Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். மக்களே அவதானம்- சுமந்திரன் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக புத்திஜீவிகள் எச்சரிக்கை!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மக்களே அவதானம்- சுமந்திரன் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக புத்திஜீவிகள் எச்சரிக்கை!!

இம்முறை தேர்தலில் சுமந்திரனையிட்டு யாழ் தமிழ் மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று யாழ். பல்கலைக்கழக புத்திஜீவிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

இந்தவிடயம் தொடர்பாக அவர்கள் துண்டுப்பிரசுரம் ஒன்றையும் யாழ். குடா முழுவதும் விநியோகித்துள்ளார்கள்.

அந்த துண்டுபிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அன்பார்ந்த யாழ் மக்களே!

இம்முறை நாடாளுமன்ற தேர்தல் என்பது வழமைபோன்ற ஒரு தேர்தல் அல்ல. தமிழர்களாகிய நாங்கள் மிக மிக அவதானமாகச் செயற்பட்டேயாக வேண்டிய ஒரு தேர்தல்.

சீனாவின் பக்கம் முழுவதுமாகவே சென்றுவிட்டுள்ள ஸ்ரீலங்காவை வழிக்கொண்டு வருவதற்கு தமிழ் மக்களின் ஆதரவை சர்வதேச சமூகம் வேண்டி நிற்கும் தருணத்தில் நடைபெறுகின்ற முக்கியமான ஒரு தேர்தல்.

தமிழ் மக்கள் மிகவும் சிந்தித்து தமது தலைமைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டிய ஒரு காலம் இது.

யார் தமிழ் மக்களின் தலைவராக வேண்டும் என்பது ஒரு பக்கம் இருக்க, யார் யாரெல்லாம் தமிழ் மக்களின் தலைவராக வரக்கூடாது என்பதில் தமிழ் மக்கள் மிக மிக அவதானமாக இருக்கவேண்டிய சந்தர்ப்பம் இது.

அந்தவகையில் சுமந்திரன் என்ற நபர் விடயத்தில் யாழ் மக்கள் மிகவும் அவதானமாகச் செயற்படவேண்டும் என்று இந்தப் பிரசுரத்தின் ஊடாக எச்சரிக்கை விடுக்கின்றோம் என்று அப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

யாழ் மக்கள் எதற்காக சுமந்திரனுக்கு வாக்களிக்கக்கூடாது என்றும் பல விடயங்கள் அந்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, உடையார் said:

இம்முறை தேர்தலில் சுமந்திரனையிட்டு யாழ் தமிழ் மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று யாழ். பல்கலைக்கழக புத்திஜீவிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

இது என்ன கோதாரி
சுமந்திரன் வரப் போகிறார் என்றால் ஏதோ புயல் சூறாவளி வாற மாதிரி வெருட்டுறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏதோ புயல் சூறாவளி வாற மாதிரி வெருட்டுறாங்கள்

அதுகளின் அழிவிலிருந்தும் மீண்டெழுந்து விடலாம். இதனிடம் அகபட்டால் மீட்சி கிடையாது என்று சொல்லுகினம், எச்சரிக்கினம். 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, satan said:

அதுகளின் அழிவிலிருந்தும் மீண்டெழுந்து விடலாம். இதனிடம் அகபட்டால் மீட்சி கிடையாது என்று சொல்லுகினம், எச்சரிக்கினம். 

செங்கம்பளம் விரித்தது நாங்க தானே?
எமது மக்களின் பலவீனத்தால் பாராளுமன்று போனவர்களுக்கு எங்கே அடித்தால் எங்கே வலிக்கும் என்று நன்றாகவே கற்றறிந்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களையும் திருத்த முடியாது, அவர்களையும் திருத்த முடியாது. எழுபது ஆண்டுகளாக ஒரே குதிரையில் சவாரி செய்கிறோம். குதிரை தேய்ந்தாலும் மாற்ற மாட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, satan said:

அதுகளின் அழிவிலிருந்தும் மீண்டெழுந்து விடலாம். இதனிடம் அகபட்டால் மீட்சி கிடையாது என்று சொல்லுகினம், எச்சரிக்கினம். 

சு(ம்)மா நச்சின்னு...

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, satan said:

எங்களையும் திருத்த முடியாது, அவர்களையும் திருத்த முடியாது. எழுபது ஆண்டுகளாக ஒரே குதிரையில் சவாரி செய்கிறோம். குதிரை தேய்ந்தாலும் மாற்ற மாட்டோம்.

மிகச்சரியான கருத்து - 70 வருட குதிரைகள்: 

  • இந்தியக்குதிரை
  • தமிழரசுக்கட்சி குதிரை
  • சுயநிர்ணய உரிமை குதிரை - அடங்காத்தமிழர் சுந்தரலிங்கத்தின் ஈழத்துடன் ஆரம்பமானது.

மாற்றுக்குதிரைகள் களத்தில்:

  • சீனக்குதிரை
  • சிங்களக்கட்சி குதிரை
  • பொருளாதார அபிவிருத்தி உரிமை குதிரை

வேறு குதிரைகள் உண்டா?

59 minutes ago, ஈழப்பிரியன் said:

எமது மக்களின் பலவீனத்தால் பாராளுமன்று போனவர்களுக்கு எங்கே அடித்தால் எங்கே வலிக்கும் என்று நன்றாகவே கற்றறிந்துள்ளனர்.

தமிழின உரிமைகளை அடையும் நோக்கில் ஏற்பட்ட அனுபவம், வரலாற்றிலிருந்து கற்றுக்கொண்டவர்கள் தவறுகளை திருத்தி, களைகளை/தடைகளை அகற்றி இலக்கு நோக்கி பயணிப்பர்.

அப்படிப்பட்டவர்கள் வெருளிகளும், எடுபிடிகளும் காட்டும் பூச்சாண்டிகளுக்கு பயப்படமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனையும் யாழ் நகர பிதா ஆர்னல்ட்டையும் எக்காரணம் கொண்டும் பதவிகளுக்கு வர விடக் கூடாதென்று இந்திய BJP அரசு மிகக் கடுமையாக கூறியுள்ளது. அதனை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் சம்பந்தரும் மாவையும் முழித்துக் கொண்டு நிற்கிறார்கள் என Mக உறுதியாகத் த்ர்ரிய வருகிறது. 😡

சுமந்திரனின் முதிர்ச்சியற்ற கருத்துக்கள் கோபமூட்டுபவையாக இருந்தாலும் இந்திய BJP அரசின் மிக மோசமான மதவாத விசத்தை இலங்கைத் தமிழர்களிடையே புகுத்த முனைவது தமிழரை மேலும் பலவீனப்படுத்தவே உதவும். 😡

யாழ் பல்கலைக் கழக புத்திசீவிகள் என்கின்ற தலைப்பில் வெளிவந்துள்ள பிரசுரங்கள் மேற்கூறியவற்றின் தொடர்ச்சியே. ☹️

எனக்குளள கேள்வி என்னவென்றால் யாழ் பல்கலைக் கழகத்தில் புத்திசீவிகள் யாராவது இருக்கின்றனரா 🤔

அப்படி யாரேனும் இருந்தால் எப்போது தொடக்கம் பசைவாளியுடன் போஸ்ரர் ஒட்ட வெளிக்கிட்டவை 🤔

பசை வாளியுடன் போஸ்ரர் ஒட்டத் தொடங்கியவுடனேயே அவர்கள் போஸ்ரர் சீவிகளாக மாறிவிட்டனர். 😂😂😂

2 minutes ago, Kapithan said:

சுமந்திரனையும் யாழ் நகர பிதா ஆர்னல்ட்டையும் எக்காரணம் கொண்டும் பதவிகளுக்கு வர விடக் கூடாதென்று இந்திய BJP அரசு மிகக் கடுமையாக கூறியுள்ளது. அதனை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் சம்பந்தரும் மாவையும் முழித்துக் கொண்டு நிற்கிறார்கள் என Mக உறுதியாகத் த்ர்ரிய வருகிறது.

இந்திய அரச பயங்கரவாதிகளின் தற்போதைய செல்லப்பிள்ளை சுமந்திரன் என்பதே தற்போதைய எதார்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kapithan said:

எனக்குளள கேள்வி என்னவென்றால் யாழ் பல்கலைக் கழகத்தில் புத்திசீவிகள் யாராவது இருக்கின்றனரா 🤔

புத்திஜீவிகள் - புத்தியுள்ள உயிர்கள் என்பதை குறிக்கும் சமஸ்கிரதம் கலந்த வார்த்தை.

புத்திசீவிகள் - புத்தியை வெட்டி எறிபவர்களை குறிக்கும் சுத்தமான தமிழ் வார்த்தை.

2 hours ago, கற்பகதரு said:

புத்திசீவிகள் - புத்தியை வெட்டி எறிபவர்களை குறிக்கும் சுத்தமான தமிழ் வார்த்தை.

அடிப்படை தமிழ் விளக்கம் உள்ளவர்ளுக்கு ஒரு சொல் பயன்படுத்தப்படும் இடத்தை பொறுத்து புத்தியை தீட்டியவர் எனவும் அர்த்தப்படும் என புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கற்பகதரு said:

2 hours ago, Gowin said:

அடிப்படை தமிழ் விளக்கம் உள்ளவர்ளுக்கு ஒரு சொல் பயன்படுத்தப்படும் இடத்தை பொறுத்து புத்தியை தீட்டியவர் எனவும் அர்த்தப்படும் என புரியும்.

கொம்பு சீவுதல், கம்பு சீவுதல் என்ற பதங்களில் கொம்பு, கம்பு ஆகியவற்றின் பாகங்களை வெட்டி அகற்றுவதன் மூலம் மீதமுள்ள கொம்பு அல்லது   கம்பு கூர்மையாக்கப் படுவதை சீவுதல் என்ற பதம் குறிக்கிறது. மூளையும், அறிவும் கூர்மையாக்கப்படுவது,  மூளையில் அதிக அறிவை சேர்த்துக் கொள்வதாலும், அவ்வாறு அறிவு சேர்வதால் மூளையில் உள்ள கலங்களின் கனவளவு அதிகரிப்பதாலும் நடைபெறுகிறது. ஆகவே, புத்தி, அறிவு, மூளை பற்றி  தெரிந்தவர்கள், புத்தியை சீவி கூர்மையாக்கலாம் என்று கருத மாட்டார்கள். நீங்கள் குறிப்பிட்டதன் படி, சீவுதல் என்ற சொல் புத்தியை பொறுத்தளவில்,  இந்த இடத்தில் புத்தியை  குறைப்பதாகவே பொருள்படும். 

வாக்களிக்கும் முறையில் தவறு நிகழுமென்றால் சுமந்திரன் வருவதை தவிர்க்க இயலாது. வாக்களிக்கும் ஒவ்வொருவரும் விருப்பு வாக்கையும் வாக்காளருக்கு அளிக்கவேண்டும். தவறியவர்களின் விருப்பு வாக்குகள் முதல் மூன்று நபர்களுக்கும் சேர்க்கப்படும். வீடு சின்னத்திற்கு வாக்களித்துவிட்டு விருப்பு வாக்கை போடாமல் வந்தால் அந்த விருப்பு வாக்குகள் முறையே முதல் மூவருக்கும் சேரும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, போல் said:

இந்திய அரச பயங்கரவாதிகளின் தற்போதைய செல்லப்பிள்ளை சுமந்திரன் என்பதே தற்போதைய எதார்த்தம்.

நிச்சயமாக இல்லை. சுமந்திரன் மேற்கின் முகவர். அவரை வெளியேற்ற இந்தியா ஒற்ரைக் காலில் நிற்பதற்கு இது மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்று. சம்பந்தரின் இடத்தை நிரப்பிவிடுவார் என்கின்ற அச்சம் இந்தியாவுக்கு மட்டுமல்ல,  அப்பன் அப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும் என பார்த்துக்கொண்டிருக்கும் எமது அரசியல் வெற்று வேட்டுக்களுக்கும் உண்டு. ☹️

சம்பந்தரின் இடத்தை சுமந்திரன் நிரப்புவாராகின் இந்தியாவின் பிடி இல்லாது போகும் அப்பாயம் உண்டு. இந்தியா இதனை விரும்பாது. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாழ் அரியன் said:

வாக்களிக்கும் முறையில் தவறு நிகழுமென்றால் சுமந்திரன் வருவதை தவிர்க்க இயலாது. வாக்களிக்கும் ஒவ்வொருவரும் விருப்பு வாக்கையும் வாக்காளருக்கு அளிக்கவேண்டும். தவறியவர்களின் விருப்பு வாக்குகள் முதல் மூன்று நபர்களுக்கும் சேர்க்கப்படும். வீடு சின்னத்திற்கு வாக்களித்துவிட்டு விருப்பு வாக்கை போடாமல் வந்தால் அந்த விருப்பு வாக்குகள் முறையே முதல் மூவருக்கும் சேரும்.

தனிப்பட்ட ரீதியில், சுமந்திரனின் முதிர்ச்சியற்ற பேச்சுக்களை நான் விரும்பாவிட்டாலும் , தற்போதைய சூழலில் சுமந்திரனுக்கே எனது ஆதரவு. 🙂

தற்போதைய நிலையில் தமிழ் அரசியற் கட்சிகளிடையே ஆழுமை மிக்க வேறு தெரிவுகள் எதுவும் இல்லை. ☹️

3 hours ago, கற்பகதரு said:

கொம்பு சீவுதல், கம்பு சீவுதல் என்ற பதங்களில் கொம்பு, கம்பு ஆகியவற்றின் பாகங்களை வெட்டி அகற்றுவதன் மூலம் மீதமுள்ள கொம்பு அல்லது   கம்பு கூர்மையாக்கப் படுவதை சீவுதல் என்ற பதம் குறிக்கிறது. மூளையும், அறிவும் கூர்மையாக்கப்படுவது,  மூளையில் அதிக அறிவை சேர்த்துக் கொள்வதாலும், அவ்வாறு அறிவு சேர்வதால் மூளையில் உள்ள கலங்களின் கனவளவு அதிகரிப்பதாலும் நடைபெறுகிறது. ஆகவே, புத்தி, அறிவு, மூளை பற்றி  தெரிந்தவர்கள், புத்தியை சீவி கூர்மையாக்கலாம் என்று கருத மாட்டார்கள். நீங்கள் குறிப்பிட்டதன் படி, சீவுதல் என்ற சொல் புத்தியை பொறுத்தளவில்,  இந்த இடத்தில் புத்தியை  குறைப்பதாகவே பொருள்படும். 

ஐயா,

எல்லாவற்றிற்கும் எல்லா சந்தர்ப்பங்களிலும்  இலக்கணப் பொருத்தம் பார்த்துக் கொண்டா இருக்கப் போகிறீர்கள் ? நான் கூறியதன் அர்த்தம் எல்லோருக்கும் புரிந்தால் அதுவே ஒரு மொழியின், உரையாடலின் வெற்றிதானே. 👍

2 hours ago, Kapithan said:

ஐயா,

எல்லாவற்றிற்கும் எல்லா சந்தர்ப்பங்களிலும்  இலக்கணப் பொருத்தம் பார்த்துக் கொண்டா இருக்கப் போகிறீர்கள் ? நான் கூறியதன் அர்த்தம் எல்லோருக்கும் புரிந்தால் அதுவே ஒரு மொழியின், உரையாடலின் வெற்றிதானே. 👍

தமிழ், இலக்கணம் இழந்து போவதில் நீங்களும் பங்காளியாகலாமா? சிறிலங்கா அரசின் கொச்சைத்தமிழும், இந்திய அரசின் ஹிந்தி, ஆங்கிலம் கலந்த தமிழும் அர்த்தம் புரியக்கூடியதாக இருப்பதால், நாளடைவில், அடுத்த தலைமுறைக்கு அவையே தமிழாகி விடலாமா? தமிழ் தன் இலக்கணமும் இலக்கியமும் சிறந்து வாழத்தானே நமது பங்களிப்பு அமைய வேண்டும்? நான் முப்பது வருடங்களுக்கு முன் இணையத்தில் எழுதியவற்றை இன்றைக்கும் வாசகர்கள் பலர் படிக்கிறார்களே? நூறு வருடங்களின் பின் உங்கள் இன்றைய இணையத் தமிழே அடுத்த தலைமுறை அறியும் தமிழ். தமிழை வாழ வைப்போம்.

வாழ்க தமிழ்!

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கற்பகதரு said:

உங்கள்  இனப்பற்றிற்கு தலை வணங்குகின்றேன்👍

தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, கற்பகதரு said:

நான் அதனை எழுதும்போது இப்படியொரு பக்கத்தை யோசித்தேன். ஆனால் அதனை இலக்கண சுத்தமாக யோசித்து எழுதவில்லை. ☹️

சிறந்த முறையில் எழுத முயற்சிக்கிறேன். அறிவுரைக்கு நன்றி. 👍

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

உங்கள்  இனப்பற்றிற்கு தலை வணங்குகின்றேன்👍

தொடருங்கள்

4 hours ago, Kapithan said:

நான் அதனை எழுதும்போது இப்படியொரு பக்கத்தை யோசித்தேன். ஆனால் அதனை இலக்கண சுத்தமாக யோசித்து எழுதவில்லை. ☹️

சிறந்த முறையில் எழுத முயற்சிக்கிறேன். அறிவுரைக்கு நன்றி. 👍

நன்றி விசுகு, காபிதன்

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kapithan said:

சுமந்திரனையும் யாழ் நகர பிதா ஆர்னல்ட்டையும் எக்காரணம் கொண்டும் பதவிகளுக்கு வர விடக் கூடாதென்று இந்திய BJP அரசு மிகக் கடுமையாக கூறியுள்ளது. அதனை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் சம்பந்தரும் மாவையும் முழித்துக் கொண்டு நிற்கிறார்கள் என Mக உறுதியாகத் த்ர்ரிய வருகிறது. 😡

சுமந்திரனின் முதிர்ச்சியற்ற கருத்துக்கள் கோபமூட்டுபவையாக இருந்தாலும் இந்திய BJP அரசின் மிக மோசமான மதவாத விசத்தை இலங்கைத் தமிழர்களிடையே புகுத்த முனைவது தமிழரை மேலும் பலவீனப்படுத்தவே உதவும். 😡

யாழ் பல்கலைக் கழக புத்திசீவிகள் என்கின்ற தலைப்பில் வெளிவந்துள்ள பிரசுரங்கள் மேற்கூறியவற்றின் தொடர்ச்சியே. ☹️

எனக்குளள கேள்வி என்னவென்றால் யாழ் பல்கலைக் கழகத்தில் புத்திசீவிகள் யாராவது இருக்கின்றனரா 🤔

அப்படி யாரேனும் இருந்தால் எப்போது தொடக்கம் பசைவாளியுடன் போஸ்ரர் ஒட்ட வெளிக்கிட்டவை 🤔

பசை வாளியுடன் போஸ்ரர் ஒட்டத் தொடங்கியவுடனேயே அவர்கள் போஸ்ரர் சீவிகளாக மாறிவிட்டனர். 😂😂😂

இங்கு மதத்தை காவித் திரிவது நீங்கள் தான் ...இவர்கள் இருவரும் தேர்தலில் தோத்தால், கிறிஸ்தவர்கள் என்பதால் தோத்திட்டார்கள் என்று சொல்லுவீர்கள்...கவலைப்படாதீர்கள் சும் எப்படியும் பின் கதவால் உள்ளே போய் விடுவார் 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

இங்கு மதத்தை காவித் திரிவது நீங்கள் தான் ...இவர்கள் இருவரும் தேர்தலில் தோத்தால், கிறிஸ்தவர்கள் என்பதால் தோத்திட்டார்கள் என்று சொல்லுவீர்கள்...கவலைப்படாதீர்கள் சும் எப்படியும் பின் கதவால் உள்ளே போய் விடுவார் 

அக்கா அதிகம் கோபப்படாதீர்கள், உடல் நலத்திற்கு கேடு. 😀

விடயங்களைக் கூறும்போது அதில் உண்மை இருக்கின்றதா இல்லையா என்பதைத்தான் கவனிக்க வேண்டும். கூறுபவர் நல்லவரா கெட்டவரா என்று பார்ப்பது முறையல்ல. 👍

தவிர, எனக்கு சமயங்களைப் பற்றி எந்த அக்கறையுமில்லை. எனது நண்பர்களில் 90%ற்கும் மேற்பட்டவர்கள் தீவிர சைவ சமயத்தவர்கள். அதைவிட எனது குடும்பத்தில் இருவர் சைவ சமயத்தவர்கள். அவர்களில் ஒருவர் திருகோணமலையிலுள்ள கோவில் ஒன்றின் தர்மகத்தா. எங்கள் வாழ்க்கையில் சமயம் குறுக்கிட்டதேயில்லை. அப்படி இருக்க நான் சமயப் காவிக்கொண்டு திரிகிறேன் எனபது அபத்தம். 😀😆

எனக்குள்ள தெரிவுகள் 2

1) கத்தோலிக்கனாக வாழ்வது

2) தமிழனாக வாழ்வது

எனது தெரிவு தமிழனாக வாழ்வது. 👍

இவற்றை நான் கூறுவதற்குக் காரணம் பெறுமதிமிக்க உங்கள் / எங்கள் நேரத்தை விதண்டாவாதங்களில் வீணடிக்க வேண்டாம் என்கின்ற காரணத்திற்காகவே. 👍

எனவே எனது கூற்றில் பிழை இருந்தால் அதனைக் கூறுங்கள். தாராளமாக விவாதிப்போம். 👍

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kapithan said:

நேரம் பொன்னானது தான் ...நான் இந்த செய்தியில் உண்மை இருக்கும் என்று நம்பவில்லை ...ஆனால் உங்கள் முதல் கருத்தில் மதவாதத்தை புகுத்தியிருக்க வேண்டிய தேவையில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நேரம் பொன்னானது தான் ...நான் இந்த செய்தியில் உண்மை இருக்கும் என்று நம்பவில்லை ...ஆனால் உங்கள் முதல் கருத்தில் மதவாதத்தை புகுத்தியிருக்க வேண்டிய தேவையில்லை 

இரதி அக்கா,

இதில் மதவாதத்தைப் புகுத்தவேண்டிய தேவை எங்கே வந்தது. சம்பந்தரின் கட்சியைச் சேர்ந்த ஆட்களில் எனக்கு நல்ல நம்பிக்கையானவர்கள் உள்ளனர். அவர்களூடாக எனக்குக் கிடைக்கப் பெற்ற மிகவும் நம்பிக்கயான தகவல்கள் இவை. 

இங்கே இவற்றை நான் வெளிப்படுத்துவதற்கான காரணம் யாழ் கள உறவுகள் தெரிந்துகொள்ளட்டும் என்ற நோக்கம் மட்டுமே. 

என்னால் கூறப்பட்டவை உண்மை என்று எனக்கும் வேறுபலருக்கும் தெரியும். தமிழர் அரசியலைக் கூர்ந்து கவனிப்பவர்கள் இதனை மிக இலகுவாக உணர்ந்துகொள்ள முடியும். 

BJP யின் இந்திய அரசின் வழிகாட்டுதலின் கீழ் எமது அரசியற் செயற்பாடுகள் நடைபெறுமானால் இருக்கின்ற கந்தல் கோவணமும் இல்லாமல் போகும் நிலைதான் எதிர்காலத்தில் ஏற்படும்.  

ஏற்கனவே நாம் வடக்கு / கிழக்காகப் பிரிந்துவிட்டோம் BJP யின் - இந்திய அரசின் வழிகாட்டுதலின் கீழ் நாம் அரசியல் செய்யவேண்டிய நிலை ஏற்படுமானால் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்க் கிறீத்துவர்கள் எம்மிடையே இருந்து அன்னியப்படுத்தப்பட்டு பிரிக்கப்படும் நிலைதான் ஏற்படும். 

ஞானமுள்ளவர்கள் இதனைப் புரிந்து கொள்வார்கள். 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனின் சர்ச்சைக் கருத்துகளுக்கு பதிலளிக்கிறார் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.