Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீதிகளின் சைவப் பெயர்களை மாற்றும் முயற்சி- ஊர்காவற்றுறை பிரதேச சபையிடம் சைவ மகாசபை அவசர வேண்டுகோள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

All-Ceylon-Saiva-Council-1.jpg

வீதிகளின் சைவப் பெயர்களை மாற்றும் முயற்சி- ஊர்காவற்றுறை பிரதேச சபையிடம் சைவ மகாசபை அவசர வேண்டுகோள்!

ஊர்காவற்றுறை பிரதேச சபைக்குட்பட்ட சில வீதிகளின் சைவப் பெயர்களை மாற்று மதப் பெயர்களாகவோ பொதுப் பெயர்களாவோ மாற்றுவதற்கு பிரதேச சபை நடவடிக்கை எடுத்துள்ளமை வருத்தம் அளிக்கின்றது என அகில இலங்கை சைவ மகா சபை தெரிவித்துள்ளது.

மேற்படி வீதிகளின் பெயர் மாற்றம் தொடர்பாக ஊர்காவற்றுறை பிரதேச சபை விளம்பரப்படுத்தியுள்ளமை தொடர்பாக சைவ மகா சபை ஆட்சேபனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “தீவகத்தின், பாரம்பரியம்மிக்க துறைமுக நகரான காவலூர் பண்டைய அழகிய சைவத் தமிழ் கிராமங்களையும் அந்தியராட்சியின் பின் ஏற்பட்ட மாற்றங்களை உள்வாங்கி கத்தோலிக்க மக்களைக் கொண்ட கிராமங்களையும் கொண்டமைந்த பிரதேசமாகும்.

இந்நிலையில் அங்குள்ள சைவ ஆலய வீதிப் பெயர்கள் சில வருடங்களுக்கு முன்னர் தான்தோன்றித்தனமாக மாற்றப்பட்டு மாற்று மதப் பெயரப் பலகைகள் இடப்பட்டுள்ளன. பதிவேடுகளில் உள்ள பெயர்களுக்கு முரணாக சபையினதோ மக்களினதோ அனுமதியின்றி தவறாக அப்போது செய்யப்பட்ட இந்தப் பெயர் மாற்றங்களை, இப்போது திட்டமிட்டு சட்டபூர்வமாக மாற்ற முனைவது தவறான முன்னுதாரணமாகும்.

ஊர்காவற்றுறையில் சைவர்களும் கத்தோலிக்கர்களும் மத நல்லிணக்த்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சைவ ஆலயத்தின் பெயரைத் தாங்கிய வீதிகளின் பெயர்களை மாற்றம் செய்ய முனைவது மக்களின் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் செயலாகும்.

எனவே, பிழையை சரியாக்கும் தவறான முயற்சியை கைவிடுமாறும் பதிவேடுகளில் தொன்றுதொட்டு வழக்கிலிருந்த உண்மையான, பதிவேடுகளில் உள்ளமை போன்று பெயர்களைக் காட்சிப்படுத்துமாறும் சைவத்தமிழ் மக்கள் சார்பாக சைவ மகா சபையினராகிய நாங்கள் ஊர்காவற்றுறை பிரதேச சபையை கேட்டுக்கொள்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

http://athavannews.com/வீதிகளின்-சைவப்-பெயர்களை/

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில வீதியை திருத்திறாய்களோ இல்லையோ.. மும்மொழியில்.. வீதிக்கு பெயர் பலகை நாட்டுவதில் குறியாக இருக்கிறார்கள். அது என்னவோ நல்லம் தான்.. ஆனால்.. எதுக்கு உள்ள வரலாற்றுப் பெயர்களை மாற்ற வேண்டும். ??!

அதே போல்.. நாலு வீட்டை அரையும் குறையுமாகக் கட்டிவிட்டு.. அதுக்கு பளிங்குக்கல்லில்.. அங்குரார்ப்பண நினைவுக் கல் வைக்கிறார்கள். எல்லாம் நம்ம அத்தியடிக் குத்தியர் தன் பெயர் விளங்க முன்னெடுக்கிறாராம்.

காவலூரில்.. அவருக்கு வேண்டிய ஆட்கள் உள்ள இடங்களில்.. வீதி விளங்குகள் போடப்பட்டிருக்கும்.. மற்றைய பகுதிகள்.. இருட்டாக ஏன்.. வீதியோ மரங்களைக் கூட  வெட்டாமல் விட்டுள்ளனராம். 

ஐயாவுக்கு வாக்குப் போட்டால் தான்.. மிச்ச வேலை நடக்குமாம். இதில.. இவர் எல்லாம் மக்கள் பிரதிநிதி அமைச்சர் என்று அலைவது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அந்த அறிக்கையில், “தீவகத்தின், பாரம்பரியம்மிக்க துறைமுக நகரான காவலூர் பண்டைய அழகிய சைவத் தமிழ் கிராமங்களையும் அந்தியராட்சியின் பின் ஏற்பட்ட மாற்றங்களை உள்வாங்கி கத்தோலிக்க மக்களைக் கொண்ட கிராமங்களையும் கொண்டமைந்த பிரதேசமாகும்.

இந்நிலையில் அங்குள்ள சைவ ஆலய வீதிப் பெயர்கள் சில வருடங்களுக்கு முன்னர் தான்தோன்றித்தனமாக மாற்றப்பட்டு மாற்று மதப் பெயரப் பலகைகள் இடப்பட்டுள்ளன.

கத்தோலிக்க மக்கள் இப்போது அங்கே வாழ்வதால் அவர்கள் தமது மதப்பெயர்களை வீதிகளுக்கு வைக்கிறார்கள். சைவ மக்கள் அங்கே மீண்டும் சென்று காணிகளை கத்தோலிக்கரிடம் இருந்து போதுமான பணம் கொடுத்து வாங்கி, மீண்டும் இந்த கிராமங்களை சைவ கிராமங்களாக மாற்றினால் வீதி பெயர்களும் மீண்டும் சைவமாகும். இது முடியாவிட்டால், உள்ள கோவணம் ஒன்றே காணும் என்று யோகர் சுவாமிகள் சொன்னது போல “சும்மா இருப்பதே சுகம்” என்று ஒரு மரத்தடியில் அமர்ந்து தவம் செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, கற்பகதரு said:

கத்தோலிக்க மக்கள் இப்போது அங்கே வாழ்வதால் அவர்கள் தமது மதப்பெயர்களை வீதிகளுக்கு வைக்கிறார்கள். சைவ மக்கள் அங்கே மீண்டும் சென்று காணிகளை கத்தோலிக்கரிடம் இருந்து போதுமான பணம் கொடுத்து வாங்கி, மீண்டும் இந்த கிராமங்களை சைவ கிராமங்களாக மாற்றினால் வீதி பெயர்களும் மீண்டும் சைவமாகும். இது முடியாவிட்டால், உள்ள கோவணம் ஒன்றே காணும் என்று யோகர் சுவாமிகள் சொன்னது போல “சும்மா இருப்பதே சுகம்” என்று ஒரு மரத்தடியில் அமர்ந்து தவம் செய்யுங்கள்.

யூட் உங்கள் கருத்தும் பொதுபல சேனவின் கருத்தும் ஒன்று தான்.

காவலூரில்.. இப்பவும் எல்லா மக்களும் கலந்து தான் வாழ்கின்றனர். ஒற்றுமையாகவும் வாழ்கின்றனர். இப்பவும்.. சென் அன்ரனிஸ் கல்லூரியில்.. சிவத்தம்பியின் பொடியும் படிக்குது.. யோசப்பின் பெட்டையும் படிக்குது.

அந்த ஊரில் இருந்த மக்கள் போர் சூழலால் வெளியேற்றப்பட்டார்கள். அநேகர் பிற இடங்களுக்கும்.. வெளிநாடுகளுக்கும் சென்று நிரந்தரமாகக் குடியேறி விட்டனர்.

ஆனாலும்.. விடுமுறை காலங்கள் தங்களில் மண்ணை இடிந்து போய் கிடக்கும் வீடுகளை பாழடைந்து கிடக்கும் மண்டபங்களை காடு பத்திக் கிடக்கும் காணிகளை பார்க்க மகிழுந்தில்.. வான்களில்.. ஆட்டோக்களில் வந்து கொண்டு தான் உள்ளார்கள்.

சில வெளிநாட்டு நம்மவர்கள் வீடுகளை காணிகளை புனரமைத்து உள்ளூர் மக்களுக்கு வழங்கி உள்ளனர். இன்னும் சிலர் வீடுகளை அமைக்கின்றனர். இன்னும் சிலர் வீடுகளை திருத்தி அமைத்து சிங்கள மற்றும் உல்லாசப் பயணிகள் தங்கி நின்று செல்லும் இடமாகப் பாவிக்க வழங்கி வருகின்றனர். இன்னும் சிலர் காணிகளை கூறு போட்டு விற்கவும் செய்கின்றனர். இதில் இன்ன மதம் தான் செய்யுது என்றில்லை. எல்லோரும் அவரவர் வசதிக்கு செய்கிறார்கள். 

அதுபோக ஈபிடிபி அடாவடி வேற. வர்த்தர்கள் செய்த வியாபாரங்களையும் கைவிட்டு விட்டு யாழ் நகர் நோக்கி ஓடுகின்றனர். 

இப்படி சூழல் இருக்க..

தமிழ் பிரேதச செயலர் ஒருவரே  அங்கு பதவியிலும் இருக்க.. எதுக்கு வரலாற்றுப் பெயர்களை மாற்ற வேண்டும். 

கோவில்களும்.. தேவாலயங்களும் புதுப்பொழிவுடன் தான் காணப்படுகின்றன. வீடுகள் காணிகள் வீதிகள்.. எப்படிக் கிடந்தாலும். 

Edited by nedukkalapoovan

சைவ தமிழர்களும் கிறிஸ்த்தவ தமிழர்களும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. திட்டமிட்ட முறையில் இரண்டு தரப்பினருக்கும் இடையில் முரண்பாடுகளை விளைவிக்க பல குழுக்கள் களம் இறங்கி உள்ளன. இதில் பிரதானமானவர்கள் மொட்டு கட்சி,வீணை கட்சி மற்றும் வடக்கின் அடாவடி மினிஸ்ட்டரின் கட்சி.இவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு மாட்டுப்படாமல் இருப்பது தமிழஎஇன் மிக முக்கியமான கடமை.

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nedukkalapoovan said:

தமிழ் பிரேதச செயலர் ஒருவரே  அங்கு பதவியிலும் இருக்க.. எதுக்கு வரலாற்றுப் பெயர்களை மாற்ற வேண்டும். 

காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை மக்கள் எதிர்பார்ப்பது வழக்கமானதே. நிலைமைகள் மாறும் போது பெயர்களும் அதற்கு தக மாற்றம் அடைகின்றன. உதாரணமாக, வரலாற்றில் நாகநாடு என்று அறியப்பட்ட பிரதேசத்தை  பின்னர் யாழ் பாடி பாணன் பரிசாக பெற்று தனது மக்களை கொண்டு வந்து குடியேற்றி யாழ்ப்பாணம் ஆக்கி விட்டான். இங்கே வாழ்ந்த பூர்வீக நாக மக்களுக்காக குரல் கொடுக்க அன்றும் யாரும் இருக்கவில்லை, இன்றும் எவரும் இல்லை.

 தமிழ் பிரேதச செயலர் பதவியில் இருப்பதால் அவர் தமிழ் பேசும் மக்களுடன் உரையாடி அவர்களின் எதிர்பார்ப்பின் படி செயற்படுவார் என்று எதிர்பார்க்கலாம்.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்

மத ரீதியான எந்த வித பேதங்களும் எமது சபையினால் மேற்கொள்ளப்படுவதில்லை -ஊர்காவற்றுறை பிரதேச சபை

மத ரீதியான எந்த வித பேதங்களும் எமது சபையினால் மேற்கொள்ளப்படுவதில்லை. அனைவரும் சமமாகவே எம்மால் பார்க்கப்படுகின்றது. வீதி இலக்கம் மாற்றப்பட்டமை தொடர்பில் குறித்த விளம்பரம் பெயர் மாற்றம் என பிரசுரிக்கபட்டமை தொடர்பில் திருத்தமான பதில் விளம்பரம் விரைவில் செய்யப்படும் என ஊர்காவற்றுறை பிரதேச சபை தெரிவித்துள்ளது.

ஊர்காவற்றுறை முகாம் வீதியில் அமைந்துள்ள கதிரேசன் கோவில் வீதிக்கும் பண்ணை வீதியில் அமைந்துள்ள சென் மேரிஸ் வீதிக்கு எந்த தொடர்பும் இல்லை இரண்டுக்கும் இரண்டு கிலோ மீற்றர் வரையான தூர வித்தியாசம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. எந்த சைவ வீதிகளும் கிறிஸ்தவ பெயரால் மாற்றம் செய்யப்படவில்லை என்பதே தெளிவு. எனவே உண்மையான நிலவரம் அறிந்து கொண்டு செயல்பட பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் பொது அமைப்புகளை தயவுடன் கேட்டு கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெயர் மற்றம் செய்யும் போது குறித்த வீதி வாழ் மக்கள் பொது அமைப்புகள் ஆலோசனை அபிபிராயம் பெறப்பட்டு எந்த வித சிக்கலும் இல்லாமலே இடம் பெற்றது. குழப்பமான வீதிகள் இன்று வரை பெயர் மற்றம் செய்யப்படவில்லை.இவை தவிர முன்னர் குறிப்பிட்ட வகையில் வீதிகளே இல்லாமல் பெயர் குறிப்பிடபட்டு இருந்த வீதிகளுக்கு வழங்கபட்ட வீதி இலக்கங்கள் புதிதாக பதியபட்ட வீதிகளுக்கு வழங்கபட்டது.

வீதி பெயர் பதிவு புத்தகத்தில் காணபட்ட உண்மையில் பிரதேசத்தில் காணப்படாத வீதி கதிரேசன் கோவில் முதலாம் ஒழுங்கைக்குரிய இலக்கம் புனித மரியாள் வீதியில் ஆரம்பித்து சென் ஜோசெப் வீதியில் நிறைவடையும் புதிதாக பதியபட்ட புனித மரியாள் முதலாம் ஒழுங்கை என பெயரிடப்பட்ட வீதிக்கு வழங்கபட்டது.அந்த வகையிலான மாற்றங்கள் தொடர்பிலே தினக்குரல் பத்திரிகையில் பெயர் மாற்றம் என குறிப்பிடபட்டு விளம்பரமாக பிரசுரிக்கபட்டு இருந்தது. எந்த வீதியின் பெயரும் மாற்றம் செய்யவில்லை. பெயர் குறிப்பிடப்பட்ட பதிவு இலக்கங்களுக்கான பெயர் மாற்றங்கள் தான் பத்திரிகையில் குறிப்பிடபட்டு இருந்தது. இங்கு எந்த வீதியும் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. எனவே தகவல் எதையும் தெளிவில்லாமல் குழப்பத்தையும் சபைக்கு அபகீர்த்தியும் ஏற்படுத்த வேண்டாம் என அன்பாக கேட்டு கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை பிரதேச சபை எல்லைக்குள் பிரதேச சபைக்கு சொந்தமான வீதிகள் தொடர்பில் முன்னர் தயாரிக்க பட்ட வீதி பதிவு புத்தகத்தில் உள்ள வகையில் ஒவ்வொரு வீதிகளுக்கும் இலக்கங்கள் வழங்கபட்டு இருந்தமை குறிப்பிட தக்கது. இராணுவ கட்டுப்பாட்டு பகுதி மற்றும் ஆட்களற்ற பகுதி என்பன தவிர்த்த ஏனைய பகுதியில் இனம் காணபட்ட வீதிகள் பெயர் மற்றும் இலக்கங்கள் வழங்கப்பட்டு வீதி பதிவு புத்தகம் தயாரிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)
 

http://www.samakalam.com/செய்திகள்/மத-ரீதியான-எந்த-வித-பேதங்/

இலங்கையே வத்திக்கான் கிழக்கிஸ்தான் புத்திஸ்தான் ஆக போகிறது முன்றுபக்கத்திலும் மதம் மாறுவது பழைய இந்துக்களின் வம்சம் தானே இதில தெருவும் சந்தியும் தேவையா??😜😜🤣🤣😂😎👌

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

எனவே தகவல் எதையும் தெளிவில்லாமல் குழப்பத்தையும் சபைக்கு அபகீர்த்தியும் ஏற்படுத்த வேண்டாம் என அன்பாக கேட்டு கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நீங்கள் பெயர்மாற்றம்   செய்யாவிட்டாலும்,  அவசரமாக ஒரு மதக்கலவரம் தமிழர் பிரதேசங்களில்  தேவைப்படுகிறது சில குழப்பவாதிகளுக்கு. மத்திக்கு முண்டு குடுக்க.

தமிழ் மக்களின் பழமை பாரம்பரியம் முதலியவற்றை மாற்ற முயற்சிக்கும் அற்பசொற்ப சலுகைகளுக்கு சோரம்போன விஷமிகளின் செயல் கண்டிக்கத்தக்கது.
தமிழ் மக்கள் மத்தியில் ஊடுருவியுள்ள இந்த விஷமிகள் பற்றி மிக எச்சரிக்கையாக இருக்க வேணும். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Rajesh said:

தமிழ் மக்களின் பழமை பாரம்பரியம் முதலியவற்றை மாற்ற முயற்சிக்கும் அற்பசொற்ப சலுகைகளுக்கு சோரம்போன விஷமிகளின் செயல் கண்டிக்கத்தக்கது.
தமிழ் மக்கள் மத்தியில் ஊடுருவியுள்ள இந்த விஷமிகள் பற்றி மிக எச்சரிக்கையாக இருக்க வேணும். 

தமிழ் மக்கள் பாரம்பரியமாக அணிந்து வந்த கச்சைக்கு மேலாக காற்சட்டை அணியும் விஷமிகளை அடையாளம் கண்டு அனைவரதும் காற்சட்டைகளை களற்றிவிட்டு பாரம்பரிய உடையான கச்சையை மட்டுமே எமது பிரதேசத்தில் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/19/2020 at 9:46 AM, கற்பகதரு said:

தமிழ் மக்கள் பாரம்பரியமாக அணிந்து வந்த கச்சைக்கு மேலாக காற்சட்டை அணியும் விஷமிகளை அடையாளம் கண்டு அனைவரதும் காற்சட்டைகளை களற்றிவிட்டு பாரம்பரிய உடையான கச்சையை மட்டுமே எமது பிரதேசத்தில் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் இப்போதுள்ள இடங்களிலும்(வெளிநாடுகளில்) பல வீதிகளிலும் ஒழுங்கைகளிலும் நம்மவர்களே கூடிய அளவில் இருக்கிறார்கள் என்பதற்காக பெயரை மாற்றுங்கள் என்று கேட்டால் வெள்ளைக்காரன் விடுவானோ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

நீங்கள் இப்போதுள்ள இடங்களிலும்(வெளிநாடுகளில்) பல வீதிகளிலும் ஒழுங்கைகளிலும் நம்மவர்களே கூடிய அளவில் இருக்கிறார்கள் என்பதற்காக பெயரை மாற்றுங்கள் என்று கேட்டால் வெள்ளைக்காரன் விடுவானோ?

கேள்வி இடக்கு முடக்காக இருப்பதனால் பதிலும் இடக்கு முடக்காகத்தான் இருக்கும். ஓக்கேயா ?

13 hours ago, Eppothum Thamizhan said:

நீங்கள் இப்போதுள்ள இடங்களிலும்(வெளிநாடுகளில்) பல வீதிகளிலும் ஒழுங்கைகளிலும் நம்மவர்களே கூடிய அளவில் இருக்கிறார்கள் என்பதற்காக பெயரை மாற்றுங்கள் என்று கேட்டால் வெள்ளைக்காரன் விடுவானோ?

விடுவான், விடுவான்। நம்மவர்களையே வாழ விடும்போது இது எல்லாம் வெள்ளைக்காரனுக்கு பெரிய காரியமில்லை । 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Eppothum Thamizhan said:

நீங்கள் இப்போதுள்ள இடங்களிலும்(வெளிநாடுகளில்) பல வீதிகளிலும் ஒழுங்கைகளிலும் நம்மவர்களே கூடிய அளவில் இருக்கிறார்கள் என்பதற்காக பெயரை மாற்றுங்கள் என்று கேட்டால் வெள்ளைக்காரன் விடுவானோ?

எங்கட ஊரில இந்தியாக்காரன் விட்டால் தான் வெள்ளைக்காரன் மூச்சே விடலாம். இங்க அப்பக்கடையிலும் இட்டிலிக்கடையிலும் வரிசையில் நிற்கும் தமிழனிடம் கேட்காமல் வெள்ளைக்காரன் எதுவும் செய்வதில்லை. எங்கட ஊர் எங்கை தமிழ்நாட்டிலேயோ எண்டு கேட்டு ஏமாறக்கூடாது. எங்கட ஊர்  உள்ள இடம் கலிபோர்னியா. இங்கே சுந்தர் பிச்சையை தெரியாத நாய் கூட இல்லை. தெருவுக்கு பெயர் வைக்கும் வீண் வேலையில் தமிழனோ இந்தியாக்காரரோ சீனரோ மினக்கடுவதில்லை. இங்கே தெரு கூட்டுபவர் வெள்ளைக்காரர். தெருவிலே விலை கூடின காரில் போறவர் இந்தியாக்காரர்.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/21/2020 at 3:24 AM, Eppothum Thamizhan said:

நீங்கள் இப்போதுள்ள இடங்களிலும்(வெளிநாடுகளில்) பல வீதிகளிலும் ஒழுங்கைகளிலும் நம்மவர்களே கூடிய அளவில் இருக்கிறார்கள் என்பதற்காக பெயரை மாற்றுங்கள் என்று கேட்டால் வெள்ளைக்காரன் விடுவானோ?

வெள்ளைக்காரன் நாட்டில் இந்துக்  கோயில் கட்டி, அபிஷேகம் செய்து, பூசை கூட நடக்குதாம். அங்கேயும் தலைவர் பதவிக்கு அடிபடுகினமாம் எங்கட ஆக்கள்.  அவன் விடாமலா இதெல்லாம் நடக்குது? நீங்கள் கேள்விப்படவில்லையோ??  

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் தமிழன் கேட்டுக்கொண்டதற்கிணங்க.....

கனடா நாட்டின், ஒன்றாறியோ மானிலத்தில் உள்ள மார்க்கம் நகரில் VANNI AVENUE இருக்கிறது. 

நண்பனை மீட்க முனைந்து அதற்காக உயிரைத் துறந்த BRUNTHAN PARK இருக்கு...

இத்தனையும் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ? (Big match ஞாபகத்தில் வந்தது. தெரியாதவர்கள் பொறுத்தருள்க🤪)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.