Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்ரேலியாவில்.. நாடு கடத்தப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ள, இலங்கை குடும்பம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கணவன் புற்றுநோயால் மரணம், தஞ்சக்கோரிக்கையும் நிராகரிப்பு! நாடுகடத்தலை  எதிர்கொண்டுள்ள இலங்கை குடும்பம்!!

நாடு கடத்தப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ள இலங்கை குடும்பம்- அவுஸ்ரேலியாவில் சம்பவம்

இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு குடியேறிய குடும்பமொன்றின் பிரதான விண்ணப்பதாரி உயிரிழந்தமையினால், அக்குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களும் நாடு கடத்தப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 6 வருடங்களுக்கு முன்னர், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Kempsey பகுதியில் தற்காலிக வேலை விசா ஒன்றின்கீழ் ராஜ் உடவத்த, அவரது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் குடியேறி இருந்தார்.

இந்நிலையில், ராஜ் உடவத்த கடந்த 2018ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்கான சிகிச்சைகளை பெற்று வந்தார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் மாதம் அவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் ராஜ் உடவத்த, வேலை விசாவிற்கான முக்கிய நிபந்தனையை பூர்த்திசெய்ய முடியாத நிலைக்கு உள்ளாகியமையினால், நாடு கடத்தப்பட்டு விடுவோமா என்ற அச்சத்தில், மாணவர் விசாவிலுள்ள மூத்த மகளைத் தவிர, ஏனையோர் தஞ்சக்கோரிக்கை விண்ணப்பத்தை தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் ராஜ் உடவத்தவும் உயிரிழந்தார். இவ்வாறு அவர் உயிரிழந்து 1 மாதத்தின் பின்னர் அவருடைய குடும்ப உறுப்பினர்களின் தஞ்சக்கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுவிட்டதாக குடிவரவு அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் குறித்த தீர்மானத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யலாம் அல்லது ஒருமாதத்திற்குள் நாட்டைவிட்டு வெளியேறலாம் என்றும் குடிவரவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் ராஜ் உடவத்தவின் மனைவி, “கல்வி கற்றுக்கொண்டிருக்கும் பிள்ளைகளுடன் கணவனையும் இழந்து நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

ஆகவே,  அவுஸ்ரேலிய அரசு, இவ்விடயத்தில் எங்களுக்கு கருணைகாட்ட வேண்டும்

மேலும், Kempsey தொடர்ந்து தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும்” என அவர்  கோரிக்கை விடுத்துள்ளார்.

http://athavannews.com/நாடு-கடத்தப்படும்-நிலைமை/

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை விட்டு சிங்களத்தால் தமிழர்கள்  அகதிகளாகின்றனர் என்றால் சிங்களவர்களும் ஓடுகின்றனரே ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

இலங்கையை விட்டு சிங்களத்தால் தமிழர்கள்  அகதிகளாகின்றனர் என்றால் சிங்களவர்களும் ஓடுகின்றனரே ?

🔦☘️ʋɨʝǟʏ ֆǟʀǟʋǟռǟ🙋‍♂️🔦 en Twitter: "நல்லா முட்டு கொடுக்கும் ரஜினி குஞ்சு  நண்பா... முடியல... Selfie புள்ள க்கு எதுவும் Explanation இருக்கா.?… "

சிங்களவர்களை... அகதிகள் என்றால், 
சிலர்... அதுக்கும், "முட்டுக் கொடுக்க" வந்து விடுவார்கள். :grin:

45 minutes ago, பெருமாள் said:

இலங்கையை விட்டு சிங்களத்தால் தமிழர்கள்  அகதிகளாகின்றனர் என்றால் சிங்களவர்களும் ஓடுகின்றனரே ?

... கடந்த 6 வருடங்களுக்கு முன்னர், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Kempsey பகுதியில் தற்காலிக வேலை விசா ஒன்றின்கீழ் ராஜ் உடவத்த, அவரது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் குடியேறி இருந்தார் ...
🙂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

... கடந்த 6 வருடங்களுக்கு முன்னர், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Kempsey பகுதியில் தற்காலிக வேலை விசா ஒன்றின்கீழ் ராஜ் உடவத்த, அவரது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் குடியேறி இருந்தார் ...
🙂

சிங்களவனே தன்னுடைய சொந்த நாட்டை வெறுத்து அகதியாய்  ஓடுமளவுக்கு  அங்குள்ள நிலைமை .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

... கடந்த 6 வருடங்களுக்கு முன்னர், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Kempsey பகுதியில் தற்காலிக வேலை விசா ஒன்றின்கீழ் ராஜ் உடவத்த, அவரது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் குடியேறி இருந்தார் ...
🙂

அவுஸ்திரேலியாவுக்கு... வேலை விசாவில் போய்,
அகதி விண்ணப்பம் கோரியவர்....
என்ன... பிரச்சினையை... சொல்லியிருப்பார், என்று அறிய ஆவலாக உள்ளது. 😎 

ரணில் / மைத்திரி  பிரச்சினையும்...  அந்த நேரம் ஆரம்பிக்கவில்லை. 🤔

அப்பிடி எண்டால்...  
தீபாவளிக்கு, பிரச்சினை தீரும்... என்று சம்பந்தன், சொன்னதை... 
நம்பி, பயந்து.... அகதி ஆகியிருப்பாரோ... 😜

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

பிரான்சிலே அநேக  சிங்களவர்கள் அகதி விண்ணப்பங்கள்  கோரியுள்ளனர்

அநேகமானவை J.V.P. ஆதரவாளர்கள்?????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, விசுகு said:

பிரான்சிலே அநேக  சிங்களவர்கள் அகதி விண்ணப்பங்கள்  கோரியுள்ளனர்

அநேகமானவை J.V.P. ஆதரவாளர்கள்?????

விசுகர்,  நான்... பிறக்கும் போது...  
ஜே.வி. பி. ரோகண விஜயசேகரா...பிரச்சி(நாய்)னை  ... இருந்தது. 

இப்பவும், அது... இருப்பது, ஆச்சரியமாக    உள்ளது, ஐயா. 
நான்.. சாக, முதல்... இந்த... ஜே.வி.க்கு  என்ன.. பிரச்சினை என்று மட்டும்...
அறிய ஆவல்.      

இல்லாட்டி... விமல், வீரசேகரவின் வாயில்... ஒரு, கும்மாங்  குத்து....
கொடுத்து,  விட்டுத்தான்...  போவேன். ஆமா...   

11 hours ago, இணையவன் said:

... கடந்த 6 வருடங்களுக்கு முன்னர், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Kempsey பகுதியில் தற்காலிக வேலை விசா ஒன்றின்கீழ் ராஜ் உடவத்த, அவரது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் குடியேறி இருந்தார் ...

தட்காலிக வேலை விசாவில் (class 457) வந்தவர். கணவர் இறந்த பின்னர் மனைவி தட்காலிக வேலை வேலை விசாவை ஒரு தொழில் அடிப்படையில் (skills in demand) போட்டிருக்க வேண்டும். இவர்கள் இருக்கும் இடத்தில விவசாய மற்றும் பல வேலைகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். அப்படியிருக்க இவர்களுக்கு ஆலோசனை வழங்கியவர்கள் பாதுகாப்பு விசா (protection visa) கேட்டுள்ளார். என்ன அடிப்படியில் என்பது மிக வினோதமானது. அது மட்டுமல்ல விசாவை நிராகரித்த திணைக்களம் இவர்களுக்கு கொழும்பில் வீடு இருப்பதையும் இவர்கள் அங்கு பாதிக்கப்படுவதாக ஒரு ஆதாரமும் இல்லை என்று கூறியுளார்கள். 

நான் ஒரு காலத்தில் நமது அகதிகள் விவகாரத்தை கையாளும் ஒரு சட்டத்தரணிக்கு (human rights attorney) ஆதாரங்களை திரட்டி வழங்குபவராக இருந்தவன். அந்த நாட்களில் இருந்து இன்று வரை தமிழர்களுக்காக நாடுகள் அகதி இடங்களை ஒதுக்கும்போது (annual refugee intake - country preferential allocations)  இலங்கை தூதரகமும் வெளிவிகாரஅமைச்சும் தமிழர்கள் ஐ.நாவின் 1951 ஆண்டு வரைவிலக்கணத்தை படி அகதிகள் இல்லை என்ன தொடர்ந்து வாதாடி வந்திருக்கின்றனர். இதில் நாங்கள் ஆதாரம் திரட்டியவர்கள் சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் மனித உரிமை காப்பகம் போன்றவற்றால் உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள்/சித்திரவதை  என்று மருத்துவ அறிக்கையும் தரப்பட்டவர்கள்.

இன்று செருப்பு மற்றைய காலில் அவர்கள் தங்களை அகதிகள் என்று காட்ட முனைகின்ற நிலைமை!. 

Edited by puthalvan

  • கருத்துக்கள உறவுகள்

தற்காலிக வேலை விசா ஒன்றின்கீழ் ராஜ் உடவத்த, அவரது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் குடியேறி இருந்தார்..
இன்னும் ஒரு வழி உள்ளது
மாணவர் விசா..

NSW ஒரு இடத்தில் சில தமிழ் தேசியம் பேசுபவர்களுக்கு அங்கே உள்ள சிங்கள மருத்துவர் தான் இராசியான மருத்துவராம் 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, விசுகு said:

பிரான்சிலே அநேக  சிங்களவர்கள் அகதி விண்ணப்பங்கள்  கோரியுள்ளனர்

அநேகமானவை J.V.P. ஆதரவாளர்கள்?????

ஜேர்மனியிலும் அதே நிலைதான்......

  • கருத்துக்கள உறவுகள்
On 13/11/2020 at 15:26, பெருமாள் said:

இலங்கையை விட்டு சிங்களத்தால் தமிழர்கள்  அகதிகளாகின்றனர் என்றால் சிங்களவர்களும் ஓடுகின்றனரே ?

தமிழர்களை விட சிங்களவர்கள் அதிகமானோர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்
On 13/11/2020 at 10:56, பெருமாள் said:

இலங்கையை விட்டு சிங்களத்தால் தமிழர்கள்  அகதிகளாகின்றனர் என்றால் சிங்களவர்களும் ஓடுகின்றனரே ?

On 13/11/2020 at 20:36, தமிழ் சிறி said:

விசுகர்,  நான்... பிறக்கும் போது...  
ஜே.வி. பி. ரோகண விஜயசேகரா...பிரச்சி(நாய்)னை  ... இருந்தது. 

இப்பவும், அது... இருப்பது, ஆச்சரியமாக    உள்ளது, ஐயா. 
நான்.. சாக, முதல்... இந்த... ஜே.வி.க்கு  என்ன.. பிரச்சினை என்று மட்டும்...
அறிய ஆவல்.      

இல்லாட்டி... விமல், வீரசேகரவின் வாயில்... ஒரு, கும்மாங்  குத்து....
கொடுத்து,  விட்டுத்தான்...  போவேன். ஆமா...   

அப்படி பாத்தால் யேர்மனியில் தான் 90 வீத தமிழர்கள் வாழந்திருக்க வேணும் அகதிகளாக.ஆனால் அங்கிருந்தும் முல்கேம் சாத்திரியிடம் சாத்திரம் கேட்டு கனடா போய் இருக்க மாட்டார்கள்.இலங்கையை விட்டு வெளியில் வந்தபின் அடுத்த இலக்கு நிரந்தர வதிவிடமும் நல்ல வருமானம் தரும் வேலையும் தான்.இதில் நானும் விதி விலக்கல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.