Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களுக்கு, இரா.சம்பந்தன் முக்கிய அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஜனாதிபதி தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளது  கூட்டமைப்பு! | நமது ஈழ நாடு

தமிழ் மக்களுக்கு, இரா.சம்பந்தன் முக்கிய அறிவிப்பு

கொரோனாவிலிருந்து விடுபட வீடுகளிலிருந்தே தீபாவளியை கொண்டாடுங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “இந்துக்களது பாரம்பரியப் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளிப் பண்டிகையானது இம்மாதம் 14ஆம் திகதி உலக வாழ் இந்துக்களால் கொண்டாடப்படவுள்ளது.

தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள கொரோனா திடீர்ப் பரவல் காலப்பகுதியில் வரும் இந்தப் பண்டிகை நாளில், நாம் கூட்டுப்பொறுப்புடன் நடந்துகொள்வது எமது அனைவரது நல்வாழ்விற்கும் அவசியமாகும்.

எனவே, எமது வீடுகளில் உள்ள மூத்தோர், கர்ப்பிணிகள் மற்றும் நாட்பட்ட நோய்களுடன் வாழும் உறவுகள் ஆகியோரைக் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காகவும் எம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதற்காகவும் இந்தப் பண்டிகை தினத்தினை அவரவர் வீடுகளில் இருந்து மிகவும் அமைதியாகக் கொண்டாடுமாறு எமது மக்களிடம் நாம் உரிமையோடு வேண்டிக்கொள்கிறோம்.

அயலவர்கள் மற்றும் உறவினர் வீடுகளுக்குச் செல்வதையும், புத்தாடைகள் மற்றும் அணிகலன்கள் வாங்கச் செல்வதையும் ஆலயங்களுக்குச் செல்வதையும் இவ்வருடம் தவிர்த்து, வீட்டிலிருந்தவாறே பிரார்த்தனைகளில் ஈடுபடுவதன் மூலம் எம்மை எதிர்நோக்கியுள்ள சுகாதாரச் சவாலினை முறியடிப்போம்” என அவர் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/தமிழ்-மக்களுக்கு-இரா-சம்/

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தீபாவளியும் கடக்க போகுது - எப்ப தீர்வு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கு இரா.சம்பந்தன் முக்கிய அறிவிப்பு

    by : Yuganthini

http://athavannews.com/wp-content/uploads/2020/08/R.Sampanthan.jpg

கொரோனாவிலிருந்து விடுபட வீடுகளிலிருந்தே தீபாவளியை கொண்டாடுங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “இந்துக்களது பாரம்பரியப் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளிப் பண்டிகையானது இம்மாதம் 14ஆம் திகதி உலக வாழ் இந்துக்களால் கொண்டாடப்படவுள்ளது.

தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள கொரோனா திடீர்ப் பரவல் காலப்பகுதியில் வரும் இந்தப் பண்டிகை நாளில், நாம் கூட்டுப்பொறுப்புடன் நடந்துகொள்வது எமது அனைவரது நல்வாழ்விற்கும் அவசியமாகும்.

எனவே, எமது வீடுகளில் உள்ள மூத்தோர், கர்ப்பிணிகள் மற்றும் நாட்பட்ட நோய்களுடன் வாழும் உறவுகள் ஆகியோரைக் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காகவும் எம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதற்காகவும் இந்தப் பண்டிகை தினத்தினை அவரவர் வீடுகளில் இருந்து மிகவும் அமைதியாகக் கொண்டாடுமாறு எமது மக்களிடம் நாம் உரிமையோடு வேண்டிக்கொள்கிறோம்.

அயலவர்கள் மற்றும் உறவினர் வீடுகளுக்குச் செல்வதையும், புத்தாடைகள் மற்றும் அணிகலன்கள் வாங்கச் செல்வதையும் ஆலயங்களுக்குச் செல்வதையும் இவ்வருடம் தவிர்த்து, வீட்டிலிருந்தவாறே பிரார்த்தனைகளில் ஈடுபடுவதன் மூலம் எம்மை எதிர்நோக்கியுள்ள சுகாதாரச் சவாலினை முறியடிப்போம்” என அவர் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/தமிழ்-மக்களுக்கு-இரா-சம்/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

யாழில் ஜனாதிபதி தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளது  கூட்டமைப்பு! | நமது ஈழ நாடு

தமிழ் மக்களுக்கு, இரா.சம்பந்தன் முக்கிய அறிவிப்பு

கொரோனாவிலிருந்து விடுபட வீடுகளிலிருந்தே தீபாவளியை கொண்டாடுங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “இந்துக்களது பாரம்பரியப் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளிப் பண்டிகையானது இம்மாதம் 14ஆம் திகதி உலக வாழ் இந்துக்களால் கொண்டாடப்படவுள்ளது.

தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள கொரோனா திடீர்ப் பரவல் காலப்பகுதியில் வரும் இந்தப் பண்டிகை நாளில், நாம் கூட்டுப்பொறுப்புடன் நடந்துகொள்வது எமது அனைவரது நல்வாழ்விற்கும் அவசியமாகும்.

எனவே, எமது வீடுகளில் உள்ள மூத்தோர், கர்ப்பிணிகள் மற்றும் நாட்பட்ட நோய்களுடன் வாழும் உறவுகள் ஆகியோரைக் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காகவும் எம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதற்காகவும் இந்தப் பண்டிகை தினத்தினை அவரவர் வீடுகளில் இருந்து மிகவும் அமைதியாகக் கொண்டாடுமாறு எமது மக்களிடம் நாம் உரிமையோடு வேண்டிக்கொள்கிறோம்.

அயலவர்கள் மற்றும் உறவினர் வீடுகளுக்குச் செல்வதையும், புத்தாடைகள் மற்றும் அணிகலன்கள் வாங்கச் செல்வதையும் ஆலயங்களுக்குச் செல்வதையும் இவ்வருடம் தவிர்த்து, வீட்டிலிருந்தவாறே பிரார்த்தனைகளில் ஈடுபடுவதன் மூலம் எம்மை எதிர்நோக்கியுள்ள சுகாதாரச் சவாலினை முறியடிப்போம்” என அவர் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/தமிழ்-மக்களுக்கு-இரா-சம்/

தலைவர் சொல்லீட்டார். இதோடை கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்திடும்...😎

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

இந்த தீபாவளியும் கடக்க போகுது - எப்ப தீர்வு

இந்த முறை வந்திருக்கும் கொரான குழப்பிப்போட்டுது.

11 hours ago, உடையார் said:

இந்த தீபாவளியும் கடக்க போகுது - எப்ப தீர்வு

எங்களை முந்திவிட்டீர்கள் உடையார் 😀

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மக்கள் கூட்டத்தின் தலைவன் எனும் ஸ்த்தானத்திற்கு சம்பந்தன் தகுதியுடையவரா? அப்படியில்லையென்றால் அம்மக்கள் தொடர்பாகப் பேச அல்லது கருத்து வெளியிடும் தகைமையை இவர் எங்கிருந்து பெறுகிறார்?

6 hours ago, ரஞ்சித் said:

ஒரு மக்கள் கூட்டத்தின் தலைவன் எனும் ஸ்த்தானத்திற்கு சம்பந்தன் தகுதியுடையவரா? அப்படியில்லையென்றால் அம்மக்கள் தொடர்பாகப் பேச அல்லது கருத்து வெளியிடும் தகைமையை இவர் எங்கிருந்து பெறுகிறார்?

தகுதி இருக்குதோ இல்லையோ அவர் தலைவர்தான். வெளிநாட்டு தூதுவர்கள் அவரைத்தான் இன்னும் தமிழ் தலைவராக பார்க்கிறார்கள். சரியோ பிழையோ இப்போதைக்கு அவர்தான் தலைவர்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Robinson cruso said:

தகுதி இருக்குதோ இல்லையோ அவர் தலைவர்தான். வெளிநாட்டு தூதுவர்கள் அவரைத்தான் இன்னும் தமிழ் தலைவராக பார்க்கிறார்கள். சரியோ பிழையோ இப்போதைக்கு அவர்தான் தலைவர்.

உங்க ஆள் பத்துவருடமாய் தூதுவர்களை சந்திக்கிறார் ஏதவது தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைத்ததா ?

அப்ப  என்ன கதைக்கிறார் இவ்வளவு நாளும் ?   சந்திக்கப்போகும் தூதுவர்களிடம் அவரவர் நாட்டில்  கொழும்பில் இலங்கை அரசு கொடுத்தது போல் இலவசமாக  மாளிகை வீடு கேக்கிறார் ஆக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பெருமாள் said:

உங்க ஆள் பத்துவருடமாய் தூதுவர்களை சந்திக்கிறார் ஏதவது தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைத்ததா ?

அப்ப  என்ன கதைக்கிறார் இவ்வளவு நாளும் ?   சந்திக்கப்போகும் தூதுவர்களிடம் அவரவர் நாட்டில்  கொழும்பில் இலங்கை அரசு கொடுத்தது போல் இலவசமாக  மாளிகை வீடு கேக்கிறார் ஆக்கும் .

கேட்டது தானே கிடைக்கும்

கிடைச்சிருப்பதை  பார்த்தால் ??

  • கருத்துக்கள உறவுகள்
On 6/11/2020 at 11:33, உடையார் said:

இந்த தீபாவளியும் கடக்க போகுது - எப்ப தீர்வு

நீங்க இன்னும்  அங்கேயே  நிற்பது அவர்  தவறல்ல

அவர்  எங்க  நிற்கிறார்??

தாயக  தமிழரின்  வாழ்வு நிலையும்  அவரது  வாழ்வு நிலையும் ஒன்றா??

ஏன்  நான்  அல்லது  உங்கள்  போன்றவர்கள்  தாயக  தமிழருக்கு செய்யும்  உதவிகளில்  ஒரு சிறு துளியையாவது அவர் அவரது மாத வருமானத்திலிருந்து செய்து வருகிறாரா???

தமிழ்  மக்களுடைய  தலைவராக

தமிழ்  மக்களுடைய அபிலாசைகள் சார்ந்து

தமிழ்  மக்களுக்கு சொன்னது போல அரசுக்கோ

சர்வதேசத்துக்கோ என்றாவது  அவர்  இவ்வாறு  தவணை  சொன்னதை  நீங்கள்  பார்த்ததுண்டா???

உங்களுக்கு (தமிழருக்கு) அவரை  விட்டால்  வேறு கதியில்லை  என்பது  இதில் சாணக்கியமானவருக்கு நன்கு தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20201107-204827.jpg இப்படி எல்லாம் நடக்கும் என்டு தெரிஞ்சுதான் காலண்டர கிழித்து போட்டன் ..👍

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தீபாவளியும் கடக்க போகுது - எப்ப தீர்வு

அதுதான் அவர் தீபாவளியை பின் போடச் சொல்லுறார்....அல்லது மறந்த்திடுங்கோ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, Robinson cruso said:

தகுதி இருக்குதோ இல்லையோ அவர் தலைவர்தான். வெளிநாட்டு தூதுவர்கள் அவரைத்தான் இன்னும் தமிழ் தலைவராக பார்க்கிறார்கள். சரியோ பிழையோ இப்போதைக்கு அவர்தான் தலைவர்.

இந்த நிலை மாறவேண்டும்...அரச ஊது குழலாக இருப்பவர்கள் எப்படி தமிழர் பிரச்சனைகளை வெளிநாட்டு விளங்கப்படுத்துவார்கள்?
அரசியல் மாற்றம் வேண்டும். அது சிங்களத்திடம் இல்லை. எம் மக்களின் கைகளில் மட்டுமே உள்ளது. தமிழினத்திற்குரிய தலைவர்களை இனம் கண்டு தெரிவு செய்வது அவர்களின் கடமை.

மக்டோனால்ஸ்சும் விஸ்கியுடன் சைட்டிஸ்சும் இன பிரச்சனை தீர்வல்ல.

13 hours ago, விசுகு said:

சர்வதேசத்துக்கோ என்றாவது  அவர்  இவ்வாறு  தவணை  சொன்னதை  நீங்கள்  பார்த்ததுண்டா???

விசுகு ஒரு உதாரணம் - தவணை அடிப்படையில் (30, 60, 90, 120 நாள், 6 மாதம்....) எமது மக்களின் தேவைகளை அடைய திட்டம் போட்டு அதன் அடிப்படையில் பொதுவேட்ப்பாளர் தொடர்பான பேச்சுவார்த்தை செய்யும் அணுகுமுறையை (2014ல்) தட்டிக்கழித்தது மட்டுமல்லாமல் புலன் பெயர் ஹீரோ வழிபாட்டாளர்களின் மிகுந்த பாராட்டையும் பெற்று இலங்கையின் காந்தி என்றும் அதே தரப்புகளால் வருணிக்கபட்ட அரசியவாதி இவர். 

தலைவர் பிரபாகரன் அரசியல், பிராந்திய, சர்வேதேச விவகாரங்களில் போதியளவு ஆலோசனகளை  உள்வாங்கவில்லை என்றும் புலம் பெயர் தமிழர் அவரின் ஹீரோ வழிபாட்டாளர்கள் என்றும் சொன்ன அதே தரப்புகள் 2009கு பின்னர் எமது அரசியல், பிராந்திய, சர்வேதேச விவகாரங்களில் ஆலோசனைகளை புறம்தள்ளியது மட்டுமல்லாமல் ஆலோசனை வழங்கியவர்களை எள்ளிநகையாடி தங்களின் அணுகுமுறையின் பிரதிபலன்களை சுயபரிசொந்தனை செய்ய மறுத்தார்கள். விளைவுகள் விபரீதமாக முன்னர் அணுகுமுறையை  (course correction) சரிசெய்ய மாட்டோம் என்ற ஆணவ கோளாறு (ego maniacs) தமிழரில் மிகுந்து இருப்பதனால் இன்று நாங்களே அதன் பின்விளைவுகளை அறுவடை செய்கிறோம். இன்று டிரம்ப்பை பார்த்து  சிரிப்போர் இதை குறித்துக்கொள்ளவும்.

இன்று எங்கள் நிலைக்கு இந்த புலன் பெயர் கூட்டங்கள் பெரும் பங்கு வகித்தன என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். இதை நான் சம்பந்தரை குற்றங்களில் இருந்து விடுவிக்க சொல்லவில்லை. மாறாக நாங்கள் முன்னோக்கி போவதானால் இன்றைய விளைவுகளுக்கு காரணமாகவுள்ள எமது அரசியல் கலாச்சாரம் மற்றும் தனிமனித குறைபாடுகளை நாங்கள் கண்டறிந்து அவற்றை தவிர்க்க வேண்டும் என்ற அவாவினால் மட்டும் சொல்கிறேன். 

நான் பலவருடங்கள் இந்த தரப்புகள் கூத்துக்களை அனுபவித்து 2018ல் தனிவாழ்ககைக்கு திரும்பியவன் என்ற முறையில் இதை பதிவுசெய்கிறன். எம் பின்னால் வரும் செயல்வீரர்கள் இந்த தவறுகளை நேர்த்திசெய்வார்  என்ற நம்பிக்கையில். 

Edited by puthalvan

3 hours ago, குமாரசாமி said:

இந்த நிலை மாறவேண்டும்...அரச ஊது குழலாக இருப்பவர்கள் எப்படி தமிழர் பிரச்சனைகளை வெளிநாட்டு விளங்கப்படுத்துவார்கள்?
அரசியல் மாற்றம் வேண்டும். அது சிங்களத்திடம் இல்லை. எம் மக்களின் கைகளில் மட்டுமே உள்ளது. தமிழினத்திற்குரிய தலைவர்களை இனம் கண்டு தெரிவு செய்வது அவர்களின் கடமை.

மக்டோனால்ஸ்சும் விஸ்கியுடன் சைட்டிஸ்சும் இன பிரச்சனை தீர்வல்ல.

அதட்குத்தான் மாற்று தலைமைகள் வந்திருக்கின்றனவே. எப்படியோ அவர்களை தமிழ்  தலைவர்களாக வெளிநாடுகளுக்கு அடையாளம் காண எதனை வருடம் செல்லும் என்று சொல்வதட்கில்லை.

அதே நேரத்தில் ஒன்றை கவனிக்க வேண்டும். மாற்றுதலைமைகள் ஒரு பக்கம் வந்திருக்கும் அதே நேரத்தில் மற்றைய தலைமைகளும் முன்னேற்றம் கண்டிருப்பதை மறுக்க முடியாது.

இனி மக்கள் அந்தப்பக்கம் போகும் சந்தர்ப்பம் அதிகமாகவே காணப்படுகின்றது. அப்படி வந்தால் தமிழ் தலைமைகள் வெளிநாடுகளுடன் பேச வேண்டிய சந்தர்ப்பம் இருக்காது.

15 hours ago, பெருமாள் said:

உங்க ஆள் பத்துவருடமாய் தூதுவர்களை சந்திக்கிறார் ஏதவது தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைத்ததா ?

அப்ப  என்ன கதைக்கிறார் இவ்வளவு நாளும் ?   சந்திக்கப்போகும் தூதுவர்களிடம் அவரவர் நாட்டில்  கொழும்பில் இலங்கை அரசு கொடுத்தது போல் இலவசமாக  மாளிகை வீடு கேக்கிறார் ஆக்கும் .

இனி வெளி நாட்டு தூதுவர்களுடன் பேச வேண்டிய அவசியம் வருவதட்கான சந்தர்ப்பம் குறைவு. மக்கள் போகும் பாதையை பார்க்கும் பொது அப்படிதான் தெரிகிறது. வடக்கு கிழக்கில் அவர்கள் செல்வாக்கு அதிகரிக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/11/2020 at 04:55, Robinson cruso said:

தகுதி இருக்குதோ இல்லையோ அவர் தலைவர்தான். வெளிநாட்டு தூதுவர்கள் அவரைத்தான் இன்னும் தமிழ் தலைவராக பார்க்கிறார்கள். சரியோ பிழையோ இப்போதைக்கு அவர்தான் தலைவர்.

8 hours ago, Robinson cruso said:

இனி வெளி நாட்டு தூதுவர்களுடன் பேச வேண்டிய அவசியம் வருவதட்கான சந்தர்ப்பம் குறைவு. மக்கள் போகும் பாதையை பார்க்கும் பொது அப்படிதான் தெரிகிறது. வடக்கு கிழக்கில் அவர்கள் செல்வாக்கு அதிகரிக்கின்றது.

8 hours ago, Robinson cruso said:

அதட்குத்தான் மாற்று தலைமைகள் வந்திருக்கின்றனவே. எப்படியோ அவர்களை தமிழ்  தலைவர்களாக வெளிநாடுகளுக்கு அடையாளம் காண எதனை வருடம் செல்லும் என்று சொல்வதட்கில்லை.

அதே நேரத்தில் ஒன்றை கவனிக்க வேண்டும். மாற்றுதலைமைகள் ஒரு பக்கம் வந்திருக்கும் அதே நேரத்தில் மற்றைய தலைமைகளும் முன்னேற்றம் கண்டிருப்பதை மறுக்க முடியாது.

இனி மக்கள் அந்தப்பக்கம் போகும் சந்தர்ப்பம் அதிகமாகவே காணப்படுகின்றது. அப்படி வந்தால் தமிழ் தலைமைகள் வெளிநாடுகளுடன் பேச வேண்டிய சந்தர்ப்பம் இருக்காது.

ஒரே திரியில் உங்கள் பெயரில் இரண்டு பேர் எழுதுகிறார்கள் போல் உள்ளது .

20 hours ago, பெருமாள் said:

ஒரே திரியில் உங்கள் பெயரில் இரண்டு பேர் எழுதுகிறார்கள் போல் உள்ளது .

அப்படி இல்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.