Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

த‌மிழ‌ர்க‌ளின் க‌லாச்சார‌ம் எத‌ நோக்கி போகுது , யாழ் க‌ள‌ உற‌வுக‌ளின் ப‌தில‌ எதிர் பார்த்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

நிமினி அக்கா வ‌சிக்கும் நாடு அவுஸ் தானே தாத்தா அது தான் ஊரையும் எழுதி அவுஸ்ரேலியாவையும் எழுதினேன் , 

அட பையா நில்மினி நம்ம வீட்டுக்கு எதிர்வீடு ராசா.(அம்மா புறம் அமெரிக்கா)

  • Replies 161
  • Views 13.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, யாயினி said:

நாம் அவர்களோடு பழக வேண்டாம், இவர்களோடு பழக வேண்டாம் என்று சொல்வது கடினம் பையன்.பள்ளிக் கூடங்கள்.மற்றும் தொழில் சார்ந்த இடங்களில் பல இனத்த வருடனும் ஒத்துழைத்து போக வேண்டிய சூழ்நிலை. அப்படியான தருணங்களில் தான் மிக கூடுதலாக தவறு நடக்கிறது.. 

 

இங்கு எல்லாம் பார்த்தால் தந்தைமார் ஒரு பக்கம் தண்ணீரில் மிதப்பார்கள் , மறு பக்கம் பார்த்தால் சில அம்மாக்கள் போத்தலோடு இல்லை என்றால் கிளாசோடு பார்ட்டிகளில் போடும் பாட்டுகளுக்கு  வேப்பிலை இல்லாத குறையாகத் தான் நிப்பார்கள்..இது ஒன்றும் பொய் புரட்டு இல்ல இப்படி தான் இப்போ.என் கண்டால் காட்சிகள்.

இவர்களேபிள்ளைகள் தவறாக போவதற்கு உதாரணமாக இருக்கும் போது பிள்ளைகளையோ மற்றும் யாரையும் தவறாக எண்ண முடியாத நிலை.நன்றி பையா..

முற்றிலும் உண்மை ச‌கோத‌ரி ,   மேல் ப‌டிப்பு ப‌டிக்கிறோம் என்று சொல்லி விட்டு , சில‌ர் போடும் கூத்து மிக கேவ‌ல‌ம் ,  
இது க‌ன‌டாவில் ம‌ட்டும் இல்ல‌ டென்மார்க்கிலும் அதிக‌ம் ,

ஒன்னா இருந்து விட்டு அவ‌ர்க‌ளுக்குள் விரிச‌ல் வ‌ரும் போது எல்லா உண்மையும் வெளியில் வ‌ரும் கொஞ்ச‌க் கால‌ம் ‌க‌ழித்து  , 

பெண்ண‌ பெத்த‌ பெற்றோர் க‌ண்ணீர் விட்டு அழுத‌த‌ கூட‌ நான் பார்த்து இருக்கிறேன் , நில‌மை அவ‌ள‌வ‌த்துக்கு கைமீறி போய் இருக்கு , 

பெத்த‌துங்க‌ள் இதுங்க‌ளை ந‌ம்பி தான் மேல் ப‌டிப்புக்கு அனுப்புவின‌ம் , ஆனால் காத‌ல் என்ற‌ பெய‌ரில் விளையாட்டு காட்டுகிற‌வை பெத்த‌ தாய் தேப்ப‌னுக்கு துரோக‌ம் இழைப்ப‌து வெளிச்ச‌மாய் தெரியும் , 

நாம் த‌மிழீழ‌த்தில் பிற‌ந்த‌ ப‌டியால் எம் காலாச்சார‌ம் ஒழுக்க‌ம் நாக‌ரிக‌ம் இவை அனைத்தும் தெரியும் , 

அடியாத‌ மாடு ப‌டியாது என்ற‌ மாதிரி சின்ன‌னில் எங்க‌ளுக்கு அப்ப‌ம்மா அம்ம‌ம்மா இவ‌ர்க‌ள் அடிக்க‌ மாட்டின‌ம் , ஆசிரிய‌ர்க‌ளில் இருந்து உற‌வின‌ர்க‌ளிட்ட‌ முர‌ட்டுத‌ன‌மாய் அடி வேண்டின‌ நாங்க‌ள் ,  அந்த‌ அடி ப‌ய‌ம் தான் எங்க‌ளை ந‌ல் வ‌ழியில் ப‌ய‌ணிக்க‌ வைத்த‌து  ,

பெற்றோர் சொல்வ‌த‌ கேட்டு ந‌ட‌க்கும் பிள்ளைக‌ளும் இருக்குதுக‌ள் , 

தாய் தேப்ப‌ன் போட்ட‌ கோட்டை தாண்டாதுக‌ள் , நான் பார்த்த‌ ம‌ட்டில் அப்ப‌டியான‌ பெண் பிள்ளைக‌ள் பெற்றோர்க‌ளின் ச‌ம்ம‌த‌த்தோடு திரும‌ண‌ம் செய்து ந‌ல்லா வாழுகின‌ம் 🙏,

அந்த‌ பிள்ளைக‌ளை மாதிரி ம‌ற்ற‌ பெண் பிள்ளைக‌ளும் இருந்தா இப்ப‌டியான‌ திரியில் எழுத ‌வேண்டிய‌ அவ‌சிய‌ம்  இல்ல‌ ,

 

வெள்ளை இன‌த்த‌வ‌ர்க‌ளை பார்த்து தான் இப்ப‌ இருக்கிற‌ பிள்ளைக‌ள் கெட்டு போக‌ முத‌ல் கார‌ன‌ம் , 

நானும் சின்ன‌னில் இங்கத்த‌ பாட‌சாலையில் ப‌டித்து விட்டு தான் மேல் ப‌டிப்பு ப‌டிச்ச‌ நான் , வெள்ளை இன‌த்த‌வ‌ர்க‌ளின் பிள்ளைக‌ள் 10வ‌ய‌திலே கிஸ் அடிக்க‌ தொட‌ங்குங்க‌ள் , அதுங்க‌ளை பார்த்து தான் த‌மிழ் பிள்ளைக‌ளும் பின்னாளில் த‌வ‌றான‌ வ‌ழிக்கு போக‌ கார‌ண‌ம் ,

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஈழப்பிரியன் said:

அட பையா நில்மினி நம்ம வீட்டுக்கு எதிர்வீடு ராசா.(அம்மா புறம் அமெரிக்கா)

நான் நினைத்தேன் அவுஸ்ரேலியா என்று , நான் த‌வ‌றாக‌ புரிந்து விட்டேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி /

க‌ள்ளுக் கொட்டில் தாத்தாவும் அந்த‌ திரியை வாசித்து விட்டு காமெடி செய்தார் , நான் நினைத்தேன் தாத்தா வ‌ழ‌மைக்கு மாறாக‌ கூட‌ அடித்து விட்டார் போல‌ என்று 😁,  

என்னை விட‌ தாத்தா நாட்டு ந‌ட‌ப்புக‌ள் தெரிந்து வைத்து இருப்ப‌தில் வ‌ல்ல‌வ‌ர் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 😁

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

அட பையா நில்மினி நம்ம வீட்டுக்கு எதிர்வீடு ராசா.(அம்மா புறம் அமெரிக்கா)

ஓமோம் நான் ஈழப்பிரியன்  அண்ணா எல்லாரும் ஒரு ஊர் தான் தம்பி 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பையன்26 said:

எல்லாம் த‌க‌ப்ப‌ன்  செய்த‌ த‌ப்பு , பிள்ளையின் காத‌ல் பிடிக்காட்டி அத‌ அவ‌ர் வேறு வித‌மாய் கையாண்டு இருக்க‌லாம் , அத‌ விட்டுட்டு பெத்த‌ பிள்ளைக்கு முர‌ட்டு த‌ன‌மாய் அடிச்சா அதுங்க‌ள் ம‌ன‌ம் குழ‌ம்பி போயிடுங்க‌ள் அக்கா ,

என‌க்கு க‌வ‌லை என்ன‌ என்றால் அந்த‌ பிள்ளைக‌ள் இப்ப‌ ம‌து அருந்தின‌ம் , வெள்ளைக் கார‌னை திரும‌ண‌ம் செய்தா அவ‌ன் அவ‌னின் க‌லாச்சார‌த்த‌ தான் ம‌னைவி பிள்ளைக‌ளுக்கு சொல்லி குடுப்பான் ,

த‌ப்பு த‌வ‌றி உங்க‌ட‌ பிள்ளைக‌ளை வெள்ளை இன‌த்த‌வ‌ர்க‌ள் கூட‌ அதிக‌ம் ப‌ழ‌க‌ விட‌ வேண்டாம் அக்கா , முடிந்த‌வ‌ரை உங்க‌ளின் க‌ட்டு பாட்டுக்குள் அன்பை காட்டி வைத்து இருந்து விட்டு பிள்ளைக‌ளுக்கு க‌லியாண‌ வ‌ய‌து வ‌ர‌ ந‌ல்ல‌ த‌மிழ் பிள்ளைக‌ளை ஊரில் அல்ல‌து அவுஸ்ரேலியாவில் பார்த்து செய்து வையுங்கோ , 

த‌ப்பு த‌வ‌றி உங்க‌ட‌ பிள்ளைக‌ளை வெள்ளை இன‌த்த‌வ‌ர்க‌ள் கூட‌ அதிக‌ம் ப‌ழ‌க‌ விட‌ வேண்டாம் அக்கா , முடிந்த‌வ‌ரை உங்க‌ளின் க‌ட்டு பாட்டுக்குள் அன்பை காட்டி வைத்து இருந்து விட்டு பிள்ளைக‌ளுக்கு க‌லியாண‌ வ‌ய‌து வ‌ர‌ ந‌ல்ல‌ த‌மிழ் பிள்ளைக‌ளை ஊரில் அல்ல‌து அவுஸ்ரேலியாவில் பார்த்து செய்து வையுங்கோ :

நடைமுறையில் கஸ்டமான விசயம் பையன் . எனது பிள்ளைகள் அதிகம் வெள்ளையருடன் தான் பழகிறார்கள். ஏனெனில் நாங்கள் இருக்கும் இடம் அப்படி. ஆனால் அடிக்கடி சகோதரங்கள் , மற்றும் உறவினர்கள் வீட்டுக்கு போவதாலும், வீட்டில் தமிழ் முறையில் எல்லாம் செய்வதாலும் அவர்களுக்கு தமிழ் கலாச்சாரம் தான் கூட பழக்கம். அதைவிட பெரிதாக எம்மால் அவர்களை கட்டுப்படுத்த முடியாது. அது முறையும் அல்ல. ஊரில் இருந்திருந்தால் நீர் சொன்னமாதிரி தான் இருக்க எனக்கு மிகவும் விருப்பம் 

விரும்பியோ இல்லாமலோ வெளிநாட்டு வாழ்க்கையை ஏற்றுக்கொண்டோம். அதனால் அதன் கூடாத விளைவுகளை பற்றி அதிகம் கவலைப்படக்கூடாது தம்பி. நல்ல விடயங்களும் இருக்குது தானே? எல்லாவற்றயும் அதிகம் யோசித்தால் இருக்கிற நிம்மதியும் போய்விடும். எனக்குத்தெரிந்து பெற்றோர் அவ்வளவு கவனிக்காத பிள்ளைகள் நன்றாக  படித்து நல்ல வாழ்க்கையும் வாழ்கிறார்கள். நல்ல பெற்றோர்களின் பிள்ளைகள் சில உதவாமல் போயிருக்கிறார்கள். தாயும்  தகப்பனும்  நல்ல குடிக்கிற வீடு பிள்ளைகள் சில குடியையே தொடுவதில்லை. இப்படி ஒவ்வொரு விதம். எது எப்படி என்றாலும் யூதர்கள் மாதிரி தீவிரமாக பிள்ளைகளை தமது கலாச்சாரம் கோவில், மொழி என்று பழக்கினாலே ஓளிய இன்னும் இரண்டு மூன்று தலைமுறையில் எமது கலாச்சாரம் வெகுவாக குறைந்து விடும். 

19 hours ago, ஈழப்பிரியன் said:

 

மகளின் திருமணத்துக்கு வாழ்த் துக்கள் ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பையன்26 said:

நான் நினைத்தேன் அவுஸ்ரேலியா என்று , நான் த‌வ‌றாக‌ புரிந்து விட்டேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி /

க‌ள்ளுக் கொட்டில் தாத்தாவும் அந்த‌ திரியை வாசித்து விட்டு காமெடி செய்தார் , நான் நினைத்தேன் தாத்தா வ‌ழ‌மைக்கு மாறாக‌ கூட‌ அடித்து விட்டார் போல‌ என்று 😁,  

என்னை விட‌ தாத்தா நாட்டு ந‌ட‌ப்புக‌ள் தெரிந்து வைத்து இருப்ப‌தில் வ‌ல்ல‌வ‌ர் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 😁

அவுஸ்திரேலியா நல்லதொரு நாடு என்று உங்கள் ஆழ்மனதில் பதிந்திருந்தது,  தன்  பாட்டிற்கு வெளியே வந்திருக்கு போல , இதற்கு ஏன் கவலைப் படுவான் ..

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

கன்னிகாதானம் தமிழர் பரம்பரியங்களுக்குள் வராது அல்லவா?
தமிழ் முறைப்படி நடக்கும் திருமண நிகழ்வுகள் எல்லாவற்றையும் விட மிகுந்த சந்தோசத்தையும் இன்பத்தையும் தரும்.

உங்கள் கருத்தில் குறுக்கீடு செய்தமைக்கு மன்னிக்கவும்.

 

 

நன்றி குமாரசாமி அவர்களே குறிப்பிற்கு . இது ஏன் முன்பே தோன்றாமல் போயிற்று , ஆரிய செல்வாக்கில் எமது பாரம்பரியத்தில் வந்த மாற்றங்கள் .. சிலவற்றை மாற்ற முடியாமல் தான் இருக்கு இன்னமும் . அந்த சடங்கினை நிறைவேற்றிய போது உயிரே போன மாதிரி இருந்தது வேறு கதை , என்னுடன் சேர்த்து முழு மண்டபத்தையும் உணர்ச்சி வசப் பட வைத்த   நேரம் அது .. இப்படித்தானே எனது மனைவியின் பெற்றோருக்கும் இருந்திருக்கும் எனவும் நினைத்துக் கொண்டேன் .

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, சுப.சோமசுந்தரம் said:

சிறப்பான திருமணம். பொருத்தமான இணை. ஈழப்பிரியன் அவர்கள் மகள் திருமணம் எப்போது நிகழ்ந்திருந்தாலும், இந்த யாழ் சொந்த இல்ல விழாவிற்கு இப்போது என் வாழ்த்துக்கள், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வரிகளில் :

"ஒரு மனதாயினர் தோழி
இந்தத் திருமண மக்கள் என்றும் வாழி
பெருமனதாகி இல்லறம்  காக்கவும்
பேறெனப்படும் பதினாறையும் சேர்க்கவும்
ஒரு மனதாயினர் தோழி !"
    

நன்றி சுப .சோமசுந்தரம்.

21 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நன்று .. வாழ்த்துக்கள் தோழர்..👌

நன்றி புரட்சி.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎16‎-‎06‎-‎2020 at 11:21, ஈழப்பிரியன் said:

 

பிள்ளைகளின் திருமணம்  பெற்றோரின் ஆன்மாவில் ஒன்றியதொன்று. காலம் எவ்வளவு சென்றாலும் அதன் பசுமை அப்படியே இருக்கும். வாழ்த்துக்கள் .
பிள்ளைகளுக்கு அண்மையாகத் தான் வசிக்கிறீர்கள்  என நினைக்கிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அகத்தான் said:

மகளின் திருமணத்துக்கு வாழ்த் துக்கள் ஈழப்பிரியன்

நன்றி அகத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, சாமானியன் said:

பிள்ளைகளின் திருமணம்  பெற்றோரின் ஆன்மாவில் ஒன்றியதொன்று. காலம் எவ்வளவு சென்றாலும் அதன் பசுமை அப்படியே இருக்கும். வாழ்த்துக்கள் .
பிள்ளைகளுக்கு அண்மையாகத் தான் வசிக்கிறீர்கள்  என நினைக்கிறேன் .

 

                 நன்றி சாமானியன்.மகன் இரு பிள்ளைகளுடன் நியூயோர்க்கில்.இருவரும் வேலை என்பதால் மனைவி அவர்களின் பிள்ளைகளை பார்க்கிறா.எமது வீட்டிலிருந்து 10 நிமிட வாகன ஓட்டம்.
                மகள் சன்பரான்சிஸ்கோவில் ஒரு பையன்.இருவரும் வேலை என்பதால் வீட்டுக்கு வந்து பிள்ளை பராமரிக்க ஒருவரை ஒழுங்கு செய்திருந்தனர்.அவருக்கு திடீர் என நல்ல வேலை கிடைத்ததால் இவர்களுக்கு பிள்ளையை பார்க்க ஆள் இல்லை என்று அங்கலாய்த்தனர்.நாம் இருக்க பயம் ஏன் என்று நான் வந்து பேரனுடன் நிற்கிறேன்.அனேகமாக ஆவணியில் மகனுக்கு டேகெயர் கிடைக்கலாம்.அதுவரை நான் இங்கு தான்.

இது 2016 இல் நடந்த மகனின் திருமணம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வீடியோவில் மகன் முதல் ஒரு நிமிடம் போட்டிருக்கும் சேட் எனது திருமணத்தின் போது நான் போட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்த வீடியோவில் மகன் முதல் ஒரு நிமிடம் போட்டிருக்கும் சேட் எனது திருமணத்தின் போது நான் போட்டது.

நல்ல வீடியோ. பார்த்து ரசித்தேன் அண்ணா. உங்களின் Shirt ஐ மகன் போட்டது நல்ல செண்டிமெண்ட். 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nilmini said:

நல்ல வீடியோ. பார்த்து ரசித்தேன் அண்ணா. உங்களின் Shirt ஐ மகன் போட்டது நல்ல செண்டிமெண்ட். 

நில்மினி இந்த திரியை ஒருதரம் பாருங்கள்.
நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இந்த வீடியோவில் மகன் முதல் ஒரு நிமிடம் போட்டிருக்கும் சேட் எனது திருமணத்தின் போது நான் போட்டது.

'மாப்பிள்ளை அவர்தான். ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது' என்று ரஜினி - செந்தில் பட (படையப்பா) காமெடி போல் வருகிறதே ! 😀

சரி, உங்கள் மகன் மற்றும் மருமகளை வாழ்த்த வேறு பாடல் போடுகிறேன் :

"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

பலகோடி நூறாயிரம்"

    -----------பெரியாழ்வார்.

 

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 16/6/2020 at 03:42, ஈழப்பிரியன் said:

உடையார் 41 வயதிலேயே இஞ்சின் வேலை செய்தாச்சு.

இப்ப சுகமாய் எழுதக்கூடியதாய் இருக்கு.
அந்த தருணங்களில் மனைவி பிள்ளைகள் எவ்வளவு கலங்கியிருப்பார்கள்.அதிலும் பிள்ளைகள் சிறு வயதில் இருந்திருப்பார்கள்.மனைவி எவ்வளவத்தை யோசித்திருப்பார்.நீங்கள் எதையெல்லாம் யோசித்து உருகியிருப்பீர்கள்.
ஏனெனில் நானும் அந்த நெருக்கடியை சந்தித்தவன் என்ற முறையில் உணர முடிகின்றது.

On 16/6/2020 at 13:00, குமாரசாமி said:

புதியன புகுதலும் பழையன கழிதலும் எண்டு எதை சொல்ல வருகினம் எண்டு எனக்கு விளங்கேல்லை.
வெள்ளைக்காரனே தங்கடை நாய்க்கலாச்சாரம் சரியில்லை எண்டுட்டு ஏசியா பக்கம் ஓடுறான். இவையள் என்னடாவெண்டால் ஆட்டுக்கை மாட்டைக்கொண்டு வந்து ஓட்டீனம்.

தம்பி! யூ நோ பழையன கழிதலும் புதியன புகுதலும்????? 🤣

அடுத்த இனத்தவரின் கலாச்சாரம் நாய்க்கலாச்சாரம்  என்று சொல்லுவதே சொல்லுபவரின்   கேவலமான கலாச்சாரத்தின்  வெளிப்பாடுதான்.ஐரோப்பா வந்த தமிழர்கள் எல்லாம்  தம் கலாச்சாரத் நாய்கலாச்சாரம் என்று இங்கு வரவில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
On 17/6/2020 at 03:45, nilmini said:

எது எப்படி என்றாலும் யூதர்கள் மாதிரி தீவிரமாக பிள்ளைகளை தமது கலாச்சாரம் கோவில், மொழி என்று பழக்கினாலே ஓளிய இன்னும் இரண்டு மூன்று தலைமுறையில் எமது கலாச்சாரம் வெகுவாக குறைந்து விடும். 

தமிழ் பாடசாலைக்கு அனுப்புங்கள், எவ்வளவு சிறிதாயினும், நிர்வாகத்தில் உள்ளுக்குள்ளே நாய் கடி உறுமல்கள் இருந்தாலும்.

ஆக குறைந்தது,  நீங்கள் இருக்கும் நாடுகளில் gce ordinary level அளவில் உள்ள தமிழ் பரீட்சை வரைக்கும் கொண்டு வந்து விடுங்கள்.

கோயிலுக்கு முடிந்தவரையில் ஒழுங்காக போய்வாருங்கள்.

இதை ஒழுங்காக செய்வதற்கு (தமிழ் பாடசாலைக்கு, கோயிகளுக்கு  செல்வது) ஓர் கட்டுப்பாடும், அர்ப்பணிப்பும் தேவை.

வெளிநாட்டுக்கு வந்த எல்லோரும் இது ஓர் கடமையாக (தமிழ் பாடசாலைக்கு, கோயிகளுக்கு  செல்வது) கடமையாக செய்வது, அங்கு அழிந்த எமது சந்ததிகளுக்கு செய்யும் உண்மையான அஞ்சலி, குறிப்பிட்ட தினத்தை நினைவு கூராவிட்டாலும்.      

இது எல்லா நாடுகளிலும், போகக்கூடிய வசதியாக இருக்குமோ தெரியவில்லை. 

ஆனால், jews தம்மவர்கள் பொதுவாக தமக்குளே, தமது காரசாரத்துடன் இருக்க வேண்டும் என்பதற்கு நான் அறிந்ததை சொல்கிறேன்.

1990 களின் ஆரம்பத்தில், jews இன் சமூக ஆர்வலர்கள், தமது சந்ததி வெளியாருடன், பெரும்பாலும் வெள்ளைகளுடன் திருமணம் செய்வது jews ஐ திருமணம் செய்வதை விட விஞ்சியும், போக்காகவும் வந்ததை அவதானிதார்கள். இதன் காரணம், அவர்களின் இளவயதினர் ஒருவரை ஒருவர் நட்பாக சந்திப்பது வெகுவாக குறைந்தது என்பதும் அவர்களின் அவதானம்.

1991 - 1992 இல்  jews இன் சமூக ஆர்வலர்கள், அவர்களின் இளவயதினர்  எந்தவொரு வேறு வயது கண்ணும் இல்லாமல் ஓவ்வொரு  கிழமையும் சந்திப்பதற்கான நிகழ்வுகளை, அவர்கள் இருந்த ஓவ்வொரு நாட்டிலும் உருவாக்கி, jews பெரும்பாலும் வெளியாருடன் திருமணம் செய்யும் போக்கை மறுவளமாக, அதாவது jews தமக்குள்ளே திருமணம் செய்யும் போக்கை காலப்போக்கில் ஆக்கினார்கள். இந்த இளவயது jews சந்திப்பதை ஒழுங்கு செய்வது, இப்பொது ஓர் நிறுவனமயமாகி விட்டது. 

இது தமிழரில் சாத்தியம் இல்லை என்றே நினைக்கிறன். வெள்ளைகளிலும்  வேறு இனத்தவர்களும் சாதி இருந்தும், வெள்ளையை அல்லது வேறு இனத்தவரை சாதி பார்க்காத எம்மவர்கள், தமிழர்கள் என்றால் சாதியை குடைந்து பார்ப்பார்கள்.

ஏன், மிகவும் சமீபத்தில் நன்னீர் மீன் பற்றியும், அதன் மணம் சுவை பற்றியும் வந்த போது, தளத்தில் ஒருவர் எழுதி இருந்தார் குறிப்பிட்ட சாதியினர் குளத்து மீன்களை சாப்பிடமாட்டார்கள் என்று.

ஆனால், குளத்து மீன்களை பாவிப்பதை தீர்மானிப்பது பொருளாதார வசதி. 

இந்த சாதியை எல்லாத்திலும் தூக்கி பிடித்ததே, எமது சனத்தொகை ஒப்பீட்டளவில் குறைந்தததற்கான ஓர் காரணம்.  சிங்கள பகுதிக்கு காலனித்துவதில் வந்த மலையாளிகள், தமிழர்கள் மற்றும் தெலுங்கர்கள் சிங்களவருக்குள் சீரழிந்தற்கான காரணம் இந்த சாதியை சிங்களவரிலும் மூர்க்கமாக தமிழர்கள் தூக்கி பிடித்தது.  காலனித்துவத்துக்கு முன் (போர்த்துக்கேயர் வருகை) சிங்கள, தமிழ் சனத்தொகை ஏறத்தாழ ஒரேயளவு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Kadancha said:

ஆக குறைந்தது,  நீங்கள் இருக்கும் நாடுகளில் gce ordinary level அளவில் உள்ள தமிழ் பரீட்சை வரைக்கும் கொண்டு வந்து விடுங்கள்.

கோயிலுக்கு முடிந்தவரையில் ஒழுங்காக போய்வாருங்கள்.

 நூற்றுக்கு நூறு வீதம் உண்மை.

எம்மவர் வாழும் புலம்பெயர் நாடுகளில் நான் அவதானித்த வரையில் சைவ கோவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் தமிழ் பாடசாலைகள் என கவனத்தை  செலுத்தும் பெற்றோர்களின் பிள்ளைகள் நூற்றுக்கு எழுபது வீதமாவது தமிழர் கலாச்சாரத்துடனும் பண்பாட்டுடனும் வாழ்கின்றார்கள். சில பிள்ளைகள் சில இடங்களில் கிர்தா விளையாட்டுக்கள் விட்டாலும் தமிழர் எனும் குடையில் பண்பாட்டுடனேயே இருக்கின்றார்கள்.

※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※

"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே பின்பு
நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே"
எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். குழந்தை வளர்ப்பு என்பது தனிக்கலை. ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகத்தில் பிறக்க கடவுள் தேர்ந்தெடுத்த கருவிகள் தான் பெற்றோர்.   👨‍👩‍👧‍👦

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தலைப்பு.. எம்மவர் திருமணங்கள்... இப்போ அதன் பண்பாட்டு விழுமியத்தை தொலைத்துவிட்டது என்றால் மிகையில்லை. குறிப்பாக புலம்பெயர்நாடுகளில்.. வட ஹிந்திய கலாசாரத்தை எமது என்றாக்கி வைத்திருக்கிறார்கள். அத்தோடு சினிமாத்தனத்தை உள்ளிளுத்து வைத்திருக்கிறார்கள். உண்மையில்.. சைவத் - தமிழ் முறை திருமணத்துக்குள்.. சினிமாவை புகுத்தியத்து.. சிங்கப்பூர் மலேசியா வாழ் தமிழர்கள் தான். பின் அதற்குள்.. வட ஹிந்திய கலாசாரத்தை புகுத்தினது நம்ம புலம்பெயர் தமிழர்கள்.

எங்கள்.. திருமணத்தை தாங்கள் சொல்லியது போல் சைவத் தமிழ் முறைப்படி.. கோவிலில் தான் நடத்தினோம். நீண்ட கியூக்களில் வாழ்த்தவருபவர்கள் கால்கடுக்க நிற்க வைக்கும் எண்ணமில்லை. அந்த வகையில்.. மிகவும் நெருங்கிய உறவுகள் மற்றும் நெருங்கிய நண்பர்கள்.. அவர் தம் குடும்பம் என்று தான் அழைப்பு விடுத்தோம்.

குறிப்பாக தமிழரல்லாத நண்பர்கள்.. எமது கலாசாரத்தை ரசிக்கவே பல நாடுகள் தாண்டி வந்து பங்கேற்றார்கள். முடிவில் வந்த எல்லோருமே இதுதான் தமிழ் கல்யாணம் என்பதை அடையாளம் கண்டுகொள்ள வாய்ப்பளித்தோம். அதிலும் ஒரு கிறீஸ் நாட்டு நண்பர்.. தான் பார்த்த முதல் தமிழ் திருமணம் இது தான்.. இதற்கு முன்னர் சில தமிழர்களின் திருமணத்திற்கு போயிருந்தாலும்.. அது கோவிலில் நடக்கவில்லை.. கோலில் தான் நடந்தது என்றார். அங்கு வேடிக்கை வினோதம் இருந்த அளவுக்கு கலாசார விழுமிய வெளிப்பாடில்லை என்றார். 

அழைப்பிதழை நானே வடிவமைத்து.. நெதர்லாந்தில் பிரின்ட் செய்து எடுப்பித்தேன். ஆடம்பரமான அழைப்பிதழ் அல்ல.. அவசியமான விடயங்களோடு.. எமது நிழற்படம் பொறித்து.. நன்றி பகிர்வுடன். 

தமிழில் திருமண மந்திரம் சொன்னார்கள். இடையில் திருமணத்தை நடத்திய புரோகிதர்களின் ரசிக்கக் கூடிய மேடைக்கேற்ற பகிடிகள்.. சிரிப்புகள்.. ஆகக் கூடியது 3 மணித்தியாலத்துக்குள் நிகழ்வை முடிக்க வேண்டும் என்பதே எமது விருப்பம். அதிக நேரம் இழுப்பது சோர்வும் சலிப்பும் தரும் என்பதால். அதேபோல் நிகழ்வுகள் ஒழுங்கமைத்தப்படி நிகழ்ந்தது.

நேரலை எம்மை விட்டு தூர உள்ள உறவுகளுக்காக செய்யப்பட்டது. முகநூல் போன்ற எல்லோரும் பாவிக்கும் சமூக ஊடகங்களை பாவிக்கவில்லை. எங்களின் தனித்துவம் பாதுகாக்கப்படுவது அவசியம் என்பதால். 

இத்தனைக்கு வழமையாக எம்மவர்கள் செய்யும் திருமணத்தோடு ஒப்பிடும் போது செலவும் ஓரளவு குறைவு. மிஞ்சிய உணவையும் கோவிலுக்கு வருபவர்களுக்கு பரிமாறக் கூடியதாக அனுமதி தந்திருந்தார்கள். அநாவசிய செலவீனங்களை தவிர்த்து நல்ல சைவ உணவை வயிராற வழங்க வேண்டும் என்பதை நிறைவு செய்யக் கூடியதாக இருந்தது. 

இத்தனைக்கும் என் திருமணத்தை என் சொந்த சேமிப்பில் தான் நடத்தினேன். கடனும் வாங்கவில்லை.. கடனட்டையும் பாவிக்கவில்லை. பெண் வீட்டாரிடம்.. நன்கொடை என்றும்.. வாங்கவில்லை.

இதனை பெருமைக்காகச் சொல்லவில்லை.. எமது கலாசார பின்னணியோடு.. வாழும் நாடுகளின் செளகரிகங்களுக்கு உட்பட்டு.. செலவையும் கட்டுப்படுத்தி.. எங்கள் திருமணங்களை செய்ய எம்மவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

இளைய சமூகத்துக்கும் பொறுப்புணர்த்த வேண்டும். இன்றேல்.. வீண் செலவுகளால் சீரழிவு தான். பெரும் ஆடம்பர திருமணங்களை தங்கள் வசதிக்கு மிஞ்சி செய்து துன்பப்படும் பலரை நாம் புலம்பெயர் மண்ணிலும் சரி தாயகத்திலும் இப்போ சர்வ சாதாரணமாக காண முடிகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

எமது சேமிப்புக்குள் எமது கலாசார பண்பாட்டு விழுமியங்களோடு.. சோர்வு சலிப்பு.. கால் கடுப்புக்கு இடமளிக்காமல்.. சுவராசியம் வைச்சு செய்யப்படும் ஒரு சிறிய நிகழ்வாக எமது திருமணங்கள் அமைவதே சிறப்பு. 

 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nedukkalapoovan said:

வட ஹிந்திய கலாசாரத்தை எமது என்றாக்கி வைத்திருக்கிறார்கள். அத்தோடு சினிமாத்தனத்தை உள்ளிளுத்து வைத்திருக்கிறார்கள்.

வட ஹிந்திய கலாசாரத்தை புகுத்தினது நம்ம புலம்பெயர் தமிழர்கள்.

 உண்மை.

வெளிநாடுகளில் வாழும் ஈழதமிழர்கள் திருமணங்களில் வட இந்திய ஹிந்திகாரர்களாக வேஷம் போட்டு நிற்கும் கோமாளிதனத்தை விளங்கி கொள்ளவே முடியவில்லை.

25 minutes ago, nedukkalapoovan said:

என் திருமணத்தை என் சொந்த சேமிப்பில் தான் நடத்தினேன். கடனும் வாங்கவில்லை.. கடனட்டையும் பாவிக்கவில்லை. பெண் வீட்டாரிடம்.. நன்கொடை என்றும்.. வாங்கவில்லை.

👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, tulpen said:

அடுத்த இனத்தவரின் கலாச்சாரம் நாய்க்கலாச்சாரம்  என்று சொல்லுவதே சொல்லுபவரின்   கேவலமான கலாச்சாரத்தின்  வெளிப்பாடுதான்.ஐரோப்பா வந்த தமிழர்கள் எல்லாம்  தம் கலாச்சாரத் நாய்கலாச்சாரம் என்று இங்கு வரவில்லை.  

ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் எமது கலாச்சாரம். திருமணம் எனும் பெயரில் பலருடன் கூத்தடிக்கும் கலாச்சாரத்தை நாய் கலாச்சாரம் என்று கூறாமல் அதி உன்னத வரலாற்று நிகழ்வு என்றா கூற முடியும்.
 வயது முதிர்ந்த ஐரோப்பியர்களே தமது இளம் சமுதாயத்தின் கலாச்சார நடவடிக்கைகளை பார்த்து வேதனையுடன் புலம்புகின்றார்கள்.
இவருக்கு பழையன கழிதலும் புதியன புகுதலுமாம். ஒரு வேளை காருக்கு உதிரிப்பாகங்கள் மாற்றுவதை சொல்கின்றாரோ???? 😜

1 hour ago, குமாரசாமி said:

ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் எமது கலாச்சாரம். திருமணம் எனும் பெயரில் பலருடன் கூத்தடிக்கும் கலாச்சாரத்தை நாய் கலாச்சாரம் என்று கூறாமல் அதி உன்னத வரலாற்று நிகழ்வு என்றா கூற முடியும்.
 வயது முதிர்ந்த ஐரோப்பியர்களே தமது இளம் சமுதாயத்தின் கலாச்சார நடவடிக்கைகளை பார்த்து வேதனையுடன் புலம்புகின்றார்கள்.
இவருக்கு பழையன கழிதலும் புதியன புகுதலுமாம். ஒரு வேளை காருக்கு உதிரிப்பாகங்கள் மாற்றுவதை சொல்கின்றாரோ???? 😜

அப்படியானால் தமிழ் கடவுள் முருகன் சொல்லி தந்த‍து நாய்கலாச்சாரமா?  அந்த கோவிலுக்கு போய் தான் கலாச்சாரத்தை பாதுகாக்கவேண்டும் என்று நீங்கள் தானே சொன்னீர்கள். கிருஷ்ன பரமாத்மா  பல கோபியரோடு கும்மாளம் கொட்டியது நாய் கலாச்சாரமா? பண்டை தமிழ் மன்னர்கள் ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பல மனைவியர் இருந்தனர் அவர்கள் எல்லாம் நாய்கலாச்சாரத்திலா இருந்தார்கள்? 

மகா பாரத‍த்தில் திளெபதை 5 கணவர்களை  அதை விட வேறு பலருக்கு குழந்தை பெற்றாள் என்று முன்மாதிரி காட்டப்படுகிறதே இந்து கலாச்சாரத்தில் அது நாய்கலாச்சாரமா?  
 

உங்களைப்  போல எப்போது  பார்தாலும்  தாங்கள் உசத்தி என்று தமக்மகுள்ளே மட்டும் மனப்பால் குடித்துக்கொண்டு அடுத்தவனை மட்டமானவன் என்று கேலி பண்ணும் மனப்பாங்கால் தான் தமிழருக்கு சொந்த நாடு கூட இல்லாமல் உலகெங்கும் பிச்சை எடுக்கவேண்டிய நிலை.  ஒண்ட வந்த இடத்து மக்களின் கலாச்சாரத்தையே திட்டி தீர்ககும் கேவலமான கலாச்சாரம்  

உங்களை போன்றவர்கள் தொண்டை கிழிய கத்தினாலும் காலம் மாற மாற புதிய மாறுதல்கள் வருவது உலக இயற்கை. 

 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் எமது கலாச்சாரம். திருமணம் எனும் பெயரில் பலருடன் கூத்தடிக்கும் கலாச்சாரத்தை நாய் கலாச்சாரம் என்று கூறாமல் அதி உன்னத வரலாற்று நிகழ்வு என்றா கூற முடியும்.

ஒரு கதையில் படித்தது..

“ஒரு நாய் ஒருநாளைக்கு எப்டியும் பத்தாயிரம் இருபதாயிரம் முத்தம் குடுத்திரும். அது பாக்கிற எல்லாத்தையும் முத்தம் குடுத்திட்டே இருக்கு. ஒரு விஷயம் என்னன்னு பாக்கணும்னா முத்தம். அது பிடிக்கலைன்னா இன்னொரு முத்தம். பிடிச்சிருந்தா முத்தத்தோட முத்தம்… நாயோட வாழ்க்கையே முத்தம் குடுக்கிறதுதான்… காதலை நாய் மாதிரி தெரிஞ்ச எந்த தெய்வம் இருக்கு? நாய் காதலிலே அப்டியே திளைச்சிட்டிருக்குல்ல?”

 

“நீ நாய்க்க வாலை பாத்திருக்கியா? ஆடிக்கிட்டே இருக்கும். மனசிலே அன்பை வச்சுகிட்டு அதை காட்டத்தெரியாம இருக்கானுக மனுஷனுங்க. நாய் அப்டி இல்லை. மனசிலே அன்பிருந்தா வால் டான்ஸ் ஆட ஆரம்பிச்சிரும்… அன்பு அப்டியே துள்ளிகிட்டே இருக்கும்… அத்தனை அன்பை வேற எங்க அப்டி கண்ணாலே பாத்துக்கிட முடியும்?”

 

“நாய்க்குள்ள காமம் வேற எந்த உசிருக்கு இருக்கு? மனுசனெல்லாம் எங்க காமத்தை அறிஞ்சிருக்கான்? பாதிபேருக்கு பயம், மிச்சபேருக்கு வெக்கம். ரெண்டும் இல்லாதவனுக்கு சுயநலம். தோசைக்கு மாவூத்துதது மாதிரி ஊத்திட்டு போறான்… எங்கிட்டு நெறைய? அவளுக்கு நெறைஞ்சாத்தானே அவனுக்கு நெறையும்? நாயை பாரு,நாய் கொளுவிக்கிட்டுதுன்னா முச்சந்தியானாலும் மெய்மறந்து அப்டியே நின்னுட்டிருக்கும். அப்டியே ஓடும் சாடும். நிறைஞ்ச பிறவுதான் விடும்…”

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.