Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திக்சிகா வழிகாட்டிய பாதையில் உறுதியோடு பயணிப்போம் – பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திக்சிகா வழிகாட்டிய பாதையில் உறுதியோடு பயணிப்போம் – பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பு!

AdminJanuary 31, 2020
FB_IMG_1580466932234.jpg?fit=576%2C1024

தமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் மாவீரர் நாள் நிகழ்வு எழுச்சியுடன் இடம்பெறுவதற்கு திக்சி காத்திரமான பங்கு வகித்தவராவார்.

Thiksika the leader of Tamil Youth Organisation (UK), has died after being afflicted with cancer. Our thoughts are with her family and fellow activists.

பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பு.


எமது பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு நாங்கள் ஆறாத்துயரம் அடைந்துள்ளோம்.

எங்களுடன் கூடிக்குலாவிய எங்கள் நண்பியின் பிரிவுத் துயரத்தில் உறைந்திருக்கும் குடும்பத்தினரின் ஆறாத்துயரில் நாங்களும் பங்கெடுத்துக்கொள்கின்றோம். தனது சிறு வயதிலிருந்தே தாயகம் நோக்கிய செயற்பாடுகளில் முழுவீச்சாக செயற்பட்டார், புதிய புதிய சிந்தனைகளில் தமிழ் மக்களின் துயரங்களை அனைத்துலகத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற சிந்தனை அவர் மனதில் வேரூன்றி நின்றது.

பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பை முன்னேற்றப் பாடுபடுகின்ற தூண்களில் ஒருவராக இருந்தவர் திக்சிகா. அவரின் ஒருங்கிணைப்பில் பல வேலைத்திட்டங்களைத் திட்டமிட்டுக்கொண்டிருக்கும் பொழுது புற்றுநோய் என்னும் கொடிய நோய் அவரை எங்களிடமிருந்து பறித்துச் சென்றுள்ளது.

தமிழ்ச் சமூகத்தினரிடையே இந்தப் புற்றுநோய் பெருமளவில் பரவிக்காணப்படுகின்றது. இன்று எம்மவர்களிடையே இதனைப் பற்றிய விழிப்புணர்வுகளும் இது தொடர்பான கருத்தரங்குகளும் இன்றியமையாத தேவையாக உள்ளன.

தமிழ் மருத்துவ அமைப்புகள் இதற்கான திட்டமிடல்களை முன்னெடுக்க வேண்டுமென இவ்வேளையில் தாழ்மையாக வேண்டுகின்றோம்.

திக்சியின் இழப்புத் தமிழீழம் நோக்கிப் பயணிக்கும் எங்களுக்குப் பேரிழப்பாக அமைந்துள்ள போதும், திக்சிகா வழிகாட்டிய பாதையில் பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பினராகிய நாங்கள் எங்கள் இலட்சியத்தை வென்றெடுக்கும் பணிகளில் மிகுந்த உத்வேகத்துடன் செயற்படுவோமென உறுதியெடுத்துக் கொள்கின்றோம்.

பிரிவுத் துயரோடும் இலட்சிய உறுதியோடும் 
தமிழ் இளையோர் அமைப்பு 
பிரித்தானியா.

அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்குத் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
 

http://www.errimalai.com/?p=49166

  • கருத்துக்கள உறவுகள்

முடியல்ல!...இனி மேல் யார் ,யார் எல்லாம் எங்களுக்கு பாதை காட்ட வருவீனமோ தெரியாது:unsure:
தங்கையின் ஆத்மா சாந்தியடையட்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

முடியல்ல!...இனி மேல் யார் ,யார் எல்லாம் எங்களுக்கு பாதை காட்ட வருவீனமோ தெரியாது

ஏனிந்த வெறுப்பு ?

இந்த இளவயதில் பொறுப்பாளராக இருந்து தன்னால் முடிந்த தாயக  பயணத்தில் பங்காற்றியவர் மேல் .....................எனிவே தங்கை திக்சிவாகுக்கு கண்ணீர் அஞ்சலிகள் .

 

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் பிரிவால் துயருற்றிக்கும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கின்றேன். அன்னாரின் ஆத்ம சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்

 

  • கருத்துக்கள உறவுகள்

திக்சிகா குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

தமிழ்ச் சமூகத்தினரிடையே இந்தப் புற்றுநோய் பெருமளவில் பரவிக்காணப்படுகின்றது. இன்று எம்மவர்களிடையே இதனைப் பற்றிய விழிப்புணர்வுகளும் இது தொடர்பான கருத்தரங்குகளும் இன்றியமையாத தேவையாக உள்ளன.

முக்கியமான ஒன்று பூனைக்கு மணி கட்டுவது போல் காலம் பிந்தி யோசிக்கினம்  நெடுக்கரின் ராடான் வாய்வு சம்பந்தப்பட்ட ஆக்கத்தை யாழில் தேடவேண்டி உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர்களின் மரபணுக்கள் பரிசோதிக்கப்பட்டு.. எம் இனத்தை தாக்கும் புற்றுநோய்களுக்குரிய ஜீன்கள் கண்டறியப்படின்.. எதிர்காலத்தில் எம் சந்ததிகளை புற்றுநோய் தாக்கத்தில் இருந்தும் வலுவாக பாதுக்காக்கும் பொறிமுறையை நடைமுறைப்படுத்தலாம்.

ஆனால்.. எமது வெட்டிக் கெளரவங்களும்.. ஏட்டுச்சுரக்காய் படிப்புகளும்.. எமது இனத்துக்கு என்று தான் உதவி இருக்குது..???! 

தாய் மண்ணை நீங்கி வாழினும்.. தாய் மண்ணின் விடுதலையின் தேவையை உணர்ந்து வளர்ந்து வாழ்ந்து உழைத்த அன்புத் தங்கைக்கு கண்ணீரஞ்சலிகள்.

புலம்பெயர் இளையோர் சமூகம்.. இவரின் பாதையில் தடம் மாறாமல் பயணிக்கும் என்று நம்புவோமாக. 

 

  • கருத்துக்கள உறவுகள்

மிக இளம் வயதில், மரணம். மிகவும் சோகமானது.
அன்னாரின் மறைவுக்கு.... ஆழ்ந்த இரங்கல்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செல்வி. திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்கள் “தேசத்தின் இளஞ்சுடர்”என மதிப்பளிப்பு

On Feb 2, 2020

செல்வி. திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்கள் “தேசத்தின் இளஞ்சுடர்”என மதிப்பளிப்பு

இளையோர் அமைப்பின் பிரித்தானியாப் பொறுப்பாளர் செல்வி. திக்சிகா சிறிபாலகிருஸ்ணன்  அவர்கள், கடந்த 30.01.2020 அன்று உடல்நலம் பாதிப்படைந்த நிலையில் சாவடைந்தார் என்ற செய்தி எம் நெஞ்சங்களில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

WhatsApp-Image-2020-01-30-at-16.51.41-1.தமிழீழ விடுதலை நோக்கிய எமது செயற்பாட்டில் சிறுவயதில் இருந்தே தன்னை ஈடுபடுத்துவதில்  ஆர்வமிக்கவராக இருந்து, 2004ஆம் ஆண்டு இளையோர் அமைப்பின் உதவியாளராக செயற்பட்டு 2005ஆம் ஆண்டு செயற்பாட்டாளராக இணைத்துக்கொண்டவர்.

போராட்டத்தின் தேவையை உணர்ந்து விடுதலைசார் கருத்துருவாக்க விழிப்புணர்வுகளை நாடகங்கள், எழுச்சிநடனங்கள், எழுத்துருவாக்கங்கள் என பல்துறை வடிவங்களில் வெளிப்படுத்தி, எமது மக்களுக்கு மட்டுமல்லாது வேற்றின மக்களுக்கும் எடுத்துச்செல்வதில் பெரும்பங்காற்றியிருந்தார்.

தமிழீழ மண்ணில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழின அழிப்பை அனைத்துலக சமூகத்திடம் கொண்டுசெல்ல பல்வேறு வேலைத்திட்டங்களைத் திட்டமிட்டு செயலாற்றி, அதை பல் மொழிகளில் சமூகவலைத்தளங்கள் ஊடாகப் பரப்புரைகளை மேற்கொண்டதுடன் இளையோர் ஆதரவுத் தளத்தையும் வலுப்படுத்த இரவு, பகல் பாராது அயராது உழைத்தவராவார்.

இவரது ஆற்றலும், ஆளுமையும், தாயகப்பற்றுறுதியும் எப்போதுமே திடமானவை. 2009 ஆம் ஆண்டில் தாயகத்தில் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னரும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் சிந்தனைக்கமைவாக இளையோரின் தேவையை நன்குணர்ந்து புலம்பெயர் போராட்டங்கள் அனைத்திலும் பங்குபற்றியது மட்டுமல்லாது அதனை பொறுப்புடனும் செயற்படுத்தியிருந்தார்.

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%புலம் பெயர் தமிழர் வரலாற்றில் செல்வி. திக்சிகா அவர்களின்  விடுதலைச் செயற்பாடுகள் தமிழீழ வரலாற்றில் இடம்பெறும் என்பது திண்ணம். இன்று இளையோர் அமைப்பால் தொடரப்படுகின்ற தாயக விடுதலைப் பணிகளுக்கு இவரின் பங்களிப்பு ஒரு எடுத்துக்காட்டாகவே அமைகின்றது. நோய் வருத்தியபோதும் தளராமல் ஓய்வின்றி, தாயகவிடுதலைக் கனவோடு பணியாற்றிய இளையவளை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்களின்  துன்பத்தில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதுடன், அவர்களுக்கு எமது ஆறுதலையும்  தெரிவித்துக்கொள்கின்றோம். செல்வி. திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்களின் இனப்பற்று, விடுதலைப்பற்று, எம் தேசத்துக்கு அவர் வழங்கிய உயரிய பங்களிப்பிற்காக “தேசத்தின் இளஞ்சுடர்” என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்.
 

https://www.thaarakam.com/news/111597

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்......!  

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் செல்வி திக்சிகா  அவர்களுக்கு அஞ்சலிகள்.

தாயகத்தின் விடுதலைக்காக உழைத்தவர்களுக்கு அவர்களுக்கு உரிய கெளரவம் கொடுக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இந்த அனைத்துலகச் செயலகம் இன்று யாரால் யாரின் தேவைகளுக்காக இயங்குகின்றது அல்லது இயக்கப்படுகின்றது. 2009 ற்குப்பின்னர் பகுதிகளாகப்பிரிந்த தாயகப்பற்றாளர்களில் அவர்கள் சாகவடைந்தால் ஒரு பகுதியினருக்கு மட்டுமே மதிப்பளிக்கப்படுகின்றது. சரி அதெல்லாம் விட்டுவிடலாம்.

என்றுமே எமது மதிப்பிற்குரிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களும் அவருடன் தளபதிகள் பலரும் இறுதிப் போரில் வீரச்சாவடைந்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அவர்களின் வீரச்சாவினை இந்த அனைத்துலகத் தொடர்பகம் மறைப்பதன் காரணம் என்ன? அவர்களுக்கான உரிய மரியாதையை இதுவரை செய்யாததும் அந்த இயக்கத்தின் பெயரினை தமது சுயநலன்களுக்காகப் பாவிப்பதும் எந்த வகையில் சரியாக அமையும்?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விதுரன் said:

எமது மதிப்பிற்குரிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களும் அவருடன் தளபதிகள் பலரும் இறுதிப் போரில் வீரச்சாவடைந்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அவர்களின் வீரச்சாவினை இந்த அனைத்துலகத் தொடர்பகம் மறைப்பதன் காரணம் என்ன?

தொக்கு நிற்கும் கேள்விகளுக்கு நாங்களே விடை சொல்லி.. அதுக்கு மறைப்பு என்று சொல்லிக் கொள்வேண்டிய தேவை என்ன..?!

தேசிய தலைவருக்கு உள்ள மதிப்பை அனைத்துலகச் செயலகம் தான் வழங்கனுன்னு இல்லை. அது மக்கள் மனங்களில் எப்போதும் உள்ளதே. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விதுரன் said:

முதலில் செல்வி திக்சிகா  அவர்களுக்கு அஞ்சலிகள்.

தாயகத்தின் விடுதலைக்காக உழைத்தவர்களுக்கு அவர்களுக்கு உரிய கெளரவம் கொடுக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இந்த அனைத்துலகச் செயலகம் இன்று யாரால் யாரின் தேவைகளுக்காக இயங்குகின்றது அல்லது இயக்கப்படுகின்றது. 2009 ற்குப்பின்னர் பகுதிகளாகப்பிரிந்த தாயகப்பற்றாளர்களில் அவர்கள் சாகவடைந்தால் ஒரு பகுதியினருக்கு மட்டுமே மதிப்பளிக்கப்படுகின்றது. சரி அதெல்லாம் விட்டுவிடலாம்.

என்றுமே எமது மதிப்பிற்குரிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களும் அவருடன் தளபதிகள் பலரும் இறுதிப் போரில் வீரச்சாவடைந்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அவர்களின் வீரச்சாவினை இந்த அனைத்துலகத் தொடர்பகம் மறைப்பதன் காரணம் என்ன? அவர்களுக்கான உரிய மரியாதையை இதுவரை செய்யாததும் அந்த இயக்கத்தின் பெயரினை தமது சுயநலன்களுக்காகப் பாவிப்பதும் எந்த வகையில் சரியாக அமையும்?

விடுதலைப் புலிகளே பல மாவீரர்களின் வீரச்சாவுகளை அறிவிக்கவில்லை.

அனைத்துலக தொடர்பகத்துடன் இயங்குபவர்களுக்கு அவர்களால் மதிப்பளிக்கப்படுகிறது...

 

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் பிள்ளை திக்சிகாவின் சிறுவயது மரணம் துயர் தருகிறது.  தலை பணிந்து அஞ்சலிக்கிறேன். 

நண்பர் nedukkalapoovan   சொல்வதுபோல நமது இளையவர்களை பரவலாக  புற்றுநோய் தாக்குவது உண்மையாயின் அது எல்லோராலும் உடனடியாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். அரை நூற்றாண்டுக்கும் மேலான ஆய்வுகள் இலங்கை தமிழர் குறிப்பாக யாழ் தமிழர் மத்தியில் தற்கொலை விகிதம் மிக மிக உயர் மட்டத்தில் இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது. இத்தகைய விடயங்களையிட்டு ஒரு இனமாக நாம் தீவிர கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகும்.  

  • கருத்துக்கள உறவுகள்

இளவயதில் மறைந்தாலும் தாயக விடுதலைக்கான அவரின் செயற்பாடுகள் போற்றுதற்குரியது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.    

  • கருத்துக்கள உறவுகள்
On ‎2‎/‎1‎/‎2020 at 7:40 PM, பெருமாள் said:

ஏனிந்த வெறுப்பு ?

இந்த இளவயதில் பொறுப்பாளராக இருந்து தன்னால் முடிந்த தாயக  பயணத்தில் பங்காற்றியவர் மேல் .....................எனிவே தங்கை திக்சிவாகுக்கு கண்ணீர் அஞ்சலிகள் .

 

எனக்கு இந்த பெண் மீது எந்த வித கோபமோ ,வெறுப்போ  இல்லை ..இந்த தலையங்கம் சரியில்லை 
 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nedukkalapoovan said:

தொக்கு நிற்கும் கேள்விகளுக்கு நாங்களே விடை சொல்லி.. அதுக்கு மறைப்பு என்று சொல்லிக் கொள்வேண்டிய தேவை என்ன..?!

தேசிய தலைவருக்கு உள்ள மதிப்பை அனைத்துலகச் செயலகம் தான் வழங்கனுன்னு இல்லை. அது மக்கள் மனங்களில் எப்போதும் உள்ளதே. 

நெடுக்காலபோவன் தலைவருக்கும் ஈழப் போரட்டத்திற்காக தங்கள் உயிரை ஆகுதியாக்கியவர்களுக்கும் நான் நீங்கள் ஏன் இன்னமும் பல தனிநபர்களும் உரிய மரியாதையைும் கெளரவத்தையும் வழங்கித் தான் வருகின்றோம். தனி நபர்களைத் தாண்டி சமூகத்தினை வழி நடத்த என்று பல்வேறு அமைப்புகள் உள்ளன. 2009 ற்கு முற்பட்ட காலத்தில் தாயகத்தில் இருந்து இவைகள் ஒழுங்கமைக்கப்பட்டு சரியான முறையில் அனைத்தும் நெறிப்படுத்தப்பட்டன. 2009ற்குப்பின்னர் தான் தோன்றித் தனமாக சுயலாபங்களுக்காக ஒரு சமூகத்தினை இவர்கள் ஏமாற்றுவதை இனியும் தொடர்ந்து அனுமதிக்கப் போகின்றோமா?

21 hours ago, MEERA said:

விடுதலைப் புலிகளே பல மாவீரர்களின் வீரச்சாவுகளை அறிவிக்கவில்லை.

அனைத்துலக தொடர்பகத்துடன் இயங்குபவர்களுக்கு அவர்களால் மதிப்பளிக்கப்படுகிறது...

 

ஆம் விடுதலைப்புலிகளால் செய்யப்பட்ட சில தாக்குதல்களுக்கு உரிமை கோரப்பட்டதுமில்லை. அப்படி உரிமை கோரப்படாத தாக்குதலில் தங்களை ஆகுதியாக்கியவர்களின் பெயர்கள் வெளிப்படுத்தப்பட்டதுமில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் குடும்பத்திற்குக்கூட பல காலத்தின் பின் வீரச்சாவு என சொல்லப்பட்டதேயொழிய எங்கு வீரச்சாவடைந்தார்கள் என்ற தகவல் சொல்லப்பட்டதில்லை. ஆனால் பெயர்கள் வெளிப்படுத்தப்படாதபோதும் அவர்களுக்கு பெயரின்றி நினைவு நடுகற்கள் மாவீரர் துயிலுமில்லங்களில் நடப்பட்டு உரிய மரியாதை செய்யப்பட்டது.

இங்கு எனது கேள்வி தலைவர் வீரச்சாவு என்று தெரிந்தும் ஏன் இந்தச் சுமூகத்தினை தொடரந்து ஏமாற்றுகின்றார்கள் என்பதே.

Edited by விதுரன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விதுரன் said:

இங்கு எனது கேள்வி தலைவர் வீரச்சாவு என்று தெரிந்தும் ஏன் இந்தச் சுமூகத்தினை தொடரந்து ஏமாற்றுகின்றார்கள் என்பதே.

மன உளவியல் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.