Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராகப் பேராசிரியர் சிறிசற்குணராஜா நியமனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராகப் பேராசிரியர் சிறிசற்குணராஜா நியமனம்

August 27, 2020

spacer.png

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராகப் பேராசிரியர் சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டிருக்கின்றார். இது தொடர்பான நியமனக் கடிதம் இன்று பகல் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்குக் கிடைத்திருக்கின்றது.

பல்கலைக்கழக கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றின் பரிந்துரைகளுடன் கிடைத்த மூன்று பெயர்களில் இருந்து, பல்கலைக் கழகப் பேரவை மதிப்பீட்டின் படி முதல் நிலையைப் பெற்றருந்த பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
http://thinakkural.lk/article/64843

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழக கணிதப் புள்ளிவிபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா அவர்கள் துணைவேந்தராக நியமனம் பெற்ற இந்த மட்டற்ற சந்தோஷமான  செய்திக்காக பல வருடங்கள் காத்திருந்தோம். 

தேர்தல் முடிந்த பின்னர் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவுசெய்யப்படுவார் என அறிந்தநாள் முதல் ஒவ்வொரு காலையும் செய்தி இணையத் தளங்களில் இச்செய்தி வந்திருக்கின்றதா என்று பார்ப்பதுதான் முதல்வேலை.  போன தடவை பல்கலைக்கழகப் பேரவை மதிப்பீட்டின் படி முதல் நிலையைப் பெற்றிருந்தும் தெரிவு செய்யப்படாமல் தவிர்க்கப்பட்டதுபோல இந்தத் தடவையும் நடக்கலாமோ என்ற சிறிய பதற்றம் இருந்தாலும் இரண்டு நாட்களின் முன்னர் முகநூலில் புதிய படம் வந்தபோது நம்பிக்கை துளிர்விட்டிருந்தது.

எங்களுக்கெல்லாம் படிப்பிலும், விளையாட்டிலும் மட்டுமல்லாமல் சமூக விடயங்களில் அக்கறை காட்டவும், தாயகத்தை விட்டுப் புலம்பெயர்ந்தபோதும் புலம்பெயர் தேசத்தில் முன்னோக்கிச் செல்லவும் பல வழிகளிலும் வழிகாட்டியாக இருந்த “குணம் அண்ணா” என நாங்கள் அன்புடனும் அழைக்கும் பேராசிரியர் சிறிசற்குணராஜாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.🙏🏿🙏🏿🙏🏿

எமது மண்ணின் மைந்தன் என்பதிலும் மிகவும் பெருமிதம் கொள்கின்றோம்.😊

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

யாழ் பல்கலைக்கழக கணிதப் புள்ளிவிபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா அவர்கள் துணைவேந்தராக நியமனம் பெற்ற இந்த மட்டற்ற சந்தோஷமான  செய்திக்காக பல வருடங்கள் காத்திருந்தோம். 

எங்களுக்கெல்லாம் படிப்பிலும், விளையாட்டிலும் மட்டுமல்லாமல் சமூக விடயங்களில் அக்கறை காட்டவும், தாயகத்தை விட்டுப் புலம்பெயர்ந்தபோதும் புலம்பெயர் தேசத்தில் முன்னோக்கிச் செல்லவும் பல வழிகளிலும் வழிகாட்டியாக இருந்த “குணம் அண்ணா” என நாங்கள் அன்புடனும் அழைக்கும் பேராசிரியர் சிறிசற்குணராஜாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.🙏🏿🙏🏿🙏🏿

எமது மண்ணின் மைந்தன் என்பதிலும் மிகவும் பெருமிதம் கொள்கின்றோம்.😊

மட்டற்ற மகிழ்ச்சி. அவருடன் சேர்ந்து  ஒரே  கிரிக்கெட் அணியில் விளையாடிய ஞாபகங்கள் இப்போதும் இருக்கிறது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Eppothum Thamizhan said:

மட்டற்ற மகிழ்ச்சி. அவருடன் சேர்ந்து  ஒரே  கிரிக்கெட் அணியில் விளையாடிய ஞாபகங்கள் இப்போதும் இருக்கிறது!

நான் அவருடைய கடைசித் தம்பியை விடவும் வயது குறைந்தவன். எப்போதும் தமிழன் என்னிலும் பார்க்க இளமையானவர் என்று நினைத்தேன்!😁

அவர் 1988/89 இல் PhD முடித்து திரும்பவும் ஊருக்கு வந்து யாழ் பல்கலைக் கழகத்தில் lecturer ஆக இருந்தபோது பின்னேரங்களிலும், வார இறுதிகளிலும் எங்களுடன் football, volleyball  விளையாடுவார். அத்துடன் 304 விளையாடிக்கொண்டிருந்த எங்களுக்கு Literature என்ற cards game ஐ அறிமுகப்படுத்தினார். அது பிடிபட்டதும் நாங்கள் எல்லோரும் addicted ஆகிவிட்டோம்!

  • கருத்துக்கள உறவுகள்

எ.பொ.த கிருபனின் பதிவுகளை வைத்து - இது ஒரு நல்ல தெரிவாக தெரிகிறது. வழமையாக யாழின் அரசியல்வாதிகள் தலையீடு இதில் இருக்கும். அப்படி இருந்தும் ஒரு வல்லவர் நல்லவர் தெரிவாகி இருப்பது சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

மட்டற்ற மகிழ்ச்சி. அவருடன் சேர்ந்து  ஒரே  கிரிக்கெட் அணியில் விளையாடிய ஞாபகங்கள் இப்போதும் இருக்கிறது!

மிக்க மகிழ்ச்சி, இவரிடம் நான் பௌதிகம் படித்தது மட்டுமல்ல கிரிக்கெட்டில் இவரது அணிக்கு எதிராக விளையாடி இருக்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

நான் அவருடைய கடைசித் தம்பியை விடவும் வயது குறைந்தவன். எப்போதும் தமிழன் என்னிலும் பார்க்க இளமையானவர் என்று நினைத்தேன்!😁

அவர் 1988/89 இல் PhD முடித்து திரும்பவும் ஊருக்கு வந்து யாழ் பல்கலைக் கழகத்தில் lecturer ஆக இருந்தபோது பின்னேரங்களிலும், வார இறுதிகளிலும் எங்களுடன் football, volleyball  விளையாடுவார். அத்துடன் 304 விளையாடிக்கொண்டிருந்த எங்களுக்கு Literature என்ற cards game ஐ அறிமுகப்படுத்தினார். அது பிடிபட்டதும் நாங்கள் எல்லோரும் addicted ஆகிவிட்டோம்!

ஆனால் அவருக்கு Basketball பிடிக்காதென்று நினைக்கிறேன் 😂

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலை உபவேந்தர் சிறிசற்குணராஜாவுடன் வகுப்பு 9 இல் இருந்து 12 வரை ஒரே வகுப்பில் பயின்றவன் என்ற முறையில் இது எனக்கு மிகவும் விசேடமானதொரு விடயம்.  அவருக்கு அவுஸ்திரேலியாவிற்கு புலம்பெயரும் வாய்ப்புகள் இருந்தும்  விடுத்து நாட்டிலேயே இருந்திட தீர்மானித்த ஒருவர்.   உங்களுடன் சேர்ந்து யாழ் களத்திலும்   அவரை வாழ்த்துவதில் பெருமையும் மகிழ்வும்…
கொசுறு ஒன்று::
 பாடசாலை நாட்களில் பிந்தி வந்து சரியான காரணம் இல்லாவிடில் தண்டனை உண்டு;  சாதாரணமாக பிரம்படி தான்.
 இப்படித் தான் ஒருநாள் சிறிசற்கு பிந்தி வந்து வரிசையில் விளக்கத்துக்கு காவல் நின்று ஏன் பிந்தி வந்தாய் என்று ஆசிரியர் கேட்ட நேரம் “ வராமலே  விட்டிருந்தால் கூடுதல் தண்டனை கிடைத்திருக்கும்,  அதனால் தான் பிந்தி வந்தேன்”  என்று சொல்ல , ஆசிரியருக்கு சிரிப்பு வர,  அன்று சிறிசற்குவுடன் பிந்தி வந்த ஏனைய மாணவர்களும் பிரம்படியில் இருந்து தப்பியது இற்றை வரை நண்பர்கள் வட்டத்தில் ஒரு பேசு பொருள் …..
 
சிங்கள மாணவர்களாலும், தமிழ் மாணவர்களாலும் போற்றப்படும் பேராசிரியர் துரைராஜாவைப்போல இவரும் யால் பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்துக்காக பாடுபடுவர் என எதிர்பார்க்கலாம்.வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலை துணைவேந்தர் கடையேற்றார்!😂

1-7-720x450-1.jpg?189db0&189db0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் மூத்த பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா இன்று (28) காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் இடம்பெற்ற சமய வழிபாடுகளைத் தொடர்ந்து, பீடாதிபதிகள், பல்கலைக்கழகப் பதிவாளர், விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பணியாளர்களால் துணைவேந்தர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்ட பேராசிரியர் சிறிசற்குணராஜா தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

https://newuthayan.com/யாழ்-பல்கலை-துணைவேந்தர்-2/

  • கருத்துக்கள உறவுகள்

சர்வசாதாரணமாக நிகழ வேண்டிய ஒரு கல்வியல்..நிகழ்வுக்கு ஏன் இந்தளவு பிடுங்குப்பாடுகள்..??! சிங்களம் இதில் எதைக் காட்ட நினைக்கிறது..???! 

எதுஎப்படியோ.. புதிய துணைவேந்தர் பல்கலைக்கழக சமூகத்திற்கும்.. அந்த மண் சார்ந்த மக்களுக்கும் பயனுள்ளதைச் செய்வார் என்று நம்புவோமாக. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person

Prof.Sivakolundu Srisatkunarajah (BSc (Hons.-Jaffna), Dip.in.Ed(OUSL), PhD(Heriot-Watt)) was elected as Vice Chancellor for Jaffna University in Merit Basis. He scored 82 points out of 100 was in the top of the list. This is first time the selection process was purely based on merit basis without political influence as far I know. ( Other scores were 72 and 71).

யாழ் இந்து முகநூல்.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் நல்லவர் வல்லவர் என்பதால் நானும் வாழ்த்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, கிருபன் said:

30 ஆண்டுகளுக்கு முதல் ஆறு மாதம் இவரிடம் கற்க வேண்டிய கட்டாயம், அந்த நேர சற்கு எங்கே ???

 குரலின் மிடுக்கில் எத்தனை மாற்றங்கள் - நன்றி கிருபன் இணைப்பிற்கு

வாழ்த்துக்கள் சற்கு சேர்

நல்லா புகை தண்ணி, காலம் மாறிப்போச்சு

நெத்தியில் இப்ப பட்டை, இதுதான் காலமாற்றம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild könnte enthalten: 1 Person, Text

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

நான் அவருடைய கடைசித் தம்பியை விடவும் வயது குறைந்தவன். எப்போதும் தமிழன் என்னிலும் பார்க்க இளமையானவர் என்று நினைத்தேன்!😁

அவர் 1988/89 இல் PhD முடித்து திரும்பவும் ஊருக்கு வந்து யாழ் பல்கலைக் கழகத்தில் lecturer ஆக இருந்தபோது பின்னேரங்களிலும், வார இறுதிகளிலும் எங்களுடன் football, volleyball  விளையாடுவார். அத்துடன் 304 விளையாடிக்கொண்டிருந்த எங்களுக்கு Literature என்ற cards game ஐ அறிமுகப்படுத்தினார். அது பிடிபட்டதும் நாங்கள் எல்லோரும் addicted ஆகிவிட்டோம்!

அவர் PhD முடித்த ஆண்டில்தான் நான் பல்கலைக்கழகத்தினுள் நுழைந்தேன்!! நாம் கிரிக்கெட் விளையாடியது பருத்தித்துறை அணிக்காக யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு போட்டியில். அப்போதே அவர் யாழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்தார். நான் கொழும்பில் இருந்து விடுமுறைக்கு வந்தால் அப்பப்போ மேட்ச் இருந்தால் விளையாடுவோம்!

  • கருத்துக்கள உறவுகள்

Free Animated Congratulations Cliparts, Download Free Clip Art, Free Clip  Art on Clipart Library

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தராக பதவியேற்ற, 
சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா... அவர்களுக்கு வாழ்த்துக்கள். 🎉

ஐயா... உங்களுடன் பழகிய, கல்வி பயின்ற மாணவர்கள்...
யாழ். களத்திலும், நிறைய உள்ளார்கள் என...
மேலுள்ள கருத்துக்கள் மூலம்,  அறிந்து கொண்டேன்.
எல்லோருமே... உங்களை பாராட்டி எழுதியதை பார்க்க சந்தோசமாக இருந்தது. :)

எல்லோரும்  வியக்கும் வண்ணம், மேலும் சிறப்பாக...  
உங்கள் பணி அமையும் என்று, திடமாக  நம்புகின்றேன். 👋👍

பிற்குறிப்பு: மேலே உள்ள காணொளியில்... உங்களது "பேக்கரி"  பகிடி, அருமை. :)

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.