Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தேர்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ

இலங்கை ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் இலங்கை ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீகொத்தவில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது, இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால், அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பரிந்துரை செய்யப்பட்ட சஜித் பிரேமதாஸவிற்கு, கட்சியின் செயற்குழு ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் களமிறங்கிய பின்னர், இந்த கட்சி சார்பில் முதல் முறையாக ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவே களமிறங்குகின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ

2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களின் ஐக்கிய தேசியக் கட்சி பொது வேட்பாளருக்கே ஆதரவை வழங்கியிருந்தது.

தற்போதைய அரசாங்கத்தில் வீடமைப்பு மற்றும் கலாசார அமைச்சராக கடமையாற்றிய வரும் சஜித் பிரேமதாஸ, இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாஸவின் புதல்வராவார்.

கட்சியின் வேட்பாளராக களமிறங்குவதற்கான அனுமதியை பெற்றுக் கொள்வதற்கு, கட்சியின் தலைமையுடன் சஜித் பிரேமதாஸ பெரும் மோதல்களில் ஈடுபட்டிருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ

இந்த நிலையில், பல நிபந்தனைகளுக்கு மத்தியில் சஜித் பிரேமதாஸவிற்கு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்திருந்த போதிலும், சஜித் பிரேமதாஸ அந்த நிபந்தனைகளை பகிரங்கமாகவே நிராகரித்திருந்தார்.

யார் இந்த சஜித்?

இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவிற்கும், ஏமா பிரேமதாஸவிற்கும் புதல்வராக 1967ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி சஜித் பிரேமதாஸ பிறந்தார்.

ஆரம்ப கல்வியை கொழும்பிலுள்ள பிரபல பாடசாலைகளில் தொடர்ந்த சஜித் பிரேமதாஸ, தனது மேல்நிலை கல்வியை லண்டனில் படித்தார்.

சஜித பிரேமதாஸ, ஜலனி பிரேமதாஸவை திருமணம் செய்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் 2001ஆம் ஆண்டு களமிறங்கிய சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, 2001முதல் 2004ம் ஆண்டு வரை ஆட்சியிலிருந்து அரசாங்கத்தில் சுகாதார பிரதி அமைச்சராக பதவி வகித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாஸ, 2014ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ

அதன் பின்னர் 2015ஆம் ஆண்டு ஆட்சிபீடம் ஏறிய ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தில் சஜித் பிரேமதாஸ, வீடமைப்பு மற்றும் கலாசார அமைச்சராக கடமையாற்றி வருகின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக கடமையாற்றி வரும் சஜித் பிரேமதாஸ, எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் களமிறங்குவதற்கு அந்த கட்சியின் செயற்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://www.bbc.com/tamil/sri-lanka-49841217

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி வேட்பாளராக தெரிவுசெய்யப்பட்ட சஜித் நோக்கத்தை வெளியிட்டார்

(ஆர்.யசி, நா. தினுஷா )

பிளவுபடாத ஒன்றிணைந்த நாட்டுக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வை வழங்குவதும் கடந்த 2015 ஆம் ஆண்டு எமது ஆட்சியில் நாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் நான்  கவனம் செலுத்துவேன் என  ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலையமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை குறித்தோ அல்லது பிரதமர் குறித்தோ இன்று வாக்கெடுப்பு நடக்கவில்லை. இது ஜனாதிபதி தேர்தல் இதில் ஜனாதிபதி ஆசனத்தை பிடிக்கவே நாம் ஒன்றிணைந்து பயணிக்கின்றோம். இதில் கொள்கை உள்ளதே தவிர உடன்படிக்கை இல்லை. 

2015 ஆம் ஆண்டு எங்களுக்கு மக்கள் ஆதரவு கிடைத்தது, அதேபோன்று இம்முறையும் எமக்கு ஆதரவு கிடைக்கும் என்றே நினைக்கிறன். அதேபோல் அன்னப்பறவை சின்னத்தில் களமிறங்கவே இப்போதுவரையில் தீர்மானமாக உள்ளது. 

அதேபோல் ஜனநாயக ரீதியில் பயணிக்கும் அனைவருக்கும் எம்முடன் இணைந்து பயணிக்க அழைப்பு விடுக்கின்றேன். பொது கொள்கையில் நாட்டினை கட்டியெழுப்ப வேண்டிய நோக்கத்தில் நான் முன்னகர்கின்றேன். ஆனால் இதில் எவருடனும் உடன்படிக்கை செய்துகொள்ள நான் தயாரில்லை. சர்வதேச உடன்படிக்கைகோ உள்நாட்டு உடன்படிகைக்கோ நான் அடிபணியவும் மாட்டேன். 

வடக்கு கிழக்கில் மக்கள் 30 ஆண்டுகளால யுத்தத்தில் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு விசேட கவனம் செலுத்தப்படும் அதேபோல் இந்த நாட்டில் கஷ்டப்படும் சகலருக்கும் நியாயமான வாழ்கையை உருவாக்கிக்கொடுக்கவே நான் கவனம் செலுத்துவேன் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/65655

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தமைக்கான காரணத்தை தெரிவித்தார் ரணில் !

(ஆர்.யசி)

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பிளவுபடாது முன்நகர வேண்டிய காரணத்தினால் தான் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

71646532_2911627755564138_34286187053056

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசாவின் பெயரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்குழு கூட்டத்தில் இன்று அறிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைக்கு அமையவும்  தமக்கு ஆதரவு தெரிவுக்கும் ஏனைய கட்சிகளின் கோரிக்கைக்கு அமையவும்  புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

வேட்பாளரை நியமிப்பதில் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சிகளின் முழுமையான ஆதரவும் கிடைத்தது. 

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் ஒரு சிலரின் பெயர்கள் ஆரம்பத்தில் பரிசீலிக்கப்பட்டது. 

கட்சி பிளவுபடாது ஜனாதிபதி தேர்தலை முகங்கொடுக்க வேண்டும் என்ற நோக்கமே இருந்தது. எனினும் எமது கொள்கையுடனேயே நாம் முன்னோக்கி செல்ல வேண்டும். 

அதேபோல் எமது பிரதான கொள்கையுடன் நாம் இணைந்து பயணிக்க வேண்டும். இதில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதில் இருந்து எமது திட்டங்களை நிறைவேற்ற  வேண்டும். 

எமக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகள் எம்மிடம் இந்த வாக்குறுதிகளை கேட்டுள்ளனர். 

ஆகவே அதுகுறித்து கவனம் செலுத்த வேண்டும். இதில் சகல  கட்சிகளுடன் இணைந்து கூட்டணியாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும். அதற்கான தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டும் என அங்கு மேலும் தெரிவித்திருந்தார்.

https://www.virakesari.lk/article/65647

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழருக்கு எந்த சிங்களவர்  வந்தாலும்  இனவாதத்தை மீறி எதுவுமே செய்யப்போவதில்லை.எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தெரியாத பேயை விட தெரிஞ்சபேய் நல்லது என்று சொல்லுவினம் எங்கட அரசியல்வாதிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

Sajith-Premadasa-3-1.jpg

பிளவு படாத நாட்டுக்குள், அதியுச்ச அதிகாரப் பகிர்வு – சஜித் அறிவிப்பு

பிளவுபடாத ஒன்றிணைந்த நாட்டுக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வை வழங்கி இனப்பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தவுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த 2015ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சியில் தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் கவனம் செலுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பின் பின்னர் சிறிகொத்தாவில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் இன்று (வியாழக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் கூறுகையில், “ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை குறித்தோ அல்லது பிரதமர் குறித்தோ இன்று வாக்கெடுப்பு நடக்கவில்லை. இது ஜனாதிபதித் தேர்தல். இதில் ஜனாதிபதி ஆசனத்தை பிடிக்கவே நாம் ஒன்றிணைந்து பயணிக்கின்றோம். இதில் கொள்கை உள்ளதே தவிர உடன்படிக்கை இல்லை.

2015ஆம் ஆண்டு எங்களுக்கு மக்கள் ஆதரவு கிடைத்தது. அதேபோன்று இம்முறையும் எமக்கு ஆதரவு கிடைக்கும் என்றே நினைக்கிறேன்.

அதேபோல் ஜனநாயக ரீதியில் பயணிக்கும் அனைவருக்கும் எம்முடன் இணைந்து பயணிக்க அழைப்பு விடுக்கின்றேன். பொதுக் கொள்கையில் நாட்டினை கட்டியெழுப்ப வேண்டிய நோக்கத்தில் முன்னகர்கின்றேன். ஆனால் இதில் எவருடனும் உடன்படிக்கை செய்துகொள்ள நான் தயாரில்லை. சர்வதேச உடன்படிக்கைகோ உள்நாட்டு உடன்படிகைக்கோ நான் அடிபணியவும் மாட்டேன்.

வடக்கு கிழக்கில் மக்கள் 30 ஆண்டுகளாக யுத்தத்தில் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு விசேட கவனம் செலுத்தப்படும். அதேபோல் இந்த நாட்டில் கஷ்டப்படும் சகலருக்கும் நியாயமான வாழ்க்கையை உருவாக்கிக்கொடுக்கவே நான் கவனம் செலுத்துவேன்” என்று சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/பிளவுபடாத-நாட்டுக்குள்-அ/

  • கருத்துக்கள உறவுகள்

சஜித் ஜயவேவா

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

தெரியாத பேயை விட தெரிஞ்சபேய் நல்லது என்று சொல்லுவினம் எங்கட அரசியல்வாதிகள்.

சிறு திருத்தம்:

                    நன்கு தெரிந்த பேய்: கோத்தா
                  
                   தெரியாத பேய்: சஜித்

கொஞ்சம் தெரிந்த பேய்: அனுர. அனுரவின் சில கொள்கைகள் பாதகமில்லாதவையானாலும், வட கிழக்கு இணைப்பு, தமிழர் தீர்வு விடயத்தில் அவர் கோத்தா தான்!

என்ன பேய் வருதோ பிரேமதாசவோட  ஆவி பேய் சஜித் மேல பாய்ஞ்சு  பழி வாங்க எண்டு எங்களுக்கு அநீதி செய்யாட்டில் அதுவே போதும். 

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் ஓட்டுரிமை உள்ளவன் தான் தீர்மானிப்பான்.நீங்கள் எல்லாம் அவர்களுடன் பக்த்திலிருந்து ஆலோசனை வழங்கலாம்.அவளவே உங்களால் செய்ய முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ஈழத்தமிழருக்கு எந்த சிங்களவர்  வந்தாலும்  இனவாதத்தை மீறி எதுவுமே செய்யப்போவதில்லை.எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

எப்படியாவது ஒரு சிங்களவரே வரப் போகிறார்.
எனவே அதற்குள் யார் தமிழர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் விசுவாசமாக இருப்பார் என்றே பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சஜித் எண்டால் கோட்ட அபயவுக்கு டஃவ்  கொடுப்பார். 

இந்த முறை 2ம் தெரிவு வாக்குகளே வெற்றியை தீர்மானிக்க கூடும்.

5 hours ago, tulpen said:

என்ன பேய் வருதோ பிரேமதாசவோட  ஆவி பேய் சஜித் மேல பாய்ஞ்சு  பழி வாங்க எண்டு எங்களுக்கு அநீதி செய்யாட்டில் அதுவே போதும். 

பிரேமதாசவை புலிகள் கொல்லவில்லை என்பது சஜித்துக்கு தெரிந்திருக்கும். ஆனால் அதை வெளியில் சொல்ல முடியாது. 

சஜித் மகிந்த ஆதரவாளர், சிங்கள பௌத்த கொள்கையை கொண்டவர். அந்த வகையில் அவர் தமிழர்களுக்கு அநீதி செய்தால் சரி.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரிப்பக்கமும் ஒருக்கா எட்டிப்பாருங்கோ. பாக்கிறதோட நிக்காம வாக்கையும் போடுங்கோ!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

எப்படியாவது ஒரு சிங்களவரே வரப் போகிறார்.
எனவே அதற்குள் யார் தமிழர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் விசுவாசமாக இருப்பார் என்றே பார்க்க வேண்டும்.

உதுதானே காலங்காலமாய் நடக்குது?நம்பி ஏமாந்து அழிஞ்சு போனதுதானே மிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களில் மகிந்த - கோத்தாபய சகோதரர்கள் போல் தமிழ்மக்கள் மேல் பாரியளவில் அழிவுகளை மேற்கொண்டவர்கள் இதுவரையில் இல்லை. எல்லாச் சிங்களத் தலைவர்களும் தமக்கு முடிந்த அளவில் தமிழர்மேல் யுத்த அழிவுகளை ஏற்படுத்தியிருந்தாலும்கூட, கோத்தா - மகிந்த அளவிற்கு தமிழ்மக்களை அழித்த சிங்களத் தலைவர் இல்லை.

ஆகவே, கோத்தா எனும் கொலையாளி பதவியில் அமர்வதைக் காட்டிலும், சஜித் அமர்வது பரவாயில்லை. ஏனென்றால், கோத்தாவைப்போன்றதொரு இனக்கொலையினை இனி எவராலும் நடத்திவிட முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.