Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளைகூட ஏற்காதவர்களை நிராகரியுங்கள் – சிவாஜி

Featured Replies

M.K.Sivajilingam.jpg

தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளைகூட ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களுக்கு வாக்களிக்க தயாாில்லை என்பதை காட்டுவதற்காகவே தனக்கு வாக்களிக்குமாறு கோருவதாக தமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளா் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளாா்.

மேலும் தான் ஒரு குறியீடு மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவா் இவ்வாறு கூறியுள்ளாா்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ஒரு தமிழன் இலங்கையில் ஜனாதிபதியாவது கனவிலும்கூட நடக்காத ஒன்று. ஆனாலும்  நான் எதற்காக தோ்தலில் நிற்கிறேன்? என பலா் கேட்டுள்ளனா். கேட்ககூடும். வடக்கில் உள்ள அரசியல் தரப்புக்கள், சமூக செயற்பாட்டாளா்கள், சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து பொது வேட்பாளா் ஒருவரை நிறுத்துவது தொடா்பாக பேசினாா்கள்.

ஆனாலும் அந்த முயற்சி இறுதியில் தோல்வியடைந்தது. அந்த இடைவெளியை நிரப்புவதற்காகவே நான் இந்த தோ்தலில் போட்டியிடுகிறேன். இப்போது நான் ஒரு குறியீடு மட்டுமே.

இன்று தோ்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளா்கள் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளையும் அடிப்படை கோாிக்கைகளையும் நிராகாித்துள்ள நிலையில், நாங்கள் அவா்களை நிராகாிக்கிறோம் என்பதை சிங்கள தேசத்திற்கும் சா்வதேச சமூகத்திற்கும் காட்டுவதற்கான வரலாற்று வாய்ப்பாக எனக்கு அளிக்கும் வாக்கை நீங்கள் கருதுங்கள்” என மேலும் தெரிவித்துள்ளார்

http://athavannews.com/தமிழர்களின்-அடிப்படை-அரச/

  • கருத்துக்கள உறவுகள்

கணக்கு எங்கேயோ...உதைக்கிறதே?

உதாரணமாக உங்களுக்கு 500,000 தமிழ் வாக்குக்கள் விழுகின்றன என்று ஒரு கதைக்கு வைத்துக் கொள்வோம்!

இந்த வாக்குகளை உங்களூக்குப் போடாமல்...இருந்தால்...அனேகமானவர்கள்...சஜித்துக்குத் தான் போட்டிருப்பார்கள்!

சிங்கள ஜனநாயகத்தில்.....மூன்று ..நான்கு த்டவைகள் வாக்குகள் எண்னப்பட்ட பின்னர்...கோத்தபாயா 480,000 வாக்குகளினால் வெற்றி பெறும் நிலை வருமாயின்....அதன் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?

உங்களூக்கு விழும் வாக்குகளை உலகத்துக்குக் காட்டி....அதனால் என்ன பயன் எமது மக்களுக்கு வரப் போகின்றது?

நானும் மகிந்த & கோவிடம் பணப்பெட்டி வாங்கிக்கொண்டு தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டு ஜனாதிபதித்தேர்தலில் தனித்து களமிறங்கினால் எனக்கும் வாக்குப்போட பலர் முன்வருவார்கள். 😂

6 hours ago, புங்கையூரன் said:

உங்களூக்கு விழும் வாக்குகளை உலகத்துக்குக் காட்டி....அதனால் என்ன பயன் எமது மக்களுக்கு வரப் போகின்றது?

நியாயமான கேள்வி. அவர் தரும் பதில் இது : "இன்று தோ்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளா்கள் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளையும் அடிப்படை கோாிக்கைகளையும் நிராகாித்துள்ள நிலையில், நாங்கள் அவா்களை நிராகாிக்கிறோம் என்பதை சிங்கள தேசத்திற்கும் சா்வதேச சமூகத்திற்கும் காட்டுவதற்கான வரலாற்று வாய்ப்பாக எனக்கு அளிக்கும் வாக்கை நீங்கள் கருதுங்கள்” என மேலும் தெரிவித்துள்ளார்".

சிவாஜி விலகி, அந்த வாக்குகளால் சஜித் வென்று விட்டால் கோத்தாவின் ஆட்சியை என்ன வித்தியாசமாக இருக்கும் என்பதும் ஒரு ஊகமே. 

சரி நிராகரிச்சு பிறகு.............

4 hours ago, ampanai said:

அவர்களை நிராகரிக்கிறோம் என சிங்கள தேசத்துக்கும் சர்வதேசத்துக்கும் காட்டி அதனால் என்ன பயன் தமிழர்களுக்கு கிடைக்கும்?

4 hours ago, ampanai said:

சிவாஜி விலகி, அந்த வாக்குகளால் சஜித் வென்று விட்டால் கோத்தாவின் ஆட்சியை என்ன வித்தியாசமாக இருக்கும் என்பதும் ஒரு ஊகமே. 

கோத்தாவின் ஆட்சியை விட சஜித்தின் ஆட்சியில் ஓரளவு மக்கள் மூச்சு விடுவார்கள்.

கடந்த கால மகிந்த & கோவின் செயற்பாடுகளிலிருந்து தமிழர்கள் சிலர் இன்னும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது கவலை.

ஒரு முறை அல்ல பல முறை பட்டும் திருந்தாத ஒரு இனம் என்றால் நாங்கள் தான் என மீண்டும் மீண்டும் உலகுக்கு காட்ட சிவாஜி சொல்கின்றார். 

விடுதலைப் புலிகளின், இயக்கங்களின் வளர்ச்சியும் போராட்டமும் சொல்லாத ஒன்றை உலகுக்கு காட்ட எத்தனை முறை இப்படி செய்ய போகின்றாராம்?

கோத்தா + மகிந்த  + சவீந்திர சில்வா வின் கூட்டின் விளைவை நேரிடையாக அனுபவித்தவற்றை விட மோசமாக இன்னொரு கூட்டால் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவினர் என நான் எண்ணவில்லை. சஜித்தின் வெற்றி தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையுமா என கேட்டால், இல்லை என்பேன். அதே நேரம் கோத்தாவின் வெற்றியால் தமிழ் மக்கள் மீண்டும் மிக மோசமான நிலைக்கு செல்வார்கள் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. சனனாயக ரீதியிலான போராட்டங்களுக்கான எல்லா வெளிகளையும் அடைத்து விடக்கூடிய மோசமான ஒரு கூட்டு கோத்தா + மகிந்த + சவீந்திர சில்வாவின் கூட்டு

(இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. யாழ் இணையத்தின் கருத்து அல்ல)

2 hours ago, Lara said:

அவர்களை நிராகரிக்கிறோம் என சிங்கள தேசத்துக்கும் சர்வதேசத்துக்கும் காட்டி அதனால் என்ன பயன் தமிழர்களுக்கு கிடைக்கும்?

சிங்களம் இப்படி கூறுவதை தவிர்க்கும் : 'பாருங்கள், தமிழர்கள் ஒற்றுமையாக இந்த தீவில் வாழ விரும்புகிறார்கள். இனப்பிரச்சனையும் இல்லை, மொழி பிரச்சனையும் இல்லை, போர்குற்றமும் இல்லை' 

37 minutes ago, ampanai said:

சிங்களம் இப்படி கூறுவதை தவிர்க்கும் : 'பாருங்கள், தமிழர்கள் ஒற்றுமையாக இந்த தீவில் வாழ விரும்புகிறார்கள். இனப்பிரச்சனையும் இல்லை, மொழி பிரச்சனையும் இல்லை, போர்குற்றமும் இல்லை' 

சிங்களம் இப்படி கூறினாலும் சர்வதேசத்துக்கு இலங்கையில் என்ன நடக்கிறது என தெரியும்.

சிங்களம் இப்படி கூறுவதை தவிர்ப்பதால் தமிழர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்?

சிவாஜிலிங்கத்துக்கு பெருமளவு மக்கள் வாக்களிக்கப்போவதில்லை. சிறு தொகை வாக்குகளை பிரிப்பார். அதனால் நட்டமே தவிர இலாபம் எதுவுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பல போராளி இயக்கங்களின் இடையே தமிழரின் இராணுவ பலம் சிதறிக்கிடந்ததும் ஆயுதப்போரில் நாங்கள்  தோல்வியடைய காரணமானது. அது போலவே இன்று எமது வாக்குப் பலமும் பல்வேறு தமிழ் கட்சிகளுக்குள் பிரிந்து அந்த கட்சிகளின் விருப்பின்படி அவை அனைத்தும் இனவாதத்தை முன்னிறுத்தி  அரசியல் செய்யும் சிங்கள தலைவர்களையே சென்றடையப்போகிறது.

சிவாஜிலிங்கம் அதிபர் தேர்தலில் களமிறங்கி நிற்பதை நாம் பல்வேறு கோணங்களில் நோக்கமுடியும். அரசியல் காழ்ப்புணர்வுகளுக்கும் அப்பால் சென்று சிவாஜி சொல்வதில் என்ன உண்மையை இருக்கிறது அவ்வாறாயின் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்  என்பதையும் நாங்கள் ஆராய்ந்து பார்க்கவேண்டும். எதிர்வரும் அதிபர் தேர்தலை முற்று முழுதாக பகிஸ்கரியுங்கள் என்று அரசியல் நாகரிகமுள்ள எந்த ஒரு தமிழ் கட்சியும் மக்களுக்கு அறிவுறுத்தப்போவதில்லை. சரி ஒட்டு மொத்த தமிழரும் தேர்தலை புறக்கணித்து பகிஷ்கரிப்பார்கள் என்றே வைத்துகொண்டலும் அப்போதும் கூட தமிழ் மக்களுக்கு என்ன நன்மையா நடக்கும்?

தமிழரின் வாக்குகள் கிடைத்தால் என்ன விட்டால் என்ன ஒரு வேட்பாளர், இந்த முறையும் தனது இனத்தின் அபிலாசைகளை மட்டுமே மதிக்கும் ஒரு சிங்களவர்தான் வெல்லப் போகிறார். அவரிடமும்  எமது அரசியல்வாதிகளை அனுப்பி பழைய குருடி கதவை திறவடி என்று பேச்சுவார்த்தை, பேச்சுவார்த்தை என்று காலத்தை கடத்தத்தான் போகிறோம்.

எதிர்காலத்தில் பேச்சு வார்த்தைகளில் நாங்கள் பங்கெடுக்கும் போது சிங்கள தலைமைகளும் உலக நாடுகளும் தமிழ் தரப்பை மதித்து உண்மையான ஈடுபாட்டுடன் நடந்து கொள்ளவேண்டுமாயின் தமிழரின்  அரசியல் பலம் என்ன என்பது அவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தால் மட்டுமே முடியும். அதை எப்படி நிரூபிப்பது?

அனைத்து தமிழ் மக்களும் தங்கள் வாக்குகளை வீணடிக்காமல் சிவாஜிக்கே போடவேண்டும். இப்படி செய்வது அவரை அதிபர் தேர்தலில் வெற்றியடைய செய்வதற்காக அல்ல. அது முடியக்கூடிய காரியமும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அப்படியானால் வேறு எதற்காக?

தமிழரின் ஒட்டுமொத்த வாக்கு பலம் என்ன என்பதை காட்ட! உரிமை போராட்டத்தில் தமிழர்கள் ஒற்றுமையுடன் இணைந்திருக்கிறார்கள் என்பதை உலகிற்கு எடுத்து சொல்ல! ஓன்று திரண்ட இந்த வாக்குப் பலம் தான் ஈழத்தமிழரின் அதி உச்ச அரசியல் சக்தி. இதுதான் ஈழத்தமிழனின் பேரம்பேசும் அரசியல் பண்டம். இதன் பின்னணியில் தான் எதிர்காலத்தில் எந்த தீர்வுத்திட்டமும் வரையறை செய்யப்படும். இது நாடு முழுவதற்குமான தேர்தல் இதில் தான் எமது பலத்தை ஒன்றிணைந்து காட்ட முடியும்.

இந்த அதிபர் தேர்தலை நாங்கள் எமது அரசியல் பலத்தை நிரூபிக்கும்  ஒரு களமாக மாற்ற தமிழ் மக்கள் கட்சி பேதமின்றி அணிதிரளவேண்டும். அப்படி செய்தால் மட்டுமே எதிர்காலத்தில் அதிபர் தேர்தலில் மட்டுமல்ல அனைத்து இடங்களிலும் எமது சொல் உள்வாங்கப்படும்.

இன்று எமது அரசியல் பலம் என்ன என்பது எவருக்குமே தெரியாது. தமிழர்கள் அனைவரும் இனப்பிரச்சினையை தீர்ப்பதில் ஒருமித்த கருத்துடன் செயல்படுகிறார்களா என்பதும் தெரியாது. வெளியில் உள்ளவர்களுக்கு மட்டும் தான் பொருந்தும் என்பதில்லை. எமது இனத்துக்குள்ளும் பொது மட்டங்களில்  ஜனங்களுக்கு வேண்டிய புரிதல் இல்லை. கடந்த காலங்களில்  சிங்கள ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் எமது மக்களை ஒரு வித அரசியல் விரக்தி நிலைக்கு செல்ல தூண்டிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

சிங்களவன் தந்தாலும் சரி தராமல் போனாலும் சரி உள்ளதை வைத்துகொண்டு வாழ்ந்திட்டு போவோம் என்ற எண்ணம் பாமர மக்களின் கருத்தாக வெளிப்பட தொடங்கிவிட்டது. இது ஒருவித விரக்தியின் வெளிப்பாடு. தமிழ் அரசியல் தலைவர்கள் இந்த அதிபர் தேர்தலில் செய்யப்போகும் மந்திர மஜா ஜாலம் என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

18 minutes ago, vanangaamudi said:

நல்ல கருத்துகள் வணங்கா முடி

நீங்கள் சொல்வதைப் போல தமிழ் மக்கள் நடந்து கொண்டால்

1. கோத்தா கண்டிப்பாக முதல் சுற்றிலேயே வென்று விடுவார்
2. உலகம் தமிழ் மக்கள் ஒரு அணியில் நின்று விட்டனர் என குறிப்பெடுக்கும்

அதன் பின்?

என் அறிவின் படி இவை நிகழக்கூடிய சாத்தியங்கள் தான் அதிகம்

1. கோத்தா வெல்லுவார்.

2. சீனாவையும் பகைக்காது அமெரிக்க இந்திய நலன்களையும் முன்னெடுத்துச் செல்வார்.

3. கடந்த 5 வருடங்களாக (2015 இன் பின்) இலங்கையில் உள்ல தமிழ் மக்கள் மத்தியில் உருவான சனாயக ரீதியிலான எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தவர்கள், சமூக வலைத்தளங்களில் இயங்கியவர்கள், துணிச்சலான எழுத்தாளார்கள்/ பத்திரிகையாளர்கள் போன்றோ அடக்கப்படுவர் மற்றும் காணாமல் போகடிக்கபடுவர்

4. கோத்தாவால் திட்டமிடப்பட்டு பின் மகிந்தவின் தோல்வியால் கிடப்பில் போடப்பட்ட A9 வீதிக்கு சமாந்தரமாக வன்னியில் உருவாக்கப்பட இருந்த சிங்கள குடியேற்ற திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

5. கிடப்பில் போடப்பட்ட பலாலியைச் சுற்றி குடியமர்த்த திட்டமிடப்பட்டு இருந்த இராணுவத்தினரின் குடும்பங்களை குடியேற்றும் திட்டம் மீண்டும் கையிலெடுக்கப்படும்.

6. இராணுவத்தால் பிடிக்கப்பட்டு இருக்கும் நிலத்தில் ஒரு அங்குலம் தானும் விடுவிக்கபட மாட்டாது என்பதுடன் மேலும் கையகப்படுத்தப்படும்.

8. கருணா / பிள்ளையானின் தொடர்பின் மூலம் கிழக்கில் மேலும் தமிழர் முஸ்லிம் உறவு சீரழிக்கப்பட்டு ஒன்ரை ஒன்று போட்டுத் தள்ளும் நிலைக்கு செல்லும்.

7. மாவீரர் தினம், மே18 போன்ற நிகழ்வு அடியோடு தடை செய்யப்படுவதுடன் அதனை முன்னெடுப்பவர்கள் தண்டிக்கப்படுவர்.

8. தென்னிலங்கையில் மேலும் பத்திரைகையாளர்கள்/ மனித நேயமுள்ளவர்கள் விரட்டப்படுவர்

இவை எல்லாம் நடக்கும் போது வழக்கம் போல சர்வதேசம் பார்த்துக் கொண்டு இருக்கும். தமிழ் தலைமைகள் அறிக்கை விட்டுக் கொண்டு இருக்கும். தமிழர்கள் அரசியல் உரிமைகளும் இல்லாமல், பொருளாதார அபிவிருத்தியும் இல்லாமல் மேலும் சீரழிவர்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

நல்ல கருத்துகள் வணங்கா முடி

நீங்கள் சொல்வதைப் போல தமிழ் மக்கள் நடந்து கொண்டால்

1. கோத்தா கண்டிப்பாக முதல் சுற்றிலேயே வென்று விடுவார்
2. உலகம் தமிழ் மக்கள் ஒரு அணியில் நின்று விட்டனர் என குறிப்பெடுக்கும்

அதன் பின்?

என் அறிவின் படி இவை நிகழக்கூடிய சாத்தியங்கள் தான் அதிகம்

1. கோத்தா வெல்லுவார்
2. சீனாவையும் பகைக்காது அமெரிக்க இந்திய நலன்களையும் முன்னெடுத்துச் செல்வார்
3. கடந்த 5 வருடங்களாக (2015 இன் பின்) இலங்கையில் உள்ல தமிழ் மக்கள் மத்தியில் உருவான சனாயக ரீதியிலான எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தவர்கள், சமூக வலைத்தளங்களில் இயங்கியவர்கள், துணிச்சலான எழுத்தாளார்கள்/ பத்திரிகையாளர்கள் போன்றோ அடக்கப்படுவர் மற்றும் காணாமல் போகடிக்கபடுவர்
4. கோத்தாவால் திட்டமிடப்பட்டு பின் மகிந்தவின் தோல்வியால் கிடப்பில் போடப்பட்ட A9 வீதிக்கு சமாந்தரமாக வன்னியில் உருவாக்கப்பட இருந்த சிங்கள குடியேற்ற திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படும்
5. கிடப்பில் போடப்பட்ட பலாலியைச் சுற்றி குடியமர்த்த திட்டமிடப்பட்டு இருந்த இராணுவத்தினரின் குடும்பங்களை குடியேற்றும் திட்டம் மீண்டும் கையிலெடுக்கப்படும்.
6. இராணுவத்தால் பிடிக்கப்பட்டு இருக்கும் நிலத்தில் ஒரு அங்குலம் தானும் விடுவிக்கபட மாட்டாது என்பதுடன் மேலும் கையகப்படுத்தப்படும்.
7. மாவீரர் தினம், மே18 போன்ற நிகழ்வு அடியோடு தடை செய்யப்படுவதுடன் அதனை முன்னெடுப்பவர்கள் தண்டிக்கப்படுவர்
8. தென்னிலங்கையில் மேலும் பத்திரைகையாளர்கள்/ மனித நேயமுள்ளவர்கள் விரட்டப்படுவர்

இவை எல்லாம் நடக்கும் போது வழக்கம் போல சர்வதேசம் பார்த்துக் கொண்டு இருக்கும். தமிழ் தலைமைகள் அறிக்கை விட்டுக் கொண்டு இருக்கும். தமிழர்கள் அரசியல் உரிமைகளும் இல்லாமல், பொருளாதார அபிவிருத்தியும் இல்லாமல் மேலும் சீரழிவர்.

பெரிய வீட்டுடன் பகைக்காது சின்ன வீடு வைத்தருக்க நான் ஆசைப்படலாம் 
சின்னவீடு வைத்தருக்கும் என்னை எந்த வீட்டில் வைப்பது என்று முடிவெடுப்பது 
பெரிய வீடுதான். அப்படி ஒரு நிலையில் என்னை வைத்திருப்பதில் என்ன லாபம் என்றுதான் 
சின்ன வீடும் யோசிக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜிலிங்கத்திற்கு வாக்குப்போட்டுத்தான் தமிழர்கள் தமது அரசியல் ஒற்றுமையைக் காண்பிக்கவேண்டும் என்றால் அதைப் போல பெரிய பகடி ஒன்றுமில்லை.

அரசியல் கருத்தாக்கிகள் நிலாந்தன் போன்றோர் தமிழர் தரப்பு ஒற்றுமையாக தமது அரசியல் பலத்தைக் காட்ட ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் நிற்கவைக்கவேண்டும் என்று எழுதியிருந்தார். ஆனால் தமிழ்க்கட்சிகள் அவர்களை ஆட்டுவிக்கும் மேற்குநாடுகளினதும், இந்தியாவினதும் ஆலோசனைகளை மட்டுமே கேட்பதால் ஒற்றுமையாக தமிழரின் அரசியல் பலத்தைக் காட்ட முயற்சிக்கவில்லை. கூட்டமைப்பு சஜித்தோடும் ரணிலோடும் எந்த டீலையும் வைக்காமலேயே சஜித்துக்கே வாக்களிக்கும்படி நிச்சயம் கேட்பர்.

அரசியல் கோமாளியாக சிவாஜிலிங்கம் கட்டுப்பணத்தை தனது கட்சிக்குக்கூட சொல்லாமல் செலுத்தி தேர்தலில் நிற்கின்றார். இவருக்கு வாக்குப்போட்டு தமிழரின் பலத்தைக் காட்டுவதைவிட கோத்தாவுக்கு வாக்குப்போடலாம்!

கோத்தா கொம்பனி தமிழ், முஸ்லிம் வாக்குகள் இல்லாமல் முதல் சுற்றிலேயே வெல்வதைத்தான் தமது நோக்கமாகக் கொண்டுள்ளனர். பலர் தேர்தலில் நிற்பதனால் சிறுபான்மையினரின் வாக்குகளை சஜித்துக்கு விழாமல் செய்து பிரித்துவிட்டால் கோத்தாவுக்கு சாதகமே. அத்தோடு ஜேவிபிக்கு விழும் வாக்குகளும் கோத்தாவுக்கு எதிரான வாக்குகள்தான். இப்படி எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதற கோத்தா இலகுவாக வெல்லுவார்!

2015 நாடாளுமன்ற தேர்தலில் ஜேவிபி 543,944 வாக்குகளை பெற்றது.

இந்த ஜனாதிபதி தேர்தலில் 10 லட்சம் வாக்குகளை பெறுவது அநுரவின் இலக்கு. 

இறுதியில் எவ்வளவு பெறுவார் என தெரியவில்லை. எனினும் முதல் சுற்றில் அது கோத்தாவுக்கு சாதகமாக இருக்கும்.

இரண்டாம் சுற்றுக்கு சென்றால் அவர்களில் எத்தனை பேர் இரண்டாம் விருப்பத்தெரிவை இடுவார்கள் என்பதிலும் தங்கியுள்ளது.

சஜித்தின் அமைச்சின் கண்காணிப்பில் தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன என்பதை இந்த ஒலிப்பதிவில் கேட்கலாம்.

ஆகவே, முதன்மை வேட்ப்பாளர்கள் இருவருமே தமிழன எதிரிகள். யார் வந்தாலும் அழிவு தொடரும். ஒருவரால் வெளிப்படையாக நடாத்தப்படும் மற்றயவர், அமைதியாக நடத்துவார். 

நெஞ்சில் குத்துபவனை விட முதுகில் குத்துபவன் பரவாயில்லை என்ற நிலையில் எம்மக்கள் வாக்களிக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

சிவாஜிலிங்கத்திற்கு வாக்குப்போட்டுத்தான் தமிழர்கள் தமது அரசியல் ஒற்றுமையைக் காண்பிக்கவேண்டும் என்றால் அதைப் போல பெரிய பகடி ஒன்றுமில்லை.

அரசியல் கருத்தாக்கிகள் நிலாந்தன் போன்றோர் தமிழர் தரப்பு ஒற்றுமையாக தமது அரசியல் பலத்தைக் காட்ட ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் நிற்கவைக்கவேண்டும் என்று எழுதியிருந்தார். ஆனால் தமிழ்க்கட்சிகள் அவர்களை ஆட்டுவிக்கும் மேற்குநாடுகளினதும், இந்தியாவினதும் ஆலோசனைகளை மட்டுமே கேட்பதால் ஒற்றுமையாக தமிழரின் அரசியல் பலத்தைக் காட்ட முயற்சிக்கவில்லை. கூட்டமைப்பு சஜித்தோடும் ரணிலோடும் எந்த டீலையும் வைக்காமலேயே சஜித்துக்கே வாக்களிக்கும்படி நிச்சயம் கேட்பர்.

அரசியல் கோமாளியாக சிவாஜிலிங்கம் கட்டுப்பணத்தை தனது கட்சிக்குக்கூட சொல்லாமல் செலுத்தி தேர்தலில் நிற்கின்றார். இவருக்கு வாக்குப்போட்டு தமிழரின் பலத்தைக் காட்டுவதைவிட கோத்தாவுக்கு வாக்குப்போடலாம்!

கோத்தா கொம்பனி தமிழ், முஸ்லிம் வாக்குகள் இல்லாமல் முதல் சுற்றிலேயே வெல்வதைத்தான் தமது நோக்கமாகக் கொண்டுள்ளனர். பலர் தேர்தலில் நிற்பதனால் சிறுபான்மையினரின் வாக்குகளை சஜித்துக்கு விழாமல் செய்து பிரித்துவிட்டால் கோத்தாவுக்கு சாதகமே. அத்தோடு ஜேவிபிக்கு விழும் வாக்குகளும் கோத்தாவுக்கு எதிரான வாக்குகள்தான். இப்படி எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதற கோத்தா இலகுவாக வெல்லுவார்!

அத்துடன்....வீர சிவாஜி நின்று விடவில்லை...!

இன்னுமொரு  செய்தியையும்.....வெளி உலகத்துக்குச் சொல்கிறார் என்று நினைக்கிறேன்!

சிங்கள  தேசத்தில்.....ஒரு தமிழனும்.....ஜனாதிபதிப் பதவிக்குப் போட்டியிடும் சுதந்திரம் உள்ளது என்றும் சர்வதேசத்துக்குக் காட்டுகிறாராம்!

  • கருத்துக்கள உறவுகள்

எனது மக்களுக்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றேன் - சிவாஜிலிங்கம்

நான் போட்டியில் இருந்து விலகாவிட்டால் என்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ரெலோ தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக தான் நான் அறிந்துள்ளேன். எந்தவித கடிதங்களும் எனக்கு வரவில்லை. கடிதம் கிடைத்தால் கிடைத்தவுடன் என்னுடைய விளக்கத்தை அவர்களுக்கு அனுப்பி வைப்பேன் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும், ஜனாதிபதி வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா வாடி வீட்டில் நேற்று இரவு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் பிரசசாரங்கள் தென்னிலங்கையில் மாத்திரமின்றி வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்திலும் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. 7 ஜனாதிபதித் தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டது. இது எட்டாவது தேர்தல்.

சிங்கள கட்சிகளை நம்பி பிரயோசனம் இல்லை. ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என தமிழ் மக்கள் பேரவை, சுயாதீன அமைப்புக் குழு, திருகோணமலை மாவட்ட வணக்கத்திற்குரிய ஆயர், தென்கைலை ஆதினம், யாழ்ப்பாணம் சின்மியா மிசன் சாமியார் உட்பட பலர் பல்வேறு தமிழ் தலைவர்களை சந்தித்தார்கள்.

sivajilingam.jpg

இதன்போது பொது வேட்பாளர் குறித்து பேசப்பட்ட போது இந்தக் கட்சித் தலைவர்கள் மற்றும் சிரேஸ்ட தலைவர்கள் எவருமே இவ்வாறு போட்டியிட்டால் வாக்குகள் பிளவுபடும் என்ற கருத்தை கூறவில்லை. அவர்களால் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடியாத நிலைமை ஏற்பட்ட பொழுது தான் திருமதி அனந்தி சசிதரன் அவர்களை தமிழர் விடுதலைக் கூட்டணி சின்னத்தில் போட்டியிட வைக்க பேசியிருந்தேன். கனடாவில் இருந்து வழக்கறிஞர் கரிகாலன், கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண அவர்களுடன் பேசியிருந்தார். எவையும் சரிவராத நிலையில் தான் நான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

தமிழ் கட்சிகளை ஒன்றுபடுத்தி பல சுற்றுப் பேச்சுக்களை நடத்துவதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் முன்னின்று செயற்பட்டுள்ளார்கள். ஆறு கட்சிகள் கூடிய நிலையில் இடைக்கால அறிக்கையை நாங்கள் நிராகின்றோம் என்ற வசனம் குறிக்கப்படாமை காரணமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியேறியிருந்தது. ஏனைய 5 கட்சிகளும் கையெழுத்திட்டு 13 அம்சக் கோரிக்கைளை முன் வைத்திருந்தார்கள். பிரதான வேட்பாளர் மூவருக்கும் அனுப்பப்பட்டது.

அந்தக் கோரிக்கைகளை ஊடகங்கள் வாயிலாக பார்த்து அதனை முற்று முழுதாக ஏற்றுக் கொள்கின்றேன். அந்தக் கோரிக்கைகளின் அடிப்படையில் 5 தமிழ் கட்சிகளும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தால் நான் போட்டியில் இருந்து விலகத் தயார் என்றும் கூறியிருந்தேன். இதைவிட இரண்டு கோரிக்கைகைளை ஒருவராவது ஏற்றுக் கொண்டால் விலகுவதாக தெரிவித்திருந்தேன்.

அரசியலமைப்பில் 13 வது திருத்தம் உட்பட அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய அரசியலமைப்பு வருகின்ற போது ஒற்றையாட்சி, பௌத்தம் என்ற முன்னுரிமை இல்லாமல் அரசாங்க தரப்பு பேச வேண்டும். அதுபோல் எங்கள் தரப்பும் பேச வேண்டும். அதற்கும் எவரும் பதிலளிக்கவில்லை. ஆகையால் இனி போட்டியில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்படும் என கருதவில்லை. 

புதிய ஜனநாயக முன்னனியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தமிழர் விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை. கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் எவையும் இல்லை. அனுரகுமார திசாநாயக்காவும் தமிழர் பிரச்சினைக்கு சரியான தீர்வைக் கூற தவறிவிட்டார். அதனால் தான் 5 கட்சிகளும் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்குமாறு நாங்கள் கைகாட்ட முடியாது. நீங்கள் விரும்பிய கட்சிக்கு வாக்களிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்கள். வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களும் அவ்வாறு கூறியிருக்கிறார்.

இனி தமிழ்  தேசியக் கூட்டமைப்போ அல்லது மற்றைய தமிழ் கட்சிகளோ புதிய ஜனநாயக முன்னனிக்கு அடையாளம் காட்ட மாட்டடார்கள் என நம்புகிறோம். ஏனெனில் அடையாளம் காட்டினால் அந்தக் கட்சி வெற்றி பெறாது என்ற கருத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஆகவே இவர்கள் மறைமுகமாக வேலை செய்து சஜித் பிரேமதாச அவர்களை வெற்றி பெற் செய்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபடுவர்.

எது எப்படியோ தமிழ் மக்களது வாக்குகள் தேவை. ஆனால் தமிழ் மக்களுக்கு எதுவும் சொல்ல மாட்டோம் என மூன்று வேட்பாளர்களும் பிடிவாதமாக இருக்கிறார்கள். எனவே எங்களுடைய மக்கள் நவம்பர் 16 ஆம் திகதி தீர்மானம் எடுக்க வேண்டும். தபால் மூல வாக்களிப்பில் கணிசமானோர் பிரதான கட்சிகள் இரண்டையும் நிராகரித்து வாக்களித்ததாக பல்வேறு இடங்களில் இருந்து கூறுவது உற்சாகத்தை தருகிறது. மக்களுக்கும் இந்த நிலைமைகள் தெரியவரும்.

கோத்தாபய அல்லது சஜித் தான் ஜனாதிபதியதக வரப்போகிறார்கள். இந்த நிலையில் தான் நாங்கள் சர்வதேசத்திற்கும், தென்னிலங்கைக்கும் தெளிவான செய்தியை சொல்ல வேண்டும். எங்களுடைய அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பாடாத நிலையில் நாங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு சென்று போர்க்குற்றங்களுக்கும், இனப்படுகொலைக்கும் நீதி கோருவோம். புதிய ஜனாதிபதி 3 மாத காலத்திற்குள் புதிய அரசியலமைப்பு கொண்டு வராத நிலையில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மூலம் வடக்கு, கிழக்கு பகுதிகளில் பொதுசன வாக்கெடுப்பை கோருவோம். இவற்றை உள்ளடக்கியதாக என்னுடைய தேர்தல் பிரகடனம் வெளியிடப்படும். பெரும்பாலும் எதிர்வரும் 9 ஆம் திகதி திருகோணமலைளில் மிகப்பெரிய மக்கள் கூட்டத்துடன் இணைந்து வெளியிடுவேன்.

எனவே 16 ஆம் திகதி வாக்குகளை அளிக்கும் போது கவனம் செலுத்தவும். நான் ஒரு அடையாளம் மாத்திரம் தான். இந்த வாக்குகளுக்கு நான் தனித்து உரிமை கோரமாட்டேன். எனக்கு ஒரு லட்சம் வாக்குகளை அளிக்கும் பட்சத்தில் சர்வதேசம் திரும்பி பார்க்கும். நான் நியமனப்பத்திரத்தை தாக்கல் செய்தவுடனேயே பல வெளிநாட்டு தூதரங்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்கள். எங்களுக்கு இவர், அவர் வெல்ல வேண்டும் என்றல்ல. பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். மத்தியஸ்தம் வகித்து பெற்றுத் தாருங்கள் போட்டியில் இருந்து விலகுகிறேன் எனக் வெளிநாட்டு துர்துவராலயங்களுக்கு கூறியுள்ளேன். எனவே மக்கள் எங்களுக்கு பேராதரவு தரவேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

நான் போட்டியில் இருந்து விலகாவிட்டால் என்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ரெலோ தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக தான் நான் அறிந்துள்ளேன். எந்தவித கடிதங்களும் எனக்கு வரவில்லை. அவர்கள் தீர்மானித்துள்ளார்கள். அதை நான் மறுக்கவில்லை. 3 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நான் போட்டியில் இருந்து விலக வேண்டும் என்று கேட்டுள்ளார்கள்.

இதற்கு முன்னர் கடந்த 13 ஆ ம் திகதி அவர்களுடைய தலைமைக்குழு கூடி ஒருவார கால அவகாசம் விதித்திருந்தது. மீண்டும் 26 ஆம் திகதி கூடி 3 ஆம் திகதி வரை நீடித்திருக்கிறார்கள். என்னுடைய தன்னிலை விளக்கத்தை நவம்பர் முதலாம் திகதி அல்லது அதற்கு முன்னர் வழங்குமாறு கேட்டுள்ளார்கள். எனக்கு இன்னும் கடிதம் கிடைக்கவில்லை. கிடைத்தால் கிடைத்தவுடன் என்னுடைய விளக்கத்தை அவர்களுக்கு அனுப்பி வைப்பேன். 

அவர்களுடைய கோரிக்கையை ஏற்று 3 ஆம் திகதி விலகக் கூடிய நிலமையில் நான் இல்லை. அவர்கள் விரும்பிய நடவடிக்கை எடுக்கலாம். கட்சிக்கு அந்த அதிகாரம் இருக்கிறது. யாப்பு கட்சிக்கு தேவை என உருவாக்கி 10 தேசிய மாநாடுகளை நடாத்தி காட்டிய எனக்கு அவர்கள் அந்த யாப்பின் அடிப்படையில் கூடியது இடைநிறுத்த முடியும். விசாரணையின் பின்னர் நிரந்தரமாகவும் நீக்க முடியும். எதையும் செய்யட்டும். நான் என்னுடைய மக்களுக்காக தான் போட்டியிடுகின்றேன். அவர்கள் என்னை நீக்கினால் பொது வேட்பாளர் என்ற பலம் அதிகரிக்கும் என்று தான் நினைக்கிறேன் எனத் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/67981

தமிழில் கோமாளிக்கு எதிர்ச்சொல் என்ன ?

சிவாஜிலிங்கம் கோமாளி அரசியல்வாதி என்றால், யாரை அவருக்கு எதிரான தராதரங்களை கொண்டவர் என பார்க்கலாம்?  

பலர் கோத்தபாய பூச்சாண்டி காட்டி திட்டமிட்ட தமிழின அழிப்பை சத்தமின்றி செய்துவரும் ரணில்-சஜித் கும்பலுக்கு மக்களை வாக்களிக்க வைக்கமுடியும் முயற்சிக்கிறார்கள்.

இவர்கள் யார் என்றால்
(1) றணில், சுமந்திரன் கூட்டில் தமிழர் உரிமையை அடகுவைச்சு சுயலாபம் பெற்றுபவர்கள்
(2) அப்பப்ப ஊருக்கு விசிட் அடிச்சு சோ காட்டிவாற ஆக்கள்
(3) கொழும்புல செட்டில் ஆகி வட-கிழக்கு தமிழர் எப்பாடுபட்டாலும் கவலை இல்லை என்டு நினைக்கும் ஆக்கள்
(4) தங்கட உறவுகளை கொழும்புல செட்டில் ஆகி வட-கிழக்கு தமிழர் எப்பாடுபட்டாலும் கவலை இல்லை என்டு நினைக்கும் மேட்டுக்குடி மக்கள்
(5) ஆனந்தசங்கரி,  டக்ளஸ் போல முற்போக்குவாதிகள் என்டு நெச்சுக்கொண்டு இருக்கும் பிற்போக்குவாதிகள்
(6) சம்பந்தன், சுமந்திரன் போன்ற ஆட்களின் விசிறிகள்

இதைப்போன்ற ஆக்கள் தான் கோத்தபாய வந்தால் அவ்வளவு தான் என்டு பூச்சாண்டி காட்டி திரியினம்.

16 hours ago, ampanai said:

சஜித்தின் அமைச்சின் கண்காணிப்பில் தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன என்பதை இந்த ஒலிப்பதிவில் கேட்கலாம்.

ஆகவே, முதன்மை வேட்ப்பாளர்கள் இருவருமே தமிழன எதிரிகள். யார் வந்தாலும் அழிவு தொடரும். ஒருவரால் வெளிப்படையாக நடாத்தப்படும் மற்றயவர், அமைதியாக நடத்துவார். 

நெஞ்சில் குத்துபவனை விட முதுகில் குத்துபவன் பரவாயில்லை என்ற நிலையில் எம்மக்கள் வாக்களிக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை. 

இந்த உண்மைகள் மக்கள் மேல அக்கறை உடையவர்களுக்கு மட்டும் தானே புரியும்!

சுயநலன்களுக்காக ஒரு கொலைகாரனை விட மற்ற கொலைகாரன் திறம் என்டுற ஆட்களுக்கு இந்த உண்மைகள் எல்லாம் செவிடன் காதுல ஊதின சங்கு போலத் தான்.

  • தொடங்கியவர்

இன அழிப்பு செய்தவர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் ; ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம்

இன அழிப்பு செய்தவர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்றால் தமிழ் மக்கள் தமது ஒருமித்த கருத்துக்களை தெரிவிப்பதற்கு எனக்கு வாக்ளிக்கவேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

Sivajilingam.jpg

யாழ்பாடி விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்குமேலும் தெரிவிக்கையில்

பொது வேட்பாளராக களம் இறங்கியிருக்கும் எனக்கு வாக்களிப்பதன் மூலம் சிங்கள தேசத்திற்கும், சர்வதேசத் திற்கும் எமது நிலைப்பாட்டைச் சொல்லுவோம். எங்களுடைய உரிமைகளை

ஏற்றுக்கொள்ளாத உங்களுக்கு எங்களுடைய வாக்குகளைத் தரமாட்டோம் என்பதை உரத்துச் சொல்ல வேண்டும். இனப்படுகொலையாளர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்பதை உரத்துச் சொல்லவேண்டும்

தற்போது ஏட்டிக்குப் போட்டியாக பிரச்சார நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. இதன் ஒரு கட்டமாக நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்தில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதிவேட்பாளர் கேத்தாபய மற்றும் மகிந் தராஜபக்ஷ தரப்பினர் பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கின்றனர். அவர்கள் தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்கிறார்களாம். தமிழ் மக்களை ஆண்டாண்டு காலமாக படுகொலை செய்தவர்கள் கடைசியாக ஆட்சிப்பீடத்தில் இருந்தபோதும் கூட தமிழ்மக்களைப் பற்றிச் சிந்திக்காதவர்கள் இன்று வந்து தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்கிறார்களாம் தமிழ் மக்களை கொத்துக்கொத்தாக கொன்றொழித்தவர்கள் இதுவரைக்கும் பிரச்சினைகளை தீர்க்கமுடியாதவர்களாக இருந்து விட்டு இன்று வந்து இவ்வாறு பேசுவது யாரை ஏமாற்றுகிறார்கள் 

இவர்கள் மட்டுமன்றி ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான வேட்பாளரும் எத்தகைய பேச்சுவார்த்தைக்கும் தயார் இல்லை என்ற சாரப்பட தமது கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில் தமிழ் மக்களுக்கு என்ன செய்வோம் என்பதை இரு பிரதான கட்சிகளும் தெரிவிக்காத நிலையில் தமிழ் மக்களின் வாக்குகளுக்காக இங்கு வந்து பிரச்சாரங்களைச் செய்ய வருகின்றார்கள். ஒருவர் தான் யுத்தத்தை நடத்தியவர் என்றும் மற்றொருவர் யுத்தத்தை நாங்களே நடாத்தி முடித்தோம் என்றும் கூறுகிறார்கள் அது மட்டுமன்றி இவ்வாறு கூறியவர்கள் இருதரப்பிலுமாக நின்று எங்கள் மக்களை அழித்தவர்கள் தான் அப்படிப்பட்டவர்கள் தமிழ் மக்களுக்கு என்ன செய்வோம் என்பதை முறைப்படியாகத் தெரிவிக்காது வாக்குகளுக்காக எம்மை நோக்கி வருகின்றார்கள். 

இது தொடர்பில் மக்கள் சிந்திக்க வேண்டும் காலங்காலமாக எங்களை ஏமாற்றி வருகின்ற சிங்களத் தலைமைகள் எம்மை அழித்தவர்களுக்கு முறையான பாடம் கற்பிப்பதற்காகவும் சர்வதேச சமூகத்திற்கு இன அழிப்புச் செய்தவர்களை சர்வதேச நீதிமன்றில் முன்னிறுத்துவதற்காகவும் நாம் இந்த ஜனாதிபதித் தேர்தலை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். எமது வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வருபவர்கள் எம்மை அடக்கி ஆள்வதையே கொள்கையாகக் கொண்டு செயற்பட்டுவருகின்றார்கள். இத்தகையவர்களுக்கு நாங்கள் சரியான தீர்ப்பை வழங்கவேண்டும்.

சர்வதேச சமூகத்தின் பார்வை எம்மீதுள்ள நிலையில் இந்த ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் ஒரு சரியானதகவலை தெரிவிப்பவர்களாகவும் இதற்குத் தமிழ் மக்கள் ஒருமித்து நிற்கின்றார்கள் என்பதை காண்பிப்பதற்காகவும் இத் தேர்தலை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் குறிப்பாக 1987 ஆம் ஆண்டு முதல் இனப்படுகொலை கட்டவிழ்த்துவிட்ட நிலையில் 2009 ஆம் ஆண்டு வரை இனப்படுகொலையைச் சேய்தவர்கள் யுத்தத்தின் பின்னரான சூழலில் ஆயுதம் இல்லா யுத்தத்தை எங்கள் மீது திணித்து வருகின்றார்கள். 

இவ்வாறாக எம்மீது இன அழிப்பு செய்த அனைவரையும் சர்வதேச நீதிமன்றில் முன்னிறுத்தவேண்டும் என்ற தகவலை தமிழ் மக்கள் வழங்கவேண்டும் என்பதற்காக தமிழ் மக்கள் சார்பாக பொது வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எனக்கு வாக்களித்து நாங்கள் ஒருமித்து நிற்கின்றோம் என்பதை சர்வதேச சமூகத்திற்கு தெரிவிக்கவேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/67797

கொள்கையின்றி அலைபவர்களை ஒன்றிணைப்பது கஷ்டம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.