Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இன்று ஒரே நாளில் மாடு முட்டியதில் மாணவர் ஒருவரும், பார்வையாளர் ஒருவரும் உயிரிழப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை: அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதலுதவி அளித்து மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லும் போது செல்லப்பாண்டி என்பவர் உயிரிழந்தார். அலங்காநல்லூரில் இன்று ஒரே நாளில் மாடு முட்டியதில் மாணவர் ஒருவரும், பார்வையாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மாடு முட்டி அதன் உரிமையாளர் ஸ்ரீதரன் என்பவர் உயிரிழந்தார். மாடு முட்டி உயிரிழந்த காளை உரிமையாளர் ஸ்ரீதர் மதுரை அருகே சோழவந்தானை சேர்ந்தவர் ஆவார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சிராவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டி நிறைவு பெற்றது. மஞ்சுவிரட்டில் 110 காளைகளும், 40 மாடுபிடி வீரர்கள் பெங்கேற்றனர். மாடுகள் முட்டியதில் 80 பேர் காயமடைந்தனர். பலத்த காயம் அடைந்த 15 பேர் மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர், சிவகங்கை, மதுரை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை அலங்காநல்லூரை தொடர்ந்து கரூர், திண்டுக்கல் மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. குளித்தலை அருகே ராட்ச்சண்டர் திருமலையில் 850-க்கும் மேற்பட்ட காளைகள், 450 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.  திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே நந்தமாடிபட்டி ஜல்லிக்கட்டில் 500 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் சுமார் 500 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

Source: Dinakaran

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி காணுமே பீட்டாகாரன்   காலில் சலங்கை கட்டி ஆடுவான்.

Image

  • கருத்துக்கள உறவுகள்
On 1/17/2020 at 6:55 PM, பெருமாள் said:

Image

பெயர் காரணமோ ?

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

பெயர் காரணமோ ?

இரண்டு பெயருமே....  ஈழத்தின் பிரபல பெயர்களாக உள்ளது ஆச்சரியமாக  உள்ளது. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காளையினை உசுப்பேற்றி பத்து அல்லது பதினைந்து பேர் அதனைத் துரத்திச் செல்வதும், தோளில் பாய்ந்து ஏறுவதும், அது முட்டவந்தால் மதிலில் பாய்ந்து ஏறுவதும் வீரமாகுமா?

சரி, இது ஒரு விளையாட்டு என்று எடுத்துக்கொண்டால், அந்தக் காளையை துன்புறுத்துவது எப்படி விளையாட்டாகும்?

காளைக்கு நாட்டுச் சாராயத்தைக் குடிக்கக் கொடுத்து, கூரான ஊசியால் அதனது பின்புறத்தில் குத்தி, அதனைச் சினமூட்டி பழிவாங்கும் மூர்க்கத்தை உருவாக்கும் இந்த விபரீதம் உண்மையில் தமிழரது வீரமா என்பதை நினைத்துப் பாருங்கள். 

தமிழன் தனது வீரத்தைக் காட்டுவது ஒரு மிருகத்திடமா ? அந்த மிருகத்திற்கு இது தெரியுமா? 

ஒத்தைக்கு ஒத்தையாக ஒரு காளையுடன் ஒரு மனிதன் மோதட்டும், அப்போது தெரியும் யார் வீரம் பெரிதென்று!!!!! சுற்றிநின்று பத்துப்பேர் அதன் கவனத்தை திசை திருப்ப, ஒருவர் பின்புறமாக வந்து அதன் முதுகில் ஏறுவது வீரமேயில்லை. ஏமாற்றுத்தனம், அவ்வளவே !

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

சரியாகச் சொன்னீர்கள் ரஞ்சித். இது விலங்கு வதையன்றி வேறில்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரஞ்சித் said:

உங்களின் கருத்துப்படி சிந்தித்தால்......
உலகத்திலுள்ள  மிருகக்காட்சிச்சாலைகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும்.
வீட்டிலுள்ள மீன் தொட்டிகள் முதல் கூண்டுக்கிளிகள் வரைக்கும் தடைசெய்யப்பட வேண்டும்.
இன்னும் கரடுமுரடாக சிந்திப்போமானால்.......
மாடுகளை  வைத்து உழவுத்தொழில் செய்வதும் ஒருவகை மிருகவதைதான்.
 
59 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சரியாகச் சொன்னீர்கள் ரஞ்சித். இது விலங்கு வதையன்றி வேறில்லை. 

தாங்கள் சுத்த  சைவமாக்கும். ஐ மீன் ஒன்லி மரக்கறி. 😄

கேம்பிறிச் இல்லாட்டி ஒக்ஸ்போட் டிக்சனறியில படிச்சநீங்களோ இல்லாட்டி வாசிச்சணீங்களோ ?

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சரியாகச் சொன்னீர்கள் ரஞ்சித். இது விலங்கு வதையன்றி வேறில்லை. 

உங்கட வழியில சொல்லுறதெண்டால், நீங்க காத்தக் குடிச்சு தண்ணியையோ சாப்பிடுறனீங்க ? 
 
ஏனெண்டா மிச்சமெல்லாம் ஏதொ ஒரு வழியில உயிர்களோட சம்பந்தப் படுகுது எண்டு நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

உங்களின் கருத்துப்படி சிந்தித்தால்......
உலகத்திலுள்ள  மிருகக்காட்சிச்சாலைகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும்.
வீட்டிலுள்ள மீன் தொட்டிகள் முதல் கூண்டுக்கிளிகள் வரைக்கும் தடைசெய்யப்பட வேண்டும்.
இன்னும் கரடுமுரடாக சிந்திப்போமானால்.......
மாடுகளை  வைத்து உழவுத்தொழில் செய்வதும் ஒருவகை மிருகவதைதான்.
 
தாங்கள் சுத்த  சைவமாக்கும். ஐ மீன் ஒன்லி மரக்கறி. 😄

குமாரசாமி,

நீங்கள் சொல்வது சரிதான். மிருகக் காட்சிச்சாலைகள் முதல், சர்க்கஸ் மற்றும் வீட்டிலுள்ள மீந்தொட்டிவரை அகற்றப்படவேண்டும். ஏனென்றால், இவை யாவுமே ஒருவகையில் மிருக வதைதானே? ஆனால், மனிதனின் உணவிற்காகக் கொல்லப்படுவதை ஏனோ யாருமே மிருகவதை என்று பார்க்கவில்லை. கொல்லும்போதுகூட அந்த விலங்கிற்கு அதிக வலியில்லாமல் (இது அந்த விலங்கிற்குத்தான் தெரியும் !!!) கொல்லவேண்டும் என்றுதான் சொல்கிறார்கள். 

ஆனால், நான் சொல்லவந்த இன்னொரு விடயம், தமிழன் தனது வீரம் என்று கூறிக்கொள்ளும் இந்த விளையாட்டைப் பற்றித்தான். ஒருகாளையை பலர் சேர்ந்து கோபமூட்டி அடக்கும் இந்த விளையாட்டை. இந்தக் காளையினை அடக்கி வீரம் காட்டுவதைக் காட்டிலும், இந்தக் காளையினை விடப் பயங்கரமான சிங்கம், புலி, கரடி, யானை என்று முயற்சித்தால் தமிழரின் வீரம் ரெண்டு அல்லது மூன்று மடங்கு என்று நிரூபிக்கலாமே என்று பார்த்தேன். 

12 minutes ago, Kapithan said:

கேம்பிறிச் இல்லாட்டி ஒக்ஸ்போட் டிக்சனறியில படிச்சநீங்களோ இல்லாட்டி வாசிச்சணீங்களோ ?

இல்லை, நான் அவற்றினை இதுவரை  பார்க்கவில்லை. இனிப் பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ரஞ்சித் said:

குமாரசாமி,

நீங்கள் சொல்வது சரிதான். மிருகக் காட்சிச்சாலைகள் முதல், சர்க்கஸ் மற்றும் வீட்டிலுள்ள மீந்தொட்டிவரை அகற்றப்படவேண்டும். ஏனென்றால், இவை யாவுமே ஒருவகையில் மிருக வதைதானே? ஆனால், மனிதனின் உணவிற்காகக் கொல்லப்படுவதை ஏனோ யாருமே மிருகவதை என்று பார்க்கவில்லை. கொல்லும்போதுகூட அந்த விலங்கிற்கு அதிக வலியில்லாமல் (இது அந்த விலங்கிற்குத்தான் தெரியும் !!!) கொல்லவேண்டும் என்றுதான் சொல்கிறார்கள். 

ஆனால், நான் சொல்லவந்த இன்னொரு விடயம், தமிழன் தனது வீரம் என்று கூறிக்கொள்ளும் இந்த விளையாட்டைப் பற்றித்தான். ஒருகாளையை பலர் சேர்ந்து கோபமூட்டி அடக்கும் இந்த விளையாட்டை. இந்தக் காளையினை அடக்கி வீரம் காட்டுவதைக் காட்டிலும், இந்தக் காளையினை விடப் பயங்கரமான சிங்கம், புலி, கரடி, யானை என்று முயற்சித்தால் தமிழரின் வீரம் ரெண்டு அல்லது மூன்று மடங்கு என்று நிரூபிக்கலாமே என்று பார்த்தேன்

இல்லை, நான் அவற்றினை இதுவரை  பார்க்கவில்லை. இனிப் பார்க்கிறேன்.

இன்னும் சிரிச்சு முடியலடா சாமி😂

வின்னர் படத்தில் வடிவேலுவின் தொடைநடுங்கி கையாள் பாட்டிமாவை காட்டி “தல போட்டுரவா?” என்பார்.

உடனே வடிவேலு “ சை போ... நாளைக்கி சாகப்போற கிழவிய இன்னிக்கு கொல்லப் போறியா” என்பார். அப்படிதான் இந்த “வீர”விளையாட்டும். 

சிங்கம், புலிய கூட்டியாந்தா ‘வீரர்கள்’ எல்லாரும் வெளிக்கு போய்டுவாங்க😂.

விளையாட்டு என்பது இரு சமநிலையுள்ள தனியாட்கள் அல்லது குழுக்களிடையே நடப்பது. சிந்திக்கும் ஆறறிவுள்ள மிருகங்கள் பல கூட்டாக சேர்ந்து ஒரு ஐந்தறிவு மிருகத்தை துன்புறுத்துவது விளையாட்டல்ல,  கொடுமை.

பிகு: ஜல்லிகட்டை கலாச்சார அடையாளமாக, மிகுந்த கட்டுப்பாட்டு அடிப்படையில் அனுமதிக்க வேண்டும் ஏனேன்றால் பெரும்பான்மை தமிழக மக்கள் விரும்புவதை அதைத்தான். அதுதான் ஜனநாயகம், மாநில சுயாட்சியின் மாண்பு.

ஆனால் இதில் வீரமும் இல்லை விளையாட்டும் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, ரஞ்சித் said:

குமாரசாமி,

நீங்கள் சொல்வது சரிதான். மிருகக் காட்சிச்சாலைகள் முதல், சர்க்கஸ் மற்றும் வீட்டிலுள்ள மீந்தொட்டிவரை அகற்றப்படவேண்டும். ஏனென்றால், இவை யாவுமே ஒருவகையில் மிருக வதைதானே? ஆனால், மனிதனின் உணவிற்காகக் கொல்லப்படுவதை ஏனோ யாருமே மிருகவதை என்று பார்க்கவில்லை. கொல்லும்போதுகூட அந்த விலங்கிற்கு அதிக வலியில்லாமல் (இது அந்த விலங்கிற்குத்தான் தெரியும் !!!) கொல்லவேண்டும் என்றுதான் சொல்கிறார்கள். 

ஆனால், நான் சொல்லவந்த இன்னொரு விடயம், தமிழன் தனது வீரம் என்று கூறிக்கொள்ளும் இந்த விளையாட்டைப் பற்றித்தான். ஒருகாளையை பலர் சேர்ந்து கோபமூட்டி அடக்கும் இந்த விளையாட்டை. இந்தக் காளையினை அடக்கி வீரம் காட்டுவதைக் காட்டிலும், இந்தக் காளையினை விடப் பயங்கரமான சிங்கம், புலி, கரடி, யானை என்று முயற்சித்தால் தமிழரின் வீரம் ரெண்டு அல்லது மூன்று மடங்கு என்று நிரூபிக்கலாமே என்று பார்த்தேன். 

இந்தளவிற்கு மனிதாபிமானம் அற்ற செயல் அல்ல ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டுக்கு வரும் காளைகளை வளர்ப்பவர்கள் தங்கள் பிள்ளைகளைப் போலவே வளர்க்கின்றார்கள்.அது அந்த விளையாட்டுக்காகவே வளர்க்கப்படுகின்றது.வதை செய்வதற்காக அல்ல.

இது ஸ்பானியர்களின் கொலைவீர விளையாட்டு.

Bildergebnis für Spanischer Torero von Stier

இது ஸ்பானியாவில் நடக்கும் விளையாட்டு.ஜல்லிக்கட்டு போன்றது.

Bildergebnis für Stierhatz

இந்த அமெரிக்க வீரத்தை எந்த பட்டியலில் சேர்ப்பீர்கள்?

Ähnliches Foto

இங்கிருக்கும் சிலருக்கு வெள்ளைக்காரன் செய்தால் சரியாக தெரியும்.
அதையே தமிழன் செய்தால் :grin:
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இன்னும் சிரிச்சு முடியலடா சாமி😂

வின்னர் படத்தில் வடிவேலுவின் தொடைநடுங்கி கையாள் பாட்டிமாவை காட்டி “தல போட்டுரவா?” என்பார்.

உடனே வடிவேலு “ சை போ... நாளைக்கி சாகப்போற கிழவிய இன்னிக்கு கொல்லப் போறியா” என்பார். அப்படிதான் இந்த “வீர”விளையாட்டும். 

சிங்கம், புலிய கூட்டியாந்தா ‘வீரர்கள்’ எல்லாரும் வெளிக்கு போய்டுவாங்க😂.

விளையாட்டு என்பது இரு சமநிலையுள்ள தனியாட்கள் அல்லது குழுக்களிடையே நடப்பது. சிந்திக்கும் ஆறறிவுள்ள மிருகங்கள் பல கூட்டாக சேர்ந்து ஒரு ஐந்தறிவு மிருகத்தை துன்புறுத்துவது விளையாட்டல்ல,  கொடுமை.

பிகு: ஜல்லிகட்டை கலாச்சார அடையாளமாக, மிகுந்த கட்டுப்பாட்டு அடிப்படையில் அனுமதிக்க வேண்டும் ஏனேன்றால் பெரும்பான்மை தமிழக மக்கள் விரும்புவதை அதைத்தான். அதுதான் ஜனநாயகம், மாநில சுயாட்சியின் மாண்பு.

ஆனால் இதில் வீரமும் இல்லை விளையாட்டும் இல்லை.

சமனிலை மற்றும் மிகுந்த ஒழுங்கு பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். உண்மைதான்,  விளையாட்டில் சமனிலை என்பது போட்டியாளர்களிடையே இருக்கவேண்டும். 

மிகுந்த கட்டுப்படும் ஒழுங்கும் ஜல்லிக்கட்டில் தேவை. அப்போதுதான் பாரம்பரிய விளையாட்டுக்களை அதன் அடுத்த நிலைக்கு கொண்டுபோய்ச் சேர்க்க முடியும்.

ஆனால் விமரிசனம் என்கின்ற பெயரில் உயிர் வதை , மனிதாபிமானமற்றது, காலத்திற்கேற்ப நாகரீகமடையாதது என்று எழுந்தமானமாக குறை மட்டும் கூறுவது சரியான அணுகுமுறையா ?

விமரிசனம் என்பது தெற்காசிய சமூகத்தில்(பிற சமூகங்களை நான் அவதானிக்க போதுமான வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை) ஒரு நாகரீகமாக வளர்ந்து வருகிறது.  ஜல்லிக்கட்டை எவ்வாறு ஒழுங்குபடுத்தலாம் எனக் கேட்டால் விமரிசனம் செய்வோரிடம் பதிலிருக்கிறதா ?  சமனிலை இங்கு தேவையா இல்லையா ?

விமரிசனம் செய்வோர் வீடுகளில் pets இல்லையா ? எனக்கேட்டால் உண்மையான பதில் வருமா ? இங்கும் சமனிலை வேண்டுமல்லவா ?

சரி அதை விடுங்கள். PETA போன்ற தன்னார்வ தொண்டு நிருவனங்கள் மூன்றாம் உலக நாடுகளில் மட்டும் மிகக் கடுமையாக நிற்பதற்குக் காரணம் என்ன? என்கின்ற கேள்வியில் நியாயம் இல்லையா ? ஏன் இங்கு சமனிலை இல்லை. (தயவுசெய்து இவற்றினை யூகங்கள் என்று கூறாதீர்கள்)

இன்று உலகம் பூராகவும் கொண்டாடப்படும் விளையாட்டுக்களில் எத்தனை விளையாட்டுக்கள் மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வந்தவை ? எத்தனைவிளையாட்டுக்கள் இந்த மூன்றாம் உலக நாடுகளை பிரதிநிதித்துவம் செய்பவை ? ஏன் இங்கு சமனிலை இல்லை ? 

சமனிலை நிச்சயமாகத் தெவை. அவை விமரிசனத்திற்கும் விதிவிலக்கல்ல. 

இனி எங்கட விமரிசனக் குஞ்சுகளட்ட வருவோம். 

அவர்கள் தங்கள் விமரிசனங்களை முதலில் தங்கள் தங்கள் வீடுகளில் இருந்து ஆரம்பிக்கட்டும். குழந்தைகளை வையாமல், வீடுகளில் செல்லப் பிராணிகளை வளர்க்காமல், புலால் உண்ணாமல் தாவர உணவுவகைகளை மட்டும் உண்டு ஆரம்பிக்கட்டும்.(தாவரங்கள் என்பன உறங்குனிலை உயிரினங்கள் என்பதுகூட இவர்களுக்கு தெரியுமா ?)

அடுத்ததாக 

கோவில்களுக்கு விலங்குகளை பலியிடும் வழக்கத்திற்கெதிராக, அலகு குத்துதலுக் கெதிராக , காவடி எடுத்தலுக் கெதிராக, பிரதிட்டைக் கெதிராக மற்றும் இன்னோரன்ன விடயங்களுக்கெதிராக குரல் கொடுக்க ஆயத்தமா ? (பதில் என்னவென்று எல்லோருக்குமே தெரியும்)

சும்மா எதுக்கெடுத்தாலும் விமரிசனம் விமரிசன விமரிசனம்.

விமரிசனத்திலும் சமனிலை தேவை.

அதற்காக விமரிசனம் செய்யவேண்டாம் என்று நான் கூற வரவில்லை. 

விமரிசனங்கள் மக்களை வழி நடாத்துபவையாக  இருக்க வேண்டும். விமர்சகர்களிடம் அதற்கான மாற்றுத் திட்டங்கள் ஏதும் உண்டா ? 

அப்படி திட்டங்கள் ஏதும் இல்லவிட்டால் கட்டவுட்டுக்கு பால் ஊத்துவதற்கும் இதற்கும் இடையே என்ன வேறுபாடு இருக்கிறது ? 

கேட்பாரில்லாதவன் ஊருக்கு இழிச்சவாயனாம். 

விமரிசனங்கள் எப்போதும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். மாறாக காயப்படுத்துவதாக இருக்கக் கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்

16 வயத்தினிலே.. ☺️

tHUOBTF.jpg

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

அவனியா புரத்திலும் , அலங்கா நல்லூரிலும்... மிரள வைத்த ராவணன்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

இந்தளவிற்கு மனிதாபிமானம் அற்ற செயல் அல்ல ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டுக்கு வரும் காளைகளை வளர்ப்பவர்கள் தங்கள் பிள்ளைகளைப் போலவே வளர்க்கின்றார்கள்.அது அந்த விளையாட்டுக்காகவே வளர்க்கப்படுகின்றது.வதை செய்வதற்காக அல்ல.

இது ஸ்பானியர்களின் கொலைவீர விளையாட்டு.

Bildergebnis für Spanischer Torero von Stier

இது ஸ்பானியாவில் நடக்கும் விளையாட்டு.ஜல்லிக்கட்டு போன்றது.

Bildergebnis für Stierhatz

இந்த அமெரிக்க வீரத்தை எந்த பட்டியலில் சேர்ப்பீர்கள்?

Ähnliches Foto

இங்கிருக்கும் சிலருக்கு வெள்ளைக்காரன் செய்தால் சரியாக தெரியும்.
அதையே தமிழன் செய்தால் :grin:
 
அண்ணை,

இங்க யார் ஸ்பெயின்ல நடக்கிறது சரி எண்டு எழுதினவை. 

ஒரு முற்போக்கு கருத்தை சொன்னா உடனே வெள்ளைகாரனை கொப்பி அடிக்கினம் எனும் உங்கள் பார்வையில்தான் கோளாறு.

மேலே சொல்லப்பட்ட கருத்துகளை சிந்திக்க கறுப்பு, பழுப்பு மூளைகளாலும் முடியும்.

11 hours ago, Kapithan said:

சமனிலை மற்றும் மிகுந்த ஒழுங்கு பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். உண்மைதான்,  விளையாட்டில் சமனிலை என்பது போட்டியாளர்களிடையே இருக்கவேண்டும். 

மிகுந்த கட்டுப்படும் ஒழுங்கும் ஜல்லிக்கட்டில் தேவை. அப்போதுதான் பாரம்பரிய விளையாட்டுக்களை அதன் அடுத்த நிலைக்கு கொண்டுபோய்ச் சேர்க்க முடியும்.

ஆனால் விமரிசனம் என்கின்ற பெயரில் உயிர் வதை , மனிதாபிமானமற்றது, காலத்திற்கேற்ப நாகரீகமடையாதது என்று எழுந்தமானமாக குறை மட்டும் கூறுவது சரியான அணுகுமுறையா ?

விமரிசனம் என்பது தெற்காசிய சமூகத்தில்(பிற சமூகங்களை நான் அவதானிக்க போதுமான வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை) ஒரு நாகரீகமாக வளர்ந்து வருகிறது.  ஜல்லிக்கட்டை எவ்வாறு ஒழுங்குபடுத்தலாம் எனக் கேட்டால் விமரிசனம் செய்வோரிடம் பதிலிருக்கிறதா ?  சமனிலை இங்கு தேவையா இல்லையா ?

விமரிசனம் செய்வோர் வீடுகளில் pets இல்லையா ? எனக்கேட்டால் உண்மையான பதில் வருமா ? இங்கும் சமனிலை வேண்டுமல்லவா ?

சரி அதை விடுங்கள். PETA போன்ற தன்னார்வ தொண்டு நிருவனங்கள் மூன்றாம் உலக நாடுகளில் மட்டும் மிகக் கடுமையாக நிற்பதற்குக் காரணம் என்ன? என்கின்ற கேள்வியில் நியாயம் இல்லையா ? ஏன் இங்கு சமனிலை இல்லை. (தயவுசெய்து இவற்றினை யூகங்கள் என்று கூறாதீர்கள்)

இன்று உலகம் பூராகவும் கொண்டாடப்படும் விளையாட்டுக்களில் எத்தனை விளையாட்டுக்கள் மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வந்தவை ? எத்தனைவிளையாட்டுக்கள் இந்த மூன்றாம் உலக நாடுகளை பிரதிநிதித்துவம் செய்பவை ? ஏன் இங்கு சமனிலை இல்லை ? 

சமனிலை நிச்சயமாகத் தெவை. அவை விமரிசனத்திற்கும் விதிவிலக்கல்ல. 

இனி எங்கட விமரிசனக் குஞ்சுகளட்ட வருவோம். 

அவர்கள் தங்கள் விமரிசனங்களை முதலில் தங்கள் தங்கள் வீடுகளில் இருந்து ஆரம்பிக்கட்டும். குழந்தைகளை வையாமல், வீடுகளில் செல்லப் பிராணிகளை வளர்க்காமல், புலால் உண்ணாமல் தாவர உணவுவகைகளை மட்டும் உண்டு ஆரம்பிக்கட்டும்.(தாவரங்கள் என்பன உறங்குனிலை உயிரினங்கள் என்பதுகூட இவர்களுக்கு தெரியுமா ?)

அடுத்ததாக 

கோவில்களுக்கு விலங்குகளை பலியிடும் வழக்கத்திற்கெதிராக, அலகு குத்துதலுக் கெதிராக , காவடி எடுத்தலுக் கெதிராக, பிரதிட்டைக் கெதிராக மற்றும் இன்னோரன்ன விடயங்களுக்கெதிராக குரல் கொடுக்க ஆயத்தமா ? (பதில் என்னவென்று எல்லோருக்குமே தெரியும்)

சும்மா எதுக்கெடுத்தாலும் விமரிசனம் விமரிசன விமரிசனம்.

விமரிசனத்திலும் சமனிலை தேவை.

அதற்காக விமரிசனம் செய்யவேண்டாம் என்று நான் கூற வரவில்லை. 

விமரிசனங்கள் மக்களை வழி நடாத்துபவையாக  இருக்க வேண்டும். விமர்சகர்களிடம் அதற்கான மாற்றுத் திட்டங்கள் ஏதும் உண்டா ? 

அப்படி திட்டங்கள் ஏதும் இல்லவிட்டால் கட்டவுட்டுக்கு பால் ஊத்துவதற்கும் இதற்கும் இடையே என்ன வேறுபாடு இருக்கிறது ? 

கேட்பாரில்லாதவன் ஊருக்கு இழிச்சவாயனாம். 

விமரிசனங்கள் எப்போதும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். மாறாக காயப்படுத்துவதாக இருக்கக் கூடாது. 

உண்மையிலேயே உங்களுக்கு வீட்டில் செல்லப் பிராணியாக வளர்பதற்கும், உணவுக்காக முடிந்தளவு நோவை குறைத்து கொல்வதற்கும்,

விளையாட்டுக்காக, பொழுதுபோக்குக்காக ஒரு ஜீவனை துன்புறுத்துவதற்கும் வித்யாசம் தெரியவில்லையா?

இல்லை என்றால் - the gap between our respective understandings of the world is too big to fill. 

மன்னிக்கவும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்கள் சிலர் ," ஒற்றைக்கு ஒற்றை மாட்டோடு போட்டுப் பார்க்கணும் " என்று சொல்வதைப் பார்த்தால், அதனோடு போரிட்டு வெல்வதே சல்லிக்கட்டின் குறிக்கோள் என்று எடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது. ஏனையோர் நாகரிகமடையாத காலத்திலேயே தலைசிறந்த நாகரிகத்திற்குச் சொந்தக்காரனான தமிழன் பகுத்தறிவின்றி, தன் வாழ்வின் அங்கமான  மாட்டை வெல்லவா நினைப்பான் ? இலக்கியங்களில் ஏறு தழுவுதலே அவனது வீர விளையாட்டுகளில் ஒன்றாக இருந்திருக்கிறது. அது கொம்பைப் பிடித்து அடக்குவதல்ல. அதனைத் தழுவுவதே அவன் மாட்டுடன் கொண்ட இணக்கமான உறவு. ஒருவன் திமிலைப் பிடித்த பின் மற்றவர்கள் விட்டுவிட வேண்டும். பிடித்தவன் குறிப்பிட்ட கால அளவு விடாமல் தழுவிச் சென்றால் வெற்றி பெற்றதாய் அறிவிக்கப் படுகிறான். வெற்றி மாட்டின் மீது  அல்ல. தன் செல்லப் பிராணியுடனான இணக்கத்தில் வெற்றி. ஸ்பெயின் விளையாட்டைப் போல மாட்டைக் கோரமாகக் கொல்வதல்ல சல்லிக்கட்டு. தெலுங்கர் வரவுக்குப் பின் அவர்கள் ஊரில் இருந்தது போல் ஓட்டையுள்ள பழைய  சல்லிக்காசை மாட்டின் கொம்பில் கட்டி அதனை எடுக்குமாறு சில இடங்களில் அமைந்த போது 'சல்லிக்கட்டு' என்ற பெயர் வந்தது. மேலும் தகவலுக்கு, தொல்லியல் ஆய்வாளர் தொ.பரமசிவனின் ஜல்லிக்கட்டு பற்றிய கட்டுரையை இணையத்தில் வாசிக்கலாம். இந்த வீர விளையாட்டிலும் சாவு நிகழ்வதைத் தவிர்க்கும் வழிமுறைகளை ஏற்படுத்தலாம். உழவு மற்றும் இவ்வீர விளையாட்டின் மூலம் நாட்டு மாட்டினம் அழியாமல் பார்த்துக் கொள்ளலாம். பீட்டாவின் கண்ணெரிச்சல் இதுவே. அதன் அரசியல் இதுவே.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

தகவலுக்கு நன்றி முனைவரே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

உண்மையிலேயே உங்களுக்கு வீட்டில் செல்லப் பிராணியாக வளர்பதற்கும், உணவுக்காக முடிந்தளவு நோவை குறைத்து கொல்வதற்கும்,

விளையாட்டுக்காக, பொழுதுபோக்குக்காக ஒரு ஜீவனை துன்புறுத்துவதற்கும் வித்யாசம் தெரியவில்லையா?

இல்லை என்றால் - the gap between our respective understandings of the world is too big to fill. 

மன்னிக்கவும்.

நிச்சயமாகத்தெரியும். எனது தர்க்கம் பின்வரும் விடயங்கள் தொடர்பானது.

1) போலியாக ஜீவ காருண்யம் பேசுவோர். இவர்கள் இளகிய இரும்பை ஏறி ஏறி உளக்குவர்(அடிப்பர் அல்ல)

2)வேறு வேறு  நாகரீகங்களை இருவேறு அளவு கோலால் அளப்பவர்களது நியாயமற்ற செயற்பாடுகள்

3) இயற்கைச் சமனிலை 

4) சமனிலை (Balance) , மற்றும் சமமான சந்தர்ப்பங்கள் (Equal opportunity )

போன்ற விடயங்களுடன் தொடர்புபட்டே எனது கருத்துக்களை கூறினேன்.
 
என் பார்வையில் வளர்ப்பு மாடுகளில் ஜல்லிக்கட்டு மடுகள்தான் மிக மிகக் குறைந்த அளவு துன்புறுத்துதலுக்கு உள்ளாகுவதாக நம்புகிறேன். தவறு இருப்பின் சுட்டலாம்.

பெற்றோர் பிள்ளைகளுக்கிடையேயும், கணவன் மனைவிக்கிடையே கூட வேற்றுமைகள் இருக்கும்போது நீங்கள் எனது கருத்துக்களை விமரிசனம் இன்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என நான் எப்படி எதிர்பார்க்க முடியும் ?

ஆனால் எனது கருத்துக்களை கூறுவதற்கு நீங்கள் தடையேதும் கூறமாட்டீர்கள் என்பது எனக்கு மிக நன்றாகவே தெரியும். 

நான் எப்போதுமே ஆரோக்கியமான உரையாடலுக்கு என்னை தயாராகவே வைத்துள்ளேன். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kapithan said:

புரிதலுக்கு நன்றி

1. இது போலி ஜீவகாருண்யம் இல்லை. உலக வெப்பமாதல் பற்றி யாரும் கதைதால் - நீங்கள் வீட்டில் ஹீட்டர் போடுவதில்லையா? பெட்றோல் அடிப்பதில்லையா? என்றா கேட்பீர்கள்? 100% இலட்சிய ஜீவகாருண்யம் சாத்தியமில்லை. ஆனால் எம்மால் முடிந்தளவு பிற உயிர்களை இம்சிக்காமல் வாழலாமே? என்பது போலி ஜீவகாருண்யம் ஆகாது. எனக்கு மான் கறி பிடிக்கும் அதற்காக வீதியில் காரில் போகும் போது மான் குறுக்கிட்டால், பிரேக் அடிக்காமலா இருக்க முடியும்.

2. ஜல்லி கட்டை கலாச்சார அடையாளம் என்பதை யாரும் மறுப்பதில்லை. ஆனால் இதுதான் எமது வீரம், பிரபாகரனை பார்த்ததாயா, இராவணை பார்த்தாயா என்பது சின்னப்பிள்ளைதனமானது. இதில் வீரமுமில்லை, விளையாட்டும் இல்லை. அண்மையில் love Island எனும் நிகழ்சியில் வேட்டைகாரருக்கு ஏற்பட்ட கதி. பிரிதானியாவில் hunting with hounds க்கு தடை - இப்படி இது இரு வேறு நாகரிகங்களிலும் ஒரே மாதிரியாகவே அளவிடப்படுகிறது. நம்மில் சிலர்தான், முற்போக்கு சிந்தனை என்றாலே அது ஏதோ வெள்ளைக்காரன் சமாச்சாரம் என்பதாக அலர்ஜி ஆகிறார்கள்.

3. இயற்கை சமனிலையை எப்படி ஜல்லிகட்டு பேணுகிறது? Fox hunting, badger cull போன்றவற்றில் இது ஓகே, ஆனால் ஜல்லிகட்டில்?

4. காளை தானாகவே மதம் கொண்டு திமிறினால், தாக்கினால் அதை தனித்து அடக்கினால் அது வீரம், அல்லது ஒரு காட்டு விலங்கை அடக்கினால் -தனியாளாக அதில் சம சந்தர்பம் இருக்கும் - ஒரு காளையை உரே திரண்டு அடக்குவதில் என்ன சம சந்தர்பத்தை கண்டீர்கள்? குறைந்த பட்சம், 1காளை=1மனிதன் என்று மோதினால் கூட பரவாயில்லை.

ஜல்லிகட்டில் “வீரர்கள்” காளையை அடக்குவதற்கும், போரில் புலிகளை மகிந்த வென்றதுக்கும் பெரிய வித்தியாசமில்லை. இது வீரம் என்றால் அதுவும் வீரம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

எனது கருத்துக்கள் தனியே ஜல்லிக்கட்டை மட்டும் வைத்துக் கூறப்படவில்லை. பொதுவான உலக ஒழுங்கில் உள்ள நடைமுறையை வைத்து கேள்வி எழுப்பி உள்ளேன்.  சமனான சந்தர்ப்பங்கள் என்பது உலகின் எல்லா நாகரீகங்களுக்கும் பொதுவானதாக வழங்கப்படல் வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஜல்லிக்கட்டை தமிழர்களின் வீர விளையாட்டு என்பது அவமானமானது. இப்போது சில வருடங்களாக தான் இந்த அலம்பல் நடைபெறுகிறது. காலத்திற்கு ஒவ்வாத ஒரு விளையாட்டு இல்லாமல் போவதே நல்லது.விளையாட்டு என்றால் அந்த விளையாட்டில் வீரர்களாக வருபவர்களை தவிர சாதாரணமானவர்களும் பெண்களும் ஆசைபட்டு விளையாட கூடிய விளையாட்டாக இருக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டை பற்றிய கோஷான் சே, ரஞ்சித், மெசொபொத்தேமியா சுமேரியர் கருத்துக்கள்💯

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுப.சோமசுந்தரம் said:

நண்பர்கள் சிலர் ," ஒற்றைக்கு ஒற்றை மாட்டோடு போட்டுப் பார்க்கணும் " என்று சொல்வதைப் பார்த்தால், அதனோடு போரிட்டு வெல்வதே சல்லிக்கட்டின் குறிக்கோள் என்று எடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது. ஏனையோர் நாகரிகமடையாத காலத்திலேயே தலைசிறந்த நாகரிகத்திற்குச் சொந்தக்காரனான தமிழன் பகுத்தறிவின்றி, தன் வாழ்வின் அங்கமான  மாட்டை வெல்லவா நினைப்பான் ? இலக்கியங்களில் ஏறு தழுவுதலே அவனது வீர விளையாட்டுகளில் ஒன்றாக இருந்திருக்கிறது. அது கொம்பைப் பிடித்து அடக்குவதல்ல. அதனைத் தழுவுவதே அவன் மாட்டுடன் கொண்ட இணக்கமான உறவு. ஒருவன் திமிலைப் பிடித்த பின் மற்றவர்கள் விட்டுவிட வேண்டும். பிடித்தவன் குறிப்பிட்ட கால அளவு விடாமல் தழுவிச் சென்றால் வெற்றி பெற்றதாய் அறிவிக்கப் படுகிறான். வெற்றி மாட்டின் மீது  அல்ல. தன் செல்லப் பிராணியுடனான இணக்கத்தில் வெற்றி. ஸ்பெயின் விளையாட்டைப் போல மாட்டைக் கோரமாகக் கொல்வதல்ல சல்லிக்கட்டு. தெலுங்கர் வரவுக்குப் பின் அவர்கள் ஊரில் இருந்தது போல் ஓட்டையுள்ள பழைய  சல்லிக்காசை மாட்டின் கொம்பில் கட்டி அதனை எடுக்குமாறு சில இடங்களில் அமைந்த போது 'சல்லிக்கட்டு' என்ற பெயர் வந்தது. மேலும் தகவலுக்கு, தொல்லியல் ஆய்வாளர் தொ.பரமசிவனின் ஜல்லிக்கட்டு பற்றிய கட்டுரையை இணையத்தில் வாசிக்கலாம். இந்த வீர விளையாட்டிலும் சாவு நிகழ்வதைத் தவிர்க்கும் வழிமுறைகளை ஏற்படுத்தலாம். உழவு மற்றும் இவ்வீர விளையாட்டின் மூலம் நாட்டு மாட்டினம் அழியாமல் பார்த்துக் கொள்ளலாம். பீட்டாவின் கண்ணெரிச்சல் இதுவே. அதன் அரசியல் இதுவே.

ஜல்லிக்கட்டை மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடத்த வேண்டும் என சொன்னது இதைத்தான் ஐயா. மனிதர்களின் சாவு மட்டுமல்ல, காளைகளுக்கு சாராயம் ஊத்தல், ஊசியடித்தல், போல சினம் வரும் செயல்களை செய்யாமலும் கட்டுபடுத்த வேண்டும்.

நீங்கள் கூறியது போல ஏறு தழுவும் முறை இப்போ அருகி, பரிசுக்காக காளையை எப்படியும் அடக்கி விடும் மனோநிலையும், எப்படியும் யாராலும் அடக்கமுடியாதபடி காளையை சினம் கொள்ள வைக்கும் மனோநிலையுமே மேலோங்கி நிற்கிறது.

இங்கேதான் தெளிவான இறுக்கமான கட்டுப்பாடுகள் அவசியமாகிறது.

பிகு: ஜல்லிகட்டும் வழக்கம் தெலுங்கர் அறிமுகப்படுத்தியது என்பதை சொன்னதற்கு நன்றி. தம்பிகள் இன்னேரம் துடிச்சுப் போயிருப்பார்கள் 😂

பிகு2: ஒற்றைக்கு ஒற்றை - காளையின் கவனத்தை நான் ஈர்கிறேன், நீ திமிலை பிடி என டீலிங் நடக்கிறதா இல்லையா?

இரண்டு சிந்திக்க தெரிந்த மிருகங்கள் திட்டமிட்டு, சிந்திக்க தெரியாத ஒரு மிருகத்தின் திமிலை பிடிப்பதில் வீரம் எங்கே ஐயா இருக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

இந்த ஜல்லிக்கட்டை தமிழர்களின் வீர விளையாட்டு என்பது அவமானமானது. இப்போது சில வருடங்களாக தான் இந்த அலம்பல் நடைபெறுகிறது. காலத்திற்கு ஒவ்வாத ஒரு விளையாட்டு இல்லாமல் போவதே நல்லது.விளையாட்டு என்றால் அந்த விளையாட்டில் வீரர்களாக வருபவர்களை தவிர சாதாரணமானவர்களும் பெண்களும் ஆசைபட்டு விளையாட கூடிய விளையாட்டாக இருக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டை பற்றிய கோஷான் சே, ரஞ்சித், மெசொபொத்தேமியா சுமேரியர் கருத்துக்கள்💯

தமிழர்களின் விளையாட்டு என்பது அவமானமானதா ? 

என்னைத் தமிழனாக அடையாளப் படுத்துவதில் நான் மகிழ்வுறுகிறேன். 

1 hour ago, goshan_che said:

ஜல்லிக்கட்டை மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடத்த வேண்டும் என சொன்னது இதைத்தான் ஐயா. மனிதர்களின் சாவு மட்டுமல்ல, காளைகளுக்கு சாராயம் ஊத்தல், ஊசியடித்தல், போல சினம் வரும் செயல்களை செய்யாமலும் கட்டுபடுத்த வேண்டும்.

நீங்கள் கூறியது போல ஏறு தழுவும் முறை இப்போ அருகி, பரிசுக்காக காளையை எப்படியும் அடக்கி விடும் மனோநிலையும், எப்படியும் யாராலும் அடக்கமுடியாதபடி காளையை சினம் கொள்ள வைக்கும் மனோநிலையுமே மேலோங்கி நிற்கிறது.

இங்கேதான் தெளிவான இறுக்கமான கட்டுப்பாடுகள் அவசியமாகிறது.

பிகு: ஜல்லிகட்டும் வழக்கம் தெலுங்கர் அறிமுகப்படுத்தியது என்பதை சொன்னதற்கு நன்றி. தம்பிகள் இன்னேரம் துடிச்சுப் போயிருப்பார்கள் 😂

பிகு2: ஒற்றைக்கு ஒற்றை - காளையின் கவனத்தை நான் ஈர்கிறேன், நீ திமிலை பிடி என டீலிங் நடக்கிறதா இல்லையா?

இரண்டு சிந்திக்க தெரிந்த மிருகங்கள் திட்டமிட்டு, சிந்திக்க தெரியாத ஒரு மிருகத்தின் திமிலை பிடிப்பதில் வீரம் எங்கே ஐயா இருக்கிறது?

முனைவரின் கடைசி வரிகள் தொடர்பில் தங்கள் கருத்து என்ன ? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.