Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று கூறும் சீனு ராமசாமி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று கூறும் சீனு ராமசாமி

விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று கூறும் சீனு ராமசாமி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் தற்போது ‘லாபம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை அடுத்து பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை கதையில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

இந்நிலையில், இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் விஜய் சேதுபதிக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதில், விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள். விஜய்சேதுபதி நடிக்கும் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" திரைப்படம் அதற்கு சான்று. ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து. உள்ளங்கைக்கு முத்தம். மக்கள் செல்வா.. நீரே எங்கள் தமிழ் சொத்து அய்யா.. நமக்கெதற்கு மாத்தையா?.. மாற்றய்யா?

இயக்குனர் சீனு ராமசாமியின் பதிவு

இவ்வாறு சீனுராமசாமி கூறியுள்ளார்.

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையில் கதையில் நடிக்க வேண்டாம் என்பதற்காக இப்படி பதிவு செய்திருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/10/10160504/1963559/Seenu-Ramasamy-Request-to-Vijay-Sethupathi.vpf

Edited by உடையார்

  • Replies 215
  • Views 22.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஜய் சேதுபதிக்கு எச்சரிக்கை/ மதிவாணன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஜய்சேதுபதிக்கு எச்சரிக்கை!-இளஞ்சென்னியன்

இந்த நூற்றாண்டில் மனித குலம் வெட்கி தலைகுனியத்தக்க இனப்படுகொலையை நிகழ்த்திய அரசின் பக்கமாக நின்று ஓர் இனத்தின் விடுதலை போராட்டத்தை அதனை தலைமையேற்று நடத்திய விடுதலை இயக்கத்தை கொச்சைபடுத்தி பேசி வரும் அறமற்ற விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் அவரின் இனத்துரோக வரலாறே முதன்மையானது. அதை தவிர்த்து அவரது விளையாட்டு வாழ்க்கையை பதிவு செய்ய போவதாக தாங்கள் சொன்னால் அது உங்கள் மீதான நன்மதிப்பை கேள்விக்கு உள்ளாக்கும். சமூகம்சார்ந்த சனநாயக கருத்துக்களை தொடர்ந்து ஆளும் வர்க்கத்து அஞ்சாது கூறிவந்த நீங்கள் சிங்கள இனப்படுகொலை ஆட்சியாளர்களின் கருத்துருவாக்கவாதியாக நின்றால் தமிழினத்துக்கு எதிரான அணியிலையே காலம் உங்களையும் வைத்து பார்க்க வைத்து விடும். உடனடியாக இந்த பட ஒப்பந்தங்களில் இருந்து தாங்கள் தங்களை விடுவித்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். தவறும்பட்சத்தில் உரிய விளைவை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை செய்கிறோம்

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் சேதுபதி வண்டியும் ,தொந்தியுமாய் இருக்கிறார் ...எப்படி முரளியின் வேடத்திற்கு பொருந்தி வருவார்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேண்டாம் விபரீதம் விஜய்சேதுபதி | ராஜபட்சே கொண்டாடுவது தமிழினத்திற்கு எதிரானது

இலங்கையின் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அவர்களின் சொல்லப்படாத கதை என்ற தலைப்பில் வருகின்ற படத்தில் திரு விஜய்சேதுபதி அவர்கள் நடிக்க இருப்பது ஒட்டுமொத்த தமிழர்களின் பொது உளவியல் தன்மைக்கு எதிரானது 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் செல்வனா சிங்கள செல்வனா | விஜய் சேதுபதியிடம் அன்பான வேண்டுகோள் | Vijay sethupathi | Himlar

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Greatest day May 2009

On 10/10/2020 at 22:39, உடையார் said:

அதில், விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள். விஜய்சேதுபதி நடிக்கும் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" திரைப்படம் அதற்கு சான்று. ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து. உள்ளங்கைக்கு முத்தம். மக்கள் செல்வா.. நீரே எங்கள் தமிழ் சொத்து அய்யா..

எத்தனையோ தியாகிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மேதைகள், காலத்தால் அழியாத கலைஞர்கள் என்று பல தெரிவுகள் இருக்க இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க முடிவெடுத்திருப்பது எனக்கும் ஆச்சரியத்தைத் தந்துள்ளது. அவர் ஒரு தயாரிப்பாளரும் கூட; மேலே குறிப்பிட்ட, அவருக்குப் பொருத்தமான ஏதாவது ஒரு வேடத்தில் நடிப்பது தான் அவருக்குப் பெருமை என்பது எனது பணிவான கருத்து. இதை விடுத்துப் பல கோடித் தமிழர்களின் வெறுப்பைச் சம்பாதிக்கக் கூடிய ஒரு முடிவை அவர் எடுத்திருப்பது மிகவும் வேதனையானது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

Bild

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இதில நா.த.க குரல்கள் ஓங்கி ஒலிப்பதால் மட்டும் கேட்கிறேன், யாராவது பதில் தெரிந்தால் தாருங்கள் (நாக்கை நீட்டாமல்!)

"எவனிடமும் இருந்து நல்ல விடயங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்" - இது சீமான் அவர்கள் ஹிற்லரின் வாசகமொன்றை மேற்கோள் காட்டிய பின்னர் சொன்னது. 

இலங்கையில், முன்னேறக் கஷ்டப் படும் ஒரு சமூகத்தில் இருந்து வந்து, உலக கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஒரு தமிழர்! சமாதான காலத்தில் புலிகளால் வரவேற்கப் பட்டு வன்னி போய் அவர்களது விளையாட்டு அபிவிருத்தி மீதான ஆர்வத்தை வெளியுலகுக்குக் காட்டியவர். இப்படி பல நல்ல விடயங்கள் இருக்க, இப்ப ராஜபக்ஷவின் நண்பன் என்பதால் மட்டுமே ஏன் இப்படி எதிர்ப்பு? 

இவர் ஹிற்லரை விட மோசமானவரா? 🤔 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

தெரிந்தும் தெரியாத மாதிரியும் விளங்கியும் விளங்காதமாதிரியும் நடிப்பவர்களை என்ன செய்ய - 🤔

புலிகள் இருக்கும் போது இவர் அவர்களுக்கு ஏதிராக அல்லது தமிழ் மக்கள் இறப்பது சந்தோஷமென கூறியிருந்தாரா -அதற்கான பதிவுகளை தரமுடியுமா???  

May 2009 புலிகள் மக்களின் அழிவை பார்த்து தனக்கு சந்தோஷமென கூறியிருந்தார் இதுதான் இவரின் உண்மை முகம்,

அதுசரி - அன்று புலிகள் கூப்பிட்ட படியால் போய் ஏதே விளம்பரத்துக்கு செய்தார், May 2009 க்கு பின் என்னத்தை கிழித்தார் கூற முடியுமா (நாக்கை நீட்டாமல்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

Bild

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரின் தனிப்பட்ட வாழ்கை எப்படியிருந்தாலும் எனக்கு கவலையில்லை, ஆனா இவரை கொண்டாடி படமெடுக்குமளவுக்கு பொது வாழ்கையில் நல்லவரா?

இவரை W.A Silva Mawatha இல் உள்ள ஒரு வீட்டில் அடிக்கடி காணலாம், அங்கு போக முதல் Hamdon Lane இல் ஒரு பாமர்சி இருக்கு அங்கும் அடிக்கடி வருவார், அந்த பாமர்சிக்கு பக்கத்தில் தான் என் நண்பர்கள் கடை வைத்திருந்தார்கள், அங்குதான் கூட நேரமிருப்பது, இவரின் தனிப்பட்ட வாழ்கையும் ????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, உடையார் said:

தெரிந்தும் தெரியாத மாதிரியும் விளங்கியும் விளங்காதமாதிரியும் நடிப்பவர்களை என்ன செய்ய - 🤔

புலிகள் இருக்கும் போது இவர் அவர்களுக்கு ஏதிராக அல்லது தமிழ் மக்கள் இறப்பது சந்தோஷமென கூறியிருந்தாரா -அதற்கான பதிவுகளை தரமுடியுமா???  

May 2009 புலிகள் மக்களின் அழிவை பார்த்து தனக்கு சந்தோஷமென கூறியிருந்தார் இதுதான் இவரின் உண்மை முகம்,

அதுசரி - அன்று புலிகள் கூப்பிட்ட படியால் போய் ஏதே விளம்பரத்துக்கு செய்தார், May 2009 க்கு பின் என்னத்தை கிழித்தார் கூற முடியுமா (நாக்கை நீட்டாமல்)

அதெல்லாம் பதிவில் இருக்கே உடையார், அதுவா என் கேள்வி? இதெல்லாம் சொல்லியிருந்தாலும் அவர் புலிகளை அழிக்கவில்லை, தமிழரைக் கொல்லவில்லை, யாரையும் கொல்லவில்லை! 

உங்கள் தல சீமானின் கொள்கைப் படி இவரது சாதனையை நாம் ஆவணப்படுத்த வேண்டாமா என்றே கேட்டேன்! ஏனென்றால், 10 மில்லியன் பேரைக் கொன்ற ஹிற்லரில் இருந்தே நல்லதை எடுத்துக் கொள்ள வேண்டுமெண்டல்லோ சொல்லியிருக்கிறேர்? 

இல்லையா? 🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

அதை சிங்களவன் செய்தானா ?

 ஆவணப்படுத்திதான் இருக்கின்றார்கள் இவரின் சாதனைகளை.

ஏன் இப்ப இவரின் சாதனையை தமிழ் நாட்டில் செய்ய வேண்டும் படமாக எடுக்க வேண்டும் - தமிழருக்கு இவர் என்ன செய்தார்,

சிங்களத்துக்குதான் அள்ளி அள்ளி செய்கின்றார் இன்னும், அந்த சிங்களவன் இவரை கருவேப்பிலையாகதான் பாவிக்கின்றான். அவர்கள் ஏன் ஆவணபடமாக எடுக்க கூடாது

இவரைவிட தமிழ் நாட்டில் சாதனை செய்த அல்லது பல பெரியவர்களை ஆவணப்படமாக எடுக்கலாம்,

இப்ப இவரின் படத்தை எடுப்பதன் பின்னனி சிங்கள அரசியல்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, உடையார் said:

இன்னும் நீங்கள் கேள்விக்குப் பதில் தரவில்லையே உடையார்? கொலைகாரன் ஹிற்லரிடமிருந்தே நல்லதைப் பார் என்றால், நா.த ஏன் முரளியை இப்படி முழுமூச்சாய் தூக்கியடிக்க வேணுமெண்டு தான் விளங்காமல் கேட்டேன்! 

உண்மையில் எனக்கு முரளியிலும் ஆர்வமில்லை, கீரிக்கட்டிலும் ஆர்வமில்லை! விஜய் சேதுபதியின் நடிப்பு மற்றும் பிடிக்கும்! 
 
5 minutes ago, உடையார் said:

அதை சிங்களவன் செய்தானா ?

 ஆவணப்படுத்திதான் இருக்கின்றார்கள் இவரின் சாதனைகளை.

ஏன் இப்ப இவரின் சாதனையை தமிழ் நாட்டில் செய்ய வேண்டும் படமாக எடுக்க வேண்டும் - தமிழருக்கு இவர் என்ன செய்தார்,

சிங்களத்துக்குதான் அள்ளி அள்ளி செய்கின்றார் இன்னும், அந்த சிங்களவன் இவரை கருவேப்பிலையாகதான் பாவிக்கின்றான். அவர்கள் ஏன் ஆவணபடமாக எடுக்க கூடாது

இவரைவிட தமிழ் நாட்டில் சாதனை செய்த அல்லது பல பெரியவர்களை ஆவணப்படமாக எடுக்கலாம்,

இப்ப இவரின் படத்தை எடுப்பதன் பின்னனி சிங்கள அரசியல்

யாரைப் பற்றி படம் எடுப்பதென்று விஜய் சேதுபதியும் தயாரிப்பாளரும் அல்லவா முடிவு செய்ய வேண்டும்? இவை இருவரும் அல்லாதோர் ஏன் எச்சரிக்கையெல்லாம் விட வேண்டும்? படம் பிடித்தால் பார்க்கலாம், இல்லையேல் பார்க்காமல் இருக்கலாம் அல்லவா? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

இன்னும் நீங்கள் கேள்விக்குப் பதில் தரவில்லையே உடையார்? கொலைகாரன் ஹிற்லரிடமிருந்தே நல்லதைப் பார் என்றால், நா.த ஏன் முரளியை இப்படி முழுமூச்சாய் தூக்கியடிக்க வேணுமெண்டு தான் விளங்காமல் கேட்டேன்! 

உண்மையில் எனக்கு முரளியிலும் ஆர்வமில்லை, கீரிக்கட்டிலும் ஆர்வமில்லை! விஜய் சேதுபதியின் நடிப்பு மற்றும் பிடிக்கும்! 
 
நல்லதை எடுத்து கொண்டார்கள் - அதற்காக அவரை கொண்டாட வேண்டெமென்றில்லையே?

ஹிட்லரில் நல்லதை எடுத்துக்கொண்டால், அவரை படமெடுக்கனுமென்றிருக்கா?

உங்களின் எண்ணம் விளங்கவில்லை, இவரின் திறமையை நல்லதை எடுத்து பயிற்ச்சி கொடுக்கலாம், அதற்காக தலையில் கொண்டாடுமளவிற்கு இவருக்கு தகுதியில்லை.

அத்துடன் இதில் ஏதிர்ப்பவர்கள் எல்லாம் நா.த.க இல்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

படம் பார்ப்பவர்களால்தான் இவர்கள் வாழ்கை ஓடுகின்றது, பார்பவர்களுக்கும் உரிமையிருக்கு, மக்கள் இல்லையேல் இவர்கள் இல்லை, இது ஒரு சின்ன பிள்ளைக்கு கூடவிளங்கும் - உங்களுக்கு?

நமல் ராஐபகசவின் ஊடுருவல் - இதுதான் அரசியல் 

வேண்டாம் விஜய்சேதுபதி | ராஜவேல் நாகராஜன் | பேசு தமிழா பேசு

தமிழ் தேசியம் பேசினாலே நாம் தமிழர் கட்சி என சிந்திப்பவர்கள் இக்காணொளியைப்பார்த்துவிட்டு யோசியுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

படம் பிடித்தால் பார்க்கலாம், இல்லையேல் பார்க்காமல் இருக்கலாம் அல்லவா? 

அது நியாயமான மனிதர்கள் செய்து கொள்வது அப்படி தான்.

யாரைப் பற்றி படம் எடுக்கலாம் அந்த படத்தில் நடிக்கலாமா என்பதெல்லாம் ஹிற்லரிடமிருந் பாசிசம் கற்று கொண்டவர்களின் நடவடிக்கை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டுவிட்டரில் டிரெண்டாகும் “ஷேம் ஆன் விஜய்சேதுபதி” ஹேஷ்டேக்

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி படம் ஒன்றை உருவாக்கவுள்ளனர். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. “முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழராக இருந்தாலும், விடுதலைப்புலிகள் போராடியபோது சிங்களத்தின் பக்கம் நின்று துரோகம் செய்தார். அவரது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது” என்று கண்டித்தனர். 

விஜய்சேதுபதி

இந்நிலையில் 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி மோஷன் போஸ்டரும் வெளியானதால் தற்போது எதிர்ப்பு அதிகமாகி உள்ளது. அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக “ஷேம் ஆன் விஜய்சேதுபதி” என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. 

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/10/14122538/1974441/Shame-On-VijaySethupathi-hashtag-trending-on-twitter.vpf

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

அது நியாயமான மனிதர்கள் செய்து கொள்வது அப்படி தான்.

யாரைப் பற்றி படம் எடுக்கலாம் அந்த படத்தில் நடிக்கலாமா என்பதெல்லாம் ஹிற்லரிடமிருந் பாசிசம் கற்று கொண்டவர்களின் நடவடிக்கை.

நியாயமான மனிதர்களைப்பற்றி நீங்கள் கதைக்கின்றீர்களா; கட்டுமிராட்டிதனத்தை செய்த கோத்தாவை கண்டீதீர்களா என்று கேட்க பதிலே சொல்லாமல் ஓடியவரல்லவா? நீங்கள் ஆதரிப்பதில் எந்த பிழையுமில்லை இனம் இனத்தோடுதான் சேரும்.

விளங்கனும் இன்னும்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

டுவிட்டரில் டிரெண்டாகும் “ஷேம் ஆன் விஜய்சேதுபதி” ஹேஷ்டேக்

டுவிட்டரில் டிரெண்டாகும்  “ஷேம் ஆன் விஜய்சேதுபதி” ஹேஷ்டேக்

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி படம் ஒன்றை உருவாக்கவுள்ளனர். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. “முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழராக இருந்தாலும், விடுதலைப்புலிகள் போராடியபோது சிங்களத்தின் பக்கம் நின்று துரோகம் செய்தார். அவரது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது” என்று கண்டித்தனர். 

விஜய்சேதுபதி

இந்நிலையில் 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி மோஷன் போஸ்டரும் வெளியானதால் தற்போது எதிர்ப்பு அதிகமாகி உள்ளது. அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக “ஷேம் ஆன் விஜய்சேதுபதி” என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. 

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/10/14122538/1974441/Shame-On-VijaySethupathi-hashtag-trending-on-twitter.vpf

நியாயமான மனிதர்களைப்பற்றி நீங்கள் கதைக்கின்றீர்களா; கட்டுமிராட்டிதனத்தை செய்த கோத்தாவை கண்டீதீர்களா என்று கேட்க பதிலே சொல்லாமல் ஓடியவரல்லவா? நீங்கள் ஆதரிப்பதில் எந்த பிழையுமில்லை இனம் இனத்தோடுதான் சேரும்.

விளங்கனும் இன்னும்

விடுங்க உடையார் இவர்கள் வீரமெல்லாம் இங்குதான்  அங்கு நிலைமை கட்டுமீறி போய் கொண்டு இருக்கு 

#ShameOnVijaySethupathi என்று இணையமெங்கும் அதிருது 

முரளிதரன் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆட்களாம் இங்கு ஒருவர் சொல்கிறார் அவ்வளவுதான் அவரின் பார்வையின் தூரம் முரளிதரன் மேட்டுக்குடி வர்க்கம் என்பது அவர்கேள்விப்படவில்லையாக்கும் பிஸ்கட் கொம்பனி ஓனர் .இலங்கையில் பியர் தயாரிக்க என்று அனுமதித்த அளவை விட இந்த நாட்டின் சட்டத்தை மதிக்காமல் அதிக அளவு எதனால் இறக்குமதி செய்து பலமுறை தண்டப்பணம் கட்டியவர். 

இப்படித்தான் விசு வும் எங்களில்  சொரிந்து புண்ணாகியவர் .ஆனால் இம்முறை சேதுபதி விடயத்தில் எல்லா பார்ட்டியும் ஒன்றாய் நிக்கிறார்கள் அங்கு இங்கும் வழக்கம் போல் எடுத்ததுக்கெல்லாம் நீங்கள்  நான்கு கால் என்றால் இல்லை மூன்று கால் என்பார்கள் நீங்கள் சரியப்பா மூன்று கால்த்தான் என்று அமைதியானாலும் அவர்கள் விட மாட்டார்கள் இல்லை இரண்டைரை கால் என்று வருவார்கள் அவர்களுக்கு முதலில் மன ஆற்றுப்படுத்தல் செய்யணும் சேதுபதி விடயத்தில் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கு தெரியும் ஆனாலும் உண்மை அவர்களுக்கு சார்பாக இருக்காது எனும் காரணத்தினால் இங்கு கொள்ளுப்படுகினம் .

அசினும் இப்படித்தான் சொல்ல சொல்ல கெட்டு  குட்டி சிவரானவ.

சேதுபதி புத்திசாலி என்று அவருடன் அரபுலகில் வேலை செய்த நண்பர்கள் சொல்கிறார்கள் உண்மை பொய் கொஞ்ச நாளில் தெரிந்துவிடும் .

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

நல்லதை எடுத்து கொண்டார்கள் - அதற்காக அவரை கொண்டாட வேண்டெமென்றில்லையே?

ஹிட்லரில் நல்லதை எடுத்துக்கொண்டால், அவரை படமெடுக்கனுமென்றிருக்கா?

உங்களின் எண்ணம் விளங்கவில்லை, இவரின் திறமையை நல்லதை எடுத்து பயிற்ச்சி கொடுக்கலாம், அதற்காக தலையில் கொண்டாடுமளவிற்கு இவருக்கு தகுதியில்லை.

அத்துடன் இதில் ஏதிர்ப்பவர்கள் எல்லாம் நா.த.க இல்லை. 

முயற்சிக்கு வாழ்த்துக்கள் உடையார் அண்ணா 
தாழ்மையான கருத்து அவற்றை கண்டும் காணாமல் போனால் 
உங்களுக்கு நேரம் மிச்சம் என்பதுதான்.
ஆரோக்கியமான விவாதம் செய்யலாம் 
நேரத்தை விராண்ட வாதங்களில் செலவு செய்தால் 
அது உங்களுக்கும் வீணான வேலைதான். 

சிலவற்றை பார்த்தவுடனேயே புரிந்துகொள்ள வேண்டும்.
துஷ்டனை கண்டால் தூர விலகு என்று காரணத்தோடுதான் 
முன்னையவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
துஷ்டனை கண்டால் போராடி விரட்டு என்று சொல்லாததில் 
நிறைய அர்த்தம் உண்டு. துஷ்டனுக்கான அர்த்தத்தை நீங்கள் 
தெளிவு கொண்டால் மட்டுமே மூதையார் சொல்ல வந்ததை புரிய முடியும்.    

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, பெருமாள் said:

விடுங்க உடையார் இவர்கள் வீரமெல்லாம் இங்குதான்  அங்கு நிலைமை கட்டுமீறி போய் கொண்டு இருக்கு 

#ShameOnVijaySethupathi என்று இணையமெங்கும் அதிருது 

முரளிதரன் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆட்களாம் இங்கு ஒருவர் சொல்கிறார் அவ்வளவுதான் அவரின் பார்வையின் தூரம் முரளிதரன் மேட்டுக்குடி வர்க்கம் என்பது அவர்கேள்விப்படவில்லையாக்கும் பிஸ்கட் கொம்பனி ஓனர் .இலங்கையில் பியர் தயாரிக்க என்று அனுமதித்த அளவை விட இந்த நாட்டின் சட்டத்தை மதிக்காமல் அதிக அளவு எதனால் இறக்குமதி செய்து பலமுறை தண்டப்பணம் கட்டியவர். 

இப்படித்தான் விசு வும் எங்களில்  சொரிந்து புண்ணாகியவர் .ஆனால் இம்முறை சேதுபதி விடயத்தில் எல்லா பார்ட்டியும் ஒன்றாய் நிக்கிறார்கள் அங்கு இங்கும் வழக்கம் போல் எடுத்ததுக்கெல்லாம் நீங்கள்  நான்கு கால் என்றால் இல்லை மூன்று கால் என்பார்கள் நீங்கள் சரியப்பா மூன்று கால்த்தான் என்று அமைதியானாலும் அவர்கள் விட மாட்டார்கள் இல்லை இரண்டைரை கால் என்று வருவார்கள் அவர்களுக்கு முதலில் மன ஆற்றுப்படுத்தல் செய்யணும் சேதுபதி விடயத்தில் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கு தெரியும் ஆனாலும் உண்மை அவர்களுக்கு சார்பாக இருக்காது எனும் காரணத்தினால் இங்கு கொள்ளுப்படுகினம் .

அசினும் இப்படித்தான் சொல்ல சொல்ல கெட்டு  குட்டி சிவரானவ.

சேதுபதி புத்திசாலி என்று அவருடன் அரபுலகில் வேலை செய்த நண்பர்கள் சொல்கிறார்கள் உண்மை பொய் கொஞ்ச நாளில் தெரிந்துவிடும் .

16 minutes ago, Maruthankerny said:

முயற்சிக்கு வாழ்த்துக்கள் உடையார் அண்ணா 
தாழ்மையான கருத்து அவற்றை கண்டும் காணாமல் போனால் 
உங்களுக்கு நேரம் மிச்சம் என்பதுதான்.
ஆரோக்கியமான விவாதம் செய்யலாம் 
நேரத்தை விராண்ட வாதங்களில் செலவு செய்தால் 
அது உங்களுக்கும் வீணான வேலைதான். 

சிலவற்றை பார்த்தவுடனேயே புரிந்துகொள்ள வேண்டும்.
துஷ்டனை கண்டால் தூர விலகு என்று காரணத்தோடுதான் 
முன்னையவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
துஷ்டனை கண்டால் போராடி விரட்டு என்று சொல்லாததில் 
நிறைய அர்த்தம் உண்டு. துஷ்டனுக்கான அர்த்தத்தை நீங்கள் 
தெளிவு கொண்டால் மட்டுமே மூதையார் சொல்ல வந்ததை புரிய முடியும்.    

நன்றி மருதங்கேணி & பெருமாள்

 இதை சேதுபதி சீரியசாக எடுத்தால், நல்ல நடிகர் என்ற பெருமையடன் இன்னும் மிளிர்வார், பார்ப்போம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.