Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராளிகளை இணைத்து பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்ய புலம்பெயர் தரப்பு முயற்சி- பாதுகாப்புச் செயலாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Kamal-Gunaratne.jpg

முன்னாள் போராளிகளை இணைத்து பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்ய புலம்பெயர் தரப்பு முயற்சி- பாதுகாப்புச் செயலாளர்

புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளைப் பயன்படுத்தி மீண்டும் பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்வதற்கு புலம்பெயர் தரப்பினரால் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாட்டில் மீண்டும் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலைமை ஏற்படாது என மக்கள் எண்ணக்கூடாது எனவும், புலனாய்வுப் பிரிவு சிறப்பாக செயற்படாவிட்டால் தம்மால் வெற்றி பெற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘இலங்கையில் கொவிட்-19 தற்போதைய நிலை மற்றும் எதிர்கால அபிவிருத்திகள்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாதுகாப்புச் செயலாளராக மீண்டும் நியமனம் கிடைக்கப் பெற்றுள்ளமையானது நாட்டுக்கும் மக்களுக்கும் சேவையாற்றுவதற்கு கிடைக்கப் பெற்ற சிறந்ததொரு வாய்ப்பாகவே கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற அவருடைய தேர்தல் கொள்கைப் பிரடனத்தில் தேசிய பாதுகாப்பு என்ற விடயத்திற்கே முதலிடம் அளித்திருந்தார் என்றும் தேசிய பாதுகாப்பு ஸ்திரப்படுத்தப்படும் வரை உலகத்தில் காணப்படும் எந்தவொரு நாட்டுக்கும் வளர்ச்சி என்ற ஒன்றை பற்றி நினைப்பதற்கும் வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி நாட்டு மக்கள் அனைவரும் சமாதானத்துடனும் அமைதியுடனும் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதில் காணப்படும் பிரதான சவாலாக அமைவது பிரிவினைவாதமாகும் என கமல் குணரத்ன கூறியுள்ளார்.

2009 மே மாதம் 19ஆம் திகதி பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதோடு மீண்டும் இது போன்றதொரு அச்சுறுத்தல் ஏற்படாது என்று எண்ணலாம். ஆனாலும் அந்த அமைப்பில் காணப்பட்ட 12, 242 பேருக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதாகவும் ஈழவாதத்திற்கு ஆதரவளிக்கும் குழுவினர் புனர்வாழ்வளிக்கப்பட்ட குறித்த இளைஞர் யுவதிகளை உபயோகித்து மீண்டும் பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்வதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், எமது புலனாய்வுப்பிரிவு சிறப்பாக செயற்படாவிட்டால் எம்மால் வெற்றி பெற முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://athavannews.com/முன்னாள்-போராளிகளை-இணைத்/

  • Replies 152
  • Views 13.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் தொடர்ச்சியாக RAW வினால் பரந்தன் ராஜன் தலைமையில் மேற்கொள்ளப்படும் (விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்டபோராளிக் குழுக்களை) மீள ஒருங்கிணைக்கும் நடவடிக்கையினைக் கூறுகிறார் போலும். 😀

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழர் பிரதேசங்களில் இராணுவ முகாம்களை நிரந்தரமாக அமைப்பதற்கும், காணிகளை பிடிப்பதற்கும், அதை தொடர்ந்து சிங்கள குடியேற்றங்கள், விகாரைகள், தொழில்கள் ஏற்படுத்துவதற்கும் திட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

 தமிழர் பிரதேசங்களில் இராணுவ முகாம்களை நிரந்தரமாக அமைப்பதற்கும், காணிகளை பிடிப்பதற்கும், அதை தொடர்ந்து சிங்கள குடியேற்றங்கள், விகாரைகள், தொழில்கள் ஏற்படுத்துவதற்கும் திட்டம்.

2 hours ago, Paanch said:

இலங்கையில் மிருககுணம் கொண்ட பிக்குகளாலும், கேடுகெட்ட அரசியல்வாதிகளாலும்  ஊட்டப்பட்ட தமிழினக் காழ்ப்புணர்ச்சியும், புலிப்பயமுமே கேடுகெட்ட சிங்களரையும், அரசபீடத்தில் வந்தமர வழிவகுக்கிறது. இவை இரண்டும் இல்லையென்றால் இன்றைய சிங்கள அரசியல்வாதிகளும் இல்லை, அவர்களைப் பாதுகாக்கும் அதிகாரிகளும் இல்லை. இந்தக் கயவர்களின் இருப்பு நிலைக்கத் தமிழினக் காழ்ப்புணர்ச்சியும், புலிப்பயமும் நிச்சயம் தேவை. 😲

ம்.... அப்ப கபிதான் சொல்லும்  றோ .... பொய்யா? அப்படி ஒன்றுமில்லையா ?

18 hours ago, Kapithan said:

அண்மையில் தொடர்ச்சியாக RAW வினால் பரந்தன் ராஜன் தலைமையில் மேற்கொள்ளப்படும் (விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்டபோராளிக் குழுக்களை) மீள ஒருங்கிணைக்கும் நடவடிக்கையினைக் கூறுகிறார் போலும். 😀

  • கருத்துக்கள உறவுகள்
On 16/8/2020 at 17:12, தமிழ் சிறி said:

அத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற அவருடைய தேர்தல் கொள்கைப் பிரடனத்தில் தேசிய பாதுகாப்பு என்ற விடயத்திற்கே முதலிடம் அளித்திருந்தார் என்றும் தேசிய பாதுகாப்பு ஸ்திரப்படுத்தப்படும் வரை உலகத்தில் காணப்படும் எந்தவொரு நாட்டுக்கும் வளர்ச்சி என்ற ஒன்றை பற்றி நினைப்பதற்கும் வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

விட்டால் இவன்களே  புலியை  உருவாக்கி சண்டை போடுவான்கள்  போல் உள்ளது .

வடகிழக்கில் இருக்கும் சனம்  நிம்மதியா வாழ்ந்தால்  காணும் என்று வாழுதுகள்  புலம்பெயர்ந்த கூட்டம் இங்கு வாழ்ந்து அலுத்துப்போய் பழைய நினைவுகளை மீட்ட ரியோ ஐஸ் கிரீமுக்குள் முக்கி எழும்பினம் கொஞ்சம் திருகோணமலையில் கண்ணியாவிலும் கூத்தடித்து செல்பி எடுத்து ஊர்ப்பக்கம் போகாதவர்களை கடுப்பாக்குத்துக்கள் .

சிங்கள அரசியல்வாதிகள்  செய்யிற ஊழல்களையும் ஆகாசத்துக்கு போகும் அத்தியாவசிய பொருள்களின் விலைவாசிகளில் இருந்து அடித்தட்டு சிங்களமக்களை ஏமாற்ற புலி பூச்சாண்டியும்  தமிழர் மீதான வெறுப்புணர்வையும் ஆயுதமாக்கிறார்கள் .

இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து தமிழர்களை எதிரியா காட்டி அரசியல் செய்த சிங்கள அரசியல்வாதிகள் எப்படி பணக்காரர் வரிசையில் வந்தனர் என்பதை அறியாமல் சாதாரண சிங்களவன் அரசியல்வாதிகள் கொடுத்த இலவச மதுவை குடித்துவிட்டு கொட்டியா என்று கத்துகிறான் . 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

வடகிழக்கில் இருக்கும் சனம்  நிம்மதியா வாழ்ந்தால்  காணும் என்று வாழுதுகள்  புலம்பெயர்ந்த கூட்டம் இங்கு வாழ்ந்து அலுத்துப்போய் பழைய நினைவுகளை மீட்ட ரியோ ஐஸ் கிரீமுக்குள் முக்கி எழும்பினம் கொஞ்சம் திருகோணமலையில் கண்ணியாவிலும் கூத்தடித்து செல்பி எடுத்து ஊர்ப்பக்கம் போகாதவர்களை கடுப்பாக்குத்துக்கள் .

ஊர்ப்பக்கம் போகாமல் கடுப்பேறி, தேசியம் பேசுபவர்கள் என்னவெல்லாம் செய்வார்களோ என்ற பயம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மனதை வென்று விட்டதாக மகிந்தர் சொல்கின்றார். மேலும் வெல்ல வேலைத்திட்டங்கள் போடுகினறனர். அங்கயன் வெற்றி அவர்களுக்கு சொல்வதென்ன?

பணத்தினை எறிந்தால், தமிழ்த்தேசியம் அவுட்.... அதனைத்தான் கச்சிதமாக செய்கிறார்கள், செய்யபோகின்றனர்.

ஆனாலும் ஒரே நம்பிக்கை, சீனாவின் மீதான மேற்கின் இறுகும் பிடி. சீனாவின் ஊடுருவல் அதிகமாகும் போது, இந்தியாவுக்கும்,  மேற்குக்கும் வேறு வழி இல்லை. 

சலிப்படையாதீர்கள்.

போர்த்துக்கேயர்கள் தம்மை அசைக்க முடியாது என்று தான் நினைத்தார்கள்.... ஒல்லாந்தர் வரும்வரை... அவர்களும் அவ்வாறே நினைத்து பெரும் பணம் செலவழித்து இலங்கை எங்கும் கோட்டைகள் கட்டினார்.

பிரிட்டிஷ்காரர்கள் சண்டையே பிடிக்காமல், காலக்கெடு கொடுத்து, அனுப்பி வைத்தார்கள்.

இது வரலாறு. வரலாறே மீண்டும் மீண்டும் நடக்கும்....

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Nathamuni said:

பணத்தால் உணர்வுகளை வாங்கலாம் என ஒருப்போதும் நான் நம்பவில்லை. 

ஆனால் 

நீங்கள் கூறியவாறு சீனாவின் பிடி இறுகும்போது மேற்கிற்கும் இந்தியாவிற்கும் வேறு தெரிவுகள் இல்லை என்பதுதான் உண்மை. அதற்காகத்தான் மன்னாரை மேற்கும் இந்தியாவும் இலக்காகக் கொள்கின்றனர். சீனாவிற்கும் இது தெரியும். அதனால்தான் சீனாவும் சிங்களமும் பூனகரியையும் KKS ஐயும் குறிவைத்து திட்டங்களை வகுக்கின்றனர். 

மன்னார் மாதோட்டத்திலிருந்து வவுனியா, மதவாச்சி,  கந்தளாய் ஈறாக இறுதியில் அம்பாறை வரை தனது பிடிக்குள் கொண்டுவந்து விசேட அதிகாரங்களுடன் கூடிய இந்தியாவின் இன்னொரு மானிலமாக வடக்கு கிழக்கை உருவாக்குவதற்கு இந்தியாவும் மேற்கும் தனது  நகர்வுகளை மேற்கொள்கின்றன. 

அப்படியொரு நிலை வரும்போது எமது நிலை என்ன 🤥 அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாரா ☹️

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kapithan said:

பணத்தால் உணர்வுகளை வாங்கலாம் என ஒருப்போதும் நான் நம்பவில்லை. 

பணத்தினால் உண்டான துரோகத்தினால் தான் புலிகளை வீழ்த்த முடிந்தது.

இலங்கையின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் கிழக்கில் அரசியல் செய்கிறார். கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். இவரது பணம் சிங்களம் கொடுத்தது. @4:36

Edited by Nathamuni

புலிகள் வீழ்ந்ததில்  பெரும் பங்கு வகித்தது பேச்சுவார்ததை காலத்தில் புலிகளின் அரசியல்துறை எடுத்த பல தவறான முடிவுகள் தான். பேச்சுவார்ததை காலத்தில் பல உலக ராஜதந்திரிகளுடன் நெருங்கி பழக சிறந்த வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம்  உலக நாடுகளின் தமிழீழம் தொடர்பான எண்ணக்கருவை நாடி பிடித்து அறியவும் அதன் மூலம் சில நெகிழ்வுத்தன்மையையும் செய்திருக்கலாம். அதன் மூலம் தமிழீழம் என்ற இலக்கு உடனடியாக அடையமுடியமல் பின் தள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் இலக்கு நோக்கி மெதுவாக முன்னே நகரக் கூடிய சாத்தியக் கூறு இருந்தது.  

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஈகத்திலும் வீரம் மிகு போராட்டத்திலும் எனக்கு மிகுந்த மரியாதை  உண்டு. ஆனால் அவர்களின் தவறுகளை மறைப்பதன் மூலம் அந்த மரியாதையை காட்ட முனைவது வெறும் ஈகோவாக தான் இருக்கும். அந்த ஈகோ மனப்பான்மை புலிகளின் கொள்கைகளை எடுத்து செல்ல உதவாது. மாறாக எதிர்மறையான விளைவுகளையே தரும்.  

  • கருத்துக்கள உறவுகள்
On 17/8/2020 at 02:12, தமிழ் சிறி said:

புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளைப் பயன்படுத்தி மீண்டும் பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்வதற்கு புலம்பெயர் தரப்பினரால் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்தோருக்கு ஏதோ ஆப்பு இருக்கிறது. அரசியல்வாதிகளோடு தொடர்பு வைத்திருந்தவர்கள், எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கவனமாக செயற்படுவது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, tulpen said:

புலிகள் வீழ்ந்ததில்  பெரும் பங்கு வகித்தது பேச்சுவார்ததை காலத்தில் புலிகளின் அரசியல்துறை எடுத்த பல தவறான முடிவுகள் தான். பேச்சுவார்ததை காலத்தில் பல உலக ராஜதந்திரிகளுடன் நெருங்கி பழக சிறந்த வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம்  உலக நாடுகளின் தமிழீழம் தொடர்பான எண்ணக்கருவை நாடி பிடித்து அறியவும் அதன் மூலம் சில நெகிழ்வுத்தன்மையையும் செய்திருக்கலாம். அதன் மூலம் தமிழீழம் என்ற இலக்கு உடனடியாக அடையமுடியமல் பின் தள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் இலக்கு நோக்கி மெதுவாக முன்னே நகரக் கூடிய சாத்தியக் கூறு இருந்தது.  

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஈகத்திலும் வீரம் மிகு போராட்டத்திலும் எனக்கு மிகுந்த மரியாதை  உண்டு. ஆனால் அவர்களின் தவறுகளை மறைப்பதன் மூலம் அந்த மரியாதையை காட்ட முனைவது வெறும் ஈகோவாக தான் இருக்கும். அந்த ஈகோ மனப்பான்மை புலிகளின் கொள்கைகளை எடுத்து செல்ல உதவாது. மாறாக எதிர்மறையான விளைவுகளையே தரும்.  

உண்மை. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கற்பகதரு said:

ம்.... அப்ப கபிதான் சொல்லும்  றோ .... பொய்யா? அப்படி ஒன்றுமில்லையா ?

உதுக்கு பதில் எழுத உண்மை நிலவரம் தெரிஞ்சவையாலதான் முடியும். நாங்களெல்லோரும் யூகிக்கவும் விசிலடிக்கவும்தான் செய்வோமே தவிர உண்மை நிலவரம் என்னெண்டு அறியவோ அல்லது மற்றவன் சொல்லுறது உண்மயோ எண்டு அறியத்தானும் முயலிறதில்ல. 

ஏணெண்டா எங்களுக்கு பரபரப்பா கதைக்கிறதில இருக்கிற அக்கற நெஞ்சுக்கு நேர்மயா இருக்கவேணும் எண்டதில இல்ல பாருங்கோ. 

உண்ம நிலவரம் தெரிஞ்சா,  என்கட சனம் இன்னொரு அழிவ நோக்கி வேகமா  போகிறதெண்டு விளங்கி, சனத்த பாதுகாக்கிறதில கவனம் செலுத்துவோமெல்லோ ☹️

  • கருத்துக்கள உறவுகள்

  புலம்பெயர்ந்த மக்களின் பணத்தை கொள்ளையடிக்க ஒரு திட்டம் ஏற்படுத்தாமல் உறங்கமாட்டார் எங்கள் கொலை கொள்ளை கூட்டத் தலைவர்.  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

உதுக்கு பதில் எழுத உண்மை நிலவரம் தெரிஞ்சவையாலதான் முடியும். நாங்களெல்லோரும் யூகிக்கவும் விசிலடிக்கவும்தான் செய்வோமே தவிர உண்மை நிலவரம் என்னெண்டு அறியவோ அல்லது மற்றவன் சொல்லுறது உண்மயோ எண்டு அறியத்தானும் முயலிறதில்ல. 

ஏணெண்டா எங்களுக்கு பரபரப்பா கதைக்கிறதில இருக்கிற அக்கற நெஞ்சுக்கு நேர்மயா இருக்கவேணும் எண்டதில இல்ல பாருங்கோ. 

உண்ம நிலவரம் தெரிஞ்சா,  என்கட சனம் இன்னொரு அழிவ நோக்கி வேகமா  போகிறதெண்டு விளங்கி, சனத்த பாதுகாக்கிறதில கவனம் செலுத்துவோமெல்லோ

நீங்களும் சிறிதுகாலமாக, கற்பகதரு போல் இவ்விடயம் பற்றி எழுதுகிறீர்கள். மீண்டும் இந்திய உளவுத்துறை தமிழர் பிரச்சினையை கையிலெடுத்து இலங்கைக்குள் நுழையலாம் என்று சொல்கிறீர்கள்.

ஆனால் இதற்கான சாத்தியம் என்ன? ஓரிரு குண்டுவெடிப்புத் தாக்குதல்களைச் செய்வதன் மூலம் சிங்களத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடியுமா? தாயகத்திலுள்ள மக்கள் இன்னொரு போருக்குத் தயாரில்லை என்று இன்று எல்லோரும் கூறிவரும் நிலையில் றோ செய்யநினைப்பது என்ன? போராடப்போவது யார்? 1980 களிலிருந்து றோ செய்ய முடியாததையா எல்லாம் முடிந்தபின்னர் செய்ய நினைக்கிறது? 
 அடுத்ததாக, ஈழத்தமிழரை இன்னொரு அழிவிற்குள் கொண்டுசெல்லப்போகும் இந்த திட்டத்தினை அவர்கள் எப்படி ஆதரிப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? தாயக மக்களின் பங்களிப்பும் ஆதரவுமின்றி, அவர்களுக்குச் சம்பந்தமேயில்லாத, இன்னொரு வழியில் சொல்லப்போனால் அழிவைத் தரக்கூட்டிய இன்னொரு போராட்டத்தை றோவினால் நடத்துவது எப்படிச் சாத்தியம்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

நீங்களும் சிறிதுகாலமாக, கற்பகதரு போல் இவ்விடயம் பற்றி எழுதுகிறீர்கள். 1) மீண்டும் இந்திய உளவுத்துறை தமிழர் பிரச்சினையை கையிலெடுத்து இலங்கைக்குள் நுழையலாம் என்று சொல்கிறீர்கள்.

2) ஆனால் இதற்கான சாத்தியம் என்ன? ஓரிரு குண்டுவெடிப்புத் தாக்குதல்களைச் செய்வதன் மூலம் சிங்களத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடியுமா?

3) தாயகத்திலுள்ள மக்கள் இன்னொரு போருக்குத் தயாரில்லை என்று இன்று எல்லோரும் கூறிவரும் நிலையில் றோ செய்யநினைப்பது என்ன? போராடப்போவது யார்? 1980 களிலிருந்து றோ செய்ய முடியாததையா எல்லாம் முடிந்தபின்னர் செய்ய நினைக்கிறது? 
 4) அடுத்ததாக, ஈழத்தமிழரை இன்னொரு அழிவிற்குள் கொண்டுசெல்லப்போகும் இந்த திட்டத்தினை அவர்கள் எப்படி ஆதரிப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

5) தாயக மக்களின் பங்களிப்பும் ஆதரவுமின்றி, அவர்களுக்குச் சம்பந்தமேயில்லாத, இன்னொரு வழியில் சொல்லப்போனால் அழிவைத் தரக்கூட்டிய இன்னொரு போராட்டத்தை றோவினால் நடத்துவது எப்படிச் சாத்தியம்?

இந்த விடயத்தில்  கரிசனை காட்டுவதற்கு உங்களுக்கு நன்றி. 

1) சாத்தியம்  அசாத்தியம் என்பதற்குமப்பால் இப்படி ஒரு முயற்சியை RAW செய்வது உண்மை. இதற்கு என்னிடம் ஆதாரங்களுள்ளன. 

2) மிகக் குறைந்த அளவு குண்டு வெடிப்புக்களுடன் முஸ்லிம்களுக்கெதிராக முழு நாட்டையும் திருப்பியது உங்களுக்கு நினைவிருக்கலாம். குண்டுவெடிப்புக்கள் என்பது சேதம் என்பதற்குமப்பால் அதனூடாக சொல்லப்படும் செய்தி என்ன என்பதுதான் முக்கியம். 

3) தாயகத்திலுள்ள மக்கள் இன்னொரு போருக்குத் தயாரில்லை என்பதற்குமப்பால் அவர்களுக்கு போரிஒவதற்கான சக்க்தி இல்லை என்பதுதான் உண்மை. 1980 களிலிருந்து RAW வால் செய்ய முடியாதது என்று ஒன்றுமே இல்லை. 1970 களிலிருந்து மேற்கு தனது விருப்பத்தை RAW ஊடாக நிறைவேற்றிக்கொண்டது என்பதுதான் எனது கணிப்பு. தற்போது மேற்கினதும் இந்தியாவினதும் விருப்பத்திற்கு குறுக்கே நிற்க விடுதலைப் புலிகளும் இல்லை. போராட்டம் என்பது தாயகத்திலுள்ள மக்களால் மட்டும்தான் இடம்பெறவேண்டுமென்பதுமில்லை. RAW அல்ல இந்தியாவின் தேவை என்ன என்பதுதான் கேள்வி. 

4) நிச்சயம் ஆதரிக்கமாட்டார்கள் , உண்மை தெரிந்தால். தனிநாடு தான் தமிழர்கட்கு தீர்வுஎன்றும் அதற்கு இந்தியா நிச்சயம் அதரவு தரும் என்று இன்றுவரை நம்புகிறோமல்லவா. அந்த அப்பாவித்தனமான நம்பிக்கை இன்னமும் எங்கள் அனேகருக்கு உள்ளது என்பது ஆச்சரியமானதல்லவா 😀

5) இந்தியப்படைகள் இறங்குவதற்கான சூழல் ஏற்பட்டால் இறங்குவார்களல்லவா ? 🤥

அந்தச் சூழலை ஏற்படுத்துவதற்கு யார் பாவிக்கப்படப் போகின்றார்கள் என்பதற்கு தமிழரைத் தவிர இலங்கைத் தீவில் வெறு யார் இருக்கிறார்கள் இந்தியாவிற்கு 🤔

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

இந்த விடயத்தில்  கரிசனை காட்டுவதற்கு உங்களுக்கு நன்றி. 

இது தொடர்பாக சில காணொளிகளை யூ டியூப் தளத்தில் பார்த்தேன். பலர் ஒரே விதமான கருத்தினைப் பகிர்கிறார்கள். ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள், செய்தியாளர்கள், அரசியல் அவதானிகள் என்று பலரும் ஒரே தொனியில் பேசுவது தெரிகிறது. அவர்கள் அனைவரதும் கருத்துப்படி, இந்தியா ஏற்கனவே இவ்விடயம் தொடர்பாகச் செயற்படத் தொடங்கிவிட்டதென்றும், காங்கிரஸ் காலத்துத் தவறுகளைக் களைந்து, ஈழத்தமிழருக்கு உண்மையான தீர்வொன்றினை நோக்கி ராணுவ ரீதியிலோ அல்லது சர்வதேச அழுத்தம் ஒன்றின்மூலமோ இந்தியா செயற்படுகிறதென்று கூறுகிறார்கள். சிலர் ஒரு படி மேலே போய், கடந்தவருடம் புதுப்பிக்கப்பட்ட புலிகள் மீதான 5 வருடத் தடையினை நீக்கிவிடும் யோசனையில் இந்தியா இருப்பதாகவும் கூறுகிறார்கள். 

ஆனால், இவர்கள் எல்லோரினதும் கருத்தில் தெரிந்த ஒரே விடயம் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்குச் சார்பான நிலை. மோடியையும் அவரது அரசியல் பொருளாதார வியூகங்களையும் இடையிடையே கிலாகித்துப் பேசும் இவர்கள் ஏன் தமிழகத்தில் தமது கட்சியை காலூன்றப் பண்ணுவதற்காக இப்படியான எழுச்சிமிக்கக் கருத்துக்களை வெளியிடுகிறார்கள் என்று நாம் எதிர்பார்க்கக் கூடாது? இதுகூட எனது கருத்துத்தான். 

ஈழத்தமிழருக்கு நிரந்தரமான நீதியான அரசியல்த் தீர்வொன்றினை இந்தியா அழுத்தங்கள் மூலம் பெற்றுக்கொடுக்க முன்வந்தால், இதுகுறித்து ஈழத்தமிழரின் நிலைப்பாடு எப்படி இருக்கப்போகிறது?

நீங்களும் எழுஞாயிறும், கற்பகதருவும் கூறுவதன்படி இந்தியா மேற்கொள்ளவிருப்பதாகக் கூறப்படும் இந்த நடவடிக்கை ஈழத்தமிழருக்கு மிகவும் பாதகமான, மீண்டும் பாரிய அழிவுகளை ஏற்படுத்தக்குடியது என்று என்னால் உணர முடிகிறது. இதுதான் உண்மையா? அதாவது ஈழத்தமிழரைப் பாவித்து மீண்டும் இலங்கையைக் கட்டுக்குள் கொண்டுவர இந்தியா முனைகிறதா? 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

உங்கள் கருத்திற்கு பின்னர் வருகிறேன். அதற்கு முன்னர் இந்த கேள்விக்கு என்ன பதிலை நாங்கள் முன்வைக்கலாம்.

இலங்கையில்  இனப்பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது என வைத்துக்கொள்வோம். அப்படி ஒன்று நடந்தால்  இந்தியாவிற்கு அதனால் இலாபமா நட்டமா ? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

இலங்கையில்  இனப்பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது என வைத்துக்கொள்வோம். அப்படி ஒன்று நடந்தால்  இந்தியாவிற்கு அதனால் இலாபமா நட்டமா ? 🤔

இதிலென்ன சந்தேகம்.நிச்சயமாக நட்டம் தான்.அதனால் தான் எப்பாடு பட்டாவது இலங்கையை குழப்ப நிலையில் வைத்திருக்க விரும்புகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, சுவைப்பிரியன் said:

இதிலென்ன சந்தேகம்.நிச்சயமாக நட்டம் தான்.அதனால் தான் எப்பாடு பட்டாவது இலங்கையை குழப்ப நிலையில் வைத்திருக்க விரும்புகிறது.

நட்டமல்ல. மகா நட்டம்.

பின் எப்படி இலங்கையில் இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு இந்தியாவை  நம்புவது 🤔

எமது நம்பிக்கை முட்டாள்தனமாகவல்லவா இருக்கிறது  ☹️

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரஞ்சித் said:

இது தொடர்பாக சில காணொளிகளை யூ டியூப் தளத்தில் பார்த்தேன். பலர் ஒரே விதமான கருத்தினைப் பகிர்கிறார்கள். ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள், செய்தியாளர்கள், அரசியல் அவதானிகள் என்று பலரும் ஒரே தொனியில் பேசுவது தெரிகிறது.

1) அவர்கள் அனைவரதும் கருத்துப்படி, இந்தியா ஏற்கனவே இவ்விடயம் தொடர்பாகச் செயற்படத் தொடங்கிவிட்டதென்றும்,

2)காங்கிரஸ் காலத்துத் தவறுகளைக் களைந்து,

3) ஈழத்தமிழருக்கு உண்மையான தீர்வொன்றினை நோக்கி ராணுவ ரீதியிலோ அல்லது சர்வதேச அழுத்தம் ஒன்றின்மூலமோ இந்தியா செயற்படுகிறதென்று கூறுகிறார்கள். சிலர் ஒரு படி மேலே போய்,

4) கடந்தவருடம் புதுப்பிக்கப்பட்ட புலிகள் மீதான 5 வருடத் தடையினை நீக்கிவிடும் யோசனையில் இந்தியா இருப்பதாகவும் கூறுகிறார்கள். 

ஆனால், இவர்கள் எல்லோரினதும் கருத்தில் தெரிந்த ஒரே விடயம்

5) ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்குச் சார்பான நிலை. மோடியையும் அவரது அரசியல் பொருளாதார வியூகங்களையும் இடையிடையே கிலாகித்துப் பேசும்

6) இவர்கள் ஏன் தமிழகத்தில் தமது கட்சியை காலூன்றப் பண்ணுவதற்காக இப்படியான எழுச்சிமிக்கக் கருத்துக்களை வெளியிடுகிறார்கள் என்று நாம் எதிர்பார்க்கக் கூடாது? இதுகூட எனது கருத்துத்தான். 

7) ஈழத்தமிழருக்கு நிரந்தரமான நீதியான அரசியல்த் தீர்வொன்றினை இந்தியா அழுத்தங்கள் மூலம் பெற்றுக்கொடுக்க முன்வந்தால், இதுகுறித்து ஈழத்தமிழரின் நிலைப்பாடு எப்படி இருக்கப்போகிறது?

நீங்களும் எழுஞாயிறும், கற்பகதருவும் கூறுவதன்படி

😎 இந்தியா மேற்கொள்ளவிருப்பதாகக் கூறப்படும் இந்த நடவடிக்கை ஈழத்தமிழருக்கு மிகவும் பாதகமான, மீண்டும் பாரிய அழிவுகளை ஏற்படுத்தக்குடியது என்று என்னால் உணர முடிகிறது. இதுதான் உண்மையா? அதாவது ஈழத்தமிழரைப் பாவித்து மீண்டும் இலங்கையைக் கட்டுக்குள் கொண்டுவர இந்தியா முனைகிறதா? 

1) இது உண்மை. இந்தியா ஏற்கனவே இது தொடர்பாக செயலில் இறங்கிவிட்டது என்பது உண்மை. 

2) காங்கிரசின் தவறுகள் என்று அவர்கள் கருதுவது - இலங்கை இந்திய ஒப்பத்தில் இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான அம்சங்கள் அதில் உள்ளடக்கப்படவில்லை / மிகக் குறைவாக உள்ளது என்பதாக இருக்கலாம். மிகச் சிறந்த ஒப்பந்தமாக இருந்திருந்தால் (1 -  புலிகள் இந்திய யுத்தம் ஏற்பட்டிருக்காது (2 -  இலங்கையில் சீனாவின் பிரசன்னம் இல்லாதிருந்திருக்கும்

3) ஈழத் தமிழருக்கு உண்மையான தீர்வென்று அவர்கள் கூறுவது -  தனது நலன்களை பாதுகாத்தல். எவ்வாறு பாதுகாப்பார்கள் ? தங்களுக்கு நம்பிக்கையான தரப்பின் நலன்களை பாதுகாத்தல்(😂). இதற்கு தமிழரைத் தவிர வேறு யாரும் இலங்கையில் இல்லை ? 

4) பிரபாகரன் இல்லாத இடத்தில் எதுவுமே சாத்தியம். 

5) BJP என்பது எப்போதுமே கடிப்பதற்கு ஆயத்தமாக உள்ள வேட்டை நாய்க்கு ஒப்பானது. அதனது வேகமும் ஆக்ரோசமும் காங்கிரசிடம் இல்லை.

6) தமிழகத்தில் காலூன்றுவதால் BJP க்கு நீண்டகால நோக்கில் மதம் சார்ந்த நலனைத்தவிர வேறு பயன்கள் ஏதும் உண்டா ? 

7) அதற்கான நாடிபிடித்துப்பார்க்கும் வேலை ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது. அண்மையில் நாடுகடந்த அரசாங்கத்தின்(😏) உருத்திரகுமாரனோடு பேசுவதற்கு RAW வின் Director மட்டத்தில் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர் மறுத்துவிட்டார். ஆனால் அவர்கள் அத்துடன் நிறுத்தமாட்டார்கள் என்பது திண்ணம். 

😎 இதுதான் உண்மையான நிலவரம். எமது மக்களின் அழிவை எப்படித் தடுப்பது / குறைப்பது 🤥

எமது நலன்களை எவ்வாறு பாதுகாப்பது / உறுதிப்படுத்திக்கொள்வது 🤥

(சகல பிரச்சனைக்கும் காரணம் இந்தியர்களின் நேர்மையின்மை. சாமானிய இந்தியரிடமிருந்து இந்திய அரசாங்கம் வரை நேர்மையின்மையையும் சுயநலத்தையும் நாம் நாளாந்தம் காண்கிறோம் ☹️)

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

பதினெட்டு வயது பையனையும், கர்ப்பிணிப்பெண்ணையும் பென் டோச் பற்றி வாங்கி அதன்மூலம் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் என்று கதை ஜோடித்து, அவர்களது இளமையையும், எதிர்காலத்தையும், உடல் நலத்தையும் பாழாக்கின இந்தியாவின் புலனாய்வையும், அதன் சாமர்த்தியதையும்  பாராட்டாமல் இருக்க முடியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

அந்த ஒழுக்கமற்ற சாமார்த்தியம்தான்(😏) இத்தனை அழிவுகளையும் எங்களுக்கு தந்தது. அதனால்தான் நாங்கள் சாதுரியமாக  இருக்கவேண்டும். இல்லையேல் அடுத்த அழிவுடன் நாங்கள் நிரந்தர அடிமைகளாக்கப்படுவோம். 🤥

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரஞ்சித் said:

ஈழத்தமிழருக்கு நிரந்தரமான நீதியான அரசியல்த் தீர்வொன்றினை இந்தியா அழுத்தங்கள் மூலம் பெற்றுக்கொடுக்க முன்வந்தால், இதுகுறித்து ஈழத்தமிழரின் நிலைப்பாடு எப்படி இருக்கப்போகிறது?

முன்னர் இருந்தே சொல்லி வருவது
ஈழத்தமிழர்கள் தமிழீழம் வேண்டாம் என்றாலும் இந்தியா அமெரிக்காவுக்கு தேவை என்றால் பிறந்தே தீரும்.அதற்கேற்ற உலக சூழல் அனேகமாக அடுத்த 5 வருடத்தில் ஏற்படலாம்.
எல்லாம் எனது கனவே.
தமிழ்நாட்டில் இரண்டு பெரும் திராவிட கட்சிகளும் ஊழலுக்குள் அமிழ்ந்து வெளியே வர முடியாதவாறு இருக்கிறார்கள்.
பிஜேபி தமிழ்நாட்டை ஒரு சவாலாக எடுத்து காலடி வைக்கிறது போலவே தெரிகிறது.
2021 தேர்தலில் இதன் எண்ணக் கரு வெளியே தெரிய வரும்.

இப்போ உள்ள குழப்பம் இந்தி படிப்பதா சீன பாசை படிப்பதா?

23 hours ago, அக்னியஷ்த்ரா said:

என்ன குருசோ 
சைக்கிள் கப்பில் தேசியவாதிகள் மீதும் இணைய போராளீஸ் மீதும் கடாவெட்டி விட்டு 
ஹிந்தியக்குடியரசு தினத்திற்கு யாழ் மாநகரமே வண்ண மயமாக மின்னியதை பற்றி அசிப்பே காட்டாமல் போறீங்கோ, வட மாகாணம் RAW இன் கோட்டையாம் என்று இங்கால கத அடிபடுது, ஆமை புகுந்த வீட்டுக்கும்  RAW புகுந்த நாட்டுக்கும் என்ன நடக்கும் என்பது பால பாடம்     

இந்தியா தனது சுய நலத்துக்காக எதுவும் செய்யும். அங்குதான் தேசியவாதிகள் மாட்டிக்கொள்ளுகிறார்கள். போராளிகள் மாட்டிக்கொண்டதும் அங்குதான். தேசியவாதிகள், சைக்கிளில் போட்டியிடடவர்கள் இப்போது என்ன சொல்லுகிறார்கள். ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வாம், ஒற்றையாட்சியை ஏற்றுத்தான் சத்யபிரமணமாம். அவர்கள்தான் எதனை காலத்துக்கு ஏமாற்றுவார்களோ, நீங்கள்தான் எதனை காலத்துக்கு ஏமாறப்போகிறீர்களோ?

23 hours ago, ரஞ்சித் said:

நீங்கள் அடிக்கடி இந்தப் பதத்தினைப் பாவித்துவருகிறீர்கள். இதன் மூலம் நீங்கள் குறிப்பிடுவது எதனை. இவர்கள் பேசுவது போலித்தேசியம் என்றால், உண்மையான தேசியம் என்றால் என்னவென்று கூறமுடியுமா? அதை இன்று செய்துவருவது யாரென்றும் அடையாளப்படுத்தினீர்கள் என்றால் எமக்குப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும் என்பதால் கேட்கிறேன்.

நாடு ரோடில் கொண்டு வந்து விடுவதுதானா தேசியம். நாங்கள் தமிழ் தேசியம் பேசுவதில்லை. தமிழ் தேசியம்  பேசுபவர்கள்தான் இதட்கு விளக்கமளிக்க வேண்டும். யார் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு அரசியல் செய்கிறார்கள் எண்டு தெரியாமலிருப்பது ஆச்சரியமாக இருக்குது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.