Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் புகையிலை பாவனைக்குத் தடை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

SAM_1195.jpg

இலங்கையில் புகையிலை பாவனைக்குத் தடை

இலங்கையில் புகையிலைச் சார்ந்த பொருட்கள் விற்பனை, காட்சிப்படுத்தல் மற்றும் பொது பயன்பாடு ஆகியவற்றுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மருந்துகள், புகையிலை மற்றும் ஆல்கஹால் தடுப்புக்கான புதிய செயற்திட்டத்தை உருவாக்கும் பயிற்சி திட்டத்தில் இன்று (திங்கட்கிழமை)  உரையாற்றும்போதே புகையிலை மற்றும் ஆல்கஹால் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் மருத்துவர் சமாதி ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

புகையிலை நிக்கொட்டீனா என்னும் பேரினத்தைச் சேர்ந்த தாவரத்தின் இலைகளிலிருந்து செய்யப்படுகின்றது. மிகப் பழங்காலம் தொட்டே இது அமெரிக்கக் கண்டத்தில் பயன்பட்டு வந்துள்ளது.

ஐரோப்பியர்கள் அமெரிக்காவுக்கு வந்ததிலிருந்து இது ஒரு வணிகப் பண்டம் ஆனதுடன், பொழுதுபோக்குத் தேவைகளுக்கான ஒரு பொருளாகவும் பிரபலமானது.

இதனை இலங்கை மக்களும் வெற்றிலை பாக்குடன் இணைத்து உண்பதுடன் புகைத்தலுக்கும் பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/இலங்கையில்-புகையிலை-பாவன/

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழர்களின் வாழ்வை அழிப்பதற்கு அவர்களை மேம்படுத்தும் துறைகளை இல்லாதொழிக்க வேண்டும். விவசாயத் துறையில் புகையிலைச் செய்கை ஆண்டாண்டு காலமாக அவர்களுக்கு பெரும் பொருளீட்டிக் கொடுத்துவந்தது. அதனைத் தடுப்பதற்கு ஓர் உபாயமாக இந்த புகையிலைப் பாவனைத் தடையையும் நோக்க இடமுண்டு. "அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" புகையிலையையும் அளவோடு பாவித்தால் கேடில்லை. புகையிலை பாவித்தும் மிகுந்த அறிவோடும், அதிக ஆயுளோடும் வாழ்ந்தவர்கள் சாட்சி. 

Quellbild anzeigen

39980486735_fc778dfeae_b.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இதனால் வந்த வரி வட்டி இஸ்தியா இஸ்தியா எல்லாம்.. எனி.. போதைப்பொருள் விற்பனையால் வரும் போல. மகிந்த கோத்தா கும்பல்.. போதைப்பொருள் வியாபாரத்தை சட்ட ரீதியாக்கினாலும் ஆச்சரியமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, nedukkalapoovan said:

அப்ப இதனால் வந்த வரி வட்டி இஸ்தியா இஸ்தியா எல்லாம்.. எனி.. போதைப்பொருள் விற்பனையால் வரும் போல. மகிந்த கோத்தா கும்பல்.. போதைப்பொருள் வியாபாரத்தை சட்ட ரீதியாக்கினாலும் ஆச்சரியமில்லை. 

அப்போ சிகரெட் விற்பனையால் வரும் வரி வட்டி மக்களுக்கும் மகிழ்ச்சி தருகிறது போலக் கொள்ளலாமா??.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

இலங்கையில் தமிழர்களின் வாழ்வை அழிப்பதற்கு அவர்களை மேம்படுத்தும் துறைகளை இல்லாதொழிக்க வேண்டும். விவசாயத் துறையில் புகையிலைச் செய்கை ஆண்டாண்டு காலமாக அவர்களுக்கு பெரும் பொருளீட்டிக் கொடுத்துவந்தது. அதனைத் தடுப்பதற்கு ஓர் உபாயமாக இந்த புகையிலைப் பாவனைத் தடையையும் நோக்க இடமுண்டு. "அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" புகையிலையையும் அளவோடு பாவித்தால் கேடில்லை. புகையிலை பாவித்தும் மிகுந்த அறிவோடும், அதிக ஆயுளோடும் வாழ்ந்தவர்கள் சாட்சி. 

Quellbild anzeigen

39980486735_fc778dfeae_b.jpg

புகையிலைச் செய்கையிலீடுபட்டவர்களுக்கு வேறு மாற்றுப் பயிர்ச் செய்கை ஏற்கனவே அறிமுகப்ப்டுத்தப்பட்டு வறுகிறது. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

புகையிலைச் செய்கையிலீடுபட்டவர்களுக்கு வேறு மாற்றுப் பயிர்ச் செய்கை ஏற்கனவே அறிமுகப்ப்டுத்தப்பட்டு வறுகிறது. 🙂

நீங்கள் சொல்வது சரி.இலங்கையில்  பெரும்பான்மையினர் சிறுபான்மையினரின் நலன்களை வறுகுவதில்தான் குறியாக உள்ளனர். 😲

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Kapithan said:

புகையிலைச் செய்கையிலீடுபட்டவர்களுக்கு வேறு மாற்றுப் பயிர்ச் செய்கை ஏற்கனவே அறிமுகப்ப்டுத்தப்பட்டு வறுகிறது. 🙂

மாற்றுப்பயிர் எண்டால் நாகதாளியா? 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

மாற்றுப்பயிர் எண்டால் நாகதாளியா? 

கத்தாழை

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

மாற்றுப்பயிர் எண்டால் நாகதாளியா? 

கள்ளி எண்டு நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, Nathamuni said:

கத்தாழை

5 hours ago, Kapithan said:

கள்ளி எண்டு நினைக்கிறேன். 

 இவை  இலங்கை மக்களின் பாவனையில் உள்ள தாவரங்களா? 😎

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

 இவை  இலங்கை மக்களின் பாவனையில் உள்ள தாவரங்களா? 😎

கத்தாழை, முகஅலங்காரத்துக்கு பாவிக்கப்படுவதால், கிராக்கி உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, Nathamuni said:

கத்தாழை, முகஅலங்காரத்துக்கு பாவிக்கப்படுவதால், கிராக்கி உள்ளது.

அதாவது புகையிலையைப்போல் பணப்பயிர்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

அதாவது புகையிலையைப்போல் பணப்பயிர்.

அப்படி சொல்ல முடியாது, காரணம் நேற்று பாக்கி கடையில் பார்த்தேன்.

உள்ள இருக்கும், நுங்கு போன்ற சதைப்பகுதி யை (சோறு) சமைக்கிறார்கள்

என்னைப் பொறுத்த வரை, புலம்பெயர் தமிழர் சந்தையை இலக்கு வைப்பதே அவ்களுக்கு நல்லது.

ஆனாலும் அதற்கான அரச ஆதரவு இல்லை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, Nathamuni said:

அப்படி சொல்ல முடியாது, காரணம் நேற்று பாக்கி கடையில் பார்த்தேன்.

உள்ள இருக்கும், நுங்கு போன்ற சதைப்பகுதி யை (சோறு) சமைக்கிறார்கள்

என்னைப் பொறுத்த வரை, புலம்பெயர் தமிழர் சந்தையை இலக்கு வைப்பதே அவ்களுக்கு நல்லது.

ஆனாலும் அதற்கான அரச ஆதரவு இல்லை.

சிறிலங்கா அரசு தமிழர்களுக்கு ஒரு சுதந்திர வர்த்தக வலயத்தை அமைக்க விட்டாலே போதும் எம்மவர்களின் விவசாயத்தை புலம்பெயர் தமிழர்களே ஊக்குவித்து கொள்வனவு செய்யலாம்.பனை தென்னை உற்பத்தி பொருட்கள் மற்றும் கடல் உணவுகள் என பலதையும் புலம்பெயர் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.
10 வருடத்தில் தமிழர்பகுதி செல்லச்செழிப்புடன் முன்னேறிவிடும்.
இதற்கு எமது அரசியல்வாதிகள் மிகுந்த பிரயத்தனம் எடுக்க வேண்டும்.
ஜேர்மனியில் வசிக்கும் துருக்கியர்களும்.....இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்களும் இதற்கு நல்ல உதாரணங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

 இவை  இலங்கை மக்களின் பாவனையில் உள்ள தாவரங்களா? 😎

நாகதாழி பாவனையிலிருக்கிறதா 🙃

  • கருத்துக்கள உறவுகள்

இதனை முதல்வராக விக்கியர், நல்லாட்சி காலத்தில் செய்து இருக்க வேண்டியது. ஆனாலும் அபிவிருத்திக்கு முன்னர் உரிமை என்ற நிலைப்பாடும் தவறில்லை தானே.

4 minutes ago, குமாரசாமி said:

சிறிலங்கா அரசு தமிழர்களுக்கு ஒரு சுதந்திர வர்த்தக வலயத்தை அமைக்க விட்டாலே போதும் எம்மவர்களின் விவசாயத்தை புலம்பெயர் தமிழர்களே ஊக்குவித்து கொள்வனவு செய்யலாம்.பனை தென்னை உற்பத்தி பொருட்கள் மற்றும் கடல் உணவுகள் என பலதையும் புலம்பெயர் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.
10 வருடத்தில் தமிழர்பகுதி செல்லச்செழிப்புடன் முன்னேறிவிடும்.
இதற்கு எமது அரசியல்வாதிகள் மிகுந்த பிரயத்தனம் எடுக்க வேண்டும்.
ஜேர்மனியில் வசிக்கும் துருக்கியர்களும்.....இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்களும் இதற்கு நல்ல உதாரணங்கள்...

Just now, Kapithan said:

நாகதாழி பாவனையிலிருக்கிறதா 🙃

இருக்கிறது..... அதுகளை ஆய்ந்து, கெடுதியான நச்சு இல்லை என்றவுடன் மேக்கப் பொருளாக்கி பணம் பார்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Paanch said:

இலங்கையில் தமிழர்களின் வாழ்வை அழிப்பதற்கு அவர்களை மேம்படுத்தும் துறைகளை இல்லாதொழிக்க வேண்டும். விவசாயத் துறையில் புகையிலைச் செய்கை ஆண்டாண்டு காலமாக அவர்களுக்கு பெரும் பொருளீட்டிக் கொடுத்துவந்தது. அதனைத் தடுப்பதற்கு ஓர் உபாயமாக இந்த புகையிலைப் பாவனைத் தடையையும் நோக்க இடமுண்டு. "அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" புகையிலையையும் அளவோடு பாவித்தால் கேடில்லை. புகையிலை பாவித்தும் மிகுந்த அறிவோடும், அதிக ஆயுளோடும் வாழ்ந்தவர்கள் சாட்சி. 

Quellbild anzeigen

39980486735_fc778dfeae_b.jpg

பிரபலமான சே குவேரா சுருட்டுப் புகைக்கிறார், மிக வயதான தோற்றமுள்ள ஆட்சி (அவவுக்கு வயது 50 ஆகக் கூட இருக்கலாம், புகைப் பழக்கத்தால் இப்படி ஆகியிருக்கலாம்!) சுருட்டுப் பிடிக்கிறார், அதனால் அளவோடு பாவித்தால் கேடில்லை என்கிறீர்களா? 

உண்மையில் புகையிலையை நேரடியாக புகைக்க அனுமதிக்கும் தயாரிப்புகளான சுருட்டு, பீடி என்பன பில்ரர் பொருத்திய சிகரட்டுகளை விட ஆபத்தானவை! பில்ரர் இல்லாததால் எல்லா புற்று நோய் தரும் பொருட்களும் நேரே சுவாசக் குழாயினுள் செல்லும். ஊரில் வாய்ப்புற்று நோய் அதிகம் உருவாக புகையிலையை வெற்றிலையோடு சேர்த்து வாயில் அதக்கும் பழக்கம் பிரதான காரணம். 

தீமைகள் மட்டுமே தரும் இந்தப் பயிரை உற்பத்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nedukkalapoovan said:

. போதைப்பொருள் வியாபாரத்தை சட்ட ரீதியாக்கினாலும் ஆச்சரியமில்லை. 

கஞ்சாவை   பயிரிடுவதற்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று சில தேரர்கள் அரசாங்கத்திடம் அனுமதி கோரியிருந்தனர். பவுத்தத்துக்கு முன்னுரிமை அளித்ததால், பிக்குகள் கேட்கக் கூடாதையெல்லாம் கேக்கபோகுதுகள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

தீமைகள் மட்டுமே தரும் இந்தப் பயிரை உற்பத்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை!

உங்கள் கருத்தில் உண்மை உள்ளது. 

3 hours ago, Justin said:

சுருட்டு, பீடி என்பன பில்ரர் பொருத்திய சிகரட்டுகளை விட ஆபத்தானவை! பில்ரர் இல்லாததால் எல்லா புற்று நோய் தரும் பொருட்களும் நேரே சுவாசக் குழாயினுள் செல்லும்.

அப்போ சுருட்டுக்கும் பில்ரர் போடவேண்டும் என்று வலியுறுத்தலாமே,? எதற்காக உற்பத்தியையே தடைசெய்ய வேண்டும்...?? 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

பிரபலமான சே குவேரா சுருட்டுப் புகைக்கிறார், மிக வயதான தோற்றமுள்ள ஆட்சி (அவவுக்கு வயது 50 ஆகக் கூட இருக்கலாம், புகைப் பழக்கத்தால் இப்படி ஆகியிருக்கலாம்!) சுருட்டுப் பிடிக்கிறார், அதனால் அளவோடு பாவித்தால் கேடில்லை என்கிறீர்களா? 

உண்மையில் புகையிலையை நேரடியாக புகைக்க அனுமதிக்கும் தயாரிப்புகளான சுருட்டு, பீடி என்பன பில்ரர் பொருத்திய சிகரட்டுகளை விட ஆபத்தானவை! பில்ரர் இல்லாததால் எல்லா புற்று நோய் தரும் பொருட்களும் நேரே சுவாசக் குழாயினுள் செல்லும். ஊரில் வாய்ப்புற்று நோய் அதிகம் உருவாக புகையிலையை வெற்றிலையோடு சேர்த்து வாயில் அதக்கும் பழக்கம் பிரதான காரணம். 

தீமைகள் மட்டுமே தரும் இந்தப் பயிரை உற்பத்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை!

இது சிகரெட்டுக்குரிய மூலப்பொருள் தானே ஏற்றுமதி செய்யலாம் தானே. பீடி, சுருட்டு உற்பத்தியை தடை செய்து விட்டு புகையிலையை ஏற்றுமதி செய்யலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, Justin said:

பிரபலமான சே குவேரா சுருட்டுப் புகைக்கிறார், மிக வயதான தோற்றமுள்ள ஆட்சி (அவவுக்கு வயது 50 ஆகக் கூட இருக்கலாம், புகைப் பழக்கத்தால் இப்படி ஆகியிருக்கலாம்!) சுருட்டுப் பிடிக்கிறார், அதனால் அளவோடு பாவித்தால் கேடில்லை என்கிறீர்களா? 

உண்மையில் புகையிலையை நேரடியாக புகைக்க அனுமதிக்கும் தயாரிப்புகளான சுருட்டு, பீடி என்பன பில்ரர் பொருத்திய சிகரட்டுகளை விட ஆபத்தானவை! பில்ரர் இல்லாததால் எல்லா புற்று நோய் தரும் பொருட்களும் நேரே சுவாசக் குழாயினுள் செல்லும். ஊரில் வாய்ப்புற்று நோய் அதிகம் உருவாக புகையிலையை வெற்றிலையோடு சேர்த்து வாயில் அதக்கும் பழக்கம் பிரதான காரணம். 

தீமைகள் மட்டுமே தரும் இந்தப் பயிரை உற்பத்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை!

இஞ்சை பாரடா இவர்ரை வியக்கியானத்தை....
உலகம் முழுக்க ஆபத்தான போதைப்பொருட்கள் விற்கிறார்கள்.அதைப்பற்றியெல்லாம் கதைக்க மாட்டாராம்.தமிழர் வாழ்வாதர பயிர் எண்டவுடனை சிங்களத்துக்கு மிண்டு குடுக்க வந்திட்டார்.

உலகத்திலை உந்த கெமிக்கல் நிறைஞ்ச சாப்பாட்டை சாப்பிட்டு சாகிற சனத்தொகையை விட பொயிலை ஒண்டும் பெரிய விக்கனமில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

சிறிலங்கா அரசு தமிழர்களுக்கு ஒரு சுதந்திர வர்த்தக வலயத்தை அமைக்க விட்டாலே போதும் எம்மவர்களின் விவசாயத்தை புலம்பெயர் தமிழர்களே ஊக்குவித்து கொள்வனவு செய்யலாம்.பனை தென்னை உற்பத்தி பொருட்கள் மற்றும் கடல் உணவுகள் என பலதையும் புலம்பெயர் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.
10 வருடத்தில் தமிழர்பகுதி செல்லச்செழிப்புடன் முன்னேறிவிடும்.
இதற்கு எமது அரசியல்வாதிகள் மிகுந்த பிரயத்தனம் எடுக்க வேண்டும்.
ஜேர்மனியில் வசிக்கும் துருக்கியர்களும்.....இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்களும் இதற்கு நல்ல உதாரணங்கள்...

விக்கியர் காலத்தில் சுதந்திர வர்தக வலையம் என்றில்லாமல்- முதலமைச்சர் நிதியம் மூலம் புலம் பெயர் முதலீடுகளை ஒருங்கிணைக்கும் திட்டம் முயற்சிக்கபட்டது. 

விக்கியர் தரப்பில் உண்மையிலேயே முயற்சித்தும் தெற்கில் இருந்து அனுமதி கிடைக்கவில்லை.

காரணங்கள்

1. தனியே தமிழர் பகுதிக்கு இப்படி ஒரு நிதித்சுதந்திரத்தை கொடுப்பது பேரினவாததுக்கு ஆபத்தானது.

2. விக்கியரை வைத்துக்கொண்டு கொள்ளை அடிக்க முடியாது.

விக்கியர் ஒன்றும் செய்யவில்லை என்பதை விட ஒன்றும் செய்யவிடபடவில்லை என்பதே சரி.

  • கருத்துக்கள உறவுகள்

கனகலிங்கம் சுருட்டை பற்றி யாரும் கேள்விப்ப்ட்டுள்ளீர்களா? அதுபோல் செய்யது பீடி? இவைகள் இலங்கை வானோலியில் முன்பு விளம்பரம் செய்யப்படும். 

யாழில் 70 / 80களில் எத்தனை சுருட்டு உற்பத்தியாளர்கள் இருந்தார்கள்? யாருக்கும் விபரம் தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, colomban said:

கனகலிங்கம் சுருட்டை பற்றி யாரும் கேள்விப்ப்ட்டுள்ளீர்களா? அதுபோல் செய்யது பீடி? இவைகள் இலங்கை வானோலியில் முன்பு விளம்பரம் செய்யப்படும். 

யாழில் 70 / 80களில் எத்தனை சுருட்டு உற்பத்தியாளர்கள் இருந்தார்கள்? யாருக்கும் விபரம் தெரியுமா?

கனகலிங்கம் பச்சை/மஞ்சள் கலர் லேபிளா?

கனகலிங்கத்தின் போட்டியாளர் நவரட்ணம் சுருட்டு கம்பெனியில்தான் நான் முன்பு விடுமுறை நாட்களில் விளையாடப்போவது🤣. வெள்ளை நீல லேபல்.

வரிசையாக அமர்ந்து சுருட்டு சுத்துவதும், சுத்தியபின் அதன் நுனிகளை கத்தரிக்கோலால் நறுக்குவதும் வெகு நயமாக இருக்கும்.

கட்டு கட்டாக கட்டி, பின் கோடாவில் ஊறவிட்டு, லேபள் ஒட்டி, ரெஜிப்போம் பெட்டியில் அடுக்குவார்கள். அந்த அறைக்கு போனாலே ஒரு தலையை சுற்றும் மணம் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இஞ்சை பாரடா இவர்ரை வியக்கியானத்தை....
உலகம் முழுக்க ஆபத்தான போதைப்பொருட்கள் விற்கிறார்கள்.அதைப்பற்றியெல்லாம் கதைக்க மாட்டாராம்.தமிழர் வாழ்வாதர பயிர் எண்டவுடனை சிங்களத்துக்கு மிண்டு குடுக்க வந்திட்டார்.

உலகத்திலை உந்த கெமிக்கல் நிறைஞ்ச சாப்பாட்டை சாப்பிட்டு சாகிற சனத்தொகையை விட பொயிலை ஒண்டும் பெரிய விக்கனமில்லை .

ஓமண்ணை, #நம் முன்னோர் என்ன மூடர்களா?. 

சிங்களவன் கருத்துக்கு 200 ரூபா தாறான், நான் எழுதுறன், நல்ல ரேட் தந்தால் உங்களுக்கு மிண்டு குடுக்கிறன்!😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.