Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீமான் – கல்யாணசுந்தரம் மோதல் : தோழர் சுந்தரவல்லியின் பங்கு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் – கல்யாணசுந்தரம் மோதல் : தோழர் சுந்தரவல்லியின் பங்கு?

இலங்கைத் தீவில் பேரினவாதம் கொழுந்துவிட்டெரிகிறது. இந்திய மத அடிப்படைவாத அரசின் அருவருக்கத்தக்க மத வெறி, இலங்கை அரசின் நிறுவன மயப்படுத்தப்பட்ட சிங்கள பௌத்த மேலாதிக்க வாதம், அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் ஏகபோக இராணுவ மயமாக்கல் என்பன இன்று தெற்காசியாவின் ஒவ்வொரு மூலையையிலும் அமைதியின்மையை ஏற்படுத்தியிருக்கின்றது. கோத்தாபய ராஜபக்ச என்ற முன்னை நாள் இராணுவத் தளபதி இலங்கை அரச நிர்வாகத்தைப் பொறுப்பேற்ற பின்னர் இலங்கையில் தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் முன்னெபோதும் இல்லாத அளவிற்கு அவசியமாகிவிட்டது.

பழமைவாத நில உடமைச் சிந்தனை மரபு வழியில், மத வெறியையும், துடைத்தெறியப்பட வேண்டிய அருவருப்பான சாதியக் கட்டமைப்பையும்,மீட்க முயலும் இந்துத்துவ சமூகவிரோதிகளுக்கு இணையாக தேசிய விடுதலைக்கான கோட்பாட்டை மொழி வெறியாக மடை மாற்ற முயலும் கும்பல்களில் முதன்மையானது தான் சீமன் தலைமை தாங்கும் நாம் தமிழர் கட்சி.

சீமான் சிங்கள பெண்களின் மார்பை அறுத்தெறிவேன் என்றும் குழந்தைகளை குண்டுவீசி கொலை செய்வேன் என்றும் கனடா நாட்டில் 2010 ஆம் ஆண்டு பேசியதைத் தொடர்ந்து அந்த நாட்டிற்குள் பிரவேசிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டார். (காணொளி1)

இதன் பின்னர் நாம் தமிழர் கட்சி, வீரத் தமிழர் முன்னணி என்ற பினாமிப் பெயரில் புலம்பெயர் நாடுகளில் இயங்க ஆரம்பித்தது.

விடுதலை புலிகள் இலங்கையில் கோலோச்சிய காலத்தில் புலம்பெயர் நாடுகளில் அந்த இயக்கத்தின் சனநாயக முகமாகச் செயற்பட்ட அமைப்புக்கள் தான் உலகத் தமிழர் பேரவை மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு போன்றன. உலகத்தமிழர் பேரவை சிறிது சிறிதாக இலங்கையில் 2015 ஆட்சிக்கு வந்த ‘நல்லாட்சி அரசின்’ ஆதரவு இயக்கமாக மாறிவிட, ஐரோப்பிய நாடுகளின் ஆதரவோடு ராஜபக்சவை போர்குற்றவாளிகளாக்கிவிடலாம் என்ற முழக்கத்தோடு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பட ஆரம்பித்தது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு இறுதிக்கட்டப் போராட்டத்திற்கு எனச் சேர்த்துக்கொண்ட பணம் தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட சீமான் குழு 2015 இற்கு பின்னர் பல இளஞர்களை வீரத் தமிழர் முன்னணியை நோக்கி இணைத்துக்கொண்டது.

தெலுங்கர்களே தமிழர்களின் எதிரிகள், சிங்கள மக்கள் ராஜசிங்கன் என்ற தெலுங்கு மன்னனின் வழித் தோன்றல்கள்;திராவிடக் கட்சிகள் தெலுங்கர்களின் சதித்திட்டத்தால் உருவாக்கப்பட்டவை என்ற புதிய புனைவுகளின் அடிப்படையில் வீரத்தமிழர் முன்னணி இயங்க ஆரம்பித்தது.

தெலுங்கர்கள் – சிங்களவர்கள் – திராவிடக் கட்சிகள் அழிக்கப்பட்டு ஈழம் பெற வேண்டுமானல் தமிழ் நாட்டில் சீமான் முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என்ற பிரச்சாரம் வெறியூட்டும் பேச்சுக்கள், கவர்ச்சிகரமான மேலங்கிகள், சமூக வலைத்தளங்கள், கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றின் ஊடாக முன்னெடுக்கப்பட்டன. இச்சமூக விரோதக் கருத்தை மையப்படுத்தி உருவாக்க்கப்பட்ட குழுவின் ஆதரவாளர்களாக வியாபாரிகள் பலர் இணைக்கப்பட்டனர். இவை அனைத்தையும் சீமானின் சார்பில் கச்சிதமாக ஒருங்கிணைத்தவரே கல்யாணசுந்தரம் என்ற பள்ளி ஆசிரியர்.

காங்கிரஸ் எதிர்ப்பு, திராவிடர் இயக்க எதிர்ர்பு போன்றவற்றின் ஊடாக மெலிதான ஆர்.எஸ்.எஸ் – பாரதீய ஜனதா ஆதரவும் வீரத்தமிழர் முன்னணியால் உருவமைக்கப்பட்டது. தமிழகத்தின் முன்னை நாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவின் போது புலம்பெயர் நாடுகளில் சில பகுதிகளிலும் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளிலும் பட்டாசு வெடித்துக் கொண்டாடும் அளவிற்கு திராவிட வெறுப்புணர்வை நாம் தமிழர் கட்சி உருவாக்கும் அளவிற்கு வெற்றிபெற்றது.

கருப்பின மக்கள் வாழும் நாடுகளில் உள் முரண்பாடுகள், நாடுகளுக்கு இடையேயான யுத்தங்கள் போன்றன இருந்தாலும், வெள்ளையின் மேலதிக்கத்திற்கு எதிராக அவர்கள் கருப்பர்களாக ஒன்றிணைகிறார்கள். இதன் மறுபக்கத்தில் தென்னிந்தியாவில், ஆரிய மேலாதிக்கவாத்த்திற்கு எதிராக திராவிடம் என்ற அடிப்படையில் பல் வேறு தேசிய இனங்கள் ஒன்றிணைவதை மறுக்கும் சீமான் கும்பல் அந்த அழிவுச் சமன்பாட்டிற்குள் ஒடுக்கப்படும் ஈழத் தமிழர்களையும் இழுத்துப் போட்டதற்கு பிரதான காரணம் புலம்பெயர் நாடுகளில் எதிர்பார்த்த பணம் மட்டுமே.

ஈழப் போராட்டம் மட்டுமே விமானப்படையைக் கொண்டிருந்தது; புலிகள் போன்ற பலமான இயக்கம் உலகில் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை;பிரபாகரன் போன்ற வலிமை மிக்க தலைவர் எவருமே இதுவரையில் பிறந்ததில்லை; என்ற முழக்கங்களை புலம் பெயர் அமைப்புகள் மட்டுமல்ல இலங்கை அரசும் இணைந்தே முன்வைத்தது. இதன் அடிப்படைக் காரணம், இவ்வளவு வலிமையான அமைப்பே ஈழப் போராட்டத்தை வெற்றிகொள்ள முடியவில்லை என்றால் இனி மேல் ஈழப்போராட்டம் சாத்தியமற்றது என்ற அச்ச உணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதே.

அதனை இலங்கை அரசும் புலம்பெயர் அமைப்புக்களும் கச்சிதமாக செய்து முடித்துவிட அதன் மறுபக்கத்தில் சீமான் கும்பல் புதிய திட்டத்தை வகுத்திருந்தது. ஈழப் போராட்டம் இனிமேல் சாத்தியமற்றது என்பது உணமை தான் ஆனால் சீமான் முதலமைச்சரானால் அது வெற்றிகொள்ளப்படலாம் என்ற பிரச்சாரம் ஒவ்வொரு தமிழர்கள் மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டது. இந்த வெற்றி தெலுங்கர்களின் அல்லது திராடவிடக் கட்சிகளின் அழிவிலேயே சாத்தியம் என்று பிரச்சாரப்படுத்தப்பட்டது.

வேதாந்த நிறுவனம் தூத்துகுடியில் நிகழ்த்திய படுகொலைக்கு எதிராக லண்டன் இந்தியத் தூதரகத்தில் ஒரு போராட்டம் நடைபெற்றது. பெருமளவில் ஈழத்தமிழர்கள் கலந்துகொண்ட அந்த போராட்டத்தில் அப்போது பிரித்தானியாவிற்கு வந்திருந்த சு.ப.வீரபாண்டியன் உரையாற்றுவதாக ஏற்பாடாகியிருந்தது. கல்யாணசுந்தரம் ஒழுங்கமைத்திருந்த வீரத்தமிழர் முன்னணி சீமானின் உத்தரவின் பெயர் சு.பி.வி இற்கு மிரட்டல்விடுத்தது. அப் போராட்டத்தில் சு.ப.வி கலந்துகொண்டால் போராட்டத்தையே குழப்பப்போவதாக அதன் உறுப்பினர்கள் மிரட்டினார்கள். இறுதியில் அந்த போராட்டத்தில் சு.ப.வீ கலந்துகொள்ளவில்லை. பாரிசாலன் என்பவரின் வீடியோக்களைப் பார்வையிடுமாறு வீரத்தமிழர் முன்னணியினர் இருவர் துண்டுப்பிரசுரம் வினியோகித்துவிட்டு போராட்டத்திலிருந்து தலைமறைவாகினர்.

2009 இனப்படுகொலையின் பின்னர் உருவாக்கப்பட்டு அறிக்கை அமைப்பாகச் செயலிழந்து போன நாடுகடந்த தமிழீழ அமைப்பிற்காக பணம் சேர்த்த சிலர் இக்காலப் பகுதியில் கல்லாயணசுந்தரம் – சீமான் குழுவினரின் பணம் திரட்டும் முகவர்களாகினர். இவர்களிடமிருந்து திரட்டப்பட்ட பணம் கல்யாணசுந்தரம் ஊடாகவே தமிழகம் சென்றடைந்தது. அத் தொகை அதிகரித்து ஊதிப் பெருக, இந்த வருட ஆரம்பத்தில் பணம் தொடர்பான கேள்விகள் வீரத்தமிழர் முன்னணிக்குள் தொடங்கியது.

திரட்டப்படும் பணத்தை ஒவ்வோரு தேர்தல் தொகுதிக்கும் அனுப்புமாறும், ஒரு குறித்த தனிக் கணக்கிற்கு அனுப்ப வேண்டம் என்றும் கல்யாணசுந்தரம் உத்தரவிட்டதாகக் கூறும் லண்டன் வீரத்தமிழர் முன்னணி உறுப்பினர் ஒருவர் அப்போதே சீமான் – கல்யாணசுந்தரம் மோதல் ஆரம்பமாகிவிட்டது என்கிறார்.

பணத்தை குறித்த சில கணக்குகளுக்கே அனுப்பிவைக்குமாறு சில நாட்களின் பின்னர் உத்தரவிட்ட சீமான், புலம்பெயர் தமிழர்களின் பல பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாகக் கூறுகிறார்.

தவிர, புலம்பெயர் தமிழர்கள் வழங்கிய பணத்தை கல்யாணசுந்தரம் சூறையாடிவிட்டதாக சில நாட்களின் முன்னரே புலம்பெயர் நாடுகளில் பிராச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக வீரத் தமிழர் முன்னணியின் உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

தோழர் சுந்தரவல்லி வெளியிட்ட காணொளியில் பேசப்பட்ட கருத்துக்களை ஒட்டியே இருவருக்கும் இடையிலான மோதல் உருவானது என்று மிகவும் தந்திரமாகத் தப்பிக்கொள்ளும் கல்யாணசுந்தரமும் சீமானும் இச் சிக்கல்களின் அடிப்படை பணப்பட்டுவாடா தொடர்பானது எனப் பேசமாட்டார்கள். அது சட்டரீதியான ஆபத்துகள் நிறைந்தது என்பது மட்டுமல்ல கடந்தகால இலப கணக்குகள் தொடர்பானதும் கூட. ஆனால் ஈழப் போராட்டம் என்பதை வலதுசாரிகளின் அழிவு அரசியலின் பக்கத்திலிருந்து மிட்டெடுக்க அவர்களின் வியாபார நோக்கம் தொடர்பாகப் பேசுவதும் அவசியமானது.

துதிபாடலின் அடிப்படையில் அல்ல, விமர்சனம் சுய விமர்சனம் ஊடகாவே ஈழப் போராட்டம் மட்டுமல்ல உலகின் எந்த மூலையில் நடக்கும் போராட்டமும் முன்னோக்கிய வழியில் செல்லும் என்பதை உணர்த்துவதற்காகவும் கூட தமிழ்த் தேசியம் என்ற வியாபார முழக்கத்தின் கீழ் நடக்கும் அயோக்கியத் தனத்தை வெளிக்கொண்டுவர வேண்டும்.

இன்னும் வரும்…

http://inioru.com/seeman-kalyanasuntharam-suntharavalli/

  • Replies 143
  • Views 13.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, கிருபன் said:

சீமான் – கல்யாணசுந்தரம் மோதல் : தோழர் சுந்தரவல்லியின் பங்கு?

இன்னும் வரும்…

http://inioru.com/seeman-kalyanasuntharam-suntharavalli/

கல்யாணசுந்தரத்தை அன்றே மேடையில் எச்சரித்த சீமான்

Reply for Sundaravalli | Seeman | Kalyanasundaram | Rajiv Gandhi | Tenttu Kottaai Vicky

https://www.youtube.com/watch?v=sfA9EBMt53Y

அண்ணன் சீமான் காக தான் நாம் தமிழர் கட்சி யில் இனைந்தோம் கல்யாணம் சுந்திரத்திற்காக இல்லை என்றும் அண்ணன் சீமான் உடன் மட்டுமே பயணம் நாம் தமிழர்

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் கல்யாணசுந்தரம் ஒரு துரோகி

நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் வெளியில் சென்றவுடன் கட்சி ஒரு சர்வாதிகார கட்சி என்று தான்தோன்றித்தனமாக பேட்டி கொடுப்பதை பார்க்க முடிகிறது. 

அப்படி சர்வாதிகார கட்சி என்று பொதுமக்களும் நினைத்துவிடக் கூடாது அதே சமயத்தில் கட்சியில் இருக்கக்கூடிய நிர்வாகிகளும் ஒழுக்க கட்டுப்பாட்டுடன் நடப்பதற்காக ஒரு சின்ன ஆலோசனை. 

சர்வாதிகார கட்சி என்று பெயர் இல்லாமல் கட்சியில் ஒரு உறுப்பினரை நீக்க வேண்டுமென்றால் நான்கு கட்டங்களில் நடக்க வேண்டும் என்ற கோணத்தில் பேசப்பட்டது மாற்றுக் கருத்துக்கள் பல இருந்தாலும் நீங்களும் இது குறித்து பேசுவது தான் கட்சியின் வளர்ச்சிக்கு சரியாக இருக்குமே தவிர தலைமையை எவரும் குறை சொல்லக் கூடாது என்றால் சிறந்த ஆலோசனைகளையும் நாம் செய்ய வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

மேடையில் ஏறிப் பேசியதைத் தவிர எந்த வேலையும் செய்யாதவர் கல்யாணசுந்தரம் |இயக்குனர் களஞ்சியம் ஆவேசம்

  • கருத்துக்கள உறவுகள்

இதைத் தானே அங்க பூட்டி விட்டார்கள்? இங்க போர்ட் போடாமல் ஆரம்பித்து விட்டார்களா?🤦‍♂️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
42 minutes ago, Justin said:

இதைத் தானே அங்க பூட்டி விட்டார்கள்? இங்க போர்ட் போடாமல் ஆரம்பித்து விட்டார்களா?🤦‍♂️

எல்லா புகழும் தங்கள் மூவருக்குமே.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

எல்லா புகழும் தங்கள் மூவருக்குமே.

அண்ணை, எந்த முறைப்பாடும் நான் செய்யவில்லை! ஏனையோர் கோபப் பட மூவர் காரணமென்கிறீர்களோ? கருத்துக்கு கோபப் படுவதென்றால் நாம் சிறுகுழந்தைகளா அண்ணை? எங்கள் உணர்ச்சி எங்கள் பொறுப்பல்லவா? 

"தீதும் நன்றும் பிறர்தரவாரா" எதற்கும் யார் யாரைப் போட்டுக் கொடுத்ததென்று தகவல்கள் வரும் வரையாவது தீர்ப்பை தள்ளி வையுங்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எல்லா புகழும் தங்கள் மூவருக்குமே.

1 hour ago, Justin said:

அண்ணை, எந்த முறைப்பாடும் நான் செய்யவில்லை! ஏனையோர் கோபப் பட மூவர் காரணமென்கிறீர்களோ? கருத்துக்கு கோபப் படுவதென்றால் நாம் சிறுகுழந்தைகளா அண்ணை? எங்கள் உணர்ச்சி எங்கள் பொறுப்பல்லவா? 

"தீதும் நன்றும் பிறர்தரவாரா" எதற்கும் யார் யாரைப் போட்டுக் கொடுத்ததென்று தகவல்கள் வரும் வரையாவது தீர்ப்பை தள்ளி வையுங்கள்! 

இதுக்கு மட்டும் அல்ல, எதுக்குக்குமே நான் நிர்வாகத்தை முறைப்பாட்டுடன் தனி மடலில் அணுகியதில்லை.

நிர்வாகத்துக்கான என் தகவல்களையும் எப்போதும் பொது வெளியில்தான் சொல்லி உள்ளேன்.

உண்மையில் ஏன் பூட்டினார்கள் என்றே எனக்கு விளக்கம் இல்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியொரு பிசினஸ் பரிமாணம் இருக்கும் என்ற சந்தேகம் இருந்தது! இனியொரு கட்டுரை இதில் வெளிச்சம் பாய்ச்சும் என்று நம்பலாம்! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனியொரு கட்டுரையை வாசித்து அதற்கு கருத்து வைக்காமல் சீமான் பஜனை பாடும் காணொளிகளை உடையார் இணைப்பது தேவையற்றது.  வீரத் தமிழ் முன்னணி எப்படி புலம்பெயர்நாடுகளில் செயற்படுகின்றது என்று இனியொரு கட்டுரைக்கு மறுப்புச் சொல்லும்  கருத்தைப் பதிந்தால் உண்மை, பொய்களை அறியலாம்☺️

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

2009 இனப்படுகொலையின் பின்னர் உருவாக்கப்பட்டு அறிக்கை அமைப்பாகச் செயலிழந்து போன நாடுகடந்த தமிழீழ அமைப்பிற்காக பணம் சேர்த்த சிலர் இக்காலப் பகுதியில் கல்லாயணசுந்தரம் – சீமான் குழுவினரின் பணம் திரட்டும் முகவர்களாகினர். இவர்களிடமிருந்து திரட்டப்பட்ட பணம் கல்யாணசுந்தரம் ஊடாகவே தமிழகம் சென்றடைந்தது. அத் தொகை அதிகரித்து ஊதிப் பெருக, இந்த வருட ஆரம்பத்தில் பணம் தொடர்பான கேள்விகள் வீரத்தமிழர் முன்னணிக்குள் தொடங்கியது.

திரட்டப்படும் பணத்தை ஒவ்வோரு தேர்தல் தொகுதிக்கும் அனுப்புமாறும், ஒரு குறித்த தனிக் கணக்கிற்கு அனுப்ப வேண்டம் என்றும் கல்யாணசுந்தரம் உத்தரவிட்டதாகக் கூறும் லண்டன் வீரத்தமிழர் முன்னணி உறுப்பினர் ஒருவர் அப்போதே சீமான் – கல்யாணசுந்தரம் மோதல் ஆரம்பமாகிவிட்டது என்கிறார்.

பணத்தை குறித்த சில கணக்குகளுக்கே அனுப்பிவைக்குமாறு சில நாட்களின் பின்னர் உத்தரவிட்ட சீமான், புலம்பெயர் தமிழர்களின் பல பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாகக் கூறுகிறார்.

தவிர, புலம்பெயர் தமிழர்கள் வழங்கிய பணத்தை கல்யாணசுந்தரம் சூறையாடிவிட்டதாக சில நாட்களின் முன்னரே புலம்பெயர் நாடுகளில் பிராச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக வீரத் தமிழர் முன்னணியின் உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

இவர்கள் மோதலுக்கான காரணம்  தெளிவாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

2008இல எமது ஆய்வாளர்கள் எழுதியது போலவே இருக்கிறது.
மேலே உள்ள கட்டுரையில் எனக்கு தெரிந்து தவறான தகவல்கள் உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

இனியொரு கட்டுரையை வாசித்து அதற்கு கருத்து வைக்காமல் சீமான் பஜனை பாடும் காணொளிகளை உடையார் இணைப்பது தேவையற்றது.  வீரத் தமிழ் முன்னணி எப்படி புலம்பெயர்நாடுகளில் செயற்படுகின்றது என்று இனியொரு கட்டுரைக்கு மறுப்புச் சொல்லும்  கருத்தைப் பதிந்தால் உண்மை, பொய்களை அறியலாம்☺️

நீர் இணைக்கும் பதிவிற்கு ஏதை பதியனுமென எனக்கு தெரியும்.👍😁

உங்களுடைய இலவச அறிவுரைகளை உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள்😜.

என்ன நீர் நிர்வாகமா,  ஏதை இணைப்பது என்று கூற? 😊

உங்களுக்கு ஒரு களவிதி மற்றவர்களுக்கு ஒன்றா?

நீங்கள் நாம் தமிழரை பற்றி தனி திரி திறக்கலாம், நாம் திறந்தால் நீங்குதலா?

இதுதான் யாழ் களத்தின் நேர்மை???

நீங்கள் என்னத்திற்கு காணோளி இணைத்தீர்கள் இதில்???

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கிருபன் said:

சீமான் – கல்யாணசுந்தரம் மோதல் : தோழர் சுந்தரவல்லியின் பங்கு?

இலங்கைத் தீவில் பேரினவாதம் கொழுந்துவிட்டெரிகிறது. இந்திய மத அடிப்படைவாத அரசின் அருவருக்கத்தக்க மத வெறி, இலங்கை அரசின் நிறுவன மயப்படுத்தப்பட்ட சிங்கள பௌத்த மேலாதிக்க வாதம், அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் ஏகபோக இராணுவ மயமாக்கல் என்பன இன்று தெற்காசியாவின் ஒவ்வொரு மூலையையிலும் அமைதியின்மையை ஏற்படுத்தியிருக்கின்றது. கோத்தாபய ராஜபக்ச என்ற முன்னை நாள் இராணுவத் தளபதி இலங்கை அரச நிர்வாகத்தைப் பொறுப்பேற்ற பின்னர் இலங்கையில் தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் முன்னெபோதும் இல்லாத அளவிற்கு அவசியமாகிவிட்டது.

பழமைவாத நில உடமைச் சிந்தனை மரபு வழியில், மத வெறியையும், துடைத்தெறியப்பட வேண்டிய அருவருப்பான சாதியக் கட்டமைப்பையும்,மீட்க முயலும் இந்துத்துவ சமூகவிரோதிகளுக்கு இணையாக தேசிய விடுதலைக்கான கோட்பாட்டை மொழி வெறியாக மடை மாற்ற முயலும் கும்பல்களில் முதன்மையானது தான் சீமன் தலைமை தாங்கும் நாம் தமிழர் கட்சி.

சீமான் சிங்கள பெண்களின் மார்பை அறுத்தெறிவேன் என்றும் குழந்தைகளை குண்டுவீசி கொலை செய்வேன் என்றும் கனடா நாட்டில் 2010 ஆம் ஆண்டு பேசியதைத் தொடர்ந்து அந்த நாட்டிற்குள் பிரவேசிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டார். (காணொளி1)

இதன் பின்னர் நாம் தமிழர் கட்சி, வீரத் தமிழர் முன்னணி என்ற பினாமிப் பெயரில் புலம்பெயர் நாடுகளில் இயங்க ஆரம்பித்தது.

விடுதலை புலிகள் இலங்கையில் கோலோச்சிய காலத்தில் புலம்பெயர் நாடுகளில் அந்த இயக்கத்தின் சனநாயக முகமாகச் செயற்பட்ட அமைப்புக்கள் தான் உலகத் தமிழர் பேரவை மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு போன்றன. உலகத்தமிழர் பேரவை சிறிது சிறிதாக இலங்கையில் 2015 ஆட்சிக்கு வந்த ‘நல்லாட்சி அரசின்’ ஆதரவு இயக்கமாக மாறிவிட, ஐரோப்பிய நாடுகளின் ஆதரவோடு ராஜபக்சவை போர்குற்றவாளிகளாக்கிவிடலாம் என்ற முழக்கத்தோடு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பட ஆரம்பித்தது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு இறுதிக்கட்டப் போராட்டத்திற்கு எனச் சேர்த்துக்கொண்ட பணம் தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட சீமான் குழு 2015 இற்கு பின்னர் பல இளஞர்களை வீரத் தமிழர் முன்னணியை நோக்கி இணைத்துக்கொண்டது.

தெலுங்கர்களே தமிழர்களின் எதிரிகள், சிங்கள மக்கள் ராஜசிங்கன் என்ற தெலுங்கு மன்னனின் வழித் தோன்றல்கள்;திராவிடக் கட்சிகள் தெலுங்கர்களின் சதித்திட்டத்தால் உருவாக்கப்பட்டவை என்ற புதிய புனைவுகளின் அடிப்படையில் வீரத்தமிழர் முன்னணி இயங்க ஆரம்பித்தது.

தெலுங்கர்கள் – சிங்களவர்கள் – திராவிடக் கட்சிகள் அழிக்கப்பட்டு ஈழம் பெற வேண்டுமானல் தமிழ் நாட்டில் சீமான் முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என்ற பிரச்சாரம் வெறியூட்டும் பேச்சுக்கள், கவர்ச்சிகரமான மேலங்கிகள், சமூக வலைத்தளங்கள், கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றின் ஊடாக முன்னெடுக்கப்பட்டன. இச்சமூக விரோதக் கருத்தை மையப்படுத்தி உருவாக்க்கப்பட்ட குழுவின் ஆதரவாளர்களாக வியாபாரிகள் பலர் இணைக்கப்பட்டனர். இவை அனைத்தையும் சீமானின் சார்பில் கச்சிதமாக ஒருங்கிணைத்தவரே கல்யாணசுந்தரம் என்ற பள்ளி ஆசிரியர்.

காங்கிரஸ் எதிர்ப்பு, திராவிடர் இயக்க எதிர்ர்பு போன்றவற்றின் ஊடாக மெலிதான ஆர்.எஸ்.எஸ் – பாரதீய ஜனதா ஆதரவும் வீரத்தமிழர் முன்னணியால் உருவமைக்கப்பட்டது. தமிழகத்தின் முன்னை நாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவின் போது புலம்பெயர் நாடுகளில் சில பகுதிகளிலும் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளிலும் பட்டாசு வெடித்துக் கொண்டாடும் அளவிற்கு திராவிட வெறுப்புணர்வை நாம் தமிழர் கட்சி உருவாக்கும் அளவிற்கு வெற்றிபெற்றது.

கருப்பின மக்கள் வாழும் நாடுகளில் உள் முரண்பாடுகள், நாடுகளுக்கு இடையேயான யுத்தங்கள் போன்றன இருந்தாலும், வெள்ளையின் மேலதிக்கத்திற்கு எதிராக அவர்கள் கருப்பர்களாக ஒன்றிணைகிறார்கள். இதன் மறுபக்கத்தில் தென்னிந்தியாவில், ஆரிய மேலாதிக்கவாத்த்திற்கு எதிராக திராவிடம் என்ற அடிப்படையில் பல் வேறு தேசிய இனங்கள் ஒன்றிணைவதை மறுக்கும் சீமான் கும்பல் அந்த அழிவுச் சமன்பாட்டிற்குள் ஒடுக்கப்படும் ஈழத் தமிழர்களையும் இழுத்துப் போட்டதற்கு பிரதான காரணம் புலம்பெயர் நாடுகளில் எதிர்பார்த்த பணம் மட்டுமே.

ஈழப் போராட்டம் மட்டுமே விமானப்படையைக் கொண்டிருந்தது; புலிகள் போன்ற பலமான இயக்கம் உலகில் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை;பிரபாகரன் போன்ற வலிமை மிக்க தலைவர் எவருமே இதுவரையில் பிறந்ததில்லை; என்ற முழக்கங்களை புலம் பெயர் அமைப்புகள் மட்டுமல்ல இலங்கை அரசும் இணைந்தே முன்வைத்தது. இதன் அடிப்படைக் காரணம், இவ்வளவு வலிமையான அமைப்பே ஈழப் போராட்டத்தை வெற்றிகொள்ள முடியவில்லை என்றால் இனி மேல் ஈழப்போராட்டம் சாத்தியமற்றது என்ற அச்ச உணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதே.

அதனை இலங்கை அரசும் புலம்பெயர் அமைப்புக்களும் கச்சிதமாக செய்து முடித்துவிட அதன் மறுபக்கத்தில் சீமான் கும்பல் புதிய திட்டத்தை வகுத்திருந்தது. ஈழப் போராட்டம் இனிமேல் சாத்தியமற்றது என்பது உணமை தான் ஆனால் சீமான் முதலமைச்சரானால் அது வெற்றிகொள்ளப்படலாம் என்ற பிரச்சாரம் ஒவ்வொரு தமிழர்கள் மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டது. இந்த வெற்றி தெலுங்கர்களின் அல்லது திராடவிடக் கட்சிகளின் அழிவிலேயே சாத்தியம் என்று பிரச்சாரப்படுத்தப்பட்டது.

வேதாந்த நிறுவனம் தூத்துகுடியில் நிகழ்த்திய படுகொலைக்கு எதிராக லண்டன் இந்தியத் தூதரகத்தில் ஒரு போராட்டம் நடைபெற்றது. பெருமளவில் ஈழத்தமிழர்கள் கலந்துகொண்ட அந்த போராட்டத்தில் அப்போது பிரித்தானியாவிற்கு வந்திருந்த சு.ப.வீரபாண்டியன் உரையாற்றுவதாக ஏற்பாடாகியிருந்தது. கல்யாணசுந்தரம் ஒழுங்கமைத்திருந்த வீரத்தமிழர் முன்னணி சீமானின் உத்தரவின் பெயர் சு.பி.வி இற்கு மிரட்டல்விடுத்தது. அப் போராட்டத்தில் சு.ப.வி கலந்துகொண்டால் போராட்டத்தையே குழப்பப்போவதாக அதன் உறுப்பினர்கள் மிரட்டினார்கள். இறுதியில் அந்த போராட்டத்தில் சு.ப.வீ கலந்துகொள்ளவில்லை. பாரிசாலன் என்பவரின் வீடியோக்களைப் பார்வையிடுமாறு வீரத்தமிழர் முன்னணியினர் இருவர் துண்டுப்பிரசுரம் வினியோகித்துவிட்டு போராட்டத்திலிருந்து தலைமறைவாகினர்.

2009 இனப்படுகொலையின் பின்னர் உருவாக்கப்பட்டு அறிக்கை அமைப்பாகச் செயலிழந்து போன நாடுகடந்த தமிழீழ அமைப்பிற்காக பணம் சேர்த்த சிலர் இக்காலப் பகுதியில் கல்லாயணசுந்தரம் – சீமான் குழுவினரின் பணம் திரட்டும் முகவர்களாகினர். இவர்களிடமிருந்து திரட்டப்பட்ட பணம் கல்யாணசுந்தரம் ஊடாகவே தமிழகம் சென்றடைந்தது. அத் தொகை அதிகரித்து ஊதிப் பெருக, இந்த வருட ஆரம்பத்தில் பணம் தொடர்பான கேள்விகள் வீரத்தமிழர் முன்னணிக்குள் தொடங்கியது.

திரட்டப்படும் பணத்தை ஒவ்வோரு தேர்தல் தொகுதிக்கும் அனுப்புமாறும், ஒரு குறித்த தனிக் கணக்கிற்கு அனுப்ப வேண்டம் என்றும் கல்யாணசுந்தரம் உத்தரவிட்டதாகக் கூறும் லண்டன் வீரத்தமிழர் முன்னணி உறுப்பினர் ஒருவர் அப்போதே சீமான் – கல்யாணசுந்தரம் மோதல் ஆரம்பமாகிவிட்டது என்கிறார்.

பணத்தை குறித்த சில கணக்குகளுக்கே அனுப்பிவைக்குமாறு சில நாட்களின் பின்னர் உத்தரவிட்ட சீமான், புலம்பெயர் தமிழர்களின் பல பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாகக் கூறுகிறார்.

தவிர, புலம்பெயர் தமிழர்கள் வழங்கிய பணத்தை கல்யாணசுந்தரம் சூறையாடிவிட்டதாக சில நாட்களின் முன்னரே புலம்பெயர் நாடுகளில் பிராச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக வீரத் தமிழர் முன்னணியின் உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

தோழர் சுந்தரவல்லி வெளியிட்ட காணொளியில் பேசப்பட்ட கருத்துக்களை ஒட்டியே இருவருக்கும் இடையிலான மோதல் உருவானது என்று மிகவும் தந்திரமாகத் தப்பிக்கொள்ளும் கல்யாணசுந்தரமும் சீமானும் இச் சிக்கல்களின் அடிப்படை பணப்பட்டுவாடா தொடர்பானது எனப் பேசமாட்டார்கள். அது சட்டரீதியான ஆபத்துகள் நிறைந்தது என்பது மட்டுமல்ல கடந்தகால இலப கணக்குகள் தொடர்பானதும் கூட. ஆனால் ஈழப் போராட்டம் என்பதை வலதுசாரிகளின் அழிவு அரசியலின் பக்கத்திலிருந்து மிட்டெடுக்க அவர்களின் வியாபார நோக்கம் தொடர்பாகப் பேசுவதும் அவசியமானது.

துதிபாடலின் அடிப்படையில் அல்ல, விமர்சனம் சுய விமர்சனம் ஊடகாவே ஈழப் போராட்டம் மட்டுமல்ல உலகின் எந்த மூலையில் நடக்கும் போராட்டமும் முன்னோக்கிய வழியில் செல்லும் என்பதை உணர்த்துவதற்காகவும் கூட தமிழ்த் தேசியம் என்ற வியாபார முழக்கத்தின் கீழ் நடக்கும் அயோக்கியத் தனத்தை வெளிக்கொண்டுவர வேண்டும்.

இன்னும் வரும்…

http://inioru.com/seeman-kalyanasuntharam-suntharavalli/

சிவப்புக்கும் நீலத்துக்கும் இருக்கும் 
அருவெறுப்பு .....கட்டுரையை வாசிப்பதே வீண் 
என்பதை பறைசாற்றி இருக்கிறது.

இதிலே முக்கியமான விடயம் 
எழுதியவர்தான் பழனிக்கு பஞ்சாமிர்தம் காட்டுகிறார் என்றால் 
இணைத்த கிருபன் அவர்களும் 
எங்களுக்கு புலம்பெயர் தமிழர்களை காட்டுவதுபோல 
இது பற்றி கருத்து எழுதுங்கள் என்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Maruthankerny said:

சிவப்புக்கும் நீலத்துக்கும் இருக்கும் 
அருவெறுப்பு .....கட்டுரையை வாசிப்பதே வீண் 
என்பதை பறைசாற்றி இருக்கிறது.

இதிலே முக்கியமான விடயம் 
எழுதியவர்தான் பழனிக்கு பஞ்சாமிர்தம் காட்டுகிறார் என்றால் 
இணைத்த கிருபன் அவர்களும் 
எங்களுக்கு புலம்பெயர் தமிழர்களை காட்டுவதுபோல 
இது பற்றி கருத்து எழுதுங்கள் என்கிறார். 

அப்படி என்ன அருவெறுப்பை இந்த கட்டுரையில் கண்டீர்கள்?...புரியும் படி சொன்னால் நானும் விளங்கிக் கொள்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

அப்படி என்ன அருவெறுப்பை இந்த கட்டுரையில் கண்டீர்கள்?...புரியும் படி சொன்னால் நானும் விளங்கிக் கொள்கிறேன் 

"இந்த கட்டுரையில்"

இதுக்கே முதல் இது எந்த தகுதியும் அற்றது 
கட்டுரை என்பது வேறு காழ்ப்புணர்வு என்பது வேறு 

இது ஒரு காழ்ப்புணர்வு பிராந்தியை ஊட்டுவதுக்கு 
இருக்கிற சிலதையும் இல்லாத பலதையும் போட்டு 
ஒரு கொத்து ரொட்டி அடிப்பது. 

ஏற்கனவே வாசிப்பவர்களுக்கு என்ன மாதிரியான 
எண்ணங்களை கொடுப்பது என்று தீர்மானித்து தொடங்குவது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

"இந்த கட்டுரையில்"

இதுக்கே முதல் இது எந்த தகுதியும் அற்றது 
கட்டுரை என்பது வேறு காழ்ப்புணர்வு என்பது வேறு 

இது ஒரு காழ்ப்புணர்வு பிராந்தியை ஊட்டுவதுக்கு 
இருக்கிற சிலதையும் இல்லாத பலதையும் போட்டு 
ஒரு கொத்து ரொட்டி அடிப்பது. 

ஏற்கனவே வாசிப்பவர்களுக்கு என்ன மாதிரியான 
எண்ணங்களை கொடுப்பது என்று தீர்மானித்து தொடங்குவது. 

மருதர், உங்கள் விருப்பு ,வெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு வாசித்து பாருங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

நான் சிவப்பாலும் நீலத்திலும் 
மார்க் பண்ணிய வார்த்தைகளை வாசித்தீர்களா? 

Just now, ரதி said:

மருதர், உங்கள் விருப்பு ,வெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு வாசித்து பாருங்கோ

இதில் நான் வெறுக்கவும் விரும்பவும் என்ன இருக்கிறது?
உங்களுக்கே தெரிய பல பொய்தான் இருக்கிறது 
இதை தமிழக தமிழர்கள் வாசித்து குழம்பினால் அதி அர்தமுண்டு 
உங்களை பற்றி எழுதி இருக்கிறார் .... இதில் நீங்கள் குழம்ப என்ன இருக்கிறது? 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Maruthankerny said:

நான் சிவப்பாலும் நீலத்திலும் 
மார்க் பண்ணிய வார்த்தைகளை வாசித்தீர்களா? 

இதில் நான் வெறுக்கவும் விரும்பவும் என்ன இருக்கிறது?
உங்களுக்கே தெரிய பல பொய்தான் இருக்கிறது 
இதை தமிழக தமிழர்கள் வாசித்து குழம்பினால் அதி அர்தமுண்டு 
உங்களை பற்றி எழுதி இருக்கிறார் .... இதில் நீங்கள் குழம்ப என்ன இருக்கிறது? 

இப்ப எனக்கு நேரமில்லை ...நாளைக்கு நேரமிருந்தால் இந்த கட்டுரை பற்றி விரிவாய் எழுதுகிறேன் ...நன்றி 

19 hours ago, கிருபன் said:

விடுதலை புலிகள் இலங்கையில் கோலோச்சிய காலத்தில் புலம்பெயர் நாடுகளில் அந்த இயக்கத்தின் சனநாயக முகமாகச் செயற்பட்ட அமைப்புக்கள் தான் உலகத் தமிழர் பேரவை மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு போன்றன. உலகத்தமிழர் பேரவை சிறிது சிறிதாக இலங்கையில் 2015 ஆட்சிக்கு வந்த ‘நல்லாட்சி அரசின்’ ஆதரவு இயக்கமாக மாறிவிட, ஐரோப்பிய நாடுகளின் ஆதரவோடு ராஜபக்சவை போர்குற்றவாளிகளாக்கிவிடலாம் என்ற முழக்கத்தோடு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பட ஆரம்பித்தது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு இறுதிக்கட்டப் போராட்டத்திற்கு எனச் சேர்த்துக்கொண்ட பணம் தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட சீமான் குழு 2015 இற்கு பின்னர் பல இளஞர்களை வீரத் தமிழர் முன்னணியை நோக்கி இணைத்துக்கொண்டது.

நாம் தமிழர் மீதான வெறுப்பரசியல்  தவிர வேறென்ன இருக்கின்றது இதில். போராட்டத்திற்கு சேர்த்த பணத்தை மோசடி செய்த ஒருங்கிணைப்பு குழுமீதான வெறுப்பை நாம் தமிழர் பயன்படுத்திக்கொண்டதா சொல்வது எந்தவிதத்திலும் பொருத்தமற்ற கருத்து. தனது வெறுப்பரசியலுக்காக சொல்லும் பொய்.

19 hours ago, கிருபன் said:

தெலுங்கர்கள் – சிங்களவர்கள் – திராவிடக் கட்சிகள் அழிக்கப்பட்டு ஈழம் பெற வேண்டுமானல் தமிழ் நாட்டில் சீமான் முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என்ற பிரச்சாரம் வெறியூட்டும் பேச்சுக்கள், கவர்ச்சிகரமான மேலங்கிகள், சமூக வலைத்தளங்கள், கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றின் ஊடாக முன்னெடுக்கப்பட்டன. இச்சமூக விரோதக் கருத்தை மையப்படுத்தி உருவாக்க்கப்பட்ட குழுவின் ஆதரவாளர்களாக வியாபாரிகள் பலர் இணைக்கப்பட்டனர். இவை அனைத்தையும் சீமானின் சார்பில் கச்சிதமாக ஒருங்கிணைத்தவரே கல்யாணசுந்தரம் என்ற பள்ளி ஆசிரியர்.

நாம் தமிழர் பேச்சுக்களில் ஈழப்போராட்டம் கச்சதீவு பிரச்சனை மீனவர் பிரச்சனை மீத்தேன் கைரோ கார்பன் பிரச்சனை, நில நீர்வளச் சுரண்டல் , அணு உலைப் பிரச்சனை விவசாயிகள் பிரச்சனை  என்று ஏராளமானவை முன் நிற்கின்றது.  பேரிடர் மீட்புக் குழு , ஏரிகள் துர்வருதல் மரம் நடுதல் என எத்தனையோ களபணிகள் அனைத்தையும்  சமூக விரோதக் கருத்தாக சித்தரிக்கும் இந்த சபா நாவலன் எழுத்துக்களில் எந்த அறமும் கிடையாது. 

20 hours ago, கிருபன் said:

சீமான் குழுவினரின் பணம் திரட்டும் முகவர்களாகினர். இவர்களிடமிருந்து திரட்டப்பட்ட பணம் கல்யாணசுந்தரம் ஊடாகவே தமிழகம் சென்றடைந்தது. அத் தொகை அதிகரித்து ஊதிப் பெருக, இந்த வருட ஆரம்பத்தில் பணம் தொடர்பான கேள்விகள் வீரத்தமிழர் முன்னணிக்குள் தொடங்கியது.

பணத்தெகை ஊதிப்பெருகிறதா ?  இங்க புலம்பெயர்ந்த மக்கள் பணம் அங்க ஊதி பெருகி பொங்கி வழியிற நிலமையில அனுப்புறதுக்கு பதிலாக நாட்டில போரால் பாதிக்கப்பட்டு ஊனப்பட்டு வீடுவாசல் இல்லாம இருக்கிற மக்களுக்கும் நுண்கடன்களால் வறுமையால் தற்கொலை செய்யும் மக்களுக்கும்  கொடுக்காமல் தமிழ்நாட்டில ஊதிப்பெருக வைக்கினம்??? அள்ளி அவிழ்த்து விடும்  போது கொஞ்சமாவது யோசிக்க மாட்டார இந்த சபா நாவலன் ?

20 hours ago, கிருபன் said:

கருப்பின மக்கள் வாழும் நாடுகளில் உள் முரண்பாடுகள், நாடுகளுக்கு இடையேயான யுத்தங்கள் போன்றன இருந்தாலும், வெள்ளையின் மேலதிக்கத்திற்கு எதிராக அவர்கள் கருப்பர்களாக ஒன்றிணைகிறார்கள். இதன் மறுபக்கத்தில் தென்னிந்தியாவில், ஆரிய மேலாதிக்கவாத்த்திற்கு எதிராக திராவிடம் என்ற அடிப்படையில் பல் வேறு தேசிய இனங்கள் ஒன்றிணைவதை மறுக்கும் சீமான் கும்பல் அந்த அழிவுச் சமன்பாட்டிற்குள் ஒடுக்கப்படும் ஈழத் தமிழர்களையும் இழுத்துப் போட்டதற்கு பிரதான காரணம் புலம்பெயர் நாடுகளில் எதிர்பார்த்த பணம் மட்டுமே.

தென்னிந்தியாவில் எந்த தேசீய இனங்கள் திராவிடம் என்ற அடிப்படையில் ஒன்றிணைகின்றது ? ஆந்திரா கர்நாடகா கேரளாவில் திராவிடம் எந்த லட்சணத்தில் இருக்கு? ஒரே இனம் என்று இணையக் கூட தேவையில்லை தண்ணிய என்றாலும் துறந்து விடுறானா ? என்ன இழவு புரிதல் இது?. இதுக்குள்ள வெள்ளயின மேலாதிக்கத்துக்கு எதிரா கருப்பர் ஒன்று கூடுகினம் என்ற உவமை வேறு !! 

----

கட்டுரையோடு இணைக்கப்பட்ட காணொளியில் செர்லைட் போராட்டத்திற்கு நாம் தமிழர் வரவில்லை என்கின்றார். தூத்துக்குடி மாவட்டத்திற்குள் செல்ல சீமானுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததை கூட அறிந்திருக்கவில்லை. இதன் காரணமாக தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு நெல்லையில் கண்டன ஆர்பாட்டம் செய்ய வேண்டியிருந்தது. 

சுபவீ உடன் கூட இருந்த அன்பு தென்னரசு 3 நிமிடத்தில் 

--------

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

நீர் இணைக்கும் பதிவிற்கு ஏதை பதியனுமென எனக்கு தெரியும்.👍😁

சீமான் என்ற பெயரை எந்தத் திரியில் கண்டாலும் அதில் என்ன சொல்லப்படுகின்றது என்பதை வாசிக்காமலேயே பிரச்சாரக் காணொளிகளை ஒட்டுவதுதான் உடையாரின் முழுநேரத் தொழில் என்பது நன்றாகத் தெரியும்.😁 இதனால்தான் யாழ் களம் நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரக் களமாக மாறிவருகின்றது. அதன் வெறுப்பரசியலை விமர்சனம் செய்பவர்களை களத்தில் இருந்து கலைக்கவேண்டும் என்பதுதான் தொண்டரடி உடையார்களின் நோக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, உடையார் said:

நீர் இணைக்கும் பதிவிற்கு ஏதை பதியனுமென எனக்கு தெரியும்.👍😁

உங்களுடைய இலவச அறிவுரைகளை உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள்😜.

என்ன நீர் நிர்வாகமா,  ஏதை இணைப்பது என்று கூற? 😊

உங்களுக்கு ஒரு களவிதி மற்றவர்களுக்கு ஒன்றா?

நீங்கள் நாம் தமிழரை பற்றி தனி திரி திறக்கலாம், நாம் திறந்தால் நீங்குதலா?

இதுதான் யாழ் களத்தின் நேர்மை???

நீங்கள் என்னத்திற்கு காணோளி இணைத்தீர்கள் இதில்???

சரியாக சொன்னீர்கள் உடையார்!
தாங்கள் பெரிய புத்தக ஜீவிகள் என தங்களுக்கு தாங்களே மகுடம் சூட்டிக்கொள்கின்றார்கள்.
மாவீரர் நினவுக்கூட்டங்களுக்கு செல்பவர்களை விசிலடிச்சான் கூட்டங்கள் என விளித்த மகான் அல்லவா அவர். 😁

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

சீமான் என்ற பெயரை எந்தத் திரியில் கண்டாலும் அதில் என்ன சொல்லப்படுகின்றது என்பதை வாசிக்காமலேயே பிரச்சாரக் காணொளிகளை ஒட்டுவதுதான் உடையாரின் முழுநேரத் தொழில் என்பது நன்றாகத் தெரியும்.😁 இதனால்தான் யாழ் களம் நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரக் களமாக மாறிவருகின்றது. அதன் வெறுப்பரசியலை விமர்சனம் செய்பவர்களை களத்தில் இருந்து கலைக்கவேண்டும் என்பதுதான் தொண்டரடி உடையார்களின் நோக்கம்.

உங்களின் ஊகம் எண்ணங்கள் உங்களுடன் இருக்கட்டும்😜, முதலில் காணோளிகைள பார்த்தீர்களா?🤣 பார்த்தபின் தொடர்பு இருக்கா இல்லையா என கதைக்கவும்👍.

கேட்ட கேள்விகளுக்கு பதிலை தரவும்.👍

நீங்கள் வெறுப்பரசியலை இணைக்கலாம், மற்றவர்கள் இணைத்தால், ஆதரவு😜. உங்கட பஐனைகளை சோபா சுத்தி என்ற தரங்கொட்டவர்களுடன்😜.

ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடுபவரை ஆதரிபதில் மகிழ்ச்சியே..

எங்கள் விடுதலைக்கு ஆதரவு கொடுத்த மண், விடுதலையடைய போராடுகின்றது, அதற்கு முழு ஆதரவு.

திராவிட கொள்கையின் மாயையில் பஜனை பாடுபவர்களுக்கு இது வேதனைதான் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

உங்களுடைய இலவச அறிவுரைகளை உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள்😜.

என்ன நீர் நிர்வாகமா,  ஏதை இணைப்பது என்று கூற? 😊

உங்களுக்கு ஒரு களவிதி மற்றவர்களுக்கு ஒன்றா?

நான் உங்களைப் போல ஒரு கள உறுப்பினர் அவ்வளவே. ஆனால் கருத்துக்களை வைத்து விவாதம் செய்வதே தெளிவுகள் பிறக்கும் என்பதில் நம்பிக்கையுள்ளவன். பிடிக்காத கருத்து வைப்பவர்களை மெளனிக்கச் செய்யவேண்டும் என்ற பாஸிச சிந்தனை என்னிடம் இல்லை.

யாழ் களத்தில் அறிவுரைகள் சொல்லுவதில்லை. அறிவுரை கேட்கும் அளவிற்கு முதிர்ச்சி இல்லாதவர்கள் இங்கு இல்லை என்றே நினைக்கின்றேன்😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.