Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்கினேஸ்வரன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டெனீஸ்வரன் வாபஸ் பெறவேண்டும்; சட்டத்தரணிகள் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விக்கினேஸ்வரன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டெனீஸ்வரன் வாபஸ் பெறவேண்டும்; சட்டத்தரணிகள் கோரிக்கை

BharatiSeptember 13, 2020


 

சட்டத்தரணி டெனிஸ்வரன், முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மீளப்பெறுமாறு அரசியல் அவதானிகள், தமிழ் தேசிய ஆர்வலர்கள் மற்றும் தமிழ் சட்டத்தரணிகள் பலர் அவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

சட்டத்தரணி டெனிஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானது என்றும் அவரை மீள அமைச்சராக உள்வாங்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் 29.06.2018 அன்று வழங்கிய இடைக்காலக் கட்டளையை செயற்படுத்த தவறிவிட்டார் என சட்டத்தரணி டெனிஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றை நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்திருந்தார்.

 

பிரதான வழக்கில் சட்டத்தரணி டெனிஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானது என வட மாகாண சபை கலைக்கப்பட்டதன் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் 05.08.2019 அன்று தீர்ப்பளித்தது.

 

இடைக்காலக் கட்டளையை செயற்படுத்த நீதியரசர் விக்கினேஸ்வரன் தவறிவிட்டார் என்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

 

நீதியரசர் விக்கினேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர் நாடாளுமன்றில் ஆற்றிய உரைகள் காரணமாக சிங்கள அதிதீவிர சக்திகளின் கோபத்துக்கு அவர் ஆளாகியுள்ளார். அத்தரப்புக்கள் இந்நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தற்போது கூர்ந்து அவதானிக்க தொடங்கியுள்ளனர்.

இவ்வழக்கில் நீதியரசர் விக்கினேஸ்வரன் குற்றவாளியாக காணப்பட்டால் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க வேண்டி வரும் என்ற நிலையை இத்தரப்பினர் பெரிதும் விரும்புகின்றனர்.

 

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சட்டத்தரணி கலாநிதி. குமாரவடிவேல் குருபரன், “நீதியரசர் விக்கினேஸ்வரன் தான் கடமை ஆற்றிய நீதிமன்றங்களில் கூண்டில் ஏறி சாட்சி சொல்வதை தவிர்ப்பது தமிழ் சட்ட சமூகத்தின் மாண்பை காப்பாற்றுவதற்கு அவசியம். கட்சி வேறுபாடுகளுக்கப்பால் தமிழ் அரசியல்வாதி – அதுவும் ஒரு சட்டத்தரணி தொடுத்த வழக்கால் ஓர் நீதியரசர் குற்றவாளியாக காணப்பட்டார் என்றோ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார் என்ற இழி நிலை ஏற்படக் கூடிய சந்தர்ப்பத்தைத் தவிர்ப்பது அவசியம். சட்டத்தரணி டெனிஸ்வரன் இன்றைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பெருந்தன்மையாக கைவாங்க வேண்டும். அப்படி அவர் செய்தால் அவர் மீதான நன் மதிப்பு உயரும்” எனக் குறிப்பிட்டார்.

 

http://thinakkural.lk/article/68159

 

 

டெனிஸ்வரன் இதட்கு சார்பான ஒரு பதிலை வழங்கி இருப்பதாக அறிய முடிகின்றது. அநேகமாக வழக்கு வாபஸ்பெறப்பட சந்தர்ப்பம் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரன் காலத்தின் தேவை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கைவிட டெனீஸ்வரன் முடிவு!
 

 

முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்டத்தரணி டெனிஸ்வரன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மீளப்பெறுமாறு அரசியல் அவதானிகள், தமிழ் தேசிய ஆர்வலர்கள் மற்றும் தமிழ் சட்டத்தரணிகள் பலர் அவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, வழக்கை வாபஸ்பெற தயார் என, க.வி.விக்னேஸ்வரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணி டெனிஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானது என்றும் அவரை மீள அமைச்சராக உள்வாங்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் 29.06.2018 வழங்கிய இடைக்காலக் கட்டளையை செயற்படுத்த தவறிவிட்டார் என சட்டத்தரணி டெனிஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றை நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்திருந்தார்.

எம்.ஏ.சுமந்திரனின் பின்னணியில் இந்த வழக்கு தொடரப்பட்டதாக அப்போது அரசியலரங்கில் பேச்சிருந்தது.

பிரதான வழக்கில் சட்டத்தரணி டெனிஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானது என வட மாகாண சபை கலைக்கப்பட்டதன் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் 05.08.2019 தீர்ப்பளித்தது.

இடைக்காலக் கட்டளையை செயற்படுத்த நீதியரசர் விக்னேஸ்வரன் தவறிவிட்டார் என்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்காக நாளை எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

நீதியரசர் விக்னேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர் பாராளுமன்றில் ஆற்றிய உரைகள் காரணமாக சிங்கள அதிதீவிர சக்திகளின் கோபத்துக்கு அவர் ஆளாகியுள்ளார். அத்தரப்புக்கள் இந்நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தற்போது கூர்ந்து அவதானிக்க தொடங்கியுள்ளனர். இவ்வழக்கில் நீதியரசர் விக்னேஸ்வரன் குற்றவாளியாக காணப்பட்டால் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க வேண்டி வரும் என்ற நிலையை இத்தரப்பினர் பெரிதும் விரும்புகின்றனர்.

இந்தநிலையில், விக்னேஸ்வரனை இக்கட்டில் சிக்க வைக்கும்- தமிழ் தரப்பிலிருந்தே மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சிக்கு தெரிந்தோ தெரியாமலோ துணையாகி விட வேண்டாம் என பல தரப்பிலிருந்தும் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்தே டெனீஸ்வரன் இந்த முடிவிற்கு வந்தார்.

அடுத்த வழக்கு தவணையில், இரு தரப்பும் நீதிமன்றத்தின் வெளியே இணக்கமாக பேசி தீர்த்துக்கொள்ள தயாராக இருப்பதாக மன்றில் தெரிவிப்பார்கள் என தெரிய வருகிறது.

எனினும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கான இதில் நீதியரசர்களின் முடிவில், வழக்கின் எதிர்காலம் தங்கியுள்ளது.

 

https://www.pagetamil.com/145578/

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினக் காழ்ப்புணர்சி கொண்ட அரசியல்வாதிகளின் அதிகாரத்தில் இயங்கிவரும் இலங்கை அரசில், சுயமாக முடிவெடுத்து ஒரு தமிழனுக்கு  நீதி வழங்கக்கூடிய நீதிபதிகள் அரிதாகவே தெரிகின்றனர்.🥴 

டெனீசுவரன் அவர்கள் வழக்கை மீளப் பெற்றுக்கொண்டாலும், விக்னேசுவரன் அவர்களை மாட்டிவிடுவதற்கான ஆலோசனைகளை அரசுக்கு வழங்கும் மதிநுட்பம் கொண்ட தமிழ்ச் சட்டத்தரணிகளும் இலங்கை அரசில் இருப்பதை புறம்தள்ளவும் முடியாது. 😲 

  • கருத்துக்கள உறவுகள்

சி.விக்கு எதிரான வழக்கு வாபஸ்

 

 

-மு.தமிழ்ச்செல்வன் 

“வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக என்னால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை இனத்தின் நலன் கருதி வாபஸ்பெறவுள்ளேன்” என,  வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பா. டெனீஸ்வரன், இன்று (14) தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/Withdraws-case-against-CV/150-255361

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் மீதான வழக்கை விலக்கிக் கொள்ளப் போவதாக தொலைபேசி வழியாக அவரிடமே கூறிவிட்டேன் என வடக்கு முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

 

வடமாகாணசபைக்குள் எழுந்த ஊழல் குற்றச்சாட்டையடுத்து, அமைச்சர்கள் பதவிநீக்கம் இடம்பெற்றது. இதன் தொடர்ச்சியாக, பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடினார்.

இந்த வழக்கின் தீர்ப்பு டெனிஸ்வரனிற்கு சாதகமாக அமைந்திருந்தும், அதை விக்னேஸ்வரன் நடைமுறைப்படுத்தவில்லை, அவர் நீதிமன்றத்தை அவமதித்து விட்டார் என டெனிஸ்வரன் சார்பில், எம்.எ.சுமந்திரனின் கனிஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ மீளவும் வழக்கொன்றை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் இறுதிக்கட்டம் நெருங்கியுள்ளது. நாளை (15) தொடக்கம் 3 நாட்கள் தொடர்ச்சியாக வழக்கு விசாரணை நடந்து தீர்ப்பளிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் சுமார் 4 நாட்களின் முன்னர் விக்னேஸ்வரனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட டெனிஸ்வரன், வழக்கை மீளப்பெற போவதாக விக்னேஸ்வரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்திருந்தார்.

டெனீஸ்வரன் தொடர்பு கொண்டபோது, விக்னேஸ்வரன் கதிர்காம கந்தன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

பா.டெனீஸ்வரனை இன்று (14) காலை தமிழ் பக்கம் தொடர்பு கொண்டு பேசியபோது சில விடயங்களை டெனீஸ்வரன் பகிர்ந்தார்.

“விக்னேஸ்வரன் ஐயாவை சிறையில் அடைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் நான் வழக்கை தொடரவில்லை. எனக்கு நேர்ந்த அநீதியொன்றில் நீதி கோரியே வழக்கு தொடர்ந்தேன். ஊழல் குற்றச்சாட்டுக்கள் அமைச்சர்கள் சிலர் மீது சுமத்தப்பட்டபோது அனைவரையும் நீக்கினார்கள். மாவீரர் குடும்பங்கள், போராளிகள் மறுவாழ்வு திட்டமொன்றை ஜப்பானிய நிதியுதவியில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்ததால் அதை முடிக்கும்வரை அவகாசம்- 2 மாதங்கள்- தருமாறு கோரினேன். அதை அவர்கள் ஏற்கவில்லை. இதனாலேயே வழக்கை தொடர்ந்தேன்.

நான் குற்றமற்றவன் என்பதை நீதிமன்றம் உறுதிசெய்து விட்டது. இப்பொழுது நீதிமன்ற அவமதிப்பு வழக்காகியுள்ளது. எனக்கு எப்படியான தீர்ப்பு வந்தது என்பதற்கு அப்பால், இப்பொழுது விக்னேஸ்வரன் ஐயாவின் கரங்களை பலப்படுத்த வேண்டிய தேவை எங்கள் எல்லோருக்குமுள்ளது. அவர் மீது மாகாணசபை நிர்வாக விமர்சனங்கள் இருந்தாலும், தற்போது நாடாளுமன்றத்தில் எந்த தமிழ் எம்.பியும் தொடாத- எமது வரலாற்றை அங்கு பதிவு செய்யும் முயற்சியில் விக்னேஸ்வரன் ஐயா ஈடுபட்டுள்ளார். இதுவரை தமிழ் எம்.பிக்கள் யாரும் அதை செய்யவில்லை.

இதனாலேயே அவரை பலரும் குறிவைக்கிறார்கள். இனப்பற்றுள்ளவன் என்ற அடிப்படையில் இப்போது அவரை பலப்படுத்த வேண்டிய தேவையுள்ளதாக கருதுகிறேன். நான் என்ற சிந்தனைக்கு அப்பால், நாம் என சிந்திக்க வேண்டிய தருணம் இது.

இதனால்தான், இந்த பரபரப்புக்கள் ஊடகங்களில் ஏற்படுவதற்கு முன்னரே- நான்கு நாட்கள் முன்னர்- அவரை தொலைபேசியில்அழைத்து, இதைப்பற்றி பேசிவிட்டேன்.

நாளையு வழக்கு விசாரணையில், இந்த வழக்கை விலக்கிக் கொள்வதாக எமது சட்டத்தரணி அறிவிப்பார். அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால், சிக்கலின்றி இந்த விவகாரம் முடிந்து விடும்.

வழக்கை விலக்கிக் கொள்வதென நான் இப்பொழுது முடிவெடுக்கவில்லை. அதை சில வாரங்களின் முன்னரே எடுத்து விட்டேன்.

எனது 8 வயது மகன் பேஸ்புக் பார்ப்பார். அதன்மூலம் அரசியல் நிலவரம் அவருக்கு ஓரளவு தெரியும். அண்மையில் நாங்கள் வாகனத்தில் போய்க்கொண்டிருக்கும்போது, இதை என்னிடம் கேட்டார். “அப்பா… உங்கள் வழக்கினால் விக்னேஸ்வரன் ஐயா சிறைக்கு போவாரா? வயதான ஒருவர் கஸ்டப்படுவார் இல்லையா?“ என என்னிடம் கேட்டார். அதற்கு பின்னர் பலமுறை கேட்டு விட்டார்.

அப்பொழுதே வழக்கை விலக்கிக் கொள்ளலாமா என யோசிக்க ஆரம்பித்தேன். அதன்பின்னர் நாடாளுமன்றத்தில் விக்னேஸ்வரன் ஐயாவிற்கு எழுந்த நெருக்கடிகளை பார்த்து விட்டு, இந்த முடிவை உறுதியாக எடுத்தேன்“ என்றார்.

https://www.pagetamil.com/145595/

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு அறிவிச்சாச்சா? டெனீஸ்வரன் மீது வழக்குப் போடப்போறார் சட்டாம்பி.

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்ட வேண்டிய செயல். ஒற்றுமை ஒன்றே.. எம்மை எதிரிக்கு எதிராகப் பலப்படுத்தும். அதற்கு இப்படியான சின்னச் சின்ன விடயங்கள் கூட மிகப் பெரிய பங்களிப்பை அளிக்க முடியும்.

தமிழ் தேசிய பரப்பெங்கும்.. இந்த ஒற்றுமை அவசியம். அது உலகில் எங்கிருந்தாலும். 

விக்கி ஐயா கொஞ்ச நாட்கள் கவனமாக இருக்கனும் 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் வழக்கை பின்வாங்கினாலும் நீதிமன்ற அவமதிப்பில் விக்கி ஐயாவுக்கு பிரச்சனை வரும்போல!
இவர் தான் தப்ப வழக்கை பின்வாங்குவது போல் நடிக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் முதல்வர் மீதான வழக்கை வாபஸ்பெறாத டெனீஸ்வரன்; நிபந்தனைகளை ஏற்க மறுத்த விக்கி

 

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மீது தொடுத்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெறுவதாக வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஏற்கனவே தெரிவித்திருந்த போதிலும், இன்று மாலை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது அதனை வாபஸ் பெறுவதற்கு டெனீஸ்வரன் தரப்பு மறுத்துவிட்டது.

சமரசமாகத் தீர்பதற்கு டெனீஸ்வரன் தரப்பில் முன்வைக்கப்பட்ட மூன்று நிபந்தனைகளை ஏற்பதற்கு விக்கினேஸ்வரன் தரப்பு திட்டவட்டமாக மறுத்துவிட்டார். குறிப்பாக தன்னால் மன்னிப்புக் கேட்க முடியாது என்பதை அவர் உறுதியாகக் கூறிவிட்டார். இதனையடுத்து இந்த வழக்கு மீதான விசாரணை நாளையும், நாளை மறுதினமும் நடைபெற்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

சட்டத்தரணி டெனிஸ்வரன், முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மீளப்பெறுமாறு அரசியல் அவதானிகள், தமிழ் தேசிய ஆர்வலர்கள் மற்றும் தமிழ் சட்டத்தரணிகள் பலர் அவரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

சட்டத்தரணி டெனிஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானது என்றும் அவரை மீள அமைச்சராக உள்வாங்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் 29.06.2018 அன்று வழங்கிய இடைக்காலக் கட்டளையை செயற்படுத்த தவறிவிட்டார் என சட்டத்தரணி டெனிஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றை நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்திருந்தார்.

பிரதான வழக்கில் சட்டத்தரணி டெனிஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானது என வட மாகாண சபை கலைக்கப்பட்டதன் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் 05.08.2019 அன்று தீர்ப்பளித்தது.

இடைக்காலக் கட்டளையை செயற்படுத்த நீதியரசர் விக்கினேஸ்வரன் தவறிவிட்டார் என்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்காக இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதியரசர் விக்கினேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர் நாடாளுமன்றில் ஆற்றிய உரைகள் காரணமாக சிங்கள அதிதீவிர சக்திகளின் கோபத்துக்கு அவர் ஆளாகியுள்ளார். அத்தரப்புக்கள் இந்நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தற்போது கூர்ந்து அவதானிக்க தொடங்கியுள்ளனர்.

இவ்வழக்கில் நீதியரசர் விக்கினேஸ்வரன் குற்றவாளியாக காணப்பட்டால் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க வேண்டி வரும் என்ற நிலையை இத்தரப்பினர் பெரிதும் விரும்புகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், “கட்சி வேறுபாடுகளுக்கப்பால் தமிழ் அரசியல்வாதி தொடுத்த வழக்கால் ஓர் நீதியரசர் குற்றவாளியாக காணப்பட்டார் என்றோ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார் என்ற இழி நிலை ஏற்படக் கூடிய சந்தர்ப்பத்தைத் தவிர்ப்பது அவசியம். சட்டத்தரணி டெனிஸ்வரன் இன்றைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பெருந்தன்மையாக கைவாங்க வேண்டும். அப்படி அவர் செய்தால் அவர் மீதான நன் மதிப்பு உயரும்” எனவும் தமிழ் ஆர்வலர்கள், புத்திஜீவிகள் பலரும் டெனீஸ்வரனுக்குத் தெரியப்படுத்தியிருந்தனர்.

இதற்கு தனது முகநூல் பக்கத்தில் பதிலளித்த டெனீஸ்வரன், “கடந்தவை கடந்தவையாகவே இருக்கட்டும், இன்று எந்தப் பாராளுமன்ற உறுப்பினரும் கதைக்காத ஒரு விடயத்தை எமது முதலமைச்சர் உரக்கச் சொல்லி இருக்கின்றார். முதற்கண் அதற்கு தலைவணங்குகிறேன். இதனை எமது இனம்சார்ந்த ஒரு விடயமாகவே நான் பார்க்கின்றேன். அதன் பொருட்டு அவருக்கு பக்கபலமாக நான் எப்போதும் இருப்பேன்” எனத் தெரிவித்திருந்தார். அதேவேளையில், இந்த வழக்கை தான் வாபஸ் பெறுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்று மாலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, டெனீஸ்வரன் தரப்பு மூன்று நிபந்தனைகளை முன்வைத்தது. விக்கினேஸ்வரன் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். வழக்கின் செலவுத் தொகையை முழுமையாகத் தரவேண்டும், உச்ச நீதிமன்றத்தில் விக்கினேஸ்வரன் தரப்பால் டெனீஸ்வரனுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கு வாபஸ்பெறப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

மன்னிப்புக் கேட்பதற்கு விக்கினேஸ்வரன் தரப்பு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இந்த நிலையில் வழக்கு விசாரணை நாளை தொடரும்.

http://www.ilakku.org/முன்னாள்-முதல்வர்-மீதான/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு துன்பியல் சம்பவம்- டெனீஸ்வரனுடனான வழக்கு குறித்து விக்கினேஸ்வரன்

September 16, 2020

 

IMG_20200916_142428.jpg

இது ஒரு துன்பியல் சம்பவம். தரப்பாருக்கு இடையே புரிந்துணர்வு இல்லாமையால் இதுவரையில் இவ்விடயம் தாமதிக்கப்பட்டு வந்துள்ளது” என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். 

டெனிஸ்வரன் தொடர்ந்த வழக்கு இன்று நண்பகல் முடிவுகள் வந்தபின்னர் நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார். “மாகாண சபையில் தொடங்கிய டெனீஸ்வரனுடனான இந்தப் பிரச்சினை நீதிமன்றம் சென்றது குறித்து என்ன சொல்கின்றீர்கள்?” என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

“இது ஒரு துன்பியல் சம்பவம். அதாவது, தரப்பாருக்கு இடையே புரிந்துணர்வு இல்லாமையால் இதுவரையில் இவ்விடயம் தாமதிக்கப்பட்டுவந்துள்ளது. 

அண்மையில் நான் கதிர்காமத்தில் இருந்த போது, டெனீஸ்வரன் தொலைபேசியூடாக என்னை அழைத்தார். அப்போது நான் அவருடன் பேசியபோது ஒரு விடயத்தை அறிந்துகொண்டேன். தன்னை குற்றவாளியாக நினைத்து அமைச்சர் குழாமிலிருந்து நான் அவரை வெளியேற்றியதாக அவர் நினைத்திருந்தார். 

ஆனால், அவரை வெளியேற்றியமைக்கான காரணம் அவர் சம்பந்தமாக முறைப்பாடு செய்த ஒருவர் அமைச்சரவையில் அப்போது இருந்தார். குற்றம் சுமத்தியவரையும், குற்றம் சுமத்தப்பட்டவரையும் அமைச்சரவையில் வைத்திருத்தல் உசிதம் இல்லை என்ற காரணத்தினால்தான் நான் அவரை பதவியிலிருந்து நீக்கினேன் என்ற விடயத்தை அவருக்கு அறியப்படுத்தினேன். 

அதன்பின்னர் பல சம்பவங்கள் நடைபெற்று இன்று வழக்கை அவர் வாபஸ் பெற்றுக்கொண்டார். அதற்கு ஈடாக நாங்கள் உச்ச நீதிமன்ற மேன்முறையீட்டு மனுவை கைவாங்குவதாக மன்றில் தெரிவித்தோம். இதன் அடிப்படையில் நீதிமன்றம் மன்றை அவமதித்தமை சம்பந்தமான வழக்கை கைவாங்க அனுமதியளித்தது.” எனத் தொிவித்தாா். #துன்பியல் #டெனீஸ்வரன் #விக்கினேஸ்வரன் #புரிந்துணர்வு #மாகாணசபை #வாபஸ்

 

https://globaltamilnews.net/2020/150319/

  • கருத்துக்கள உறவுகள்

நிபந்தனைகளை கைவிட்டார் டெனீஸ்வரன்; விக்கினேஸ்வரன் மீதான வழக்கு சமரசமாக முடிவு

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மீது வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுத்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று நண்பகல் 1.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஒரு மணி நேரத்துக்குள்ளேயே சமரசமாகத் தீர்த்துவைக்கப்பட்டதால், வழக்கு முடிவுக்கு வந்தது.

விக்கினேஸ்வரன் மீதான வழக்கை வாபஸ் பெறுவதற்காக டெனீஸ்வரன் தரப்பில் நேற்று முன்வைத்த நிபந்தனைகளில் இரண்டை வாபஸ் பெறுதாக டெனீஸ்வரன் தரப்பு இன்று விசாரணை ஆரம்பமான போது நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியது.

உச்ச நீதிமன்றத்தில் டெனீஸ்வரன் மீது தொடுத்திருந்த வழக்கை விக்கினேஸ்வரன் வாபஸ் பெற்றால் போதுமானது என டெனீஸ்வரன் தரப்பு தெரிவித்ததை விக்கினேஸ்வரன் தரப்பு ஏற்றுக்கொண்டதையடுத்து இந்த வழக்கு சமரசமாகத் தீர்த்துவைப்பதற்கான சூழ்நிலை உருவானது. இதனையடுத்து நீதியரசர்கள் இருவரும் இது தொடர்பாக ஆலோசனை நடத்திய பின்னர் வழக்கு விசாரணை முடிவுக்கு வருவதாக அறிவித்தனர்.

இதேவேளையில், “இது ஒரு துன்பியல் சம்பவம். இரு தரப்பாருக்கும் இடையே புரிந்துணர்வு இல்லாமையால் இதுவரையில் இவ்விடயம் தாமதிக்கப்பட்டுவந்துள்ளது” என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

டெனிஸ்வரன் தொடர்ந்த வழக்கு இன்று நண்பகல் முடிவுகள் வந்தபின்னர் நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார். “மாகாண சபையில் தொடங்கிய டெனீஸ்வரனுடனான இந்தப் பிரச்சினை நீதிமன்றம் சென்றது குறித்து என்ன சொல்கின்றீர்கள்?” என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

“இது ஒரு துன்பியல் சம்பவம். அதாவது, தரப்பாருக்கு இடையே புரிந்துணர்வு இல்லாமையால் இதுவரையில் இவ்விடயம் தாமதிக்கப்பட்டுவந்துள்ளது.

அண்மையில் நான் கதிர்காமத்தில் இருந்த போது, டெனீஸ்வரன் தொலைபேசியூடாக என்னை அழைத்தார். அப்போது நான் அவருடன் பேசியபோது ஒரு விடயத்தை அறிந்துகொண்டேன். தன்னை குற்றவாளியாக நினைத்து அமைச்சர் குழாமிலிருந்து நான் அவரை வெளியேற்றியதாக அவர் நினைத்திருந்தார்.

ஆனால், அவரை வெளியேற்றியமைக்கான காரணம் அவர் சம்பந்தமாக முறைப்பாடு செய்த ஒருவர் அமைச்சரவையில் அப்போது இருந்தார். குற்றம் சுமத்தியவரையும், குற்றம் சுமத்தப்பட்டவரையும் அமைச்சரவையில் வைத்திருத்தல் உசிதம் இல்லை என்ற காரணத்தினால்தான் நான் அவரை பதவியிலிருந்து நீக்கினேன் என்ற விடயத்தை அவருக்கு அறியப்படுத்தினேன்.

அதன்பின்னர் பல சம்பவங்கள் நடைபெற்று இன்று வழக்கை அவர் வாபஸ் பெற்றுக்கொண்டார். அதற்கு ஈடாக நாங்கள் உச்ச நீதிமன்ற மேன்முறையீட்டு மனுவை கைவாங்குவதாக மன்றில் தெரிவித்தோம். இதன் அடிப்படையில் நீதிமன்றம் மன்றை அவமதித்தமை சம்பந்தமான வழக்கை கைவாங்க அனுமதியளித்தது.”

 

http://www.ilakku.org/நிபந்தனைகளை-கைவிட்டார்-ட/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.