Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டக்ளஸ் தேவானந்தாவின் கரங்கள் பலப்படுத்தப்படுவது அவசியம்! இந்து சமய மதகுருமார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்கள் பலப்படுத்தப்படுவது அவசியம் என இந்து சமய மதகுருமார் தெரிவித்துள்ளனர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று சந்தித்து கலந்துரையாடிய இந்து சமய மதகுருமார் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்கள்,

யுத்த காலத்தில் அழிந்த ஆலயங்களை புனரமைத்து இந்துக்களின் அடையாளத்தினை பேணிப் பாதுகாத்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்பதை வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது.

அமைச்சரை போன்று வேறு எந்த தரப்பினரும் இதுவரை செய்ததும் இல்லை எதிர்காலத்தில் செய்யப் போவதும் இல்லை.

இந்நிலையில், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்கள் பலப்படுத்தப்படுவது அவசியம் என அவர்கள் கூறியுள்ளனர்.

douglass_hindu_03.jpg

douglass_hindu_02.jpg

douglass_hindu_01.jpg

http://jaffnaboys.com/2020/07/26/16394/

இவரை ஆதரிப்பதில் தவறில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அட்றா.... சக்கை.  இந்து மத குருமாரும், அரசியலில் குதித்து விட்டார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Robinson cruso said:

இவரை ஆதரிப்பதில் தவறில்லை.

முதலில் தியட்டர் வாடகையை கட்ட சொல்லுங்க பாஸ்....

Just now, MEERA said:

முதலில் தியட்டர் வாடகையை கட்ட சொல்லுங்க பாஸ்....

நான் அவர் நல்லவர் என்று ஆதரிக்க சொல்லவில்லை. நிறைய தில்லுமுல்லுகள் உண்டு. அதில் இதுவும் ஒன்று. கொள்ளையடித்தாலும் சில அபிவ்ருத்தியாவது மனுஷன் செய்யும் எண்டுதான் அப்படி எழுதினேன். மற்றப்படி ஒன்றுமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

நான் அவர் நல்லவர் என்று ஆதரிக்க சொல்லவில்லை. நிறைய தில்லுமுல்லுகள் உண்டு. அதில் இதுவும் ஒன்று. கொள்ளையடித்தாலும் சில அபிவ்ருத்தியாவது மனுஷன் செய்யும் எண்டுதான் அப்படி எழுதினேன். மற்றப்படி ஒன்றுமில்லை. 

இந்த மனுசன் போராட்டப் பின்னடைவுகளுக்குக் காரணமாக இருந்தாலும், கருணாபோல், சுமந்திரன்போல் போராளிகளைக் காட்டிக்கொடுத்தாக செய்திகள் வந்ததாகத் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Robinson cruso said:

இவரை ஆதரிப்பதில் தவறில்லை.

நாவற்குழி சிங்களக் குடியேற்றம். (றொபின்சன் பாஸ், சும்மா ஒரு தமாஸுக்குத்தான். கோவிக்காதீங்க 😂)

1 hour ago, Paanch said:

இந்த மனுசன் போராட்டப் பின்னடைவுகளுக்குக் காரணமாக இருந்தாலும், கருணாபோல், சுமந்திரன்போல் போராளிகளைக் காட்டிக்கொடுத்தாக செய்திகள் வந்ததாகத் தெரியவில்லை.

அப்படியா 🤔

பாஸ், நீங்க கொஞ்சம் பூலோகத்திற்கு இறங்கி வரணும். உங்கள் பொற்பாதங்கள் இந்தப் பொன்னான பூமியில் படணும் 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Robinson cruso said:

நான் அவர் நல்லவர் என்று ஆதரிக்க சொல்லவில்லை. நிறைய தில்லுமுல்லுகள் உண்டு. அதில் இதுவும் ஒன்று. கொள்ளையடித்தாலும் சில அபிவ்ருத்தியாவது மனுஷன் செய்யும் எண்டுதான் அப்படி எழுதினேன். மற்றப்படி ஒன்றுமில்லை. 

அபிவிருத்தி 🤔

சாணேற முழம் சறுக்கின கதையாக் கிடக்கு பாஸ். இந்த அபிவிருத்திதான் வேணுமென்றால் மாவட்ட அபிவிருத்திச் சபைகளோட நின்றிருக்கலாமே. இந்தப் பாழாய்ப்போன போன போராட்டம் எதற்கு 🤧

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி கோயில் மதில்/கோபுரங்கள் எல்லாம் பளிச்சிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கொலைகாரனை கொண்டு வந்தாவது சுமந்திரனுக்கு பாடம் படிப்பிக்க வெளிக்கிட்டுவிட்டார்கள். அவர்களோ, சுமந்திரனை வீட்டுக்குள் ஒளித்து வைத்துக்கொண்டு அவர் வீட்டுக்குள் இல்லை. நீங்கள் வாங்கோ என்று கூப்பிடுகிறார்கள்.

22 hours ago, Kapithan said:

அபிவிருத்தி 🤔

சாணேற முழம் சறுக்கின கதையாக் கிடக்கு பாஸ். இந்த அபிவிருத்திதான் வேணுமென்றால் மாவட்ட அபிவிருத்திச் சபைகளோட நின்றிருக்கலாமே. இந்தப் பாழாய்ப்போன போன போராட்டம் எதற்கு 🤧

அப்படி என்றால் எப்போ போராட்டத்தை முடிப்பீர்கள், எப்போது மக்கள் நிம்மதியாக வாழலாம்? என்ன செய்வது தமிழன்டா வாழ்க்கையே போராட்டமா போயிட்டுது. தலை எழுத்து.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Robinson cruso said:

அப்படி என்றால் எப்போ போராட்டத்தை முடிப்பீர்கள், எப்போது மக்கள் நிம்மதியாக வாழலாம்? என்ன செய்வது தமிழன்டா வாழ்க்கையே போராட்டமா போயிட்டுது. தலை எழுத்து.

சமரசம் ..ம்.ம்.🤔

உந்த சுடலை ஞானம் எப்போ வந்தது உங்களுக்கு 🤥

15 hours ago, Kapithan said:

சமரசம் ..ம்.ம்.🤔

உந்த சுடலை ஞானம் எப்போ வந்தது உங்களுக்கு 🤥

இல்ல, போற போக்கை பார்த்தால் இன்னுமொரு எழுபது வருடங்களுக்கு இழுபடும்போலத்தான் தெரியுது. வாழ்க , வளர்க மக்களே.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஈபிஆர் எல் எவ் இல் இருந்து கொள்ளையடித்த கோவில் நகைகளை மீளக் கையளிப்பது தொடர்பில் டக்கிளசை உந்த கொருமார் கோரலாமே...??! 

  • கருத்துக்கள உறவுகள்
On 28/7/2020 at 10:15, Robinson cruso said:

நான் அவர் நல்லவர் என்று ஆதரிக்க சொல்லவில்லை. நிறைய தில்லுமுல்லுகள் உண்டு. அதில் இதுவும் ஒன்று. கொள்ளையடித்தாலும் சில அபிவ்ருத்தியாவது மனுஷன் செய்யும் எண்டுதான் அப்படி எழுதினேன். மற்றப்படி ஒன்றுமில்லை. 

சில சினிமாப்படங்களில் பார்த்ததுண்டு

ஆனால்  அதை  நம்பியதில்லை

ஒரு ஊரை எப்படி வனாந்தரமாக்கமுடியும்

ஒரு ஊர் மக்களை  எப்படி  காட்டுமிராண்டிகளாக்க அல்லது வளர்தெடுக்கமுடியும்  என்பதை

இந்த ஐயா எமது ஊரை ஆண்ட  பின்பே  தெரிந்து  கொண்டேன்

நேரில் பார்த்தேன்

தலைவன் எவ்வழியோ மக்களும் அவ்வழி?

ஒரு ஐம்பது வருடங்களாவது  செல்லும் அந்த  மக்களை  மனிதர்களாக்க......

வித்யா ஒரு துளி  தான்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
On 28/7/2020 at 13:38, Robinson cruso said:

இவரை ஆதரிப்பதில் தவறில்லை.

கூத்தமைப்பை விட டக்ளஸ் தேவா பரவாயில்லை என்று சொல்லலாம் அனால் முழுமையாக அல்ல

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கூத்தமைப்பை விட டக்ளஸ் தேவா பரவாயில்லை என்று சொல்லலாம் அனால் முழுமையாக அல்ல

உண்மைதான்

மகிந்தவா?

பொன்சேகா??

ரணிலா???

  • கருத்துக்கள உறவுகள்
On 1/8/2020 at 16:02, விசுகு said:

உண்மைதான்

மகிந்தவா?

பொன்சேகா??

ரணிலா???

மகிந்த போல என வச்சிக்கொள்ளுங்களன் 

டக்கு மாமா ஒரு இடம்தான் எண்டு நினைத்தேன். அவருக்கு போனஸும் கிடைத்திருக்கு. பருத்தித்துறை இறங்குதுறை திடடம் தொடங்குவார் எண்டு எதிர்பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Robinson cruso said:

டக்கு மாமா ஒரு இடம்தான் எண்டு நினைத்தேன். அவருக்கு போனஸும் கிடைத்திருக்கு. பருத்தித்துறை இறங்குதுறை திடடம் தொடங்குவார் எண்டு எதிர்பார்க்கலாம். 

முதலில் தீவகத்தில் போட்ட காப்பட் ரோட் பாதில கிடக்குதாம். அதை முடிக்கச் சொல்லுங்கோ. இதுகளை எல்லாம் நம்பி வாக்குப் போட்டும்.. இன்றும்.. வறுமைக் கோட்டின் கீழ் மக்கள். அந்த மக்கள் தான் இவர்களின் வாக்கு வங்கி. இதனைப் புரிந்து கொள்ளாமல்.. பெரிய படம் காட்டல். 

4 hours ago, nedukkalapoovan said:

முதலில் தீவகத்தில் போட்ட காப்பட் ரோட் பாதில கிடக்குதாம். அதை முடிக்கச் சொல்லுங்கோ. இதுகளை எல்லாம் நம்பி வாக்குப் போட்டும்.. இன்றும்.. வறுமைக் கோட்டின் கீழ் மக்கள். அந்த மக்கள் தான் இவர்களின் வாக்கு வங்கி. இதனைப் புரிந்து கொள்ளாமல்.. பெரிய படம் காட்டல். 

தீவுப்பகுதி மக்கள்தான் அள்ளி போட்டிருக்கிறார்கள்.பரவாயில்லையே. இந்த கூத்தமைப்பு, அந்த அமைப்பு , இந்த அமைப்பு எல்லாம் என்ன கிழித்தார்கள்?

குறைந்தது எதாவது அரசியல் தீர்வாவது பெற்றுக்கொடுத்தார்களா? சிங்களவனின் குடியேற்றத்தையாவது தடுத்தார்களா? இவர்களால் அவர்களது அடடகசம் கூடியதே தவிர குறையவில்லை.

எனவே இம்முறை மக்கள் சரியான தீர்வுகளை எடுத்திருக்கிறார்கள். வன்னியில்தான் மீண்டும் குடு காரர்களையும், கருவாட்டு வியாபாரியையும் தெரிவு செய்திருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Robinson cruso said:

நீங்கள் வங்காலையான் என்கின்ற பெயரில் முதலில் வந்தவரெல்லோ 🤔 Robinson Cruso ? 

பளைய IDக்கு password மறந்துவிட்டதா உண்மயும் அதுதான் என்ன ?)😂😂

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kapithan said:

நீங்கள் வங்காலையான் என்கின்ற பெயரில் முதலில் வந்தவரெல்லோ 🤔 Robinson Cruso ? 

பளைய IDக்கு password மறந்துவிட்டதா உண்மயும் அதுதான் என்ன ?)😂😂

 இந்தப்பெயரில் இவர் பதிவிடும்போது ஒரு சந்தேகம் எனக்குள்ளும் எழுந்தது, பெயர் மாற்றம் ஆனால் சொல்லாடல் வங்காலையானது.

1 hour ago, Kapithan said:

நீங்கள் வங்காலையான் என்கின்ற பெயரில் முதலில் வந்தவரெல்லோ 🤔 Robinson Cruso ? 

பளைய IDக்கு password மறந்துவிட்டதா உண்மயும் அதுதான் என்ன ?)😂😂

எந்தபெயரில் வந்தால் என்ன ? உண்மையை எழுதினால் சரி. யாரும் எதையும் அனுமானிக்கலாம். அது அவர்களின் விருப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Robinson cruso said:

எந்தபெயரில் வந்தால் என்ன ? உண்மையை எழுதினால் சரி. யாரும் எதையும் அனுமானிக்கலாம். அது அவர்களின் விருப்பம்.

யோவ் வங்காலையான்,

நானும் வேறு பெயரில் வந்து phone மாற்றும்போது பழைய ID pass word எல்லாம் விடுபட்டு கப்பித்தான் என்ற பெயரில் உள்ளேன். என்னுடைய பழைய பெயரும் மறந்துவிட்டது. அனுபவத்தை எழுதினால் உமக்கு கோபம் வேறு வருகிறதா 😂😂

1 hour ago, satan said:

 இந்தப்பெயரில் இவர் பதிவிடும்போது ஒரு சந்தேகம் எனக்குள்ளும் எழுந்தது, பெயர் மாற்றம் ஆனால் சொல்லாடல் வங்காலையானது.

அவரேதான் இவர், இவரேதான் அவர். 😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.