Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘பாதைகள் மாறினால் தமிழ் தேசியம் சிதையும்’

Featured Replies

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

“மன்னாரில் ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வோர் அரசியல் பாதையில் பயணிக்கும் பொழுது தமிழர்களுடைய தமிழ் தேசியம் சிதையுமே ஒழிய வேறு இலாபம் எதுவும் இல்லை. இவை எமது வாக்குகளை சிதைக்கும் செயலே” என, சட்டத்தரணி டினேஷன் தெரிவித்தார்.

அண்மையில் மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப்போவதாக ஊடக சந்திப்பின் மூலம் தெரியப்படுத்தியிருந்தனர்.

image_7aaed9fea2.jpg

குறித்த விடயம் தொடர்பாக  கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்றத் தேர்தலில் சிறுபான்மை இன மக்களின் வாக்குகளைச் சிதறடிக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்களினுடைய நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் தற்போதைய அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது.

“இந்த வகையில் கடந்த வருடம் மன்னார் திருகேதீஸ்வர வளைவு உடைக்கப்பட்டதை தொடர்ந்து, மக்கள் மத்தியில் மத ரீதியான பிளவுகளை சிலர் தூண்டிவருகின்றனர். அதன் மூலம் அரசியல் இலாபத்தை பெற்றுக்கொள்ளலாம் என சில மத தலைவர்களும் அரசியல்வாதிகளும் எண்ணுகின்றனர்.

“இந்த வளைவு உடைக்கப்பட்டதை கொண்டு, தற்போது மன்னாரில் இரு மதத்தினரும் இருவேறு அரசியல் பாதைகளில் சென்று கொண்டு இருக்கின்றனர். தற்போது இந்து குருமார் பேரவை தாங்கள் சுயேட்சையாக எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளனர்.

“மறு பக்கம் கிறிஸ்தவ அமைப்புகள் தாங்கள் தங்களுடைய குழுக்களை அமைத்து, சில கூட்டங்களை நடத்தி தாங்களும் சுயமாக அல்லது கூட்டணி அமைத்தோ அல்லது அரசாங்கத்துடன் இணைந்தோ கட்சிகளுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர்.

“எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பொதுஜென பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுமாயின், எமது பேரம் பேசுகின்ற சக்தி பெரும்பான்மை இல்லாமல் போய்விடும்.

“இவ்வாறு நாம் பிரிந்து நின்றோம். ஆனால் எமது பகுதியில் வேறு இனத்தவரோ, வேறு மதத்தவர் ஒருவரோ, பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவரோ நாடாளுமன்ற உறுப்பினராக வர வாய்ப்புள்ளது.

“எனவே, எமது மக்கள் மத ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பிளவுபட்டு காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில், எமது உரிமைகளையோ தீர்வுகளையோ பெற்றுகொள்ள முடியாது” எனவும் அவர் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/வன்னி/பாதைகள்-மாறினால்-தமிழ்-தேசியம்-சிதையும்/72-245904

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும், நாங்களும் குமுறி என்ன ஆகப்போகுது? சிங்களவன் தன் இனத்தில் மோதலை ஏற்படுத்தவில்லை, சிங்கள கிறிஸ்தவர்களுக்கு  பயத்தை ஏற்படுத்தினான். பலிக்கடா இஸ்லாம். பலி கிறிஸ்தவ தமிழர். புத்தத்துக்கு சலுகைகளை அறிவித்து வாக்கு பெற்றான். சலுகைகளுக்கு விலை போகிற எங்கடையளுக்கு  சலுகை அறிவிக்க வக்கில்லை.  காசு கைமாறியாச்சு,  மதக்கலவரம் என்று முடிவாகிச்சு. கொளுத்தி விட்டு குளிர் காய காத்திருக்குதுகள். புலம்பித் தீர்க்க வேண்டியதுதான் எங்களால் முடிந்தது. 

  • தொடங்கியவர்
2 hours ago, satan said:

1956 இல் இருந்து இனக்கலவரங்களே இருந்து வந்து இறுதியில் யுத்தம் நடந்து முடிந்துள்ளது. 

இப்பொழுது ஒரு மதக்கலவரம் ஒன்று உருவானால், உருவாக்கப்பட்டால் நாடு மீள முடியாத அழிவை சந்திக்கும். அதாவது, தமிழினம் மட்டுமல்ல சிங்கள  இனமும் பாதிக்கப்படும் ( 75% சிங்களவர்கள் அதில் 5% கிறிஸ்தவர்கள்) 

  • கருத்துக்கள உறவுகள்

கலவரங்களை  செய்தும், அதனால் பாதிக்கப்பட்டு இழப்புகளை சந்தித்தும்  பழகியதாலோ என்னவோ அது பற்றி யாரும் கவலைப்படாமல் தொடர்ந்து அழிவுகளை ஏற்படுத்துவதிலேயே குறியாய் இருக்கிறார்கள். ஒருவேளை தாம் அதனால் பாதிக்கப்படப்போவதில்லை என்கிற நம்பிக்கையாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப் பகுதிகளில் இப்போது பிற மதத்தினர் சக மதத்தினரைச் சகிச்சுப்போவதில்லை மற்றும்படி அண்மைக்காலமாக மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் பழக்கதோசத்தில் சைவ ஆலையங்களுக்குள் எந்தவிதா ஆகம முறைகளையும் கடைப்பிடிக்காது உள்நுளைந்து முகம் சுழிகவைக்கிறார்கள். குறிப்பாக நல்லூர்த் திருவிழா காலங்களில் வெளிவீதியில் காணப்படும் மக்கள் கூட்டத்தில் அனேகமாக இவர்களைக் காணலாம் முன்னமெல்லாம் இவர்கள் சாமி வீதி உலா முடிந்தபின்பு கோவில்காலக் கடைத்தொகுதிகள் மற்றும் கலை நிகழ்சி நடக்கும் இடங்களில் காணப்படுவார்கள் ஆனால் இப்போது சாமி வீதி உலா வரும்போதே சாமிக்கு சில மீற்றர் தூரத்திலேயே கால்களில் காலணி அணிந்து நவ நாகரீக உடை அணிந்து தாங்களும் உலா வருகிறார்கள் 

அதற்காகச் சைவ சமயம் சார்ந்த இளையோர்களும் மற்றோரும் ஒன்றும் மோசமில்லை என்பதில்லை பெரியோர்களானாலும் அவர்கள் களிசான் சேட்டுடந்தான் திரிகிறார்கள் அப்போ சைவ சமயத்தையே சார்ர்திருக்கும் நாமே அதற்கான ஒழுங்கு விதிகளைக் கடைப்பிடிப்பதில்லை பஞ்சமா பாதகண்க்களில் அனைத்தையும் செய்கிறார்கள் கோவில் முதலாளி இரண்டு பெண்டாட்டி வைத்திருக்கிறார் அல்லது தொடுப்பு வைத்திருகிறார் கோவிலில் சாமி காவுபவர் வாகனக்கொம்பை தோழில் வைச்சுக்கொண்டே பெண்களைச் சைட் அடிக்கிறார் தேர்த்திருவிழா முடியமுன்னமேயே நல்ல கொழுத்த கிடாய் ஆடு எங்க கிடைக்கும் பங்கு இறைச்சி திண்டு கனகாலமாச்சு அதைவிட மச்சானும் சுவிசிலிருந்து கனவிதமான போத்திலோட காத்துக்கொண்டு இருக்கிறான் எனச் சகபாடியுடன் விசாரிக்கிறார்

ஊர்ருக்குப் போகும் புலம்பெயர் தேசத்தவரோ கோயிலாவது மசிராவது எனக்கும் பிள்ளைகளுக்கும் மச்சமில்லாது இறங்காது எனச்சொல்ல ஓம் அம்மா அவரும் பிள்ளைகளும் அப்படித்தான் என பொண்டாட்டிக்காரி சொல்ல இவர் லெப்ரினன் கேணல் பட்டம் கிடைச்சமாதிரி நெஞ்சை நிமிர்த்துகிறார் புளித்தியர் இங்க லண்டன் புற நகர்த்தெருக்களில் தமிழ்கடையில் இரண்டரை பவுண்சுக்கு புளுதி கூட்டிவிட்டோ சுவிஸில வயோதிபர் மடத்தில கக்கூஸ் கழுவிவிட்டோ வெந்ததையும் வேகாததையும் துண்டு குப்புறப் படுத்துக்கிடந்தவர் அட் எ ரைமில லெப்ரினன் கோணல்

ஒரு புண்ணாக்கும் வெள்ளிக்கிழமைகளில்கூடப் போகாத கோவில் மழைக்கும் வெயிலுக்கும் ஆடுமாடுகள்தான் ஒதுங்குறது வழக்கம் புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் அதுக்கும் இந்தக் கக்கூஸ் கழுவும் புலம்பெயர்தமிழன் பொறுக்கி முன் மண்டபத்து தூண் ஒன்று கட்ட இருபது இலட்சத்தை நான் தாறன் எண்டு பழிகிடக்கிறான் அப்பவே தெரியவில்லையா இவர்களது கல்வி அறிவு எங்க நிக்குது இவர்கள் பிளேன் ஏறி வரேக்க எந்தக் கல்வி அறிவோட வந்தவையள் என ஏண்டா புலம்பெயர் தமிழா கொஞ்சமேனும் அப்டேட் ஆகுங்களேனடா 

எனக்கு இப்பிடி இப்பிடி எதாவது கோவம் வந்துகிட்டே இருக்கு ஆதலால்தான் நான் எதையும் எழுத விரும்புறதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் ஆபத்தான விடயம். இப்படியே எமது இனம் சிறிது சிறிதாக உடைக்கப்படும் நிலையை மக்களுக்கு புரியவைக்கவேண்டும். ஆனால் எல்லா அரசியல்வாதிகளும் தங்கள் சுயலாபத்தை நோக்கி நகரும்போது மக்களையும் இனத்தையும் பற்றி யார் சிந்திக்க போகின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Elugnajiru said:

இது ஒன்றும் சைவ சமயத்தவன் என்றோ வேதக்காறன் என்றோ பிரித்துப் பார்க்கத்தேவையில்லை. எங்கள் சமூகம் எந்த ஒரு ஒழுங்குக்கும், கட்டுப்பாட்டிற்கும் ஒத்துவராத காட்டுமிராண்டிக் கூட்டம்.

அதனால்தான் பிரபாகரனின் துப்பாக்கிக்கு கட்டுப்பட்டிருந்தது. 

எங்கள் சமூக உளவியல் எப்போதும் அதிகாரத்திற்கு மட்டுமே கட்டுப்படும்.
 
அதிகாரத்துடன் ஒட்டி நிற்பதால் கீழே விழும் அற்ப சொற்ப பருக்கைகளுக்காக கூட இருப்பவனையே காட்டியும் கூட்டியும் கொடுக்கும்.

சுய புத்தியுமில்லை சொல் புத்தியுமில்லை. அன்புக்கும் கட்டுப்படாது. அறிவுக்கும் கட்டுப்படாதது. மிக மிகச் சுயநலன் கொண்டது. 

எங்கள் இனத்தை ஒன்று சேர்க்கும் ஒரே விடயம் அறிவுக்கு  அப்பாற்பட்ட சாதி மட்டும்தான்.

அழிவின்இறுதிக்கட்டத்தில் உள்ள மிகக் கேவலமான இனம்.

மெழுகுதிரி எரிந்து முடிவில் கடைசியாக ஒருமுறை ஓங்கி எரியுமே அதுதான் எங்களின் விடுதலைப் போராட்டம்.

இன்னும் ஐம்பது வருடங்களில் இலங்கையில் தமிழன் என்கின்ற ஒரு தனி இனக் குழுமத்தை காணமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, manthahini said:

மிகவும் ஆபத்தான விடயம். இப்படியே எமது இனம் சிறிது சிறிதாக உடைக்கப்படும் நிலையை மக்களுக்கு புரியவைக்கவேண்டும். ஆனால் எல்லா அரசியல்வாதிகளும் தங்கள் சுயலாபத்தை நோக்கி நகரும்போது மக்களையும் இனத்தையும் பற்றி யார் சிந்திக்க போகின்றார்கள்?

ஒவ்வொரு மனிதனும் சுய லாபங்களை கடந்து  சிந்தித்தால், மலையையும் குடையலாம். ஆனால் ஊதி பெருப்பித்து குளிர் காய்கிறேன் என்று பிடிவாதம் பிடித்தால், அழிவை தடுக்க முடியாது. எதிரியின் வெற்றி நிட்சயம். அதை ஏற்கெனவே சிங்களம் ஆரூடம் கூறிவிட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ampanai said:

1956 இல் இருந்து இனக்கலவரங்களே இருந்து வந்து இறுதியில் யுத்தம் நடந்து முடிந்துள்ளது. 

இப்பொழுது ஒரு மதக்கலவரம் ஒன்று உருவானால், உருவாக்கப்பட்டால் நாடு மீள முடியாத அழிவை சந்திக்கும். அதாவது, தமிழினம் மட்டுமல்ல சிங்கள  இனமும் பாதிக்கப்படும் ( 75% சிங்களவர்கள் அதில் 5% கிறிஸ்தவர்கள்) 

இலங்கையில் மட்டுமா இன, மத கலவரங்கள் நடக்கின்றன? பிரித்தானியா, அமெரிக்கா, இந்தியாவிலும் கூட இவ்வாறான கலவரங்கள் நடந்திருக்கின்றன. இந்த நாடுகள் மீளமுடியாத அழிவை சந்திக்கவில்லையே?

எல்லோருக்கும் இளைத்தவன் சைவன் தானே யார் தூற்றினாலும் சிரித்து கடப்பதால மன்னாரில 2000 மேற்பட்டவர்கள் தமிழ் பெணகள் மக்கா தொழ மீதி வத்திக்கான் தொழ எவன் சொன்னது மாதோட்டம் சந்தி சைவம் எண்டு  அருமை சம்பந்த பட்டவன் மட்டும் கதைக்க வேணுமாம் அவனுக்கு கோவன்னா போவது விளங்கவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள்பாதையில் நாங்கள் ஒற்றுமையாய் பயணித்திருந்தால்: எங்கள் விடுதலையையும், வீரர்களையும் இழந்து இன்று எடுப்பார் கை பிள்ளைபோல நடுத்தெருவில் நின்றுகொண்டிருக்க  மாட்டோம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மார்த்தாண்டன் said:

எல்லோருக்கும் இளைத்தவன் சைவன் தானே யார் தூற்றினாலும் சிரித்து கடப்பதால மன்னாரில 2000 மேற்பட்டவர்கள் தமிழ் பெணகள் மக்கா தொழ மீதி வத்திக்கான் தொழ எவன் சொன்னது மாதோட்டம் சந்தி சைவம் எண்டு  அருமை சம்பந்த பட்டவன் மட்டும் கதைக்க வேணுமாம் அவனுக்கு கோவன்னா போவது விளங்கவில்லை 

மார்த்தாண்டா !

நாங்கள் சாதிக்கொரு கோவில் கட்டிக்கொண்டும், சாதிக்கொரு கிணறு தோண்டிக்கொண்டும்,  பெயருக்கொரு கும்பாபிசேகமும், வீட்டுக்கொரு கோவிலும் கட்டுவோம் ஆனால் அருகிலிருக்கும் பக்கத்து வீட்டுக்காறன் சாப்பிட ஒருநேரச் சாப்படுமில்லாமல் கிடப்பான். பார்த்துக்கொண்டிருப்போம். அவ்னின் பிள்ளைகள் வெறும் வயிற்றோடு கிழிந்த துணியோடு ப்ள்ளிக் கூடம் போவான். சிரித்துக்கொண்டுமிருப்போம். 

ஆனால் ஒருவன் வந்து, வா உனக்கு கல்வியும் தாறன் நல்ல சாப்படும் தாறன். என்னோடு வா என்று கூப்பிட்டால்...

உடனே ஓடிவந்து குய்யோ முய்யோ என்று கத்துவீர்களா ? 

போங்கையா போய் கண்ணாடிக்கு முன்னால் நின்று ஒரு நிமிடம் உங்கள் முகத்தை வடிவாய் பாருங்கோ. 

பிறகு வந்து இங்கே கருத்தெழுதுங்கள்

On 2/21/2020 at 9:53 PM, ampanai said:

கடந்த வருடம் மன்னார் திருகேதீஸ்வர வளைவு உடைக்கப்பட்டதை தொடர்ந்து,

கள்ளகாணியில சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சர்ச் பாதிரியார் தூண்டலில் வன்முறையில் ஈடுபட்ட அந்த கிறீஸ்தவ விஷமிகள் கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்படும் வரை பிளவுகள் பெருகும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Rajesh said:

கள்ளகாணியில சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சர்ச் பாதிரியார் தூண்டலில் வன்முறையில் ஈடுபட்ட அந்த கிறீஸ்தவ விஷமிகள் கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்படும் வரை பிளவுகள் பெருகும்.

எச்சரிக்கிறீரோ ?

நீவீர் ஞாரெண்டு இவிட அறியும். உமட பருப்பு இவிட வேகாதுண்டே.😜😜

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பாதிரியார் சொல்லி விட்டார். இது ஏற்கெனவே இருந்த பிரச்னை. தான் புதிதாக வந்திருப்பதால் அது பற்றி தனக்கு  தெரியாது. சைவசமய பக்கத்தார் கூறியது; மன்னார் முன்னாள் ஆயர் இருக்கும்வரை எந்தப்பிரச்சனையும் இல்லை. ஒரு சிலர் மட்டுமே இந்தப் பிரச்சனையை எழுப்புகிறார்கள் என்று. இப்போ இரு பகுதியினரும் இணக்கப்பாட்டுடன் வளைவு வைத்தாயிற்று. ஆனால் நாங்கள் விடப்போவதில்லை. இரண்டில் ஒன்று காணாமல் விடமாட்டொம், எங்களுக்கு வம்பு பண்ணிக்கொண்டு இருக்க இன்னொன்று கிடைக்கும் வரை. எப்பவும் நம்ம பூமி கலவரமாய், இரத்தம் சிந்திக்கொண்டு இருக்க வேணும். இது ஒருவகையான மனோவியாதி.  

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, satan said:

மிகவும் சரியான கூற்று.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மார்த்தாண்டன் said:

எல்லோருக்கும் இளைத்தவன் சைவன் தானே யார் தூற்றினாலும் சிரித்து கடப்பதால மன்னாரில 2000 மேற்பட்டவர்கள் தமிழ் பெணகள் மக்கா தொழ மீதி வத்திக்கான் தொழ எவன் சொன்னது மாதோட்டம் சந்தி சைவம் என்று

69,000 இசுலாமியர். 60,000 கத்தோலிக்கர், 28,000 சைவர்கள்.  ஆட்சியில் பௌத்தர்கள். கடந்த ஆண்டு 2,000 சைவ பெண்களுக்கு சைவமும் பிடிக்கவில்லை, சைவர்களையும் பிடிக்கவில்லை - மதம் மாறி கலியாணம் செய்து விட்டார்கள். சைவத்தை விட்டு ஏன் இப்படி இவர்கள் எல்லாம் ஓடுகிறார்கள்? பணம், வசதி, உதவி, மதிப்பு, நிம்மதி ... இவை எல்லாம் சைவத்தில் கிடைக்காமல் மற்ற மதங்களில் கிடைக்கின்றனவா? ஓடோடென்று விட்டுவிட்டு 2,000 வருடங்களாக ஓடுகிறார்களே? ஏன்? இப்படி மீதம் உள்ளவர்களும் ஓடாமல் இருக்க என்ன செய்யலாம்? 

Edited by கற்பகதரு

9 hours ago, கற்பகதரு said:

புத்த பிக்குவின் சிகிச்சை தான் சரி போல படுகுது உனக்கு என்ன வேலை எண்டு அந்தாள் போல் குடுக்கலாமோ

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மார்த்தாண்டன் said:

புத்த பிக்குவின் சிகிச்சை தான் சரி போல படுகுது உனக்கு என்ன வேலை எண்டு அந்தாள் போல் குடுக்கலாமோ

கண்ணாடியின் முன் நின்று பார்த்தீர்களா மைடியர் மார்த்தாண்டன் ?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, மார்த்தாண்டன் said:

புத்த பிக்குவின் சிகிச்சை தான் சரி போல படுகுது உனக்கு என்ன வேலை எண்டு அந்தாள் போல் குடுக்கலாமோ

அதை எதிர் பார்த்துதான் எல்லாம் நகருது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.