Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவர தொட்ட நீ கெட்ட ஜோதிகாவை நேரடியாக எச்சரித்த இயக்குனர் மோகன்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kapithan said:

1) தங்கள் அபிப்பிராயம் தவறு. (கருவறைக்குள் நீங்கள்தான் போக முடியாது) பள்ளிவாயலுக்குள் நான் போயிருக்கிறேன். எனது சைவ சமய நண்பர்கள் கிறீத்துவக் கோயில்களில் கொடுக்கப்படும் அப்பத்தயும் நேர்த்திதிக்காக கொடுக்கப்படும் உணவுகளையும் என்னுடன் சேர்ந்து பகிர்ந்துள்ளனர்.😀

2) கோவில்களுக்கு நிகராக பாடசாலைகளும் வைத்தியசாலைகளும் பராமரிக்கப்பட வேண்டும் என்பதில் எங்கே பக்கச் சார்பிருக்கிறது ? 🤔

கோவில்களுக்கு நிகராக, பள்ளிவாயால்களுக்கு நிகராக, தேவாலயங்களுக்கு நிகராக பாடசாலைகளும் வைத்தியசாலைகளும் பராமரிக்கப்படவேண்டும் எனக் கூறவேண்டும் என்பதா உங்கள் நிலைப்பாடு. 😂

(ம்ம்.... அதுவும் சரிபோலதான் படுகுது 🤔)

ஈழத்தில் சில தேவாலயங்களுக்குள் பிரசாதமாக வழங்கப்படுவதை வெளியில் இருந்து எவரும் வாங்கிச் சாப்பிட மட்டுப்படுத்திய வாய்ப்புண்டு. ஆனால் அன்னதானம் எல்லாம் போடமாட்டார்கள் கோவில் போல்..! கோவில் அன்னதானத்தை சாப்பிட சைவர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

பள்ளிவாசல்களுக்குள் தெரியாமல் போய் வரலாம். நிச்சயம்.. எதையும் இலவசமாக சாப்பிட தரமாட்டார்கள்.. குறிப்பாக மாற்று மதத்தினரை தெரிந்து கொண்டு உள்ளனுமதிக்க மாட்டார்கள்.

ஆம்.. தடித்த எழுத்தில் உள்ளதை சொல்வது தான் சமூக நியாயம் ஆகும். வெறுமனவே கோவில்கள் மீது கருத்து வைப்பது பக்கச்சார்ப்பு ஆகும். 

  • Replies 116
  • Views 11.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: sky, cloud and outdoor

நடிகை ஜோதிகாவிற்க்கு இராஜ ராஜ சோழன் குடும்ப வாரிசு இரா.அழகர் அவர்களின்  கடிதம்

திருமதி.ஜோதிகா சூர்யா அவர்களுக்கு..!

தாங்கள் விஜய் டிவி விருது விழாவில்,தஞ்சை பெரிய கோவிலை பற்றியும்,அரசு மருத்துவமனை மருத்துவத் தரம் பற்றியும்,கல்வியின் தரம் குறைவு பற்றியும் மிகவும் உருக்கமாக பேசினீர்கள்.. கோவில்களுக்கு ஏன் செலவு செய்கிறீர்கள்.. உண்டியலில் ஏன் பணம் போடுகிறீர்கள்..? அதை மருத்துவத்துக்கும் கல்விக்கும் செலவிடலாமே என ஆதங்கத்தோடு ஆலோசனை கூறி உங்களை ஒரு பகுத்தறிவுவாதியாக அடையாளப் படுத்தி பெருமை கொண்டீர்கள்.. நல்லது.. நீங்கள் பிறப்பால் ஒரு இஸ்லாமியர்.. மார்க்க வழிபாடு கொள்பவர்.. பிறர் மதங்களை பற்றி பேசும் போது, அதன் பெருமைகள் என்ன, தொன்மை வரலாறென்ன என்பதை பற்றி அறியாமல் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள்...

எங்களின் சோழப்பேரரசு எல்லா கலைகளிலும் சிறந்து விளங்கி உலகோர் போற்றும் இராஜராஜ சோழனின் தலைமையிலும், அவன் வழி வந்து கீழ்திசை நாடுகளை கடல்கடந்து படை நடத்தி வென்றெடுத்த இராஜேந்திர சோழனாலும் உருவானது... சிற்பக்கலை, ஆன்மீகம், ஓவியம், நாட்டியம் இவைகளை வளர்த்தது போல என் பாட்டன் ராஜராஜன் தமிழ் குலத்தின் பெருமையை உலகிற்கு தெரிவிக்கும் விதமாக குடவோலை(தேர்தல்), மெய்கீர்த்தி(டைரி)முறைகளை ஏற்படுத்திய மனித நேயம் மிக்கவன்.. தமிழரின் வாழ்விற்கு இழுக்கு நேரிட்ட போதெல்லாம், தன் வாளின் துணையால் பகை வென்று வீரத்தை நாட்டியவன்..
தனது அரசில் பெண்களை அதிகாரிச்சிகளாக நியமித்து பெண்ணுரிமை காத்தவன்.. சிவப்பற்று காரணமாக மாபெரும் தட்சிணமேருவை எழுப்பி ஆன்மீகம் வளர்த்தவன்..!
புலி எவ்வழியோ, அவ்வழியே புலியேறென இராஜேந்திர சோழனாலும் ஆன்மீகம், வீரம், கொடை ஆகியவற்றை சோழர்கள் வளர்த்தனர்..

இராஜராஜன் தமக்கையோ பெரிய குந்தவை பிராட்டியார்.. நாட்டு மக்களுக்கு மருத்துவ வசதி வேண்டி நாடெங்கும் தன் சொந்த செலவில் பல ஆதூரச்சாலைகளை நிறுவி மருத்துவம் வளர்த்தவர்.. பல அரிய மூலிகைகளை வளர்க்கவென்றே அரசு பணியாளர்களை நியமனம் செய்தவர்.. மக்களின் கல்வியறிவை வளர்க்க, பல கடிகைகளை தேசத்தில் அமைத்தவர்.. இன்றிருக்கும் தஞ்சை அரசு மருத்துமனையின் பெயர் குந்தவை அரசு மருத்துவமனை என்றேயிருப்பதற்கு அவர்களின் கடமையுணர்வும், அர்ப்பணிப்புமே காரணம்..! இது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா..? தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கேட்டோ, சரித்திரம் படித்தோ தெரிந்து கொள்ளுங்கள்.. போகிற போக்கில் புழுதியை வாரி இறைக்காதீர்கள்... மனிதர்கள் மீது இவ்வளவு அக்கறை காட்டும் தாங்கள், நோய்வாய் பட்டவர்களை எப்படி குணப்படுத்த வேண்டும் என உங்கள் மதமார்க்கம் கூறுவதை மறந்து விட்டீர்களோ... கோவில் எதற்கு, அதற்கெதற்கு இத்தனை செலவு என கேட்ட நீங்கள்...

தன் வாழ்வில் ஏழு மனைவிகளை கட்டி, நான்காம் மனைவியான மும்தாஜ்பேகத்தை மணமுடிக்க அவளின் முதல் கணவனை கொன்று, மும்தாஜை பிள்ளை பெற்று தள்ளும் இயந்திரமாக ஆக்கி, பத்து பிள்ளைகளை பெற்றெடுத்து, பதினோராவது பிரசவத்தில் மரித்துப் போன மும்தாஜூக்கு ஓர் இந்து ஆலயத்தை இடித்து அதன் மேல் கல்லறை கட்டி, அதை காதலின் சின்னம் தாஜ்மஹால் என்று கூறி இன்றளவும் அதற்கு, அந்த கல்லறைக்கு ஆண்டுதோறும் பலகோடிகள் செலவு செய்யும் பைத்தியக்காரத்தனத்தை ஏன் நீங்கள் கண்டிக்கவில்லை.. 

சரி.. காதலுக்கா வாழ்ந்த காவிய நாயகி அவள் என்றால், அவள் இறப்பிற்கு பின் அவளது தங்கையை மணந்த ஷாஜஹானை பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்.. அவளுக்குப் பின்னும் மூன்று மனைவிகளை மணந்தது தான் காதலின் புனிதமோ... அல்லது தனது முதல் மனைவிக்கு பிறந்த தனது மகளுடனேயே உறவு கொண்ட அந்த உறவு முறைக்கும், அதற்கு இன்றளவு நீங்கள் பூசிமெழுகும் மார்க்க சிந்தனை வழிகளையும் பற்றி என்றாவது நீங்கள் குறை கூறியது உண்டா..!? கூறினால் உங்கள் மதத்தவர் உங்களை முற்போக்குவாதி என முச்சந்தியில் நிறுத்தி கல்லெறிவர் என்பதாவது தெரியுமா.? பெண்ணியம் பற்றி எல்லாம் நீங்கள் எங்களுக்கு சொல்லித் தர வேண்டியதில்லை.. அதை எங்கள் மாமன்னன் எங்களுக்கு கற்று கொடுத்துவிட்டு தான் போயிருக்கிறான். நடுவில் வந்த சில மதமாற்றிகளும், எச்சை சோற்றுக்கு வாலாட்டும் பிச்சைகளென திரியும் இனப் போராளிகளும் எங்கள் கலாச்சார, பண்பாட்டை சீர்குலைக்க முயற்சிப்பதால், ஒட்டு மொத்த தமிழினமும் அவ்வாறோ என நீங்கள் நினைத்தால்... அது உங்கள் பேதமைத் தனம்... எதையும் எடுத்தோம்.. கவிழ்த்தோம் என போகிற போக்கில் பேசாதீர்கள்..!

இந்து மதத்தை பற்றி பேசுவதற்கெல்லாம் ஒரு அருகதை உண்டு.. வேண்டும்..!
அது உங்களைப் போன்ற நாலாந்தர நடிகைகளுக்கோ, மதமாற்றிகளுக்கோ கிடையாது..இனிமேலாவது உங்கள் இடம் எதுவென தெரிந்து நடந்து கொள்ளுங்கள்..! சரிந்து விழுந்த மார்கெட்டை திரும்பப் பெற உளறித் திரியாதீர்கள்..!

ஏனென்றால் சிவத்தை பழித்தவர்கள் சவமாகும் போது
அடையும் துன்பங்கள் அளவிடவியலாதிருக்கும்.. அத்தகைய துன்பங்கள் உங்களுக்கு வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன்..!

மாமன்னன் இராஜராஜனின்
தமிழ் வாரிசாக.....
அழகர். இரா..

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, nedukkalapoovan said:

1) ஈழத்தில் சில தேவாலயங்களுக்குள் பிரசாதமாக வழங்கப்படுவதை வெளியில் இருந்து எவரும் வாங்கிச் சாப்பிட மட்டுப்படுத்திய வாய்ப்புண்டு. ஆனால் அன்னதானம் எல்லாம் போடமாட்டார்கள் கோவில் போல்..! 

2)கோவில் அன்னதானத்தை சாப்பிட சைவர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

3) பள்ளிவாசல்களுக்குள் தெரியாமல் போய் வரலாம். நிச்சயம்.. எதையும் இலவசமாக சாப்பிட தரமாட்டார்கள்.. குறிப்பாக மாற்று மதத்தினரை தெரிந்து கொண்டு உள்ளனுமதிக்க மாட்டார்கள்.

ஆம்.. தடித்த எழுத்தில் உள்ளதை சொல்வது தான் சமூக நியாயம் ஆகும். வெறுமனவே கோவில்கள் மீது கருத்து வைப்பது பக்கச்சார்ப்பு ஆகும். 

1) உங்களுக்கு தெரியாது என்றால் பிரச்சனையில்லை. ஆனால் உங்கள் கூற்றுப் பிழை. அதனை உறுதியாகக் கூறுகிறேன்

2) அப்படியானால் பிற சமயத்தவர்களும் அன்னதானத்தை உட்கொள்ளுகின்றனர் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள்.

3) நான் போய் வந்திருக்கிறேன். 

என்னுடைய கேள்வி மிக இலகுவானது. 👍

கோவில்களுக்கு வழங்கும் அதே அளவு முக்கியத்துவத்தை பாடசாலைகளுக்கும் வைத்தியசாலைகளுக்கும் வழங்கவேண்டும்.

இதில் கோவில் என குறிப்பிட்டதுதான் உங்கள் பிரச்சனையா. 🤥

பாடசாலைகளும்வைத்தியசாலைகளும் கவனிப்பாரற்றுக் கிடப்பது பிரச்சனையல்ல. ☹️

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இவரை தொட்ட நீ கெட்ட”... ஜோதிகாவை நேரடியாக எச்சரித்த திரெளபதி இயக்குநர்.

திரெளபதி இயக்குநர் மோகன் என்பவர் தமிழகத்தில் நடைபெறும் சாதி வெறி ஆணவ கொலைகளை ஆதரித்து திரெளபதி என்ற படத்தை இயக்கி சாதிபார்ப்பவர்களின் செல்வாக்கை பெற்று கொண்டவர்👎

ஜோதிகாவின் பேச்சு சமூக பொறுப்பு கொண்டது 👏

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

என்னுடைய கேள்வி மிக இலகுவானது. 👍

கோவில்களுக்கு வழங்கும் அதே அளவு முக்கியத்துவத்தை பாடசாலைகளுக்கும் வைத்தியசாலைகளுக்கும் வழங்கவேண்டும்.

இதில் கோவில் என குறிப்பிட்டதுதான் உங்கள் பிரச்சனையா. 🤥

பாடசாலைகளும்வைத்தியசாலைகளும் கவனிப்பாரற்றுக் கிடப்பது பிரச்சனையல்ல. ☹️

என் அனுபவத்தில் நான் கண்டதை உணர்ந்ததை சொன்னேன். விதிவிலக்காக நடப்பவற்றை பொது என்று கொள்ள முடியாது. (முதல் 3 வினவல்களுக்கும் பதில்)

இறுதியான பிரதான அம்சத்துக்கு வந்தால்..

மீண்டும் தெளிவாக மேலே சொன்னதை கீழே காண்பிக்கிறேன்..

மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் ஆரம்பிப்பதில் அர்த்தமில்லை.  

2 hours ago, nedukkalapoovan said:

வெறுமனவே கோவில்களை மட்டும் மையப்படுத்தி அவர் வைத்திருக்கும் கருத்தில் ஒன்றில் அவராக திருத்தம் செய்துகொள்ள வேண்டும்.. இன்றேல்.. மொத்தக் கருத்தையும் வாபஸ் வாங்க வேண்டும். அதுதான் நியாயம். இங்கு பக்கச்சார்ப்பற்ற கருத்துச் சொல்ல கேட்கப்படுகிறதே தவிர.. ஜோதிகா பக்கச் சார்ப்பாக கருத்துச் சொல்லக் கேட்கப்படவில்லை. அது சமூகத்துக்கான கருத்தாகவும் முடியாது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nedukkalapoovan said:

என் அனுபவத்தில் நான் கண்டதை உணர்ந்ததை சொன்னேன். விதிவிலக்காக நடப்பவற்றை பொது என்று கொள்ள முடியாது. (முதல் 3 வினவல்களுக்கும் பதில்)

இறுதியான பிரதான அம்சத்துக்கு வந்தால்..

மீண்டும் தெளிவாக மேலே சொன்னதை கீழே காண்பிக்கிறேன்..

மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் ஆரம்பிப்பதில் அர்த்தமில்லை.  

பாடசாலைகளும்வைத்தியசாலைகளும் கவனிப்பாரற்றுக் கிடப்பது உங்களுக்குப்  பிரச்சனையில்லையா ? 🤥

பதில்; ஆம் பிரச்சனை 

அல்லது, பிரச்சனையில்லை

இதில் எது உங்கள் பதில் ? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

பாடசாலைகளும்வைத்தியசாலைகளும் கவனிப்பாரற்றுக் கிடப்பது உங்களுக்குப்  பிரச்சனையில்லையா ? 🤥

பதில்; ஆம் பிரச்சனை 

அல்லது, பிரச்சனையில்லை

இதில் எது உங்கள் பதில் ? 🤔

  •  

ஆம் பிரச்சனை. அதனை கவனிக்க வேண்டிய பொறுப்பு அரசுகளது. மக்களுக்கு தரமான கல்வியையும் வைத்தியத்தையும் வழங்க வேண்டியது அரசின் பொறுப்பு. கோவில்களினது அல்ல.

மேலும் கோவில் செய்யனும் என்று சொல்லுறவை.. அல்லது கோவிலுக்கு செய்வதை பாடசாலைகளுக்கும் வைத்தியத்துக்கும் கொடுக்கனும் என்று சொல்லுறவை.. பள்ளிவாசல்களுக்கும்.. தேவாலயங்களுக்கும்.. மதமாற்ற கோஷ்டிகளுக்கும்.. சேர்த்து அதைச் சொல்லனும். 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, nedukkalapoovan said:

கோவிலைப்பற்றி பழித்தோ அல்லது குறைவுபடவோ ஜோ கருத்துரைக்கவில்லை எனவே அவர் கூறவந்த விடயத்தை கதையுங்கள். 👍

ஏன் எதற்கெடுத்தாலும் கோவில், சைவம், இந்து என்றவுடன் கோவிக்கிறீர்கள். ☹️

(மத மாற்றக் கோஸ்ரி; மதப் பிரச்சனை இதற்குள் எங்கே வெந்தது ? 🤥

Edited by Kapithan
திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

கோவில்களுக்கு ஈடாக வைத்தியசாலைகளும் பாடசாலைகளும் பராமரிக்கப்பட வேண்டும்

இதில் உங்களுக்கு எங்கே பிரச்சனை வருகிறது ?  🤥

உங்கள் கருது நியாயமானதே. உண்மையில் கோவில்களுக்கும் மேலாக அவை பராமரிக்கப்படவேண்டும். ஆனால் இந்தியாவில் கோவில் உண்டியலுக்கு செல்லும் பணம் அரசுக்கே செல்கிறது. அத்துடன் வைத்தியசாலை பராமரிப்பும் ஊராட்சி, நகராட்சி அதிகாரத்துக்குட்பட்டவை. அவற்றிட்கு பங்களிப்பு செய்தால் அது யாருடைய சட்டைப்பையை நிரப்பும் என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை. அதையும்மீறி ஒருவர் செய்யவெளிக்கிட்டால் காட்சிகள் உங்களை விடாது. தமிழக அரசியல் உங்களுக்கு தெரியாததா??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கோவிலை உதாரணம் காட்டி பேசுவதற்கு ஜோதிகாவுக்கு அருகதை இல்லை. சினிமாவில் உச்சத்தில் இருப்பதால் எததையும் இலகுவாக பேசிவிட முடியாது.
முன்னர் குஷ்பு துள்ளிக்கொண்டு திரிந்தார்?
இப்போது இவர்!!!!!😡
தமிழ்நாட்டின் மீது கரிசனைக்கு தமிழ்நாட்டினர் இருக்கின்றார்கள்.பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் பசியாறிவிட்டு போகக்கடவர்.😡

எங்கள் நிலையையும் கொஞ்சம் நினைவிற்கொண்டு சொற்களைப் பாவிப்பது நன்று.🙂

  • கருத்துக்கள உறவுகள்

ஜோ புது பட சூட்டிங் தஞ்சை சூழ  உள்ள இடத்தில் இடம் பெற்றதால் அந்த கோயிலுக்கும் போய் விட்டு ஆஸ்பத்திரிக்கு பட சம்மந்தமாய் போகும் போது தான் நிலைமையை அவதானித்து விட்டு ஆதங்கத்தில் சொல்லியுள்ளார் என்றே நினைக்கிறேன்....ஆஸ்பத்தி இந்த நிலையில் இருப்பதற்கு கோயில் எப்படி பொறுப்பாகும்...மத்திய ,மாநில அரசுகள் தான் கவனத்தில் கொள்ள வேண்டும் 
 
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

அவர் கோவிலைப் பொறுப்பாக்கவில்லை. கோவிலுக்குக் கொடுக்கும் அதே அளவு கவனத்தை பாடசாலைக்கும் வைத்தியசாலைக்கும் கொடுக்கும்படி கேட்டுள்ளார். 🙂

கோவிலும் பாடசாலையும் வைத்தியசாலையும் சம அளவு முக்கியத்துவம் மிக்கவை என்று அவருக்குப் புரிகிறது. 😀

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

அவர் கோவிலைப் பொறுப்பாக்கவில்லை. கோவிலுக்குக் கொடுக்கும் அதே அளவு கவனத்தை பாடசாலைக்கும் வைத்தியசாலைக்கும் கொடுக்கும்படி கேட்டுள்ளார். 🙂

கோவிலும் பாடசாலையும் வைத்தியசாலையும் சம அளவு முக்கியத்துவம் மிக்கவை என்று அவருக்குப் புரிகிறது. 😀

நான் ஜோ சொன்னதில் ஒரு பிழையையும் காணவில்லை . ஆனால் அவர் கேட்க வேண்டியது அரசிடம்...மக்களிடம் சொல்லி என்ன பிரயோசனம் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ரதி said:

ஜோ புது பட சூட்டிங் தஞ்சை சூழ  உள்ள இடத்தில் இடம் பெற்றதால் அந்த கோயிலுக்கும் போய் விட்டு ஆஸ்பத்திரிக்கு பட சம்மந்தமாய் போகும் போது தான் நிலைமையை அவதானித்து விட்டு ஆதங்கத்தில் சொல்லியுள்ளார் என்றே நினைக்கிறேன்....ஆஸ்பத்தி இந்த நிலையில் இருப்பதற்கு கோயில் எப்படி பொறுப்பாகும்...மத்திய ,மாநில அரசுகள் தான் கவனத்தில் கொள்ள வேண்டும் 
 
 அவை முன்னமே செஞ்சி தேசிங்கு ராசாவையும் தஞ்சை ராணியையும் மிக்ஸ் பண்ணியவை .👍

டும் டும் டும் (2001)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

கோவிலைப்பற்றி பழித்தோ அல்லது குறைவுபடவோ ஜோ கருத்துரைக்கவில்லை எனவே அவர் கூறவந்த விடயத்தை கதையுங்கள். 👍

ஏன் எதற்கெடுத்தாலும் கோவில், சைவம், இந்து என்றவுடன் கோவிக்கிறீர்கள். ☹️

(மத மாற்றக் கோஸ்ரி; மதப் பிரச்சனை இதற்குள் எங்கே வெந்தது ? 🤥

சரி உங்களுக்கு விளங்கிற மாதிரிக்கு..

தமிழ் நாட்டில்.. எத்தனை பள்ளிவாசல்கள் உள்ளன..??! தேவாலயங்கள் உள்ளன..??! எவ்வளவு கோடிப் பணம் மதமாற்றங்களுக்கு செலவாகிறது.. எவ்வளவு கோடிப் பணம் பள்ளிவாசல்களை புதிதாக அமைக்கவும் பராமரிக்கவும் செலவாகிறது.. எவ்வளவு கோடிப் பணம்.. தேவாலயங்களை அமைக்கவும் பராமரிக்கவும் செலவாகிறது.. எவ்வளவு கோடிப் பணம்.. பள்ளிவாசல்களில்.. தேவாலயங்களில் புழங்குகிறது..!!

இவ்வளவும் இருக்க.. ஜோதிகாவுக்கு கோவில்கள் மட்டும் கண்ணுக்குத் தெரிவதென்னவோ.. இதுதான் பக்கச் சார்ப்பு என்று குறிப்பிடுவது.

மேலும்.. பாடசாலைகளை.. வைத்தியசாலைகளை மேம்படுத்தவும் பராமரிக்கவும் வேண்டிய பொறுப்பு அரசுகளை நோக்கி இருக்க.. கோவில்களை மையப்படுத்தி மக்களை சாடுவதேன். இங்கும்.. பள்ளிவாசல்கள்.. தேவாலயங்கள் ஏன் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டன..??!

ஒரு பல் மத நாட்டில்.. ஒரு மத அடையாளத்தை மட்டும் தூக்கி நிறுத்தி கேள்வி கேட்பது எந்த வகையில் நியாயம். பாடசாலைகள் மேம்படாமைக்கும்... வைத்தியசாலைகள் மேம்படாமைக்கும் கோவில்கள் எப்படி காரணமாகும்.. அதுவும் பல நூற்றாண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தஞ்சைக் கோவில் எப்படிக் காரணமாகும்..??! அப்படி கோவில்கள் காரணம் என்றால்.. எப்படி பள்ளிவாசல்களும்.. தேவாலயங்களும்.. கோடிகள் புரளும் மதமாற்றக் கோஷ்டிகளும் காரணம் இல்லாமல் போக முடியும்..???!

ஏன் உங்கள் மூளையில் இது ஏறுதில்லை. கோவில் என்று சொன்னது மட்டும் உங்களுக்கு... நியாயமாகத் தெரிய.. பள்ளிவாசல்களும்.. தேவாலயங்களும்.. மதமாற்றக் கோஷ்டிகளும்.. கூட இதற்குப் பொறுப்பாக முடியும் என்பதை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள். ஏன் அரசுகளை ஜோதிகா சாடவில்லை..??! ஏன் நீங்கள் அதனை குறிப்பிடத் தயங்குகிறீர்கள்...???!

இப்படி பல கேள்விகள் உங்கள் பதிலில் தொக்கு நிற்பது போல்.. ஜோதிகாவின் பேச்சிலும் தொக்கு நிற்கின்றன. அதுதான் ஜோதிகாவின் பேச்சி அதிமேதாவித்தனமான.. பக்கச் சார்ப்புப் பேச்சு என்று திடமாகச் சொல்லி வைக்கிறோம். இது சமூக அக்கறையில் வெளிப்படுத்த வேண்டியதை வெளிப்படுத்தத் தவறிவிட்டிருக்கிறது என்றே பொருள்படும். 

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, nedukkalapoovan said:

ஓஓ......

உங்கள் பிரச்சனை மதமாற்றக் கோஸ்ரியும், பிற மத நிறுவனங்களைப் பற்றியது. ம்ம்....☹️அதை ஜோ தொடவில்லை. அதனால் கோபம் வருகிறது. ☹️

பாடசாலையும் வைத்தியசாலையும் எக் கேடுகெட்டாலும் அதை அரசாங்கம்தான் கவனிக்க வேண்டும் இல்லையா. நீங்கள் கோவிலை யார் இழுப்பார் யார் தொடுவார், யார் கடைக் கண்ணால் பார்ப்பார் என்பதைத்தான் கவனிப்பீர்களோ 😂😂

எனக்குத் தெரிந் ஒருவர் சற்று சுகவீனமானவர். சின்னத்துரை என்று பெயர். வேலை செய்வதற்கு அதீத பஞ்சி பிடித்தவர். அவர் வீட்டிலிருக்கும்போது யாரும் சி என்று தொடங்குகின்ற வசனமோ சொல்லோ கூறக் கூடாது.  அப்படி ஏதும் சி என்கின்ற எழுத்துடன் கூடைய சொல்லையோ வசனத்தையோ கூறினால் உடனே கோபம் வந்துவிடும். 😀

என்ன காரணம் என்று பார்த்தால், சி என்பது சின்னத்துரை என்கின்ற பெயரின் முதலெழுத்து. சி என்று தொடங்கினால் சின்னனத்துரை என்று கூப்பிட்டு வேலை சொல்லப் போகிறார்கள் என்று பயம். அதனால் யார் சி என்ற எழுத்துடன் ஆரம்பிக்கிறார்களோ அவர்கள் மீது கோபப்படுவார். 😂

என்னமோ தெரியவில்லை, கோ என்றவுடன் இங்கே பலருக்கு மாற்று மதங்களும் மதமாற்றக் கோஸ்ரியும்தான் நினைவிற்கு வருகிறது. கோபமும் வருகிறது.  🤔

ஒரு படத்தில் தன் போக்கில் சிரித்துக் கொண்டிருக்கும் செந்திலைப் பார்த்து கவுண்டர் கேட்பார் "" ஏண்டா சிரிக்கிறே ""

செந்திலின் பதில் "" உலகத்த நினைச்சேன், சிரிச்சேன்"" என்பதாக வரும். 😜

 செந்திலின் இடத்தில் என்னை இருத்தி நீங்களாகக்  கற்பனை செய்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. 😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

உங்களுடைய நோக்கம்.. சமூக அக்கறையோ.. ஜோதிகாவின் அதிமேதாவித்தனத்தை.. தவறை புரிதலோ அல்ல.

பள்ளிவாசல்களையும் தேவாலயங்களையும் அல்லேலுயா சபைகளையும் பராமரிப்பது போல்.. வைத்தியசாலைகளை பராமரிக்கவும். ஜோ சொல்ல முடியுமா?
 
23 minutes ago, nedukkalapoovan said:

உங்களுடைய நோக்கம்.. சமூக அக்கறையோ.. ஜோதிகாவின் அதிமேதாவித்தனத்தை.. தவறை புரிதலோ அல்ல.

பள்ளிவாசல்களையும் தேவாலயங்களையும் அல்லேலுயா சபைகளையும் பராமரிப்பது போல்.. வைத்தியசாலைகளை பராமரிக்கவும். ஜோ சொல்ல முடியுமா?
 
நிச்சயமாக சுவிற்சர்லாந்திலையோ, பிரான்ஸ்லையோ, ஜெரமனியிலையோ, இங்கிலாந்திலேயோ இவ்வாறு ஒரு சினிமா நட்சத்திரம் சொன்னால் எவரும் அதை  இவ்வாறு பிரச்சனை ஆக்க போவதில்லை. 

2 hours ago, ரதி said:

நான் ஜோ சொன்னதில் ஒரு பிழையையும் காணவில்லை . ஆனால் அவர் கேட்க வேண்டியது அரசிடம்...மக்களிடம் சொல்லி என்ன பிரயோசனம் 

மக்களாட்சி நடக்கும் இடத்தில் மக்களிடம் சொன்னால்  தான் அதை மக்கள் தமது பிரதிநிதிகளான அரசாங்கத்துக்கும் சொல்வார்கள். மக்களின் வரு மாற்றம் தான் அரசிலும் வரும். 

Edited by tulpen

ஜோதிகா சொன்னதில் எந்த தவறும் இல்லை. சரியான கருத்தை தான் சொல்லியுள்ளார். அவருக்கு பாராட்டுக்கள்.  அவரின் சிறந்த கருத்தை சோழன் வாரிசு என்று சொல்லி கொண்டு வந்த ஒருவர.ஏதோ உளறிக்கொட்டி தேவையில்லாமல் சர்ச்சை ஆக்கியுள்ளார்.  அவர் சொன்ன விசயத்திற்கும் ஜோதிகா சொன்ன விசயத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை. சிவத்தை பழித்தால் சவமாகும் போது துன்பம் வரும் என்று வெருட்டல் வேற. பழித்தோமோ இல்லையோ எல்லோரும் சவமாவது உறுதி.  இறந்த பின்னர் எதுவும் தெரிய போவதில்லை. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

`ஜோதிகா பேச்சால் எழுந்த சர்ச்சை' - தஞ்சை அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த கலெக்டர்

ஜோதிகா பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவத் தொடங்கியது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் கடந்த புதன்கிழமை மாலை சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

`தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவமனை முறையாகப் பராமரிக்கப்படவில்லை. அதன் பராமரிப்பு ரொம்பவே மோசமாக இருந்தது' என விருது நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஜோதிகா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தஞ்சை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் மருத்துவனையில் ஆய்வு செய்து வருகின்றனர். `ஜோதிகா பேசியதன் விளைவாகவும் குறையிருந்தால் சரி செய்வதற்காகவும் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன' என்கின்றனர் அதிகாரிகள்.

அரசு மருத்துவமனை
 
அரசு மருத்துவமனை

நடிகை ஜோதிகா, இயக்குநர் சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்டவர்கள் நடிப்பில் இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூரில் நடைபெற்று வந்தது. தஞ்சை மக்களின் வாழ்வியலைச் சொல்லும் இந்தப் படத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் ஜோதிகா நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பை தஞ்சாவூரில் உள்ள ராசா மிராசுதார் அரசு மருத்துவனையில் முறையான அனுமதி பெற்று ஜோதிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன.

அந்த நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் ஜோதிகா கண்ட காட்சிகள்தான் அவரை இப்படிப் பேச வைத்துள்ளன. இதுகுறித்துப் பேசிய நடிகை ஜோதிகா, `தஞ்சாவூரில் அரசு மருத்துவமனையில் படப்பிடிப்பில் கலந்துகொண்டேன். அந்த மருத்துவமனையை மிக மேசமாக பராமரித்து வந்தனர். அங்கு நான் பார்த்தவற்றை என் வாயால்கூட சொல்ல முடியாது.

ஜோதிகா
 
ஜோதிகா

எல்லோரும் கோயில் உண்டியலில் காசு போடுறீங்க, கோயிலை பெயின்ட் செய்து அழகாகப் பராமரிக்க உதவி செய்றீங்க. அதே மாதிரி அரசு மருத்துவமனைகளும் அரசுப் பள்ளிக்கூடங்களும் ரொம்பவே முக்கியம். மருத்துவமனையைப் பராமரிக்கவும் உதவுங்க' எனத் தனியார் டிவி விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஜோதிகா பேசியிருந்தார். அவரின் பேச்சு தற்போது பல விவாதங்களைக் கிளபியிருக்கிறது. படத்தின் இயக்குநர் இரா.சரவணனும், `ஏன் ஜோதிகா அப்படிப் பேசினார்?' என்பதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்தநிலையில் ஜோதிகா பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவத் தொடங்கியது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் கடந்த புதன்கிழமை மாலை சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

``கொரோனா பிரச்னை ஏற்பட்டு ஒரு மாசத்துக்கு மேல் ஆகிறது. இதுவரை வராத கலெக்டர் தற்போது வந்து ஆய்வில் ஈடுபடுகிறார் என்றால் ஜோதிகா பேசியதன் விளைவுதான் இது. மருத்துவமனை எப்படி இருக்கிறது என்றும், அதன் செயல்பாடுகள் பற்றியும் அறியவும் ஏதேனும் குறையிருந்தால் அதை உடனடியாக சரி செய்யவுமே கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்" என்கின்றனர் அதிகாரிகள்.

அரசு மருத்துவமனை
 
அரசு மருத்துவமனை

மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பெண்களின் உறவினர்கள் சிலரிடம் பேசினோம். ``பிரசவத்துக்காக வரும் பெண்கள் மேலே வெள்ளை உடையும், பச்சை பாவாடையும் அணிய வேண்டும். திடீரென வலி ஏற்பட்டு சிகிச்சைக்காக வரும் பெண்களிடம் அந்த உடை கையில் இருந்தால் மட்டுமே அட்மிஷன் போடுவோம் என்கின்றனர். முதலில் உடையை வாங்கி வருமாறும் கூறுகின்றனர்.

மருத்துவமனைக்கு வெளியே ரூ.200 மதிப்புள்ள இந்த உடைகள் 500 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்கின்றனர். மருத்துவமனை நிர்வாகத்திடம் இதுகுறித்து சொன்னால் காதில் வாங்கிக் கொள்வதில்லை. பெரும்பாலும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள்தான் இங்கு வருகின்றனர். பலர் காசு கொடுத்து இந்த உடையை வாங்க முடியாமல் தவிக்கின்றனர். இந்த உடையைக் கொடுப்பதற்கு அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை சரிசெய்யப்பட்டால் நிறைய கர்ப்பிணிகள் சந்தோஷம் அடைவார்கள்" என்கின்றனர்.

மருத்துவமனை நிர்வாகிகளிடம், குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்டோம். ``இங்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கபட்டு வருவதால்தான் தஞ்சையைச் சுற்றியுள்ள பல மாவட்டங்களில் இருந்து இங்கு பிரசவத்துக்காக கர்ப்பிணிப் பெண்கள் வருகின்றனர். சில மாதங்களுக்கு முன் பார்வையாளர்கள் கூடம் இல்லாமல் இருந்ததால் மக்கள் திறந்தவெளியில் அமர்ந்து வந்தனர். தற்போது இரண்டு பார்வையாளர்கள் கூடம் அமைக்கபட்டுவிட்டது. ஜோதிகா பேசிதற்காக இந்த ஆய்வுகள் நடைபெறவில்லை. கொரோனா தொடர்பாகவே ஆய்வுகள் நடைபெற்றன. முதலில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். இன்று கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள எம்.எஸ்.சண்முகம் ஆய்வு செய்ததுடன் டாக்டர்களுடன் ஆலோசனையும் நடத்தினார்" என்கின்றனர்.

https://www.vikatan.com/news/tamilnadu/tanjore-collector-inspect-government-hospital-after-jyothikas-speech

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பிழம்பு said:

`ஜோதிகா பேச்சால் எழுந்த சர்ச்சை' - தஞ்சை அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த கலெக்டர்

நல்ல காலம்.. கலெக்டர் (அரச நிர்வாக அதிகாரி) வந்து ஆய்வு செய்ததை ஏற்றுக் கொள்கிறார்கள். கோவில் நிர்வாகம் தான் வந்து ஆய்வு செய்திருக்கனும் என்று பேசாத வரைக்கும்.. ஆறுதல். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Kapithan said:

கோவிலைப்பற்றி பழித்தோ அல்லது குறைவுபடவோ ஜோ கருத்துரைக்கவில்லை எனவே அவர் கூறவந்த விடயத்தை கதையுங்கள். 👍

ஏன் எதற்கெடுத்தாலும் கோவில், சைவம், இந்து என்றவுடன் கோவிக்கிறீர்கள். ☹️

(மத மாற்றக் கோஸ்ரி; மதப் பிரச்சனை இதற்குள் எங்கே வெந்தது ? 🤥

ஜோத்திகா கோவிலை பழிக்கவுமில்லை. குறை சொல்லவுமில்லை. ஆகையால் அவர் சொன்னதை வேதவாக்காக எடுக்கமுடியாது. அவர் சார்ந்த சினிமாத்துறை பணத்தை தண்ணீராக இறைக்கும் துறை. அனாவசிய செலவுகள் நிறைந்த துறை. அந்த அநாவசிய செலவுகளை ஒரு வருடம் நிறுத்தி அந்த பணத்தை மருத்துவமனைகளுக்கு கொடுக்கும் எண்ணம் பகுத்தறிவு சிந்தனைவாதி ஜோத்திகாவுக்கு ஏன் வரவில்லை.
 கோடிக்கணக்கில் செலவாகும் ஒரு பாடல் காட்சிகளுக்கு மட்டும் சுவீஸ் வந்து குத்தியாட்டம் போட்ட ஜோத்திகாவுக்கு இந்த பரந்துபட்ட பகுத்தறிவு சிந்தனைகள் அப்போது முளைக்கவில்லையா? அல்லது துளிர் விடவில்லையா? 
உலகிலே சகல இயற்கை காட்சிகளும் நிறைந்த இந்தியாவை விட்டு பாரின் சூட்டிங் போய் காசை கரியாக்க வேண்டாம் என ஜோத்திகாவிடம் சொல்வீர்களா?சொல்வீர்களா?சொல்வீர்களா?
அந்த பணத்தை ஏழை எளிய மக்களுக்கு கொடுக்கும்படி உத்தமி ஜோத்திகாவிடம் சொல்வீர்களா?

6 hours ago, விளங்க நினைப்பவன் said:

திரெளபதி இயக்குநர் மோகன் என்பவர் தமிழகத்தில் நடைபெறும் சாதி வெறி ஆணவ கொலைகளை ஆதரித்து திரெளபதி என்ற படத்தை இயக்கி சாதிபார்ப்பவர்களின் செல்வாக்கை பெற்று கொண்டவர்👎

ஜோதிகாவின் பேச்சு சமூக பொறுப்பு கொண்டது 👏

உண்மைதான். அதை முதலில் தான் சார்ந்த துறையிலிருந்து ஆரம்பிக்கட்டும்.அப்போது  ஏழைமக்கள் எல்லோரும் கரகோசம் எழுப்புவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Kapithan said:

எங்கள் நிலையையும் கொஞ்சம் நினைவிற்கொண்டு சொற்களைப் பாவிப்பது நன்று.🙂

70 களிலிருந்தே கருணாநிதி என்பவர் மேல் நம்பிக்கை வைக்க ஆரம்பித்த ஈழத்தமிழினம் படிப்படியாக எல்லோர் மீதும் நம்பிக்கை வைத்து இன்று கருவறுக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, tulpen said:

நிச்சயமாக சுவிற்சர்லாந்திலையோ, பிரான்ஸ்லையோ, ஜெரமனியிலையோ, இங்கிலாந்திலேயோ இவ்வாறு ஒரு சினிமா நட்சத்திரம் சொன்னால் எவரும் அதை  இவ்வாறு பிரச்சனை ஆக்க போவதில்லை. 

மக்களாட்சி நடக்கும் இடத்தில் மக்களிடம் சொன்னால்  தான் அதை மக்கள் தமது பிரதிநிதிகளான அரசாங்கத்துக்கும் சொல்வார்கள். மக்களின் வரு மாற்றம் தான் அரசிலும் வரும். 

சுவிற்சலாந்திலோ,பிரான்சிலோ,ஜேர்மனியிலோ,இங்கிலாந்திலோ நடிகைகளுக்கு ரசிகர்கள் கோவில் கட்டுவதில்லை. நடிக நடிகைகள் பின்னால் மக்கள் அலைவதில்லை. சினிமாவும் நாடகங்களும் வெறும் பொழுதுபோக்கு அம்சங்களாகவே மக்கள் பார்கின்றார்கள்.விளம்பர பொருட்களாகவே பார்க்கின்றார்கள்.
இந்தியாவில் அப்படியல்ல. அடுத்த வேளை சாப்பாட்டிற்கு வழியில்லாவிட்டாலும் சினிமா முக்கியமாக கருதப்படுகின்றது.மலசல கூடங்களுக்கு வழியில்லாவிட்டாலும்சினிமா பிரம்மையில் திரிவார்கள்.
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

உங்களுடைய நோக்கம்.. சமூக அக்கறையோ.. ஜோதிகாவின் அதிமேதாவித்தனத்தை.. தவறை புரிதலோ அல்ல.

பள்ளிவாசல்களையும் தேவாலயங்களையும் அல்லேலுயா சபைகளையும் பராமரிப்பது போல்.. வைத்தியசாலைகளை பராமரிக்கவும். ஜோ சொல்ல முடியுமா?
 
ஆக உங்களுக்கெல்லாம் கோயில் என்கின்ற சொல்தான் பிரச்சனை. 

😂😂😂😂😂😂😂😂

1 hour ago, nedukkalapoovan said:

நல்ல காலம்.. கலெக்டர் (அரச நிர்வாக அதிகாரி) வந்து ஆய்வு செய்ததை ஏற்றுக் கொள்கிறார்கள். கோவில் நிர்வாகம் தான் வந்து ஆய்வு செய்திருக்கனும் என்று பேசாத வரைக்கும்.. ஆறுதல். 

என்ன நெடுக்ஸ்

தட்டை மாற்றிப் போடுகிறீர்கள் 😂😂

ஜோவின் பேச்சால் நன்மையே நடந்துள்ளது. மகிழ்ச்சியடையுங்கள். 👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.