Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது ஆபத்தா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பல கலாசாரங்களில் சிறுவர்கள் நின்றுகொண்டே சிறுநீர் கழிக்க வேண்டும் என்றும், சிறுமிகள் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.

இதுவே பரவலாக சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஆனால் இது குறித்து பல சுகாதார அதிகாரிகள் தற்போது கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

சுத்தம் மற்றும் சுகாதாரத்தை மனதில் கொண்டு ஆண்கள் எவ்வாறு சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கோரப்பட்டாலும், பலருக்கும் இது சம உரிமை சார்ந்த விஷயமாக உள்ளது.

எனவே எது சரி? அதைவிட எவ்வாறு சிறுநீர் கழித்தால் ஆணுக்கு சிறந்தது?

பல ஆண்களுக்கு நின்று கொண்டே சிறுநீர் கழிப்பது சிரமமாகதான் இருக்கும். ஆனால் அதே சமயம் அதுதான் உடனே செய்யக்கூடியது, அதாவது நின்று கொண்டே சிறுநீர் கழிப்பதற்கு அதிக நேரம் தேவைப்படாது. அதனால்தான் ஆண்கள் கழிவறையில் அதிக கூட்டம் காணப்படுவதில்லை.

ஆண்கள் வேகமாக சிறுநீர் கழிப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

ஒன்று, அவர்கள் ஆடைகளை அகற்ற வேண்டாம்.

இரண்டாவது ஆண்கள் சிறுநீர் கழிக்கும் யூரினல் எனப்படும் கழிவறைகள் குறைந்த இடத்தில் அதிகம் அமைக்கப்படுவதால் மிக குறைந்த நேரமே ஆகும்.

ஆண்கள் கழிவறைபடத்தின் காப்புரிமை Getty Images

பல ஆய்வுகள் நாம் சிறுநீர் கழிக்கும் நிலையை பொறுத்து நமது சிறுநீரின் அளவு மாறுபடும் என கூறுகின்றன.

நாம் எவ்வாறு சிறுநீர் கழிக்கிறோம் என்று பார்ப்போம்; நமது சிறுநீர் சிறுநீரகத்தில் உருவாகிறது. அதுதான் நமது ரத்தத்தில் உள்ள கழிவுகளை வடிகட்டுகிறது.

அதன்பின் சிறுநீரானது, சீறுநீர் பையில் சேகரித்து வைக்கப்படும்; அதனால்தான் நாம் அன்றாட வேலைகளில் கவனம் செலுத்த முடிகிறது.

சிறுநீர் பையின் கொள்ளளவு 300 மில்லிட்டர் முதல் 600 மில்லி லிட்டர் வரை இருந்தபோதும், அது மூன்றில் இரண்டு பங்கு நிரம்பியவுடன் நாம் சிறுநீர் கழித்துவிடுவோம்.

நாம் எப்போது கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்றும், எப்போது சிறுநீரை அடக்கி வைத்துக் கொள்ளலாம் என்றும் சிறுநீர் பை எச்சரிக்கை விடுக்கும்.

ஆண்கள் கழிவறைபடத்தின் காப்புரிமை Getty Images

நாம் ஒரு வசதியான கோணத்தில் உட்கார்ந்தால், சிறுநீர் பையிலிருந்து சிறுநீர் வெளியேற அது உதவும் தசைகளையும் தளர்வாக்கும்.

அதன்பின் சிறுநீர் பை சுருங்கி, அது யுரித்ராவில் (சிறுநீர் பையையும் ஆண்குறியையும் இணைக்கும் பகுதி) வழியாக உடம்பிலிருந்து வெளியேறும்.

ஒரு ஆரோக்கியமான மனிதர், சிரமப்பட்டு சிறுநீர் கழிக்க கூடாது.

ஆனால் சில சமயங்களில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ சிறுநீர் கழிப்பதில் ஆண்களுக்கு பிரச்சனை ஏற்படும்.

ஆண்கள் கழிவறைபடத்தின் காப்புரிமை Getty Images

விரைவீக்கம் உள்ளவர்கள் சிறுநீர் கழிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் அவர்கள் உட்கார்ந்து சிறுநீர் கழித்தால் அது பயன் தரும்.

உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும்போது யுரித்ரா பகுதியில் அழுத்தம் இலகுவாகி சிறுநீர் கழிப்பது இலகுவாகிறது.

நீங்கள் என்ன செய்யலாம்?

பிரிட்டனில், தேசிய சுகாதார சேவை, சிறுநீர் கழிப்பதில் சிக்கல் உள்ள ஆண்கள், அமைதியான இடத்தில் அமர்ந்தபடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

அமர்ந்தபடி சிறுநீர் கழித்தால், அது பிராஸ்டேட் புற்றுநோயை தடுக்கும் என்றும், அது மனிதரின் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால் அது சரி என்பதை நிரூபிக்கும் ஆய்வு எதுவும் இல்லை.

2012ஆம் ஆண்டு ஸ்வீடனில் அரசியல்வாதி ஒருவர் பொது கழிப்பிடங்களில் ஆண்கள் உட்கார்ந்து கொண்டு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற விவாதத்தை முன் வைத்தார். அதிலிருந்து பல ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக ஜெர்மனியில் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

ஆண்கள் கழிவறைபடத்தின் காப்புரிமை Getty Images

கழிவறைகளில் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற பச்சை நிற குறியீடும், நின்று சிறுநீர் கழிக்க கூடாது என சிவப்பு நிற குறியீடும் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் சில இடங்களில் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது ஆண்மைத் தன்மை நிறைந்தது என்றும் பார்க்கப்படுகிறது.

சில வீடுகளிலும் கூட இந்த குறியீடுகள் வைக்கப்பட்டிருக்கும். 2015ஆம் ஆண்டு ஜெர்மனியில், வீட்டு உரிமையாளர் ஒருவர், அந்த வீட்டில் குடியிருந்தவர் சிறுநீர் கழித்து தனது கழிவறையின் தரையை நாசாமாக்கிவிட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆனால் அது சட்டப்படி செல்லாது என்றும், நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது இன்னும் முறையில் உள்ளது என்றும் நீதிபதி தெரிவித்துவிட்டார்.https://www.bbc.com/tamil/science-51447212

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிழம்பு said:

பல ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக ஜெர்மனியில் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

பிழம்பு, குழம்பிப் போயிருக்கிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kavi arunasalam said:

பிழம்பு, குழம்பிப் போயிருக்கிறேன்

அந்த தமிழ் பிபிசியே குழம்பேல்லையாம்.நீங்கள்  வேறை.....😂

  • கருத்துக்கள உறவுகள்

பாத்ரூமில் ஒரு பாய் ஒன்று போட்டுவிட்டால் படுத்திருந்து உச்சா போகலாம் ....

இந்த கேவலமான ஆய்வு எல்லாம் வரி ஏய்ப்பு மற்றும் நண்கொடை பணங்களை 
ஊதியமாக பெற்றுக்கொண்டே நடக்கின்றது என்பதுதான் சிந்திக்க வேண்டியது 

  • கருத்துக்கள உறவுகள்

நான் சுவரில் வரைந்த ஓவியங்கள் எல்லாம் வீணா

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für wc  

ஆண்களின், சிறுநீர் உறுப்பு, நின்று கொண்டு... 
சிறுநீர் கழிப்பதற்காகவே  இறைவனால் வடிவமைக்கப் பட்டது.
அதில் இருந்து கொண்டு...  உச்சா போனால், 
முன்னுக்கு முட்டி...  தொற்று நோய்கள் வர வாய்ய்புக்கள் அதிகம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für wc  

ஆண்களின், சிறுநீர் உறுப்பு, நின்று கொண்டு... 
சிறுநீர் கழிப்பதற்காகவே  இறைவனால் வடிவமைக்கப் பட்டது.

அதில் இருந்து கொண்டு...  உச்சா போனால், 
முன்னுக்கு முட்டி...  தொற்று நோய்கள் வர வாய்ய்புக்கள் அதிகம்.

அப்போ கொழந்தை உற்பத்திக்கு இல்லையா சார்? 😎

  • கருத்துக்கள உறவுகள்

பலாலி வீதியும் கந்தர்மடம் வீதியும் சந்திப்பில்  உள்ல ஒரு கடையுன் முன் உள்ள சுவர் மூலையில் பெரிய எழுத்தில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.

"இங்கே சிறுநீர் கழிப்பவர்கள் வம்பில் (?) பிறந்தவர்கள்"

(கடைக்காறர் வாழ்க்கை வெறுத்துப்போய் எழுதியிருப்பார் போல)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Kapithan said:

பலாலி வீதியும் கந்தர்மடம் வீதியும் சந்திப்பில்  உள்ல ஒரு கடையுன் முன் உள்ள சுவர் மூலையில் பெரிய எழுத்தில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.

"இங்கே சிறுநீர் கழிப்பவர்கள் வம்பில் (?) பிறந்தவர்கள்"

(கடைக்காறர் வாழ்க்கை வெறுத்துப்போய் எழுதியிருப்பார் போல)

ஆண்சிங்கங்கள்  நிண்டு கொண்டு அந்திமழை பொழியிறதாலை ஊரிலை இருக்கிற ஒரு சில பள்ளிக்கூட வேலியள்ளை நிக்கிற பூவரச மரம் கிளுவை மரமெல்லாம்  அணுகுண்டு வெக்கையிலை கருகினமாதிரி கருகிப்போய் நிக்கும். அந்த ஏரியாவிலை ஒரு புல் பூண்டு கூட முளைக்காது கண்டியளோ.

ஆம்பிளையள் ஏன் ஒண்டுக்கு போறதெண்டால் மரம்,மதில்,வேலிப்பக்கத்தை தேடிப்போறவையள் எண்டு ஆருக்கும் காரணம் தெரியுமோ?

Bildergebnis für männer pinkel im indian 

Bildergebnis für männer pinkel im indian

Bildergebnis für männer pinkel im indian

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

எல்லாம் ஒரு பாதுகாப்பிற்காகத்தான்.

19 hours ago, நந்தன் said:

நான் சுவரில் வரைந்த ஓவியங்கள் எல்லாம் வீணா

ஓவியம் அல்ல (கவிஞனின்) கிறுக்கல்கள்.😜

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kapithan said:

பலாலி வீதியும் கந்தர்மடம் வீதியும் சந்திப்பில்  உள்ல ஒரு கடையுன் முன் உள்ள சுவர் மூலையில் பெரிய எழுத்தில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.

"இங்கே சிறுநீர் கழிப்பவர்கள் வம்பில் (?) பிறந்தவர்கள்"

(கடைக்காறர் வாழ்க்கை வெறுத்துப்போய் எழுதியிருப்பார் போல)

அண்ண தெளிவா சொல்லுங்கோ, அரசடி சந்தியா ,அம்மன் றோட்டா இல்ல நாவலர் வீதி சந்தியா  எனக்கு நெஞ்சு பக்கு பக்கு எண்டு இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, நந்தன் said:

அண்ண தெளிவா சொல்லுங்கோ, அரசடி சந்தியா ,அம்மன் றோட்டா இல்ல நாவலர் வீதி சந்தியா  எனக்கு நெஞ்சு பக்கு பக்கு எண்டு இருக்கு

பதற வேண்டாம். 

அது நாவலர் வீதி,  பலாலி றோட் சந்தியில் ஒரு லோன்றிக்கு முன் எண்டு ஞாபகம். சுவரில் "இங்கே  சிறுநீர் (அது என்ன சிறுநீர் ? அப்ப பெருநீர் எண்டு ஏதும் இருக்கோ?) கழிக்காதீர்கள்" என எழுதி இருந்தது. ஆனால் சுவர் முழங்கால் அளவு உயரத்தில இருந்து ஒரே கறுப்புத்தான். பாவம் லோன்றிக்காறன். அவன்தான் தாக்குப் பிடிக்க ஏலாமல் எழுதியிருப்பான் எண்டு நினைக்கிறன்.

நந்தன்,  நீர் ஏதும் அந்தப் பக்கம் அவசரத்துக்கு ஒதுங்கின நீரோ ? பதட்டப்படுகிறீர் 😜

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

அப்போ கொழந்தை உற்பத்திக்கு இல்லையா சார்? 😎

அண்ணே.... குழந்தை உற்பத்தியை,  வாழ்க்கையிலை  ஒரு மனிசன், 
இரண்டு மூன்று தரம் தான் பாவிப்பான்.

ஆனால்... உச்சா, அப்படியில்லையே...  பிறந்ததில் இருந்து இறக்கும் வரைக்கும்,
ஒரு நாளைக்கு... பதினைஞ்சு தரமாவது போய்க் கொண்டே இருக்க வேணும்.

ஆனபடியால்... அந்த அந்த விசயத்திலை, கவனமாக அதை பாவிக்க வேணும்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kapithan said:

பலாலி வீதியும் கந்தர்மடம் வீதியும் சந்திப்பில்  உள்ல ஒரு கடையுன் முன் உள்ள சுவர் மூலையில் பெரிய எழுத்தில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.

"இங்கே சிறுநீர் கழிப்பவர்கள் வம்பில் (?) பிறந்தவர்கள்"

(கடைக்காறர் வாழ்க்கை வெறுத்துப்போய் எழுதியிருப்பார் போல)

1 hour ago, நந்தன் said:

அண்ண தெளிவா சொல்லுங்கோ, அரசடி சந்தியா ,அம்மன் றோட்டா இல்ல நாவலர் வீதி சந்தியா  எனக்கு நெஞ்சு பக்கு பக்கு எண்டு இருக்கு

அட.... கபிதனும், நந்தனும்..... நம்ம ஊரைப் பற்றி தெரிந்து வைத்திருப்பது, ஆச்சரியமாக உள்ளது. :grin:

சுவி... கெதியா 🚴‍♀️ இங்கை ஓடி :140_runner: வாங்கோ.... 🤣

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தையாய் படுத்திருந்தால் பாயை நனைக்காமல் இருப்பதற்கும் வளர்ந்தபின் கால்களை காற்சட்டைகளை ஈரமாக்காமல் இருப்பதற்குத்தான் குறிப்பாக ஆண்களுக்கு அது அந்தரத்தில் தொங்கிறது போல் வடிவமைக்கப் பட்டுள்ளது.வேறொன்றுமில்லை......!    😂

  • கருத்துக்கள உறவுகள்

பரம்பரை பரம்பரையாக செய்த ஒரு செயலை எந்த கொம்பனாலும் மாற்ற முடியாது....கண்டியளோ
 
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் இருந்து சுச்சா அடிக்க வேண்டுமானால் மற்றப் பக்கமாய் திரும்பி இருக்க வேண்டும்tw_lol: 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரதி said:

ஆண்கள் இருந்து சுச்சா அடிக்க வேண்டுமானால் மற்றப் பக்கமாய் திரும்பி இருக்க வேண்டும்tw_lol: 

Bildergebnis für snake dance gif

நாதர்முடி மேல், இருக்கும்... நல்ல பாம்பை, சோதிக்காதீர்கள்.  🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எங்க தாத்தா ஒருவர் சொல்லுவார்..

தம்பி.... உந்த வயசில நீ சுச்சா அடிச்சால்.. பாறையும் பிளவுபடணுன்னு.

எனவே.. நின்று கொண்டு சுச்சா அடிச்சவன் எல்லாம்... நூறாண்டு வாழ்ந்திருக்க.. குந்தி இருந்து சுச்சா அடிப்பவர்கள்.. முழங்கால் வலியால் வாடுவதுண்டு. தேவையா..??!

பெண்கள் நின்று கொண்டு சுச்சா அடிக்கலாம். ஆனால் அடித்தால் கால் நனையும் என்பதால்.. குந்தி இருந்து அடிக்கக் கற்றுக் கொடுக்கப்படுகின்றனர். அதற்கு காரணம்.. சுய சுகாதாரம் தான். 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் என்ன என்ன மாதிரி ஆராச்சிகள் எல்லாம் வரப்போகுதோ ஆண்டவா.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nedukkalapoovan said:

எங்க தாத்தா ஒருவர் சொல்லுவார்..

தம்பி.... உந்த வயசில நீ சுச்சா அடிச்சால்.. பாறையும் பிளவுபடணுன்னு.

எனவே.. நின்று கொண்டு சுச்சா அடிச்சவன் எல்லாம்... நூறாண்டு வாழ்ந்திருக்க.. குந்தி இருந்து சுச்சா அடிப்பவர்கள்.. முழங்கால் வலியால் வாடுவதுண்டு. தேவையா..??!

பெண்கள் நின்று கொண்டு சுச்சா அடிக்கலாம். ஆனால் அடித்தால் கால் நனையும் என்பதால்.. குந்தி இருந்து அடிக்கக் கற்றுக் கொடுக்கப்படுகின்றனர். அதற்கு காரணம்.. சுய சுகாதாரம் தான். 

உங்க தாத்தா காலத்தில்  பின் வளவுக்குள் நின்று அடிப்பதை சொல்லி இருப்பார் ...இப்ப அப்படியா? 
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.