Jump to content

மரவள்ளி கிழங்கும் பூசணிக்காயும்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

நீண்ட காலமாக மரவள்ளியும் பூசணியும் சேர்த்து வீட்டில் கறி வைப்பது வழமை.பலருக்கும் மரவள்ளி கறி பிடிக்கும்.ஆனால் நிறைய பேருக்கு பூசணிக்காய் கறி பிடிக்கவே பிடிக்காது.ஆனால் இந்த இரண்டையுமே சேர்த்து செய்தால் விரும்பி சாப்பிடாதவர்களே இருக்க முடியாது.
         அத்துடன் மிகவும் இலகுவான முறையிலான சுவையான சமையல்.
          மரவள்ளி வாங்கும் போது அடி வேர்ப்பகுதி மெல்லிதாக இருப்பதை வாங்குங்கள்.மேலிருந்து கீழ்வரை நகத்தால் இடைஇடையே சுரண்டிப் பாருங்கள்.(கடைக்காரரும் உங்களை பார்க்கிறார்களா என்பதையும் பாருங்கள்)ஏதாவது கறுப்பாக தெரிந்தால் வாங்காதீர்கள்.பால் போல வெள்ளையாக இருந்தால் மட்டும் வாங்குங்கள்.நுனி கொஞ்சம் கறுத்து பழுதாகி இருந்தால் பரவாயில்லை.சிறிய துண்டு தானே வெட்டி எறியலாம்.
            பூசணி வாங்க எவருக்கும் சொல்லத் தேவையில்லை.இருந்தாலும் மஞ்சள் நிறமாக உள்ளதை பார்த்து வாங்குங்கள்.
செய்முறை:-
மரவள்ளி  சிறிய சிறிய துண்டுகளாக வேர் வெட்டுப்படாமல் வெட்டி ஒரு சட்டியில் போடுங்கள்
இதே மாதிரி துண்டுகளாக பூசணியையும் வெட்டி இன்னொரு சட்டியில் வையுங்கள்
இரண்டையும் அருகருகே வைத்து சரியான அளவு இருக்கிறதா என்பதை பாருங்கள்.(ஒரு மரவள்ளியையும் ஒரு பூசணியையும் போட்டு கறி ஆக்கிறல்லை.
இப்போ இரண்டையும் ஒன்றாக்கி நன்றாக கழுவி எடுத்து சமைக்கும் பாத்திரத்தில் போடுங்கள்.(தனித்தனியாகவும் கழுவி எடுக்கலாம்.)
சிறிது வெண்காயம்.
3-4 பச்சை மிளகாய்.
தேவையான உப்பு
கிறிவேப்பிலை இருந்தால் இதிலும் ஒரு 10 இலைவரை போடுங்கள்.
மிளகாய்த்தூள் 1-2 தேக்கரண்டி போடலாம்.
அடுத்து தண்ணீர் விடுவது.இதிலே கொஞ்சம் கவனம் தேவை.கூட தண்ணீர் விட்டால் கறி ஒன்று சேராமல் தண்ணியாக இருக்கும்.எனவே போட்டதை மூடி நிற்குமளவுக்கு தப்புத் தண்ணீராக விடுங்கள்.
ஒரு அளவான நெருப்பில் 20-25 நிமிடங்கள் வைத்தால்ப் போதும்.சில கிழங்கு அவிய நேரமெடுக்கும் எனவே கிழங்கை அவிந்து விட்டதா என்பதை நசித்து பாருங்கள்.தண்ணீர் பற்றாவிட்டால் சிறிது சிறிதாக சேருங்கள்.
நன்றாக அவிந்த பின் கொஞ்சம் மசித்து விடுங்கள்.
கரண்டியில் எடுத்தால் தண்ணீராக ஓடவும் கூடாது.கறி முழுக்க விழவே மாட்டேன் என்று கரண்டியிலும் நிறக்கக் கூடாது.
இது இறக்கி வைத்த பின் கொஞ்சம் ஆற கறி கொஞ்சம் இறுகும்.
இதற்கு புளி எதுவும் தேவையில்லை.புளி இதன் சுவையை மாற்றி விடும்.

குறை இருப்பின் என்னிடம் சொல்லுங்கள்
நிறை இருப்பின் மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.

மரவள்ளியும் இஞ்சியும் சேரும் போது நஞ்சு என்கிறார்கள்.எனவே அன்றைய தினம் இஞ்சியைத் தவிருங்கள்.
நன்றி.

6-C781-CB1-ACAD-4739-AAE8-AB8326010-EC7.

E1-E15-B5-A-82-F9-4-C91-99-E1-98-E918765

887-E3-C74-F947-4160-BD5-B-8-DA67-F39758

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Suchergebnis auf Amazon.de für: pfeffermahlwerk

ஈழப்பிரியன்...  பகிர்விற்கு நன்றி. :)
இதற்கு... 10 -15 மிளகு (பவுடராக இல்லாமல்) குத்திப் போட்டால்  இன்னும் சுவை கூடும்.

மரவள்ளிக் கிழங்கும், பூசணிக்காயும் சேர்த்து கறி  வைக்கும் முறையை....
திருச்சியை சேர்ந்த நண்பர் ஒருவர் கூறியதன் பின் நாமும் செய்து பார்த்தோம். 
மிகவும் வித்தியாசமான சுவையாக இருந்தது. 👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முக்கியமாக இதற்கு வெங்காயமும் செத்தல் மிளகாயும் வதக்கிப் போட்டால் தனி சுவை அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, சுவைப்பிரியன் said:

இஞ்சிச் சம்பலும் சேர்த்து சாப்பிட்டால் துக்கும்.

சுவை என்ன விளையாட்டு இது.....சிலசமயம் ஆளையே தூக்கி விட்டுவிடும்.கவனம்.....கிழங்கு கொஞ்சம் பழுதாக இருந்தால் இஞ்சி சேரும்பொழுது நஞ்சாகி விடும்......!

பிரியன், வெறி குட் காம்பினேஷன்....கெமிஸ்ட்ரி சூப்பர்.....நாங்கள் செய்து சாப்பிடுவது வழக்கம்....!  👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, தமிழ் சிறி said:

Suchergebnis auf Amazon.de für: pfeffermahlwerk

ஈழப்பிரியன்...  பகிர்விற்கு நன்றி. :)
இதற்கு... 10 -15 மிளகு (பவுடராக இல்லாமல்) குத்திப் போட்டால்  இன்னும் சுவை கூடும்.

மரவள்ளிக் கிழங்கும், பூசணிக்காயும் சேர்த்து கறி  வைக்கும் முறையை....
திருச்சியை சேர்ந்த நண்பர் ஒருவர் கூறியதன் பின் நாமும் செய்து பார்த்தோம். 
மிகவும் வித்தியாசமான சுவையாக இருந்தது. 👍

19 hours ago, suvy said:

பிரியன், வெறி குட் காம்பினேஷன்....கெமிஸ்ட்ரி சூப்பர்.....நாங்கள் செய்து சாப்பிடுவது வழக்கம்....!  👍

அட நான் நினைச்சன் இப்படி ஒருவரும் சமைக்கிறதில்லை என்று.அது தான் அடித்து புரட்டி படங்களையும் போட்டு நேரத்தை வீணாக்கிப் போட்டன் போல.

20 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

முக்கியமாக இதற்கு வெங்காயமும் செத்தல் மிளகாயும் வதக்கிப் போட்டால் தனி சுவை அண்ணா.

முந்தி ஒருகாலம் சமையல் முடிந்த பின் தாழித்து எல்லா கறிக்கும் போடுறது.97 இல் நெஞ்சுக்குள் வலை வைத்த பின் எண்ணெய் சாப்பாடுகளை கண்ணிலும் காட்ட மாட்டார்கள்.

20 hours ago, சுவைப்பிரியன் said:

இஞ்சிச் சம்பலும் சேர்த்து சாப்பிட்டால் துக்கும்.

ஓம் ஓம் ஒரேயடியாய் தூங்க வைத்தாலும் வைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, ஈழப்பிரியன் said:

நீண்ட காலமாக மரவள்ளியும் பூசணியும் சேர்த்து வீட்டில் கறி வைப்பது வழமை.பலருக்கும் மரவள்ளி கறி பிடிக்கும்.ஆனால் நிறைய பேருக்கு பூசணிக்காய் கறி பிடிக்கவே பிடிக்காது.ஆனால் இந்த இரண்டையுமே சேர்த்து செய்தால் விரும்பி சாப்பிடாதவர்களே இருக்க முடியாது.
         அத்துடன் மிகவும் இலகுவான முறையிலான சுவையான சமையல்.
          மரவள்ளி வாங்கும் போது அடி வேர்ப்பகுதி மெல்லிதாக இருப்பதை வாங்குங்கள்.மேலிருந்து கீழ்வரை நகத்தால் இடைஇடையே சுரண்டிப் பாருங்கள்.(கடைக்காரரும் உங்களை பார்க்கிறார்களா என்பதையும் பாருங்கள்)ஏதாவது கறுப்பாக தெரிந்தால் வாங்காதீர்கள்.பால் போல வெள்ளையாக இருந்தால் மட்டும் வாங்குங்கள்.நுனி கொஞ்சம் கறுத்து பழுதாகி இருந்தால் பரவாயில்லை.சிறிய துண்டு தானே வெட்டி எறியலாம்.
            பூசணி வாங்க எவருக்கும் சொல்லத் தேவையில்லை.இருந்தாலும் மஞ்சள் நிறமாக உள்ளதை பார்த்து வாங்குங்கள்.
செய்முறை:-
மரவள்ளி  சிறிய சிறிய துண்டுகளாக வேர் வெட்டுப்படாமல் வெட்டி ஒரு சட்டியில் போடுங்கள்
இதே மாதிரி துண்டுகளாக பூசணியையும் வெட்டி இன்னொரு சட்டியில் வையுங்கள்
இரண்டையும் அருகருகே வைத்து சரியான அளவு இருக்கிறதா என்பதை பாருங்கள்.(ஒரு மரவள்ளியையும் ஒரு பூசணியையும் போட்டு கறி ஆக்கிறல்லை.
இப்போ இரண்டையும் ஒன்றாக்கி நன்றாக கழுவி எடுத்து சமைக்கும் பாத்திரத்தில் போடுங்கள்.(தனித்தனியாகவும் கழுவி எடுக்கலாம்.)
சிறிது வெண்காயம்.
3-4 பச்சை மிளகாய்.
தேவையான உப்பு
கிறிவேப்பிலை இருந்தால் இதிலும் ஒரு 10 இலைவரை போடுங்கள்.
மிளகாய்த்தூள் 1-2 தேக்கரண்டி போடலாம்.
அடுத்து தண்ணீர் விடுவது.இதிலே கொஞ்சம் கவனம் தேவை.கூட தண்ணீர் விட்டால் கறி ஒன்று சேராமல் தண்ணியாக இருக்கும்.எனவே போட்டதை மூடி நிற்குமளவுக்கு தப்புத் தண்ணீராக விடுங்கள்.
ஒரு அளவான நெருப்பில் 20-25 நிமிடங்கள் வைத்தால்ப் போதும்.சில கிழங்கு அவிய நேரமெடுக்கும் எனவே கிழங்கை அவிந்து விட்டதா என்பதை நசித்து பாருங்கள்.தண்ணீர் பற்றாவிட்டால் சிறிது சிறிதாக சேருங்கள்.
நன்றாக அவிந்த பின் கொஞ்சம் மசித்து விடுங்கள்.
கரண்டியில் எடுத்தால் தண்ணீராக ஓடவும் கூடாது.கறி முழுக்க விழவே மாட்டேன் என்று கரண்டியிலும் நிறக்கக் கூடாது.
இது இறக்கி வைத்த பின் கொஞ்சம் ஆற கறி கொஞ்சம் இறுகும்.
இதற்கு புளி எதுவும் தேவையில்லை.புளி இதன் சுவையை மாற்றி விடும்.

குறை இருப்பின் என்னிடம் சொல்லுங்கள்
நிறை இருப்பின் மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.

மரவள்ளியும் இஞ்சியும் சேரும் போது நஞ்சு என்கிறார்கள்.எனவே அன்றைய தினம் இஞ்சியைத் தவிருங்கள்.
நன்றி.

6-C781-CB1-ACAD-4739-AAE8-AB8326010-EC7.

E1-E15-B5-A-82-F9-4-C91-99-E1-98-E918765

887-E3-C74-F947-4160-BD5-B-8-DA67-F39758

செய்முறையும்  படமும் நல்லா இருக்கு.கேள்விபட்டுருக்கிறன்  ஆனால் ஒருநாளும் சமைக்கவில்லை. பூசணிக்காயும் frozen மரவள்ளியும் இருக்கு. செய்துவிட்டு பதிவேற்றுகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, nilmini said:

செய்முறையும்  படமும் நல்லா இருக்கு.கேள்விபட்டுருக்கிறன்  ஆனால் ஒருநாளும் சமைக்கவில்லை. பூசணிக்காயும் frozen மரவள்ளியும் இருக்கு. செய்துவிட்டு பதிவேற்றுகிறேன். 

நிறைய எழுதியிருக்கே தவிர செய்முறை வெகு சுலபம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, nilmini said:

செய்முறையும்  படமும் நல்லா இருக்கு.கேள்விபட்டுருக்கிறன்  ஆனால் ஒருநாளும் சமைக்கவில்லை. பூசணிக்காயும் frozen மரவள்ளியும் இருக்கு. செய்துவிட்டு பதிவேற்றுகிறேன். 

 frozen மரவள்ளி அவிய நேரம் எடுக்கும் என நினைக்கின்றேன்.
அதனை பூசணிக்காயுடன்  சேர்க்கும் போது, நீங்கள் எதிர்பார்த்த சுவை வராமல் போகலாம்.
இயலுமானால்.... உடன் வாங்கிய மரவள்ளிக்கிழங்கை பாவியுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, தமிழ் சிறி said:

frozen மரவள்ளி அவிய நேரம் எடுக்கும் என நினைக்கின்றேன்.

ஓரிரு மணி நேரம் முதலே எடுத்து வைத்தால் சரியாக வரலாம்.
எல்லா இடங்களிலும் மரவள்ளி வாங்குவது கஸ்டம்.அதுவும் இந்த நேரம்.கடைக்கு போய்
பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாகவும் முடியலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மரவள்ளிக்கிழங்கும் சக்கரைபூசணிக்காயும் சேர்ந்த கறி ஊர்மனைகளிலை பிரபல்யமானது.
கோவில் அன்னதானங்களிலையும் முக்கிய இடம் பெறும்.
அங்காலை ஒராள் இஞ்சிச்சம்பல் எண்டுறார். பகிடிக்கும் உதுகளை சொல்லாதிங்கப்பு 😟

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஞ்சி சம்பல் சேர்த்து சாப்பிடக்கூடாது என்று யாரு சொன்னது?

நீலம் பெயர்ந்த மரவள்ளி என்று ஒன்று உண்டு. அதாவது வெண் நிற கிழங்கில் நீல நிறமாக ஒரு பகுதியில் ஊடறுத்து ஓடினால், இஞ்சி, அந்த கிழங்குடன் சேர்த்துண்டால் விஷமாகும் என்பர்.

அதுக்காக ஆளைக் கொல்லாது.

ஈழப்பிரியன்,  உங்கள் செய்முறைக்கு நன்றி.

அடுத்த முறை சிறிது வித்தியாசமாக செய்து பாருங்கள்.

வெங்காயத்தினையும், வழக்கமான வாசனை பொருட்களை போட்டு தாளித்து, அதனுள் இந்த இரண்டையும் சேர்த்து, கொஞ்சம் மாசிக் கருவாடும் எறிஞ்சு, வெந்து வந்ததும் எப்பன் (கொஞ்சம்) தேங்காய் பால் ஊத்தி இறக்கி, லைட்டா தேசிக்காய் புளியும் விட்டு அடிச்சு பாருங்கோ...

பிறகு வந்து சொல்லுங்கோவன்... ருசியை...

Posted

மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்ட அன்றே இஞ்சி தேநீரும் குடித்திருக்கேன்.

நீலம் பெயர்ந்த கிழங்கை சாப்பிட்டால் தான் பிரச்சனை என்று நினைக்கின்றேன்.

பகிர்வுக்கு நன்றி ஈழப்பிரியன் அண்ணா.

அடுத்தமுறை நாதமுனி அண்ணா சொன்ன விதத்தில் செய்து பாக்கனும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்கண்ட சமையல் வித்துவாங்களிடம் ஒரு கேள்வி.

சமையலில் பல முறைகள் உண்டு. பொரித்தல், வறுத்தல், அவித்தல் (ஆவியில் - பிட்டு), கொதிக்க வைத்தல் (தண்ணியில் - சோறு), சுடுதல்.....

இந்த முறைகளில் ஆவியில் உணவு சமைத்தல் தமிழர்களுக்கே ( சிலவேளை சீனர்களுக்கும்) உரியது (இன்றல்ல - ஆதிகாலத்தில்), என்று ஒரு ஆங்கிலேயருடன் வாதித்தேன்.

முதலில் மறுத்த அவர், பின்னர், ஆய்வு செய்து வருவதாக சொல்லி உள்ளார்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, தமிழ் சிறி said:

 frozen மரவள்ளி அவிய நேரம் எடுக்கும் என நினைக்கின்றேன்.
அதனை பூசணிக்காயுடன்  சேர்க்கும் போது, நீங்கள் எதிர்பார்த்த சுவை வராமல் போகலாம்.
இயலுமானால்.... உடன் வாங்கிய மரவள்ளிக்கிழங்கை பாவியுங்கள். 

நானும் அப்பிடித்தான் நினைக்கிறன் சிறி. இங்க பிரெஷ்ஷா விக்கிறாங்கள் . வாங்கி சமைப்பம் . 

9 hours ago, ஈழப்பிரியன் said:

நிறைய எழுதியிருக்கே தவிர செய்முறை வெகு சுலபம்.

செய்முறை விளக்கமாக போட்டதால் தான் செய்து பார்க்க நினைத்தேன். நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/31/2020 at 12:58 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

முக்கியமாக இதற்கு வெங்காயமும் செத்தல் மிளகாயும் வதக்கிப் போட்டால் தனி சுவை அண்ணா.

1 hour ago, குமாரசாமி said:

மரவள்ளிக்கிழங்கும் சக்கரைபூசணிக்காயும் சேர்ந்த கறி ஊர்மனைகளிலை பிரபல்யமானது.
 
அப்படியே இதற்குள் கூனித்தூள் என்று சொல்ல்ப்படுகின்ற (இறால் இனத்தில் மிகச்சிறியது அதை காயவைத்து இடித்து வைப்பார்கள்) அதையும் கொஞ்சம் உள்ளேபோட்டால் வாசனையே வேறு ரகமா இருக்கும் இது என்னைபோல அசைவகாரர்களுக்கு மட்டும்  

Posted
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படியே இதற்குள் கூனித்தூள் என்று சொல்ல்ப்படுகின்ற (இறால் இனத்தில் மிகச்சிறியது அதை காயவைத்து இடித்து வைப்பார்கள்) அதையும் கொஞ்சம் உள்ளேபோட்டால் வாசனையே வேறு ரகமா இருக்கும் இது என்னைபோல அசைவகாரர்களுக்கு மட்டும்  

கூனி இராலின் வாசம் நாவூற வைக்கிறது. இதைக் கத்தரிக்காய் கறியிலும் தேங்காய்ச் சம்பலிலும் சேர்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Nathamuni said:

இஞ்சி சம்பல் சேர்த்து சாப்பிடக்கூடாது என்று யாரு சொன்னது?

நீலம் பெயர்ந்த மரவள்ளி என்று ஒன்று உண்டு. அதாவது வெண் நிற கிழங்கில் நீல நிறமாக ஒரு பகுதியில் ஊடறுத்து ஓடினால், இஞ்சி, அந்த கிழங்குடன் சேர்த்துண்டால் விஷமாகும் என்பர்.

அதுக்காக ஆளைக் கொல்லாது.

அவர்கள் ஒன்றும் சும்மா சொல்லவில்லையே? ஏதோ ஒன்று இருப்பதால் தானே சொல்லியிருக்கின்றார்கள்.:)
உயிராபத்து இல்லாத படியால் தான் கண்டது எல்லாவற்றையும் மனிதம் உண்ன ஆரம்பித்ததின் விளைவு இன்று ஒட்டுமொத்த உலகமே வீட்டுக்குள் முடங்கி விட்டது.:(

விதண்டாவாதம் செய்யலாம். ஆனால் எங்கும் எதிலும் விதண்டாவாதம் செய்தால் அது ஒருவகை மனநோய்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படியே இதற்குள் கூனித்தூள் என்று சொல்ல்ப்படுகின்ற (இறால் இனத்தில் மிகச்சிறியது அதை காயவைத்து இடித்து வைப்பார்கள்) அதையும் கொஞ்சம் உள்ளேபோட்டால் வாசனையே வேறு ரகமா இருக்கும் இது என்னைபோல அசைவகாரர்களுக்கு மட்டும்  

கூனி றால்கருவாடு எதுக்கு போட்டாலும் பட்டைய கிளப்பும். 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
58 minutes ago, குமாரசாமி said:

விதண்டாவாதம் செய்யலாம். ஆனால் எங்கும் எதிலும் விதண்டாவாதம் செய்தால் அது ஒருவகை மனநோய்.:cool:

ஏஞ்சாமி, நீலம் பெயர்ந்த மரவள்ளி என்று ஒன்று உண்டா, இல்லையா?

நான் பார்த்ததை, கேட்டதை சொன்னால் விதண்டாவாதமா?

விஞ்ஞான விளக்கமும் தரமுடியும்.... இஞ்சியின் எந்த மூலக்கூறு, நீலம் பெயர்ந்த மரவள்ளியின் எந்த மூலக்கூறுடன் சேர்த்து எத்தகைய நஞ்சினை உருவாக்குகின்றது என்பதை தந்து இருக்கிற கொரோன  பீதிக்கு மேலால கிளப்ப வேண்டாம் என்கிறேன். 🤨

Linamarase enzyme in ginger catalyze the conversion of cyanide containing compounds into Hydrogen Cyanide that can be lethal to the eater. Manioc that has not been properly cooked can contain cyanide compounds. 

It must be properly prepared before consumption, as improper preparation of cassava can leave enough residual cyanide to cause acute cyanide intoxication, goiters, and even ataxia, partial paralysis, or death.

இத்தகைய ஆபத்தான மரவள்ளி வகைகளை, விஞ்ஞான விளக்கம் இல்லாத காலத்தில், அனுபவம் மூலம், நீலம் பாய்ந்த மரவள்ளி என விலத்தி வைத்தார்கள் முன்னோர்கள்.

மரவள்ளி, போர்த்துக்கேயரால் பிரேசில் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டது. அரசி, சோளம், கோதுமை பின்னர்  உலகின் நான்காவது முக்கிய உணவுப்பொருள். இதில் இனிப்பான, கசப்பான என இரு முக்கிய வகைகள் உண்டு. பெரும்பாலும் கசப்பானதே நாம் விளைவித்து உண்பது. காரணம் இனிப்பானதை எலிகள், முயல்கள் ஆட்டையை போட்டு விடும் என்பதால்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, Nathamuni said:

ஏஞ்சாமி, நீலம் பெயர்ந்த மரவள்ளி என்று ஒன்று உண்டா, இல்லையா?

நான் பார்த்ததை, கேட்டதை சொன்னால் விதண்டாவாதமா?

விஞ்ஞான விளக்கமும் தரமுடியும்.... இஞ்சியின் எந்த மூலக்கூறு, நீலம் பெயர்ந்த மரவள்ளியின் எந்த மூலக்கூறுடன் சேர்த்து எத்தகைய நஞ்சினை உருவாக்குகின்றது என்பதை தந்து இருக்கிற கொரோன  பீதிக்கு மேலால கிளப்ப வேண்டாம் என்கிறேன். 🤨

எங்கடை பழசுகள் முன் எச்சரிக்கையாய் மரவள்ளிக்கு இஞ்சியே போடாதேங்கோ எண்டு சொல்லியிருக்கலாம் எல்லோ
ஊரிலை பிள்ளைத்தாச்சிமார் அன்னாசிப்பழம் சாப்பிடக்கூடாது எண்டு சொல்லுவினம்.....ஆனால் இஞ்சை வெளிநாடுகளிலை எதுக்கும் தடை இல்லை 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, குமாரசாமி said:

எங்கடை பழசுகள் முன் எச்சரிக்கையாய் மரவள்ளிக்கு இஞ்சியே போடாதேங்கோ எண்டு சொல்லியிருக்கலாம் எல்லோ
ஊரிலை பிள்ளைத்தாச்சிமார் அன்னாசிப்பழம் சாப்பிடக்கூடாது எண்டு சொல்லுவினம்.....ஆனால் இஞ்சை வெளிநாடுகளிலை எதுக்கும் தடை இல்லை 😁

கொழும்பின் முஸ்லீம் பகுதிகளில், வீதி ஓரங்களில், மாலை வேளைகளில் அச்சாறு, மரவள்ளி பொரியல் யாவாரம் செய்வார்கள். இங்கே வருவது போல மெல்லியதாக சீவியது (machine cut) அல்ல. கத்தரிக்காய் பொரியலுக்கு நீளவாக்கில் வெட்டுவது போலவே, மரவள்ளியை அங்கேயே உரித்து, வெட்டி, பொரித்து, உப்பு, தூள், மிளகு தூள் கலந்து போட்டு தருவார்கள். சலீம் பாய் இடம் தான் நம்ம வாடிக்கை.

ஒரு பாக்கெட் வாங்கி, பக்கத்தில் இருக்கும் அன்வர் நானா கடைல அந்த மாதிரி இஞ்சி போட்டு மசாலா டி குடிச்சா.... சொர்க்கம்...மாங்காய், அன்னாசி, வெட்டி, உப்பு தூள் போட்டு தருவார்கள். வெருளு (சிலோன் ஒலிவ்) அச்சாறு அந்த மாதிரி இருக்கும்.

சலீம் பாய், தோலை சீவியபின், பாவிக்காமல் வீச என்று ஒரு பக்கத்தில் போட்டு வைத்திருந்த காரணத்தினை கேட்ட போது  சொன்ன விளக்கம் தான் இந்த நீலம் பாய்ந்த  விசயம்.

ஆனாலும் சின்ன வயதில் அம்மம்மா நீலம் பாய்ந்த கிழங்கு பற்றி சொல்லி இருக்கிறார். மாட்டுக்கோ, ஆட்டுக்கோ போடவும் கூடாது என்பார்.

****

நம்ம பிரகிராசியார் என்னமோ பிஸியாய் இருக்கிறார். அதாலை நம்ம சாமியாருக்கு பயம் விட்டு போட்டுது. விதண்டாவாதம் என்று இன்னுமொருக்கா சொன்னா, தலைவனை கூட்டிக்கொண்டு வந்திருவன்... 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, குமாரசாமி said:

மரவள்ளிக்கிழங்கும் சக்கரைபூசணிக்காயும் சேர்ந்த கறி ஊர்மனைகளிலை பிரபல்யமானது.
கோவில் அன்னதானங்களிலையும் முக்கிய இடம் பெறும்.

குமாரசாமி ஐயா கூறியதுபோல்  உண்மை.  எனது துணைவியார் பெரும்பாலும் வெள்ளிக்கிழமை இந்தக்கறியைச் சமைப்பார். தமிழ்சிறியவர்கள் கூறியதுபோல் மிளகும் போட்டுத்தான் செய்திருப்பா சுவையோ தனி. ஆனால் மிளகு இறக்குவதுக்கு முன் போடவேண்டும்.  கூனிஇறால் மாசிக்கருவாட்டை தூளாக்கிப் போடுதல் போன்றன மேலும் சுவையாக இருக்கும்.  நல்லதொரு சுவையான கறி. கறியை சமைத்து ஒரு திரியைத் தொடக்கிய ஈழப்பிரியனவர்களுக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, குமாரசாமி said:

கூனி றால்கருவாடு எதுக்கு போட்டாலும் பட்டைய கிளப்பும். 😁

ம்ம் உன்மைதான்  அங்க கிடைக்குமா கூனி றால் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

ம்ம் உன்மைதான்  அங்க கிடைக்குமா கூனி றால் 

தமிழ் கடையள்ளை அப்பப்ப கிடைக்கும். அது அவங்களிட்டை வாங்கிறதெண்டால் காணி பூமி தான் விக்கோணும்.தாய்லாந்து சைனிஸ் கடையள்ள கிடக்கு.ஒருக்கால் வாங்கி கத்தரிக்காய் கறிக்கு போட்டு சமைச்சு பாத்தம்.ஏழு வீடு தூரத்துக்கு நாத்தல் மணம். அப்பிடியெண்டால் என்ரை வீடு எப்பிடி நாறியிருக்குமெண்டு யோசிச்சு பாருங்கோ.  செற்றி சோபா கேட்டின் எல்லாம் நாற வெளிக்கிட்டுது.  அண்டையோடை கூனிறால் ஆசையே போட்டுது.😎

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.