Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதபோதகருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களுக்கு இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை - வைத்திய கலாநிதி கேதீஸ்வரன்

Featured Replies

  • தொடங்கியவர்
9 minutes ago, Vankalayan said:

எனவே இனி வரும் காலங்களில் சரியான கருத்துக்களை வைத்தால் அது ஆரோக்கியமாக இருக்கும்। இல்லாவிடடாள் கிறிஸ்தவர்களுக்கும் , தமிழர்களுக்கும் இடையில் உள்ள பிளவை இன்னும் அதிகரிக்கும்। 

கிறிஸ்தவர்களுக்கும் , தமிழர்களுக்கும் இடையில் உள்ள பிளவை இல்லை ... மற்றைய ஒரு மதத்தை கூற வந்துள்ளீர்கள் என எண்ணுகின்றேன் 😍

தமிழர்கள் மத்தியில் எல்லா மதமும் உண்டு ... நாத்திகர்களும் உண்டு. 

உலகிலேயே மிகவும் மத-சனநாயக இனம், எமது இனம் 🙏

  • Replies 81
  • Views 5.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Vankalayan said:

உங்கள் கருத்தை வரவேட்கிறேன்।சில நபர்கள் கிறிஸ்தவத்தை தங்கள் நலனுக்காக வியாபாரம் செய்வதை மறுபதட்கில்லை। இந்தியாவில் ஒருவர் செய்தி கொடுக்கும்போது இந்த வருடம் மக்களுக்கு ஆசீர்வாதமாக இருக்குமென்றும், மக்கள் செல்வந்தர்களாக மாறுவார்கள் என்றும் பொய் பிரசங்கம் பண்ணினார்। இப்போது என்ன நடந்துள்ளது?  எல்லாம் தலை கீழாக நடந்துகொண்டிருக்கிறது।

மக்களை ஏமாற்றி பணம் பண்ணும் கும்பல் இல்லாமல் இல்லை।அதட்காக மதவாதிகள் கிறிஸ்தவ மதத்தை தாக்கி எழுதுவதையும், வேதாகமத்தை தூக்கி எரிய வேண்டுமென்று எழுதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது। இது அவர்களது கிறிஸ்தவர்களுக்கு எதிரான துவேசத்தை காண்பிக்கிறது। இது நிச்சயமாக தமிழர்களை பிளவுக்குள்ளாகியிருக்கிறது। காலம்தான் அதன் விளைவுகளை எடுத்து சொல்லும்।

நித்தியானந்தா, பிரேமானந்தா போன்ற எத்தனையோ அனந்தாக்களை பற்றி எழுதலாம்। அவர்கள் தங்களது சுய லாபத்துக்காக அப்படி செய்கிறார்கள் என்று எமக்கு தெரியும்। அதட்காக நாங்கள் இந்து சமயத்தை குறை கூற வில்லை। அவர்கள் வேதத்தையோ , வணங்கவும் காரியங்ககைப்பற்றி எதுவும் கூறவில்லை।

எனவே இனி வரும் காலங்களில் சரியான கருத்துக்களை வைத்தால் அது ஆரோக்கியமாக இருக்கும்। இல்லாவிடடாள் கிறிஸ்தவர்களுக்கும் , தமிழர்களுக்கும் இடையில் உள்ள பிளவை இன்னும் அதிகரிக்கும்। 

உண்மையில் ஆரோக்கியமான க்ருத்தாடல் இல்லாவிட்டால் தமிழர்களில் சிறுபான்மையோராகிய கிறீத்துவர்களின் நம்பிக்கையை சைவசமயத்தோர் இழக்க நேரிடும். இதன் விளைவு நீண்டகால  நோக்கில் தமிழர்க்கு மிகப் பாரதூரமானது. விடுதலைப் புலிகள் /  வினாயகமூர்த்தி முரளீதரனின் பிரிவைவிட பயங்கரமானது. ஏனென்றால் தமிழ்க் கிறித்துவர்கள் வடக்கு கிழக்கு எல்லா இடமும் பரந்துள்ளனர். 🤥

1 minute ago, ampanai said:

கிறிஸ்தவர்களுக்கும் , தமிழர்களுக்கும் இடையில் உள்ள பிளவை இல்லை ... மற்றைய ஒரு மதத்தை கூற வந்துள்ளீர்கள் என எண்ணுகின்றேன் 😍

தமிழர்கள் மத்தியில் எல்லா மதமும் உண்டு ... நாத்திகர்களும் உண்டு. 

உலகிலேயே மிகவும் மத-சனநாயக இனம், எமது இனம் 🙏

இலங்கையில்  தமிழர்களாக தங்களை இனங்காட்டுவோர் இரு சமயத்தவரே. சைவர்கள், தமிழ்க்  கிறீத்துவர்கள். தாங்கள் யார் என இசுலாமியர்கள்தான் கூற வேண்டும்.  🤔

(நாத்திகர்கள் புறக்கணிக்கத்தக்க அளவிலேதான் உள்ளனர்)

  • தொடங்கியவர்
27 minutes ago, Kapithan said:

உண்மையில் ஆரோக்கியமான க்ருத்தாடல் இல்லாவிட்டால் தமிழர்களில் சிறுபான்மையோராகிய கிறீத்துவர்களின் நம்பிக்கையை சைவசமயத்தோர் இழக்க நேரிடும். இதன் விளைவு நீண்டகால  நோக்கில் தமிழர்க்கு மிகப் பாரதூரமானது. விடுதலைப் புலிகள் /  வினாயகமூர்த்தி முரளீதரனின் பிரிவைவிட பயங்கரமானது. ஏனென்றால் தமிழ்க் கிறித்துவர்கள் வடக்கு கிழக்கு எல்லா இடமும் பரந்துள்ளனர். 🤥

தமிழ் மக்களிடையே மதம் சார்ந்த புரிதல் மற்றும் நல்லிணக்கம் தொடர்ந்தும் பேணப்பட என்ன தேவை? எது நடக்கவேண்டும்? எது நடக்கக்கூடாது? 

பாஸ்டருக்கு கொரோனா தொற்று அவரது புலம்பெயர் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பலருக்கு இதுவரை தொற்றுக்கள் தென்படாதற்கு அல்லது பாதிக்கப்படுமளவுக்கு வைரஸ் தொற்று பலம் பெறாதது மிகவும் ஆறுதலான செய்தி.

அவர் கடும் காய்ச்சல் இருமலுடன் தான் ஆராதனைகளை நடத்தியிருந்தாலும் பாஸ்டர் கலந்துகொண்ட எல்லாருடனும் நெருக்கமாக பழகி இருக்கும் வாய்ப்பில்லை அல்லது நீண்ட நேரத்தை செலவிடும் வாய்ப்பு இருந்திருக்காது.

ஆனாலும் பூச்சாண்டி காட்டி வாழ்ந்து பழக்கப்பட்ட சிலர் தங்களின் பூச்சாண்டி காட்டி பிழைப்பு நடத்தும் பழக்கவழக்கங்களை மாற்றுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ampanai said:

1) தமிழ் மக்களிடையே மதம் சார்ந்த புரிதல் மற்றும் நல்லிணக்கம் தொடர்ந்தும் பேணப்பட என்ன தேவை? 2) எது நடக்கவேண்டும்? 3)எது நடக்கக்கூடாது? 

1) சமயங்கள் தொடர்பில்  பரஸ்பரம் மரியாதை இருக்க வேண்டும். 

2) தொடர்ச்சியான கலந்துரையாடல் சமயத்தலைவர்களிடையே. அவரவர் உரிமையும், அவரவர் எல்லையும் (Limit) தெரிந்திருத்தல் வேண்டும்.

3) சமயங்களை (இருபகுதியினரும்) இழிவு செய்யாதிருத்தல் வேண்டும். சமயங்களிடையே உயர்ந்த தாழ்ந்த என்கின்ற மனனிலை இருக்கக் கூடாது

13 minutes ago, போல் said:

பாஸ்டருக்கு கொரோனா தொற்று அவரது புலம்பெயர் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பலருக்கு இதுவரை தொற்றுக்கள் தென்படாதற்கு அல்லது பாதிக்கப்படுமளவுக்கு வைரஸ் தொற்று பலம் பெறாதது மிகவும் ஆறுதலான செய்தி.

அவர் கடும் காய்ச்சல் இருமலுடன் தான் ஆராதனைகளை நடத்தியிருந்தாலும் பாஸ்டர் கலந்துகொண்ட எல்லாருடனும் நெருக்கமாக பழகி இருக்கும் வாய்ப்பில்லை அல்லது நீண்ட நேரத்தை செலவிடும் வாய்ப்பு இருந்திருக்காது.

ஆனாலும் பூச்சாண்டி காட்டி வாழ்ந்து பழக்கப்பட்ட சிலர் தங்களின் பூச்சாண்டி காட்டி பிழைப்பு நடத்தும் பழக்கவழக்கங்களை மாற்றுவதில்லை.

☹️

யான் என்ன  பறஞ்சு?  🤥

Edited by Kapithan
எழுத்துப் பிழை

4 minutes ago, Kapithan said:

யான் என்ன பறஞ்சு 🤥

பொதுவாக சொல்லப்பட்ட கருத்து! அதை ஏன் நீங்கள் வரிந்து இழுத்துக் கொள்ள வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Vankalayan said:

நித்தியானந்தா, பிரேமானந்தா போன்ற எத்தனையோ அனந்தாக்களை பற்றி எழுதலாம்। அவர்கள் தங்களது சுய லாபத்துக்காக அப்படி செய்கிறார்கள் என்று எமக்கு தெரியும்।

இவ்வளவு துணிச்சலுடன் கைலாசாவில் வீற்றிருக்கும் நம் குருநாதர் நித்தியானந்தாவை பற்றி இப்படி தரக்குறைவாக எழுதுகிறீர்களே?

மட்டுறுத்துனர்கள் நியானியும் நிழலியும் எங்கே ஓடி மறைந்தார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

உண்மையில் ஆரோக்கியமான க்ருத்தாடல் இல்லாவிட்டால் தமிழர்களில் சிறுபான்மையோராகிய கிறீத்துவர்களின் நம்பிக்கையை சைவசமயத்தோர் இழக்க நேரிடும். இதன் விளைவு நீண்டகால  நோக்கில் தமிழர்க்கு மிகப் பாரதூரமானது. விடுதலைப் புலிகள் /  வினாயகமூர்த்தி முரளீதரனின் பிரிவைவிட பயங்கரமானது. ஏனென்றால் தமிழ்க் கிறித்துவர்கள் வடக்கு கிழக்கு எல்லா இடமும் பரந்துள்ளனர்.

தன் மதத்தை மதித்து வழிபடுபவன் பிறமதங்களையும் அவ்வாறே மதிப்பான். அப்படிப்பட்டவர்கள் நிறையவே நம் மத்தியில் இருக்கிறார்கள். ஒரு சிலர் சுற்றிவர என்ன நடக்கிறது என்பதை உணராமல் இடும் பதிவுகளை இட்டு நாம் அலட்டிகொள்ளத் தேவையில்லை. அது அவர்களின் குணம் என்று விலத்தி போகவேண்டியதுதான். வீம்புக்கு  விதண்டாவதம் பண்ணுபவர்களோடு நேரத்தை செலவளிக்காது, சொல்ல வேண்டியதை சொல்லி விட்டு நகர்ந்து செல்வோம். கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

சுவிற் ட்றீம்ஸ் 😍

சுவிற் ட்றீம்ஸ் ?

தாருக்கப்பா வருகுது. நல்லா சொல்லாரு சுவிற் ட்றீம்ஸ்?

ஒவ்வொருத்தனும் கண்ண கொஞ்சம் அசந்து மூடினா, கோரோணா ட்றீம்ஸ் தானே வருது.

உங்களுக்கு மட்டும் எப்படி? 😱🥶👹👽☠️💀👻

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ampanai said:

கிறிஸ்தவர்களுக்கும் , தமிழர்களுக்கும் இடையில் உள்ள பிளவை இல்லை ... மற்றைய ஒரு மதத்தை கூற வந்துள்ளீர்கள் என எண்ணுகின்றேன் 😍

தமிழர்கள் மத்தியில் எல்லா மதமும் உண்டு ... நாத்திகர்களும் உண்டு. 

உலகிலேயே மிகவும் மத-சனநாயக இனம், எமது இனம் 🙏

என்ன நோக்கத்திற்காய் மதம் மாறுகிறார்களோ அது அவர்களது விருப்பம் என்று விட்டு விடலாம்....ஆனால் மதம் மாறினப் பிறகு நான் கேட்டதை முருகன் தரேல்ல ,பிள்ளையார் தரேல்ல யேசப்பா கேட்டவுடன் எல்லாத்தையும் தந்திட்டார் என்று சொல்றது அவர்களது நம்பிக்கை அல்லது புரிதல் சார்ந்த விடயம் அதில் பிழையில்லை ...ஆனால் முருகன் சாத்தான் ,பிள்ளையார் சாத்தான் என்று சொல்வதால் தான் கடுமையாய் எதிர்க்கிறோம் ....இது வரை ஒரு கத்தோலிக்கர்கள் கூட அப்படி சொன்னதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

அடி முட்டாள்களால்தான் இவ்வாறு கூற முடியும். இரு தோணியில் கால் வைத்தால் இதுதான் நிலைமை. 🙃

யேசு சொன்னது இதுதான் - அன்பு செய். வெரி சிம்பிள்😀. இதற்கு மேல் எதனை எவன்  கூறினாலும் அவன் சுத்த ஹம்பக் !!!!!🤥

(ரதி அக்கா.. உங்கள் நியாயமான கோபத்தை நிதானமாக வெளிக்காட்டியிருந்தால் அரைவாசி புடுங்குப்பாட்டைத் தவிர்த்திருக்கலாம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம் 🙂)

2 hours ago, Nathamuni said:

சுவிற் ட்றீம்ஸ் ?

தாருக்கப்பா வருகுது. நல்லா சொல்லாரு சுவிற் ட்றீம்ஸ்?

ஒவ்வொருத்தனும் கண்ண கொஞ்சம் அசந்து மூடினா, கோரோணா ட்றீம்ஸ் தானே வருது.

உங்களுக்கு மட்டும் எப்படி? 😱🥶👹👽☠️💀👻

நான் ஒன்றைப் பற்றியும் அலட்டிக் கொள்வதில்லை. நெப்போலியன் ஸ்ரைலாக்கும் 😎.....😀

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

தன் மதத்தை மதித்து வழிபடுபவன் பிறமதங்களையும் அவ்வாறே மதிப்பான். அப்படிப்பட்டவர்கள் நிறையவே நம் மத்தியில் இருக்கிறார்கள். ஒரு சிலர் சுற்றிவர என்ன நடக்கிறது என்பதை உணராமல் இடும் பதிவுகளை இட்டு நாம் அலட்டிகொள்ளத் தேவையில்லை. அது அவர்களின் குணம் என்று விலத்தி போகவேண்டியதுதான். வீம்புக்கு  விதண்டாவதம் பண்ணுபவர்களோடு நேரத்தை செலவளிக்காது, சொல்ல வேண்டியதை சொல்லி விட்டு நகர்ந்து செல்வோம். கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்.

சாத்தான்..

பொறுப்பற்ற கருத்துக்கள் சமூகம் என்கின்ற வகையில்  ஏற்படுத்தும் சேதம் அளவில்லாதது. அதனை தடுக்கவில்லையென்றால்,  காலப்போக்கில் அவ நம்பிக்கையும் வெறுப்பும் அதிகரித்து புற்று நோயாய் நம் சமூகத்தைச் சீரழித்துவிடும். 

இறுதித்  தோல்வி எங்கள் எல்லோருக்குமே.☹️

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

இந்த சிறு சிறு புதிய மதக் குழுக்கள் , குறிப்பாக கிறீத்துவ மதக் குழுக்கள் , இனவழிப்பினால் பாதிக்கப்பட்ட தமிழினம் என்கின்ற வகையில், தமிழருக்கு ஏற்படுத்தும் தீங்கு என்பது மிகப் பாரதூரமானது.. இந்த விடயத்தில் இங்கு என்னோடு புடுங்குப்படும் அனைவரையும் விட அதிகமாகக் கவலை கொள்பவன் நான்.

ஆனால், விவாதிக்கப்பட வேண்டிய விடயங்களை விட்டுவிட்டு, சமயம் மாறுபவர்களை அல்லது சமயம் மாற்றுவோரை இழிவுபடுத்துவது சரியான செயலா ? 

முதலாவது பந்தியில்  உங்களுக்கு பிடிக்காது என்கிறீர்கள் இரண்டாவது பந்தியில் எதிர்க்கிறீர்கள் இன்னும் விளக்கம் தந்தால்  நல்லது .

12 hours ago, பெருமாள் said:

இன்னும் ஆறு நாள் இருக்குத்தானே அதுக்கிடையிலை ஏன் குதிக்கினம் பாதிக்கப்படவில்லை என்றால் மிக மிக நல்லது

யாழில் இன்னொரு போதகருக்கும் கொரோனா தொற்று சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Rajesh said:

யாழில் இன்னொரு போதகருக்கும் கொரோனா தொற்று சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், குருணாகலை, மருதானை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிய வருகிறது.

யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்ட நபர் மத போதகர் என்றும் அவர் பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரியவருகிறது.

மொத்த எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ள போதிலும் 18 பேர் பூரணமாக குணமடைந்து வீடு சென்றுள்ளனர். மேலும் 126 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

https://www.tamilwin.com/security/01/242424

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

முதலாவது பந்தியில்  உங்களுக்கு பிடிக்காது என்கிறீர்கள் இரண்டாவது பந்தியில் எதிர்க்கிறீர்கள் இன்னும் விளக்கம் தந்தால்  நல்லது .

தெளிவாக குறிப்பிட்டுக் காட்ட முடியுமா ? 👏

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, போல் said:

பொதுவாக சொல்லப்பட்ட கருத்து! அதை ஏன் நீங்கள் வரிந்து இழுத்துக் கொள்ள வேண்டும்?

பொதுவாக சொல்லப்பட்டபடியால்தான் நானும் எனது ஆதங்கத்தை(😦) வெளிக்காட்டினேன். இதில் தவறொன்ருமில்லையே 🤔

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பெருமாள் said:

முதலாவது பந்தியில்  உங்களுக்கு பிடிக்காது என்கிறீர்கள் இரண்டாவது பந்தியில் எதிர்க்கிறீர்கள் இன்னும் விளக்கம் தந்தால்  நல்லது .

ஈழத் தமிழர் என்கின்ற ரீதியில் இவ்வாறான சிறிய சிறிய மதக் குழுக்கள் த்மிழருக்கு ஏற்படுத்தும் தீங்கு பயங்கரமானது.

1) தமிழரிடையே பிழவையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துதல்.

உ+ம்:

1) சைவ சமயத்தோர் வணங்கும் தெய்வங்களை தெய்வங்கள் அல்ல பேய்கள் எனக்  கூறுதல். இதனால் பாமர மக்கள் மத்தியில் அவர்களது பாரம்பரிய நம்பிக்கைகளில்  சந்தேகத்தை  உண்டாக்கி மக்களை தன்னம்பிக்கையிழக்கச் செய்கின்றனர். இதனால் இந்த பிரச்சார முறைகளை வெறுக்கும் பாமரர்கள் கிறீத்துவர்கள் என்றாலே அன்னியராக  பார்க்கும் நிலையை உருவாக்குகின்றனர். 

2) இக்குழுக்கள் தங்களைத் தாங்களே தமிழரிடமிருந்து அன்னியப்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள் பொது நோக்கத்திற்காக ஒன்று சேர்வதில்லை. இவ்வாறு  ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் சராசரியாக நூறுபேர்  அங்கத்தவராக உள்ளனர் என எடுத்துக் கொண்டால் ஆகக் குறைந்தது  ஒரு லட்சம் தமிழர்கள் தங்களை சமூகத்தின் பொது நோக்கங்களிற்காக ஒன்றுசேராமல் தனித்திருப்பர்.  இது வடகிழக்குத் தமிழரில் ஏறக்குறைய மூன்று விகிதம். இந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இவர்கள் தமிழர்களின்  போராட்டங்களுக்கு எந்தவிதமான பங்களிப்பையும்  தருவதில்லை.  அரசியல் அபிலாசைகளுக்கு ஒத்துழைப்பதில்லை. சமூக பொருளாதார கூட்டு முயற்சிகளுடன் தங்களை இணைத்துக்கொள்வதில்லை. சுருக்கமாகச் சொல்வதானால் அவர்கள் தங்களை தமிழர்களாக அடையாளப் படுத்துவதில்லை.

சற்று கற்பனை செய்து பாருங்கள். இதே நிலை இன்னும் இருபதுவருடங்கள் நீடித்தால்  இது எங்கே போய் நிற்கும் ?

(இவைகள் மிகசி சிறிய  உதாரணங்கள் மட்டுமே. எண்ணிக்கையும் உதாரணத்திற்காக குறிப்பிடப் பட்டது)

இரண்டாவது பந்தியில் நான் குறிப்பிட்டது இழிவு செய்தல் என்பது. இங்கு யாரும் சமயம் மாறுவதற்காக காத்துக் கொண்டிருப்பதில்லை. அழிவுகள், வன்முறை, பொருளாதார வலுவின்மை, சமூக ஏற்றத்தாழ்வு, உள ரீதியான பாதிப்புக்களால் பலவீனமுற்றிருப்போர் தங்களுக்கு யார் எவரெல்லாம் ஆறுதலளிக்கின்றனரோ அல்லது நம்பிக்கை அளிக்கின்றனரோ அவர்கள் பின்னால் செல்கின்றனர்.

இவர்களை சோற்றுக்காக, காசுக்காக சோரம்போனவர்கள் என இழிவுபடுத்துதல் கூடாது என்பது தவறா ? இவர்களை இரக்கத்திற்குரியவர்களாகத்தான் பார்க்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

இந்த சிறு சிறு புதிய மதக் குழுக்கள் , குறிப்பாக கிறீத்துவ மதக் குழுக்கள் , இனவழிப்பினால் பாதிக்கப்பட்ட தமிழினம் என்கின்ற வகையில், தமிழருக்கு ஏற்படுத்தும் தீங்கு என்பது மிகப் பாரதூரமானது.. இந்த விடயத்தில் இங்கு என்னோடு புடுங்குப்படும் அனைவரையும் விட அதிகமாகக் கவலை கொள்பவன் நான்.

நான் படிக்கும் காலத்தில், மாணவர்கள் பொழுது போக்காக இந்தச் சிறு கிறிஸ்தவ குழுக்களை பற்றி கதைப்போம். காரணம் அடிக்கடி நம் வீடுகளுக்கு போதனைக்காக வருவார்கள். அப்போ இருந்த  கிறிஸ்தவ மதக்குழுக்களின் தொகை இருபத்திநான்கு. இன்னும் உருவாக்கிக் கொண்டு இருப்பதாக தகவல். அப்போ இன்று எத்தனை என கணக்கிட்டுக் கொள்ளுங்கள். வெளிநாடுகளில் உள்ள தமிழர், வீட்டுக்கொரு கிறிஸ்தவ குழுக்களை உருவாக்கி இருப்பதாக கேள்வி. அத்தனையும் நான் பெரிது. என்னை முன்னுக்கு வைக்கேல்லை. என்று உருவானதாக கூறுகிறார்கள். இவர்கள் கூடும்போது தமக்கு பிடிக்காத குழுக்களை விமர்சிப்பதாகவும் அறியக்கிடக்கிறது.

போலி மெசியாக்களும், போலி இறைவாக்கினர்களும் தோன்றி, முடியுமானால் தேர்ந்து கொள்ளப்படடவர்களையே நெறி தவறச் செய்ய பெரும் அடையாளங்களையும், அருஞ்செயல்களையும் செய்வார்கள். ஆகையால் எவராவது உங்களிடம் வந்து 'அதோ, பாலை நிலத்தில் இருக்கிறார்' 'இதோ, உள்ளறையில் இருக்கிறார்' என்றால் நம்பாதீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பலாலி பகுதியில்தான் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்ற 20 பேரில் 10 பேருக்கு மேற்கொண்ட ஆய்வு கூட பரிசோதனையில் மேலும் இருவருக்கும் தொற்றே உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றது.( இதற்கு முந்தைய செய்தியில் ஒருவருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. )

ஆகவே இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 10 பேரில் மூவருக்கும் தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இவர்கள் அனைவரும் ஒரு கிழமைக்கு மேலாக அப்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள்.
இம்மூவரும் குறிப்பிட்ட நேரடியாக போதக ரோடு நேரடியாக தொடர்பு கொண்டவர்கள்.

ஆகவே கொரோனா தொற்று வியாதியானது எந்தவிதமான குணங்குறிகள் இன்றி சிலரிடையே காணப்படலாம் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

ஆகவே பொதுமக்கள் மிகவும் அவதானமாக சுகாதார அமைச்சினதும் அரசாங்கத்தினதும் அறிவுரைகளை ஏற்று நடந்து கொள்ள வேண்டும்.

இது வைத்தியர் சத்திய மூர்த்தியுடைய பதிவு  ஆளாளுக்கு பொய்யான செய்திகளை சொல்கின்றனர் போல இருக்கே

.

23 hours ago, ampanai said:

கிறிஸ்தவர்களுக்கும் , தமிழர்களுக்கும் இடையில் உள்ள பிளவை இல்லை ... மற்றைய ஒரு மதத்தை கூற வந்துள்ளீர்கள் என எண்ணுகின்றேன் 😍

தமிழர்கள் மத்தியில் எல்லா மதமும் உண்டு ... நாத்திகர்களும் உண்டு. 

உலகிலேயே மிகவும் மத-சனநாயக இனம், எமது இனம் 🙏

நான் உண்மையாக இங்கு தமிழர்கள் என்று எழுதியது இந்துக்களை குறிக்கவே। கிறிஸ்தவர்களுக்கும் (தமிழ் பேசும்), இந்துக்களுக்கும் இடையே இப்போது உள்ள இடைவெளி எவ்வளவாக அதிகரித்திருக்கிறதென்பதை இங்குள்ள எமக்குத்தான் தெரியும்।

கடந்த வாரம் நான் ஒரு சடடதரணியுடன் கதைத்தபோது அந்த இடைவெளி இன்னும் அதிகமாக இருப்பதுபோல தெரிகின்றது। தேர்தல் நடக்கும் வரையும் அது சில வேளைகளில் பெரிதாக வெளியில் தெரியாமல் இருக்கலாம்। இஸ்லாமியர்கள் தமிழ் பேசினாலும் அவர்கள் தங்கள் தமிழர்கள் இல்லை என்று அடித்து சொல்லிவிடடார்கள்।

இங்கு எழுதும் தமிழர்களின் (இந்துக்கள்) கருத்துக்களை நோக்கும்போது நாங்களும் தமிழர்கள் என்பதைவிட கிறிஸ்தவர்கள் என்று எங்களை மாற்றிக்கொள்ளுவது சரியென்று எனக்கு தோன்றுகின்றது। எனவேதான் அப்படி எழுதினேன்। இஸ்லாமியர்களைப்போல கிறிஸ்தவர்களையும் தமிழர்கள் அந்த நிலைமைக்கு தள்ளாமலிருந்தால் அது பின்னாட்களில் தமிழர்களுக்கு நல்லதென்று நினைக்கிறேன்।

வட கிழக்கில் தமிழர்களுக்கு ஒரு தீர்வு வருமென்று நான் நினைக்கவில்லை। அப்படி வந்தாலும் முஸ்லிம்களைப்போல , கிறிஸ்தவர்களும் ஒரு அமைப்பாக விசேட அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது। பின்னாட்களில் தமிழர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அது பிரச்சினையாக இருக்கக்கூடாது। இதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்।

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

நான் படிக்கும் காலத்தில், மாணவர்கள் பொழுது போக்காக இந்தச் சிறு கிறிஸ்தவ குழுக்களை பற்றி கதைப்போம். காரணம் அடிக்கடி நம் வீடுகளுக்கு போதனைக்காக வருவார்கள். அப்போ இருந்த  கிறிஸ்தவ மதக்குழுக்களின் தொகை இருபத்திநான்கு. இன்னும் உருவாக்கிக் கொண்டு இருப்பதாக தகவல். அப்போ இன்று எத்தனை என கணக்கிட்டுக் கொள்ளுங்கள். வெளிநாடுகளில் உள்ள தமிழர், வீட்டுக்கொரு கிறிஸ்தவ குழுக்களை உருவாக்கி இருப்பதாக கேள்வி. அத்தனையும் நான் பெரிது. என்னை முன்னுக்கு வைக்கேல்லை. என்று உருவானதாக கூறுகிறார்கள். இவர்கள் கூடும்போது தமக்கு பிடிக்காத குழுக்களை விமர்சிப்பதாகவும் அறியக்கிடக்கிறது.

போலி மெசியாக்களும், போலி இறைவாக்கினர்களும் தோன்றி, முடியுமானால் தேர்ந்து கொள்ளப்படடவர்களையே நெறி தவறச் செய்ய பெரும் அடையாளங்களையும், அருஞ்செயல்களையும் செய்வார்கள். ஆகையால் எவராவது உங்களிடம் வந்து 'அதோ, பாலை நிலத்தில் இருக்கிறார்' 'இதோ, உள்ளறையில் இருக்கிறார்' என்றால் நம்பாதீர்கள். 

பல வருடங்களுக்கு முன்னர் நடந்தது. 

என்னுடன் ஒன்றாக விளையாட்டிலீடுபட்ட நண்பர்களுள் சிலர் தங்களுக்குள் தீவிரமாக கதைத்துக்கொண்டிருந்தனர். என்ன ஏதென வினவியபோது தாங்கள் புதுச் சபையொன்றைத் தாபித்துக்கொண்டதாக கூறினர். ஏன் என்ன நடந்தது உங்கள் பளைய சபைக்கென கேட்டபோது, 
தங்கள் பளைய போதகர் தங்கள் எல்லோரையும் அடிக்கடி  கண்களை மூடச் சொல்வாராம். கொஞ்சப் பொடியள் சந்தேகத்தில மெதுவாக கண்திறந்து பார்த்தபோது போதகரும் சபையிலிருந்த இன்னொரு பெண்ணும் கண்ணடித்து காதல் விளையாட்டில் ஈடுபட்டிருந்தனராம்.😍

பிறகென்ன,  புதுச்சபையொன்றைத் தொடங்கிவிட்டார்கள் 😫

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Vankalayan said:

நான் உண்மையாக இங்கு தமிழர்கள் என்று எழுதியது இந்துக்களை குறிக்கவே। கிறிஸ்தவர்களுக்கும் (தமிழ் பேசும்), இந்துக்களுக்கும் இடையே இப்போது உள்ள இடைவெளி எவ்வளவாக அதிகரித்திருக்கிறதென்பதை இங்குள்ள எமக்குத்தான் தெரியும்।

கடந்த வாரம் நான் ஒரு சடடதரணியுடன் கதைத்தபோது அந்த இடைவெளி இன்னும் அதிகமாக இருப்பதுபோல தெரிகின்றது। தேர்தல் நடக்கும் வரையும் அது சில வேளைகளில் பெரிதாக வெளியில் தெரியாமல் இருக்கலாம்। இஸ்லாமியர்கள் தமிழ் பேசினாலும் அவர்கள் தங்கள் தமிழர்கள் இல்லை என்று அடித்து சொல்லிவிடடார்கள்।

இங்கு எழுதும் தமிழர்களின் (இந்துக்கள்) கருத்துக்களை நோக்கும்போது நாங்களும் தமிழர்கள் என்பதைவிட கிறிஸ்தவர்கள் என்று எங்களை மாற்றிக்கொள்ளுவது சரியென்று எனக்கு தோன்றுகின்றது। எனவேதான் அப்படி எழுதினேன்। இஸ்லாமியர்களைப்போல கிறிஸ்தவர்களையும் தமிழர்கள் அந்த நிலைமைக்கு தள்ளாமலிருந்தால் அது பின்னாட்களில் தமிழர்களுக்கு நல்லதென்று நினைக்கிறேன்।

வட கிழக்கில் தமிழர்களுக்கு ஒரு தீர்வு வருமென்று நான் நினைக்கவில்லை। அப்படி வந்தாலும் முஸ்லிம்களைப்போல , கிறிஸ்தவர்களும் ஒரு அமைப்பாக விசேட அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது। பின்னாட்களில் தமிழர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அது பிரச்சினையாக இருக்கக்கூடாது। இதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்।

பிரச்சனையின் தீவிரத்தை வங்காலையான் சுட்டிக் காட்டுகிறார். 🔥

விதண்டாவாதம் புரியும் யாவரும் சிறிது கவனத்திற் கொள்ளுதல் நன்று 🙏

  • தொடங்கியவர்
6 hours ago, Vankalayan said:

இஸ்லாமியர்களைப்போல கிறிஸ்தவர்களையும் தமிழர்கள் அந்த நிலைமைக்கு தள்ளாமலிருந்தால் அது பின்னாட்களில் தமிழர்களுக்கு நல்லதென்று நினைக்கிறேன்।

ஆம், நிச்சயமாக.  

நீங்கள் இவ்வாறும் எழுதி இருந்தீர்கள் : " நான் உண்மையாக இங்கு தமிழர்கள் என்று எழுதியது இந்துக்களை குறிக்கவே। கிறிஸ்தவர்களுக்கும் (தமிழ் பேசும்), இந்துக்களுக்கும் இடையே இப்போது உள்ள இடைவெளி எவ்வளவாக அதிகரித்திருக்கிறதென்பதை இங்குள்ள எமக்குத்தான் தெரியும்।" 

முதலில், தமிழர்கள் என இந்துக்களை (இல்லை சைவர்களை) பிரிப்பதை தவிர்ப்போம்!

அடுத்து, நாட்டில் உள்ளவர் என்ற ரீதியில், என்ன முக்கிய மூன்று பிரச்சனைகள் என்றும் அவற்றிற்கு, உங்கள் பார்வையில் எவை தீர்வாக இருக்க முடியும் என கூற முடியுமா?  

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Vankalayan said:

நான் உண்மையாக இங்கு தமிழர்கள் என்று எழுதியது இந்துக்களை குறிக்கவே। கிறிஸ்தவர்களுக்கும் (தமிழ் பேசும்), இந்துக்களுக்கும் இடையே இப்போது உள்ள இடைவெளி எவ்வளவாக அதிகரித்திருக்கிறதென்பதை இங்குள்ள எமக்குத்தான் தெரியும்।

கடந்த வாரம் நான் ஒரு சடடதரணியுடன் கதைத்தபோது அந்த இடைவெளி இன்னும் அதிகமாக இருப்பதுபோல தெரிகின்றது। தேர்தல் நடக்கும் வரையும் அது சில வேளைகளில் பெரிதாக வெளியில் தெரியாமல் இருக்கலாம்। இஸ்லாமியர்கள் தமிழ் பேசினாலும் அவர்கள் தங்கள் தமிழர்கள் இல்லை என்று அடித்து சொல்லிவிடடார்கள்।

இங்கு எழுதும் தமிழர்களின் (இந்துக்கள்) கருத்துக்களை நோக்கும்போது நாங்களும் தமிழர்கள் என்பதைவிட கிறிஸ்தவர்கள் என்று எங்களை மாற்றிக்கொள்ளுவது சரியென்று எனக்கு தோன்றுகின்றது। எனவேதான் அப்படி எழுதினேன்। இஸ்லாமியர்களைப்போல கிறிஸ்தவர்களையும் தமிழர்கள் அந்த நிலைமைக்கு தள்ளாமலிருந்தால் அது பின்னாட்களில் தமிழர்களுக்கு நல்லதென்று நினைக்கிறேன்।

வட கிழக்கில் தமிழர்களுக்கு ஒரு தீர்வு வருமென்று நான் நினைக்கவில்லை। அப்படி வந்தாலும் முஸ்லிம்களைப்போல , கிறிஸ்தவர்களும் ஒரு அமைப்பாக விசேட அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது। பின்னாட்களில் தமிழர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அது பிரச்சினையாக இருக்கக்கூடாது। இதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்।

இதை முதலில் மதம் மாறிய கிறிஸ்தவர்கள் உணர வேணும் ...மதம் மாறினாப் போல் தாங்கள் ஏதோ வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்று நினைப்பு ...மதம் மாறினாலும் தங்களை முதலில் தமிழர்களாய் நினைக்கட்டும்...அப்படி நினைத்தால் ஒரு பிரச்சனையும் இல்லை 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.