Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் தனிநாடு கோரினால் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடும்.! தேரர்கள் எச்சரிக்கை..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் தனிநாடு கோரினால் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடும் – தேரர்கள் எச்சரிக்கை..!

gana.jpg

சமஷ்டி என்றால் அது பிரிவினை, தனிநாடுதான். தமிழர்கள் அதை மீண்டும் கோரினால், வடக்கு, கிழக்கில் இரத்த ஆறுதான் ஓடும். அரசு வழங்கும் தீர்வை ஏற்றுக்கொண்டு தமிழர்கள் பேசாமல் வாய்மூடி அமைதியாக இருக்கவேண்டும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், ராவண பலய அமைப்பின் பொதுச்செயலாளர் இத்தானந்தே சுகத தேரர், தேசிய பௌத்த புத்திஜீவிகள் சங்க சபையின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை நேற்றுமுன்தினம் வெளியிட்டது. சமஷ்டி அடிப்படையிலான தன்னாட்சியே தீர்வு என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலே தேரர்கள் மேற்கண்டவாறு கூறினர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

சமஷ்டி என்றால் பிரிவினை. அது தனிநாடு என்றுதான் அர்த்தம். அதாவது இந்தச் சமஷ்டி தீர்வு இலங்கையைப் பிளவுபடுத்தும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. நீதிமன்ற வியாக்கியானத்தையும் அதன் தீர்ப்பையும் தூக்கிக் குப்பையில் வீசுங்கள்.

தமிழர்களுக்கு சமஷ்டி வழியில் தீர்வு வழங்க நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். தனிநாடு கோரி மீண்டும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறுதான் ஓடும். மீண்டும் அப்படியான ஒரு நிலைமை ஏற்பட நாம் விரும்பவில்லை.

அரசு வழங்கும் தீர்வைத்தான் தமிழர்கள் ஏற்கவேண்டும். அதைவிடுத்து மீண்டும் ஓர் இருண்ட யுகத்துக்குள் செல்ல வேண்டாம் என்று தமிழர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

ராஜபக்சக்களின் இந்த ஆட்சிக்காலத்தில் அரசுடனும் சிங்கள மக்களுடனும் ஒன்றிணைந்து பயணிக்க தமிழ் மக்கள் முன்வர வேண்டும். இது ஒரு சிங்கள பௌத்த நாடு. எனவே, தமிழர்கள் தனி வழியில் நிற்காமல் சிங்கள மக்களுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம்.

அப்போதுதான் சிங்கள மக்கள் விரும்பும் தீர்வைத் தமிழர்கள் பெற்றுக்கொள்ள முடியும். இல்லையேல் தீர்வு என்பது தமிழர்களுக்கு எட்டக்கனியாகவே இருக்கும். பிரபாகரனின் சிந்தனையில் செயற்படுவதை தமிழ் மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்பில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளமையை சவாலுக்குட்படுத்தி சிங்கள அமைப்புக்களால் கடந்த காலங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சமஷ்டி பிரிவினை அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.vanakkamlondon.com/singala-therar-20-07-2020/

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவே இது உனக்குச் சொல்லப்பட்ட சேதி, தமிழருக்கல்ல. 😂

  • கருத்துக்கள உறவுகள்

தங்களை மொட்டை அடித்துக்கொண்டு வாழும் பிக்குகள் தங்கள் நாட்டையும் மொட்டைபோடாது விடமாட்டார்கள். இந்த மொட்டைகள் என்று அரசியலைவிட்டு ஒதுங்குகிறார்களோ அன்றுதான் சிறீலங்காவும் உருப்படும். இனி ஒரு போர் தமிழருடன் சிங்களத்திற்கு ஏற்பட்டால் எந்த ஒரு நாடும் சிங்களத்தின் உதவிக்கு வருவது சந்தேகமே.   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

தங்களை மொட்டை அடித்துக்கொண்டு வாழும் பிக்குகள் தங்கள் நாட்டையும் மொட்டைபோடாது விடமாட்டார்கள். இந்த மொட்டைகள் என்று அரசியலைவிட்டு ஒதுங்குகிறார்களோ அன்றுதான் சிறீலங்காவும் உருப்படும். இனி ஒரு போர் தமிழருடன் சிங்களத்திற்கு ஏற்பட்டால் எந்த ஒரு நாடும் சிங்களத்தின் உதவிக்கு வருவது சந்தேகமே.   

1956இல் தனிச் சிங்களச் சட்டத்துக்கெதிரான போராட்டத்தின் தொடர்சசியாக 1957இல் பண்டா - செல்வா ஒப்ந்தம்  உருவானது. அதனை 1958இல் கிழித்தெறியச் செய்ததில் "பிக்கு பெரமுன" காத்திரமான பங்கு வகித்தது என்பது வரலாறு.  சமஷ்டியை நோக்கி இனி எந்தவொரு சிங்கள அரசும் செல்லாது. செல்ல வேண்டிய தேவையும் இல்லை. இந்தநிலையின் இந்தப் பிக்குகள் போடுற ஆட்டம் தமிழினத்தை அச்சுறுத்தும் நோக்கிலானது. 

அப்படி போரொன்று வருமாயின் அது இநதிய மேற்குலகின் தேவைகருதியதாக மட்டுமே இருக்கும். ஆனால் அப்போதும் பலிக்கடாவாக்கப்படுவோமா அல்லது பயன்பெறுவோராவோமா என்பது  சந்தேகமே.

இலங்கைத் தீவின் சாபக்கேடு  மகிந்தன்  சங்கமித்திரை போன்றோர்  வந்ததும் புத்த மதம் பரவியதுமே. இந்தத் தவறு நடைபெறாவிடின் தீவு அமைதியாக இருந்திருக்கும். உலகிலே இலங்கை சைவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடாக இருந்திருக்கும்.  மொழி தொடர்பான பிணக்குகள் வந்திருந்தாலும் இப்படிப் புரையோடி இருக்காது. நாட்டில் அமைதியேற்பட கோத்பாய முதலில் செய்யக்கூடியது இந்த பெளத்த காவிகளுக்குப் புனர்வாழ்வளிப்பதே. வரலாறு என்ன? எப்போது மகிந்தனென்ற துறவி இலங்கைத் தீவுக்கு வந்தார்? அப்போது இலங்கையில் இருந்த மதம் எது? போன்ற விடயங்கள் சொல்லிக் கொடுத்தால் நல்லது. 

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தமிழர்கள் தனிநாடு கோரினால் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடும் – தேரர்கள் எச்சரிக்கை..!

தனிநாடு கோரும்போது பொத்திக் கொண்டிருந்திட்டு இப்ப வந்து துள்ளிக் குதிக்கிறார்களே?

இப்ப யார் தான் தனிநாடு கேட்டார்கள்?

6 hours ago, Kapithan said:

இந்தியாவே இது உனக்குச் சொல்லப்பட்ட சேதி, தமிழருக்கல்ல. 😂

இந்த அறிக்கை விடச் சொன்னதே இந்தியா தான்.

எல்லாரும் ஒன்று செய்வம்; ஆளுக்கு ஒரு போத்தல் ரத்தம் இந்த பிக்குகளுக்கு கொடுப்போம்; அவர்கள் அதை ஊற்றி விளையாடட்டும்.

1 hour ago, ஈழப்பிரியன் said:

தனிநாடு கோரும்போது பொத்திக் கொண்டிருந்திட்டு இப்ப வந்து துள்ளிக் குதிக்கிறார்களே?

இப்ப யார் தான் தனிநாடு கேட்டார்கள்?

அது அவரின் பேரை கெட்டான் சிங்களவனுக்கு கோவணத்துக்குள்ள மூத்தா போன காலமாயிற்றே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தமிழர்கள் தனிநாடு கோரினால் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடும் – தேரர்கள் எச்சரிக்கை..!

தமிழர் தனிநாட்டை மறந்தாலும் மொட்டையள் மறக்காதுகள் போல கிடக்கு...

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு இரத்த ஆறு ஒன்றும் புதிசு கிடையாது. 1950 களில் இருந்து ஓடிக்கிட்டு தான் இருக்குது.

ஆனால்.. எனி ஒரு யுத்தம் வந்தால்.. இஸ்ரேல் பாணில் சிங்கள தேசத்தில் இரத்த ஆறு ஓடனும் இடங்கள் ஆக்கிரமிக்கப்படனும். இஸ்ரேல் தன் இருப்பை பாதுகாக்க.. பலஸ்தீன ஆக்கிரமிப்பை ஒரு ஆயுதமாகப் பாவிப்பது போல். 

தேசிய தலைவர் போல்.. நீதி தர்மம் என்று அதிகம் பார்க்கப் போனால்.. இப்படியான குள்ள நரிகளிடம் இருந்து எதையும் பெற முடியாது. 

யுத்தத்தின் வலியை தென்னிலங்கை உணராததன் விளைவே இது. புலிகளின் யுத்தக் கொள்கையின் தவறு அது. நீதி தர்மம் பார்த்தும் பயங்கரவாதப் பட்டம் தான் மிச்சம். 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் கூற்றினை  ஏளனமாகப் பார்த்துவிட்டுப் போக முடியவில்லை. அவர்கள் கூறுவது உண்மை. தனிநாடு கேட்டதற்காகவே இதுவரையில் குறைந்தது ஒன்றரை லட்சம் பேரைக் கொன்றிருக்கிறார்கள் அரச அதிகாரிகள், ராணுவத்தின் தளபதிகள், பிக்குகள் உற்பட பல சிங்களவர்கள் தமிழர்களுக்கு தொடர்ச்சியாக இதனை நினைவூட்டி வருவது நடக்கிறது. இன்னொரு முள்ளிவாய்க்கால் வரும், நந்திக்கடல் ஞாபகமிருக்கிறதா, இரத்த ஆறு ஓடும் என்று எல்லாமுமே 2009 இனவழிப்புப் போரினைத்தான் எமக்கு ஞாபகப்படுத்துகின்றன. 

இக்கூற்றுக்கள் இந்தியாவை நோக்கி வைக்கப்பட்டவையல்ல. மாறாக தமிழர்களை மட்டுமே நோக்கி , அச்சுருத்தும் வகையில் வைக்கப்படுபவை. தமிழரால் இவற்றை மெளனமாகக் கேட்டுக்கொண்டிருப்பதைவிட வேறு எதுவுமே செய்யமுடியாது.

இந்தியாவுக்கான எச்சரிக்கை என்று கூட இதனைப் பார்க்கமுடியாது. யுத்தத்தில் எவ்விலை கொடுத்தாவது புலிகளை அழித்துவிடவேண்டும் என்கிற நோக்கில் மட்டுமே செயலாற்றிய இந்தியா, அதன் பின்னரான விளைவுகளை நிச்சயமாக அறிந்தே இப்போரில் இறங்கியது. தமிழர்களின் உரிமைகள் முற்றாக அழிக்கப்பட்டு, ஒரு அடிமைநிலைக்குக் கொண்டுவரப்படுவார்கள், பெளத்த பேரினவாதம் தீவிரமாகும், நாடு சிங்கள மயமாக்கலினை நோக்கி நகரும் என்று எல்லாமுமே கணிக்கப்பட்ட பின்னரே இறுதியுத்தத்தில் இந்தியா இறங்கியது. ஆகவே, இன்று நடப்பது இந்தியாவை எதுவுமே செய்யப்போவதில்லை. தமிழரின் நலன் என்பதே இந்தியாவின் பிராந்திய நலனுக்கான மற்றும் அரசியல்வாதிகளின் சொந்தப் பழிவாங்கலுக்கான விடயம் என்றாகிவிட்டபின்னர் தமிழர் நலன்பற்றி இந்தியா நிச்சயம் கவலைப்படப்போவதில்லை. அப்படி உண்மையாகவே இந்தியாவுக்கு தமிழர் நலனில் அக்கறையிருந்தால் தான் 1987 இல் கொண்டுவந்த 13 ஆம் திருத்தச்சட்டம் சிங்கள இனவாதிகளால் 2005 இல் உடைத்தெறியப்பட்டபோது ஏதாவது செய்திருக்கும், ஆனால் அது வேடிக்கைதான் பார்த்தது.

எமக்கான நீதியும் கிடைக்கப்போவதில்லை, எமக்கான அதிகாரங்களும் கிடைக்கப்போவதில்லை, எமது நாடும் இனி எமக்கில்லை. 
புலிகளைப்பற்றியோ மாவீரர்களைப் பற்றியோ பேசினாலேயே விரோதிகளாகப் பார்க்கும் புதிய தமிழ்ச் சமூகம் உருவாகிவருகிறது. "உனது பிள்ளையை அனுப்புவியா சண்டைக்கு? ஊரில இருக்கிற சனத்திற்கு என்ன செய்யவேண்டும் எண்டு தெரியும், நீங்கள் சொல்லத் தேவையில்லை, அவர்களின் அரசியலை அவர்கள் செய்வார்கள், நீங்கள் ஒண்டும் புடுங்கவேண்டாம், சனம் படுகிற பாட்டில உங்களுக்கு உரிமையும், தனிநாடும் கேட்குதோ?" இப்படி பல வசவுகள், கேட்பவர்கள் அதே எமது தமிழர்கள்தான். புலிகள் பற்றி ஆதரவாகப் பேசுவதற்கே பயப்படும் சமூகத்தில், ஏளனமாகப் பார்க்கப்படும் மக்கள் கூட்டத்தில், இன்று அந்நியர்களாக வாழ்கிறோம். புலிகளுக்கு எதிரானவர்களை மக்கள் பார்த்த பார்வைகள் போய் இப்போது அதேபோன்ற பார்வைகள் அவர்களை இன்றுவரை ஆதரிக்கும் ஒரு சிலர்மீது விழுகிறது. படித்த கனவான்கள் மத்தியில் கூச்சப்படும் காட்டுமிராண்டிகளாக, பட்டிக்காடுகளாக நாம் பார்க்கப்படுவது தெரிகிறது. ஏன் இந்த நிலை? இவ்வளவுக்கும் புலிகள் செய்த தவறுகள் என்னவென்று புரியவில்லை. 

ஆனாலும், இந்தக் கனவான்களிடம் கேட்க என்னிடம் ஒரு கேள்வியிருக்கிறது.

சரி, நீங்கள் எல்லோரும் வெறுக்கும் புலிகளை அழித்துவிட்டீர்கள். இனி என்ன செய்வதாக உத்தேசம்? அழிந்துபோகும் எமது பண்பாடு, கலாசாரம், மொழி, தாயகம் என்று எதையாவது தக்கவைப்பதற்கு என்ன யோசனை வைத்திருக்கிறீர்கள்? எங்களின் வாய்களையெல்லாம் அடைத்துவிட்டீர்கள், நாம் இனிமேல் பேசக்கூடாது. இனி நீங்கள் பேசுங்கள், கேட்கலாம். உங்களின் யோசனைகளைச் சொல்லுங்கள். 

 

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. நீதிமன்ற வியாக்கியானத்தையும் அதன் தீர்ப்பையும் தூக்கிக் குப்பையில் வீசுங்கள்.

வீசி விடுங்கள். நாங்கள் தடுக்கவில்லை.  நாங்கள் அதை  எப்பவோ வீசி எறிந்ததனாற்தான் சர்வதேச விசாரணையை கேக்கிறோம். 

 

21 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சமஷ்டி பிரிவினை அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீதி மன்றங்களை,  தவறான தீர்ப்புகளை அறிவிக்க செய்தவர்கள் இதுவும் தவறானது என்று கருதுகிறார்கள். அவர்கள் சந்தேகப்படுவதில் தப்பில்லை. பிழையான தீர்ப்புகளை அளித்த நீதிமன்றகளே அதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும்.  

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரஞ்சித் said:

சரி, நீங்கள் எல்லோரும் வெறுக்கும் புலிகளை அழித்துவிட்டீர்கள். இனி என்ன செய்வதாக உத்தேசம்? அழிந்துபோகும் எமது பண்பாடு, கலாசாரம், மொழி, தாயகம் என்று எதையாவது தக்கவைப்பதற்கு என்ன யோசனை வைத்திருக்கிறீர்கள்? எங்களின் வாய்களையெல்லாம் அடைத்துவிட்டீர்கள், நாம் இனிமேல் பேசக்கூடாது. இனி நீங்கள் பேசுங்கள், கேட்கலாம். உங்களின் யோசனைகளைச் சொல்லுங்கள். 

இதில் யோசனைக்கே இடமில்லை. சாதனை படைத்த பாடல் ஒன்று தமிழரிடம் உள்ளது, அது நீங்களும் நோக்கும் தமிழரிடம் கால காலமாக உள்ளது.

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டுவந்தான் ஒரு தோண்டி அதைக் கூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்தாண்டி". 😩

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.