Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாக்கு எண்ணும் அறைக்குள் சுமந்திரன் இருந்தார்? பிரவீனா ரவிராஜ் குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன், மாவட்டத்தின் விருப்புத்தெரிவு வாக்கு எண்ணிக்கையை மாற்றும் நடவடிக்கையை கையாண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தமிழரசு கட்சியின் வேட்பாளர் சசிக்கலா ரவீராஜின், மகள் பிரவீனா ரவிராஜ் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

விருப்புத்தெரிவு வாக்குகளை எண்ணும்போது மாலை 6 மணியளவில் தமது தாயார் இரண்டாம் இடத்தில் இருந்தார். எனினும் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் நேரத்தில் அவர் நான்காம் இடத்தில் இருப்பதாக கூறப்பட்டது.

இறுதி முடிவு அறிவிக்கப்படுவது தாமதப்படுத்தப்பட்டநிலையில் அங்கு வந்த சுமந்திரனும் அவருடைய ஆதரவு அரசியல்வாதியான சயந்தனும் விருப்பு வாக்கு எண்ணும் அறைக்குள் அமர்ந்திருந்ததாக பிரவீனா ரவிராஜ் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஏனைய வேட்பாளர்களுக்கு வாக்கு எண்ணும் அறைக்குள் செல்லமுடியாதபோது சுமந்திரனும், சயந்தனும் அந்த அறைக்குள் அமர்ந்திருந்தாக பிரவீனா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்பின்னரே இறுதிமுடிவு தமது தாயாருக்கு பாதமான வகையில் வெளியிடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்போது தமது ஆதரவாளர்கள் தாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு அறிவிக்க முயற்சித்தபோதும் அவர் தமது தொலைபேசி அழைப்புக்கு பதில் வழங்கவில்லை பிரவீனா ரவிராஜ் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும் பிரவீனா ரவிராஜ் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த சுமந்திரன், பிரவீனா ரவிராஜ் அவரரை சுற்றியுள்ளவர்களால் தவறாக வழிநடத்தப்பட்டதாகக் கூறினார்.

விருப்புத்தெரிவு வாக்கு எண்ணிக்கையை மாற்றியமைக்க வழி இல்லை என்று அவர் வலியுறுத்தினார்.

விருப்புத்தெரிவு கணக்கெடுப்பின் ஆரம்ப கட்டத்தில் சசிக்கலா ரவீராஜ் இரண்டாவது இடத்தில் இருந்திருக்கலாம், ஆனால் இறுதி எண்ணிக்கையின்போது அதில் மாற்றங்கள் ஏற்பட்டன என்று சுமந்திரன் குறிப்பிட்டார்.

இதேவேளை விருப்புத்தெரிவு வாக்குகள் எண்ணப்படும்போது தான் ஒருபோதும் எண்ணும் மையத்திற்குள் செல்லவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

https://www.tamilwin.com/special/01/252953?ref=rightsidebar-lankasrinews

  • Replies 73
  • Views 7.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில்... 
கள்ளனை,  கள்ளன்...  என்று தான்... சொல்வார்கள்.
அடி, கிடி... வாங்காமல், தப்பி வந்தது.... புண்ணியம்...  
என்று,  சுமந்திரனுக்கு விளங்கினால்  நல்லது. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் சிங்கள எஜமானர்களின் செல்லப் பிள்ளைகள்.. எங்கும் போய் எதிலும் வெல்வார்கள் சொறீலங்காவில்.. அவர்கள் பெரியாக்கள். தெரியாமல்.. இவர்களின் பின்னால் போய் ஏமாந்து தான் இவர்களைப் பற்றிப் படிக்க வேண்டியதானது கவலைக்குரிய விடயம். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணத்தில்... 
கள்ளனை,  கள்ளன்...  என்று தான்... சொல்வார்கள்.
அடி, கிடி... வாங்காமல், தப்பி வந்தது.... புண்ணியம்...  
என்று,  சுமந்திரனுக்கு விளங்கினால்  நல்லது. :grin:

கூலிப்படை விட்டிருக்குமா அவருக்கு அடிக்க? இதே சாட்டாக அப்பகுதி இளைஞரை தூக்கி உள்ளுக்கை போட்டிருக்கமாட்டார். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, பெருமாள் said:

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு அறிவிக்க முயற்சித்தபோதும் அவர் தமது தொலைபேசி அழைப்புக்கு பதில் வழங்கவில்லை பிரவீனா ரவிராஜ் குற்றம் சுமத்தியுள்ளார்.

அது ஒருகாலமும் ரெலிபோன் எடுக்காது. ஆக மிஞ்சினால் ரெலிபோனை தூக்கி வைச்சிட்டு கிடந்துடும்.

  • கருத்துக்கள உறவுகள்

காதை மூடிக்கொண்டு படுத்திருந்திருப்பார். கோவிக்கக் கூடாது  நேரம் அப்பிடியான நேரம். எதிர்பாராத முடிவுகள் கேட்க சக்தி இருந்திருக்குமா. மாரடைப்பு வராமல் தப்பியதே பெரும் பிழைப்பு. இன்னும் ஐந்து வருடம் தேரோடவேண்டுமே? யமன் கண்ணில் தப்பி. 

  • கருத்துக்கள உறவுகள்

1 hour ago, satan said:

கூலிப்படை விட்டிருக்குமா அவருக்கு அடிக்க? இதே சாட்டாக அப்பகுதி இளைஞரை தூக்கி உள்ளுக்கை போட்டிருக்கமாட்டார். 

6 hours ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணத்தில்... 
கள்ளனை,  கள்ளன்...  என்று தான்... சொல்வார்கள்.
அடி, கிடி... வாங்காமல், தப்பி வந்தது.... புண்ணியம்...  
என்று,  சுமந்திரனுக்கு விளங்கினால்  நல்லது. :grin:

எப்பவவும் இந்த கிரிமினல் புத்திதானா? கள்ளன் என்று கத்தியவர்கள் றோவின் கூலிப்படையாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் சசிகலா ரவிராஜ்

முன் கதவால் போக பின் கதவால் போகுமாறு சொன்னார்கள்.ஆனால் பின் கதவால் போன போது உள்ளே விடவில்லை.அந்த நேரம் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உள்ளே இருந்தார்.அவர் எப்படி உள்ளே இருக்கிறார் என்ற கேள்விக்கு யாருமே பதிலளிக்கவில்லை என்று சொல்லியிருந்தார்.
மேலே உள்ளதில் இரண்டாவது நிமிடத்திலிருந்து கேட்டுப் பாருங்கள்.

5 minutes ago, கற்பகதரு said:

எப்பவவும் இந்த கிரிமினல் புத்திதானா? கள்ளன் என்று கத்தியவர்கள் றோவின் கூலிப்படையாம்.

இங்கு எல்லோருமே கள்ளர்கள்தான். நல்ல(?) கள்ளரை மக்கள் தெரிவு செய்திருக்கிறார்கள். அது சரி ஏன் மாரு வாக்கு எண்ணிக்ககைக்கு போக முடியாது? துணிவிருந்தால் அதட்குரிய நடவடிக்கை எடுக்கலாமே? அப்படி இல்லாவிடடாள் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 அரசாங்க அதிபரும் கூட அங்கு எவ்விதமான முறைகேடும் நடக்கவில்லை என்று தெரிவித்தார். சாவகச்சேரி வாக்குகள் முதல் என்னப்பட்டிருக்கலாம் , அதைவைத்துக்கொண்டு இவர்கள் முடிவெடுத்துவிடடார்கள்.

இங்கு சத்தமிடடவர்கள், கோசம் போடடவர்கள் எல்லாம் சிவாஜி , காந்த போன்ற பிரபல(?) அரசியல்வாதிகளின் கூலிப்படைகள் என்று அறிந்தேன். உண்மை தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, கற்பகதரு said:

எப்பவவும் இந்த கிரிமினல் புத்திதானா? கள்ளன் என்று கத்தியவர்கள் றோவின் கூலிப்படையாம்.

தான் கள்ளன் பிறரை நம்பான் நீங்கள்  ஏன் றோவின் ஆளாக இருக்க முடியாது ?

32 minutes ago, Robinson cruso said:

இங்கு எல்லோருமே கள்ளர்கள்தான். நல்ல(?) கள்ளரை மக்கள் தெரிவு செய்திருக்கிறார்கள். அது சரி ஏன் மாரு வாக்கு எண்ணிக்ககைக்கு போக முடியாது? துணிவிருந்தால் அதட்குரிய நடவடிக்கை எடுக்கலாமே? அப்படி இல்லாவிடடாள் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 அரசாங்க அதிபரும் கூட அங்கு எவ்விதமான முறைகேடும் நடக்கவில்லை என்று தெரிவித்தார். சாவகச்சேரி வாக்குகள் முதல் என்னப்பட்டிருக்கலாம் , அதைவைத்துக்கொண்டு இவர்கள் முடிவெடுத்துவிடடார்கள்.

இங்கு சத்தமிடடவர்கள், கோசம் போடடவர்கள் எல்லாம் சிவாஜி , காந்த போன்ற பிரபல(?) அரசியல்வாதிகளின் கூலிப்படைகள் என்று அறிந்தேன். உண்மை தெரியவில்லை.

நீங்கள்  எப்படியும் சொல்லுங்கள் தேர்தல் வாக்கு எண்ணப்படும் இடத்தில் உங்கள் ஆள் சுமத்திரன் ஏன் இருந்தார் ?

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பெருமாள் said:

நீங்கள்  எப்படியும் சொல்லுங்கள் தேர்தல் வாக்கு எண்ணப்படும் இடத்தில் உங்கள் ஆள் சுமத்திரன் ஏன் இருந்தார் ?

தேர்தல் வாக்கு எண்ணப்படும் இடத்தில் சுமத்திரன் தான் இருக்கவில்லை என்று பகிரங்கமாக ஊடகங்களுக்கு சொல்லி இருக்கிறார். தேர்தல் வாக்கு எண்ணப்படும் இடத்தில் சுமத்திரன் இருந்தார் என்று சொல்பவர்கள் தாம் எடுத்த படங்கள், வீடியோக்களை எல்லாம் வெளியிட்டு பிரபலமாக அரிய சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. செய்யலாமே?😄

15 minutes ago, பெருமாள் said:

தான் கள்ளன் பிறரை நம்பான் நீங்கள்  ஏன் றோவின் ஆளாக இருக்க முடியாது ?

வரதராஜ பெருமாள் றோவின் ஆள் என்பதை உலகறியும். என்னை யாரறிவார்? 😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நேற்று பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் சசிகலா ரவிராஜ்

முன் கதவால் போக பின் கதவால் போகுமாறு சொன்னார்கள்.ஆனால் பின் கதவால் போன போது உள்ளே விடவில்லை.அந்த நேரம் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உள்ளே இருந்தார்.அவர் எப்படி உள்ளே இருக்கிறார் என்ற கேள்விக்கு யாருமே பதிலளிக்கவில்லை என்று சொல்லியிருந்தார்.
மேலே உள்ளதில் இரண்டாவது நிமிடத்திலிருந்து கேட்டுப் பாருங்கள்.

நான் கேட்டேன். அங்கே தான் சங்கதியே இருக்கிறது. உள்ளே போவதற்கு சட்டரீதியான முறைகள் உள்ளன. அவற்றை தெரிந்தவர்கள் போக முடிகிறது. அந்த உள்ளே என்பது வாக்கு எண்ணும் இடமும் அல்ல. இவவையும் பின்னர் அடையாளம் கண்டு உள்ளே விட்டதால் தான் உள்ளே இருந்தவரிடம் எப்படி வந்தீர்கள்? என்று கேட்டுவிட்டு பதில் கிடைக்காமல் வெளியே வந்ததாக சொல்கிறா. இவ பாராளுமன்றம் போனால் என்ன பயன்? 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கற்பகதரு said:

சரி இப்படியானவர்களை தெரிவு செய்தது யார்?
மக்களா?

நானறிந்தவரை சித்தார்த்தரை 4வதாக போட முயற்சி செய்ய இளைஞர்களிடம் எதிர்ப்பு கிழம்ப தான் சசிகலா ரவிராஜ்சில் கை வைத்திருக்கிறார்கள்.

இனி என்ன எல்லாம் முடிந்து முடிவும் அறிவித்தாகி விட்டது.

16 காவலுடன் வரும் சுமந்திரன் இன்னும் 4 காவல்படை கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிட்டு ராஜபக்க்ஷ குழுவினரால் தமிழ் தே கூட்டமைப்புக்குள் நுழைக்கப்பட்ட கறுப்பாடு சுமந்திரன். தட்டிக்கேட்க வக்கில்லாமல், சம்பந்தன் என்கிற பெருச்சாளியை  வாங்க  வைத்து  கட்டிப்போட்டு விட்டார்.தமிழனின் தலையெழுத்து எழுபது வருடங்களாக இதுகளை சுமந்து பணக்காரராக்கி, நலிந்து போய் சேடம் இழுத்துக்கொண்டிருக்கு. அடுத்த தேர்தலுக்கிடையில் விதியோ, சுமந்திரனோ முந்திக்கொண்டு  முடிவு எழுதி துப்புக்கெட்ட தலைவருக்கு பிரியாவிடை நடைபெறலாம். அப்போது "துரோகி எழுபது வருடங்களாக எமது இனத்தை அனாதைகளாக்கி, அடிமைகளாக விற்று விட்டு ஊர்கோலம் போறானே." என்று ஒரு கூட்டம் ஒப்பாரி வைக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ஈழப்பிரியன் said:

நானறிந்தவரை சித்தார்த்தரை 4வதாக போட முயற்சி செய்ய இளைஞர்களிடம் எதிர்ப்பு கிழம்ப தான் சசிகலா ரவிராஜ்சில் கை வைத்திருக்கிறார்கள்.

சில கேள்விகள்:

1. சசிகலாவிலும் பார்க்க சித்தார்த்தனுக்கு 700 வாக்குகளே அதிகம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளராகவுள்ள சசிகலா மீள எண்ணுமாறு கேட்கும் உரிமையும் வழிமுறைகளும் உள்ளன. இதுவரை அவர் மீள எண்ண கேட்கவில்லை ஏன்? சுமந்திரன் இப்படி கேட்டு, மீள எண்ணப்பட்டே அவரது வாக்குகள் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளன. மீள எண்ணப்பட்டால், தானும் வெற்றி பெற்று பாராளுமன்றம் போகலாம் என்று தெரிந்தும் ஏன் சசிகலா மீள எண்ணுமாறு கேட்கவில்லை? 

2. சசிகலாவையும்,சித்தார்த்தனையும், பிளொட்டையும் சிவாஜிலிங்கத்தையும் தவிர வேறு எவரும் சுமந்திரனின் எண்ணிக்கை பற்றிய அறிவிப்பு பற்றி கருத்து எதுவும் கூறாததன் மர்மம் என்ன? குறிப்பாக நீதியரசர் விக்னேஸ்வரனோ, கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ எதுவுமே சொல்லவில்லையே, ஏன்?

3. மகளீர் அமைப்புகள் எதுவுமே சசிகலாவுக்கு ஆதரவாக குரல்கொடுக்கவில்லையே, ஏன்?

4. அடுத்தாக உயர்ந்த அளவு வாக்குகளை பெற்றவர் என்ற அளவில் தேசிய பட்டியலில் பாராளுமன்ற அங்கத்தவராகும் சந்தர்ப்பம் இருந்தும், அதை இல்லாமல் போக செய்யும் நிலையை உருவாக்கும் வகையிலான கலவரத்தையும், கோசங்களையும், பேட்டியையும் சசிகலா வழங்கியதன் பின்னணி என்ன? யார் இவரை சுமந்திரனுக்கு எதிராக பயன்படுத்தி இவவை தனக்கு தானே அழிவை தேட வைத்தவர்கள்? சிவாஜிலிங்கம் இதன் பின்னணியில் இருப்பதை ஒரு வீடியோவில் தெளிவாக காணக்கூடியதாக இருந்தது. இவரை இயக்குபவர்கள் யார்?

1 hour ago, பெருமாள் said:

தான் கள்ளன் பிறரை நம்பான் நீங்கள்  ஏன் றோவின் ஆளாக இருக்க முடியாது ?

நீங்கள்  எப்படியும் சொல்லுங்கள் தேர்தல் வாக்கு எண்ணப்படும் இடத்தில் உங்கள் ஆள் சுமத்திரன் ஏன் இருந்தார் ?

யார் இருந்தார்கள், இருக்கவில்லை என்பது பிரச்சினை இல்லை. அப்படி பிரச்னை என்றால் அந்த இடத்தில அதை எழுப்பி இருக்கலாம். பதியப்படட வாக்குகள் எல்லாம் அப்படியே இருக்கின்றன. அவர்களுக்கு தங்களில் நம்பிக்கை இருந்தால் நீதிமன்றம், சடடம் இருக்கின்றது. நீதிமன்றத்தை நாடி நீதியை பெற்றுக்கொள்ளலாம். கடந்த காலங்களில் இப்படி செய்திருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு நேர்மையான, நல்மனசாட்சி இருக்குமாக இருந்தால் அதுதான் ஒரே வழி. சுமந்திரனுக்கு எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று அடம்பிடித்துக்கொண்டிருந்தால் ஒன்றுமே நடக்கப்போவதில்லை. எனக்கு தெரியும் யாருமே நீதிமன்றத்தை நாடப்போவதில்லை. ஏன் என்றால் அவர்களுக்கு உண்மை தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, கற்பகதரு said:

சில கேள்விகள்:

1. சசிகலாவிலும் பார்க்க சித்தார்த்தனுக்கு 700 வாக்குகளே அதிகம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளராகவுள்ள சசிகலா மீள எண்ணுமாறு கேட்கும் உரிமையும் வழிமுறைகளும் உள்ளன. இதுவரை அவர் மீள எண்ண கேட்கவில்லை ஏன்? சுமந்திரன் இப்படி கேட்டு, மீள எண்ணப்பட்டே அவரது வாக்குகள் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளன. மீள எண்ணப்பட்டால், தானும் வெற்றி பெற்று பாராளுமன்றம் போகலாம் என்று தெரிந்தும் ஏன் சசிகலா மீள எண்ணுமாறு கேட்கவில்லை? 

2. சசிகலாவையும்,சித்தார்த்தனையும், பிளொட்டையும் சிவாஜிலிங்கத்தையும் தவிர வேறு எவரும் சுமந்திரனின் எண்ணிக்கை பற்றிய அறிவிப்பு பற்றி கருத்து எதுவும் கூறாததன் மர்மம் என்ன? குறிப்பாக நீதியரசர் விக்னேஸ்வரனோ, கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ எதுவுமே சொல்லவில்லையே, ஏன்?

3. மகளீர் அமைப்புகள் எதுவுமே சசிகலாவுக்கு ஆதரவாக குரல்கொடுக்கவில்லையே, ஏன்?

4. அடுத்தாக உயர்ந்த அளவு வாக்குகளை பெற்றவர் என்ற அளவில் தேசிய பட்டியலில் பாராளுமன்ற அங்கத்தவராகும் சந்தர்ப்பம் இருந்தும், அதை இல்லாமல் போக செய்யும் நிலையை உருவாக்கும் வகையிலான கலவரத்தையும், கோசங்களையும், பேட்டியையும் சசிகலா வழங்கியதன் பின்னணி என்ன? யார் இவரை சுமந்திரனுக்கு எதிராக பயன்படுத்தி இவவை தனக்கு தானே அழிவை தேட வைத்தவர்கள்? சிவாஜிலிங்கம் இதன் பின்னணியில் இருப்பதை ஒரு வீடியோவில் தெளிவாக காணக்கூடியதாக இருந்தது. இவரை இயக்குபவர்கள் யார்?

தேர்தல் ஆரவாரத்தில் நிதானம் தவறுகிறார்கள். ஆரவாரம் அடங்கியபின் சிந்திப்பதற்கு நேரம் வரும். ஆனால் அதற்குள் முடிந்த அளவு சேதத்தை ஏற்படுத்திவிடுவார்கள். ☹️

37 minutes ago, கற்பகதரு said:

சில கேள்விகள்:

1. சசிகலாவிலும் பார்க்க சித்தார்த்தனுக்கு 700 வாக்குகளே அதிகம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளராகவுள்ள சசிகலா மீள எண்ணுமாறு கேட்கும் உரிமையும் வழிமுறைகளும் உள்ளன. இதுவரை அவர் மீள எண்ண கேட்கவில்லை ஏன்? சுமந்திரன் இப்படி கேட்டு, மீள எண்ணப்பட்டே அவரது வாக்குகள் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளன. மீள எண்ணப்பட்டால், தானும் வெற்றி பெற்று பாராளுமன்றம் போகலாம் என்று தெரிந்தும் ஏன் சசிகலா மீள எண்ணுமாறு கேட்கவில்லை? 

2. சசிகலாவையும்,சித்தார்த்தனையும், பிளொட்டையும் சிவாஜிலிங்கத்தையும் தவிர வேறு எவரும் சுமந்திரனின் எண்ணிக்கை பற்றிய அறிவிப்பு பற்றி கருத்து எதுவும் கூறாததன் மர்மம் என்ன? குறிப்பாக நீதியரசர் விக்னேஸ்வரனோ, கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ எதுவுமே சொல்லவில்லையே, ஏன்?

3. மகளீர் அமைப்புகள் எதுவுமே சசிகலாவுக்கு ஆதரவாக குரல்கொடுக்கவில்லையே, ஏன்?

4. அடுத்தாக உயர்ந்த அளவு வாக்குகளை பெற்றவர் என்ற அளவில் தேசிய பட்டியலில் பாராளுமன்ற அங்கத்தவராகும் சந்தர்ப்பம் இருந்தும், அதை இல்லாமல் போக செய்யும் நிலையை உருவாக்கும் வகையிலான கலவரத்தையும், கோசங்களையும், பேட்டியையும் சசிகலா வழங்கியதன் பின்னணி என்ன? யார் இவரை சுமந்திரனுக்கு எதிராக பயன்படுத்தி இவவை தனக்கு தானே அழிவை தேட வைத்தவர்கள்? சிவாஜிலிங்கம் இதன் பின்னணியில் இருப்பதை ஒரு வீடியோவில் தெளிவாக காணக்கூடியதாக இருந்தது. இவரை இயக்குபவர்கள் யார்?

சுமந்திரன் மீதுள்ள காழ்ப்புணர்வின் காரணமாகத்தான் இப்படி பொய் புரளி எல்லாம் எழுப்புகிறார்கள். மற்றப்படி எந்த நடவடிக்கையும் தோற்றுப்போகுமென்று அவர்களுக்கு நன்றாக தெரியும்.

மீண்டும் எண்ணினாலும் , நீதிமன்றம் போனாலும் என்ன நடக்குமென்று இந்த கள்ளர் கூட்ட்த்துக்கு தெரியும்.

போற போக்கை பார்த்தால் விரைவில் ஈழம் கிடைக்குமென எதிர்பார்க்கலாம்.

மீள வாக்குகளை எண்ணுவதற்கான வழிகள் இன்னமும் இருக்கின்றன. தாமதிக்காமல் செயற்பட்டால் பிழை செய்தவர்கள் வெளிப்படுவார்கள்.  இதை சசிகலாதான் செய்ய வேண்டும். அவர்தான் முறைப்பாட்டாளர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கற்பகதரு said:

சில கேள்விகள்:

1. சசிகலாவிலும் பார்க்க சித்தார்த்தனுக்கு 700 வாக்குகளே அதிகம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளராகவுள்ள சசிகலா மீள எண்ணுமாறு கேட்கும் உரிமையும் வழிமுறைகளும் உள்ளன. இதுவரை அவர் மீள எண்ண கேட்கவில்லை ஏன்? சுமந்திரன் இப்படி கேட்டு, மீள எண்ணப்பட்டே அவரது வாக்குகள் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளன. மீள எண்ணப்பட்டால், தானும் வெற்றி பெற்று பாராளுமன்றம் போகலாம் என்று தெரிந்தும் ஏன் சசிகலா மீள எண்ணுமாறு கேட்கவில்லை? 

2. சசிகலாவையும்,சித்தார்த்தனையும், பிளொட்டையும் சிவாஜிலிங்கத்தையும் தவிர வேறு எவரும் சுமந்திரனின் எண்ணிக்கை பற்றிய அறிவிப்பு பற்றி கருத்து எதுவும் கூறாததன் மர்மம் என்ன? குறிப்பாக நீதியரசர் விக்னேஸ்வரனோ, கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ எதுவுமே சொல்லவில்லையே, ஏன்?

3. மகளீர் அமைப்புகள் எதுவுமே சசிகலாவுக்கு ஆதரவாக குரல்கொடுக்கவில்லையே, ஏன்?

4. அடுத்தாக உயர்ந்த அளவு வாக்குகளை பெற்றவர் என்ற அளவில் தேசிய பட்டியலில் பாராளுமன்ற அங்கத்தவராகும் சந்தர்ப்பம் இருந்தும், அதை இல்லாமல் போக செய்யும் நிலையை உருவாக்கும் வகையிலான கலவரத்தையும், கோசங்களையும், பேட்டியையும் சசிகலா வழங்கியதன் பின்னணி என்ன? யார் இவரை சுமந்திரனுக்கு எதிராக பயன்படுத்தி இவவை தனக்கு தானே அழிவை தேட வைத்தவர்கள்? சிவாஜிலிங்கம் இதன் பின்னணியில் இருப்பதை ஒரு வீடியோவில் தெளிவாக காணக்கூடியதாக இருந்தது. இவரை இயக்குபவர்கள் யார்?

சுமந்திரன்கூட, 75 கள்ள வாக்கு தானே போட்டேன் என்று கூறிய சிறீதரனை பக்கத்தில் வைத்துக்கொண்டு தேர்தலில் மோசடி செய்ய முடியாது என்று சிரிக்காமல் கூறுகிறார்.
சரி. பரவாயில்லை. “30 வோட்டுடன் ஈபிடிபி 7 எம்.பி களைப் பெற்றது” என்று இதுவரை கிண்டலாக கூறிவந்தவர்கள் இப்போது இலஙகை தேர்தலில் மோசடி செய்ய முடியாது என்று கூற முற்படுகிறார்கள்.
இதுகூடப் பரவாயில்லை. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் மோசடி செய்து வென்றார் என்று எழுதிய ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார் இலங்கை தேர்தலில் யாரும் மோசடி செய்ய முடியாது என்று. என்னத்தைச் சொல்ல.
எல்லோருக்கும் தலையில் மூளையை வைத்த கடவுள் இவனுகளுக்கு மட்டும் முழங்காலில் மூளையை வைத்து விட்டார் போல் இருக்கிறது. எல்லாத்தையும் தலை கீழாகவே சொல்லுறான்கள்.
சுமந்திரன் அவர்களே!
சசிகலா ரவிராஜ் தேர்தலுக்கு பதிது. அவருக்கு வாக்கு எண்ணிக்கை நடைமுறை தெரியாது என்கிறீர்கள். சரி. ஏற்றுக்கொள்கிறோம். சித்தார்த்தனும் புதிதா? அவருக்கும் தேர்தல் நடைமுறைகள் தெரியாதா?
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பெருமாள் said:

எதோ தேவனின் சந்நிதியில் தேர்தல் நடந்தமாதிரி 
அடித்துவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள் ....
மொத்தவாக்குகளை கூட்டிப்பாருங்கள் ......வாக்காளர் எண்ணிக்கையை பாருங்கள் 
லேசா உதைக்கும் 

10 hours ago, Maruthankerny said:

எதோ தேவனின் சந்நிதியில் தேர்தல் நடந்தமாதிரி 
அடித்துவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள் ....
மொத்தவாக்குகளை கூட்டிப்பாருங்கள் ......வாக்காளர் எண்ணிக்கையை பாருங்கள் 
லேசா உதைக்கும் 

அதை செய்யமாட்ட்டார்கள். ஏன் என்றால் எல்லோருக்கும் உண்மை தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரவீனா ரவிராஜ் அவர்கள்,
லண்டனில் சடடம் படித்தாலும், சாவகச்சேரி மீன்காரி மாதிரி சடடம் கதைக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, zuma said:

பிரவீனா ரவிராஜ் அவர்கள்,
லண்டனில் சடடம் படித்தாலும், சாவகச்சேரி
மீன்காரி மாதிரி சடடம் கதைக்கின்றார்.

மீன்காரியுடன் உங்களுக்கு என்ன பிரச்சனை ☹️

ஊர்க்குருவி உயர உயரப் பறந்தாலும் பருந்தாக மாட்டாது என்பது இதைத்தானோ 😜

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Kapithan said:

மீன்காரியுடன் உங்களுக்கு என்ன பிரச்சனை ☹️

சிறுவயதில் தந்தையுடன் கள்ளியங்காட்டு சந்தைக்கு சென்ற போது ஏற்படட கசப்பான அனுபவம்.☹️

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.