Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திலீபனுக்கு அஞ்சலி: சுரேஷ் விக்கியின் தேசிய அக்கறை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  • Replies 94
  • Views 9.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, கிருபன் said:

பசீர் காக்காவின் துப்பாக்கிக்கு மட்டும் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் பலியாகினர்.

இதற்கு, கட்டுரையாளரிடம் (அல்லது யாரிடமோ) ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

ஒரு பக்கம் பழைய விடயங்களை பற்றி மீண்டும் மீண்டும் கதைக்காமல் புதிய சிந்தனைகளுக்குட்படுவோம் என்று பல்லாயிரக்கணக்கான  தமிழ் மக்களின் அழிவுக்கு காரணமான  கோத்தாவுடன் , அதை பின் நின்று நடத்திய இந்தியாவுடன் , சிங்கள அரசுகளுடன் , ஒத்து ஊதிய சர்வதேசத்துடன் புதிய உறவுகளை அமைத்து ஏற்படுத்தி முன்னேறச் சொல்லி அறிவுரைகள் தருகின்றனர். அதே நேரம்  தமிழ் அரசியல்வாதிகளாக இன்று மக்கள் முன் நிற்பவர்களின் கடந்த கால செயற்பாடுகளை மறக்காமல், குத்தி கிளறி அவர்களது செயற்பாடுகளை முடக்கி ஒதுக்கி வைக்க முயல்கின்றனர்.

எல்லாருக்கும் அவரவர் அரசியல் தான் முக்கியம். 

வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌ க‌ருத்து , 
வாழ்த்துக்க‌ள் விற‌த‌ர் 💪

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பிரபா said:

இதற்கு, கட்டுரையாளரிடம் (அல்லது யாரிடமோ) ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?

அடிச்சு விட வேண்டியது தான் பிரபா.  அல்லது ஐயர் (புலிகள்) சொன்னது என்று "இன்னொரு" சொல்ல தயங்காது.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கிருபன் said:

வாசித்துவிட்டுத்தான் இணைத்தேன் மருதர். 😎

உங்கள் பார்வையில் வாந்தியாக இருப்பது எல்லோருக்கும் வாந்தியாக இருக்காது. 

கிருபனின் தரம் இவ்வளவு  தாழ்ந்து போகுமென்று நான் கனவிலும் நினைக்கவில்லை! 

சுரேஷ் பிறேமச்சந்திரன்  போன்றவர்கள் அரசியலில் இருப்பது தமிழினத்தின்  சாபக்கேடு. அவரையெல்லாம் கூடவைத்திருக்கும் விக்கியரை என்னசொல்ல??

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

கருணா அம்மான் என்றால் தென் தமிழீழம். தென் தமிழீழம் என்றால் கருணா அம்மான். தென் தமிழீழத்துதின் அடையாளம். இது அவர் கருணா அம்மானாக இருக்கையில் எனது மனநிலை. 

இப்போது அவர் முரளீதரன்.

அவரை சுரேஸின் தரத்திற்கு கீழிறக்கி ஒப்பிடுவது,  நீங்கள் உங்கள் அண்ணரை இழிவுபடுத்துவதாகாதா ? ☹️

(உங்கள் ஒப்பீடு சகிக்கவில்லை ☹️)

நீங்கள் சொல்வது உண்மை தான் ...இங்க யாரும் உத்தமர்கள் இல்லை ...பழசை நினைக்கிறதில் பிரயோசனமும் இல்லை ...என்னுடைய ஆதங்கம் இது தான் தங்களுக்கு விருப்பம்  என்றால் கொலைகாரர்களை ஆதரிக்கும் கூட்டம் விருப்பமில்லை என்றால் தூக்கி குப்பையில் போடுவார்கள் ....விருப்பமானவர்கள் எவ்வளவு பெரிய படு பாதர்களாய் இருந்தாலும் அவர்களை விமர்சிக்க கூடாது . பழசை மறந்து போய் விடோணும் . அதே  பிடிக்காதவர்கள் என்றால் பழசை மறக்கவும் மாட்டோம். அதே நேரத்தில் விமர்சித்து கொண்டே இருப்போம் 

7 hours ago, நிழலி said:

ஒரு பக்கம் பழைய விடயங்களை பற்றி மீண்டும் மீண்டும் கதைக்காமல் புதிய சிந்தனைகளுக்குட்படுவோம் என்று பல்லாயிரக்கணக்கான  தமிழ் மக்களின் அழிவுக்கு காரணமான  கோத்தாவுடன் , அதை பின் நின்று நடத்திய இந்தியாவுடன் , சிங்கள அரசுகளுடன் , ஒத்து ஊதிய சர்வதேசத்துடன் புதிய உறவுகளை அமைத்து ஏற்படுத்தி முன்னேறச் சொல்லி அறிவுரைகள் தருகின்றனர். அதே நேரம்  தமிழ் அரசியல்வாதிகளாக இன்று மக்கள் முன் நிற்பவர்களின் கடந்த கால செயற்பாடுகளை மறக்காமல், குத்தி கிளறி அவர்களது செயற்பாடுகளை முடக்கி ஒதுக்கி வைக்க முயல்கின்றனர்.

எல்லாருக்கும் அவரவர் அரசியல் தான் முக்கியம். 

திலீபனின் நினைவேந்தல் முடிந்த பின் இக் கட்டுரையை எழுதியிருந்தால் நீங்கள் என்ன சொல்லி இருப்பீர்கள்?
 
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Eppothum Thamizhan said:

கிருபனின் தரம் இவ்வளவு  தாழ்ந்து போகுமென்று நான் கனவிலும் நினைக்கவில்லை! 

சுரேஷ் பிறேமச்சந்திரன்  போன்றவர்கள் அரசியலில் இருப்பது தமிழினத்தின்  சாபக்கேடு. அவரையெல்லாம் கூடவைத்திருக்கும் விக்கியரை என்னசொல்ல??

இது முகங்கள் தெரியும் காலம். கருத்தாளரை மடக்கணும் கேலி செய்யணும் என்ற வெறியில் எழுதுவதால் அங்கு மதி தோற்பதில் ஆச்சரியம் இல்லை. கிருபன் மதி மயங்கி தன்னை இழந்து கனகாலமாகிவிட்டது 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

இது முகங்கள் தெரியும் காலம். கருத்தாளரை மடக்கணும் கேலி செய்யணும் என்ற வெறியில் எழுதுவதால் அங்கு மதி தோற்பதில் ஆச்சரியம் இல்லை. கிருபன் மதி மயங்கி தன்னை இழந்து கனகாலமாகிவிட்டது 

எல்லாம் ஜெயமோகன், ஷோபாசக்தி போன்றோர்களின் நாவல்களை வாசிப்பதால் ஏற்பட்ட short  term memory loss !!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, விசுகு said:

கிருபன் மதி மயங்கி தன்னை இழந்து கனகாலமாகிவிட்டது

மயக்கத்தில் இருந்து தெளிந்து கனகாலமாகிவிட்டது.

ஆதாரங்களை வைத்துக்கொண்டு சுரேஸ் பிரேமச்சந்திரன் வெளியில் இருக்கமுடியுமா? இல்லை புலம்பெயர் நாடுகளில் புலிகளின் பணத்தைச் சூறையாடியவர்கள் ஆதாரங்களை விட்டா வைத்திருக்கின்றார்கள்? 

இந்த விடயங்களில் இவர்கள் எல்லாம் விண்ணர்கள். ஆனால் தேசியம் என்று சொன்னால் பழையதை மறந்து அரவணைத்துக்கொள்வோம்.  அப்படிப் பலர் இருப்பதால்தான் இன்னமும் அதே ஈபிஆர்எல்எவ் கட்சியை வைத்துக்கொண்டே தேசியம் பேசமுடிகின்றது. ஜனநாயகம் கதைக்கமுடிகின்றது. இவர்கள் எப்போது தமது பழைய அராஜகங்களுக்குப் பொறுப்பேற்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

கிருபன், நீங்கள் பரவலாக புத்தகங்கள் வாசிக்கிற கெட்ட பழக்கத்தை உடனே கைவிட வேணும்! இணையத் தளங்களில் காணொளி மட்டுமே பார்த்து வாழும் புதிய உலகுக்கு வர வேணும்! இல்லையேல் உங்கள் மதி உங்களிடம் திரும்பி வராது! புரிகிறதா?😜

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பாவம் நீங்க எப்படியாவது புலத்தில் பணம் சுருட்டல் என்று சுப்பற்ற கொல்லைக்குள்ள வந்து விடுவதை வழக்கமாக கொண்டு கனநாளாச்சு. உங்கள் வட்டமும் தாயகம் மீதான பற்றும் இவ்வளவு தான் என்பதை பலமுறை நிரூபித்த பின்பும் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. டொட் 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, உடையார் said:
11 hours ago, விளங்க நினைப்பவன் said:

கொலைகள் செய்துவிட்டு தமிழ் தேசியவாதியாக மாறிவிட வேண்டும் தேசியவாதியாக இருந்தால் என்ன  அநீதிகளும் செய்யலாமே

திருந்தியபின் மக்களுக்கு இன்றுவரை என்ன நன்மைகள் செய்கின்றார்கள் என விளக்க முடியுமா, கருணா குட்டி புட்டிகளுடன் காலம், மற்றவர்... சிங்களத்துக்கு அடிவருடி... மக்கள் ஏமாளிகள்

தமிழ் தேசியவாதியாக மாறுவது என்றால் என்ன என்று விளங்கப்படுத்த முடியுமா? 

நான் சொன்னது மண்டையன் குழு தலைவராக இருந்த சுரேஸ் செய்தது போல் கொலைகள் செய்துவிட்டு தமிழ் தேசியவாதியாக மாறிவிடவேண்டும். மக்களுக்கு ஒரு நன்மையும் செய்ய வேண்டியது இல்லை. அவரது பழயதுகள்  பேசபடாது. கருணா டக்ளஸ் பிள்ளையான், கேபி தேசியவாதிகளாக இல்லை. அதனால் அவர்கள் பழையதுகள் பேசப்படும். செய்த உதவிகள் மறைக்கபடும்.இந்த கட்டுரை பதிந்ததிற்காக கிருபனை நன்றாக திட்டி தீர்க்க வேண்டும். அப்படி செய்பவரே தமிழ் தேசியவாதி.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

கிருபன், நீங்கள் பரவலாக புத்தகங்கள் வாசிக்கிற கெட்ட பழக்கத்தை உடனே கைவிட வேணும்! இணையத் தளங்களில் காணொளி மட்டுமே பார்த்து வாழும் புதிய உலகுக்கு வர வேணும்! இல்லையேல் உங்கள் மதி உங்களிடம் திரும்பி வராது! புரிகிறதா?😜

புத்தகங்களேயே காணொளி வடிவமாக மாற்றிகொண்டிருக்கின்றார்கள் இந்த அறிவுசார் உலகில், இதுகூட இந்த தெரியாதா😜

, விஞ்ஞான உலகம் அறிவுசார் உலகமென் கத்தும் கூட்டம் இப்ப காணொளியை மட்டும் குறை சொல்வதேனோ??? ஐநாவில் காணொளிகளுக்கு  தடை  கொண்டுவரவேண்டும்  😎

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விளங்க நினைப்பவன் said:

நான் சொன்னது மண்டையன் குழு தலைவராக இருந்த சுரேஸ் செய்தது போல் கொலைகள் செய்துவிட்டு தமிழ் தேசியவாதியாக மாறிவிடவேண்டும். மக்களுக்கு ஒரு நன்மையும் செய்ய வேண்டியது இல்லை. அவரது பழயதுகள்  பேசபடாது. கருணா டக்ளஸ் பிள்ளையான், கேபி தேசியவாதிகளாக இல்லை. அதனால் அவர்கள் பழையதுகள் பேசப்படும். செய்த உதவிகள் மறைக்கபடும்.இந்த கட்டுரை பதிந்ததிற்காக கிருபனை நன்றாக திட்டி தீர்க்க வேண்டும். அப்படி செய்பவரே தமிழ் தேசியவாதி.

சுரேஸப்பற்றி பல கட்டுரைகள் பல காலமாக கதைத்து முடிந்தாகிவிட்டது, இப்ப தமிழ் அரசியில் அவரும் ஒருவர், தலைவர் உணர்ந்தே கூட்டமைப்பில் இணைத்தார். 

சுரேஸ் கூட்டமைப்பில். 20 வருடமாக நல்ல நிலையில் மக்களுக்காக போரடிக்கொண்டிருக்கின்றார். திரும்ப திரும்ப அவரைப்பற்றி நடந்து முடிந்தவற்றைப்பற்றி எத்தனை ஆண்டுகள் கதைப்பீர்கள்.

நல்லதை நினைக்க பார்க்க தெரிந்தவனுக்கு, கெட்டதை திரும்ப திரும்ப நினைக்க தெரியாது.

இந்த கருணா டாக்கி இப்ப செய்கின்ற நன்மைகளை பட்டியலிட முடியுமா?

டாக்கிக்கு இந்த அமைச்சு பதவி ஏன் கொடுக்கப்பட்டது என்றாவது தெரியுமா...

இப்படிப்பட்ட வாந்தி எடுக்கும் நிலைகளை விட்டுவிட்டு உருப்படியான வழிகைள பாருங்கள்

திலீபனை விமர்சிக்க டக்கிக்கு என்ன அறுகதை இருக்கின்றது? – போராளிகள் கட்சி கேள்வி

DSCN0642-Copy-960x439.jpg?189db0&189db0

எமது மக்களின் விடுதலைக்காக உண்ணாவிரதமிருந்து இன்னுயிரை நீத்த ஒரு தியாகிக்கு டக்ளஸ் போன்ற அரசின் அடிவருடிகள் விமர்சனங்களை முன்வைப்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ் மக்களுக்காகப் போராடிய ஒரு அமைப்பினையும் அதன் தலைவரையும் அவதூறு கதைப்பதென்பது தனக்கு வாக்களித்த மக்களுக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாகும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தெரிவித்தார்.

நாடாளுன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் விடுதலைப் புலிகள் தொடர்பிலும், திலீபன் தொடர்பிலும் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரையும் அதன் போராளிகளையும் பற்றிக் கதைப்பதற்கு டக்ளஸ் தேவானந்தாவிற்கு என்ன அருகதை இருக்கின்றது. தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு தமிழ் மக்களுக்காகப் போராடிய ஒரு அமைப்பினையும் அதன் தலைவரையும் அவதூறு கதைப்பதென்பது தனக்கு வாக்களித்த மக்களுக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாகும்.

டக்ளஸ் தேவானந்தாவின் வாழ்க்கை வராலாறுகள் தற்போது மக்கள் மத்தியில் பெரிதாகப் பேசப்படவில்லை என்பதால் இவரால் மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் அனைத்தையும் மக்கள் மறந்து விட்டார்கள் என்ற எண்ணத்தில் தான் இவ்வாறு கதைத்தாரோ தெரியவில்லை. அவ்வாறு அவர் நினைப்பாராயின் அது அவரின் வரலாற்றுத் தவறாகும். இனத்திற்கான துரோகிகளை மக்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள.

டக்ளஸ் தேவானந்தாவால் சொல்லப்பட்ட விடயங்கள் ஒரு சிங்களப் நாடாளுமன்ற உறுப்பினரால் சொல்லப்பட்டிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் எம்மினத்தில் இருந்து வந்து எம்மினத்தை பெரும்பான்மைக்கு அடிபணிய வைக்கின்ற அரசோடு ஒட்டிக் கொண்டிருக்கின்ற டக்ளஸ் போன்ற புல்லுருவிகள் சொல்வதென்பது. அவருக்கு வாக்களித்த மக்களின் வாக்கினை கேள்விக்குட்படுத்துவனாக அமையும்.

இதற்காகவா மக்கள் இவர்களுக்கு வாக்களித்தார்கள். போரினால் பாதிப்புற்ற எமது இனம் இவர்கள் காட்டிய அபிவிருத்தி மாயையை நம்பி ஏமாந்து சற்று அதிகப்படியான வாக்குகளை வழங்கி விட்டது. அதனை வைத்து வாய்க்கு வந்தபடியெல்லாம் கதைத்து விடலாம் என்று நினைக்கின்றார்கள் போல.

எமது மக்களின் விடுதலைக்காக உண்ணாவிரதமிருந்து இன்னுயிரை நீத்த ஒரு தியாகிக்கு டக்ளஸ் போன்ற அரசின் அடிவருடிகள் விமர்சனங்களை முன்வைப்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ் மக்களும் இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறானவர்களை தேர்ந்தெடுத்த எமது மக்கள் தான் இது குறித்து வருத்தப்பட வேண்டும்” – என்று தெரிவித்தார். (150)

https://newuthayan.com/திலீபனை-விமர்சிக்க-டக்கி/

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிரபா said:

இதற்கு, கட்டுரையாளரிடம் (அல்லது யாரிடமோ) ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?

அமைதிப்படை காலத்தில் காக்கா அண்ணா ஈழத்திலேயே இல்லை,எப்படி சுட்டிருப்பார். அவிக்கிறதுக்கு ஒரு அளவு வேணாம்

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, நந்தன் said:

அமைதிப்படை காலத்தில் காக்கா அண்ணா ஈழத்திலேயே இல்லை,எப்படி சுட்டிருப்பார். அவிக்கிறதுக்கு ஒரு அளவு வேணாம்

குளிர் விட்டுப் போச்சு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

அமைதிப்படை காலத்தில் காக்கா அண்ணா ஈழத்திலேயே இல்லை,எப்படி சுட்டிருப்பார். அவிக்கிறதுக்கு ஒரு அளவு வேணாம்

எனக்கும் சந்தேகம் இருந்தது. காக்கா அண்ணா அப்பவே சண்டைகளில் இருந்து ஒதுங்கிவிட்டாரா?🤔

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, கிருபன் said:

எனக்கும் சந்தேகம் இருந்தது. காக்கா அண்ணா அப்பவே சண்டைகளில் இருந்து ஒதுங்கிவிட்டாரா?🤔

உங்களைக் குஷிப்படுத்த என்ன காவவேண்டும் என்றும் தெரியும்😀

வாந்திகளை காவி குஷிப்பட்டு கொள்ளும் உங்களை போன்ற மனநிலைதான் புரியாதது. 

நான் மேலே கேட்ட கேள்விகளுக்கு நேரடியான பதில் ஏதாவது இருக்கிறதா?

ஏன் தனிமனித தாக்குதல் என்ற தாழ்ந்த நிலைக்கு போகிறீர்கள்?

எந்த ஆதரமுமற்ற வெறும் வாந்திகளை ஏன் காவுகிறீர்கள் 
அல்லது ஏதாவது ஆதாரம் உங்களிடம் இருக்கிறதா? என்ற கேள்விகள் வைத்தபோது 
தரம்தாழ்ந்து தனிமனித தாக்குதலை செய்தீர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கிருபன் said:

எனக்கும் சந்தேகம் இருந்தது.

எந்தவிதமான ஆதாரமும் இன்றி எழுதப்பட்ட கதையை இங்கு இணைத்து, 2 பக்கத்துக்கு களமாடிவிட்டு இப்ப இதை எழுதும் கிருபனைப் பார்த்து அழுவதா சிரிப்பதா?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பிரபா said:

எந்தவிதமான ஆதாரமும் இன்றி எழுதப்பட்ட கதையை இங்கு இணைத்து, 2 பக்கத்துக்கு களமாடிவிட்டு இப்ப இதை எழுதும் கிருபனைப் பார்த்து அழுவதா சிரிப்பதா?

சிரிப்ப‌தே சிற‌ப்பு ஹா ஹா 😁

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கிருபன் said:

எனக்கும் சந்தேகம் இருந்தது. காக்கா அண்ணா அப்பவே சண்டைகளில் இருந்து ஒதுங்கிவிட்டாரா?🤔

என்ன முரண்பாடோ தெரியாது. அவர் இந்தியா சென்றுவிட்டார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Maruthankerny said:

ஏன் தனிமனித தாக்குதல் என்ற தாழ்ந்த நிலைக்கு போகிறீர்கள்?

அப்படியா மருதர்? நீங்கள் முதலில் எழுதிய கருத்து இப்போதும் இருக்கே. 

25 minutes ago, பிரபா said:

எந்தவிதமான ஆதாரமும் இன்றி எழுதப்பட்ட கதையை இங்கு இணைத்து, 2 பக்கத்துக்கு களமாடிவிட்டு இப்ப இதை எழுதும் கிருபனைப் பார்த்து அழுவதா சிரிப்பதா?

கட்டுரையில் உள்ள எல்லாவற்றையும் முற்றாக மறுக்கமுடியாதுதானே. இது கருத்தாடல் களம் என்பதால் உண்மைகள் வெளியே வரும். பலரும் அறிவர். உதாரணமாக பசீர் காக்கா அண்ணன் இந்திய ஆக்கிரமிப்பு காலத்தில் இந்தியாவுக்குப் போய்விட்டார் என்பதால் அவரைப் பற்றி எழுதப்பட்டது கதை என்பது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 24/9/2020 at 15:05, Maruthankerny said:

நீங்கள் கூறுவது உண்மைதான் சில தெருநாய்கள் வாந்திகளை உண்ணுவதை நான் பார்த்திருக்கிறேன்.
அதற்காக அது வாந்தி இல்லை என்று வாதம் செய்ய முடியாத ஒரு சங்கடம் இருப்பதையும் புரிந்து கொள்கிறேன் 

இதுக்கெல்லாம் நேரம் செலவழிப்பதே வீண் நிர்வாகம் நீக்குவதே மேல் 
முதலும் கடைசியுமாக உங்களுக்கு சுட்டி காட்டுகிறேன் .. உங்கள் மேல் இருக்கும் மதிப்பு காரணமாக மட்டுமே. 

அது இதோ?

6 minutes ago, கிருபன் said:

அப்படியா மருதர்? நீங்கள் முதலில் எழுதிய கருத்து இப்போதும் இருக்கே. 

அது இதோ?

சுரேஷ் பிரேமசந்திரன் பற்றி ஆக்கபூர்வனமான ஏதும் கட்டுரை இருந்தால் கொண்டுவாருங்கள் 
விக்கியர் நீதிபதியாக இருந்தார் அவரின் கடந்த காலம் எப்படி என்று இங்கு பலருக்கும் தெரியாது 
அது பற்றி ஏதும் இருந்தால் கொண்டுவாருங்கள் 

எந்த ஆதாரமும் அற்று ஒருவன் வெறும் வாந்தியாகவே எடுத்திருக்கும் 
ஒரு வாந்தியை காவி நீங்கள் உங்கள் தரத்தை தாழ்த்தி கொள்கிறீர்கள் 

என்னுடைய கேள்வியே அதுதான்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Maruthankerny said:

எந்த ஆதாரமும் அற்று ஒருவன் வெறும் வாந்தியாகவே எடுத்திருக்கும் 
ஒரு வாந்தியை காவி நீங்கள் உங்கள் தரத்தை தாழ்த்தி கொள்கிறீர்கள்

எனது தரம் எனக்கு நன்றாகவே தெரியும்😁! மற்றவர்கள் உச்சத்தில் வைத்திருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல😜

கட்டுரையை இணைத்தது அதைப் பற்றிய கருத்தாடலுக்கே, பிரச்சாரத்திற்கு அல்ல😎. கட்டுரையில் தவறுகள் இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருக்கு. நந்தன் சொன்னதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.