Jump to content

இறுதிச் சடங்கில் ஊடகங்களுக்கு என்ன வேலை? கேவலமான பிழைப்பு !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் வரகுணன், சுமந்திரன் மூவரும் ஒரே வகுப்பு. வரகுணனையும் என்னையும் DR.V  என்று கூப்பிடுவார்கள்.இதை பார்த்ததும்  சிறுவயதில் ராமகிருஷ்ண மிசன் ஞாயிறு வகுப்புகளில் சமயம், சங்கீதம் மற்றும் சமஸ்க்ரிதம் போன்றவற்றை ஒன்றாக படித்தது நினைவுக்கு வந்தது. இருவரும் பிறந்ததும் ஒரே வருடம்  ஒரே நாளில்தான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, nilmini said:

நான் வரகுணன், சுமந்திரன் மூவரும் ஒரே வகுப்பு. வரகுணனையும் என்னையும் DR.V  என்று கூப்பிடுவார்கள்.இதை பார்த்ததும்  சிறுவயதில் ராமகிருஷ்ண மிசன் ஞாயிறு வகுப்புகளில் சமயம், சங்கீதம் மற்றும் சமஸ்க்ரிதம் போன்றவற்றை ஒன்றாக படித்தது நினைவுக்கு வந்தது. இருவரும் பிறந்ததும் ஒரே வருடம்  ஒரே நாளில்தான் .

வித்தியாசம் என்னெண்டா, வரகுணன் மொட்டை.

ஒற்றுமை என்னெண்டா, இரண்டு பேருக்கும்....அறுவை தான் வேலை..... 😁

(பகிடி விளங்கவில்லை எண்டால் கேளுங்க) 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளங்கிட்டுது  நாதமுனி. ஆளை பார்த்தவுடன் நினைவுகளை பகிர்ந்தேன். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

நான் வரகுணன், சுமந்திரன் மூவரும் ஒரே வகுப்பு. வரகுணனையும் என்னையும் DR.V  என்று கூப்பிடுவார்கள்.இதை பார்த்ததும்  சிறுவயதில் ராமகிருஷ்ண மிசன் ஞாயிறு வகுப்புகளில் சமயம், சங்கீதம் மற்றும் சமஸ்க்ரிதம் போன்றவற்றை ஒன்றாக படித்தது நினைவுக்கு வந்தது. இருவரும் பிறந்ததும் ஒரே வருடம்  ஒரே நாளில்தான் .

ஓ அப்ப நீங்கள் பழைய ஆள்தான் (82 ஏ எல்?). அப்பவே ராம கிரிஸ்ணன் மிசன் சண்டே ஸ்கூல் தொடங்கீட்டா?

நானும் போயிருக்கன். வெள்ளை நிறத்தில், கலர் பார்க்க 🤣.

வரகுணனின் “வீர வசன” நாடகத்தை நீங்களும் பாத்திருக்க கூடும்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஓ அப்ப நீங்கள் பழைய ஆள்தான் (82 ஏ எல்?). அப்பவே ராம கிரிஸ்ணன் மிசன் சண்டே ஸ்கூல் தொடங்கீட்டா?

நானும் போயிருக்கன். வெள்ளை நிறத்தில், கலர் பார்க்க 🤣.

வரகுணனின் “வீர வசன” நாடகத்தை நீங்களும் பாத்திருக்க கூடும்?

 

 82 ஏ எல்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

 82 ஏ எல்? 

என்ன பாஸ் சட்டுன்னு கேட்டுட்டிங்க. 

பார்த்து புள்ளிங்கோ சுமந்திரந்தான் கோசான் என்ற பெயரில் எழுதுறார் எண்டு கிளப்பி விடப் போறாங்கள்.

நான் 82 கனகாலம் பிறகு அதே மிஷன் ஏரியா சிற்றரசராக இருந்த காரணத்தால், முன்னோர்கள் பற்றி அறிந்து வைத்துள்ளேன்🤣

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

என்ன பாஸ் சட்டுன்னு கேட்டுட்டிங்க. 

பார்த்து புள்ளிங்கோ சுமந்திரந்தான் கோசான் என்ற பெயரில் எழுதுறார் எண்டு கிளப்பி விடப் போறாங்கள்.

நான் 82 கனகாலம் பிறகு அதே ராம ஏரியா சிற்றரசராக இருந்த காரணத்தால், முன்னோர்கள் பற்றி அறிந்து வைத்துள்ளேன்🤣

 

 

Pointing Laughing GIF - Pointing Laughing You GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:
இறுதிச் சடங்கில் ஊடகங்களுக்கு என்ன வேலை?
கேவலமான பிழைப்பு !

இவர் கனடா ஊடகம் திறமெண்டு கதைக்கிறார். அப்பிடியில்லை..
பொது அறிவுள்ள நாடுகளில் உள்ள ஊடகங்கள் இப்படியான விடயங்களில் அமைதி மற்றும் நாகரீகமாகத்தான் நடந்து கொள்கின்றன. ஊடகங்களில் வேலை செய்பவர்கள் பெரிய பட்டப்படிப்புகளிலும் உலக அரசியல் படித்தவர்களாகவுமே இருக்கின்றார்கள்.
 சிம்புவின் பீப் பாடலுக்கு கருத்து கேட்கும் ஊடகங்களும் தனுசின் கொலைவெறி பாடலுக்கு விருது வழங்கும் பிரதமர் இருக்கும் நாடுதான் எமது அயல் நாடு.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

ஓ அப்ப நீங்கள் பழைய ஆள்தான் (82 ஏ எல்?). அப்பவே ராம கிரிஸ்ணன் மிசன் சண்டே ஸ்கூல் தொடங்கீட்டா?

நானும் போயிருக்கன். வெள்ளை நிறத்தில், கலர் பார்க்க 🤣.

வரகுணனின் “வீர வசன” நாடகத்தை நீங்களும் பாத்திருக்க கூடும்?

 

82 A/L Holy Family Convent. நடிகை ராதிகா ரெண்டு class எங்களுக்கு மேல. நெடுகளும்  young  ஆக இருக்கமுடியாதுதானே? ஓமோம் 74' களில் இருந்து போனேன். சுவாமி ப்ரேமாத்மானந்தஜி தான் அப்போதைய சுவாமி. கணபதிப்பிள்ளை டீச்சர் , மலர் டீச்சர் , தேவகி டீச்சர் எல்லோரும்தான் எங்களுக்கு படிப்பிப்பது . 
அங்கயும் கலர் பார்த்தீர்களா? நாங்கள் கோயிலில் தான் பார்த்தோம். சிவராத்திரிக்கு மிஷன் போய் பஜனை பாடப்போகிறோம் என்று சொல்லிவிட்டு சும்மா தலையை காட்டிட்டு நேரா கோயிலுக்கு போய்விடுவோம். அதெலாம் ஒரு காலம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nilmini said:

நான் வரகுணன், சுமந்திரன் மூவரும் ஒரே வகுப்பு. வரகுணனையும் என்னையும் DR.V  என்று கூப்பிடுவார்கள்.இதை பார்த்ததும்  சிறுவயதில் ராமகிருஷ்ண மிசன் ஞாயிறு வகுப்புகளில் சமயம், சங்கீதம் மற்றும் சமஸ்க்ரிதம் போன்றவற்றை ஒன்றாக படித்தது நினைவுக்கு வந்தது. இருவரும் பிறந்ததும் ஒரே வருடம்  ஒரே நாளில்தான் .

சம்ஸ்கிருதம் படித்து இருக்கிறீர்களா?
எழுத பேச தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

Pointing Laughing GIF - Pointing Laughing You GIFs

நாதர்! இதின்ரை மீனிங் என்ன?
அவர் ஒரு பேய்க்காய் எண்டு சொல்ல வாறியளோ :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

ஓ அப்ப நீங்கள் பழைய ஆள்தான் (82 ஏ எல்?). அப்பவே ராம கிரிஸ்ணன் மிசன் சண்டே ஸ்கூல் தொடங்கீட்டா?

நானும் போயிருக்கன். வெள்ளை நிறத்தில், கலர் பார்க்க 🤣.

வரகுணனின் “வீர வசன” நாடகத்தை நீங்களும் பாத்திருக்க கூடும்?

 

எப்படித் தான் மறைத்தாலும் உண்மை உங்களை மீறி வந்துடுது எல்ல 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நாதர்! இதின்ரை மீனிங் என்ன?
அவர் ஒரு பேய்க்காய் எண்டு சொல்ல வாறியளோ :grin:

தல, பேக்காய் மட்டுமில்லை..... பழம் திண்டு கொட்டை போட்ட பழம் பெரும் காய்...

அச்சு பிசகாமல் அடிச்சார் பாருங்க..... நீஙகள் ‘82 ஏ எல்?‘ எண்டு.....

‘82 ஏ எல்?‘ கேர்ல்ஸ் பார்க்க, சுழன்டு திரிஞ்சவர் எண்டால்..... சும்மாவா.... 😁

தலயின்ற, யங் படம் ஒண்டு..... இருக்குது.... இங்க போட்டால், இவருக்கு கேர்ல்ஸ் கொடுத்த டோஸ் பத்தி நில்மினி மிச்சம் மீதிய சொல்லுவா!! 😁
 

எனக்கிருக்கிற டவுட்டு, இவர் கேர்ல்ஸ் பார்க போனாரா..... அல்லது...மலர் டீச்சர் , தேவகி டீச்சர் பார்க்கப் போனாரா எண்டு.... 🤔

நீங்கள் என்ன நிணைக்கிறியள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nilmini said:

82 A/L Holy Family Convent. நடிகை ராதிகா ரெண்டு class எங்களுக்கு மேல. நெடுகளும்  young  ஆக இருக்கமுடியாதுதானே? ஓமோம் 74' களில் இருந்து போனேன். சுவாமி ப்ரேமாத்மானந்தஜி தான் அப்போதைய சுவாமி. கணபதிப்பிள்ளை டீச்சர் , மலர் டீச்சர் , தேவகி டீச்சர் எல்லோரும்தான் எங்களுக்கு படிப்பிப்பது . 
அங்கயும் கலர் பார்த்தீர்களா? நாங்கள் கோயிலில் தான் பார்த்தோம். சிவராத்திரிக்கு மிஷன் போய் பஜனை பாடப்போகிறோம் என்று சொல்லிவிட்டு சும்மா தலையை காட்டிட்டு நேரா கோயிலுக்கு போய்விடுவோம். அதெலாம் ஒரு காலம். 

மன்னிக்கவும் நான் “பழைய ஆள்” என்று குறிப்பிட்டது வயதை ஒட்டி அல்ல. முன்னர் உங்களின் மாஸ்க் போட்ட ஒரு படம் பகிர்ந்து இருந்தீர்கள், அதை பார்த்து நீங்கள் என் மூத்த சகோதரி வயது ஆள் என கணித்திருந்தேன், அதைத்தான் சொன்னேன். Please take it as a compliment, albeit a clumsy one 🙏🏾.

நான் போன காலங்களின் ஆத்ம கணாநந்தஜி. வாய்ப்பாட்டு, மிருதங்கமும் படிப்பித்தார்கள்.

கோவிலிலில் பார்க்க மட்டுமே முடியும், மிசனில் அருமையாக எப்போதாவது பேசவும் சந்தர்பம் வாய்க்கும். 

எனது நண்பனின் மிசன் காதல் இப்போ திருமணம், 3 பிள்ளைகள் என கன ஜோராக போகிறது.

HFC யில் எமது காலத்தில் familian fantasy என 3 நாள் fun fair வைப்பார்கள்.

கலர் பாக்கும் கலண்டரில் ஹைலைட் அது 🤣

மெத்த்தோ, பிஷப்ஸ், லேடீஸ் இவற்றில் இப்படி செய்ததாக நியாபகம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

தல, பேக்காய் மட்டுமில்லை..... பழம் திண்டு கொட்டை போட்ட பழம் பெரும் காய்...

அச்சு பிசகாமல் அடிச்சார் பாருங்க..... நீஙகள் ‘82 ஏ எல்?‘ எண்டு.....

‘82 ஏ எல்?‘ கேர்ல்ஸ் பார்க்க, சுழன்டு திரிஞ்சவர் எண்டால்..... சும்மாவா.... 😁

தலயின்ற, யங் படம் ஒண்டு..... இருக்குது.... இங்க போட்டால், இவருக்கு கேர்ல்ஸ் கொடுத்த டோஸ் பத்தி நில்மினி மிச்சம் மீதிய சொல்லுவா!! 😁
 

எனக்கிருக்கிற டவுட்டு, இவர் கேர்ல்ஸ் பார்க போனாரா..... அல்லது...மலர் டீச்சர் , தேவகி டீச்சர் பார்க்கப் போனாரா எண்டு.... 🤔

நீங்கள் என்ன நிணைக்கிறியள்.

 

 

ஐயா நாதம்,

மகனுக்கு இரெண்டு வருடத்தில் 11+, என்றால் நான் எப்படி ஏ எல் 82 ஆய் இருக்க முடியும்? ஒரு மனுசன் 50 வயசிலா பிள்ளை பெறுவான் 😂 (முடியாது என்றும் இல்லைத்தான்).

ஆனால் திட்டமிடாமலே குசா அண்ணை, ரதி அக்காச்சிய ஒரு சுத்தலில் விட்டுடீர் ஓய்🤣

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ஐயா நாதம்,

மகனுக்கு இரெண்டு வருடத்தில் 11+, என்றால் நான் எப்படி ஏ எல் 82 ஆய் இருக்க முடியும்? ஒரு மனுசன் 50 வயசிலா பிள்ளை பெறுவான் 😂 (முடியாது என்றும் இல்லைத்தான்).

ஆனால் திட்டமிடாமலே குசா அண்ணை, ரதி அக்காச்சிய ஒரு சுத்தலில் விட்டுடீர் ஓய்🤣

 

 

No comments Thala!!!! 🤓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நல்ல வேளை கணபதி பிள்ளை சேரை பார்க்க போனேன் என சொல்லாமல் விட்டீர்🤣

Just now, Nathamuni said:

No comments Thala!!!! 🤓

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

 நல்ல வேளை கணபதி பிள்ளை சேரை பார்க்க போனேன் என சொல்லாமல் விட்டீர்🤣

 

போயிருப்பியள்..... நாதமுனியிலை.... அன்பு, காதல் எண்டு சொன்ன படியாலை....😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

தலயின்ற, யங் படம் ஒண்டு..... இருக்குது.... இங்க போட்டால், இவருக்கு கேர்ல்ஸ் கொடுத்த டோஸ் பத்தி நில்மினி மிச்சம் மீதிய சொல்லுவா!! 😁

தனி மடல்லை போட்டுவிடுங்கோ பிரிண்ட் பண்ணி  அழகு பாப்பம்...😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Maruthankerny said:

சம்ஸ்கிருதம் படித்து இருக்கிறீர்களா?
எழுத பேச தெரியுமா?

அப்பாவுக்கு சமஸ்க்ரிதம் உற்பட பல வட இந்திய மொழிகள் தெரிந்திருந்தது. அவர் கேட்டும் நான் ஒழுங்காக படிக்கவில்லையே என்ற கவலை இன்னும் தொடர்கிறது. ஒய்வு காலத்தில் சமஸ்க்ரிதம், வீணை இவை இரண்டையும் விட்டதில் இருந்து தொடர்ந்து படிக்கலாம் என்று இருக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

மன்னிக்கவும் நான் “பழைய ஆள்” என்று குறிப்பிட்டது வயதை ஒட்டி அல்ல. முன்னர் உங்களின் மாஸ்க் போட்ட ஒரு படம் பகிர்ந்து இருந்தீர்கள், அதை பார்த்து நீங்கள் என் மூத்த சகோதரி வயது ஆள் என கணித்திருந்தேன், அதைத்தான் சொன்னேன். Please take it as a compliment, albeit a clumsy one 🙏🏾.

 

மன்னிப்பு எல்லாம் தேவை இல்லை தம்பி. ஆளையால் தெரியாமல் யாழ் களத்தில் கருது பரிமாற்றம் செய்யும்போது தவறாக புரிந்துகொள்ள வாய்ப்புக்கள் கூடத்தான். எனவே உங்கள் விளக்கம் உங்களைப்பற்றி நல்ல அபிப்பிராயாத்தை தந்ததுதான் உண்மை. எனக்கு களத்தில் ஒரு சிலரைவிட மற்றவர்கள் எல்லாரும் என்ன வயது, ஆணா பெண்ணா என்றுகூட தெரியாமல்தான் இருக்கிறது. நீங்கள் என்னைவிட மிகவும் வயது குறைந்தவர் என்று தெரிகிறது. மூத்த சகோதரி நிச்சயம் எனது வயதாக இருக்கமாட்டா என்பதால் தங்கள்  complement யை  ஏற்றுக்கொள்கிறேன். எங்கட காலத்தில மிஷன் கொஞ்சம் Bootcamp மாதிரித்தான் . அதனால்தான் அடிக்கடி தப்பி ஓடி மூன்று  பிள்ளயார் கோயில் , கொள்ளுப்பிட்டியில் இருந்து மொரட்டுவ காண இருந்த பஸ் ஸ்டாண்டுகள் எல்லாத்திலயும் தான் எமது பொழுதுபோக்கு. 70' களில் நள்ளிரவு வேளைகளில் கூட நண்பிகள் கூட்டம் மிஷன், கோயில், வெசாக் விளக்கு என்று காலி வீதியில் தனியா நடந்து போகக்கூடியதாக இருந்தது. பின்னுக்கே கூட்டமாக வரும்  bodyguards ஆள் தனி பாதுகாப்பு வேற. சுமந்திரன், வரகுணன் எல்லோரும்தான்.வருடத்தில் இப்படி ஓரிரு நாட்கள் தான் இப்படி போக வீட்டில் இருந்து அனுமதி கிடைக்கும். அதுவும் மிஷன் என்று சொல்லிவிட்டு கோவிலில் போய் பிராக்கு பாக்கிறது. எல்லா பெடியன்களுக்கும் பட்டப்பெயர் வைத்துதான் கதைப்பது. அப்போதெல்லாம் நேரடியாக பேசுவதில்லை. அவர்கள் ஒரு கூட்டம், நாங்கள் ஒரு கூட்டம். சாடை மாடையில்  தான் கதை. பெடியள் மட்டும் சத்தம் போட்டு கதைப்பார்கள். சவோய், சப்ஹயர், ஈரோஸ் தியட்டர்களுக்கு டியூஷன் என்று சொல்லிவிட்டு போவது என்று அந்த காலங்கள் இனி திரும்பி வரவே மாட்டுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nilmini said:

மன்னிப்பு எல்லாம் தேவை இல்லை. ஆளையால் தெரியாமல் யாழ் களத்தில் கருது பரிமாற்றம் செய்யும்போது தவறாக புரிந்துகொள்ள வாய்ப்புக்கள் கூடத்தான். எனவே உங்கள் விளக்கம் உங்களைப்பற்றி நல்ல அபிப்பிராயாத்தை தந்ததுதான் உண்மை. எனக்கு களத்தில் ஒரு சிலரைவிட மற்றவர்கள் எல்லாரும் என்ன வயது, ஆணா பெண்ணா என்றுகூட தெரியாமல்தான் இருக்கிறது. நீங்கள் என்னைவிட மிகவும் வயது குறைந்தவர் என்று தெரிகிறது. மூத்த சகோதரி நிச்சயம் எனது வயதாக இருக்கமாட்டா என்பதால் தங்கள்  complement யை  ஏற்றுக்கொள்கிறேன். எங்கட காலத்தில மிஷன் கொஞ்சம் Bootcamp மாதிரித்தான் . அதனால்தான் அடிக்கடி தப்பி ஓடி மூன்று  பிள்ளயார் கோயில் , கொள்ளுப்பிட்டியில் இருந்து மொரட்டுவ காண இருந்த பஸ் ஸ்டாண்டுகள் எல்லாத்திலயும் தான் எமது பொழுதுபோக்கு. 70' களில் நள்ளிரவு வேளைகளில் கூட நண்பிகள் கூட்டம் மிஷன், கோயில், வெசாக் விளக்கு என்று காலி வீதியில் தனியா நடந்து போகக்கூடியதாக இருந்தது. பின்னுக்கே கூட்டமாக வரும்  bodyguards ஆள் தனி பாதுகாப்பு வேற. சுமந்திரன், வரகுணன் எல்லோரும்தான்.வருடத்தில் இப்படி ஓரிரு நாட்கள் தான் இப்படி போக வீட்டில் இருந்து அனுமதி கிடைக்கும். அதுவும் மிஷன் என்று சொல்லிவிட்டு கோவிலில் போய் பிராக்கு பாக்கிறது. எல்லா பெடியன்களுக்கும் பட்டப்பெயர் வைத்துதான் கதைப்பது. அப்போதெல்லாம் நேரடியாக பேசுவதில்லை. அவர்கள் ஒரு கூட்டம், நாங்கள் ஒரு கூட்டம். சாடை மேடையில் தான் கதை. பெடியள் மட்டும் சத்தம் போட்டு கதைப்பார்கள். சவோய், சப்ஹயர், ஈரோஸ் தியட்டர்களுக்கு டியூஷன் என்று சொல்லிவிட்டு போவது என்று அந்த காலங்கள் இனி திரும்பி வரவே மாட்டுது.

நன்றி.

காலங்கள் மாறினாலும் காட்சிகள் அப்படியேதான் சின்ன சின்ன மாறுதல்களோடு தொடர்கிறது.

எங்கள் காலத்திலும் போன் இல்லை. ஆகவே சாடை மாடைகளும், தண்டவாளத்துக்கு அருகில் ஹலோகளும்தான். 

எங்கள் காலத்திலும் பாடிகாட் முனீஸ்வரர்கள் இருந்தார்கள் 😂.

எங்கள் காலத்தில் சபயர் கொட்டேல் ஆகி விட்டது. சவோயில் ஓடும் படங்களை பெண்கள் பார்க்க முடியாது. ஆனால் ஈரோசிலும் கொன்கோட்டிலும் நல்ல படம் ஓடும். 

மாறாமல் இருப்பது, இப்பவும், பிள்ளையாரும், கதிரேசனும், வஜிராவும்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

ஐயா நாதம்,

மகனுக்கு இரெண்டு வருடத்தில் 11+, என்றால் நான் எப்படி ஏ எல் 82 ஆய் இருக்க முடியும்? ஒரு மனுசன் 50 வயசிலா பிள்ளை பெறுவான் 😂 (முடியாது என்றும் இல்லைத்தான்).

ஆனால் திட்டமிடாமலே குசா அண்ணை, ரதி அக்காச்சிய ஒரு சுத்தலில் விட்டுடீர் ஓய்🤣

 

 

உங்கட மகன் 11 பிளஸ் எடுக்கப் போறார் என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள் ...அதை நாங்கள் நம்ப வேண்டும் என்று கட்டாயம் இல்லை தானே ...எத்தனையோ சந்திப்புக்கள் லண்டனில் நடந்தும் நீங்கள் வராததால் நீங்களும் 81 பட்ச் என்பதை உறுதிப்படுத்துகிறீர்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

உங்கட மகன் 11 பிளஸ் எடுக்கப் போறார் என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள் ...அதை நாங்கள் நம்ப வேண்டும் என்று கட்டாயம் இல்லை தானே ...எத்தனையோ சந்திப்புக்கள் லண்டனில் நடந்தும் நீங்கள் வராததால் நீங்களும் 81 பட்ச் என்பதை உறுதிப்படுத்துகிறீர்கள்.

 

லண்டன் சந்திப்புகளுக்கு நான் வந்துள்ளேன். கலந்துகொள்ளவில்லை🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.