Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவிற்காக ஆலய வழிபாடுகளை தடுக்கவோ, நிறுத்தவோ முடியாது - சர்வதேச இந்து இளைஞர் பேரவை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, குமாரசாமி said:

இவ்வளவு உக்கிரமாக இருக்கும் நீங்கள்.....
ஒரு கதைக்கு.......
கடவுள் இருந்தால் எப்படி அவர் இருக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?


 

அதென்ன கடவுள் இருக்கிறார் என்றால்?

கடவுள் எப்போதும் இருக்கிறார்.

கடவுளுக்கு ஆதியும் இல்லை. அந்தமும் இல்லை.

கடவுள் மனிதனுக்கு அருளாகத் தந்த சிறிய பகுத்தறிவைக் கொண்டு,  குதர்க்கம் செய்கிறான் 

 

  • Replies 63
  • Views 5.8k
  • Created
  • Last Reply
8 hours ago, குமாரசாமி said:

எப்படி எப்படி  மனிதன் பார்த்துக்கொள்வான்? 
 நடக்கும் மனித அழிவுகளை காணாமல் இருப்பதையா?
காடுகள் அழிவதை தடுக்க முடியாமல் திணறுவதையா?
விவசாயிகள் மரணிப்பதையா?
சுனாமி வருவதையா?
ஓசோன் சிதைவு ஏற்படுவதையா?
காற்று மண்டலம் மாசு படுவதையா?
 இருக்கும் பூமியையே பராமரிக்க முடியாத மனிதன் விண்வெளியில் கீரை வளர்த்து கீரைப்புட்டு அவிக்கப்போறானாம். 
அய்யொ....அய்யொ..😂 😂 😂😂

மனிதன் எல்லா இடரபாடுகளையும் சந்தித்து அதற்கு அவ்வப்போது தீர்வு கண்டே வருகிறான். இடையில் கடவுளை தூக்கி சுமக்கும் மனிதர்கள் தான் அதிக அட்டூழியங்களை உலகில் செய்கின்றனர். அவர்கள் திருந்தினால் மனித வாழ்ககை மேலும் இலகுவாகும். உண்மையில் அறிவியல் சாநனெகளை தம்மால் செய்ய முடியவில்லையே என்ற பொறாமையில்தான் சிலர் எதற்கெடுத்தாலும் அவ்வாறான மனிதர்களின் மீது பாய்ந்து விழுகின்றனர். 

 

6 hours ago, குமாரசாமி said:

 

முதலில் மனிதனால் ஏற்படும் அழிவுகளை தடுத்து நிறுத்த வழிகளை தேடுங்கள். அதன் பின் கடவுள் இருக்கா இல்லையா என்ற சிந்தனைய வளர்தெடுக்கலாம்.

Ignore the God  என்று நீங்கள் கூறுவதைத் தானே  நாங்களும் கூறுகிறோம்.  மனித சக்தியை வளர்தெடுத்து, மதம்  என்ற தேவையற்ற ஆணியை பிடுங்கி எறிவோம்  என்று. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, tulpen said:

. உண்மையில் அறிவியல் சாநனெகளை தம்மால் செய்ய முடியவில்லையே என்ற பொறாமையில்தான் சிலர் எதற்கெடுத்தாலும் அவ்வாறான மனிதர்களின் மீது பாய்ந்து விழுகின்றனர். 

 

 


நீங்கள் சொல்லும் அறிவியல் சாதனைகளை, அதிகமாக மத நம்பிக்கை உள்ளவர்கள் தான் சாதிக்கிறார்கள் - மத நம்பிக்கை மற்றவர்களுடன் ஒப்பிடும்போது.

இந்த கோவிட்19 இனால் மக்களை, அவர்களின் சுவாச இருப்பது பாதுகாக்க முனையும் ( ஊரடங்கு, வெளியேற்றம், தேசத்துரோகம் ..)  அரசு முடிந்தால் சிகரெட் விற்பனையை நிற்பாட்டுமா ? இல்லை தற்காலிகமாக தடை செய்யுமா?  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, tulpen said:

மனிதன் எல்லா இடரபாடுகளையும் சந்தித்து அதற்கு அவ்வப்போது தீர்வு கண்டே வருகிறான்.

இருப்பதை இல்லாமல் ஆக்குவதுதான்  இன்றைய அறிவாளிகளின் தீர்வு.
கால் விரலில் புண் வந்தால் முழு காலையும் வெட்டி எடுப்பது போல்.....😎

8 hours ago, மாங்குயில் said:


 

அதென்ன கடவுள் இருக்கிறார் என்றால்?

கடவுள் எப்போதும் இருக்கிறார்.

கடவுளுக்கு ஆதியும் இல்லை. அந்தமும் இல்லை.

கடவுள் மனிதனுக்கு அருளாகத் தந்த சிறிய பகுத்தறிவைக் கொண்டு,  குதர்க்கம் செய்கிறான் 

 

ஒரு சிலருடன் ஆல் விகுதி போட்டுத்தான் கதைக்க வேண்டும்.😁

15 hours ago, மாங்குயில் said:


நீங்கள் சொல்லும் அறிவியல் சாதனைகளை, அதிகமாக மத நம்பிக்கை உள்ளவர்கள் தான் சாதிக்கிறார்கள் - மத நம்பிக்கை மற்றவர்களுடன் ஒப்பிடும்போது.

ஆனால் மத நம்பிக்கையை மீறி சிந்தித்த‍த‍னால் தான் அந்த அறிவியல் கண்டு பிடிப்புகளை  அவர்கள் கண்டு பிடித்த‍னர். மதம் என்ற சாக்கடைக்குள் மட்டும் சிந்திதிருப்பார்கள் என்றால் அவர்களால் அது சாத்தியமாகி இருக்காது. உலகம் தட்டையானது என்று இன்றும் நம்பிக்கொண்டிருப்பார்கள். சூரியன் நடுவில் உள்ளது  பூமி தான் சூரியனை  சுற்றி வருகிறது என்ற கொப்பர்நிக்கஸ் நிறுவிய உண்மையை கூறியதால்  அதை மறுத்த மதவாதிகளுக்கு அடி பணியாத‍தால் தான் புரூணோ ரோம் நகரில் தீவைத்து கொளுத்த‍ப்பட்டான்.  புரூனொக்கு  தீ வைக்கபட்ட‍து தவறு என்று 300 வருடம் கழித்து  போப்பாண்டவரே ஏற்று வருத்தம் தெரிவித்த‍து வரலாறு. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, tulpen said:

ஆனால் மத நம்பிக்கையை மீறி சிந்தித்த‍த‍னால் தான் அந்த அறிவியல் கண்டு பிடிப்புகளை  அவர்கள் கண்டு பிடித்த‍னர். மதம் என்ற சாக்கடைக்குள் மட்டும் சிந்திதிருப்பார்கள் என்றால் அவர்களால் அது சாத்தியமாகி இருக்காது. உலகம் தட்டையானது என்று இன்றும் நம்பிக்கொண்டிருப்பார்கள். 


 

மத நம்பிக்கையை மீறி, அறிவியலை சிந்திப்பதில்லை.

அறிவியல் மத நம்பிக்கைக்கு எதிரானதல்ல.

இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற மதங்கள், பூமி தட்டையானது என்று சொல்லவில்லை என்று சொல்கிறார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

மதங்களுக்கும் அறிவியலுக்கும் என்ன தொடர்பு? இரண்டும் வேறு வேறு துருவங்கள் .இறைவன் உலகத்தை தட்டையாக அமைத்து ஆகாயத்தை அதற்கு கூரையாக அமைத்து அங்கே மனிதன் சாப்பிட மரக்கறி பழங்களை உருவாக்கினான் என்று மதங்கள் புலுடாவிட்டுக் கொண்டிருந்தன அறிவியல் உண்மையை கண்டுபிடிக்கும் வரைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மாங்குயில் said:


 

மத நம்பிக்கையை மீறி, அறிவியலை சிந்திப்பதில்லை.

அறிவியல் மத நம்பிக்கைக்கு எதிரானதல்ல.

இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற மதங்கள், பூமி தட்டையானது என்று சொல்லவில்லை என்று சொல்கிறார்கள்.

 

சில நம்பகமான உதாரணங்களைக் காட்ட முடியுமா ?

1 hour ago, Kapithan said:

சில நம்பகமான உதாரணங்களைக் காட்ட முடியுமா ?

இங்கு நிறைய கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது। கடவுளை நம்புவது , நம்பாமல் விடுவதும் ஒவொருவரது தனிப்படட நம்பிக்கை। இதை யாரும் குற்றம் சாடட முடியாது।

இங்கு நீங்கள் சில ஆதாரங்களை கேட்டிருக்கிறீர்கள்। பூமி உருண்டை என்று பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது। ஆதி காலத்தில் அவர்கள் , விசேடமாக கத்தோலிக்க உயர் பீடம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை। அவர்கள் தடடை என்றே கூறினார்கள்। அது உருண்டை என்பதை கூறியவர்களை உபத்திரவப்படுத்தினார்கள்। இது உண்மை।

ஆனால் வேதாகமம் இதை தெளிவாக கூறி இருக்கிறது। ஏசாயா(Isaiah ) 40 : 22 இல் பூமி உருண்டையின் மேல் என்றும் யோபு (Job ) 26 :7  இல் பூமியை அந்தரத்தில் தொங்க வைக்கிறார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது

சிலர் இதை ஏற்றுக்கொள்ளலாம், சிலர் இதை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளலாம்। இது வேதத்தை நம்புவர்களுக்கு மாத்திரம்।

 

5 hours ago, மாங்குயில் said:


 

மத நம்பிக்கையை மீறி, அறிவியலை சிந்திப்பதில்லை.

அறிவியல் மத நம்பிக்கைக்கு எதிரானதல்ல.

இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற மதங்கள், பூமி தட்டையானது என்று சொல்லவில்லை என்று சொல்கிறார்கள்.

 

அப்படியா? இரணியாட்சன் என்ற அரக்கன்  பூமியை பாயாக சுருட்டிக்கொண்டு போய் கடலுக்கடியில் ஒழிக்க அதை மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்துக் கொண்டு பாதாளத்தை துளைத்துக் கொண்டு கீழே சென்று அவணுடன் 1000 வருடங்கள் போர்புரிந்து பூமாதேவியை மீட்டு வந்தார் என்று அடிமுட்டாள்கதையை  வரலாறு என று  இந்து புராணங்கள்  கூறியதை  ஆதாரமாக கொண்டு கூறுகின்றீர்களா? 

On 3/19/2020 at 11:53 AM, கிருபன் said:

கொரோனாவிற்காக ஆலய வழிபாடுகளை தடுக்கவோ, நிறுத்தவோ முடியாது - சர்வதேச இந்து இளைஞர் பேரவை

முட்டாள் சைவ/இந்து குருமார்களை திருத்த, கட்டுப்படுத்த வேண்டிய அகில இலங்கை இந்துமான்றம் போன்ற அமைப்புக்கள் என்ன செய்கின்றன?

நீலகண்டன், கயிலாசபிள்ளை போன்றவர்கள் இருந்த காலத்தில் சைவ/இந்து சமய விடயங்களில் மட்டும்மல்ல தமிழர் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் ஓய்வின்றி சிறப்பாக செயற்பட்ட அகில இலங்கை இந்துமான்றம் தற்போது கையாலாகாத பேர்வழிகள் கைகளில் சிக்கி காலத்தை வெறுமனே கடத்துவதாக பலர் கூறுகின்றனர்.

இப்படியான அமைப்புகள் கூட்டமைப்பைப் போல சுயலாபங்களில் காலத்தைக் கடத்தினால் பொதுவறிவு, உலகறிவு அற்ற முட்டாள் சைவ/இந்து குருமார்களின் அடாவடிகள் தலைதூக்கி ஆடத்தான் செய்யும்.

625.0.560.320.160.600.053.800.700.160.90

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, tulpen said:

அப்படியா? இரணியாட்சன் என்ற அரக்கன்  பூமியை பாயாக சுருட்டிக்கொண்டு போய் கடலுக்கடியில் ஒழிக்க அதை மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்துக் கொண்டு பாதாளத்தை துளைத்துக் கொண்டு கீழே சென்று அவணுடன் 1000 வருடங்கள் போர்புரிந்து பூமாதேவியை மீட்டு வந்தார் என்று அடிமுட்டாள்கதையை  வரலாறு என று  இந்து புராணங்கள்  கூறியதை  ஆதாரமாக கொண்டு கூறுகின்றீர்களா? 

Lorentzian traversable wormholes பற்றி படித்து பாருங்கள். சைவம் சொன்னதை எப்படி அயன்ஸ்ரைனும் ஏனைய பிரபல பிரபஞ்ச விஞ்ஞானிகளும், பிரபஞ்சங்களுக்கிடையேயான பயணத்துக்கான பாதை என்று நிறுவி இருக்கிறார்கள் என்று புரியும். ஆனால் இவர்களில் பலருக்கு சைவம் தெரியாது. ஒரிருவர் இந்தியர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.