Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெஹிவளையில் வைத்து... ரிஷாட் பதியுதீன் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தெஹிவளையில் வைத்து ரிஷாத் கைது | Athavan News

தெஹிவளையில் வைத்து.. ரிஷாட் கைது

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரினால் தீவிரமாக தேடப்பட்டு வந்த ரிஷாட் பதியுதீன் தெஹிவளையில் வைத்து இன்று (திங்கட்கிழமை) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

ரிஷாட் பதியுதீன் தற்போது குற்றப்புலனாய்வுக் காவலில் உள்ளதுடன், அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

பொதுச்சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ரிஷாட்டை கைது செய்ய சட்ட மா அதிபர், பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

http://athavannews.com/தெஹிவளையில்-வைத்து-ரிஷாத/

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தமிழ் சிறி said:

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரினால் தீவிரமாக தேடப்பட்டு வந்த ரிஷாட் பதியுதீன் தெஹிவளையில் வைத்து இன்று (திங்கட்கிழமை) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

ரிஷாட் பதியுதீன் தற்போது குற்றப்புலனாய்வுக் காவலில் உள்ளதுடன், அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

பொதுச்சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ரிஷாட்டை கைது செய்ய சட்ட மா அதிபர், பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

என்ன தல நீ ..
நித்தியானந்தாவின்  கைலாஷா லெவலுக்கு டப் கொடுத்து ஒரு காட்டு காட்டுவ 
என்று பார்த்தால் எங்க ஊரு கள்ள கசிப்பு பாக்கியம் அக்கா போல அவனுகளோட ஏரியாவிலேயே போய் மாட்டியிருக்க,
சுத்த வேஸ்ட்டுப்பா நீயி   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அக்னியஷ்த்ரா....
இவர் எப்படியும்... கல்முனை,  காத்தான்குடி  பக்கம் ஒளித்திருப்பார்,
இவரை பிடிப்பது கஸ்ரம் என்று நினைத்துக் கொண்டிருக்க....
ஆள்... தெகிவளையிலை... ஒளிச்சு   நிண்டிருக்கிறார்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாத் பதியுதீனுக்கு அடைக்கலம் வழங்கிய தம்பதியினர் கைது

DicksithOctober 19, 2020
 
rishad-bathiudeen.jpg

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் தெகிவளை எபினேசர் பிளேஸில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள், ஒரு மருத்துவர் மற்றும் அவரது மனைவி, முன்னாள் அமைச்சரின் நெருங்கிய நண்பர்கள் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தெகிவளைக்கு வருவதற்கு முன்னர், எம்.பி. பதியுதீன் தஞ்சம் கோரிய மற்ற இடங்கள் குறித்த விவரங்களைப் பெற பொலிஸார் சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

எம்.பி. பதியுதீன் குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) அதிகாரிகளால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.

http://www.battinews.com/2020/10/blog-post_920.html

இவரோட சேர்ந்து சில தமிழ் அரசியவாதிகள் எண்கள் நீண்டகால நலனுக்கு ஆப்பு வைக்கும் செயலில் ஈடுபடவை. அவை கட்டாயம் இவரை பிணையில் வெளியிலையெடுப்பினம்!

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாட் பதியுதீன் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது

ரிஷாட் பதியுதீன் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளை பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் இன்று காலை பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதனடிப்படையில் தெஹிவளை, எபனைஸ் கிளேஸ் பகுதியின் அடுக்குமாடி வீட்டு தொடரில் உள்ள வீடொன்றின் உரிமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாட் பதியூதீன், தெஹிவளையில் வைத்து கைது

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 19 , மு.ப. 06:42 - 0     - 335

AddThis Sharing Buttons

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியூதீன்,  தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெயர்ந்த வாக்காளர்களை புத்தளத்திலிருந்து மன்னாருக்கு அழைத்து சென்றமையின் ஊடாக அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாக தெரிவித்து  பதியுதீனை கைது செய்ய சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதையடுத்து கடந்த சில நாட்களாக 6 பொலிஸ் குழுக்கள் அமைத்து தேடப்பட்டும் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் ரிஷாட் பதியுதீன் 6 நாட்களுக்குப்பின் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

http://tamil.adaderana.lk/news.php?nid=135365

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாத்துக்கு ஒக்டோபர் 27 வரை விளக்கமறியல்

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியூதீனை எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/92496

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அக்னியஷ்த்ரா said:

என்ன தல நீ ..
நித்தியானந்தாவின்  கைலாஷா லெவலுக்கு டப் கொடுத்து ஒரு காட்டு காட்டுவ 
என்று பார்த்தால் எங்க ஊரு கள்ள கசிப்பு பாக்கியம் அக்கா போல அவனுகளோட ஏரியாவிலேயே போய் மாட்டியிருக்க,
சுத்த வேஸ்ட்டுப்பா நீயி   

பாக்கியம் அக்காவை ரிசாத்துடன் ஓப்பிட்டமைக்கு, அக்காவின் விழுதுகள் சார்பாக வன்மையான கண்டனங்கள்🤣

  • கருத்துக்கள உறவுகள்

பேரம் படிஞ்சிட்டுது போல ...இரண்டு நாளில் பிணையில் வந்துடுவார் 
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

பாக்கியம் அக்காவை ரிசாத்துடன் ஓப்பிட்டமைக்கு, அக்காவின் விழுதுகள் சார்பாக வன்மையான கண்டனங்கள்🤣

 பாக்கியம் அக்காவின் விழுதுகள் சார்பான கண்டனத்தை ஏற்றுக் கொண்டு பாக்கியம் அக்காவின் என்றும் பசுமையான நினைவலை ஒன்றை பதிவிடுகிறோம், கள்ளக் கசிப்பு விற்பதில் பெயர் போன அக்கா அதை போலிசுக்கே விற்றதில்
போலிசுக்கே மப்பேத்திய புலிகேசி என்று அன்போடு அழைக்கப்பட்ட அந்த சம்பவத்தை யாழில் பதிவேற்றி பெருமை கொள்ளும் அதே வேளை
பாக்கியம் அக்காவை சரியான நேரத்தில் முதன்மை படுத்தி, கண்டனத்தை பதிவு செய்ததற்க்காக கோசான் தலயை பாக்கியத்திற்கு வாக்கியம் தந்த புலிகேசி என்று அன்போடு அழைப்பதில்  யாழ் இரட்டை பெருமிதம் கொள்கிறது

கோசான், பா.வா.த.பு என்று என் பெயருக்கு பின் போட்டு கொள்வதை விட எனக்கு இனி வாழ்நாளில் வேறு ஒரு பெருமை இல்லை என்பதை பணிவாக தெரிவித்து நன்றி பாராட்டுவதுடன், அக்காவின் அருமையை சொல்லும் ஒரு குட்டி கதையை நானும் சொல்லவிழைகிறேன்.

அக்கா காசு விடயத்தில் மிகவும் கறார் என்பது தெரிந்ததே, ஆனால் ஒரு நாள் மிச்சமாக போய்விட்டதே என்ற கடுப்பில் அக்கா ரெண்டு கிளாசை ஓவராக சாப்பிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த சமயம், அக்காவின் சங்க கடை கூப்பன் புத்தகம் தவறி கீழே விழுந்து விட்டதாம்.

அதை பார்த்து கொண்டிருந்த அக்காவின் விழுது ஒன்று, “அக்கா கூப்பன் புத்தகம் கீழே விழுந்து விட்டது” என சொல்ல, நின்று நிதானித்த (!) அக்கா, “பரவாயில்லை யாராவது பாவப்பட்டவர் எடுத்து பாவிக்கட்டும்” என்றபடி கடந்து சென்றராம்.

இவ்வாறான ஒரு ஏழை பங்காளி எங்கள் அக்கா.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

ஆரய்யா இந்தப் பாக்கியமக்கா? இவ்வளவு நாளும் எங்க இருந்தா இந்த மகராசி? 

(எங்கள் எல்லாருக்கும் மிகப் பரிச்சயமான "தமிழ் (ழர்) நாட்டுக் கட்சியொண்டில ஒரு சீற் எடுத்துக் கொடுக்கலாமெண்டு தான் கேட்டனான் :grin:)

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Justin said:

ஆரய்யா இந்தப் பாக்கியமக்கா? இவ்வளவு நாளும் எங்க இருந்தா இந்த மகராசி? 

(எங்கள் எல்லாருக்கும் மிகப் பரிச்சயமான "தமிழ் (ழர்) நாட்டுக் கட்சியொண்டில ஒரு சீற் எடுத்துக் கொடுக்கலாமெண்டு தான் கேட்டனான் :grin:)

என்னது பாக்கியம் அக்கா யாரா? மீன்பாடும் தேன்னாட்டினை “நீர்வள” நாடாக ஆக்கியதே அக்காதான்🤣

தண்ணீர் ஒரு அடிப்படை உரிமை என்பதை உணர்ந்து, மேட்டு குடிகள் மட்டுமின்றி அனைவருக்கும் அதை எடுத்துச் சென்ற ஒரு சோசலிஸ்ட் எங்கள் அக்கா🤣

அக்காதான் உண்மையான சம்பெயின் சோசலிஸ்ட்🤣

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

என்னது பாக்கியம் அக்கா யாரா? மீன்பாடும் தேன்னாட்டினை “நீர்வள” நாடாக ஆக்கியதே அக்காதான்🤣

தண்ணீர் ஒரு அடிப்படை உரிமை என்பதை உணர்ந்து, மேட்டு குடிகள் மட்டுமின்றி அனைவருக்கும் அதை எடுத்துச் சென்ற ஒரு சோசலிஸ்ட் எங்கள் அக்கா🤣

அக்காதான் உண்மையான சம்பெயின் சோசலிஸ்ட்🤣

அக்காவை நாம் தமிழர் கட்சியுடன் லிங்க் பண்ண ஏதும் தகவல் இருக்குமா?
அக்காவிடம் கசிப்பு வாங்கி குடித்த யாரவது பின்பு நாம் தமிழருக்கு ஆதரவு 
கொடுப்பது போல ஏதாவது சின்ன பொறியாவது கிடைக்காதா?

என் போன்ற அறிவாளிகள் மட்டற்ற் மகிழிச்சி அடைய 
எதாவது? கிழக்கு மாகாணத்தில் யாராவது ஒருவர் தகவல் தந்தாலே போதும் 
பின்பு அவரது பெரியப்பா .. அவருடைய சிறிய மகன் சிநேகிதன் என்று 
நாம் மீதியை பார்த்து கொள்வோம்.. நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Maruthankerny said:

அக்காவின் நற்பெயரை கறையாக்க நான் விரும்பவில்லை🤣

சரி இந்த குத்துபாட்டை விடுங்கோ மருதர்.

நான் உங்கட கதைய கேட்டு உந்த ஸ்டொக் ஆராய்சில இறங்கீட்டன். திரி ஒண்ட திறவுங்கோவன்.

உண்மையாகதான் சொல்லுறன். யாழில் செலவழிக்கும் நேரத்தில் 10% யாவது பயனுள்ளவகையில் செலவழிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கும் ஏதாவது ரேஸற்றுக்கு வேணும் தானே.யாமாயுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கியம் அக்காவின் புகழ் அமெரிக்கா, லண்டன் என்று ஒங்கிபெருகுவதை பார்த்து  பேருவகை கொள்ளும் அதேவேளை  அக்காவின் சாதனைகளை  நேரடியாக பார்த்தும் கேட்டும் ரசித்தவன் என்ற முறையில்  அதனை யாழில் பதிவு செய்ய வேண்டிய கடப்பாடுள்ளவனாக நேர்மையாக  எனது சேவையை தொடர்வேன் என்பதை அக்காவின் கறள் புடிச்ச கசிப்பு கலன் மீது அடித்து  சத்தியம் செய்துவிட்டு அக்காவின் வரலாற்று குறிப்புகளை இங்கே செதுக்குகிறேன். 
அக்காவின் சாதனைப்பயணம் அவரது எட்டாம் வகுப்பு விஞ்ஞானப்புத்தகத்தில் இருந்து ஆரம்பிக்கிறது,
எட்டாம் வகுப்பையே மூன்று வருடங்கள் எம்பி எம்பி படித்த அக்காவிற்கு தெரிந்து விட்டது இனி ஏணி வைத்தாலும் படிப்பு நமக்கு எட்டாது என்று , இருந்தாலும் கற்ற கல்வி வீண் போகக்கூடாது என்று வெறித்தனமாக விஞ்ஞானப்புத்தகத்தை புத்தகத்தை புரட்டிய  போது அவரது பார்வை ஒரு படத்தின் மேல் குத்தி நின்றது , அதுதான் காய்ச்சி வடிக்கும் செயன்முறை ,  நியூட்டனுக்கு ஆப்பிளை பார்த்ததும் பொறி பிறந்ததை போல் அக்காவிற்கு காய்ச்சிவடிப்பை பார்த்ததும் விளங்கிவிட்டது இனிமேல் நம்முடைய எதிர்காலமே இதுதான் என்று ,
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக காய்ச்சி வடிப்பில் பல சுட்சுமங்களை கண்டுபிடித்து  (பல்லி வால், பழைய இறதல் சைக்கிள் ரிம் போன்றவற்றை கனகச்சிதமாக மிக்ஸ் பண்ணி ) 
ஊரிலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய  சுய தயாரிக்கப்பட்ட தொழில்முனைவோர்  (self made entrepreneur) ஆக மாறிப்போனார். 
சப்பட்டை , உருண்டைகளை கையில் இருபது ரூபாவை மட்டும் வைத்துக்கொண்டு எட்ட நின்று பார்த்து ஏங்கிய குடிமக்களை அக்கா வாரியணைத்து போதும் போதுமென்று மப்பேத்தினார் ,விடுமா இலங்கை காவல்துறை  முன்னே பெட்டிக்கடை பின்னே மப்புக்கடை என்று ஜரூராக நடந்த வியாபாரத்தில் ரெய்டு நடத்தி அக்காவின் சமூக சேவைக்கு முட்டு கட்டைபோட்டார்கள், ஜப்தி பண்ணிய கசிப்புபோத்தலில் ஒரு இரண்டு துளியை உள்ளே விட்ட போலீசார் அக்காவின் பார்முலாவிற்கு அடிமையாகிப்போய் முழுநேர வாடிக்கையாளராகிப்போன அதிசயங்களும் நடந்தன.

அக்காவின் கசிப்பு பார்முலா மேற்கூறியவைகளை தவிர்த்து வேறு எவ்வாறான குடும்ப,சமூக,பொருளாதார உட்கட்டுமான  அபிவிருத்திகளையும்  மருத்துவ,விஞ்ஞான துறைகளின்  வளர்ச்சிக்கு எவ்வாறு வழியேற்படுத்திக்கொடுத்தது  என்பதுடன் Corvid19 இற்கான உடனடி தற்காலிக  தீர்வில் இதனையும் ஒன்றாக கவனத்திலெடுக்க வேண்டிய அவசியத்தையும் வாசக நல்லுள்ளங்களின் ஆதரவை தொடர்ந்து அடுத்த பதிவில்  பதிவிடலாம் என்று எண்ணியுள்ளேன்  

தொடரும்  

தலைமறைவாக 6 நாட்கள் இருந்த ரிஷாட்டை சி.ஐ.டி.யினர் நெருங்கியது எப்படி? ‘சிம்’ அட்டைதான் அவரைக் காட்டிக்கொடுத்ததா?

risad-ciourts.png6 நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கைதுசெய்யப்பட்ட சம்பவம் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன. பிறிதொரு நபரின் பெயரில் பதிவாகியுள்ள சிம் அட்டை மற்றும் புதிய கையடக்கத் தொலைபேசி என அவர் பயன்படுத்தியிருப்பது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதவிர, கடந்த வாரம் செவ்வாய்க் கிழமை முதல் வியாழக்கிழமை வரை களுபோவில வைத்தியசாலை அருகே அவர் தங்கியிருந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. இந்தநிலையில், ரிஷாத் பதியுதீனுக்கு அடைக்கலம் கொடுத்த மருத்துவர் உள்ளிட்ட 7 பேர் நேற்று கைதுசெய்யப்பட்டனர்.

உறவினர் ஒருவரின் பெயரிலான சிம் அட்டையை அவர் பயன்படுத்துகின்றார் என்பதை விசாரணைகளின் போது அறிந்துகொண்ட சி.ஐ.டி.யினர், அந்த இலக்கம் எங்கிருந்து பயன்படுத்தப்படுகின்றது என்பதைக் கண்டறிந்த நிலையிலேயே ரிஷாட் மறைந்திருந்த வீட்டை நெருங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நூற்றுக்கணக்கான பொலிஸார் அதிகாலை 3.00 மணியளவில் குறிப்பிட்ட வீட்டை சுற்றிவளைத்த போது ரிஷாட் கைது செய்யப்பட்டார்.

https://thinakkural.lk/article/81235

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

ஆரய்யா இந்தப் பாக்கியமக்கா? இவ்வளவு நாளும் எங்க இருந்தா இந்த மகராசி? 

(எங்கள் எல்லாருக்கும் மிகப் பரிச்சயமான "தமிழ் (ழர்) நாட்டுக் கட்சியொண்டில ஒரு சீற் எடுத்துக் கொடுக்கலாமெண்டு தான் கேட்டனான் :grin:)

முதல்ல உங்கள் முரளியின் கட்சியில் சேர்த்துவிடப்பாருங்கள் :grin:, அவருக்குதான் தண்ணி காணாதம் :grin:, எப்ப இருந்து இந்த ஆள் சேர்த்துவிடும் வேலை, நல்லாயிருக்கே😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

எட்டாம் வகுப்பையே மூன்று வருடங்கள் எம்பி எம்பி படித்த அக்காவிற்கு தெரிந்து விட்டது இனி ஏணி வைத்தாலும் படிப்பு நமக்கு எட்டாது என்று , இருந்தாலும் கற்ற கல்வி வீண் போகக்கூடாது என்று வெறித்தனமாக விஞ்ஞானப்புத்தகத்தை புத்தகத்தை புரட்டிய  போது அவரது பார்வை ஒரு படத்தின் மேல் குத்தி நின்றது , அதுதான் காய்ச்சி வடிக்கும் செயன்முறை ,  நியூட்டனுக்கு ஆப்பிளை பார்த்ததும் பொறி பிறந்ததை போல் அக்காவிற்கு காய்ச்சிவடிப்பை பார்த்ததும் விளங்கிவிட்டது இனிமேல் நம்முடைய எதிர்காலமே இதுதான் என்று ,
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக காய்ச்சி வடிப்பில் பல சுட்சுமங்களை கண்டுபிடித்து  (பல்லி வால், பழைய இறதல் சைக்கிள் ரிம் போன்றவற்றை கனகச்சிதமாக மிக்ஸ் பண்ணி ) 
ஊரிலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய  சுய தயாரிக்கப்பட்ட தொழில்முனைவோர்  (self made entrepreneur) ஆக மாறிப்போனார். 
சப்பட்டை , உருண்டைகளை கையில் இருபது ரூபாவை மட்டும் வைத்துக்கொண்டு எட்ட நின்று பார்த்து ஏங்கிய குடிமக்களை அக்கா வாரியணைத்து போதும் போதுமென்று மப்பேத்தினார்

Patentrecht – Missbrauch von geschützen Patenten kann teuer werden |  Bankenblatt Finanznachrichten

பாக்கியம் அக்கா.... எட்டாம் வகுப்பில் படித்ததை வைத்து,
உலகம் போற்றும், தொழிலதிபராக வந்தது... ஆச்சரியமாக உள்ளது. 

இவர் கண்டு பிடித்த... தொழில் ரகசியத்தை.. காப்புரிமம் (Patent) எடுத்து வைக்க வேண்டும்.
இல்லாவிடில்... சீனா, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் திருடி விடுவார்கள். :grin:

ரிசாத் பதியுதீன் கைதுசெய்யப்பட்டது எப்படி ? இதுவரைவெளிவராத புதிய தகவல்கள்

சிலோன் டுடே-

நேற்று அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணை தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத்து சிஐடியினரால் கைதுசெய்ய்பபட்டார்.
அதுவரை அந்த ஆறு நாட்களாக அவர் எங்கிருக்கின்றார், யாருடன்தொடர்பைபேணுகின்றார், அவருடன் யார்யார் உள்ளனர்? அவர் எங்கு மறைந்திருக்கின்றார் என்ற விடயங்கள் எவருக்கும் தெரியாதவையாக காணப்பட்டன.

rishad-1-300x170.jpg
இந்த கள்ளன் பொலிஸ் விளையாட்டிற்கு காரணம் ரிசாத் அரசநிதியை தவறாக பயன்படுத்தியதேயாகும்.
ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெயர்ந்து வாழும் மக்களை வாக்களிப்பதற்காக மன்னாருக்கு பேருந்தில் அழைத்து செல்வதற்கு 233 பேருந்துகளிற்கு 9.5 மில்லியன் செலவிட்டதன் மூலம் அரசநிதியை தவறாக பயன்படுத்தினார் என்பதே அவருக்கு எதிரான குற்றச்சாட்டு.
இதுதொடர்பாக இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் தகவல்கள் உறுதியான பின்னர் சட்டமா அதிபரும் சிஐடியினரும் முன்னாள் அமைச்சரை கைதுசெய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்கவேண்டும் என கோட்டை நீதவானை கேட்டுக்கொண்டனர்.எனினும் அவ்வாறான குற்றத்தில் ஈடுபட்ட ஒருவரை கைதுசெய்வதற்கு பிடியாணை அவசியமில்லை, உரிய சட்ட கட்டமைப்புகளிற்குள் அவரை பிடியாணையின்றி கைதுசெய்யலாம் என நீதவான் தெரிவித்தார்.

இந்த சம்பவம் இடம்பெற்றவேளை ரிசாத் புத்தளத்திலிருந்து கொழும்பை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தார்,அவர் மாதம்பைக்கு அருகில் வந்துகொண்டிருந்தவேளை தனியார் வானொலியொன்றில் சிஐடியினர் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்ற அறிவிப்பு வெளியானது.

rishad-300x170.jpg
நடக்கப்போவது நல்லவிடயமில்லை என்பதை ரிசாத் உணர்ந்ததும் அவர் மாதம்பையில் வாழும் தனது கட்சியின் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரை அழைத்து மாதம்பைக்கு வாகனமொன்றை உடனடியாக அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அந்தவாகனம் வந்ததும் திட்டமிட்டபடி தனது வாகனத்திலிருந்து இறங்கி அந்த வாகனத்தில் ஏறி ரிசாத் தலைமறைவாகியுள்ளார்.
அவர்தனது கையடக்க தொலைபேசி இணைப்பையும் துண்டித்துள்ளார்.
ரிசாத்பதியுதீன் புத்தளத்திலிருந்து கொழும்பை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றார் என்பதை ஏற்கனவே அறிந்த சிஐடியினர் அவரது வாகனத்தை பின்தொடர தீர்மானித்துள்ளனா,அவர்கள் ரிசாத்தின் வாகனத்தை பின்தொடர்ந்த போதிலும் கொழும்பில் உள்ள அவரது வீட்டிற்கு அவரது வாகனம் வந்தவேளை முன்னாள் அமைச்சர் அந்த வாகனத்திலிருந்து இறங்கவில்லை என்ற தகவல் அவர்களுக்கு கிடைத்துள்ளது.

risad-courts3-300x200.jpg
இதன் காரணமாக சிஐடியினரின் முயற்சி வெற்றிபெறவில்லை.
இதன் பின்னர் சிஐடிக்கு பொறுப்பான பிரதிபொலிஸ்மா அதிபர் பிரசாத்ரணசிங்க ரிசாத்தினை கைதுசெய்வதற்காக ஆறு குழுக்களை ஈடுபடுத்தியுள்ளார்.
இவை அனைத்தும் சிஐடியின் இயக்குநரின் வழிகாட்டுதலின் கீழ் இடம்பெற்றுள்ளன.
முதல்மூன்றுநாட்களும் பல சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
ஒரு கட்டத்தில் ரிசாத்பதியுதீன் எங்கிருக்கின்றார் என்பதை சிஐடியினரால் கண்டுபிடிக்கவே முடியாத நிலை காணப்பட்டுள்ளது.
17ம் திகதி ரிசாத் பதியுதீனின் நெருங்கியசகாவொருவர் குறித்து சிஐடியினருக்கு தகவலொன்று கிடைத்துள்ளது.
அந்த நபரே ரிசாத் தொடர்பான சட்டவிடயங்களை கையாள்வதில் முக்கியமானவராக காணப்பட்டவர்.
அவரது தொலைபேசி உரையாடல்களை சிஐடியினர் ஆராய்ந்தவேளை சந்தேகத்திற்கு இடமான தொலைபேசி அழைப்புகள் அந்த நபரின் தொலைபேசிக்கு வந்துள்ளதை சிஐடியினர் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த தொலைபேசி இலக்கம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட சிஐடியினர் அது வெல்லம்பிட்டி வெனவத்தையில் வசிக்கும் ஒருவருடையது என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
அந்த நபரை 17ம் திகதி மாலை சிஐடியினர் கைதுசெய்துள்ளனர், அவர் முன்னாள் அமைச்சரின் நெருங்கிய சகா என்பதால் அவரை தொடர்ச்சியாக விசாரித்தவேளை சிஐடியினருக்கு முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளன.
அந்த தகவல்களை அடிப்படையாக வைத்து ரிசாத் பதியுதீன் மறைந்திருக்ககூடிய இடங்கள் சில சிஐடியினருக்கு தெரியவந்துள்ளன..
இந்த இடங்களில் சோதனையிடுமாறு சிஐடியினருக்கு தலைமை அதிகாரிகள் உத்தரவினை பிறப்பித்துள்ளனர்.

risad-courts1-300x200.jpg
ஞாயிற்றுக்கிழமை மாலையளவில் ரிசாத் மறைந்திருக்ககூடிய இடங்கள் என சில பகுதிகளை துல்லியமாக சிஐடியினரால் கண்டுபிடிக்க முடிந்துள்ளது, அந்த பகுதிகளில் அவர்கள் தங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ரிசாத்தின் நெருங்கிய சகாவொருவர் வழங்கிய தகவலை தொடர்ந்து ரிசாத் இறுதியாக கொழும்புகொகுவளையில் மறைந்திருந்ததை சிஐடியினர் அறிந்துள்ளனர்.
அதனைதொடர்ந்துஅவர்கள் களுபோவிலையை நோக்கி தங்கள் கவனத்தை செலுத்தியுள்ளனர்.
அந்த வீட்டிற்குள்நுழைந்த சிஐடியினர் முதலில் டியுசன் ஆசிரியரான வீட்டின் உரிமையாளரையும் மருத்துவரான அவரது மனைவியையும் தனிமைப்படுத்தியுள்ளனர்.
அதிகாரிகள் அவர்கள் இருவரையும் தனித்தனியாக விசாரணை செய்துகொண்டிருந்த அதேவேளை சிஐடியின் மற்றொருகுழுவினர் அந்த தொடர்மாடியை சோதனையிடும் நடவடிக்கையைஆரம்பித்துள்ளனர். அவ்வேளை சிசிடிவி கமராவில் தகவல்களை சேமிக்கும் டிஆர்வி முறை அகற்றப்பட்டதை கண்டுபிடித்துள்ளனர்.
சிஐடியினர் தொடர்ந்து விசாரணைகளைமேற்கொண்டவேளை பதிலளிக்க முடியாத நிலைக்கு வீட்டின் உரிமையாளரும் அவரது மனைவியும் தள்ளப்பட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் தப்பமுடியாது என்பதை உணர்ந்த அந்த வீட்டின் உரிமையாளர் உண்மையை தெரிவித்துள்ளார்.
ரிசாத் 13.14 15ம் திகதிகளில் எங்களுடன் இருந்தார், எங்கள் வீட்டிற்கு வந்தவுடன் சிசிடிவி கமராவை செயல் இழக்கச்செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார் என வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் ஆபத்துவந்தால் தான் தப்பிப்பதற்கான அந்த வீட்டின் உரிமையார் ரிசாத் தனது வீட்டிற்கு வந்தததை அருகில் உள்ள வீட்டின் சிசிடிவிகள் பதிவு செய்ததை அகற்றாமல் வைத்திருப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.
ரிசாத்பதியுதீன் தங்களுடன் மூன்று நாட்கள் இருந்தார் பின்னர் அவர் அட்டாளச்சேனை சென்றுவிட்டார். அக்கறைப்பற்றை சேர்ந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் ஒருவரே ரிசாத்தினை அழைத்து சென்றுள்ளார் எனவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
அந்த நபருக்கு தெகிவளையில் ஆடம்பர தொடர்மாடியொன்று உள்ளது அவர் ரிசாத்திற்கு மிகவும் நெருக்கமானவர் என வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சிஐடியினர் அந்த தொடர்மாடியில் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
அந்த வேளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தும் நபரின் மூன்று பெண்பிள்ளைகள் அந்த வீட்டில் காணப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டவேளை தங்கள்தந்தை அட்டாளைச்சேனைக்கு சென்றுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து உடனடியாக அட்டாளச்சேனைக்கு சிஐடியினர் குழுவொன்று விரைந்துள்ளது.
அவர்கள் அட்டாளச்சேனையில் உள்ளஅந்த வீட்டை சுற்றிவளைத்துள்ளதுடன் ரிசாத்தின் நண்பரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். முதலில் உண்மைகளை வெளிப்படுத்த தயங்கிய அவர் பின்னர் ரிசாத் எங்கிருக்கின்றார் என்பதை தெரிவித்துள்ளார்.
ரிசாத் தெகிவளை எபனேசர் பிளேசில் உள்ள வீடொன்றில் தங்கியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ரிசாத்தினை கைதுசெய்வதற்கான இறுதி நடவடிக்கைகளை சிஐடியின் தலைமை அதிகாரிகள் உட்பட அனைவரும் ஆரம்பித்துள்ளனர்.
ஹக்கீம் என்ற நபரின் இல்லத்தில் ரிசாத் பதியுதீன் மறைந்திருக்கின்றார் என்ற தகவல் சிஐடியினருக்கு கிடைத்துள்ளது. திங்கட்கிழமை அதிகாலை மூன்று மணிக்கு எபனேசர் பிளேசில் உள்ள வீட்டிற்கு சிஐடியினர் சென்றுள்ளனர்.

cid.jpg

அவர்கள் சிறிது நேரத்திலேயே ஹக்கீமின் வீட்டை கண்டுபிடித்துள்ளனர், 3.15அளவில் சிஐடியினர் அந்த வீட்டின் கதவை தட்டியுள்ளனர்.
ஆனால் உள்ளே எவரும் இருப்பதற்கான அறிகுறிகள் முதலில் தென்படவில்லை என தெரிவித்துள்ள சிஐடியினர் 20 நிமிடங்களுக்கு பின்னர் எவரும் கதவை திறக்கப்போவதில்லை என்பதை உணர்ந்த பின்னர் கதவை உடைத்து உள்ளே வரப்போகின்றோம் என அறிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து 3.35 அளவில் ரிசாத்பதியுதீனின் தனிப்பட்ட உதவியாளர் தமீஜ் கதவை திறந்துள்ளார், அவ்வேளை உள்ளே அறையிலிருந்த ரிசாத்தும் வெளியே வந்துள்ளார்.
நீங்கள் என்னை தேடுகின்றீர்கள் என்பது எனக்கு தெரியும் ஆனால் நீங்கள் என்னைஇப்படி கண்டுபிடிப்பீர்கள் என நினைக்கவில்லை என ரிசாத் தெரிவித்துள்ளார்

https://thinakkural.lk/article/81359

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாத்தை கைதுசெய்தமை மகிழ்ச்சி - ஞானசார

(இராஜதுரை ஹஷான்)

இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து அரசாங்கம் பொறுப்பற்ற விதமாக செயற்படுகிறது எனத் தெரிவித்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், கடந்த அரசாங்கம் செய்த தவறுகளை  பின்பற்றுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். 

பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுத்தீன் கைது செய்யப்பட்டுள்ளமை மகிழ்வுக்குரியது. அரசியல்  காரணிகளை விடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

இஸ்லாமிய அடிப்படை வாதம் தொடர்பில் கடந்த அரசாங்கம் செயற்பட்ட வித்த்தை போன்றே தற்போதைய அரசாங்கம் செயற்படுகிறது. இஸ்லாமிய அடிப்படை வாதம் குறித்து அதிக அவதானம் செலுத்த வேண்டும். இல்லாவிடின் நாட்டில் மீண்டும் இஸ்லாமிய அடிப்படைவாதம் தலைதூக்கி ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவத்தை போன்று பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

பயங்கரவாதி சாஹ்ரான் தொடர்பில் நல்லிணக்கத்தை விரும்பும் பாரம்பரிய முஸ்லிம்கள் ஞாயிறு ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கியுள்ளார்கள்.

அநுராதபுரம் கலாவெவ பிரதேசத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதகளினால் பாரம்பரிய முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பில் இப்பிரதேச பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடளித்தும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அவர்கள் பொதுபல சேனா அமைப்புக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்கள்.

காத்தான்குடி பிரதேசத்திலும் இவ்வாறான சம்பவங்களே ஆரம்பத்தில் காணப்பட்டது.ஆகவே இவ்விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/92573

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.