Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு வாரத்துக்கு முன்னரே தேவையான பொருட்கள் வாங்கி வைத்தாயிற்று. சாதாரணமாகவே மிளகாய்த்தூள்,  அரிசிமா, அரிசி, பலசரக்குப்பொருட்கள் என்பன ஒரு மாதத்துக்குத் தேவையானவை என் வீட்டில்  இருந்துகொண்டே இருக்கும். டொய்லட் பேப்பரும் மற்றைய பொருட்களுக்கு வாங்கியாகிவிட்டது. ஆனால் சம்போவும் லிக்குவிட் சோப் மட்டும் இருக்கு என்று எண்ணினால் அவை ஒவ்வொன்று தான் இருக்கு. சரி வெங்காயமும் வாங்கத்தான் வேண்டும். சுக்குக்கோப்பி எமக்கு நான் தான் செய்வது. மனிசன் சீரகத்துக்குப் பதில் அதுபோல் இருந்த ஒன்றை வாங்கிவர நேற்று இரவு வறுப்பதற்காகப் பிரித்தால் அந்த மணமே அது சீரகம் இல்லை என்று கூற, அதன்பின்தான் பார்த்தால் அது வேறொன்று. சரி நாளை வாங்கி வறுப்போம் என்று எண்ணி இன்று காலை எழுந்து VP& SON'S இக்குப் போனால் ஒரு ஐம்பது சனம் கும்பலாய் நிக்கிது. மற்றும் நேரம் என்றால் நானும் கிட்டப் போய் நின்றிருப்பேன். இன்னும்கடை திறக்காதபடியால் எட்டவே நின்று பார்த்துக்கொண்டு நிறுவிட்டுக்கடை திறந்து எல்லோரும் இடிபட்டுக்கொண்டு உள்ளே போக நான் இடிபடாமல் பின்னே சென்றால் பல தட்டுக்கள் காலியாக இருக்கு. நான் நேரே சென்று சீரகம் இருக்கும் இடத்தைப் பார்த்தால் சிறிய பக்கற் கூட இல்லை.

ஆனால் சீரகம் இல்லாமல் போகவே முடியாதே என்று எண்ணி பக்கத்தில் இருக்கும் சரண் என்னும் கடைக்குச் செல்கிறேன். ஒரு ஐம்பது மீற்றர் இடைவெளியில் இரு கடைகளுமிருந்தாலும் சரணின் எப்போதும் எல்லாம் VP& SON'S இலும் விலை அதிகமாகத்தான் இருக்கும். விலை அதிகம் என்றாலும் சரணின் எமக்குத்தேவையான எல்லாப் பொருட்களும் இருப்பதனால் பல தடவை நான் அங்கேயே பொருட்களை வாங்குவது உண்டு. என் கணவர் என்னைத் திட்டியபடி நீ சாமான்கள் வாங்கப் போக வேண்டாம்.நானே போய் வாங்குகிறேன் என்பார்.

 இன்று வேறு வழியில்லாது போனால் வேறு நாட்டுக்காரர்கள் பலரும் அங்கே பொருட்களை வாங்கியபடி நிற்க நான் சீரகம் எடுக்கப் போனால் சின்னச் சீரகம் வழமையைவிட ஒன்றரைப் பவுண்ட்ஸ் அதிகமாகப் போடப்பட்டு இருக்கு. அப்பம் சுடுவதற்கு பச்சை அரிசி வேண்டும் என்ற நினைவு வர அங்கு பார்த்தால் சிறிய பைகள் எல்லாம் முடிந்துவிட 5 கிலோ பை மட்டும் 5.99 என்று போட்டிருக்கு. இந்த அரிசி Lidle என்னும் கடையில் 1 கிலோ 89 பென்சுக்கு வாங்க முடியும். ஆனால் அங்கு சென்ற வாரமே அது முடிந்ததாகக் கணவர் கூறியது நினைவில் வர சரி போகட்டும் என்று எடுத்து வர முருங்கைக்காய் கண்ணில்படுகிறது. சரி அதிலும் நான்கை எடுத்துவந்தால் சனம் நிக்கிது. பில் அடிக்கும் போது அரிசி பாக் இல் இருந்த விலை தவறாம். யாரோ பிழையாக ஒட்டிவிட்டார்கள் அக்கா. அது இப்ப 6.99 என்கிறார். ஒரு சிவப்பு வெங்காயமும் எடுக்கவேணும் என்ன விலை என்றதற்கு 3.99 என்றவர் முருங்கைக்காய்க்கு 5.20 அடிக்கிறார். என்ன தம்பி இந்த விலை அடிக்கிறியள் என்று கேட்க விலை கூடீற்றுது அக்கா என்கிறார். சரி எடுத்தாச்சு வேண்டாம் என்று சொல்ல ஒரு மாதிரிஇருக்க காசைக் குடுத்துவிட்டுபொருட்களைக் காவி வந்து பக்கத்து வீதியில் நின்ற கணவரின் காருக்குள் வைத்துவிட்டு கொஞ்ச மீனும் வாங்கி வருவம் என்று மீன் கடைக்குள் போனால் நல்லகாலம் நானும் இன்னொரு பெண்ணும்மட்டும் தான். கணவாய் ஒருகிலோ முன்னர் 10 பவுன்ஸ். இப்ப 13 பவுன்ஸ்.
பாரை,  விளை மீன்கள் முன்னர் 9 பவுன்ஸ். இப்ப 12 பவுண்ட்ஸ். ஆட்டிறைச்சி முன்னர் 8 பவுண்ட்ஸ் இப்ப 13 .99 என்கிறார். நான் விளை மீனும் பாரை மீனும் ஒவ்வொரு பெரிய மீன்கள்,  கணவாய் ஓரளவானது 4,  இறால் 1 கிலோ இவ்வளவும் வாங்க 56 பவுண்ட்ஸ் என்கிறார். பக்கத்தில் நின்ற பெண் என்ன இந்த அரா விலை விக்கிறியள். உந்தக் காசு ஒட்டுமொ என்று மீன்கடைக்காரரை ஏசுகிறா. நாங்களும் விலைகூடக் குடுத்துத்தான் வாங்கி விக்கிறம். நான் உங்களைக் கட்டாயப்படுத்தேல்லையே என்கிறார். எண்டாலும் நீங்கள் செய்கிறது அநியாயம் என்று நானும் ஏதும் கூறுவேன் என்று என்னைப் பார்க்கிறார். இங்கே மட்டும் இல்லை பல கடைகளில்  விலை கூட்டித்தான் விருக்கினம் என்றுமட்டும் நான் சொல்லிவிட்டு நிற்கிறேன். வேறுவழியில்லை நெஞ்சுக்குள் எதோ செய்தாலும் சரி வாங்குவம் என்று  வாங்கிக்கொண்டு வெளியே வந்து காரில் ஏறுகிறேன்.

இன்னும் ஓரிரு பொருட்கள் தான். sainsburys இல் வாங்கிக்கொண்டு வருவோம் என்று அங்கு போனால் அங்கு பெரிதாகப் பொருட்களும் இல்லை. ஆட்களும் அதிகம் இல்லை. சில தட்டுகளில் மட்டும் அவசியமற்ற சில பொருட்கள் எஞ்சியிருக்கின்றன.

Image may contain: one or more people and people standing

No photo description available.

Image may contain: indoor and food

Image may contain: indoor

Image may contain: one or more people and indoor

Image may contain: people standing and indoor

Image may contain: indoor

Image may contain: indoor

No photo description available.

No photo description available.

No photo description available.

No photo description available.

No photo description available.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா இன்னொன்டு தொடங்கியாச்சு😂

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கணவர் வாங்கியது சின்ன சீரகத்துக்கு அக்காவாகவும் பெரிய சீரகத்துக்கு தங்கை போலவும் இருக்குமே. பெரிய சீரகம் போல் இல்லாது கர்ப்பஸ்திரீ போல் வயிறு உப்பி இருக்குமே.மேலே மீசை முடிபோல் சிறு காம்பும் இருக்குமே சரியென்றால் அது "ஓமம்". நாங்களும் எவ்வளவு அசிங்கப் பட்டிருக்கிறம்.....!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

அப்பாடா இன்னொன்டு தொடங்கியாச்சு😂

மனிசரை ஒண்டும் எழுதி முன்னேற விடமாட்டியள் 😂

அதுவும் இன்னும் முடியேல்லை😃
 
2 hours ago, suvy said:

உங்கள் கணவர் வாங்கியது சின்ன சீரகத்துக்கு அக்காவாகவும் பெரிய சீரகத்துக்கு தங்கை போலவும் இருக்குமே. பெரிய சீரகம் போல் இல்லாது கர்ப்பஸ்திரீ போல் வயிறு உப்பி இருக்குமே.மேலே மீசை முடிபோல் சிறு காம்பும் இருக்குமே சரியென்றால் அது "ஓமம்". நாங்களும் எவ்வளவு அசிங்கப் பட்டிருக்கிறம்.....!  😂

கணவர் வாங்கியது Dill seeds என்று போட்டிருக்கு. தமிழில் வெந்தய விதை என்று வருது. வெந்தையத்துக்கும் இதுக்கும் என்ன தொடர்புஎன்று புரியவில்லை ???

Image may contain: food

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மனிசரை ஒண்டும் எழுதி முன்னேற விடமாட்டியள் 😂

அதுவும் இன்னும் முடியேல்லை😃
 
கணவர் வாங்கியது Dill seeds என்று போட்டிருக்கு. தமிழில் வெந்தய விதை என்று வருது. வெந்தையத்துக்கும் இதுக்கும் என்ன தொடர்புஎன்று புரியவில்லை ???

Image may contain: food

சுமோ இதன் bag உள்ளதா???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

சுமோ இதன் bag உள்ளதா???

ஓம் மீரா. ஏன் ???

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இணையுங்களேன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

17 minutes ago, MEERA said:

இங்கு இணையுங்களேன்!

இணைத்துள்ளேன்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மனிசரை ஒண்டும் எழுதி முன்னேற விடமாட்டியள் 😂

அதுவும் இன்னும் முடியேல்லை😃
 
கணவர் வாங்கியது Dill seeds என்று போட்டிருக்கு. தமிழில் வெந்தய விதை என்று வருது. வெந்தையத்துக்கும் இதுக்கும் என்ன தொடர்புஎன்று புரியவில்லை ???

Image may contain: food

சீரகம், வாங்குறார்... சீரகம்.... சீரகம் தெரியாமலே இம்மளவு நாளும் சாப்பிட்டு, சுக்கு கோப்பியும் குடிச்சு எழும்பியிருக்கிறார். வாங்கிக் கொண்டு வாறார்... டில் சீட் வடிவா போடிருக்குது. சீரகம் எண்டு எதோ ஒரு கோதாரியை... பார்த்து வாங்கிறீரேலியா, கண் என்ன பிராடீக்க வைச்சு கொண்டே வாங்குறது. 

ஒரு கோதரியும் தெரியாம வளர்த்து, எண்ட தலையில கட்டி அடிச்சு விட்டிருக்கினம்.... அப்பவும் சொல்லுறானான் நான் அங்க சரணிலை வாங்குவேன் எண்டு... நான் வாங்குறன்.... கிளிக்குறன் எண்டு....

எங்க இந்த மனிசன்....

பிள்ளை அப்பர் எங்க....

கார்டனுக்குல நிக்கிறார்.

உங்க பாரன்... தொண்ட கிழிய இந்த கத்து கத்துறன். நசுக்கிடாம அங்க போய் நிக்கிறத... 

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீச்சீ நீங்கள் திட்டினா மாதிரித் திட்டேல்லை. எங்க ஏமலாந்திக்கொண்டு இதை எடுத்து வந்தனீங்கள் எண்டு மட்டும் ஏ ...சின்னான்  😃

 மனிசி திட்டுறதை அப்பிடியே நினைவு வச்சிருக்கிறீங்கள் போல 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Nathamuni said:

சீரகம், வாங்குறார்... சீரகம்.... சீரகம் தெரியாமலே இம்மளவு நாளும் சாப்பிட்டு, சுக்கு கோப்பியும் குடிச்சு எழும்பியிருக்கிறார். வாங்கிக் கொண்டு வாறார்... டில் சீட் வடிவா போடிருக்குது. சீரகம் எண்டு எதோ ஒரு கோதாரியை... பார்த்து வாங்கிறீரேலியா, கண் என்ன பிராடீக்க வைச்சு கொண்டே வாங்குறது. 

ஒரு கோதரியும் தெரியாம வளர்த்து, எண்ட தலையில கட்டி அடிச்சு விட்டிருக்கினம்.... அப்பவும் சொல்லுறானான் நான் அங்க சரணிலை வாங்குவேன் எண்டு... நான் வாங்குறன்.... கிளிக்குறன் எண்டு....

எங்க இந்த மனிசன்....

பிள்ளை அப்பர் எங்க....

கார்டனுக்குல நிக்கிறார்.

உங்க பாரன்... தொண்ட கிழிய இந்த கத்து கத்துறன். நசுக்கிடாம அங்க போய் நிக்கிறத... 

இதுக்கு தான்.....😂😂😂😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, MEERA said:

இதுக்கு தான்.....😂😂😂😂

Image result for moving emoji

உங்களுக்கும் மனிசியிட்டைத் திட்டு வாங்கி நல்ல உள்காயம் போல

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

Image result for moving emoji

உங்களுக்கும் மனிசியிட்டைத் திட்டு வாங்கி நல்ல உள்காயம் போல

எனக்கு உந்த பிரச்சனை இல்லை ...... தமிழ் கடைகளில் தான் பொருட்களை வாங்குவது.

தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் என்று பொங்கிவிட்டு இந்திய கடைகளில் கொள்வனவு செய்வது சரியா??? 🤔🤔🤔🤔

இப்ப சீரகம் வாங்கியாச்சா???? அல்லது வேணுமா???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

எனக்கு உந்த பிரச்சனை இல்லை ...... தமிழ் கடைகளில் தான் பொருட்களை வாங்குவது.

தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் என்று பொங்கிவிட்டு இந்திய கடைகளில் கொள்வனவு செய்வது சரியா??? 🤔🤔🤔🤔

இப்ப சீரகம் வாங்கியாச்சா???? அல்லது வேணுமா???

தமிழன் எண்டு அவை பாக்காயினம். நான் மட்டும் பாத்தா என் காசெல்லோ கரையும்.

அடுத்தநாள்  விடிய மனுசனை நம்பாமல் நானே போய் சீரகம் வாங்கியாச்சு. 

இப்ப சீரகம் போதும். முடிஞ்சா கேட்கிறன் 😃

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தமிழன் எண்டு அவை பாக்காயினம். நான் மட்டும் பாத்தா என் காசெல்லோ கரையும்.

அடுத்தநாள்  விடிய மனுசனை நம்பாமல் நானே போய் சீரகம் வாங்கியாச்சு. 

இப்ப சீரகம் போதும். முடிஞ்சா கேட்கிறன் 😃

பார்தீர்களா கடைசியில் தமிழன் தான் கைகொடுத்திருக்கிறான்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

பார்தீர்களா கடைசியில் தமிழன் தான் கைகொடுத்திருக்கிறான்...

டூட்டிங் பக்கம் போயிருந்தா ஏதாவது ஒரு கடையில் வாங்கியிருக்கலாம். ஆனால் பஞ்சியில் போகவில்லை. தமிழன் சும்மாவா தூக்கிக்கொடுத்தான். சரணின் எல்லாம் இருக்கும் தான். ஆனால் விலை அதிகம் மட்டும் இல்லை. கன சாமான்கள் வாங்கினால் பில்லையும் கேட்டு வாங்கிப் பார்க்கவேணும். அல்லது வாங்காத பொருளுக்கும் சேர்த்து அடித்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலோ மேடம்....எக்ஸ்யூஸ் மீ!   எங்கடை ஆட்கள் எண்ட தலையங்கத்திலை என்ன விசயத்தை சொல்ல வந்தனீங்கள்? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

கலோ மேடம்....எக்ஸ்யூஸ் மீ!   எங்கடை ஆட்கள் எண்ட தலையங்கத்திலை என்ன விசயத்தை சொல்ல வந்தனீங்கள்? :cool:

உப்பிடி டக் கெண்டு கேட்டா அன்ரிக்கு ஹார்ட் அட்டாக் வந்துடும்.

எங்கடை ஆக்கள் எண்டால் எங்களுடைய தமிழ் ஆக்கள் அல்ல. 

எம்-கடை ஆக்கள். ஆகவே அதில் இந்திய கடைகாரார் பற்றி, வேற எது பற்றியும் எழுதலாம்🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, goshan_che said:

உப்பிடி டக் கெண்டு கேட்டா அன்ரிக்கு ஹார்ட் அட்டாக் வந்துடும்.

எங்கடை ஆக்கள் எண்டால் எங்களுடைய தமிழ் ஆக்கள் அல்ல. 

எம்-கடை ஆக்கள். ஆகவே அதில் இந்திய கடைகாரார் பற்றி, வேற எது பற்றியும் எழுதலாம்🤣

இல்லை....ரீல் வந்து இப்ப சீரக கட்டத்திலை ஓடிக்கொண்டிருக்கு.......அப்பிடியே அவிச்ச சீரகத்தண்ணியிலை ஓடி கொரோனாவுக்கும் சீரகத்தண்ணி நல்லது எண்டேக்கை இன்ரவெல் வரும்.....அதுக்குப்பிறகு அக்காச்சி வெந்தயம் எண்டுவா.....அதுக்குப்பிறகு எங்களைப்போல ஆக்கள் அடுப்பு மூட்டி வெந்தயம் ஊற வைச்சு அவி அவியெண்டு அவிச்சு உப்பு தூள் பால் விட்டு கறி இறக்க  அதுக்கை இரண்டு சண்டை காட்சியும் வர மிச்ச ரீல் அறுந்து  படலைக்கு வெளியிலை கிடக்கும்.😷

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சீச்சீ நீங்கள் திட்டினா மாதிரித் திட்டேல்லை. எங்க ஏமலாந்திக்கொண்டு இதை எடுத்து வந்தனீங்கள் எண்டு மட்டும் ஏ ...சின்னான்  😃

வீட்டுக்காரர் பாவம் அம்மணி, இந்தப் போடு போடுறீங்களே..? :)

(வெண்டைக்காயை முத்தலாக வாங்கி வந்ததற்கு வீட்டம்மாவிடம் நான் பெற்ற திட்டுக்களால் முழித்தது இப்போது ஞாபகம் வருகிறது..)

வீட்டுக்கு வீடு வாசப்படி..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

கலோ மேடம்....எக்ஸ்யூஸ் மீ!   எங்கடை ஆட்கள் எண்ட தலையங்கத்திலை என்ன விசயத்தை சொல்ல வந்தனீங்கள்? :cool:

மேல நான் எழுதினதை உங்களுக்கு காட்டுதில்லையோ ???? 😂

5 hours ago, ராசவன்னியன் said:

வீட்டுக்காரர் பாவம் அம்மணி, இந்தப் போடு போடுறீங்களே..? :)

(வெண்டைக்காயை முத்தலாக வாங்கி வந்ததற்கு வீட்டம்மாவிடம் நான் பெற்ற திட்டுக்களால் முழித்தது இப்போது ஞாபகம் வருகிறது..)

வீட்டுக்கு வீடு வாசப்படி..!

பொருட்கள் வாங்கும் விடையத்தில் திட்டு வாங்காத ஆண்களே இல்லைப் போல. 😃

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மேல நான் எழுதினதை உங்களுக்கு காட்டுதில்லையோ ???? 😂

பொருட்கள் வாங்கும் விடையத்தில் திட்டு வாங்காத ஆண்களே இல்லைப் போல. 😃

சாம்பார் மாதிரி கிடக்கு....எதையெண்டு பாக்க சொல்லுறியள்? 😎

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, MEERA said:

எனக்கு உந்த பிரச்சனை இல்லை ...... தமிழ் கடைகளில் தான் பொருட்களை வாங்குவது.

தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் என்று பொங்கிவிட்டு இந்திய கடைகளில் கொள்வனவு செய்வது சரியா??? 🤔🤔🤔🤔

இப்ப சீரகம் வாங்கியாச்சா???? அல்லது வேணுமா???

கேட்க்கிறேன் என்று கோவிக்காதீங்கோ ,நீங்கள் தமிழ்க் கடை வைத்து இருக்குறீங்களோ ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

கேட்க்கிறேன் என்று கோவிக்காதீங்கோ ,நீங்கள் தமிழ்க் கடை வைத்து இருக்குறீங்களோ ?

இல்லை, ஏற்கனவே எழுதியிருக்கிறேனே ........

தமிழ் கடைகளில் தான் பொருட்களை வாங்குவது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

இல்லை, ஏற்கனவே எழுதியிருக்கிறேனே ........

தமிழ் கடைகளில் தான் பொருட்களை வாங்குவது.

நான் முதலும் கேட்டானானா? ...மன்னித்து கொள்ளுங்கோ ...மறந்து போயிட்டுது 
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.