Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Hatton-Church-Religious-preacher-Isolation-Action-Corona-Virus-Alert.jpg

வெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்!

ஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா-தரவளைப் பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தின் மத போதகர் உட்பட ஒன்பது பேர் தேவாலயத்துக்குள்ளேயே நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து வருகைதந்திருந்த மதபோதகர் ஒருவருடன் இணைந்து ஆராதனைக் கூட்டம் நடத்தியமை, யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டமை ஆகியவற்றாலேயே குறித்த மதபோதகரும், அவருடன் நெருங்கிப் பழகியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, தமிழகம் திருநெல்வேலியிலிருந்து கடந்த 11ஆம் திகதி பாலசேகர் எனும் மதபோதகர் இலங்கை வந்துள்ளார். அதன் பின்னர் தரவளை தேவாலயத்திலுள்ள மதபோதகர் அவரை ஹற்றனுக்கு அழைத்துவந்துள்ளார்.

12, 13, 14, 15 ஆம் திகதிகளில் தரவளையில் ஆராதனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒருநாள் கூட்டத்தில் சுமார் 60 பேர் வரை கலந்துகொண்டுள்ளனர்.

அதன்பின்னர், திருநெல்வேலி போதகரும், இவரும் யாழ்ப்பாணத்துக்குச் சென்று அங்கு 16, 17ஆம் திகதிகளில் ஆராதனைக் கூட்டங்களை நடத்தியுள்ளனர்.

கொழும்பு வந்து திருநெல்வேலி போதகரை அனுப்பிவிட்டு தரவளைப் பகுதி போதகர், தேவாலயத்துக்கு வந்துள்ளார். அதன்பின்னரும் ஆராதனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தொடர்பாக தகவல்கள் வழங்குமாறு கோரப்பட்டிருந்த போதிலும் அந்த நடைமுறையை குறித்த போதகர் பின்பற்றவில்லை. தன்னை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையிலேயே நேற்று முதல் அவரும் அவருடன் தொடர்பைப் பேணிய 8 பேரும் தேவாலயத்திலேயே தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆராதனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

Hatton-Church-Religious-preacher-Isolation-Action-Corona-Virus-Alert-2.jpg

http://athavannews.com/வெளிநாட்டிலிருந்து-வந்-2/

  • Replies 130
  • Views 9.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனோ  வைரஸை விட இந்த மதம் மாற்றும் கொள்ளைக்கார கூட்டத்திடம் இருந்து தமிழ்ச்சனம் தப்புவதுதான் பெரும்பாடாய் இருக்கப்போவுது .

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

கொரோனோ  வைரஸை விட இந்த மதம் மாற்றும் கொள்ளைக்கார கூட்டத்திடம் இருந்து தமிழ்ச்சனம் தப்புவதுதான் பெரும்பாடாய் இருக்கப்போவுது .

நாங்கள் மதம் மாற்றாமல் கொள்ளையடிக்கிறோம் அவர்கள் மதம் மாற்றிக் கொள்ளையடிக்கிறார்கள். 

வேறுபாடு பெரிதாக இல்லை 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

நாங்கள் மதம் மாற்றாமல் கொள்ளையடிக்கிறோம்

எனக்கு விளங்கவில்லை ?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

எனக்கு விளங்கவில்லை ?

தம்பி அந்த 10% கமிசனை சொல்லுது...

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு புரிஞ்சுட்டுது. எனக்கும் உதவாமல், ஊருக்கும் உதவாமல் நடுவிலயிருந்து அல்லாடிக்கொண்டு இருக்கும் என்னால எதுவுமே பண்ணமுடியலை எண்டு பொருள்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vanangaamudi said:

எனக்கு புரிஞ்சுட்டுது. எனக்கும் உதவாமல், ஊருக்கும் உதவாமல் நடுவிலயிருந்து அல்லாடிக்கொண்டு இருக்கும் என்னால எதுவுமே பண்ணமுடியலை எண்டு பொருள்.

எனக்கொரு உண்ம தெரிஞ்சாகோணும் சாமி..🤔

கிறீத்தவ சமயத்தின் மீது ஏன் உங்கள் எல்லோருக்கும் இவ்வளவு வெறுப்பு ? 

முசுலிம்கள் மாதிரி போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இராமல்  அல்லது  போராட்டத்திற்கெதிராக இயங்காதபடியாலா ?🤥

போராட்டத்தின்போது தோளோடு தோள் நின்றபடியாலோ ? 🤔

ஈழப் போராட்டத்தின்போது சகல மக்களுக்கும் சாதி சமயம் பிரதேசம் பாராமல் உழைத்தபடியாலோ ? ☹️

போராட்டத்தில் சைவ சமய அமைப்புக்கள் எதுவுமே பங்கெடுக்காதபோது இவர்கள் சகலவிதமான துன்பங்களையும் மக்களோடு மக்களாக நின்று எதிர்கொண்ட காரணத்திற்காகவா இந்த வெறுப்பு ?🤧

போராட்டத்திற்காக சிறை சென்று, உயிர் கொடுத்து, காணாமல் போய் என போராளிகளுக்கு ஈடாக களத்தில் நின்றதனாலா இந்த வெறுப்பு ? 😂

சமயம் சாராது இனம் சார்ந்து நின்ற காரணத்தால் இந்த வெறுப்பு ஏற்பட்டதா ? 😂😂😂

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் சாமி .. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும்...😡

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

தம்பி அந்த 10% கமிசனை சொல்லுது...

சைவர்களும் இந்துக்களும் தட்டில் போடுகின்றனர். சைவ சமயத்திலிருந்தும் இந்து மதத்திலிருந்தி மதம் மாறியோர் கொமிசனாகக் கொடுக்கினம் என்று நினைக்கிறன். ஆனால் ஐயரும் போதகரும் தங்கள் பொக்கற்றில் போடுகின்றனர். இதில் ஒன்றும் வேறுபாடு இல்லையே ? 

10% தான் கண்ணுக்குக் குத்துதென்றால் நீங்களும்  போதகராக வேண்டியதுதானே. மதம் மாறுதல் உங்களுக்கென்ன புதுசா ? இல்லையே ? 😂😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

மகாபாரத்திலும் ராமாயணத்திலும் இருப்பது என்ன பைபிளில் இருக்கிறது?
இவருடைய வாதம் மிகவும் தவறானது 
இவர் மூன்றில் ஒன்றைக்கூட வாசிக்கவில்லை 
மகாபாரதம் ராமாயணம் இரண்டிலும் பெண்களுக்குக்காக சண்டை போடுவதும் 
பெண்களுடன் பல ஆண்கள் படுப்பதும்  இன்னொருவன் மனைவியை இன்னொருவன் 
தூக்குவதும் என்ற தரம் கேட்ட விடயம்தான் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இதயம் என்பது சதைதான் என்றால் எரிதணல் தின்றுவிடும்..

அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்..

அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா..

மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா..

கொரோனோ வைரசை விட அதிக உயிர்களை இந்த பூமியில் பறித்த கொடிய வைரஸ் மதவைரஸ்.. 

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதயம் என்பது சதைதான் என்றால் எரிதணல் தின்றுவிடும்..

அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்..

அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா..

மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா..

கொரோனோ வைரசை விட அதிக உயிர்களை இந்த பூமியில் பறித்தது மதவைரஸ்.. 

இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ?🤔

பாவம் புத்தனும் யேசுவும் காந்தியும். 

சக மனிதனை மதிப்பதற்கு மதம் எதற்கு ? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ?🤔

பாவம் புத்தனும் யேசுவும் காந்தியும். 

சக மனிதனை மதிப்பதற்கு மதம் எதற்கு ? 🤔

நான் ஒரு நீச்சல் தடாகத்தின் விளிம்பில் இருந்துகொண்டிருக்கின்றேன்

என் கால்கள் அந்த ஆழமான தொட்டி நீரை அடித்து விளையாடிக் கொண்டிருகின்றன

அங்கே வந்து யாரோ ஒருவர் - என்னைத் தண்ணீரில் தள்ளி விடுகிறார் !

எனக்கு நீச்சல் தெரியாது என்று அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான் !

நான் நீரில் அமிழ்ந்துகொண்டிருக்கின்றேன் . . . .

அப்படி அவருக்குத் தெரிந்திருந்தால்

சிலவேளை என்னைத் தள்ளியிருக்க மாட்டாரோ

மூழ்கும் நேரத்திலும் என் சிந்தனை பலமாய் வேலை செய்கிறது

என் கால்கள் அடி நிலத்தைத் தொட்ட பின் மேலெழுந்து மீண்டு வருகின்றேன்

எனக்குத் தெரியும் ,

என் தலை வெளிப்பட்டு மீண்டும்

நீரில் அமிழும் முன்

உதவி கோரிக்காப்பற்றுங்கள்

என்று கத்தவேண்டும்

ஆனாலும் அந்தக் கணத்தில் நான் மறந்தே போய்விட்டேன்

எந்தக்கடவுளிடம் மன்றாடவேண்டும் என்பதையும்

எந்தநாட்டில் இருக்கின்றேன் என்பதையும்

நான் எந்த மொழியில் உதவி குரல் கொடுக்க வேண்டும் என்பதையும்

Tal Nitzán(இஸ்ரேல்)

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Maruthankerny said:

மகாபாரத்திலும் ராமாயணத்திலும் இருப்பது என்ன பைபிளில் இருக்கிறது?
இவருடைய வாதம் மிகவும் தவறானது 
இவர் மூன்றில் ஒன்றைக்கூட வாசிக்கவில்லை 
மகாபாரதம் ராமாயணம் இரண்டிலும் பெண்களுக்குக்காக சண்டை போடுவதும் 
பெண்களுடன் பல ஆண்கள் படுப்பதும்  இன்னொருவன் மனைவியை இன்னொருவன் 
தூக்குவதும் என்ற தரம் கேட்ட விடயம்தான் இருக்கிறது.

அது அல்ல விடயம் மருதர்.  கோபப்படுபவர் தனக்குத் தெரிந்த மகா பாரதத்தையும் இராமாயணத்தையும் சொல்கிறார். அதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. 

போதகர் மதம் பரப்புவது அவருடைய உரிமை. ஆனால் அவர் தெரிந்தெடுத்த இடம் மிகவும் பிழையானது.. இதே விடயத்தை பள்ளிவாயலருகிலோ அல்லது விகாரைக்கருகிலோ செய்ய முனைவாரா ? நிச்சயமாக இல்லை. 

ஆனால் நல்ல விடயம் என்னவென்றால் இருபகுதியினரும் அமைதியாக இருக்கின்றனர். யாழ் களத்தில் வரும் பல கருத்துக்களைவிட இங்கே கோபம் கொள்பவர் எவ்வளவோ மேல்.😀

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

இந்தியாவில் வெள்ளையாகலாம் என்று எண்ணி 
கோடி கணக்கான பெண்கள் பெயர் அண்ட் லவ்ல்லி (Fair & Lovely ) பூசுகிறார்கள் 

ஆனால் வெள்ளைக்காரிகள் இந்தியாவுக்கு வர கூடாது என்று 
யாரும் ஆர்ப்பாட்டம் செய்வதில்லையே? 

எனக்கு இதுதான் புரியவில்லை.
உங்கள் மதம்தான் உலகிலேயே சிறந்த மதம் என்றால் அது பெருமைக்கு உரிய விடயம்தானே 
ஏன் மதம் மாற்றுபவனை பார்த்து பதறுகிறீர்கள்? 
எனக்கு இந்த பதற்றத்துக்கான காரணம் புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Maruthankerny said:

இது கேள்வி. 

எல்லாம் உளவியல்தான். நாங்கள் ஏற்கனவே ஒரு பாவப்பட்ட இனம். அழிந்துபோய் நிற்கிறோம். இருக்கிறதும் இல்லாமல் போய்விடுமோ என்கின்ற பதட்டத்தில் வாறவன் போறவன் கூட இருப்பவன் எல்லோருக்கும் ஏச்ச்சுதான். 

என்னைப் பொறுத்தவரை நான் இவ்வாறுதான் பார்க்கிறேன்.....

சைவ சமயத்திற்கு ச்ரியான வளிநடாத்தக்கூடிய தலமைத்துவம் இல்லை. சமயத்தில் காலவோட்டத்தில் ஒட்டிக் கொண்ட குறைபாடுகள் (சாதி, மூட பழக்க வழக்கம் போன்ற...) சமயத்தின் உண்மையான பக்கத்தை மறைத்து போலியான தோற்றத்தை கொடுக்கிறது. இவற்றை எல்லோரும் உணர்ந்து கொண்ட போதும் பூனைக்கு யார் மணி கட்டுவது என்கின்ற பயத்தில் உள்ளனர். அதாவதுக் வெடித்த  மெல்லிய கண்ணாடிக் குவளையின் நிலையில் எம் மக்கள் உள்ளனர். யார் சிறிய தட்டுத் தட்டினாலும் சமய நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாகும். இதனைத் தவிர்க்கவே நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கும் யாரும் அருகில் வந்தால் உடனே தற்காப்பு நிலையெடுத்து நீ மட்டும் சரியா? நீ இன்னாளின் மகன்தானே. உன்னைப்ப்ற்றி எங்களுக்குத் தெரியாதா ? உன்ர குலம் என்ன கோத்திரம் என்ன? என்னை கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதியிருக்கு ?  போன்ற ஆயுதங்களால் மல்ரி பரல் அடியடிச்சு கேள்வி கேட்க வந்தவனை அடிச்சுத் துரத்துகின்றனர். 

சுருக்கமாகச் சொல்லப்போனால் சரியாக வழி நடாத்தக்கூடிய தலைமை இல்லை. அதன் விளைவுதான் இவர்களின் கோபம். 😕

(தேவையேற்படின் காத்திரமான விளக்கத்தை பின்னர் தருகிறேன்.)

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kapithan said:

இதனைத் தவிர்க்கவே நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கும் யாரும் அருகில் வந்தால் உடனே தற்காப்பு நிலையெடுத்து நீ மட்டும் சரியா? நீ இன்னாளின் மகன்தானே. உன்னைப்ப்ற்றி எங்களுக்குத் தெரியாதா ? உன்ர குலம் என்ன கோத்திரம் என்ன? என்னை கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதியிருக்கு ?  போன்ற ஆயுதங்களால் மல்ரி பரல் அடியடிச்சு கேள்வி கேட்க வந்தவனை அடிச்சுத் துரத்துகின்றனர். 

யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் தைரியம் இல்லை என்று சொல்கிறீர்கள்? நீங்கள் குறிப்பிட்டவற்றை கூறி தங்களை மறைத்துக் கொள்கிறார்கள் எனில், அங்கு எந்த மாற்றமும் நிகழாது... நிகழ்த்தவும் முடியாது. தட்டிவிட்டு வெளியேறி விடவேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

சாத்தான்

குறைகூறுவதல்ல என் நோக்கம். பிரசிசனையை அடையாளம் காண்பதும் அதனைத் தீர்த்து வைத்தலும்தான் சரியான தலைமைத்துவம் செய்யும். அதனை தெடர்ச்சியாகச் செய்யுமிடத்து மக்கள் பதற்றப்டவேண்டிய தேவை ஏற்படாது. ஆறுமுக நாவலரின் பின்னர் (சர்ச்சைகளைத் தவிர்த்து), சரியான தலமைத்துவம் சைவர்களுக்கில்லை என்பது பெருங்குறைபாடு. எமது போராட்டத்தில் சைவ சமய ரீதியிதியிலான பங்களிப்பு இன்மையை பெருங் குறைபாடாகப் பார்க்கிறேன். 

சரியான தலைமை எப்போதும் மக்களை ஒன்று சேர்க்குமே தவிர பிரிக்காது. 

அந்தப் பெருங் குறைபாடுதான் எம்மவர்கள் சமய ரீதியாக சாதி அடிப்படையில் பிரதேச வாதமாக பிரிந்துனின்று அடிபடக்  காரணமாகிறது என்று நம்புகிறேன்.

வணங்காமுடியிடமும் மற்றைய கிறீத்துவ எதிர்ப்பாளர்களிடமும் ஏன் இந்த  கிறீத்துவ வெறுப்பு என்று கேட்டிருந்தேன் ?

இதய சுத்தியான பதிலை எதிர்ப்பார்க்கிறேன்.

ஐஆம் வெய்ரிங். 😀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இது கேள்வி. 

எல்லாம் உளவியல்தான். நாங்கள் ஏற்கனவே ஒரு பாவப்பட்ட இனம். அழிந்துபோய் நிற்கிறோம். இருக்கிறதும் இல்லாமல் போய்விடுமோ என்கின்ற பதட்டத்தில் வாறவன் போறவன் கூட இருப்பவன் எல்லோருக்கும் ஏச்ச்சுதான். 

என்னைப் பொறுத்தவரை நான் இவ்வாறுதான் பார்க்கிறேன்.....

சைவ சமயத்திற்கு ச்ரியான வளிநடாத்தக்கூடிய தலமைத்துவம் இல்லை. சமயத்தில் காலவோட்டத்தில் ஒட்டிக் கொண்ட குறைபாடுகள் (சாதி, மூட பழக்க வழக்கம் போன்ற...) சமயத்தின் உண்மையான பக்கத்தை மறைத்து போலியான தோற்றத்தை கொடுக்கிறது. இவற்றை எல்லோரும் உணர்ந்து கொண்ட போதும் பூனைக்கு யார் மணி கட்டுவது என்கின்ற பயத்தில் உள்ளனர். அதாவதுக் வெடித்த  மெல்லிய கண்ணாடிக் குவளையின் நிலையில் எம் மக்கள் உள்ளனர். யார் சிறிய தட்டுத் தட்டினாலும் சமய நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாகும். இதனைத் தவிர்க்கவே நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கும் யாரும் அருகில் வந்தால் உடனே தற்காப்பு நிலையெடுத்து நீ மட்டும் சரியா? நீ இன்னாளின் மகன்தானே. உன்னைப்ப்ற்றி எங்களுக்குத் தெரியாதா ? உன்ர குலம் என்ன கோத்திரம் என்ன? என்னை கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதியிருக்கு ?  போன்ற ஆயுதங்களால் மல்ரி பரல் அடியடிச்சு கேள்வி கேட்க வந்தவனை அடிச்சுத் துரத்துகின்றனர். 

சுருக்கமாகச் சொல்லப்போனால் சரியாக வழி நடாத்தக்கூடிய தலைமை இல்லை. அதன் விளைவுதான் இவர்களின் கோபம். 😕

(தேவையேற்படின் காத்திரமான விளக்கத்தை பின்னர் தருகிறேன்.)

1 hour ago, satan said:

யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் தைரியம் இல்லை என்று சொல்கிறீர்கள்? நீங்கள் குறிப்பிட்டவற்றை கூறி தங்களை மறைத்துக் கொள்கிறார்கள் எனில், அங்கு எந்த மாற்றமும் நிகழாது... நிகழ்த்தவும் முடியாது. தட்டிவிட்டு வெளியேறி விடவேண்டியதுதான்.

பச்சை இல்லை குத்துவத்துக்கு ..........
என்னை பொறுத்தவரை சாக்கடை நாற தொடங்கி விட்டது 
இது நான் பல முறை இங்கே எழுதியது .... அடுத்த சந்ததி எம்மைவிட 
அறிவு மிகுந்தே இருக்கும் அவர்களிடம் கேள்விகள் இருக்கும் எம்மிடம் பதில் 
இல்லாதுபோனால் எமது மதம் மெல்ல மெல்ல அழிந்துபோகும் யாராலும் தடுக்க முடியாது என்று 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Maruthankerny said:

பச்சை இல்லை குத்துவத்துக்கு ..........
என்னை பொறுத்தவரை சாக்கடை நாற தொடங்கி விட்டது 
இது நான் பல முறை இங்கே எழுதியது .... அடுத்த சந்ததி எம்மைவிட 
அறிவு மிகுந்தே இருக்கும் அவர்களிடம் கேள்விகள் இருக்கும் எம்மிடம் பதில் 
இல்லாதுபோனால் எமது மதம் மெல்ல மெல்ல அழிந்துபோகும் யாராலும் தடுக்க முடியாது என்று 

மேற்கில் கிறித்துவத்திற்கும் இதே நிலைதான். ஆனால் அவர்கள் புத்திசாலிகள். சமயத்தை ஒரு நிறுவனத்திற்குரிய ஒழுங்குகளுடன் நடாத்துவதால் ஆய்வுகளினூடாக கண்டறியப்படுபவற்றை நடைமுறைப்படுத்த ஆயத்தமாக உள்ளனர். 

மாற்றங்களுக்கு சமய நிறுவனங்கள் றெடி. அவர்களுக்குத் தெரியும் இல்லாவிட்டால் என்ன நடக்குமென்று.

நாம்தான் மெல்லவும் முடியாமல் விழுங்கவும்  முடியாமல் அல்லல்படுகிறோம்☹️

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kapithan said:

எனக்கொரு உண்ம தெரிஞ்சாகோணும் சாமி..🤔

கிறீத்தவ சமயத்தின் மீது ஏன் உங்கள் எல்லோருக்கும் இவ்வளவு வெறுப்பு ? 

முசுலிம்கள் மாதிரி போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இராமல்  அல்லது  போராட்டத்திற்கெதிராக இயங்காதபடியாலா ?🤥

போராட்டத்தின்போது தோளோடு தோள் நின்றபடியாலோ ? 🤔

ஈழப் போராட்டத்தின்போது சகல மக்களுக்கும் சாதி சமயம் பிரதேசம் பாராமல் உழைத்தபடியாலோ ? ☹️

போராட்டத்தில் சைவ சமய அமைப்புக்கள் எதுவுமே பங்கெடுக்காதபோது இவர்கள் சகலவிதமான துன்பங்களையும் மக்களோடு மக்களாக நின்று எதிர்கொண்ட காரணத்திற்காகவா இந்த வெறுப்பு ?🤧

போராட்டத்திற்காக சிறை சென்று, உயிர் கொடுத்து, காணாமல் போய் என போராளிகளுக்கு ஈடாக களத்தில் நின்றதனாலா இந்த வெறுப்பு ? 😂

சமயம் சாராது இனம் சார்ந்து நின்ற காரணத்தால் இந்த வெறுப்பு ஏற்பட்டதா ? 😂😂😂

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் சாமி .. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும்...😡

நீங்கள் ,மொட்டந்தலைக்கும்,முழந்தாளுக்கும் முடிச்சு போடுகிறீர்கள்...இங்கு கிறிஸ்தவர்களாகிய கத்தோலிக்கர்களை ஒருத்தரும் வெறுக்கவில்லை ...அவர்கள் தான் போராட்டத்தில் உதவியவர்கள் ...அதில் தனியாக பாராட்டுவதற்கு என்ன இருக்கு?...அவர்களும் தமிழர்கள் தானே ...ஐயர்மார் பிராமண இனம் சார்ந்து போராட்டத்திற்கு உதவாமல் விட்டு இருக்கலாம்( ...மேலும் இவர்கள்  சொன்னால் யார் கேட்க்கிறாற்கள் )...ஆனால் எத்தனையோ பிராமண இளைஞ்ர்கள் போராட்டத்தில் பங்கு பற்றி இருக்கிறார்கள் ...உயிரையும் கொடுத்து இருக்கிறார்கள் 
 
13 hours ago, Maruthankerny said:

மகாபாரத்திலும் ராமாயணத்திலும் இருப்பது என்ன பைபிளில் இருக்கிறது?
இவருடைய வாதம் மிகவும் தவறானது 
இவர் மூன்றில் ஒன்றைக்கூட வாசிக்கவில்லை 
மகாபாரதம் ராமாயணம் இரண்டிலும் பெண்களுக்குக்காக சண்டை போடுவதும் 
பெண்களுடன் பல ஆண்கள் படுப்பதும்  இன்னொருவன் மனைவியை இன்னொருவன் 
தூக்குவதும் என்ற தரம் கேட்ட விடயம்தான் இருக்கிறது.

மருதர் ,நான் உங்கள் அளவுக்கு இவைகளை கரைத்து குடிக்கவில்லை ...ஆனால் பாரதம்,ராமாயணம்  போன்றவற்றை எப்படி ஒரு மனிதன் /சமூகம் பின்பற்ற கூடாது அல்லது கடைப்பிடித்தால் ஏற்படும் தீமைகளை இந்த இரு இரிகாசங்கள் படிப்பதன்  மூலம் பாடம் படித்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் 

12 hours ago, Maruthankerny said:

இந்தியாவில் வெள்ளையாகலாம் என்று எண்ணி 
கோடி கணக்கான பெண்கள் பெயர் அண்ட் லவ்ல்லி (Fair & Lovely ) பூசுகிறார்கள் 

ஆனால் வெள்ளைக்காரிகள் இந்தியாவுக்கு வர கூடாது என்று 
யாரும் ஆர்ப்பாட்டம் செய்வதில்லையே? 

எனக்கு இதுதான் புரியவில்லை.
உங்கள் மதம்தான் உலகிலேயே சிறந்த மதம் என்றால் அது பெருமைக்கு உரிய விடயம்தானே 
ஏன் மதம் மாற்றுபவனை பார்த்து பதறுகிறீர்கள்? 
எனக்கு இந்த பதற்றத்துக்கான காரணம் புரியவில்லை.

ஏன் அவர்களை பார்த்து பதறுகிறார்கள் என்றால் அந்த மக்களது இயலாமையை ,வறுமையை ,சூழ்நிலையை பயன்படுத்தி மதம் மாற்றுகிறார்கள் என்பதால் தான் ...இது தான் என் மதம் ,இதில் இன்னன்ன நல்ல விடயங்கள் சொல்லி இருக்கு ...என்னுடைய மதத்திற்கு வாறீ யா என்றால் யார் போகப் போறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

மேற்கில் கிறித்துவத்திற்கும் இதே நிலைதான். ஆனால் அவர்கள் புத்திசாலிகள். சமயத்தை ஒரு நிறுவனத்திற்குரிய ஒழுங்குகளுடன் நடாத்துவதால் ஆய்வுகளினூடாக கண்டறியப்படுபவற்றை நடைமுறைப்படுத்த ஆயத்தமாக உள்ளனர். 

மாற்றங்களுக்கு சமய நிறுவனங்கள் றெடி. அவர்களுக்குத் தெரியும் இல்லாவிட்டால் என்ன நடக்குமென்று.

நாம்தான் மெல்லவும் முடியாமல் விழுங்கவும்  முடியாமல் அல்லல்படுகிறோம்☹️

இது தான் அந்த ஆய்வுகளின் ஊடாக

16 hours ago, Kapithan said:

எனக்கொரு உண்ம தெரிஞ்சாகோணும் சாமி..🤔

கிறீத்தவ சமயத்தின் மீது ஏன் உங்கள் எல்லோருக்கும் இவ்வளவு வெறுப்பு ? 

முசுலிம்கள் மாதிரி போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இராமல்  அல்லது  போராட்டத்திற்கெதிராக இயங்காதபடியாலா ?🤥

போராட்டத்தின்போது தோளோடு தோள் நின்றபடியாலோ ? 🤔

ஈழப் போராட்டத்தின்போது சகல மக்களுக்கும் சாதி சமயம் பிரதேசம் பாராமல் உழைத்தபடியாலோ ? ☹️

போராட்டத்தில் சைவ சமய அமைப்புக்கள் எதுவுமே பங்கெடுக்காதபோது இவர்கள் சகலவிதமான துன்பங்களையும் மக்களோடு மக்களாக நின்று எதிர்கொண்ட காரணத்திற்காகவா இந்த வெறுப்பு ?🤧

போராட்டத்திற்காக சிறை சென்று, உயிர் கொடுத்து, காணாமல் போய் என போராளிகளுக்கு ஈடாக களத்தில் நின்றதனாலா இந்த வெறுப்பு ? 😂

சமயம் சாராது இனம் சார்ந்து நின்ற காரணத்தால் இந்த வெறுப்பு ஏற்பட்டதா ? 😂😂😂

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் சாமி .. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும்...😡

போராட்டத்தில் அதிகம் உயிரிழந்தது சைவர்களே! 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, MEERA said:

போராட்டத்தில் அதிகம் உயிரிழந்தது சைவர்களே! 

இலங்கையில் நீண்டகாலமாகவே முஸ்லிம்-தமிழர்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத தமிழர்கள் மதரீதியாக பிளவுபடுத்தப்பட்டுள்ள சூழலில் அண்மைக் காலமாக இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மத்தியில் மோதலை உருவாக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டது பலருக்கும் தெரிந்த விடயமே. 

அவை இயல்பாக நிகழ்ந்தனவா அல்லது திட்டமிடப்பட்டு தூண்டி விடப்பட்டனவா என்பது இலங்கைத் தமிழர்கள் தங்களைத் தாங்களே கேட்கவேண்டிய கேள்வியாக உள்ளது. 

இதன் பின்புலமாக வெளிச் சக்திகள் இருந்திருக்கலாம் அல்லது எமது மூடத்தனமான, உணர்ச்சிவசப்பட்ட செயற்பாடுகள் காரணமாக இருந்திருக்கலாம். காரணிகள் எதுவாக இருந்தாலும் இறுதியில் எமது அறியாமையே தமிழ் மக்களுக்கு கொரானா வைரஸை விட அதிக அழிவை எதிர் காலத்தில் ஏற்படுத்தலாம். 

அதேநேரத்தில் எந்த மதப்பிரிவினராக இருந்தாலும் ஒரு விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறும்போதும் உணர்ச்சிவசப்படாமல் மிக பண்பாடாகவும் ஒருவரை ஒருவர் தூற்றாமலும் தவறுகளை இனங்கண்டு திருத்த முற்படுவதே தமிழ் மக்களுக்கு  நன்மை தரும் செயலாக அமையும். 

தமிழ்ச் சமூகம் என்றும் நின்று நிதானித்து செய்திகளை ஆராய்ந்து தங்களுக்கிடையில் ஆரோக்கியமான சமூக ஊடாட்டங்களை முன்னெடுத்துச் செல்லவேண்டும். 

இதுபோன்ற ஒரு சூழ்நிலைதான் நம் தொப்புள் கொடி உறவாக நாம் கொண்டாடும் தமிழ்நாட்டிலும் இருக்கிறது. அங்கு மதப் பிரிவினை போதாதென்று சாதியென்ற மிகப் பெரும் அழிவு ஆயுதமும் பயன்படுத்தப்படுகிறது. வடமாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மதவெறியர்களால் முன்னெடுக்கப்பட்ட படுகொலைத் தாக்குதல்களும், தொடர்ச்சியாக இந்தியாவின் பல பாகங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மதவெறித் தாக்குதல்களையும் இங்கு குறிப்பிடலாம். 

அரசியல்வாதிகளும் அரசும் ஓரளவுக்குத்தான் இனங்களுக்கிடையிலான மற்றும் மதங்களுக்கிடையிலான பிரச்சனையில் தலையிடுவார்கள். காரணம் இவ்வாறான பிரச்சனைகளில் தலையிடுவது தங்கள் தலைக்கே கத்தியாக வரும் என்பதை அவர்கள் அறிவார்கள் அதனால் அதில் தங்களுக்கு எதாவது அரசியல் இலாபம் வருமென்றால், அடுத்த தேர்தலில் அதனைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தலாம் என்று தெரிந்தால் அதற்கு ஏற்றவகையில் தலையிடுவார்கள். அவர்களுக்காகத்தான் நீங்களேயன்றி உங்களுக்காக அவர்கள் இல்லை என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். தனி மனிதர்களின் (அரசியல்வாதிகள், சுயநல மதத் தலைவர்கள்) இலாபங்களுக்காக  தமிழர்களிடையே மோதல் ஏற்பட நீங்களும் காரணமாக இருந்து விடாதீர்கள். 

தமிழ்ச் சமூகம் அழிவடைந்ததற்கு 1008 உதாரணங்கள் அனுபவங்களுடன் இருக்கும்போது அவற்றை சீர்தூக்கிப் பார்த்துப் பாடம் கற்றுக் கொள்ளாது,  எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற வகையிலான செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் மிகையாக இருக்கும் சூழல் மாற்றப்பட வேண்டும். 

இது கடந்த காலங்களில் எமது சமூகத்துக்கு ஒரு நோயாக இருந்ததனால்தான்  நாம் பெரும் அழிவுகளைச் சந்தித்தோம், சந்தித்தும் வருகிறோம் என்பதை இந்த சூழலில் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இனியாவது கொஞ்சம் சிந்திப்போம். சரி செய்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

நான் மேற்கோள் காட்டிய விடயம், குறித்த நபரால் பதிவு செய்யப்பட்டு 16 மணித்தியாலங்களையும் கடந்தபின்பும் மெளனமாக இருந்துவிட்டு இப்போது நான் எழுதியதை மட்டும் மேற்கோள் காட்டுவது சரியா??

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, MEERA said:

இது தான் அந்த ஆய்வுகளின் ஊடாக

போராட்டத்தில் அதிகம் உயிரிழந்தது சைவர்களே! 

முடியாது.. போராட்டத்தில் அதிகமாக உயிரிழந்தது எங்க ஊர்க்காறனுங்கதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.