Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊரில் ஒரு வீடு வேணும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 22/5/2020 at 07:11, உடையார் said:

இங்கு படிக்க வரும் சீனாகாரர் பிள்ளைகளுக்கு வீடு வாங்கி கொடுப்பார்கள் படிக்கும் வரை இருப்பதற்கு, உடன் காசில். வீட்டு வாடகை கட்ட தேவையில்லை. போகும் போது வாங்கியதைவிட நல்ல லாபத்திற்கு விற்றுவிடுவார்கள். அப்படி அவர்கள் விற்கும் போது சந்தை விலையைவிட குறைவாகவும் நம்மவர் வாங்கியுள்ளார்கள், அதிஷ்டம் தான்

Aus இல் சீனர்களின் அசையாச் சொத்து வாங்கும் பரிமாணத்தை நீங்கள் அறிவியலை போலும்.

சீன அரசாங்கம் பின்னே இருப்பது என்று ஓர் வதந்தி இருந்தாலும், அது உண்மையல்ல. 2-3 வருடங்களுக்கு  முன்பே சீன அரசாங்கம் capital flight control ஐ கொண்டு வந்தது. 

  • Replies 277
  • Views 41.8k
  • Created
  • Last Reply
21 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்ர பிளானே வேற. அதை இப்ப சொல்லமாட்டன்.

பிளான் கீற பிளான் போட்டாச்சோ? 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ரதி said:

உதென்ன அடுத்த பிளானே:unsure: எனக்கும் ஒன்று கட்டித் தாங்கோ tw_lol:

அது சுமோக்கு கீறியது...

ஒன்று இருக்கிறது அது போதும்

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

என்ட அண்ணர் சொன்ன மாதிரி நீங்கள் இந்த ஜென்மத்திற்கு ஊரில் போய் இருக்க போவதில்லை 
 
உதென்ன அடுத்த பிளானே:unsure: எனக்கும் ஒன்று கட்டித் தாங்கோ tw_lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 23/5/2020 at 23:57, MEERA said:

IMG-0726.jpg

நாங்க வரைபடமே கீறியாச்சு, இவா யோசிக்கிறாவாம்....😀

அக்காவின்ரை வண்டில் மாடு பாக்கிங் பண்ணுறதுக்கு இடத்தை காணேல்லை. :cool:

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

அக்காவின்ரை வண்டில் மாடு பாக்கிங் பண்ணுறதுக்கு இடத்தை காணேல்லை. :cool:

அக்கா தான் தனியாக ஒரு பிளான் வைத்திருக்கா என்று reject பண்ணீட்டா

  • கருத்துக்கள உறவுகள்

அவவின் பிளானில் வண்டிலுக்கும் மாட்டுக்கும் பின் விறாந்தையில் இடம் இருக்கும்.அத்துடன் பின் வளவிலும் ஒரு கதவு உண்டு, அத்தான் அடிக்க வரும்பொழுது ஓடுவதற்கு வசதியாக.........!   😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

அவவின் பிளானில் வண்டிலுக்கும் மாட்டுக்கும் பின் விறாந்தையில் இடம் இருக்கும்.அத்துடன் பின் வளவிலும் ஒரு கதவு உண்டு, அத்தான் அடிக்க வரும்பொழுது ஓடுவதற்கு வசதியாக.........!   😂

சுவியர் ஒரு சின்னத்திருத்தம்.அக்கா அடிக்கும் போது அத்தார் ஓடுவதற்க்கு.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, சுவைப்பிரியன் said:

சுவியர் ஒரு சின்னத்திருத்தம்.அக்கா அடிக்கும் போது அத்தார் ஓடுவதற்க்கு.

ஓம் இருக்கும். அவ இப்ப சமையல் என்னும் பெயரில் பயங்கர ஆயுதம் எல்லாம் வைத்திருக்கின்றா.....செத்துப்போன மாட்டுக்கே இந்த அடியென்றால்.......!  🙏

  • கருத்துக்கள உறவுகள்
On 22/5/2020 at 01:13, Kaalee said:

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இதற்க்கு நல்ல உதாரணம் Torontoவின் வீட்டுச்சந்தையின் விலையேற்றம். வெளிநாட்டில் உள்ள செல்வந்தர்கள் (Hong-Kong , Chaina, MiddleEast ) வீடுகளை வாங்க வீட்டின் விலை உச்சத்தை தொட்டுவிட்டது . பத்து வருடத்தில் 2 1/2 மடங்காகி விட்டது ( எங்கடை  ஆக்களும் ஒரு காரணம் )
பெரும்பாலான வீடுகள் ஏலம் கூறி விற்கப்படும் யார் வீட்டு விலையிலும் பார்க்க கூடக்கொடுக்கிறார்களோ அவர்களுக்கே வீடு (சில சமயம் $50000 -$100000 கூடுதலாக போகும் )ஆனால் பிரச்சனை என்னவென்றால்.  பல வீடுகளில் ஒருவரும் வசிப்பதில்லை காரணம் வீட்டின் உரிமையாளர் வேறுநாடுகளில் வாசிப்பார் அவர்களுக்கு இது ஒரு முதலீடு, அவர்களின் பினாமி மூலம் பராமரிப்பார்கள். 

வெளிப்படையாக பிரச்சனைகள் ஒன்றாக தெரிந்தாலும், அவற்றின் தன்மைகளும், இயல்புகளும் மிகுந்த வேறுபாடு உள்ளது.
இதை சொல்வதற்கு, வேறு  திரியே பொருத்தமானது.

ஒரு சிறு அவதானமே போதும்.

ஆனால், இலங்கைத் தீவில், பொதுவாக வடக்கு கிழக்கில் வீடு, காணி வாங்க அல்லது கட்ட எத்தனிப்பவர்கள், அந்த இடத்தோடு பூர்வீக தொடர்பு உள்ளவர்கள்.   

புலம் பெயர்ந்தது நடந்திராவிட்டால், பெரும் தொகையான கொள்வனுவுகள், அந்த பிராந்தியத்தில் உள்ள பொருளியல் செயற்றப்படுகள் போல நடந்து ( படித்து சிறப்பு தேர்ச்சி மூலமோ, தொழில் தேர்ச்சி  மூலமோ, அல்லது வேறு வழிகளில் அங்கோ அல்லது வெளி நாடு சென்று உழைத்தோ , குடும்ப முதலீடு போன்ற பல பொருளீட்டும் போன்ற செயற்றப்படுகள் மூலமாக), பெரும்பாலும் குடும்பத்தவர் அங்கே வாழ்ந்து அவர்களும் வாங்கி  பெரியதொரு காணி கேள்வி அழுத்தத்தை உருவாக்கி இருக்கும்.

புலப் பெயர்ச்சியினால், இயற்கையாகவே ஏற்பட்டு இருக்க கூடிய காணி மற்றும் வீட்டு தேவை அழுத்தம் நீக்கப்பட்டது. 

அப்படியாக நீக்கப்பட்ட இயற்கை அழுத்தத்தின், ஓர் பகுதியே திருப்பி வருகிறது, பெரும்பாலும் கூடிய அளவு வாங்கு திறனுடன் (affordability).

நன்றாக ஆராய்ந்து பார்த்தால், இந்த இயற்கை அழுத்த நீக்கமே, அங்குளவர்கள் வீட்டு மற்றும் வாழ்க்கை  தரத்தில் உயர்வு அடைந்து இருபதற்கான ஒரு காரணாமாக இருக்கலாம். ஏனெனில், காணிக்கான கேள்வி இருக்க வேண்டியதிலும் மிகுந்த அழுத்தம் நீக்கப்பட்டு குறைவாகவே  உள்ளதால். 

இதனால் தான் நான் டாக்காவை, பங்களாதேஷ் ஐ உதாரணமாக எடுத்தேன். டாக்கா, பங்களாதேஷ் இல் நடப்பதும் இப்பொது வடகிழக்கில் நடப்பதும் ஏறத்தாழ பொருளாதார, சமூக ஒத்துப்போகிற தளங்களில். ஆனால், அரசியல், பாதுகாப்பு, அமைதி தளங்கள் துருவ எதிர் தளங்களில் இருக்கிறது.

முக்கியமாக, தாம் உழைத்த சொந்தப் பணத்திலேயே புலம் பெயர்த்தவர்களில் ஓர் பகுதியினர் வாங்க எத்தனிப்பது.

மேற்கு நாடுகளில்  (UK, Canada, Aus, Newzealand) நடப்பது அரச  வரி, நிதி , பணவியல் வேண்மென்ற கொள்கைகளினால். இதுவே Rentier economy ஆகும்.

எம்மவர்களோ அல்லது கனடா பூர்விகம் உள்ளவர்களோ  சொந்த பணத்திலா 1வது  2 வது, 3 வது வீடுகள்  வாங்கிக்கிறார்கள்? Mortgage இல். 

இந்த கொள்கைகளினால் வந்த housing boom இல் வெளிநாட்டவர் ஏறி சவாரி செய்யத் தொடங்க, எரியும் நெருப்பில் என்னை ஊற்றிய கதையாக, கொள்கைகளை விலத்தவோ, செப்பனிடவோ எந்தவோர் சரசாங்கமும் திராணி அற்றதாக இருந்து வந்துள்ளது, உள் வாக்கு வங்கியை குறிவைத்து.

ஆனாலும், நான் கேள்விப்பட்டது, சீனர்களின் பனத்திற்கு பின்னாலும் சீன வங்கிகளின் mortgage facility இருப்பதாக. சீன ரசாங்கமும் செய்யவில்லை.

மற்றும் சீனர்களின் வாங்கும் பரிமாணமும், எம்மவர் வடக்கு கிழக்கில் வாங்குவதை ஒப்பிட முடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 25/5/2020 at 18:38, ரதி said:

என்ட அண்ணர் சொன்ன மாதிரி நீங்கள் இந்த ஜென்மத்திற்கு ஊரில் போய் இருக்க போவதில்லை 
 
உதென்ன அடுத்த பிளானே:unsure: எனக்கும் ஒன்று கட்டித் தாங்கோ tw_lol:

அண்ணனுக்கும் தங்கைக்கும் வாயில நல்லது வராது 😂

On 25/5/2020 at 19:06, Kali said:

பிளான் கீற பிளான் போட்டாச்சோ? 

மதுக்குள்ள பிளான் போட்டு பேச்சுவார்த்தை நடக்குது. மகளே கீறுவாள்.😀

23 hours ago, MEERA said:

அது சுமோக்கு கீறியது...

ஒன்று இருக்கிறது அது போதும்

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 

எனக்கும் ஆசைகள் உண்டு பேராசை இல்லை.

23 hours ago, சுவைப்பிரியன் said:

நல்லாய் வாயில வருது எனக்கு 🤣

20 hours ago, குமாரசாமி said:

அக்காவின்ரை வண்டில் மாடு பாக்கிங் பண்ணுறதுக்கு இடத்தை காணேல்லை. :cool:

ஓட்டோரிக்சா மட்டும் தான் பிளானில்

🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

அவவின் பிளானில் வண்டிலுக்கும் மாட்டுக்கும் பின் விறாந்தையில் இடம் இருக்கும்.அத்துடன் பின் வளவிலும் ஒரு கதவு உண்டு, அத்தான் அடிக்க வரும்பொழுது ஓடுவதற்கு வசதியாக.........!   😂

☹️😲😃

8 hours ago, சுவைப்பிரியன் said:

சுவியர் ஒரு சின்னத்திருத்தம்.அக்கா அடிக்கும் போது அத்தார் ஓடுவதற்க்கு.

நான் நினைக்க முதல் நீங்கள் சொல்லீற்றியள்

8 hours ago, suvy said:

ஓம் இருக்கும். அவ இப்ப சமையல் என்னும் பெயரில் பயங்கர ஆயுதம் எல்லாம் வைத்திருக்கின்றா.....செத்துப்போன மாட்டுக்கே இந்த அடியென்றால்.......!  🙏

இத்தனை நாளும் தாங்குதே மனிசன்

  • கருத்துக்கள உறவுகள்
On 26/5/2020 at 02:55, குமாரசாமி said:

அக்காவின்ரை வண்டில் மாடு பாக்கிங் பண்ணுறதுக்கு இடத்தை காணேல்லை. :cool:

அந்த வைக்கோல்  குமிக்கிற இடத்தை காணல்ல🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அந்த வைக்கோல்  குமிக்கிற இடத்தை காணல்ல🤣

அது குஞ்சியப்புவின்ர பனங்காணிக்கை  இடம் ஒதுக்கி வைச்சிருக்கு...😂
அக்காவுக்கு இருக்கிற ரெஞ்சனுக்கை கேக்கிற கேள்வியை  பார்....😎

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

அது குஞ்சியப்புவின்ர பனங்காணிக்கை  இடம் ஒதுக்கி வைச்சிருக்கு...😂
அக்காவுக்கு இருக்கிற ரெஞ்சனுக்கை கேக்கிற கேள்வியை  பார்....😎

மாட்டு வண்டில் என்றால் அதுக்கு தீனி வேணாமாய்யா அதான் கேட்டன் கோவிக்க மாட்டா இந்த கொரானோ காலத்தில் 😉🤣

On 27/5/2020 at 08:59, தனிக்காட்டு ராஜா said:

மாட்டு வண்டில் என்றால் அதுக்கு தீனி வேணாமாய்யா அதான் கேட்டன் கோவிக்க மாட்டா இந்த கொரானோ காலத்தில் 😉🤣

பெட்ரோல் நிலையம் போல தீனி கொடுக்கும் நிலையமும் இருக்கும் என அக்கா நெச்சிருப்பா 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 27/5/2020 at 04:14, தனிக்காட்டு ராஜா said:

அந்த வைக்கோல்  குமிக்கிற இடத்தை காணல்ல🤣

இவர் என்னடடை நல்ல ஏச்சு வாங்கப்போறார் 😂

On 27/5/2020 at 04:21, குமாரசாமி said:

அது குஞ்சியப்புவின்ர பனங்காணிக்கை  இடம் ஒதுக்கி வைச்சிருக்கு...😂
அக்காவுக்கு இருக்கிற ரெஞ்சனுக்கை கேக்கிற கேள்வியை  பார்....😎

பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுங்கோ 🤣

On 28/5/2020 at 16:54, Kali said:

பெட்ரோல் நிலையம் போல தீனி கொடுக்கும் நிலையமும் இருக்கும் என அக்கா நெச்சிருப்பா 🤣

On 27/5/2020 at 04:29, தனிக்காட்டு ராஜா said:

மாட்டு வண்டில் என்றால் அதுக்கு தீனி வேணாமாய்யா அதான் கேட்டன் கோவிக்க மாட்டா இந்த கொரானோ காலத்தில் 😉🤣

வாறன் பொறுங்கோ உந்தத் தும்புத்தடி ஒருக்கா எடுத்தாங்கோ 😂😀

  • கருத்துக்கள உறவுகள்
On 12/5/2020 at 01:06, Maruthankerny said:

பொருளாதார மற்றும் அரசியல் தஞ்சம் தேடி சொந்த நாடுகளை விட்டு 
ஓடியபோது அடைக்கலம் தந்து நீங்கள் வாழ்ந்த நாடுகளை விட உங்களை 
சக மனிதராக ஏற்றுக்கொண்டு அனைத்து உதவிகளையும் புரிந்து. கல்வி மற்றும் பொருளாதார 
ரீதியாக நீங்கள் மற்றும் உங்களை சார்ந்தோரும் முன்னேற வழி வகுத்து கொடுத்த நாடுகளுக்கு 
நன்றி கடனாக ஏதும் செய்யலாம் அல்லது செய்யவேண்டும் எனும் எண்ணம் யாருக்காவது இருக்கிறதா?
அல்லது அப்படி எண்ணுவது தவறா? 

அப்படி நினைப்பவர்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன். உதாரணமாக இங்கே community workற்கு வரும் எம்மவர்கள் மிகவும் குறைவே. பொருளாதாரத்தை முன்னேற்ற எஐமான விசுவாசம் கொண்டு உழைக்கிறோம்.. அதில் ஒரு சுயநலமும் உள்ளது.

ஆனால் ஒரு social work , volunteering என வரும் போது, மிகவும் குறைவான பங்களிப்பைத்தான் அவதானிக்கலாம். உதாரணமாக இங்கே தமிழ்ப்பாடசாலைகள், ஞாயிற்றுகிழமைகளில் சைவசமய வகுப்புகள், நடனப்பள்ளிகள் என உள்ளன, ஆனால் அவை ஒன்றினைந்தோ, அல்லது தனித்தனியாகவேனும் ஒரு Operations Christmas Child, Cancer Counseling -daffodil day போன்றவற்றில்றில் ஈடுபட்டதை அறியவில்லை.

On 7/5/2020 at 08:43, MEERA said:

உங்களுக்கு சிறீலங்காவில் காணியும் பழைய அடையாள அட்டையும் இருந்தால் இரட்டை குடியுரிமை அவசியமில்லை. ஆனால் அவதானமாக இருக்க வேண்டும்.

இப்பொழுது அடையாள அட்டை கலரில் அல்லவா வருகிறது. பழைய அடையாளஅட்டையை புதுபிக்கும் போது, தற்போதை வீட்டு விலாசம்  போன்றவற்றை கேட்கும் போது, பிரச்சனை வரமாட்டாதா?. விதானையார் உங்களுக்கு தெரிந்தவர் என்றால் பிரச்சனையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

இப்பொழுது அடையாள அட்டை கலரில் அல்லவா வருகிறது. பழைய அடையாளஅட்டையை புதுபிக்கும் போது, தற்போதை வீட்டு விலாசம்  போன்றவற்றை கேட்கும் போது, பிரச்சனை வரமாட்டாதா?. விதானையார் உங்களுக்கு தெரிந்தவர் என்றால் பிரச்சனையில்லை.

பழைய அடையாள அட்டையை கட்டாயம் புதுப்பிக்க வேண்டியதில்லை, ஆனால் புதுப்பிக்கும் போது GS இன் உதவி தேவை.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, MEERA said:

பழைய அடையாள அட்டையை கட்டாயம் புதுப்பிக்க வேண்டியதில்லை, ஆனால் புதுப்பிக்கும் போது GS இன் உதவி தேவை.

தகவலிற்கு நன்றிகள். புதுப்பித்துவிட்டால் பிரச்சனைகள் சிலதை தவிர்க்கலாம் என யோசிப்பது உண்டு. 

21 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வாறன் பொறுங்கோ உந்தத் தும்புத்தடி ஒருக்கா எடுத்தாங்கோ 😂😀

மாட்டுவண்டி சவாரிக்கு தும்புத்தடியும் உதவுமோ அக்கா? புது விஷயம்! 😂😀

7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

தகவலிற்கு நன்றிகள். புதுப்பித்துவிட்டால் பிரச்சனைகள் சிலதை தவிர்க்கலாம் என யோசிப்பது உண்டு. 

வாக்காளர் இடாப்பில் பெயர் இல்லை என்றால் புதுப்பிப்பதால் சில பிரச்சினைகள் வரலாம். புதுப்பிக்கும் போது தேடுதல் நடக்கலாம். 

புதுப்பித்தல் கட்டாயமாக்கும் வரை புதுப்பிக்காமல் பழசை பாவிக்கிறது புத்திசாலித்தனம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kali said:

மாட்டுவண்டி சவாரிக்கு தும்புத்தடியும் உதவுமோ அக்கா? புது விஷயம்! 😂😀

வாக்காளர் இடாப்பில் பெயர் இல்லை என்றால் புதுப்பிப்பதால் சில பிரச்சினைகள் வரலாம். புதுப்பிக்கும் போது தேடுதல் நடக்கலாம். 

புதுப்பித்தல் கட்டாயமாக்கும் வரை புதுப்பிக்காமல் பழசை பாவிக்கிறது புத்திசாலித்தனம். 

மாட்டின் முதுகில் தும்பால் தட்டினால் விரைவாக ஓடுமாம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

இவற்றையும் கவனத்தில் கொள்ளுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

No photo description available.

இவற்றையும் கவனத்தில் கொள்ளுங்கள். 

யாற்றை🤔 உங்கட சீதன வீடோ tw_lol:
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

No photo description available.

இவற்றையும் கவனத்தில் கொள்ளுங்கள். 

அட கொடுமையே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.