Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுவிஸ் பாஸ்டரை இனி இலங்கைத் தீவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுற்றுலா விசாவில் வந்து மத நடவடிக்கையில் ஈடுபடுவர்கள் அனைவர்கள் மீதும் பாரபட்ச தடைகள் விதிக்க வேண்டும். ஆனால் தனிநபர் செல்வாக்குகள் ஆட்சி செய்யும்..  சொறீலங்காவில் இதெல்லாம் சாத்தியமா..??! 

  • Replies 95
  • Views 9.6k
  • Created
  • Last Reply

பிறந்த நாள் முதல் மரணம் மனிதனை துரத்துகின்றது. 

இந்த ஓட்டத்திலும் அயராது துரத்தும் வலிந்த போதனைகள்.

தொற்றில் இருந்து மக்களை முதலில் காப்பாறறுங்கள்.  அதுவே இறை சேவை !

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் .

இவ்வளவு குத்தி முறியிரம் இன்னும் காணாது காணாது என்று ஆடுகினம் இன்று லண்டனில் மதம் பரப்பிய கோஸ்ட்டிக்கு நடந்த கதை கீழ் இணைப்பில் .

நாதமுனி உங்கட இடம்தான் .

 ஜேசுநாதர் சமுதாய, அரசியல் சட்டங்களை மதித்து அதற்கு உட்பட்டே மக்களுக்கு சேவை செய்தார். இது வீம்புக்கு செய்வதுபோல் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் .

இவ்வளவு குத்தி முறியிரம் இன்னும் காணாது காணாது என்று ஆடுகினம் இன்று லண்டனில் மதம் பரப்பிய கோஸ்ட்டிக்கு நடந்த கதை கீழ் இணைப்பில் .

நாதமுனி உங்கட இடம்தான் .

ஆமாம், இங்க ஒரு ஆவேசமா திரியுறாங்க....

4 மாதம் முன்னாடி வாக்கிங் போனேன். இரண்டு பெண்கள் வழி மறித்து ஒரு நிமிடம் என்கிறார்கள். ஏதோ வழி கேட்க்கிறார்கள் என்று நின்ற போது, ஜேசு என்று தமிழில் ஆரம்பிக்க, நான், தமிழ் தெரியாது என்று நடிக்க, அதில் ஒரு பெண் சிங்களத்தில் பேச தொடங்கிவிட்டார், சிங்களவர் என்று நினைத்துக் கொண்டே.

தப்ப, வேறு வழியில்லாமல், கொழும்பு தமிழில், இரண்டு வசனம் விட்டேன்.... ஆகா.... இவர் வேற ஆள் என்று நினைத்து கிளம்பி விட்டார்கள்.

இப்போதெல்லாம் நிற்பதில்லை. கையை காட்டிக்கொண்டே அவசரமாக போவதாக காட்டிக் கொள்வேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பல வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் செல்லத்துரை அல்லது செல்லையா (இது சரியான பெயர் என்று நினைக்கிறேன்) என்பவர், மதம் மாறினார். 

மாறியபின்னர் தமது புதிய மதத்தினை பற்றி அதன் பெருமைகள் குறித்து பேசி மதம் பரப்பாமல், தான் இருந்து வந்த மதம் குறித்து மிக கேவலமாக பேசி அதன் மூலமாக தனது புதிய மதம் குறித்து பெரியதாக பீத்திக்கொள்வதன் மூலம் மதம் பரப்ப முனைந்தார்.

இதனால் பிரபல்யமாக, புலம்பெயர் நாடுகள் எல்லாம் அந்த மத பிரிவினர் அழைக்க, அடிக்கடி வர தொடங்கினார்... அவரது பேட்டி ஒன்றினை ஒரு தமிழ் வானொலி ஒன்றில் கேட்டேன்.

அதனை கேட்ட பலர் கோபம் அடைந்தனர், வெறுப்பு அடைந்தனர்.

அதனை ரெகார்ட் பண்ணி, அரசுக்கு கொடுத்து, இவரது நோக்கம் மதங்களுக்கு இடையே மோதலை உண்டு பண்ணுவது என சொல்ல, அவருக்கு ஐரோப்பிய ஒன்றிய விசா நிரந்தரமாக மறுக்கப்பட்டது. பின்னர் கனடா, அமெரிக்க விசாவும் மறுக்கப்பட்டது.

கடைசியில் இந்திய அரசும் அவரது கடவு சீட்டினை முடக்கி விட்டது. இப்போது அவர் நிலை தெரியவில்லை.

****

வடக்கு லண்டன் Edgware பகுதியில் ஆர்ச்சி எனும் தமிழ் கடை இருந்தது. அது ஒரு விளம்பரம் ஒன்றினை, ஒரு தமிழ் ரேடியோவில் கொடுத்தது.

சிவபெருமானையும், உமாதேவியரும் வான வீதியில் சொல்கிறார்களாம். உமாதேவி, சிவனிடம், 'நாதா, வாசனை மூக்கினை துளைக்கின்றதே, எங்கிருந்து வருகின்றது என்று கேட்கிறார்'. 'அதுவா தேவி?, Edgware பகுதியில் ஆர்ச்சி எனும் தமிழ் கடை மேலாக நந்திதேவர் எம்மை சுமந்து போகின்றார் என்பதாகவும், அங்கே மீன் அது இது எல்லாம் வாங்கலாம் என்று போனது அந்த விளம்பரம்.

அந்த வானொலியின் பொறுப்பில் ஒரு நாடகத்துறையில் புகழ் மிக்க கிறிஸ்தவர் இருந்தார். அவருக்கு போன் போட்டு முறைப்பாடுகள் செய்தனர்.

அவரோ, அது வியாபார நிறுவனத்தின் விளம்பரம், நாம் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டார். அதை நீங்கள் தானே தயாரித்தது என்று சொன்னதையும் அவர் பெரிதாக ஏற்றுக் கொள்ளவில்லை.

உண்மையில் அவர் வேண்டுமென்ற செய்யவில்லை. அவர் அதன் பாரதூரத்தினை உணராமல், வருமானத்தினை மட்டுமே பார்த்ததால் வந்த வினை.

ஒரு நாள் ஒரு கால் வந்தது, ஐயா ஒரு விளம்பரம் போட வேணும் என்று சொல்ல, அவரும் சொல்லுங்கோ தம்பி நான் எழுதுறேன் என்கிறார். அவரோ, மோசமான வியாபார சேவைக்கு அவரது கடவுள் போவது போலவும், சிறப்பான சேவை அளிக்கிறார்கள் என்று சிபாரிசு செய்வது போலவும் வேண்டுமென்றே வசனங்களை சொல்ல, இவர் கோபத்தின் உச்சிக்கே போய், திட்ட, அழைத்தவரோ, உனக்கு என்றால் ரத்தம் ,  அடுத்தவன் கடவுள் (ஆர்ச்சி விளமபரம்) என்றால் தக்காளி தொக்கா என்று கேட்க, விதிர் விதிர்த்துப்போன அவர், ஒரு நிமிஷம் தம்பி என்று எழுந்து ஸ்டூடியோ உள்ளே சென்று, எக்காரணம் கொண்டும் அந்த விளமபரம் போடக்கூடாது என்று ஆர்டர் போட்டு வந்து, அதையே அழைத்தவருக்கு சொல்லி போனை வைத்தார்.

ஆர்ச்சி கடை இப்போது இல்லை. 

மோசமான விளம்பரத்தினால் மக்கள் புறக்கணித்தார்கள் என்பது வேறு கதை.

Edited by Nathamuni

சர்ச்சைக்குரிய சுவிஸ் போதகர் மீண்டும் இலங்கை வந்தால் கைது செய்யப்படுவார்

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருந்தவர் என கூறப்படும் சுவிட்சர்லாந்து போதகர் மீண்டும் இலங்கை வந்தால் அவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

உயர் மட்ட பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி இது தொடர்பான பல செய்திகள்ஊடகங்கள் வாயிலாக வெளிவந்துள்ளன.

அவர் தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், சுகாதார பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்யாமல் வேண்டுமென்றே அவர் இலங்கைக்கு வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் அவருக்கு பிரயாணம் செய்ய அனுமதி கொடுத்தவர்கள் பற்றியும் புலனாய்வுப் பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், குற்றப்புலனாய்வு விமான நிலைய அதிகாரிகளுக்கு இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

https://www.ibctamil.com/srilanka/80/141166

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

உதே ஊரில் என்றால்  மாமாக்கள் சிலுவையை புடுங்கி அதாலே  அடி  கொடுத்திருப்பார்கள் 🤣
 
லண்டன் போலீஸ் வெளில தான் இப்படி பவ்வியம்..

ஆள் உள்ளுக்கு ஏத்திக் கொண்டு போகேக்க, கிழிக்க தொடங்குவினம்... அப்ப தெரியும்...

போய் உள்ள வச்சு, பூர்வீகம் கிண்டேக்க தான் தெரியும்... தடியை..சா.. தடியால் செய்த சிலுவையை... கொடுத்து அடி வாங்கிறோம் எண்டு...

ஒருவருக்கு இருக்கக்கூடிய நல்ல பெயர், அவரை போலீசாருக்கு முன்னரே தெரிந்திருக்க கூடாது.

தெரிந்திருந்தால், அதாவது போலீஸ் database இல் ஏறிச்சுது எண்டால், ஜென்மத்துக்கும் இருக்கும். ஒரு வேலை வெட்டி எடுக்கேலாது. ஏன் இலங்கை குடியுரிமையே எடுக்கேலாது.
 
  • கருத்துக்கள உறவுகள்

சில மாதங்களுக்கு முன்னரான ஒரு காலகட்டத்தில் கொரோனா தொற்று அப்போதுதான் சிறிது சிறிதாக ஆரம்பித்தபோது உலக நாடுகள் இந்த நோயைபற்றியோ அல்லது அதன் தாக்கத்தைபற்றியோ எதுவும் அறிந்திருக்கவில்லை.

அப்போதுதான் உலகின் பல நாடுகளுக்கு சீனாவில் இருந்து  சுற்றுலா சென்ற பெண்கள் குறைந்தபட்சம் ஒரு நாட்டுக்கு ஒன்று என்ற அளவில் கொரொனா நோய்பரப்பிகளாக இனங் காணப்பட்டர்கள். ஆனால் இவர்களில் எவருமே இந்த நோய் தொற்றால் பாதிக்கப்படவில்லை.

வெளி நாட்டு நாசகார சக்தியொன்றினால் வேண்டுமென்று நோய் தொற்றுக்குள்ளாக்கப்பட்டு அதற்கான தடுப்பூசியும் போடப்பட்டு மறைமுகமாக மற்றவர்களுக்கு(நாடுகளுக்கு)  கொரோனா நோய் பரப்பும் நோக்கதுடன்  மனித வெடிகுண்டு போன்று  அனுப்பப்பட்டதாகவும் இதை பார்க்கலாம்.

சுற்றுலா என்ற போர்வையில் சென்று  பிடிபட்ட இந்த சீனச்  பெண்கள்  தங்களுக்கு நோய் தொற்று உள்ள விடையம் முன்கூட்டியே தெரிந்திருந்ததும் அதை மற்றவர்களுக்கு மறைக்க முயற்சித்து தப்பி சென்று தொடர்ந்து சனங்களுக்கு மத்தியில் உலவியதும் இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகின்றது.

ஆரம்பத்தில் வெளிவந்த ஆதாரங்களை பட்டியலிட்டு பார்க்கும்போது இலங்கை உட்பட பல சிறிய ஆசிய நாடுகளில் ஒரு நாட்டுக்கு ஒன்று என்ற எண்ணிக்கையிலே இந்த பெண்கள் சுற்றூலா சென்றிருந்ததும் அதேவேளை பெரிய நாடுகளில் இந்த எண்ணிக்கை 3 தொடக்கம் 5 வரை இருந்ததும் தெரியவருகிறது.

அதுபோக இந்த ஆள்கொல்லி நோயின் இயல்புகளை ஆராயுமிடத்து உலக நாடுகளை பழிவாங்கும் அல்லது அடிபணிய வைக்கும் நாசகார நோக்கத்திற்காக நுண்ணுயிர் ஆயுதமாக இது திட்டமிட்ட முறையில் மனிதனால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது என்பதும் கண்கூடு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Rajesh said:

சர்ச்சைக்குரிய சுவிஸ் போதகர் மீண்டும் இலங்கை வந்தால் கைது செய்யப்படுவார்

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருந்தவர் என கூறப்படும் சுவிட்சர்லாந்து போதகர் மீண்டும் இலங்கை வந்தால் அவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

உயர் மட்ட பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி இது தொடர்பான பல செய்திகள்ஊடகங்கள் வாயிலாக வெளிவந்துள்ளன.

அவர் தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், சுகாதார பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்யாமல் வேண்டுமென்றே அவர் இலங்கைக்கு வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் அவருக்கு பிரயாணம் செய்ய அனுமதி கொடுத்தவர்கள் பற்றியும் புலனாய்வுப் பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், குற்றப்புலனாய்வு விமான நிலைய அதிகாரிகளுக்கு இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

https://www.ibctamil.com/srilanka/80/141166

ஆளை உள்ளுக்கை போட்டு முட்டிக்கு முட்டி தட்டி பெண்ட் எடுக்கணும்.🕵🏾‍♂️

10 hours ago, Nathamuni said:

நாதமுனி இப்ப சந்தோசமா? 🙃

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

நாதமுனி இப்ப சந்தோசமா? 🙃

இது உண்மையாக இருந்தால அரசு வெளியில சொல்லாது, சொல்லக்கூடாது. முதலாவதாக அவருக்கு விசா கிடைக்காது, பின்னர் எப்படி பயணம் செய்வது, கைதாவது... ( கொரோனாவுக்கு பிறகு என்ட்ரி விசா நிறுத்தி வைக்கப்படுள்ளது)

அரசாங்கம் தனிப்பட்ட ஒருவர் மீது கொளகை முடிவு எடுக்க வேண்டுமெனில் அதில் நீதிமன்றில் முடிவு ஒன்று எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

சும்மா இந்த பம்மாத்துக் கதைகளை நம்பாதீங்கோ.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, Nathamuni said:

இது உண்மையாக இருந்தால அரசு வெளியில சொல்லாது, சொல்லக்கூடாது. முதலாவதாக அவருக்கு விசா கிடைக்காது, பின்னர் எப்படி பயணம் செய்வது, கைதாவது... ( கொரோனாவுக்கு பிறகு என்ட்ரி விசா நிறுத்தி வைக்கப்படுள்ளது)

அரசாங்கம் தனிப்பட்ட ஒருவர் மீது கொளகை முடிவு எடுக்க வேண்டுமெனில் அதில் நீதிமன்றில் முடிவு ஒன்று எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

சும்மா இந்த பம்மாத்துக் கதைகளை நம்பாதீங்கோ.

நான் சொன்னது உங்களுக்கு நீதி கிடைச்சிருக்கு எண்டு
நான் இணைச்ச மந்திரவாதி வீடியோவும் தூக்கியாச்சு பாக்கேல்லையோ....இப்ப சந்தோசமா?😁

  • கருத்துக்கள உறவுகள்

அரசை விட முடங்கி போன மக்கள் கடும் கொந்தளிப்புடனும் , கோபத்துடனும் இருக்கிறார்கள் காரணம் அவர்மீதுள்ள கோபம் அல்ல விளைவித்த பொருட்களும் , காலாவதியான பொருட்களும், அன்றாடம் உழைக்கும் மக்களும் தான் 

கடலுக்கு சென்று வந்தாலும் விற்க ஆட்கள் இல்லை

பொருட்களை வேற ஊர்களுக்கு கொண்டு செல்ல வாகன வசதிகள் இல்லை , உற்பத்தி பொருட்கள் தேங்கி முதலுக்கு மோசமான நிலை

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நான் சொன்னது உங்களுக்கு நீதி கிடைச்சிருக்கு எண்டு
நான் இணைச்ச மந்திரவாதி வீடியோவும் தூக்கியாச்சு பாக்கேல்லையோ....இப்ப சந்தோசமா?😁

அட அதே விசயம்... நான் கவனிக்கேல்ல...😁

மந்திர தந்திர வித்தைகள், சூனியம், பில்லி சூனியம் எல்லாம் பம்மாத்து தான்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அரசை விட முடங்கி போன மக்கள் கடும் கொந்தளிப்புடனும் , கோபத்துடனும் இருக்கிறார்கள் காரணம் அவர்மீதுள்ள கோபம் அல்ல விளைவித்த பொருட்களும் , காலாவதியான பொருட்களும், அன்றாடம் உழைக்கும் மக்களும் தான் 

கடலுக்கு சென்று வந்தாலும் விற்க ஆட்கள் இல்லை

பொருட்களை வேற ஊர்களுக்கு கொண்டு செல்ல வாகன வசதிகள் இல்லை , உற்பத்தி பொருட்கள் தேங்கி முதலுக்கு மோசமான நிலை

அங்க கடும்பிடியால கொரோணாவால் பெரிசா வெட்டியாட முடியாமல் இருக்குது.

இங்க அப்படி இல்லாத படியா, சாவு பத்தாயிரம் தாண்டிட்டுதே...

உங்க, இலண்டண் காரர் வந்து சிக்குண்டு போய் நிக்கிறார்.இண்டைக்கு மருதடி தேருக்கு, சொந்தக்காரர் ஒருத்தரோட பின் ஒழுங்கைகிளால போனா, பாஸ் வைத்திருக்கிற பத்து பேர் நிண்டிருக்கினம்.

இவயளட்ட இல்லை. டபக்கெண்டு கும்பிட்டுட்டு ஓடுங்கோ, நிக்காதீங்க எண்டு அய்யர், உபயகாரர் சொல்லியிருக்கினம்.

கும்பிட்டு வெளில வரேக்க, பாஸ் வச்சிருக்கிற வேட்டியோட நிண்ட பக்தர்கள் இரண்டு பேர் வந்து, பாஸ் ஈசியா கிடைக்குதே? உங்கட பாஸ் எப்ப எடுத்தனியள் எண்டு கேட்க, இவயளும்... சிரித்துக் கொண்டே, பாஸ் இல்லை, டக்கெண்டு கும்பிட்டு போவம் எண்டு ஓடி வந்தனாங்க, இந்தா வெளிக்கிட்டம் எண்டு சொல்ல...

அவயளும் வாருங்க போவம் எண்ட, இவை எங்க எண்ட, வேற எங்க, பொலீஸ் ரேசனுக்கு தான் எண்டு நடாத்திக் கொண்டு போய் ஆளுக்கு Rs 1450 தெண்டம் கட்ட சொல்லி துண்டைக் குடுத்து அனுப்பி விட்டிருக்கினம். 😁

Edited by Nathamuni

20 hours ago, Nathamuni said:

வடக்கு லண்டன் Edgware பகுதியில் ஆர்ச்சி எனும் தமிழ் கடை இருந்தது. அது ஒரு விளம்பரம் ஒன்றினை, ஒரு தமிழ் ரேடியோவில் கொடுத்தது.

சிவபெருமானையும், உமாதேவியரும் வான வீதியில் சொல்கிறார்களாம். உமாதேவி, சிவனிடம், 'நாதா, வாசனை மூக்கினை துளைக்கின்றதே, எங்கிருந்து வருகின்றது என்று கேட்கிறார்'. 'அதுவா தேவி?, Edgware பகுதியில் ஆர்ச்சி எனும் தமிழ் கடை மேலாக நந்திதேவர் எம்மை சுமந்து போகின்றார் என்பதாகவும், அங்கே மீன் அது இது எல்லாம் வாங்கலாம் என்று போனது அந்த விளம்பரம்.

அந்த வானொலியின் பொறுப்பில் ஒரு நாடகத்துறையில் புகழ் மிக்க கிறிஸ்தவர் இருந்தார். அவருக்கு போன் போட்டு முறைப்பாடுகள் செய்தனர்.

அவரோ, அது வியாபார நிறுவனத்தின் விளம்பரம், நாம் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டார். அதை நீங்கள் தானே தயாரித்தது என்று சொன்னதையும் அவர் பெரிதாக ஏற்றுக் கொள்ளவில்லை.

உண்மையில் அவர் வேண்டுமென்ற செய்யவில்லை. அவர் அதன் பாரதூரத்தினை உணராமல், வருமானத்தினை மட்டுமே பார்த்ததால் வந்த வினை.

ஒரு நாள் ஒரு கால் வந்தது, ஐயா ஒரு விளம்பரம் போட வேணும் என்று சொல்ல, அவரும் சொல்லுங்கோ தம்பி நான் எழுதுறேன் என்கிறார். அவரோ, மோசமான வியாபார சேவைக்கு அவரது கடவுள் போவது போலவும், சிறப்பான சேவை அளிக்கிறார்கள் என்று சிபாரிசு செய்வது போலவும் வேண்டுமென்றே வசனங்களை சொல்ல, இவர் கோபத்தின் உச்சிக்கே போய், திட்ட, அழைத்தவரோ, உனக்கு என்றால் ரத்தம் ,  அடுத்தவன் கடவுள் (ஆர்ச்சி விளமபரம்) என்றால் தக்காளி தொக்கா என்று கேட்க, விதிர் விதிர்த்துப்போன அவர், ஒரு நிமிஷம் தம்பி என்று எழுந்து ஸ்டூடியோ உள்ளே சென்று, எக்காரணம் கொண்டும் அந்த விளமபரம் போடக்கூடாது என்று ஆர்டர் போட்டு வந்து, அதையே அழைத்தவருக்கு சொல்லி போனை வைத்தார்.

ஆர்ச்சி கடை இப்போது இல்லை. 

மோசமான விளம்பரத்தினால் மக்கள் புறக்கணித்தார்கள் என்பது வேறு கதை.

இந்த விளம்பரத்திற்காக இவ்வளவு வருத்தப்புடுகின்றீர்களே? நீங்கள் கூறிய விளம்பரத்தில் அப்படி ஒன்றும் அவமதிப்பு இல்லையே? இந்து மத புராணங்களில் இல்லாத ஆபாசங்களா? இந்து மத புராணங்களில் உள்ள ஆபாசங்களை படித்து பாருங்கள். அதன் பின்னர் இது எல்லாம் பெரிசாக தெரியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, tulpen said:

இந்த விளம்பரத்திற்காக இவ்வளவு வருத்தப்புடுகின்றீர்களே? நீங்கள் கூறிய விளம்பரத்தில் அப்படி ஒன்றும் அவமதிப்பு இல்லையே? இந்து மத புராணங்களில் இல்லாத ஆபாசங்களா? இந்து மத புராணங்களில் உள்ள ஆபாசங்களை படித்து பாருங்கள். அதன் பின்னர் இது எல்லாம் பெரிசாக தெரியாது. 

உங்கட பிரச்னை வேற ஏதோ போலை கிடக்குது.

இருந்தாலும், சிவபெருமானும், உமாதேவியாரும், நல்ல பிரெஷ் ஆன மீன், றால், நண்டு, இறைச்சி எங்க வாங்கலாம் எண்டு சொன்னால் தான் போய் வாங்குவியலோ??

சரி இந்த இருவர்களையும் விடுங்கோ. வேறு எந்த மத இறைவர்களையும் இப்படி ஒரு கடை விளம்பரத்தில் சம்பந்தப்படுத்துவது சரிதானா?

ஒண்டு அந்த கடை ஓனர் வேற மத்தினை சேர்ந்தவராக இருப்பார் அல்லது அந்த விளம்பரத்தினை எழுதி ஒகே பண்ணி ஒலிபரப்ப முடிவு செய்தவர்கள், மண்டையில பிழை உள்ளவர்கள்.

சரியா, பிழையா?

Edited by Nathamuni

சிங்கள தீவினிட்கோர் பாலம் அமைப்போம் என்று பாரதியார் பாடினார்। எனவே சிங்கள தீவிட்கு வருவதட்கு விக்கியிடமோ, இணையதள போராளிகளிடமோ அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை।

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Vankalayan said:

சிங்கள தீவினிட்கோர் பாலம் அமைப்போம் என்று பாரதியார் பாடினார்। எனவே சிங்கள தீவிட்கு வருவதட்கு விக்கியிடமோ, இணையதள போராளிகளிடமோ அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை।

என்னப்பா, டபெக்கெண்டு வந்து எதோ சொல்லுறியள்... சரியான திரியோ?

தாருக்காவது பதில் போடுறதெண்டால், அவையட பதிவை quote பண்ணி போடுங்கோ.

7 hours ago, Nathamuni said:

உங்கட பிரச்னை வேற ஏதோ போலை கிடக்குது.

இருந்தாலும், சிவபெருமானும், உமாதேவியாரும், நல்ல பிரெஷ் ஆன மீன், றால், நண்டு, இறைச்சி எங்க வாங்கலாம் எண்டு சொன்னால் தான் போய் வாங்குவியலோ??

சரி இந்த இருவர்களையும் விடுங்கோ. வேறு எந்த மத இறைவர்களையும் இப்படி ஒரு கடை விளம்பரத்தில் சம்பந்தப்படுத்துவது சரிதானா?

ஒண்டு அந்த கடை ஓனர் வேற மத்தினை சேர்ந்தவராக இருப்பார் அல்லது அந்த விளம்பரத்தினை எழுதி ஒகே பண்ணி ஒலிபரப்ப முடிவு செய்தவர்கள், மண்டையில பிழை உள்ளவர்கள்.

சரியா, பிழையா?

அப்படி இல்லை நாத முனி ஒரு வியாபார நிறுவனத்தின் ஒரு  just funny விளம்பரத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை. அங்கு எவரும் அவமதிக்கப்படவும் இல்லை. சிரித்து சந்தோசப்பட்டுவிட்டு கடந்து விடும் சிறிய விளம்பர உத்தி  அது. அப்படி இருந்தும் அவர்களை மண்டை பிழை என்கின்றீர்கள். ஆனால் நாரதருக்கும் கிருஷ்னருக்கும்  ஓரினச்  சேர்கையில் பிறந்த 60  பிள்ளைகளே பிரபவ, விபவ, சுக்கில,பிரமோதூத என்ற பெயர்களில் தொடங்கும்   தமிழ் வருடங்கள் என்று ஆபாச புராணம் எழுதியவர்கள் மண்டை பிழையானவர்களா அல்லது அதை நம்பியவர்கள்  மண்டை பிழையானவர்கள?  

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2020 at 08:22, Nathamuni said:

மகிந்தருக்கு விசயம் போய், மனிசன் கொதில இருந்ததா கேள்வி

கொரோனோவுடன் எத்தனையோ பேர் இலங்கை வந்து கண்டுபிடிக்கப்பட்டு, தனிமைப் படுத்த சொல்லியும், கேளாமல் திரிந்து நோயைப் பரப்பியுள்ளார்கள். நோயை மறைத்து வேறொரு நோயைச் சொல்லி பல வைத்தியசாலைகளுக்கு சென்று நோயைப் பரப்பியிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் விட்டிட்டு, மகிந்தருக்கு போதகர் மேல்மட்டும் கொதி வந்திட்டுது என்றால், தமிழர் மேல் அவ்வளவு பாசம் பொங்கி வழியுது. நாங்களும் அவரின் கொதியில உருகி விட்டோமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எப்படி சிலரால் அந்த அல்லேலூயா கள்ளனுக்கு வெட்கமேயில்லாமல் முண்டு கொடுக்க முடியுது ...அந்த சபையை சேர்ந்த  தனிமைப்படுத்தி இருந்தவர்களுக்கு நேற்றும் கண்டு பிடித்துள்ளார்கள்[அவர்கள் இன்னும் யாருக்கு கொடுத்தார்களோ] யாழ்ப்பாணத்திற்கு  வந்ததே இந்த சபையால் 😠
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

அப்படி இல்லை நாத முனி ஒரு வியாபார நிறுவனத்தின் ஒரு  just funny விளம்பரத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை. அங்கு எவரும் அவமதிக்கப்படவும் இல்லை. சிரித்து சந்தோசப்பட்டுவிட்டு கடந்து விடும் சிறிய விளம்பர உத்தி  அது. அப்படி இருந்தும் அவர்களை மண்டை பிழை என்கின்றீர்கள். ஆனால் நாரதருக்கும் கிருஷ்னருக்கும்  ஓரினச்  சேர்கையில் பிறந்த 60  பிள்ளைகளே பிரபவ, விபவ, சுக்கில,பிரமோதூத என்ற பெயர்களில் தொடங்கும்   தமிழ் வருடங்கள் என்று ஆபாச புராணம் எழுதியவர்கள் மண்டை பிழையானவர்களா அல்லது அதை நம்பியவர்கள்  மண்டை பிழையானவர்கள?  

சனம் வேடிக்கையாக பார்காமல், போனதால், கடையை பகிஸ்ரிக்க, கடையை இழுத்து மூடவேண்டியதாய் போட்டுது...

பின்ன, தாருக்கப்பா பாதிப்பு?

சரி, இந்த சமயக்கதைகள் முழுவதும் மனித அறிவுக்கு சவல் விடும் செய்திகள் பல உள்ளன.

கிறிஸ்தவத்தில் கூட, மிக கொடூரமாக கொல்லப்பட்ட, இயேசு பகவான், மூன்றாம் நாள் எழும்பி வந்தாராம் என்று சொல்லி கொண்டாடப்படுகின்றது.

அதுவும் just funny தான் எண்டு நியாயம் பிளவாம, போங்க, போய் பிள்ளை குட்டியள படிக்க வையுங்கோ.

3 minutes ago, Nathamuni said:

ஐரோப்பாவில் தமிழ்கடைகள் மூடுவதற்கு பல காரணங்கள் உண்டு. அது எல்லாருக்கும் பொதுவாக தெரிந்த விடயம் தான். அதுக்காக நீங்க  ஒரு கதைய கட்டவேண்டாம்.

அது போக நீங்கள் கூறியபடி எமது பிள்ளை குட்டிகளாவது படித்து அறிவார்ந்த பிள்ளைகளாக எல்லா மதங்களும் கட்டிவிட்ட மூடத்தனங்களையும் எல்லாவற்றிற்கும் சிகரமாக  நமது இந்துமதம் கட்டிய வடிகட்டிய மூடத்தனங்களையும்  கேலி பண்ணி அலட்சியம் செய்து கடந்து  முன்னேறிய மக்களாக  வேண்டும். அவ்வாறான சிந்தனை வந்ததற்கு உங்களுக்கு  நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, tulpen said:

நீஙகள் இருப்பது சுவிசில், நான் இலண்டண் யவாரி பத்தி, இலண்டணில இருந்து கதை கட்டுகிறேன் என்று, நீங்கள் கதை கட்ட வேண்டாம்.

நீங்கள் சுவிஸ் கடைக்காரர் பத்தி சொன்னா, நான் அப்படி சொல்ல மாட்டேன். காரணம் அது உங்க ஊர், உங்களுக்கு கூட தெரிந்திருக்கும்.

சரி உங்கண்ட ஊரில இருந்து யாழ் போட்டு வந்த ஒரு ஆள் கர்த்தர் ஆசீர்வாதத்துடன் தப்பீட்டாராமே.

கதை கட்டலா, உண்மையா ?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இன்னும் எப்படி சிலரால் அந்த அல்லேலூயா கள்ளனுக்கு வெட்கமேயில்லாமல் முண்டு கொடுக்க முடியுது ...அந்த சபையை சேர்ந்த  தனிமைப்படுத்தி இருந்தவர்களுக்கு நேற்றும் கண்டு பிடித்துள்ளார்கள்[அவர்கள் இன்னும் யாருக்கு கொடுத்தார்களோ] யாழ்ப்பாணத்திற்கு  வந்ததே இந்த சபையால் 😠
 
அதுதான் இன்னும் விளங்கவில்லை 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.