட்ட விருப்பின் பேரில் செய்கிறார்கள். ஒரு பெண்ணையோ ஆணையோ மணப்பதற்கு முடிவெடுப்பது என்பது அந்த ஆண் பெண் இருவரிலேயே தங்கி இருக்கிறது அனைத்து முடிவுகளும். காலத்திற்கு ஏற்றாற்போல் மாறுவது கலாச்சாரமாகவும், சமயத்திற்குத் தகுந்தாற்போல் மாறுவது சம்பிரதாயமாகவும் மாறிவரும் இக்காலத்தில் இது ஒன்றும் பெரிய அதிசயம் இல்லையே.... மணமக்களை வாழ்த்துவோம்.  நமக்கென்று நம்முன்னோர்கள் அவர்களும் நம்மைப்போல்தான் ஏற்படுத்திய ஒரு சம்பிரதாய நிகழ்வை இடம் மாற்றி செயல் வடிவம் கொடுத்திருக்கிறார்கள். அவ்வளவுதான். எதிர்காலத்தில் இவர்களையும் முன்னோர்களாகக் கருதி பின்பற்ற எங்கள் சந்ததிகள் வரும்.

இது சங்க காலத்தில் ஆரியன் வர முன்னம் ஆம்பிள்ளை சிங்கங்கள் போட்ட ஆபரணம் தானே... தமிழ் தமிழர் அடையாள மீட்டெடுப்பு என்று இதை வைத்துக் கொள்வோம்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

ஒன்று  தவறு  என்றால்  அதை  இல்லாமல் செய்யணுமே  தவிர

இன்னொரு  இடத்துக்கு  மாற்றக்கூடாதல்லவா???

இதில் எது தவறு என்று எனக்குப் புரியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, வல்வை சகாறா said:

இதில் எது தவறு என்று எனக்குப் புரியவில்லை?

தாலி  என்பது  வேலி 

ஒரு அடிமை விலங்கு  என்கிறார்கள்

பெண்ணியவாதிகள்

அப்படியாயின் அதை  ஆணுக்கு  மாற்றுவதால் என்ன பலன்???

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

தாலி  என்பது  வேலி 

ஒரு அடிமை விலங்கு  என்கிறார்கள்

பெண்ணியவாதிகள்

அப்படியாயின் அதை  ஆணுக்கு  மாற்றுவதால் என்ன பலன்???

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று தெளிவாக சொல்லுங்கள். அடிமை விலங்கு, பெண்ணியவாதிகள், ஆணுக்கு மாற்றுவதால் என்ன பயன்? சத்தியமாக நீங்கள் கூற முயல்வது என்ன என்பது விளங்கவேயில்லை.

ஆணுக்கு பெண் தாலியணிவது தவறென்று எதன் அடிப்படையில் சொல்ல வருகிறீர்கள் என்பதையாவது தெளிவு படுத்துங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வல்வை சகாறா said:

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று தெளிவாக சொல்லுங்கள். அடிமை விலங்கு, பெண்ணியவாதிகள், ஆணுக்கு மாற்றுவதால் என்ன பயன்? சத்தியமாக நீங்கள் கூற முயல்வது என்ன என்பது விளங்கவேயில்லை.

ஆணுக்கு பெண் தாலியணிவது தவறென்று எதன் அடிப்படையில் சொல்ல வருகிறீர்கள் என்பதையாவது தெளிவு படுத்துங்கள்.

தூங்குபவர்களை  மட்டும்  எழுப்புவதுடன்  நிறுத்திக்கொள்வது  எனது நிலை

நன்றி  வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

தூங்குபவர்களை  மட்டும்  எழுப்புவதுடன்  நிறுத்திக்கொள்வது  எனது நிலை

நன்றி  வணக்கம்

தூங்குபவரை எழுப்பவேண்டும் என்றாலும் தெளிவான விளக்கத்தைக் கொடுக்கவேண்டும் அல்லவா..... பெண் ஆணுக்குக் கட்டிய தாலி எவ்வகையில் தவறாகிறது? எவ்வகையில் மற்றவர்களைப்பாதிக்கிறது என்று தவறென்று சுட்டிக்காட்டுபவர்கள் விளக்கம் கொடுத்து அச்செயல் தவறுதான் என்று செவ்வனே உணர்த்தும்  இடத்தில் அதை ஏற்றுக் கொள்வதில் தவறில்லையே... இச்செயலை நான் ஆதரிக்கவோ எதிர்க்கவோ இல்லை காரணம் இச்செயலால் எனக்கு எத்தகைய பாதிப்பும் கிடையாது இதனால் என் சந்ததியினர் பாதிக்கப்படுவர் என்ற எண்ணமும் எனக்குக் கிடையாது அதனாலேயே அந்த மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தேன். தவறென்று சுட்டிக்காட்ட எதுவும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, வல்வை சகாறா said:

சரி  இந்தாங்க என் விளக்கம்

நன்றி : தம்பி????

என்னைப் பொறுத்தவரைக்கும் தாலி என்பது இன்னொரு ஆபரணம். இன்னும் சொல்லப் போனால் தேவையே இல்லாத ஆணி.

கலியாணம் கட்டும் போது நான் மனைவிக்கு கட்டிய தாலி, 364.5 நாட்களுக்கு வங்கி லொக்கரில் மட்டுமே உறங்கிக் கொண்டு இருக்கும். உறவுகளின் / நண்பர்களின் கலியாணத்துக்கு போகும் போது மட்டும் லொக்கரில் இருந்து மனைவியின் கழுத்துக்கும், பிறகு மீண்டும் லொக்கருக்கும் தாவி விடும். அதுவும் உறவுகள் "ஏன் தாலி கொடி போடவில்லை" என்று (தமக்கு கொஞ்சம் கூட அவசியமில்லாத) கேள்விகளை கேட்பதால் மட்டுமே.

என் திருமணம் காதல் திருமணமாக இருந்திருப்பின் தாலி அணியாமல் விட்டிருக்க கூடிய வாய்ப்புகள் தான் அதிகமாக இருந்து இருக்கும் (உன் மூஞ்சிக்கும் உயரத்துக்கும் காதல் திருமண வாய்ப்பு என்பதெல்லாம் டூ மச் என்று மைண்ட் வொய்ஸ் சொல்லுது)

எக் காரணம் கொண்டும் வீட்டிலும் சரி, கலியாணம் தவிர்ந்த விசேட நிகழ்வுகளுக்கும் சரி தாலி அணியப்படுவது இல்லை.

உண்மையில் சங்க காலத்தில் தமிழர்கள் மத்தியில் ஆண்களால் அணியப்படும் ஒரு ஆபரணமாகவே தாலி இருந்து வந்துள்ளது. பின்னர் அது பெண்ணுக்கு தாவி வந்ததன் பின்னனியில் பார்பனியமும், பெண்களை ஒரு ஆபரணத்தின் மூலம் அடக்கி வைக்கும் கருத்துருவாக்கமும் மட்டுமே காரணமாக இருந்தன.

கணவன் இறந்த பின் செத்த வீட்டில் மனைவி அந்த தாலியை கதறலுடன் கணவனின் உடம்பில் கழட்டி வைத்து முழு பெண்மையையும் கேவலப்படுத்தும் அசிங்கமான அருவருப்பான சடங்கும் எம்மக்கள் மத்தியில் இந்த நிமிடம் வரைக்கும் தொடரவே செய்கின்றது. வெறும் ஆபரணமாக அதை பார்க்காமல் பெண்ணை கேவலப்படுத்தும் ஒரு அணிகலனாக அது அங்கு கணவனின் சடலத்தின் மீது கிடக்கும்.

கஷ்டம் வரும் போது அடைவு வைக்க தாலி நல்ல சாமான் என்று சிலர் சொல்வார்கள். ஆனால் தாலியை அடமானம் வைக்கும் நிலைக்கு போகும் குடும்பங்கள் கோடியில் ஒன்று.

தாலியில் 11 பவுண் போடுபவனுக்கும் 21 பவுண் போடுபவனுக்கும் கிடைக்கும் மரியாதைகளின் அளவுகளும் மாறும். வெறும் பொருளாதாரத்தை வைத்தே ஒருவனை மதிக்க தெரிந்த இந்த சமூகத்தில் 11 க்கும் குறைவாக பவுண் போடுபவன் ஆம்பிள்ளையே இல்லை எனப்படுவான்.

தாலியை just like another ஆபரணமாக பார்க்கும் ஒரு தலைமுறையும் அண்மைக் காலங்களில் வளர்வது ஆரோக்கியமாகவும் இருக்கு.

-------------------
சுவுசில் நடந்த திருமணத்தில் சங்க காலத்தை போன்று ஆண் தாலி கட்டுகின்றார் என்று வைத்துக் கொண்டாலும், தமிழர் பாரம்பரியத்தை மீட்டெடுக்கின்றனர் என்று சொல்லிக் கொண்டாலும் மீண்டும் பழமைக்கு திரும்புதல் என்று தான் என்னால் அணுக முடிகின்றது.

ஒரு இனம் முன்னேறாமல் அப்படியே பழமைக்கு திரும்புவதால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

முப்பாட்டனுக்கும் முப்பாட்டன் திருமணம் என்றாலே என்னவென்று தெரியாமல் விரும்பிய பெண்களுடன் உறவுகொண்டு நாடோடியாக அலைந்தான் (பெண்ணுக்கும் இது பொருந்தும்).
இன்றும் தென் அமெரிக்காவில் பழங்குடியினர் அப்படி தான் வாழ்ந்து வருகின்றனர்.  பெண் தனக்கு விரும்பிய ஆணுடன் உடலுறுவது கொள்கின்றாள் / வாழ்கின்றாள். அவர்களிடம் பெண்கள் மீதான கூட அறவே இல்லை என்று நூல் ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

திருமணம் என்பதே ஒரு அடிமை முறை (இயற்கைக்கு எதிரானதும் கூட). இதில என்ன வெங்காயம் புரட்சி வேண்டி கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, விசுகு said:

சரி  இந்தாங்க என் விளக்கம்

நன்றி : தம்பி????

என்னைப் பொறுத்தவரைக்கும் தாலி என்பது இன்னொரு ஆபரணம். இன்னும் சொல்லப் போனால் தேவையே இல்லாத ஆணி.

கலியாணம் கட்டும் போது நான் மனைவிக்கு கட்டிய தாலி, 364.5 நாட்களுக்கு வங்கி லொக்கரில் மட்டுமே உறங்கிக் கொண்டு இருக்கும். உறவுகளின் / நண்பர்களின் கலியாணத்துக்கு போகும் போது மட்டும் லொக்கரில் இருந்து மனைவியின் கழுத்துக்கும், பிறகு மீண்டும் லொக்கருக்கும் தாவி விடும். அதுவும் உறவுகள் "ஏன் தாலி கொடி போடவில்லை" என்று (தமக்கு கொஞ்சம் கூட அவசியமில்லாத) கேள்விகளை கேட்பதால் மட்டுமே.

என் திருமணம் காதல் திருமணமாக இருந்திருப்பின் தாலி அணியாமல் விட்டிருக்க கூடிய வாய்ப்புகள் தான் அதிகமாக இருந்து இருக்கும் (உன் மூஞ்சிக்கும் உயரத்துக்கும் காதல் திருமண வாய்ப்பு என்பதெல்லாம் டூ மச் என்று மைண்ட் வொய்ஸ் சொல்லுது)

எக் காரணம் கொண்டும் வீட்டிலும் சரி, கலியாணம் தவிர்ந்த விசேட நிகழ்வுகளுக்கும் சரி தாலி அணியப்படுவது இல்லை.

உண்மையில் சங்க காலத்தில் தமிழர்கள் மத்தியில் ஆண்களால் அணியப்படும் ஒரு ஆபரணமாகவே தாலி இருந்து வந்துள்ளது. பின்னர் அது பெண்ணுக்கு தாவி வந்ததன் பின்னனியில் பார்பனியமும், பெண்களை ஒரு ஆபரணத்தின் மூலம் அடக்கி வைக்கும் கருத்துருவாக்கமும் மட்டுமே காரணமாக இருந்தன.

கணவன் இறந்த பின் செத்த வீட்டில் மனைவி அந்த தாலியை கதறலுடன் கணவனின் உடம்பில் கழட்டி வைத்து முழு பெண்மையையும் கேவலப்படுத்தும் அசிங்கமான அருவருப்பான சடங்கும் எம்மக்கள் மத்தியில் இந்த நிமிடம் வரைக்கும் தொடரவே செய்கின்றது. வெறும் ஆபரணமாக அதை பார்க்காமல் பெண்ணை கேவலப்படுத்தும் ஒரு அணிகலனாக அது அங்கு கணவனின் சடலத்தின் மீது கிடக்கும்.

கஷ்டம் வரும் போது அடைவு வைக்க தாலி நல்ல சாமான் என்று சிலர் சொல்வார்கள். ஆனால் தாலியை அடமானம் வைக்கும் நிலைக்கு போகும் குடும்பங்கள் கோடியில் ஒன்று.

தாலியில் 11 பவுண் போடுபவனுக்கும் 21 பவுண் போடுபவனுக்கும் கிடைக்கும் மரியாதைகளின் அளவுகளும் மாறும். வெறும் பொருளாதாரத்தை வைத்தே ஒருவனை மதிக்க தெரிந்த இந்த சமூகத்தில் 11 க்கும் குறைவாக பவுண் போடுபவன் ஆம்பிள்ளையே இல்லை எனப்படுவான்.

தாலியை just like another ஆபரணமாக பார்க்கும் ஒரு தலைமுறையும் அண்மைக் காலங்களில் வளர்வது ஆரோக்கியமாகவும் இருக்கு.

-------------------
சுவுசில் நடந்த திருமணத்தில் சங்க காலத்தை போன்று ஆண் தாலி கட்டுகின்றார் என்று வைத்துக் கொண்டாலும், தமிழர் பாரம்பரியத்தை மீட்டெடுக்கின்றனர் என்று சொல்லிக் கொண்டாலும் மீண்டும் பழமைக்கு திரும்புதல் என்று தான் என்னால் அணுக முடிகின்றது.

ஒரு இனம் முன்னேறாமல் அப்படியே பழமைக்கு திரும்புவதால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை

விசுகு அண்ணா எப்போதுமே என்னுடனான உங்கள் உரையாடல் என்பது சொந்தமாக சிந்தித்து வருவதில்லை. யாரையாவது இழுத்து வந்து அவர்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்வது......

மாறுங்கையா நீங்களாக பேசுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வல்வை சகாறா said:

விசுகு அண்ணா எப்போதுமே என்னுடனான உங்கள் உரையாடல் என்பது சொந்தமாக சிந்தித்து வருவதில்லை. யாரையாவது இழுத்து வந்து அவர்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்வது......

மாறுங்கையா நீங்களாக பேசுங்கள்.

நேரம்  பொன்னானது  சகோதரி

ஏற்புடையதை  வெட்டி ஒட்டுவதன்  நோக்கம்  அது  மட்டுமே

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய ஆதங்கம்  எல்லாம் தாலி கட்டுவதோடு மட்டும் இல்லாமல் அந்தப் பட்டுசேலை ரவிக்கை எல்லாம் அவருக்கு குடுத்து , மாறாக அந்தப் பெண்ணும் பட்டுவேட்டியும் பட்டுசட்டையும் அணிந்து தாலி காட்டினால்  செமையாய் இருந்திருக்கும். சமூகம் இன்னும் நிறைய முன்னேற இடமிருக்கு.......தாலி கழுத்தென்ன இடுப்பென்ன எங்க காட்டினாலும் அது பாட்டுக்கு தொங்கப்போகுது.....!   🤔

  • கருத்துக்கள உறவுகள்

புதிய சிந்தனையில் நாங்கள் தமிழர்கள்🥺

இன்றைய தினம் இலங்கை காசுக்கு தங்கத்தின் விலை 76150 ரூபா  

அந்தக்காலத்தில் பெண்ணுக்கு தாலி வேலி என்பார்கள் இப்ப ஆணுக்கு வேலி 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாலி கட்டுவது  தேவையில்லாத ஒன்று என இன்றய இளையசமுதாயம் சிந்திக்க ஆரம்பிக்கும் வேளையில்.....ஆணுக்கு பெண் நிகர் எனும் போதையில் ஆணுக்கு தாலிகட்டி மகிழ்கின்றார்களாம்.
காணததை கண்ட தமிழரின் கைகளில் பண்பாடும் பழக்க வழக்கங்களும் சிக்கித் தவிக்கின்றது.
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.