Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்துச் சித்தர் யோகர் சுவாமிகளின் நற்சிந்தனைகள்

Featured Replies

நாமெல்லாம் அறிந்த யாழ்ப்பாணத்துச் சித்தர் யோகர் சுவாமிகளது நற்சிந்தனைகளை இத்திரியில் பகிர்வதற்கு உத்தேசித்துள்ளேன். 

இவை ஒவ்வொன்றும் சுருக்கமானவையாகவும், அனைவருக்கும் புரியக்கூடிய எளிய தமிழில் அமைந்தும் உள்ளன. இவற்றில் சிலவற்றை அல்லது இவை முழுவதையும் கள உறவுகள் ஏற்கனவே அறிந்திருக்கக்கூடும். எனினும், ஒரு மீள்நினைவூட்டலுக்காகவும், இவற்றை அறியாத இன்றைய இளைய சமுதாயத்தை மனதில் வைத்தும். இந்தத் தத்துவ முத்துக்களை ஒவ்வொன்றாகப் பகிரவுள்ளேன். அவ்வப்போது இவை தொடர்பான எனது புரிதல்கள்/எண்ணங்களையும் கூடவே பதியவுள்ளைன். இவை பற்றிய உங்களது சிந்தனைகளும், அனுபவங்களும் இங்கு வரவேற்கப்படுகின்றன.

உண்மையான ஆன்மீகத் தேடலில் உள்ளோருக்கு இவை ஊக்கமாத்திரைகளாக அமையும் என நம்புகிறேன்.

(1872ஆம் ஆண்டு தொடக்கம் 1964ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வாழ்ந்த இவர் செல்லப்பாச் சுவாமிகளின் சீடராவார். சுவாமிகள் பற்றி நம்மில் பலர் அறிந்திருப்போம்.அறியாதோர் பின்வரும் இணைப்பில் அவரது சுருக்கமான வரலாற்றை அறியலாம்:

https://ourjaffna.com/cultural-heroes/யோகர்-சுவாமிகள் )

Edited by மல்லிகை வாசம்

  • Replies 75
  • Views 11k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நற்சிந்தனை: " பகலில் பார்க்க முடியாதபடியினால் நட்சத்திரங்களை இல்லையென்று சொல்ல முடியுமோ? அது போல் எங்கள் ஒவ்வொருவரிடத்தும் உள்ள இருட்டை நீக்கிப் பார்த்தால் கடவுளிருக்கிறார்"

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சிறப்பான பகிர்வுகள். தொடர்ந்து பகிருங்கள். யோகர் சுவாமிகள், குடைசாமியார் போன்றவர்கள் நல்லூரில் உலாவித் திரிந்தவர்கள். நீராவியடி பிள்ளையார் கோவிலுக்கு அருகில் கடையிற்சுவாமியார் கோவில் உள்ளது.ஒருவேளை அவர்தான் யோகர் சுவாமிகளின் குருவாக இருக்கலாம் என நினைக்கின்றேன்......!  😁

Edited by suvy
எழுத்துப்பிழை திருத்தம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மல்லிகை வாசம் நல்லதொரு  பக்கத்தை ஆரம்பித்திருக்கின்றீர்கள். 
தொடருங்கள்.👍

இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.

  • தொடங்கியவர்
36 minutes ago, suvy said:

மிகவும் சிறப்பான பகிர்வுகள். தொடர்ந்து பகிருங்கள். யோகர் சுவாமிகள், குடைசாமியார் போன்றவர்கள் நல்லூரில் உலாவித் திரிந்தவர்கள். நீராவியடி பிள்ளையார் கோவிலுக்கு அருகில் கடையிற்சுவாமியார் கோவில் உள்ளது.ஒருவேளை அவர்தான் யோகர் சுவாமிகளின் குருவாக இருக்கலாம் என நினைக்கின்றேன்......!  😁

சுவி அண்ணா, கடையிற் சுவாமிகள் யோகர் சுவாமிகளின் குருவான செல்லப்பாச் சுவாமிகளின் குரு ஆவார். 

நல்லூர் தேரடிக்கு எனது தந்தையாருடன் செல்லும் போதெல்லாம் சொல்வார் "யோகர் போன்ற பெரிய ஞானிகள் எல்லாம் இருந்த இடம். வடிவாய் சுற்றிக் கும்பிடு என்று". 

கருத்துப் பகிர்வுக்கு நன்றி அண்ணா. 😊

35 minutes ago, குமாரசாமி said:

மல்லிகை வாசம் நல்லதொரு  பக்கத்தை ஆரம்பித்திருக்கின்றீர்கள். 
தொடருங்கள்.👍

இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.

நன்றி கு.சா அண்ணா, உங்கள் எல்லோரினதும் வாழ்த்துக்களுடன் கண்டிப்பாகத் தொடர்வேன். நன்றி 😊

  • கருத்துக்கள உறவுகள்

திருநெல்வேலியில் இருக்கும் எங்கள் இனத்தவரான, ஓய்வுபெற்ற தபால்கந்தோர் அதிபர் இராமலிங்கம் யோகர் சுவாமிகளுடைய அடியவர். யோகர் சுவாமிகள் அவர் வீட்டிற்கு வருவதுண்டு. சுவாமிகளை நேரில் கண்டுள்ளேன். தவிர எங்கள் பரமேசுவராக் கல்லூரி அதிபர் சிவபாதசுந்தரம் எங்களை சிவானந்தா ஆச்சிரமத்திற்கு அனுப்பி அவர் போதனைகளைக் கேட்க வைப்பதுமுண்டு. விளையாட்டு வயதில் அவர் போதனைகள் அனைத்தும் எங்களிடம் ஆழமாகப் பதிந்ததில்லை. ஆனால் அவர்செய்யும் சில குறும்பு வேலைகள் எங்களை ஈர்த்து அவரை இன்றளவும் எங்கள் நினைவில் வைத்திருக்கிறது.

அதிபர் இராமலிங்கம் வீட்டில் ஒருமுறை, சுவாமி தனது வயிற்றைத் தட்டிச் "சும்மா இரு உனக்கு எதுவும் தரமாட்டேன் தொந்தரவு செய்யாதே" என்று சொல்லியபோது எல்லோருக்கும் சிரிப்பாக இருந்தது. பசிக்கிறது என்ற தொல்லைகொடுத்த அவர் வயிற்றைக் கண்டித்து அடக்குகிறாராம்.... எவரையும் நீ, வா, வாடா, போடா என்றுதான் அழைப்பார்.

அவர் போதனைகளில் என்னில் பதிந்து இன்றவரை நினைவிலுள்ள ஒன்று..... கடவுளைத் தேடி இந்த உலகமெல்லாம் சுற்றி அலைந்தும் காணாமல் இறுதியில் வீட்டிற்குத் திரும்ப வந்தபின்புதான் கண்டாராம்.... 

கடவுள் தன்னுள்ளே இருப்பதை. 🙏

  • கருத்துக்கள உறவுகள்

சிவதொண்டன் நிலையம் எனும் அமைப்பு வடக்கிலும் கிழக்கிலும் யோகர் சுவாமிகளால் உருவாக்கப்பட்டு அவருடைய சீடர் செல்லத்துரை சுவாமிகளால் (சமாதியடைந்துவிட்டார்) வழிநடத்தப்பட்டது.

தற்போதும் யாழில் காங்கேசன்துறை வீதியில் யாழ் இந்துக் கல்லூரிக்கு அருகிலும், மட்டக்களப்பு செங்கலடியிலும் சிவதொண்டன் நிலையம் செயற்படுகின்றது.

  • தொடங்கியவர்
1 hour ago, Paanch said:

சுவாமிகளை நேரில் கண்டுள்ளேன். தவிர எங்கள் பரமேசுவராக் கல்லூரி அதிபர் சிவபாதசுந்தரம் எங்களை சிவானந்தா ஆச்சிரமத்திற்கு அனுப்பி அவர் போதனைகளைக் கேட்க வைப்பதுமுண்டு. விளையாட்டு வயதில் அவர் போதனைகள் அனைத்தும் எங்களிடம் ஆழமாகப் பதிந்ததில்லை. ஆனால் அவர்செய்யும் சில குறும்பு வேலைகள் எங்களை ஈர்த்து அவரை இன்றளவும் எங்கள் நினைவில் வைத்திருக்கிறது.

1 hour ago, Paanch said:

அவர் போதனைகளில் என்னில் பதிந்து இன்றவரை நினைவிலுள்ள ஒன்று..... கடவுளைத் தேடி இந்த உலகமெல்லாம் சுற்றி அலைந்தும் காணாமல் இறுதியில் வீட்டிற்குத் திரும்ப வந்தபின்புதான் கண்டாராம்.... 

கடவுள் தன்னுள்ளே இருப்பதை. 🙏

பாஞ்ச் அண்ணா, 

நல்லாரைக் காண்பதுவும் நன்றே, நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே. 

சுவாமிகளுடனான உங்கள் நேரடி அனுபவங்களை எங்களுடன் இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி.

சுவாமிகள் பற்றி வாசித்து, கேட்டு அறிந்த எங்களுக்கே இனம் புரியாத பக்தியுணர்வு எழுகின்றது என்றால் நேரில் தரிசித்த உங்களைப் போன்றவர்கள் புண்ணியம் செய்திருக்கிறீர்கள் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. 

54 minutes ago, ஏராளன் said:

சிவதொண்டன் நிலையம் எனும் அமைப்பு வடக்கிலும் கிழக்கிலும் யோகர் சுவாமிகளால் உருவாக்கப்பட்டு அவருடைய சீடர் செல்லத்துரை சுவாமிகளால் (சமாதியடைந்துவிட்டார்) வழிநடத்தப்பட்டது.

தற்போதும் யாழில் காங்கேசன்துறை வீதியில் யாழ் இந்துக் கல்லூரிக்கு அருகிலும், மட்டக்களப்பு செங்கலடியிலும் சிவதொண்டன் நிலையம் செயற்படுகின்றது.

ஏராளன்,

செல்லத்துரைச் சுவாமிகள் யாழ்ப்பாணச் சிவதொண்டன் நிலையத்தில் தங்கியிருந்த நாட்களில் அவ்வப்போது எனது தந்தையாருடன் சென்றிருக்கிறேன். அவரது புன்னகை பூத்த முகமும், மென்மையான வார்த்தைகளும் நினைவுக்கு வருகின்றன. 2003ற்குப் பின் அங்கு போகும் சந்தர்ப்பம் கிட்டவில்லை. அவருடன் ஒரு சிஷ்யரைக் கண்ட ஞாபகம். பெயர் சரியாக ஞாபகமில்லை. 

கருத்துப் பகிர்வுக்கு நன்றி, ஏராளன். 😊

  • தொடங்கியவர்
4 hours ago, மல்லிகை வாசம் said:

சக உறவுகளுக்கு,

அவ்வப்போது இந்த நற்சிந்தனைகள் தொடர்பான எனது புரிதல்கள்/எண்ணங்களையும் கூடவே பதியவுள்ளேன். இவை பற்றிய உங்களது சிந்தனைகளும், அனுபவங்களும் இங்கு வரவேற்கப்படுகின்றன.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

சைவசமயம் தொடர்பில் எனக்குள்ள ஆதங்கத்தை நான் இங்கு வெளிப்படுத்தலாமா  / கேட்கலாமா? 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்சி மல்லிகை வாசம்.

எமது வீட்டில் நான் சிறுவனாக இருந்த போது அல்லும் பகலும் யோகர் சாமியின் பாட்டுக்கள் கேட்கும்.

எனக்கு இப்போதும் பல பாடல்கள் மனப்பாடம். சில சமயம் வாய்விட்டு பாடும் போது மன அமைதி கிட்டும். எனது விருப்பப்பாடல்கள், “சூரியன் வருவது யாராலே” மற்றும் “அந்த வாக்கும் பொய்த்துப் போமோ”.

எனது தாய்வழி பாட்டானார் யோகர் சுவாமிகள், செல்லப்பா சுவாமியை நல்லூரடியில் சந்திப்பதற்கு முன்பிருந்தே அவரின் நண்பர். பின்னாநாளிலும் இந்த பழக்கம் தொடர்ந்தது.

ஒரு முறை யாழில் தனது தாய் நிலமை மோசம் என அறிந்து எனது பாட்டனார் அவசரமாக கிளிநொச்சியில் இருந்து வந்த சமயம். காரை செம்மணியில் வைத்து மறித்த யோகர், என்னை மறுபடியும் கொண்டுபோய் கிளிநொச்சியில் விடு எனக் கேட்டாராம்.

தாயை பார்க்க வேண்டும், ஆனால் யோகரோ முன்கோபி என்ன செய்வது ? என என் பாட்டனார் குழம்ப, “ கொம்மாவை பற்றியே யோசிக்கிறாய்? அவ போய் சேந்துட்டா, என்னை கிளிநொச்சியில விட்டுட்டு ஆறுதலா போய் காரியம் செய்” என்றாராம் யோகர்!

இதே போல், ஒரு முறை ஒரு பெரிய கொழும்பு பிரமுகரும்,  யோகரும், என் பாட்டனாரும் சாப்பிட அமர்ந்தார்களாம். பிரமுகர் நீர் தெளித்து வாழை இலையை வணங்க, “ நீ சாப்பிட வந்தனியோ? வாழையிலையை குளிப்பாட்ட வந்தனியோ?” என கேட்ட யோகர் அந்த பிரமுகரை சாப்பிடவிடாமல் எழுப்பி வீட்டே அனுப்பினாராம் 😂.

என்னால் முடிந்த துணுக்குகள், பாடல்களை நானும் இணைக்கிறேன்.

6 hours ago, மல்லிகை வாசம் said:

நாமெல்லாம் அறிந்த யாழ்ப்பாணத்துச் சித்தர் யோகர் சுவாமிகளது நற்சிந்தனைகளை இத்திரியில் பகிர்வதற்கு உத்தேசித்துள்ளேன். 

இவை ஒவ்வொன்றும் சுருக்கமானவையாகவும், அனைவருக்கும் புரியக்கூடிய எளிய தமிழில் அமைந்தும் உள்ளன. இவற்றில் சிலவற்றை அல்லது இவை முழுவதையும் கள உறவுகள் ஏற்கனவே அறிந்திருக்கக்கூடும். எனினும், ஒரு மீள்நினைவூட்டலுக்காகவும், இவற்றை அறியாத இன்றைய இளைய சமுதாயத்தை மனதில் வைத்தும். இந்தத் தத்துவ முத்துக்களை ஒவ்வொன்றாகப் பகிரவுள்ளேன். அவ்வப்போது இவை தொடர்பான எனது புரிதல்கள்/எண்ணங்களையும் கூடவே பதியவுள்ளைன். இவை பற்றிய உங்களது சிந்தனைகளும், அனுபவங்களும் இங்கு வரவேற்கப்படுகின்றன.

உண்மையான ஆன்மீகத் தேடலில் உள்ளோருக்கு இவை ஊக்கமாத்திரைகளாக அமையும் என நம்புகிறேன்.

(1872ஆம் ஆண்டு தொடக்கம் 1964ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வாழ்ந்த இவர் செல்லப்பாச் சுவாமிகளின் சீடராவார். சுவாமிகள் பற்றி நம்மில் பலர் அறிந்திருப்போம்.அறியாதோர் பின்வரும் இணைப்பில் அவரது சுருக்கமான வரலாற்றை அறியலாம்:

https://ourjaffna.com/cultural-heroes/யோகர்-சுவாமிகள் )

1 hour ago, Maharajah said:

சைவசமயம் தொடர்பில் எனக்குள்ள ஆதங்கத்தை நான் இங்கு வெளிப்படுத்தலாமா  / கேட்கலாமா? 

தேவை இல்லை என்பது என் அபிப்பிராயம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

நல்லதொரு முயற்சி மல்லிகை வாசம்.

எமது வீட்டில் நான் சிறுவனாக இருந்த போது அல்லும் பகலும் யோகர் சாமியின் பாட்டுக்கள் கேட்கும்.

எனக்கு இப்போதும் பல பாடல்கள் மனப்பாடம். சில சமயம் வாய்விட்டு பாடும் போது மன அமைதி கிட்டும். எனது விருப்பப்பாடல்கள், “சூரியன் வருவது யாராலே” மற்றும் “அந்த வாக்கும் பொய்த்துப் போமோ”.

எனது தாய்வழி பாட்டானார் யோகர் சுவாமிகள், செல்லப்பா சுவாமியை நல்லூரடியில் சந்திப்பதற்கு முன்பிருந்தே அவரின் நண்பர். பின்னாநாளிலும் இந்த பழக்கம் தொடர்ந்தது.

ஒரு முறை யாழில் தனது தாய் நிலமை மோசம் என அறிந்து எனது பாட்டனார் அவசரமாக கிளிநொச்சியில் இருந்து வந்த சமயம். காரை செம்மணியில் வைத்து மறித்த யோகர், என்னை மறுபடியும் கொண்டுபோய் கிளிநொச்சியில் விடு எனக் கேட்டாராம்.

தாயை பார்க்க வேண்டும், ஆனால் யோகரோ முன்கோபி என்ன செய்வது ? என என் பாட்டனார் குழம்ப, “ கொம்மாவை பற்றியே யோசிக்கிறாய்? அவ போய் சேந்துட்டா, என்னை கிளிநொச்சியில விட்டுட்டு ஆறுதலா போய் காரியம் செய்” என்றாராம் யோகர்!

இதே போல், ஒரு முறை ஒரு பெரிய கொழும்பு பிரமுகரும்,  யோகரும், என் பாட்டனாரும் சாப்பிட அமர்ந்தார்களாம். பிரமுகர் நீர் தெளித்து வாழை இலையை வணங்க, “ நீ சாப்பிட வந்தனியோ? வாழையிலையை குளிப்பாட்ட வந்தனியோ?” என கேட்ட யோகர் அந்த பிரமுகரை சாப்பிடவிடாமல் எழுப்பி வீட்டே அனுப்பினாராம் 😂.

என்னால் முடிந்த துணுக்குகள், பாடல்களை நானும் இணைக்கிறேன்.

தேவை இல்லை என்பது என் அபிப்பிராயம்.

நன்றி Che.

மல்லிகை வாசம்,  உங்கள் பகிர்தலை நானும் வரவேற்கிறேன். யோகர் சுவாமிகளின் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் அவரது பணிகள் பற்றி அறியவில்லை. இப்பகிர்வின் மூலம் தெரிந்து கொள்வேன்.

  • கருத்துக்கள உறவுகள்

செல்லத்துரை சுவாமிகளை மௌனமணி பெட்டகம் என ஓய்வு பெற்ற விரிவுரையாளரான எங்கள் உறவினர் ஒருவர் குறிப்பிடுவார்.
"பஞ்சம்படை வந்தாலும் பாரெல்லாம் வெந்தாலும் அஞ்சுவோமோடி கிளியே ஆறுமுகன் தஞ்சமடி"
இந்த யோகர் சுவாமியின் பாடல் வரிகளை தந்தையார் அடிக்கடி பாடுவார்.
தந்தையார் மூலமாகவே சிவதொண்டன் நிலையம் சென்று செல்லத்துரை சுவாமிகளுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நல்லதொரு முயற்சி மல்லிகை வாசம்.

எமது வீட்டில் நான் சிறுவனாக இருந்த போது அல்லும் பகலும் யோகர் சாமியின் பாட்டுக்கள் கேட்கும்.

எனக்கு இப்போதும் பல பாடல்கள் மனப்பாடம். சில சமயம் வாய்விட்டு பாடும் போது மன அமைதி கிட்டும். எனது விருப்பப்பாடல்கள், “சூரியன் வருவது யாராலே” மற்றும் “அந்த வாக்கும் பொய்த்துப் போமோ”.

இதே போல், ஒரு முறை ஒரு பெரிய கொழும்பு பிரமுகரும்,  யோகரும், என் பாட்டனாரும் சாப்பிட அமர்ந்தார்களாம். பிரமுகர் நீர் தெளித்து வாழை இலையை வணங்க, “ நீ சாப்பிட வந்தனியோ? வாழையிலையை குளிப்பாட்ட வந்தனியோ?” என கேட்ட யோகர் அந்த பிரமுகரை சாப்பிடவிடாமல் எழுப்பி வீட்டே அனுப்பினாராம் 😂.

என்னால் முடிந்த துணுக்குகள், பாடல்களை நானும் இணைக்கிறேன்..

பாடல்களை இணைத்து விடுங்கள், நன்றி.

நீங்கள் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த கொழும்பு பிரமுகர் ஜீ. ஜீ. பொன்னம்பலம், இல்லையா?

மல்லிகை வாசம், நீங்கள் இணைத்த தளத்தில் எத்தனையோ சாமியார்களை பற்றி இருக்கிறது, ஆனால் சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி பற்றி இல்லையே? கத்தோலிக்க துறவிகளும், “எம்மிலும் பார்க்க சிறப்பாக செய்கிறார்கள்” என்று போற்றும் அளவுக்கு அவரின் அமைப்புகள் மக்களுக்கு உதவுகின்றன. மிகச்சிறப்பான உங்கள் முயற்சி மேலும் தொடர வேண்டும்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

மன அழுக்குகளினால் மனிதன் அமைதி இழந்து படும் எரிச்சல் வேதனை துன்பம் பொறாமை இவை அனைத்து பற்றியும் தத்துவவியாளரர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி போலவே மனதை கட்டி சும்மாய் இரு என்ற சூத்திரத்தை சொல்லி தந்தார் சுவாமி யோகர் சுவாமிகள்.ஆசையும் பாசமுமாக அலையும் எம் போன்றவர்களால் சும்மா இருக்கவும் முடியவில்லை மனதை கட்டவும் தெரியவில்லை .நல்ல பதிவு மல்லிகை வாசம் வாழ்த்துக்கள் .அன்பே சிவம் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

பாடல்களை இணைத்து விடுங்கள், நன்றி.

நீங்கள் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த கொழும்பு பிரமுகர் ஜீ. ஜீ. பொன்னம்பலம், இல்லையா?

மல்லிகை வாசம், நீங்கள் இணைத்த தளத்தில் எத்தனையோ சாமியார்களை பற்றி இருக்கிறது, ஆனால் சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி பற்றி இல்லையே? கத்தோலிக்க துறவிகளும், “எம்மிலும் பார்க்க சிறப்பாக செய்கிறார்கள்” என்று போற்றும் அளவுக்கு அவரின் அமைப்புகள் மக்களுக்கு உதவுகின்றன. மிகச்சிறப்பான உங்கள் முயற்சி மேலும் தொடர வேண்டும்.

அவரா என்பது சரியாக நியாபகம் இல்லை. இவை எல்லாம் என் பாட்டனாரின் ஈசிச்சேரில் அருகே இருந்தபடி கேட்ட கதைகள். அவருக்கும் நியாபகம் மங்கத் தொடங்கிய, எனக்கும் கதை கேட்கும் சுவாரசியம் மட்டுமே இருந்த காலம் அது. ஆகவே தகவல்கள் பலதும் மங்கலாகவே நியாபகம் இருக்கிறது.

இன்னொரு சம்பவம் - பசியை அடக்கும் பொருட்டு 1 கிழமை விரதம் இருந்த பின் தானே சமைத்தாரம் யோகர். சமைக்க, சமைக்க பசி வயிற்றை கிள்ளும்தானே? யோகர் “பொறு, அமைதியாக இரு” என்பதாக வயிற்றுக்கு சொல்வாராம் - வயிறு கேட்காதவிடத்து - உணவை மண்ணில் கவிழ்துக் கொட்டி விட்டு, சரி “இனிக் கிட” என்பாராம்.

இதே போல் இன்னொரு பிரமுகர் ஒருதடவை யோகரை அணுகி, சர்வ அடக்கமாக சாமி உங்கள் வரலாற்றை எழுதவேணும் என்றாராம். சரி என்று தேதி ஒன்றை கொடுத்தாராம் யோகர். குறிந்த தேதியில் யோகர் பிரமுகரை கண்டுகொள்ளவில்லையாம். பிரமுகர் யோகரை அணுகி, “ சாமி வராலாறு” எனவும் “ வரலாறென்ன வரலாறு, வண்ணானின் கல் என எழுதிக்கொண்டு போ என துரத்தி அடித்தாராம் யோகர்”.

பாடல்கள் சில கீழே:

  • கருத்துக்கள உறவுகள்

எனது விருப்பப்பாடல். பொன் சுந்தரலிங்கத்தின் தெய்வீக குரலில்

https://www.himalayanacademy.com/view/antha-vaakkum_sl 

அந்த வாக்கும்

பல்லவி

அந்த வாக்கும் பொய்த்துப் போமோ
ஆசான் நல்லூர் வீதியி லருளிய

அநுபல்லவி

இந்த ஆன்மா நித்திய மென்ற

சரணங்கள்

மங்கைய ராடவர் மைந்தர்கள் கூடி
மகிழ்ந்தும் புகழ்ந்தும் வரதனைத் தேடி
வந்தனை புரிய வருவார் கோடி
செந்தமிழ் நாவலன் செல்லப்பன் சொன்ன

தேங்கா யிளநீர் தீங்கனி கொண்டு
திருவடித் தொண்டு செய்வதைக் கண்டு
ஐம்புல னடங்கி நின்றவ ருண்டு
ஆரறி வாரென ஆசான் சொன்ன

கௌரிம னோகரி ஆனந் தாச்சி
கமல ஆச்சிசெல் லாச்சி ஐவரும்
உவந்து சேவடி கும்பிடு முத்தமன்
தவத்தைச் செய்திடத் தந்திடு மருளே

  • கருத்துக்கள உறவுகள்

"""பொன் சுந்தரலிங்கத்தின் தெய்வீக குரலில். """

தெய்வீகம் மட்டுமல்ல ராஜ கம்பீர குரலும் கூட.  

(எனது favourite விருப்ப பாடல்,  அந்த வாழைமரம்... )

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maharajah said:

"""பொன் சுந்தரலிங்கத்தின் தெய்வீக குரலில். """

தெய்வீகம் மட்டுமல்ல ராஜ கம்பீர குரலும் கூட.  

(எனது favourite விருப்ப பாடல்,  அந்த வாழைமரம்... )

இணைப்பைத் தருவீர்களா மகாராஜா ? (உங்கள் பெயரிலும் கம்பீரம் உள்ளது). 

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, goshan_che said:

இணைப்பைத் தருவீர்களா மகாராஜா ? (உங்கள் பெயரிலும் கம்பீரம் உள்ளது). 

 மன்னிக்கவும் Che,  அந்த ஆலமரம் என்பதுதான் சரியானது.  Youtube ல் உள்ளது youtube.com/watch?V=Jskv3zMAdrg

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

இன்னொரு சம்பவம் - பசியை அடக்கும் பொருட்டு 1 கிழமை விரதம் இருந்த பின் தானே சமைத்தாரம் யோகர். சமைக்க, சமைக்க பசி வயிற்றை கிள்ளும்தானே? யோகர் “பொறு, அமைதியாக இரு” என்பதாக வயிற்றுக்கு சொல்வாராம் - வயிறு கேட்காதவிடத்து - உணவை மண்ணில் கவிழ்துக் கொட்டி விட்டு, சரி “இனிக் கிட” என்பாராம்.

இந்த சம்பவம் யோகர் சுவாமிகளின் குரு செல்லப்பா சுவாமியால் நிகழ்த்தப்பட்டது.
சமையல் செய்ய சீடரை பணித்துவிட்டு அது நிறைவுறும் நேரம் கவிழ்த்து கொட்டியது செல்லப்பா சுவாமிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மல்லிகை வாசம் said:

சுவாமிகளது நற்சிந்தனைகள் மற்றும் அவரது வாழ்க்கை பற்றிய ஆரோக்கியமான உரையாடலை மட்டும் செய்வதே நம் எல்லோருக்கும் பயன் தரும். 

நீங்கள் தந்த இணைப்பில் சுவாமிகள் சம்பத்திரிசியார் கல்லூரியில் எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்றார் என்றிருக்கிறது. இந்த கத்தோலிக்க கல்லூரியில் அந்த காலத்து ஐரிஷ் நிர்வாகம் எப்படி சைவரான சுவாமிகளை மாணவராக ஏற்றுக் கொண்டது?

  • தொடங்கியவர்
18 hours ago, Maharajah said:

சைவசமயம் தொடர்பில் எனக்குள்ள ஆதங்கத்தை நான் இங்கு வெளிப்படுத்தலாமா  / கேட்கலாமா? 

மஹாராஜா,

கேள்விக்கு நன்றி. 😊காலங்காலமாக ஆதங்கங்களை வெளிப்படுத்தி என்ன பயன் கண்டோம் எனத் தெரியவில்லை, இது போன்ற கருத்துக்களங்களில். அது மக்களைப் பிரிப்பதற்கு வழி செய்கிறது. நியாயமான ஆதங்கங்கள்/கேள்விகளை நம் குடும்பத்தினருடன், நெருங்கிய நண்பர்கள், உறவுகளுடன், சரியாக வழிகாட்டக் கூடிய ஆசான்கள், ஆன்மீக ஞானிகள் போன்றோருடன் நேருக்கு நேர் உரையாடியே தெளிவு பெற முடியும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. 

ஆகக் குறைந்தது இது போன்ற நம்மில் பலரும் போற்றும் மகானுடைய நற்சிந்தனைகள் பற்றிய திரியிலாவது இவற்றைத் தவிர்த்தல் நலம் என எண்ணுகிறேன்.

ஊர்கூடித் தேர் இழுப்பதில் உள்ள ஆனந்தம் எதிர் எதிர் திசையில் கயிறிழுவைப் போட்டியில் பங்கேற்கும் பொழுது கிடைப்பதில்லை.

இங்கு ஏற்கனவே உறவுகள் ஆரம்பித்து விட்ட ஆரோக்கியமான உரையாடலே நாம் எல்லாம் கூடித் தேர் தான் இழுக்கப் போகிறோம் என்பதைக் கட்டியம் கூறுகின்றன.

உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை நேரமிருக்கும் போது தொடருங்கள். 😊

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.