Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

தைரொய்ட்  குறைபாடும்  அதற்கான நிவர்த்திகளும் 

தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும் தேவையானது.மூளையில் உள்ள கபச்சுரப்பியின் TSH (ஹோர்மோன் ) உத்தரவுப்படி செயல்படும். சிலவேளைகளில்  TSH போதிய அளவு இருந்தாலும் தைரொய்ட் சுரப்பி தேவையான அளவு தைரொக்ஸினை சுரக்காது. இதற்கு முக்கிய காரணம் மரபு அணு சம்பந்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி செயல்பாடாகும். Autoimmune என்று சொல்லப்படும், எமது வெண்குருதி  கலங்கள் தமக்கு கொடுக்கப்பட்ட நோய்  எதிர்ப்பு வேலையை செய்யாமல் எமது உடலின் பல பாகங்களையும் தாக்கும். அந்த வழியில் தைரொய்ட் சுரப்பியையும் தாக்கும். அதனால் தைரொக்சின்  அளவு குறைந்து எமது உடல் செல்கள் சில முக்கிய வேலைகளை செய்ய முடியாமல் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஒவ்வொருவருக்கும் இந்த விளைவுகள் மாறுபடும். பொதுவாக சோர்வு, நித்திரைஇன்மை, மனச்சோர்வு, உடல் பருமனடைதல், தோலில் சொறிவு , முடி உதிர்வு, குரல் மாற்றம் இவைகள் பொதுவானவை. சிலருக்கு ஐயோடின் குறைபாடால் சுரப்பி பெருக்கும் . ஐயோடின் supplement, சத்திர சிகிச்சை மூலம் இதனை குணப்படுத்தலாம்.தைரொக்சின் எமது உடலை அடிக்கடி திருத்தி நல்ல நிலையில் வைத்திருக்கும். உணவை எரித்து சக்தியும் வெப்பத்தையும் தரும். இதனால் தான் தைரொக்சின் குறைபாட்டால் குளிர் உணர்வு, உடல் பருமனாதல் , சோர்வனவு ஏற்படுகிறது. கொலெஸ்டெரோல் அளவும் கூடும். நன்றாக உடல் பயிற்சி செய்து, புரத சத்து அதிகமான உணவுகளை உண்டு selenium நிறைந்த உணவுகளான sardine, tuna, Brazil nuts , முட்டை,  எல்லாவிதமான தானியங்கள்  மற்றும் zinc நிறைந்த உணவுகளான  நண்டு, கணவாய், றால், கோழி இறைச்சி , அன்னாசி பழம் , கல்லுப்பு , ஹிமாலயன் உப்பு, மீன் சாப்பிட்டு வந்தால் தைரொய்ட் சுரப்பிகள் மேலும் பழுதடையாமல் பாதுகாக்கலாம். ஆனால் கட்டாயம் மருத்துவ உதவி பெற்று Leveothyroxine  வகையான மருந்தை ஒவ்வொரு  நாள் அதிகாலையில் எடுக்க வேண்டும். இது மற்ற மருந்துகளுடன் ஒத்துபோகக்கூடியது. அதனால் சேர்த்து எடுக்கலாம்.

இது மரபு வழி சம்பந்தப்பட்டது. உங்கள் குடும்ப உறுப்பினருக்கு இருந்தால் உங்களுக்கும் வர சந்தர்ப்பம் அதிகம். எனவே சோர்வு, உடல் பருமனடைதல், மனச்சோர்வு , முடி உதிர்தல் இருந்தால் கட்டாயம் ரத்த பரிசோதனை செய்து பாருங்கள். மருந்து ஒவ்வொரு நாளும் அதிகாலையில் தவறாமல் எடுக்க வேண்டும். முக்கியமாக அன்னாசி, நண்டு, கணவாய் , றால், கோழி , அவரைக்காய் , nuts , முட்டை , tuna  சாப்பாட்டில் சேர்க்கவும். மரக்கறி மட்டும் உண்பவர்கள் நிறைய தானியம், Brazil nut சேர்த்து சாப்பிடவும்

Thyroid.pngThyroid1.jpg

Edited by nilmini
Picture
  • Like 9
  • Thanks 8
  • Replies 391
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

nilmini

தைரொய்ட்  குறைபாடும்  அதற்கான நிவர்த்திகளும்  தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும

nilmini

ஒரு மாதத்துக்கும் மேலாக பொறுமையாக இருந்த குமாரசாமி அண்ணாவுக்கு வணக்கம். எங்க மூட்டு நோ எல்லாம் உச்சத்துக்கு போனப்பிறகுதான் நில்மினி பதில் போடுவா என்று நீங்கள் வீட்டில் சொன்னது எனக்கு ஜேர்மனியில் இருந்

nilmini

விட்டமின் D பொதுவாக எல்லோருக்கும் ஒவ்வொருநாளும் தேவையான ஒன்று. இது இல்லாமல் உடல் இயக்கங்கள் எதுவும் சரிவர நடக்காது. எமது உடல் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தனது  இயக்கங்களை எப்படியோ செய்

Posted

நன்றிகள் சகோதரி. பயனுள்ள ஆக்கம், தொடரட்டும். 

ஒரு கேள்வி: நண்பரின் மகனுக்கு புற்றுநோய் உள்ளது. அவரின் வயது 17. சிலகாலமாக அதற்கு வைத்தியமாக 'கீமோ' செய்யப்படுகின்றது. அண்மையில், 'தைரொயிட்' வளர்ந்து வருகின்றது என கூறி ஒரு சத்திர சிகிச்சை செய்யப்பட்டது. இது மீண்டும் மீண்டும் நடக்ககூடிய சத்திரசிகிச்சை என்கிறார்கள். இது சரிதானா? இந்த சத்திரசிகிச்சையை தவிர்க்க முடியாதா?    

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல பயனுள்ள கட்டுரை சகோதரி......!  👍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவருக்கு தைரொய்ட் கான்சரா ? இரண்டு விதமான கான்செர் உண்டு(papillary and follicular thyroid cancer)  இரண்டுமே சத்திர சிகிச்சை மூலம் அகற்றலாம். சிலவேளை தான் திருப்பி வரும். சில வருடங்களில்  இருந்து சில தசாப்தங்களிலும்  வரும். வந்தால் திரும்ப சத்திர சிகிச்சை செய்ய முடியும் . ஸ்டேஜ் 1,2 கான்செர் என்றால் 85% நோயாளிகள் குணமடைந்து விடுவார்கள். 3,4,5 என்றால் 55% தான் குணமடைவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல பயனுள்ள கட்டுரை நில்மினி.

இதை போல் வேறு வியாதிகள் பற்றியும் எழுதுங்கள்.

பிகு:தோலில்லாத தைரொயிட் சுரப்பிய பார்க்க கொஞ்சம் பயமாத்தான் இருக்கு😀

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நன்றி. நிச்சயம் பகிர்கிறேன். எனக்கு பார்த்து பார்த்து பழகி விட்டதும் இல்லாமல் மிகவும் ஆர்வமும்கொஞ்சம்  கூட. அதிசயமான மனித உடல். வெளியே மனிதர் ஒரே மாதிரியாக தெரிந்தாலும் உள்ளே வெட்டி பார்க்கும் போது  நிறைய வித்தியசாசங்கள். அதனால்தான் சத்திர சிகிச்சை செய்து கொள்வது சிக்கலான விடயம். 

Edited by nilmini
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, nilmini said:

ஆனால் கட்டாயம் மருத்துவ உதவி பெற்று Leveothyroxine  வகையான மருந்தை ஒவ்வொரு  நாள் அதிகாலையில் எடுக்க வேண்டும். இது மற்ற மருந்துகளுடன் ஒத்துபோகக்கூடியது. அதனால் சேர்த்து எடுக்கலாம்.

கடந்த 10-12 வருடங்களாக Leveothyroxine 75MCG என்ற நீங்கள் சொன்ன மருந்தே எடுக்கிறேன்.கடந்த வருடம் சோதனையின் போது இது வெகுவாக குறைந்திருந்தது.டாக்ரரிடம் மருந்தை விடலாமா என்று கேட்ட போது வேண்டாம் மருந்து எடுத்தபடியால்த் தான் குறையுது தொடர்ந்தும் எடுங்கள் என்றுவிட்டார்.

காலையில் எழுந்தவுடன் முதல் வேலை இந்த குளிசை போடுவது தான்.

தகவல்களுக்கு மிகவும் நன்றி.

தொடர்ந்தும் எம்மவர்களுக்குள்ள பிரச்சனைகள் பற்றி அறியத் தாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் உட்பட எமது குடும்பத்தில் நிறைய பேருக்கு இந்த பிரச்னை இருக்கு. வயதை பொறுத்து 30 mg இல் இருந்து 300 mg வரை போகும். வயது கூடிய ஆட்களுக்கு குறைந்த டோஸ் போதும். கொஞ்சம் சிக்கலான கணிப்பு. ஆனால் 75 gram  தைரொக்சின் எமது வயதினருக்கு மிக மிக குறைவான லெவல். ஹிமாலயன் அல்லது கோஷர் உப்பு பாவிக்கவும். Meditation , யோகா பயிட்சிகளும் சுரப்பிகளை சீராக்கும் 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 நில்மினி,  பயனுள்ள பதிவுகளை... எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, தமிழ் சிறி said:

 நில்மினி,  பயனுள்ள பதிவுகளை... எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

திருத்திக் கொள்ளும் அமைச்சரே...." தொடர்ந்தும் எம்முடன் பகிர்ந்து கொண்டிருப்பதற்கு நன்றி" என்று வரவேண்டும்.....!   😁

  • Like 1
Posted
15 hours ago, nilmini said:

அவருக்கு தைரொய்ட் கான்சரா ? இரண்டு விதமான கான்செர் உண்டு(papillary and follicular thyroid cancer)  இரண்டுமே சத்திர சிகிச்சை மூலம் அகற்றலாம். சிலவேளை தான் திருப்பி வரும். சில வருடங்களில்  இருந்து சில தசாப்தங்களிலும்  வரும். வந்தால் திரும்ப சத்திர சிகிச்சை செய்ய முடியும் . ஸ்டேஜ் 1,2 கான்செர் என்றால் 85% நோயாளிகள் குணமடைந்து விடுவார்கள். 3,4,5 என்றால் 55% தான் குணமடைவார்கள்.

' தைரொய்ட் கான்சர் ; இல்லை என்று நம்புகின்றேன்.

அப்பா, அவ்வளவாக இதைப்பற்றி கதைப்பதில்லை. நானும், கேட்பதில்லை. தெரிந்தவரையில் அந்த சிறுவனுக்கு மூளையில் / தலையில் தான் புற்றுநோய்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்படியென்றால் கபச்சுரப்பியில் (மூளையில் இருக்கு) புற்று நோய் இருந்தால் தைரொய்ட் சுரப்பி பெரிதாக வளர வாய்ப்புண்டு. எதுவானாலும் புற்று நோய் என்று வந்து விட்டாலே தொல்லை தான். மிகச்சிலருக்கு மட்டுமே பூரணமாக குணமடையும்.

Posted
5 minutes ago, nilmini said:

அப்படியென்றால் கபச்சுரப்பியில் (மூளையில் இருக்கு) புற்று நோய் இருந்தால் தைரொய்ட் சுரப்பி பெரிதாக வளர வாய்ப்புண்டு. எதுவானாலும் புற்று நோய் என்று வந்து விட்டாலே தொல்லை தான். மிகச்சிலருக்கு மட்டுமே பூரணமாக குணமடையும்.

நன்றி, அப்படித்தான் இருக்கும். தகப்பன் கூறியது சில மாதங்களுக்கு ஒரு முறை இந்த 'தைரொயிட்' அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டும் என்று.

"நோயற்ற வாழ்வே நிறைவான செல்வம்" 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்த்துக்கள்..💐

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகவும் பயனுள்ள தகவல்களுக்கு நன்றி சகோதரி நில்மினி 🙏🏿

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தமிழ் சிறி, , கிருபன், புரட்சிகர தமிழ்தேசியன், ஜெகதா துரை, ampanai, suvy, goshan_che, ஈழப்பிரியன், ரதி, நுணாவிலான், அபராஜிதன், நிழலி, Maruthankerni,  உங்கள் ஊக்கத்துக்கு நன்றி. இப்ப கொலஸ்டரோலை பற்றி எழுதிக்கொண்டு இருக்கிறேன்

Edited by nilmini
Posted (edited)
3 minutes ago, nilmini said:

தமிழ் சிறி, , கிருபன், புரட்சிகர தமிழ்தேசியன், ஜெகதா துரை, ampanai, suvy, goshan_che, ஈழப்பிரியன். உங்கள் ஊக்கத்துக்கு நன்றி. இப்ப கொலஸ்டரோலை பற்றி எழுதிக்கொண்டு இருக்கிறேன்
 

நன்று. உங்களின் (கொலஸ்டரோலை பற்றிய) ஆக்கத்தைதை வாசிப்பதற்கு முன்னர் நான் ஆட்டுக்கறி சாப்பாடு ஒன்றை சாப்பிட்டு வாறன் 🙂 LDL HDL இறைவா !

Edited by ampanai
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கொலெஸ்ட்ரோலும்  ஆட்டிறைச்சியும்

மற்ற இறைச்சிகளிலும் பார்க்க ஆட்டிறைச்சி இல் கொலெஸ்ட்ரோல் மற்றும் saturated fats  குறைந்தே காணப்படுறது. 85 கிராம் மட்டன் இல் 2.6 கிராம் கொழுப்பு தான் இருக்கிறது.மாடு 7.9, செம்மறி ஆடு(லாம்ப்) 8.1,  பண்டி 8.2, கோழி 6.3 . கலோரி முறைப்படி பார்த்தாலும் ஆடு 122, மாடு 179, செம்மறி ஆடு(லாம்ப்) 175, பண்டி 174 கோழி 162 காலோரிகள். it has all the amino acids needed by the body along with a high level of iron that can be helpful to anemic persons. இது எனது பல்கலைக்கழக  கழக கண்டுபிடிப்பு.

ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சி ஒன்றின் படி: saturated fat இனால் இதய நோய்கள் அதிகரிக்கும். ஆனால் unsaturated  fat இனால் நல்ல கொலஸ்டரோல்  அதிகரிக்கும்.இதனால் இதய நோய்களை குறைக்கலாம் என்று கண்டு பிடித்துள்ளது (இது Ampani  காண குறிப்பு)

ஆனால் எனது சொந்த அனுபவத்தில் எதையும் அளவாக உண்பது தான் நல்ல ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும் . மாடு சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்( இது எனது வேண்டுகோள்). நான் ஆடு , பண்டி இறைச்சிகள் சாப்பிட்டேன். ஆனால் 5 வருடங்களாக இறைச்சி எதுவுமே சாப்பிடுவதில்லை. மீன் வகைகள் தான். பாலும் தயிர் செய்வதுக்கு மட்டுமே வாங்குவேன் (கடை தயிரில் அல்புமின் தான் அதிகம்) Greek yogurt நல்லது என்று நினைக்கிறன் . பிரெஷ், frozen  மரக்கறிகள் வாங்கி இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை சமைப்பேன். கருவாடு, நெத்தலி கொஞ்சமாக வெங்காயம் சேர்த்து தேங்காய் எண்ணெயில் பொரித்தால் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். வீட்டில் சமைத்து  சாப்பிடுவது ஒரு உற்சாகமும் நல்ல பொழுது போக்கும் ஆகும். smoothie maker இல் frozen பழவகைகள் ( என்ன பழம்  மிஞ்சுதோ அவற்றையும் freeze பண்ணி தேவையான நேரத்தில் எடுத்து smoothie செய்யலாம். நான் frozen berries , fresh அன்னாசிப்பழம் , நெல்லிக்காய் தூள், Agave sweetener போட்டு smoothie அடித்து பிரிட்ஜில் வைத்து குடிப்பேன். தேத்தண்ணி, கோப்பி  எல்லாம் குறைத்து மூலிகை கோப்பி செய்து coconut sugar அல்லது cane சுகர் போட்டு குடிப்பேன் ( மல்லி, சீரகம், மிளகு, சுக்கு, கறுசீரகம், ஓமம் கொஞ்சம் கோப்பி நல்ல வறுத்து அரைத்து எடுக்க வேண்டும்). கிழமைக்கு ஒருநாள் Tripala என்னும் இந்திய மூலிகை பவுடர் சுடு தண்ணியில் கரைத்து குடிப்பேன். ப்ரிட்ஜில் ஒரு pitcher இல் வாடி கட்டிய தண்ணீர், Lemon துண்டுகள், இஞ்சி, புதினா (mint ) இல்லை ஊறவைத்து வெயில் காலத்தில் குடிப்பேன். நன்னாரி பவுடர் அம்மா உணவகத்தில் இருந்து வேண்டி வந்து அதையும் இடைக்கிடை குடிப்பேன். 50 வயதுக்கு பிறகு இறைச்சி வகைகளை தவிர்த்து, கடல் உணவு, மரக்கறி, தேங்காய் எண்ணெய் , நல்லெண்ணெய் தேங்காய் பால் சேர்த்து வீட்டில் சமைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. வாரத்தில் 3 நாள் வது இரண்டு சாப்பாட்டுக்கு நடுவில் 16 மணித்தியாலம் விட்டு தண்ணீர் மட்டும் குடித்தால் எமது ஈரல் எல்லா கழிவுகளையும் அகற்றி நிறைய நோயில் இருந்து காப்பாற்றும். Organic மஞ்சள் வாங்கி நிறைய சேர்க்கவும். Olive oil இல் பொரிக்க  கூடாது. அதை வேறு விதமாக தான் சாப்பிட்டில் சேர்க்கவேண்டும்.

இங்கு கொலஸ்டரோலை பற்றி பொதுவான கருத்துக்களையும் உண்மை எதுவென்பதயும் பதிவிட்டுளேன்

 

பொதுவான கருத்து : நடுத்தர வயதில் இருந்துதான் கொலஸ்டரோல் பிரச்னை வரும்.

உண்மை: 9 - 11 வயதளவில் ஒருமுறை 17- 21 வயதளவில் ஒரு முறை . 20 வயதின் பின் 5 வருடத்துக்கு ஒருமுறையாவது ரத்த பரிசோதனை செய்தல் நலம். நீங்கள் கேட்டாலே இன்றி பொதுவாக வைத்தியர்கள் கொலெஸ்ட்ரோல் அளவை செக் பண்ண மாட்டார்கள். ஆதலால் நீங்கள் தான் கேட்டு பரிசோதனை செய்ய வேண்டும்

 

பொதுவான கருத்து :உடல் பருத்தவர்களுக்கு மட்டும்தான் கொலஸ்டரோல் பிரச்னை வரும்.

உண்மை: உடல் பருத்தவர்களுக்கு வருவதற்கு சந்தர்ப்பம் கூட. ஆனால் மெல்லிய தேகம் உடையவர்களுக்கும் வரும்.

 

பொதுவான கருத்து: ஆண்களுக்குத்தான்  கொலஸ்டரோல் பிரச்னை வரும்.

உண்மை; Atherosclerosis - ரத்த குழாயை அடைக்கும்  கொலஸ்டரோல் படிவுகள் பெண்களில் பார்க்கவும் ஆண்களுக்கு நடுத்தர வயதிலேயே வருவது அதிகம். CVD எனப்படும் இதய சம்பந்தமான நோயாலேயே அதிகமான பெண்கள் இறக்க நேரிடுகிறது .50 வயதின் முன்பு ஈஸ்ட்ரோஜென் ஹோர்மோன் பெண்களுக்கு அதிகமாக இருப்பதால் நல்ல கொலஸ்டரோல் (HDL) அதிகரிக்கும். அனால் 50 வயதுக்கு பிறகு  ஈஸ்ட்ரோஜென் ஹோர்மோன் குறைவதால்  கெட்ட கொலஸ்டரோல் (LDL )  அதிகரிக்கும்.

 

பொதுவான கருத்து: எமது சாப்பாட்டு முறையும், உடற்பயிற்சியும்  மட்டும் தான் கொலெஸ்டெரோல் அளவை தீர்மானிக்கும்

உண்மை: இது ஓரளவுக்கு உண்மை என்றாலும், மரபு வழியில் சில பேருக்கு இயற்கையிலேயே கொலெஸ்ட்ரோல் அதிகமாக இருக்கும். அதனால் ஓரளவு உடற்பயிற்சியும் இதயத்துக்கும் ரத்த குழாய்களுக்கு நன்மை தரக்கூடிய உணவுகளை உண்டு  மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதை தவிர்க்கலாம்

 

பொதுவான கருத்து: சில உணவுவகை லேபிள் இல் No Cholesterol, Heart healthy என்று போட்டிருந்தால் பயப்படாமல் சாப்பிடலாம்

உண்மை: Low fat என்று போட்டிருந்தாலும் மிகும் ஆபத்தான  saturated fat, trans fats மற்றும் total கலோரி அளவுகள் கூட இருக்கும் .வியாபார தந்திரத்துக்காக முழு பக்கெட்டில் உள்ள அளவுகளை போடாமல், per serving என்று போட்டிருப்பார்கள் .

 

பொதுவான கருத்து: பட்டரிலும் பார்க்க மாஜரின்  இல் குறைந்த கொலெஸ்ட்ரோல் உண்டு

உண்மை: இரண்டிலயும் கூடாத கொழுப்பு உண்டு, soft மாஜரின் கொஞ்சம் நல்லது. எதுவாகினும் 0 ZERO  trans-fat உள்ள உணவை வேண்டவும். அதிகநாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க நிறைய transfat , சீனி, உப்பு, preservative எல்லாமே போடுவார்கள். நான் பொதுவாக எதையும் சூப்பர்மார்கெட் shelf இல் இருந்து வேண்டுவதில்லை ( மா, சீனி, pasta , அரிசி இது போன்ற உணவுகளை தவிர்த்து) . பாணும் பேக்கரி இல் செய்ததுதான் வேண்டுவது. டின் உணவுகள் அடிக்கடி வேண்ட கூடாது. Frozen vegetables, fruits நல்லது.

 

Edited by nilmini
  • Like 13
  • Thanks 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

😄 உண்மையில் ஆட்டுக்கறி மற்ற இறைச்சியில் பார்க்க நல்லது. ஆனால் பிரச்னை என்னவென்றால் கறி நல்ல இருக்கெண்டு நிறய சோறும் சேர்த்து சாப்பிடுவது, அடிக்கடி சாப்பிடுவது . மரக்கறி சாப்பிடும் மீனும் என்றால் கனக்க  சோறு  சாப்பிட முடியாது. 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மருத்துவம் சம்பந்தமாக ஒரு பயனுள்ள இழையை ஆரம்பித்த நில்மினி அவர்களுக்கு கோடி நன்றிகள்.மருத்துவ தகவல்களை பகிர்வதுடன் சொந்த அனுபவங்களையும் சேர்ப்பது இன்னும் சிறப்பு.
தொடருங்கள் .

  • Like 1
Posted
33 minutes ago, nilmini said:

பொதுவான கருத்து: சில உணவுவகை லேபிள் இல் No Cholesterol, Heart healthy என்று போட்டிருந்தால் பயப்படாமல் சாப்பிடலாம்

உண்மை: Low fat என்று போட்டிருந்தாலும் மிகும் ஆபத்தான  saturated fat, trans fats மற்றும் total கலோரி அளவுகள் கூட இருக்கும் .வியாபார தந்திரத்துக்காக முழு பக்கெட்டில் உள்ள அளவுகளை போடாமல், per serving என்று போட்டிருப்பார்கள் .

அட, இவ்வளவு நாளும் ஏமாந்துள்ளேன் 😞 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்பாடா .....பொதுவாக 50 வயதுக்கு மேற்படடவர்களுக்குத்தான் நிறைய பிரச்சனைகள் சருமத்திலும் சரி சமூகத்திலும் சரி வரும் என்று சொல்லுறா....நான் தப்பீட்டன்.....!   😂 

  • Haha 1
Posted
34 minutes ago, nilmini said:

ஆனால் எனது சொந்த அனுபவத்தில் எதையும் அளவாக உண்பது தான் நல்ல ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும்

இது மந்திரம். ஆனால், என்ன செய்வது, கடைப்பிடிப்பது தான் மகா கடினம்.

35 minutes ago, nilmini said:

Agave sweetener போட்டு smoothie அடித்து பிரிட்ஜில் வைத்து குடிப்பேன்.

இந்த ஸ்வீட்னர் சீனியை விட கூடாது என்கிறார்கள் சிலர். அது பற்றி தங்கள் கருத்து என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/8/2020 at 6:22 PM, nilmini said:

selenium நிறைந்த உணவுகளான sardine, tuna, Brazil nuts , முட்டை,  எல்லாவிதமான தானியங்கள்  மற்றும் zinc நிறைந்த உணவுகளான  நண்டு, கணவாய், றால், கோழி இறைச்சி , அன்னாசி பழம் , கல்லுப்பு , ஹிமாலயன் உப்பு, மீன் சாப்பிட்டு வந்தால் தைரொய்ட் சுரப்பிகள் மேலும் பழுதடையாமல் பாதுகாக்கலாம்.

sellenium, zinc இரண்டுமே நிறைந்தது குடல் (tripe) ஆகும்.

முக்கியமாக, குடலை சமைக்கும் போது உப்பு, மற்றும் மஞ்சள் கலந்து, brush ஆல் உரசி கழுவிய பின்பு, அவித்து வரும் சாறை சேர்த்து சமைக்க வேண்டும், சாறை வீசக் கூடாது (சில yourtube விடீயோக்களில் காட்ட்டப்படுவது).  


இன்னுமோர் மாமிச உணவு, tendons, மாட்டிறைச்சியிலேயே அதிகமாக கிடைக்கும், ஆட்டிறைச்சியில் paaya எனப்படும் ஆட்டுக் காணுக் கால் பகுதி ஆகும்.    

இதை அளவாக எடுத்தால் போதும்.

  

  • Like 2



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மதுராநகரில் தமிழ் சங்கம் .......... முத்துராமன் & விஜயகுமாரி . .........!  😍
    • நேர்மையான அமைச்சர். மற்றவர்கள் கண்டுபிடித்து பிரச்சினை கிளப்ப முதல்  தானாகவே அறிவித்து மாற்றி விட்டார்.  
    • வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க நீரில் மிதந்திடும் கண்களும் காய்க நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க! ஆண் : ஜனனமும் பூமியில் புதியது இல்லை மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை ஆண் : பாசம் உலாவிய கண்களும் எங்கே? பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே? தேசம் அளாவிய கால்களும் எங்கே? தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே ஆண் : கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க ஆண் : பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை ஆண் : கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை நதி மழை போன்றதே விதியென்று கண்டும் மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன ஆண் : மரணத்தினால் சில கோபங்கள் தீரும் மரணத்தினால் சில சாபங்கள் தீரும் வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும் விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும் ஆண் : பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம் யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம் நித்திரை போவது நியதி என்றாலும் யாத்திரை என்பது தொடர்கதையாகும் ஆண் : தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும் சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும் மழலையின் தேன்மொழி செவியுறும் போதும் மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும் ஆண் : மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க.......!   --- ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க ---
    • சிலர் வியாபாரத்துக்காக... கலப்படம் செய்து விற்பதால், வாழ்வாதரத்திற்காக  கஸ்ரப்பட்டு சுத்தமான  தேனை சேகரித்து விற்பவர்களிடமும்  நம்பி வாங்க பயமாக உள்ளது.
    • 13 DEC, 2024 | 04:15 PM சீனிப்பாணியை தயாரித்து தேன் என விற்பனை செய்துவந்த மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,  அவர்களிடமிருந்து பெருமளவான சீனிப்பாணியும் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் வவுனியா பொதுச்சுகாதார பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மேற்பார்வை சுகாரதார பரிசோதகர் மேஜயாவின் வழிகாட்டலில், நெளுக்களம் பொதுசுகாதார பரிசேதகர் சிவரஞ்சன் தலைமையில், ஒமந்தை பொதுசுகாதார பரிசேதகர் விதுசன், கந்தபுரம் பொதுசுகாதார பரிசேதகர் ஞானபிரஹாஸ், பூவரசங்குளம் பொதுசுகாதார பரிசேதகர் கிசோகாந் ஆகிய அணியினர் மற்றும் நெளுக்குளம் பொலிஸார் இணைந்து ஊர்மிலாக்கோட்டம் பகுதியிலுள்ள வீடுகளில் மேற்கொள்ளப்ட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த இடங்களில் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 200 போத்தல் சீனிப்பாணி சுகாதாரப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூன்று பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். இதேவேளை சீனிப்பாணியை தயாரித்து அதற்குள் சிறிதளவு தேனை மாத்திரம் கலந்து எ9வீதியின் முறிகண்டிப்பகுதியிலும்,நெடுங்கேணி பகுதிகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் இங்கிருந்து அனுராதபுரம் மதவாச்சி ஆகிய பகுதிகளுக்கும் அவை கொண்டுசெல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. இது உடல் நலத்திற்கு தீங்குவிளைவிக்கின்றது. எனவே பொதுமக்கள் தேனை கொள்வனவு செய்யும் போது சரியானமுறையில் உறுதிப்படுத்தி அவற்றை கொள்வனவு செய்யுமாறு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/201159
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.