Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இருப்பதென்றால் சிங்களவரை கோபப்படுத்தாமல் இருங்கள்... அல்லது செவ்வாய்க்கிரகத்திற்கு சென்று தீர்வை கேளுங்கள்': தமிழர்களிற்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் தினேஷ்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசையும், சிங்கள மக்களையும் சீற்றமடைய செய்யும் வகையிலேயே தமிழர்கள் நடக்கிறார்கள். அரசியல் தீர்வு வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றார்கள். தமிழர்கள் அரசை மதித்து, அரசியலமைப்பை மதித்து நேர்வழியில் நடந்தால் அவர்களிற்கான அரசியல் தீர்வு தானாகவே கிடைக்கும். ஆனால் அந்த தீர்வு ஒற்றையாட்சி தீர்வாகவே இருக்கும். அதையும் அவர்கள் உதறி எழுந்தால் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. தமிழர்கள் செவ்வாய்க்கிரகம் சென்றுதான் தமக்கான தீர்வை கேட்க வேண்டி வரும் என சபை முதல்வரும், வெளிவிவகார அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் அரசியலமைப்பை மதித்து, அரசை மதித்து தமிழர்கள் நேர்வழியில் நடந்திருந்தால் ஆயுதப் போராட்டம் ஒன்று நடந்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது. பல இழப்புக்களையும் தமிழர்கள் சந்தித்திருக்க வேண்டியும் வந்திருக்காது.

படையினரின் தியாகத்தினால் ஆயுதப்போரை முடிவுக்கு கொண்டு வந்தோம். தமிழர்கள் நிம்மதியாக வாழும் நிலைமையை ஏற்படுத்தினோம். ஆனால் அவர்கள் திரும்பவும் பழைய நிலைமைக்கே செல்ல முற்படுகிறார்கள்.

ஆயுதப் போராட்டகாலத்தில் உயிரிழந்த பயங்கரவாதிகளான விடுதலைப் புலிகளை நினைவுகூர அனுமதி கேட்டு வடக்கு கிழக்கில் தமிழர்கள் கதவடைப்பு மேற்கொண்டுள்ளனர். போதாக்குறைக்கு இந்து ஆலயம் முன் உண்ணாவிரதமும் இருந்துள்ளார்கள்.

அரசையும், சிங்கள மக்களையும் சீற்றமடைய செய்யும் வகையில் தமது நடவடிக்கைகளை தமிழர்கள் முன்னெடுக்கின்றனர். நாட்டை பிளவுபடுத்தும் அரசியல் தீர்வு வேண்டும் என்று ஒற்றைக்காலில் அவர்கள் நின்றார்கள்.

தமிழர்கள் அரசை மதித்து, அரசியலமைப்பை மதித்து நேர்வழியில் நடந்தால் அவர்களிற்கான அரசியல் தீர்வு தானாகவே கிடைக்கும். ஆனால் அந்த தீர்வு ஒற்றையாட்சி தீர்வாகவே இருக்கும். அதையும் அவர்கள் உதறி எழுந்தால் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. தமிழர்கள் செவ்வாய்க்கிரகம் சென்றுதான் தமக்கான தீர்வை கேட்க வேண்டி வரும் என்றார்.

http://www.pagetamil.com/149040/?fbclid=IwAR2753HbnuktqEKuVAXi38zBLGADzNLQWWk4eb2I1uNgcflHznT9PZSztAI

  • Replies 89
  • Views 6.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

30 வருடமாக தொடைநடுங்கிகள், இப்ப சவுட் விடுக்கின்றார்கள்

உலகத்திடம் பிச்சையெடுத்த கேவலம் கெட்ட பிச்சைகாரர்கள்.

விரைவில் இனியும் உங்கள் தொடைகள் நடுங்கும் 

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத ரீதியில் எங்களை தோற்கடித்துவிட்டார்கள் என்பதாலேயே இந்த அகம்பாவம். இனி நாங்கள் நிரந்தரமாகவே அவர்களுக்குக் கீழ் எனும் மனோநிலையில் இருந்து பேசுகிறார்கள். எங்களை அவர்கள் காலடியில் வீழ்த்தியவர்கள் இன்று எதுவுமே செய்யாமல் இன்னும் இன்னும் அவர்களை ஆதரித்துவருவதால், அவர்களின் அகம்பாவம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. எம்மீது அவர்கள் என்ன செய்தாலும் கேட்பார் எவருமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தான் தேவை.

ரணில் போல நசியல் பார்டிகள் தான் ஆபத்தானவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமதானம்.

எங்கேயோ கேட்டது போல் இருக்குமே?

83 இல் சர்வ அதிகாரமும் படைத்த ஒரு நாட்டின் ஜனாதிபதி நிராயுதபாணிகளாக, திட்டமிட்ட படுகொலைக்கு ஆளாகி நின்ற தமிழர்களை பார்த்து சொன்னது.

வரலாற்றில் இருந்து பாடம் படிக்காத போது வரலாறு திரும்புகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

போர் முடிந்த போது தமிழர்களின் தாகமும்  நீர்த்து விட்டது இனி இவர்களை நாங்கள் எதிர்க்க முடியாது வாழ்ந்து செல்ல கட்டாயம் ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் இன்னமும்  இவர்களை எதிர்த்து சண்டித்தனம் மட்டுமே செய்ய முடியும்  வேறு எதையும் செய்திட முடியாது அப்படி செய்தால் அதன் பிரதிபலன் இங்கே உள்ளவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவிப்பார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

போர் முடிந்த போது தமிழர்களின் தாகமும்  நீர்த்து விட்டது இனி இவர்களை நாங்கள் எதிர்க்க முடியாது வாழ்ந்து செல்ல கட்டாயம் ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் இன்னமும்  இவர்களை எதிர்த்து சண்டித்தனம் மட்டுமே செய்ய முடியும்  வேறு எதையும் செய்திட முடியாது அப்படி செய்தால் அதன் பிரதிபலன் இங்கே உள்ளவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவிப்பார்கள் 

அப்படி 72 வருடத்திற்கு முன்னர் நினைத்திருந்தால், பிரிட்டிஷ்காரர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்திருக்காது.

இப்போது அமைந்துள்ள அரசு, தமிழர்களின் வரப்பிரசாதம்.

கொரோன ஓய்வடைந்து, உலகம் வழமைக்கு திரும்பும் போது, உணரப்படும். 

  • கருத்துக்கள உறவுகள்

இதையே வெளிநாடுகளில் வந்து சொல்லட்டும். ஐநாவில் சொல்லட்டும்.. பார்ப்பம். அதிகம் மிஞ்சினால்.. சிங்களக் கோடிக்குள் நின்று கொக்கரிக்க வேண்டியான். உலகம் தெரியாத முட்டாள்கள். என்ன இவர்களை விட முட்டாள்களாக தமிழர்கள் அங்கு. அதுதான் வெருட்டிப் பார்க்கிறார்கள்.

பயப்பிடுறவனுக்கு நிதம் சாவு. சாகத் துணிந்தவனுக்கு.. பயம் ஏது. தமிழர்கள் போர்க்குணம் கொண்டிருந்த காலத்தில் இப்படி கூவி இருந்தால்.. இந்த அலப்பறை அடிபட்டே ஓய்ந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

போர் முடிந்த போது தமிழர்களின் தாகமும்  நீர்த்து விட்டது இனி இவர்களை நாங்கள் எதிர்க்க முடியாது வாழ்ந்து செல்ல கட்டாயம் ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் இன்னமும்  இவர்களை எதிர்த்து சண்டித்தனம் மட்டுமே செய்ய முடியும்  வேறு எதையும் செய்திட முடியாது அப்படி செய்தால் அதன் பிரதிபலன் இங்கே உள்ளவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவிப்பார்கள் 

தனி,

நாம் வெளிநாட்டில் இருந்து சண்டிதனம் செய்யகூடாது இதனால் பாதிப்படைவது நீங்கள்தான் என்பதை முற்றாக ஏற்கிறேன்.

ஆனால் இப்படியே குட்ட குட்ட குனிந்தபடியேதான் காலம் முழுதும் இருக்க வேண்டுமா? சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதாக, ஓரணியில் நின்று, கிடைக்கும் வாய்புகள் அனைத்தையும் அது பரந்தன் ராஜன் மூலமகாவே வந்தாலும், பயன்படுத்தி  ஒரு கெளரவமான தீர்வை இலங்கைக்குள் பெற முயல்வதில் தப்பில்லையே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் 79/80களிலேயே மட்டக்களப்பு தமிழர் பிரதேசமாகாது என்பதை உணர்ந்தேன்.
விடுதலைப்போராட்டங்கள் இல்லாதிருந்தால் இன்றைக்கு மட்டக்களப்பும் திருகோணமலையும்  முற்றுமுழுதான சிங்கள பிரதேசமாக இருந்திருக்கும்.

நீங்களெல்லாம் இப்போது இப்படித்தான் தமிழ் பேசியிருப்பீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

பயப்பிடுறவனுக்கு நிதம் சாவு. சாகத் துணிந்தவனுக்கு.. பயம் ஏது. தமிழர்கள் போர்க்குணம் கொண்டிருந்த காலத்தில் இப்படி கூவி இருந்தால்.. இந்த அலப்பறை அடிபட்டே ஓய்ந்திருக்கும்.

இப்போதுதான் போர்க்குணம் இல்லையே? பழைய கதையை இரைமீட்பதிலும் ஒரு சந்தோசம்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, கற்பகதரு said:

இப்போதுதான் போர்க்குணம் இல்லையே? பழைய கதையை இரைமீட்பதிலும் ஒரு சந்தோசம்தான்.

அப்ப.....தினேஸ் குணவர்த்தனம் சொன்னது சரி எண்டுறியள்? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கற்பகதரு said:

இப்போதுதான் போர்க்குணம் இல்லையே? பழைய கதையை இரைமீட்பதிலும் ஒரு சந்தோசம்தான்.

2 minutes ago, குமாரசாமி said:

அப்ப.....தினேஸ் குணவர்த்தனம் சொன்னது சரி எண்டுறியள்? 🤣

என்ன இப்படி முட்டாள்தனமாக சொல்லுறியள்? அந்தாள் செவ்வாய் கிரகத்துக்கு போ எண்டு சொன்னதை சரி எண்டுறியளே? நான் சொன்னது இரைமீட்கிறது பற்றி... வயித்திலிருக்கிறது மற்றவளமாக வந்து வாய்க்கு ருசி தாற சங்கதி பற்றி. வேற சங்கதி கண்டியளே!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

அப்ப.....தினேஸ் குணவர்த்தனம் சொன்னது சரி எண்டுறியள்? 🤣

அவர் இப்ப சிங்களவனின் காலடியில் அப்பே மாத்தையோ என்று விழுவதுதான் தமிழர்களுக்கான ஒரே தீர்வு என்பதில் சிங்களம் புடை சூழ... கொழும்பு வாழ் பாக்கியவான்.. சுமந்திரன் மாத்தையா சரணம் என்று இருக்கிறார். தெளியக் காலம் எடுக்கும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, கற்பகதரு said:

என்ன இப்படி முட்டாள்தனமாக சொல்லுறியள்? அந்தாள் செவ்வாய் கிரகத்துக்கு போ எண்டு சொன்னதை சரி எண்டுறியளே? நான் சொன்னது இரைமீட்கிறது பற்றி... வயித்திலிருக்கிறது மற்றவளமாக வந்து வாய்க்கு ருசி தாற சங்கதி பற்றி. வேற சங்கதி கண்டியளே!

சரி...வாயை மூடிக்கொண்டு இருப்பம். :cool:

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nedukkalapoovan said:

அவர் இப்ப சிங்களவனின் காலடியில் அப்பே மாத்தையோ என்று விழுவதுதான் தமிழர்களுக்கான ஒரே தீர்வு என்பதில் சிங்களம் புடை சூழ... கொழும்பு வாழ் பாக்கியவான்.. சுமந்திரன் மாத்தையா சரணம் என்று இருக்கிறார். தெளியக் காலம் எடுக்கும். 

அப்படி என்ன கனகாலம் எடுக்க போகுது? பிரான்ஸ், ஜேர்மனி, கனடா எண்டு வந்து சேர்ந்தால் உங்களுக்கு தெளிஞ்சது போல அவருக்கும் உடனேயே தெளிஞ்சிடும். எல்லாம் இருக்கும் இடத்தை பொறுத்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, கற்பகதரு said:

அப்படி என்ன கனகாலம் எடுக்க போகுது? பிரான்ஸ், ஜேர்மனி, கனடா எண்டு வந்து சேர்ந்தால் உங்களுக்கு தெளிஞ்சது போல அவருக்கும் உடனேயே தெளிஞ்சிடும். எல்லாம் இருக்கும் இடத்தை பொறுத்தது.

கற்பகதரு சார்! சிறிலங்காவில் பேச்சு மற்றும் ஊடக சுதந்திரம் இருக்கா?

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கற்பகதரு said:

அப்படி என்ன கனகாலம் எடுக்க போகுது? பிரான்ஸ், ஜேர்மனி, கனடா எண்டு வந்து சேர்ந்தால் உங்களுக்கு தெளிஞ்சது போல அவருக்கும் உடனேயே தெளிஞ்சிடும். எல்லாம் இருக்கும் இடத்தை பொறுத்தது.

10 minutes ago, குமாரசாமி said:

கற்பகதரு சார்! சிறிலங்காவில் பேச்சு மற்றும் ஊடக சுதந்திரம் இருக்கா?

இல்லையே! அதனால் தானே “பயப்பிடுறவனுக்கு நிதம் சாவு. சாகத் துணிந்தவனுக்கு.. பயம் ஏது.” என்று எழுத ஜேர்மனிக்கு வந்து புகலிடம் கேட்க வேண்டி இருக்கிறது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, கற்பகதரு said:

இல்லையே! அதனால் தானே “பயப்பிடுறவனுக்கு நிதம் சாவு. சாகத் துணிந்தவனுக்கு.. பயம் ஏது.” என்று எழுத ஜேர்மனிக்கு வந்து புகலிடம் கேட்க வேண்டி இருக்கிறது?

இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை? நீங்கள் சிறிலங்காவிலை இருந்து கதைக்கிறீங்கள். நாங்கள் ஜேர்மனியிலை. ஜேர்மனியிலை இல்லாட்டி வெளிநாடுகளிலை இருக்கிற சனம் தங்கடை அபிப்பிராயங்களை சொல்லக்கூடாது அவ்வளவுதானே?
இனிமேல் அப்பிடி நடக்காமல் பாத்துக்கொள்ளுறம். நிம்மதியா தூங்குங்க.😎

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமாதிரியான கொழுப்பு பேச்சு பேசுவதற்கு காரணம், நாம் தான். நாம் எல்லாம் ஓரணியில் நின்று ஒரு கருத்தைச் சொல்கிறோமா? ஒரு கட்சிக்குள்ளேயே பல்வேறு கருத்துக்கள். சிங்களவனை ஆதரித்து, எமது நீதியை கொச்சைப்படுத்தும் கருத்து, சிங்களவனை தூக்கி நிறுத்தி காப்பாற்றும் முயற்சி, காட்டிக்கொடுப்பு, வக்காலத்து இவ்வளவும் நம் பக்கத்தில் இருந்து அவனுக்கு சார்பாய் நடந்து கொள்ளும்போது, அவன் இப்படிப் பேசுவதில் வியப்பொன்றும் இல்லையே?  எனக்கு என் இனத்தின் மீதே கோவம் வருகிறது. ஓரிருவர் செய்யும் தவறால், நமது தியாகங்கள் கொச்சைப்படுத்தப்பட்டு, தலை குனிய வேண்டிய நிலை. அத்தனையையும் கடந்து விடுதலைப் பயணத்தை கொண்டு சென்ற தலைவன் எப்பேர்ப்பட்ட கஸ்ரங்களை பட்டிருப்பார். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

ஆனால் இப்படியே குட்ட குட்ட குனிந்தபடியேதான் காலம் முழுதும் இருக்க வேண்டுமா? சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதாக, ஓரணியில் நின்று, கிடைக்கும் வாய்புகள் அனைத்தையும் அது பரந்தன் ராஜன் மூலமகாவே வந்தாலும், பயன்படுத்தி  ஒரு கெளரவமான தீர்வை இலங்கைக்குள் பெற முயல்வதில் தப்பில்லையே?

வாய்ப்பில்லை ராஜா ...வாய்ப்பேயில்லை 😋😋😜

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு அரபுக்குகளும் / மத்த நாட்டு மக்களும் என்ன சொல்வார்கள் என்றால், மண்ணைத்தோண்டினலும் மலையாளி இருப்பானாம் அதுபோல் செவ்வாய்க்கு சென்றாலும் அங்கும் மளையாளி சாய ஊத்திக்கோண்டு இருப்பானாம். தினேசின் இந்த கருத்தை இப்படி நகைச்சுவையாக எடுக்க வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

தனி,

நாம் வெளிநாட்டில் இருந்து சண்டிதனம் செய்யகூடாது இதனால் பாதிப்படைவது நீங்கள்தான் என்பதை முற்றாக ஏற்கிறேன்.

ஆனால் இப்படியே குட்ட குட்ட குனிந்தபடியேதான் காலம் முழுதும் இருக்க வேண்டுமா? சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதாக, ஓரணியில் நின்று, கிடைக்கும் வாய்புகள் அனைத்தையும் அது பரந்தன் ராஜன் மூலமகாவே வந்தாலும், பயன்படுத்தி  ஒரு கெளரவமான தீர்வை இலங்கைக்குள் பெற முயல்வதில் தப்பில்லையே?

இதற்கான அணுகுமுறையே வேறானது. அமைதியாக, சர்வதேச புவிசார் அரசியல் மாறும் நிலையை அவதானித்து, வாழு, வாழ விடு என்ற அடிப்படையில், எதிரிகளை உருவாக்காத தீர்வை, அது உடையும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளுக்கும் கடும் பாதிப்பை உருவாக்கும் பிடி-22 போன்ற ஒன்றாக அடையாளம் கண்டு, அதை நிறைவேற்றி கரைசேர்க்கத்தக்க சாணக்கியம் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அக்னியஷ்த்ரா said:

வாய்ப்பில்லை ராஜா ...வாய்ப்பேயில்லை 😋😋😜

🤣 உங்க டைமிங் சென்ஸ் வேற லெவல் சிங்கம்🤣

2 hours ago, கற்பகதரு said:

இதற்கான அணுகுமுறையே வேறானது. அமைதியாக, சர்வதேச புவிசார் அரசியல் மாறும் நிலையை அவதானித்து, வாழு, வாழ விடு என்ற அடிப்படையில், எதிரிகளை உருவாக்காத தீர்வை, அது உடையும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளுக்கும் கடும் பாதிப்பை உருவாக்கும் பிடி-22 போன்ற ஒன்றாக அடையாளம் கண்டு, அதை நிறைவேற்றி கரைசேர்க்கத்தக்க சாணக்கியம் தேவை.

உண்மைதான். ஒரு தீர்வை எட்டி, அந்த தீர்வு கைவிடப்பட்டால் - தமிழர், சோனகர், சிங்களவர், இந்தியா, மேற்கு, சீனா எல்லாருக்கும் எதோ ஒரு வகையில் பாதிப்பு ஏற்படும் எனும் நிலையை உருவாக்கினாலே அந்த தீர்வு நிலைக்கும்.

ஆனால் இதை உருவாக்க கூடிய இயலுமை,  ஏது நிலை கண்ணுக்கு புலப்படவே இல்லையே.

யோசித்து பார்த்தால் மேலே அக்னி சொன்னதுதான் சரி போல படுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

ஆனால் இப்படியே குட்ட குட்ட குனிந்தபடியேதான் காலம் முழுதும் இருக்க வேண்டுமா? சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதாக, ஓரணியில் நின்று, கிடைக்கும் வாய்புகள் அனைத்தையும் அது பரந்தன் ராஜன் மூலமகாவே வந்தாலும், பயன்படுத்தி  ஒரு கெளரவமான தீர்வை இலங்கைக்குள் பெற முயல்வதில் தப்பில்லையே?

இதைவிட்டால் வேறு வழி என்ன இருக்கிறது.

ஆயுதப் போராட்டமும் சாத்தியமில்லை. எமது அரசியல்ப் பலமும் அந்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. சிங்களவன் நாளுக்கு நாள் பலமடைந்துகொண்டு வருகிறான், அவனது சிங்கள பெளத்த தேசியம் உருவேற்றப்பட்டுக் கொண்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியா தனது நலனுக்காக எமக்கு ஒரு தீர்வைத் தருமாக இருந்தால் அதைதவிர மேலான எதுவும் எமக்கு இப்போதைக்கு இல்லை. இந்தியாவை மீறி எம்மால் தீர்வொன்றைப் பெறமுடியாது. இன்று சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு பதிலடியாக இந்தியாவை முன்னிறுத்தி அமெரிக்காவும், மேற்குலகும் செய்யும் நகர்வுகள் எமக்கான ஒரு தீர்வையும் கூடவே வழங்குமென்றால், அதில் தவறென்ன? இந்தியாவையும், அமெரிக்காவையும் தாண்டி எமக்குத் தீர்வொன்றைத்தர வேறு யார் இருக்கிறார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.