Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனைப் பிடிக்கவில்லை என்றால் சுமந்திரன் தேசிய பட்டியல் நாடாளுமன்றம் சென்றது தவறு: விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனைப் பிடிக்கவில்லை என்றால் சுமந்திரன் தேசிய பட்டியல் நாடாளுமன்றம் சென்றது தவறு: விக்னேஸ்வரன்

by செய்தியாளர் பூங்குன்றன்
C.-V.-Vigneswaran-300x171.jpg

‘போராட்டத்தையும் அதன் ஒப்பற்ற தியாகங்களையும் இப்படி கொச்சைப்படுத்தும் தமிழின சாபக்கேடுகளை அடியோடு ஒழிக்க வேண்டும். தமிழ் மக்கள் இதில் மிகக் கடுமையான விழிப்புணர்வு கொள்ளாவிடின் தென்னிலங்கை பேரினவாதிகளைக் காட்டிலும் இத்தகைய மிதவாத நடிப்பாளர்கள் எம்மைக் குழி தோண்டிப் புதைத்துவிடுவார்கள்.’ எனத் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் ஆயுதப் போராட்டம் செய்ததால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தான் நிராகரிப்பதாகவும் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகள் இயக்கம் ஆரம்பிக்கும் முன்பே ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஆபிரகாம் சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

சுமந்திரனின் இக்கருத்துக்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையின் முழுவடிவம் வருமாறு:

சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு திரு. சுமந்திரன் அவர்கள் வழங்கியிருந்த நேர்காணலைக் கண்டேன். அதிர்ச்சி அடைந்தேன். இவ்வாறானவர்களின் இத்தகைய பேச்சுக்களினால் சிங்கள மக்கள் மத்தியில் எமது போராட்டம் தொடர்பாகவும் எமது அரசியல் செயற்பாடு தொடர்பாகவும் தவறான எண்ணங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. அத்துடன் சிங்கள அரசாங்கங்கள் தற்போது செல்லும் பாதை சரியென்று சிங்கள மக்கள் நினைக்கவும் வாய்ப்புண்டு. என் பழைய மாணவரான திரு.சுமந்திரன் பற்றி எந்தக் கருத்தும் கூறாது இருக்கவே நான் முயன்றேன். ஆனால் நண்பர்கள் பலரின் உந்துதலால் நான் என் கருத்துக்களை வெளியிடுகின்றேன்.

விடுதலைப் புலிகளின் அரசியல் மற்றும் ஆயுத அமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்று திரு சுமந்திரன் கூறியுள்ளார். அப்படியென்றால் தம்பி பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எப்படி பாராளுமன்ற உறுப்பினராக அவர் இதுகாறும் இருந்திருக்க முடியும்? தாய் பகை குட்டி உறவு என்ற கதையாகவல்லவா இருக்கின்றது? இவ்வாறான கருத்தை உடையவர் அவர்களால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அரசியல் பிரவேசம் செய்திருக்கக் கூடாது. தனது கருத்துக்களை வெளிப்படையாக வடமாகாணத்திலோ கிழக்கு மாகாணத்திலோ மக்களுக்குக் கூறி சுயேச்சையாக வாக்குக் கேட்டிருக்கலாம். அல்லது சிங்களக் கட்சிகள் ஊடாக வாக்குக் கேட்டிருக்கலாம். யாழ் தமிழ் மக்களின் தோளில் ஏறி பயணம் செய்து கொண்டு பெரும்பான்மையினரின் அடிவருடி போல் வேஷம் ஆடுவது சகிக்க முடியாது இருக்கின்றது. எனது பழைய மாணவரா இவ்வாறு பேசுகின்றார் என்று வெட்கமாக இருக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன நோக்கத்திற்காக யாரால் உருவாக்கப்பட்டது என்பது எல்லா மக்களும் அறிந்தது. தமிழ் மக்கள் மாத்திரமின்றி சிங்கள மக்களுக்கும் இது பற்றி தெரியும். ஆனால் சுமந்திரன் போன்றவர்கள்தான் உண்மையை அறியாமல் சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்கின்றார்கள் போல் தெரிகின்றது. இதனால் எதைச் சாதிக்கப் பார்க்கின்றார்? ஜனநாயக ரீதியாக தமிழர்களின் உரிமையை வெல்ல வேண்டும் என்ற அபிலாசையில் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமே இதனால் தடம்மாற்றிக் காட்டப்படுகின்றது. இதனால் சிங்கள மக்கள் மத்தியில் உண்மை நிலைமையை மறைத்து தவறான புரிதல்களை ஏற்படுத்த திரு.சுமந்திரன் முயல்கின்றாரோ என்று எண்ண வேண்டியுள்ளது.

அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு முந்தையது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிறார். சுமந்திரனுக்கு வரலாறு தெரியவில்லையா அல்லது தெரியாததுபோல் நடிக்கின்றாரா? அப்படி நடிப்பதால் நல்லவர் என்ற பெயரை சிங்களவர்கள் மத்தியில் ஒருபோதும் அவர் பெற முடியாது. அவருக்குத் தமிழ் மக்களின் உணர்வுதான் புரியவில்லை என்றால் வரலாறுமா தெரியவில்லை. 1949இல் உருவாக்கப்பட்டது தமிழரசுக் கட்சி. தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது 2001இல். 2001ல் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பில்தான் அவர் பேச்சாளராக இருக்கிறார் என்பதை அவருக்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது.

சிங்களவர்கள் மத்தியில் திரு. சுமந்திரனைவிட அதிக காலம் நான் வாழ்ந்திருக்கின்றேன். அத்துடன் சிங்கள மக்களை உறவாகவும் கொண்டவன் நான். அவர்களுடன் உறவாக இருப்பது வேறு. எமது உரிமைகளை அவர்களிடம் எடுத்துக் கூறுவது வேறு. சிங்களவர்கள் மத்தியில் அதிக காலம் வாழ்ந்துவிட்டுத்தான் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதற்கு இங்கு வந்திருக்கின்றேன். திரு.சுமந்திரன் கூறியவை ஏதோ தனிப்பட்ட செல்வாக்கை சிங்களவர் மத்தியில் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கூறியது போல் தெரிகின்றது. தமிழ் மக்களின் வருங்கால நலம் பற்றி சிந்திக்காது தான் அவர் அங்கு பேசியுள்ளார்.

மற்ற இனங்களை மதிப்பது வேறு. அவர்களின் அடிமையாக வாழ விரும்புவது வேறு. மற்ற இனங்களை திருப்திப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு அவர்களின் அடிவருடியாகக் காட்டிக் கொள்வதை திரு.சுமந்திரன் பெருமையாக நினைக்கிறார் போல் தெரிகின்றது. இது சிங்கள மக்களுக்கு எம் தொடர்பில் தவறான தோற்றப்பாட்டையே உருவாக்கும். தமிழர்கள் அடிமையாக இருப்பதை அதிர்ஸ்டமாக நினைக்கிறார்கள் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கும். திரு.சுமந்திரன் அவ்வாறு அடிமையாக இருப்பதை பெருமையாகக் கருதலாம். ஆனால் தமிழர்கள் சார்பில் பேசும் போது அவ்வாறு பேச அவருக்கு உரித்தில்லை.

அது மாத்திரமல்ல, அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் தோல்வியை தழுவிய நிலையில், விரக்தி கொண்ட தமிழ் இளைஞர்கள் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடியது வரலாறு. அதனை நாம் எம் விருப்பு வெறுப்புக்களுக்காக மாற்றிச் சொல்ல முடியாது. கொழும்பில் சுகபோகமாக வாழ்ந்துவிட்டு, இப்போது வந்து வடக்கு கிழக்கு மக்களின் உரிமைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தவும் பலவீனப்படுத்தவும் எவருக்கும் எந்த உரிமையும் இல்லை. வேண்டுமானால் இந்த மக்களை புரிந்து அவர்களுக்காக அவர்கள் கோரிக்கையின் பேரில் குரல் கொடுப்பது உத்தமமானது. இல்லை என்றால் விலகி இருந்து திரு.சுமந்திரன் அவர்கள் தாம் விரும்பும் சிங்கள மக்கள் மத்தியில் போட்டியிட்டு அரசியல் பதவிகளை வகிப்பது நல்லது.

சிங்களவர்களுக்கு எமது விடுதலைப் போராட்டம் தொடர்பில் புரிதலை ஏற்படுத்த வேண்டும். தம்பி பிரபாகரன் ஏன் ஆயுதம் ஏந்தினார் என்பதை நன்கு விளங்கிக்கொண்டுள்ள சிங்கள  மக்கள் பலர் உள்ளனர். தமிழர் தம் போராட்டங்களை, நியாயங்களைப் பற்றிப் பேசுகின்ற சிங்களத் தலைவர்கள் தெற்கில் இருக்கின்றார்கள். அப்படியிருக்க தமிழர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு, போராட்டத்தையும் அதன் ஒப்பற்ற தியாகங்களையும் இப்படி கொச்சைப்படுத்தும் தமிழின சாபக்கேடுகளை அடியோடு ஒழிக்க வேண்டும். தமிழ் மக்கள் இதில் மிகக் கடுமையான விழிப்புணர்வு கொள்ளாவிடின் தென்னிலங்கை பேரினவாதிகளைக் காட்டிலும் இத்தகைய மிதவாத நடிப்பாளர்கள் எம்மைக் குழி தோண்டிப் புதைத்துவிடுவார்கள். அதே கேள்வி சிங்களத்தில் என்னிடம் கேட்டிருந்தால் பிரபாகரனின் போராட்டம் சிங்கள அரசியல்வாதிகளால் முற்றும் முழுதுமாக உருவாக்கப்பட்டது என்று கூறியிருப்பேன்.

நன்றி

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்

முன்னாள் முதலமைச்சர், வடமாகாணம்

செயலாளர் நாயகம், தமிழ் மக்கள் கூட்டணி

இணைத்தலைவர், தமிழ் மக்கள் பேரவை

தலைவர், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி

http://www.vanakkamlondon.com/c-v-vigneswaran-11-05-2020/?fbclid=IwAR16RlSp9RzYnrtZfjcKGR_9IBmJVildUmnwKwN0L7VJSOFs9OYE8iDQMSU

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரன் அவர்கள், மத்திய வங்கி குண்டு வெடிப்பு வழக்கில், பிரபாகரனுக்கு 165 ஆண்டுகள் (?) தண்டனை வழங்கியதை இலகுவாக மறந்துவிட்டார் போலும். 😜

தவறுதான்। இப்போது என்ன செய்யலாம்? நீங்கள் இப்போது போட்டியிடப்போகிறீர்கள்தானே, மக்கள் என்ன முடிவை எடுக்கிறார்கள் என்று பார்ப்போம்। 

6 hours ago, Kapithan said:

விக்னேஸ்வரன் அவர்கள், மத்திய வங்கி குண்டு வெடிப்பு வழக்கில், பிரபாகரனுக்கு 165 ஆண்டுகள் (?) தண்டனை வழங்கியதை இலகுவாக மறந்துவிட்டார் போலும். 😜

இப்பிடியே பச்சைப் பொய்களை அடுக்கியே நீங்கள் மக்களை ஏமாற்ற கடுமையா உழைக்க வேண்டியுள்ளது.

7 hours ago, Kapithan said:

விக்னேஸ்வரன் அவர்கள், மத்திய வங்கி குண்டு வெடிப்பு வழக்கில், பிரபாகரனுக்கு 165 ஆண்டுகள் (?) தண்டனை வழங்கியதை இலகுவாக மறந்துவிட்டார் போலும். 😜

ஐயா விக்கியின் ஆட்கள் உங்களை அடிக்கவரப்போகிறார்கள்। ஐயாவோட கோர்ட் கேஸ் நடக்குதா , முடிஞ்சிதா?

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Rajesh said:

இப்பிடியே பச்சைப் பொய்களை அடுக்கியே நீங்கள் மக்களை ஏமாற்ற கடுமையா உழைக்க வேண்டியுள்ளது.

என்னுடைய கூற்றில் தவறு இருந்தால் நீங்கள் அதைத் தாராளமாகத் திருத்தலாம்.👍

ஆனால் 

நான் பொய் கூறுவதற்கு என்ன தேவை இருக்கிறது எனக் கருதுகிறீர்கள்  🤔

( உண்மையில் எனது முதலாவது கருத்தினூடாக வேறு ஒன்றைக் கூற விழைந்தேன். நீங்கள் அதைத் தொடவில்லை ☹️)

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

விக்னேஸ்வரன் அவர்கள், மத்திய வங்கி குண்டு வெடிப்பு வழக்கில், பிரபாகரனுக்கு 165 ஆண்டுகள் (?) தண்டனை வழங்கியதை இலகுவாக மறந்துவிட்டார் போலும். 😜

தலைவர் பிரபாகரன் பெயரில் நல்ல சட்டத்தரணி ஆயராகி அவர் குற்றவாளி இல்லை என்பதை நிரூபித்திருந்தால் தண்டனை கொடுத்திருக்க மாட்டார்.
என்ன செய்வது தலைவரின் பெயரில் ஆயராக ஒருவரும் முன்வரவில்லையோ என்னவோ?

15 hours ago, Kapithan said:

விக்னேஸ்வரன் அவர்கள், மத்திய வங்கி குண்டு வெடிப்பு வழக்கில், பிரபாகரனுக்கு 165 ஆண்டுகள் (?) தண்டனை வழங்கியதை இலகுவாக மறந்துவிட்டார் போலும். 😜

எப்பொழுது வழங்கினார்? அதற்கான தீர்ப்பின் ஆதாரங்களை முன் வைக்கவும். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரத் அம்பேபிட்டிய.

இவ்வாறான அப்பட்டமான பொய்யை கூறுவதன் உள் நோக்கம் என்ன ?
 
Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Dash said:

எப்பொழுது வழங்கினார்? அதற்கான தீர்ப்பின் ஆதாரங்களை முன் வைக்கவும். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரத் அம்பேபிட்டிய.

இவ்வாறான அப்பட்டமான பொய்யை கூறுவதன் உள் நோக்கம் என்ன ?
 
Eleven LTTE members were charged with the bombing of the Central Bank, ten of them were indicted on a total of 712 counts, including intention to cause death and committing murder, destruction of state property by attacking the central bank, and provoking violence.

In 2002 Judge Sarath Ambepitiya issued an open warrant to arrest LTTE's exclusive leader, Velupillai Prabhakaran in connection with the 1996 Central Bank Bombing.

The judge found him guilty on 51 counts and sentenced him to 200 years in prison.

அந்த நீதிபதி, சாதாரணமாக 100 வருசத்துக்கு மேலே தான் தண்டனையினை ஆரம்பிப்பார்.

ஒரு தூள் கோஸ்ட்டி தலைவருக்கு இப்படி கொடுக்க, அரண்டு போன அவரது ஆட்கள், இவருக்கு வெடி வைத்து விட்டனர். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

எப்பொழுது வழங்கினார்? அதற்கான தீர்ப்பின் ஆதாரங்களை முன் வைக்கவும். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரத் அம்பேபிட்டிய.

இவ்வாறான அப்பட்டமான பொய்யை கூறுவதன் உள் நோக்கம் என்ன ?
 
நன்றி Dash,

தவறுக்கு வருந்துகிறேன். இத்தனை வருடங்களும் விக்கியர்தான் தண்டனைத் தீர்ப்பினை வழங்கினார் என நம்பி வந்தேன். நீங்கள் கூறியபின்னர் விக்கிபீடியாவை கிளறினேன். தவறு புரிந்தது. நன்றி. 👍

உள்நோக்கம் எதுவும் இல்லை. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

Eleven LTTE members were charged with the bombing of the Central Bank, ten of them were indicted on a total of 712 counts, including intention to cause death and committing murder, destruction of state property by attacking the central bank, and provoking violence.

In 2002 Judge Sarath Ambepitiya issued an open warrant to arrest LTTE's exclusive leader, Velupillai Prabhakaran in connection with the 1996 Central Bank Bombing.

The judge found him guilty on 51 counts and sentenced him to 200 years in prison.

அந்த நீதிபதி, சாதாரணமாக 100 வருசத்துக்கு மேலே தான் தண்டனையினை ஆரம்பிப்பார்.

ஒரு தூள் கோஸ்ட்டி தலைவருக்கு இப்படி கொடுக்க, அரண்டு போன அவரது ஆட்கள், இவருக்கு வெடி வைத்து விட்டனர். 

நன்றி நாதமுனி,

விக்கியர் தலைமை நீதிபதியாயிருந்தவர். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது எல்லைகளுக்குள் நின்றுதான் கருத்தை பொதுவெளியில் கூற முடியும். தவறுவாராக இருந்தால் அவர் தனது சத்தியப் பிரமாணத்திற்கெதிராக நடந்துகொண்டார் எனக்கூறப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படலாம். இது எல்லோருக்கும் தெரிந்த விடயமே. 

சுமந்திரனின் செவ்வி தென்னிலங்கைச் சிங்களவருக்கானது. அந்தச் செவ்வியில் அவர் சிங்களவர்களுக்குப் பிடி கொடுக்க முடியாது. ஆனால் எமது மக்கள் சிந்திய இரத்தம் கொச்சைப்படுத்தப்படுகிறதோ என்கின்ற சந்தேகத்தில் நாம் கோபம் கொள்வதில் நியாயம் உள்ளது.

ஆனால் விக்கி அவர்கள் சட்டம் தெரிந்தவர். சுமந்திரன் பிழை விட்டால் என்ன நடக்கும் என நன்கு தெரிந்தவர். அதனால் அவருக்குப் பொறுப்புக்கள் அதிகம். அவர்,  தற்போது அரசியலுக்குள் புகுந்த கற்றுக் குட்டிகள் போல முதிர்ச்சியற்ற, பொறுப்பற்ற அறிக்கைகள் விட முடியாது.  

அவரது அறிக்கைக்கும் புகுமுக அரசியல்வாதியின் அறிக்கைக்கும் இடையே வேறுபாடு எதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ☹️

  • கருத்துக்கள உறவுகள்

கபிதான் அவர்களே விக்கியர் அப்படி ஒரு தீர்ப்பினை வழங்கியதற்கான ஆதாரம் ஏதாவது உங்களிடம் இருக்கிறதா? உங்களிடம் இல்லாதுவிடினும் அப்படி இருந்தால் எங்கிருக்கும் என்பதை அறியத்தரவும்.

இக்கேள்வியின்மூலம் நான் விக்கியின் ரசிகன் அல்லது விசுவாசி என நினைக்க வேண்டாம் காரணம் அவர் அரசியலில் தமிழிலும் உறவினர்களுடன் சிங்களத்திலும் பேசுபவர் தவிர அவரது சம்பந்தியான வாசுதேவ நாணயமில்லாத போலிக் கொமினிசவாதிக்கே தமிழர்களுக்கு என்ன தேவை என்பதை விளங்கப்படுத்த முடியாதவர்.

18 hours ago, Kapithan said:

விக்னேஸ்வரன் அவர்கள், மத்திய வங்கி குண்டு வெடிப்பு வழக்கில், பிரபாகரனுக்கு 165 ஆண்டுகள் (?) தண்டனை வழங்கியதை இலகுவாக மறந்துவிட்டார் போலும். 😜

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Elugnajiru said:

கபிதான் அவர்களே விக்கியர் அப்படி ஒரு தீர்ப்பினை வழங்கியதற்கான ஆதாரம் ஏதாவது உங்களிடம் இருக்கிறதா? உங்களிடம் இல்லாதுவிடினும் அப்படி இருந்தால் எங்கிருக்கும் என்பதை அறியத்தரவும்.

இக்கேள்வியின்மூலம் நான் விக்கியின் ரசிகன் அல்லது விசுவாசி என நினைக்க வேண்டாம் காரணம் அவர் அரசியலில் தமிழிலும் உறவினர்களுடன் சிங்களத்திலும் பேசுபவர் தவிர அவரது சம்பந்தியான வாசுதேவ நாணயமில்லாத போலிக் கொமினிசவாதிக்கே தமிழர்களுக்கு என்ன தேவை என்பதை விளங்கப்படுத்த முடியாதவர்.

நன்றி இளஞ்சூரியன்,

தவறு என்னுடையது. மேலே Dash க்கு பதிலிறுத்துளேன்.  🙂

On 12/5/2020 at 15:04, பெருமாள் said:

பிரபாகரனைப் பிடிக்கவில்லை என்றால் சுமந்திரன் தேசிய பட்டியல் நாடாளுமன்றம் சென்றது தவறு: விக்னேஸ்வரன்

நல்ல நியாயமான கூற்று!

நல்லவர்களுக்கு மாட்டும் தான் இது சரியான கூற்று. 

ஆனா, சமூகவிரோதிகள் கிடைக்கும் எல்ல்லா ஓட்டைகளையும் தங்கள் ஆதாயத்துக்கு பயன்படுத்த தவற மாட்டார்கள். போன 10 ஆண்டுகளாக இது சுமந்திரனுக்கு நல்லா பொருந்துது. 

2 hours ago, Kapithan said:

நன்றி Dash,

தவறுக்கு வருந்துகிறேன். இத்தனை வருடங்களும் விக்கியர்தான் தண்டனைத் தீர்ப்பினை வழங்கினார் என நம்பி வந்தேன். நீங்கள் கூறியபின்னர் விக்கிபீடியாவை கிளறினேன். தவறு புரிந்தது. நன்றி. 👍

உள்நோக்கம் எதுவும் இல்லை. 🙂

கபிதன் நீங்கள் விக்கியர் மீது வைத்த குற்றச்சாட்டு 2013 ல் அவர் அரசியலுக்கு வந்தபோது அவரை சிங்கள அரசின் எடுபிடியாக நினைத்து   அவர் மீது சிலரால்  வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. இதில் வேடிக்கை என்னவெற்றால் அன்று இப்படி குற்றச்சாட்டை வைத்தவர்கள் இன்று அவரை விழுந்து விழுந்து ஆதரிக்கும் தரப்பினர் தான்.  இது தான் அரசியல். அரசியலில் இது எல்லாம் சகஜம்ப்பா. 😂

Edited by tulpen

ஆயுதம் ஏந்தி போராடியவர்கள்  கடைசிவரை ஏன் மண்டியிடவில்லை ? - 

" தமிழ் தேசிய இறைமை" .

இன்றைய "சில" தமிழ் அரசியல் தலைவர்கள் ஆத்மாவிலும் அது எங்கே இருந்து கொண்டு இருக்கின்றது.

அது அவர்களை வழி நடத்திய வண்ணமும் உள்ளது. 

21 hours ago, ampanai said:

ஆயுதம் ஏந்தி போராடியவர்கள்  கடைசிவரை ஏன் மண்டியிடவில்லை ? - 

" தமிழ் தேசிய இறைமை" .

இன்றைய "சில" தமிழ் அரசியல் தலைவர்கள் ஆத்மாவிலும் அது எங்கே இருந்து கொண்டு இருக்கின்றது.

அது அவர்களை வழி நடத்திய வண்ணமும் உள்ளது. 

யார் அந்த தமிழ் தலைமைகள் (?) என்று எழுதினால் எங்களுக்கும் கொஞ்சம் விளக்கமாக இருக்கும்।

37 minutes ago, Vankalayan said:

யார் அந்த தமிழ் தலைமைகள் (?) என்று எழுதினால் எங்களுக்கும் கொஞ்சம் விளக்கமாக இருக்கும்।

அவர்கள் இருப்பதால் தான் இன்னும் தமிழருக்கு அரசியல் தீர்வு தேவை என்பது வாழுகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 13/5/2020 at 23:52, Elugnajiru said:

வாசுதேவ நாணயமில்லாத போலிக் கொமினிசவாதிக்கே தமிழர்களுக்கு என்ன தேவை என்பதை விளங்கப்படுத்த முடியாதவர்.

படித்த  சிங்களவனுக்கே விளங்கப்படுத்த முடியாது. அப்படி ஏற்றி நம்பவைக்கப்பட்டு விட்டார்கள். அந்தப் புத்தனே வந்து  சொன்னாலும், ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நிலைமை அப்படி இருக்கும்போது, சாதாரண விக்கியரால் முடியும் என நான் நம்பவுமில்லை, அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அந்த அரசியல் கோமாளிக்கு இருக்கும் என்றும் தெரியவில்லை. வீணாக அரசியலையும், குடும்பத்தையும் கலந்து குழப்பத்தை உருவாக்கி பிள்ளைகளின் வாழ்வில் புயலை எழுப்ப விரும்பாமல் இருக்கலாம். ஆனால், சிங்களம் தெரிந்த நம்மவர் முக நூல் மூலமாக இளம் சந்ததியினருக்கு விளங்கப்படுத்தலாம். ரவி ராஜை எதற்காக கொன்றார்கள்? உண்மைகளை சிங்களவருக்கு விளங்கப்படுத்தியதால், தங்கள் அரசியல் வாழ்வு கேள்விக்குறி ஆகி விடும் என்கிற பயமே. ஏழை சிங்களவரின் முதுகில் சவாரி விட முடியுமா இவர்களால்?உண்மையை அவர்கள் ஏற்றுக்கொண்டால். 

On 15/5/2020 at 06:12, ampanai said:

ஆயுதம் ஏந்தி போராடியவர்கள்  கடைசிவரை ஏன் மண்டியிடவில்லை ? - 

" தமிழ் தேசிய இறைமை" .

இன்றைய "சில" தமிழ் அரசியல் தலைவர்கள் ஆத்மாவிலும் அது எங்கே இருந்து கொண்டு இருக்கின்றது.

அது அவர்களை வழி நடத்திய வண்ணமும் உள்ளது. 

ஆயுதம் ஏந்தி போராடியவர்கள் எதிரியிடம் மண்டியிடவில்லை. ஆனால் மக்கள் ஒட்டு மொத்தமாக எதிரியிடம்  மண்டியிட வேண்டிய நிலமையே வந்தது. மக்களை மண்டியிட வைக்காத வல்லமை அரசியலை ஆயுதப் போரளிகளும் செய்யவில்லை  அதற்கு  முன் பின் அரசியல்வாதிகளும் செய்யவில்லை. 

அவ்வாறான வல்லமையான அரசியலுடனான போராட்டத்தை செய்யுக் கூடிய  எவரும் இதுவரை தோன்றியதற்கான  எந்த சிறிய அறிகுறி கூட  இல்லை என்பது தான் நிஜம். 

9 hours ago, tulpen said:

எமது மக்கள் ஆயுத போராட்டம் ஊடாக ஒரு அடிமை வாழ்வில் இருந்து வெளியே வர போராடினார்கள். அதில் பல சதிகள் மூலமாகவும், எமது கையாலாகாத பரப்புரை தோல்விகள் காரணமாகவும் அந்த விடுதலை போராட்டம் முடிவிற்கு வந்தது. 

தோல்விகளில் இருந்து வெற்றிகள் கண்டவர்கள்தான் சாதனையாளர்கள். வருவார்கள். 

36 minutes ago, ampanai said:

எமது மக்கள் ஆயுத போராட்டம் ஊடாக ஒரு அடிமை வாழ்வில் இருந்து வெளியே வர போராடினார்கள். அதில் பல சதிகள் மூலமாகவும், எமது கையாலாகாத பரப்புரை தோல்விகள் காரணமாகவும் அந்த விடுதலை போராட்டம் முடிவிற்கு வந்தது. 

தோல்விகளில் இருந்து வெற்றிகள் கண்டவர்கள்தான் சாதனையாளர்கள். வருவார்கள். 

போராட்டங்களுக்கு எதிரான சதி என்பது எமது போராட்டத்துக்கு மட்டுமல்ல உலகில்  நடந்த அனைத்து போராட்டங்களும் இவ்வாறான கண்டுள்ளன. போராட்டங்களை நடத்தியவர்களின் வல்லமை அந்த கால சூழல் ஆகியவை அந்த சதிகளை மீறி அப்போரட்டங்கள் வெற்றி பெற்றன. உங்கள் நம்பிக்கையான எதிர்பார்ப்பு நனவாக எதிர் காலத்திலாவது இவற்றை எதிர் கொள்ளும் வல்லமையாளர்கள் எமது இனத்தில்  உருவாக வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.