Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கருணாவின் கட்டுப்பாட்டில் றமெஷ் இருக்க, அவரை வைத்து போலியான பத்திரிக்கையாளர் மாநாட்டினை நடத்திய புலிகள்

ஆங்கில மூலம் : வோல்ட்டர் ஜெயவர்தின

காலம் : கொழும்பில் கருணாவினால் கைவிடப்பட்ட நிலையில் கருணாவின் பெண்போராளிகள் சிலர் மீண்டும் புலிகளுடன் வந்து இணைந்துகொண்ட காலப்பகுதி

தம்மால் விலத்தப்பட்ட கருணாவுக்கு இலங்கை ராணுவம் அடைக்கலம் கொடுத்துவருவதாகவும், கருணாவைக்கொண்டு தம்மீது நாசகாரத் தாக்குதல்களை இலங்கை ராணுவம் தொடுத்துவருவதாகவும் புலிகள் மீண்டும் இலங்கை அரசாங்கத்தினை கடுமையாகச் சாடியிருக்கின்றனர்.

புலிகளால் நடத்தப்படும் இணையத்தளமான தமிழ்நெட்டில் வந்துள்ள செய்தியின்படி தேனகம் கொக்கட்டிச்சோலையில் நடந்த பத்திரிக்கையாளர் மாநாட்டில் அம்பாறை - மட்டக்களப்புச் சிறபுத்தளபதி கேணல் ரமேஷ் கருணா குழுவினரை தமக்கெதிரான நாசகாரத் தாக்குதல் நடவடிக்களுக்கு ராணுவம் பாவித்துவருவதாகக் குற்றஞ்சாட்டியதோடு இந்த நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில் புலிகள் அதற்கான தக்க பதிலடியினை வழங்கவேண்டி வரும் என்று எச்சரித்துள்ளதாக செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஆனால், புலிகளின் இந்தச் செய்திக்கு மாறாக , கிழக்கிலிருந்து வரும் நம்பகரமான தகவல்களின்படி இந்தச் செய்தியானது தமிழ் மக்களைக்  குழப்பும் நோக்கத்துடன் புலிகளால் வேண்டுமென்றே விடப்பட்ட செய்தியென்றும், கருணாவின் படைகளால் ரமேஷ் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் இருப்பதாகவும், அவரால் பத்திரிக்கையாளர் மாநாடு ஒன்றினை நடத்துவதற்கான சந்தர்ப்பமே இல்லையென்றும் தெரியவருகிறது.

வழமையாக  நடக்கும் நிகழ்வுகளின் ஒளிப்படத்தை தனது செய்திக்குறிப்புடன் வெளியிடும் தமிழ்நெட் இணையத்தளம் ரமேஷ் தொடர்பான இந்தப் பத்திரிக்கையாளர் மாநாட்டுச் செய்திக்குறிப்புடன் ரமேஷின் கடந்த கால ஒளிப்படம் ஒன்றினை மட்டுமே இணைத்திருந்தது.

இது இவ்வாறிருக்க, கருணாவுக்கும் தமக்கும் இடையே எந்தவிதமான தொடர்புகளும் இல்லையென்று மறுத்திருக்கும் இலங்கை ராணுவம், கருணாவுக்கும் வன்னிப் புலிகளுக்கும் இடையே நடப்பது அவர்களது உள்வீட்டு விவகாரம் என்று தனது பாராளுமன்றப்  பேச்சாளர் மங்கள சமரவீரவை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருக்கிறது.

இதேவேளை, பொதுவான எதிரணியில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் புலிகளின் பினாமியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் சேர்ந்து செயற்பட்டு வரும் ஜாதிக ஹெல உறுமயக் கட்சி கருணாவுக்கு ஆதரவாக அரசாங்கம் இதுவரை செயற்படாதது குறித்து கடுமையான கண்டனங்களை பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளது. 

புலிகளால் போலியாக நடத்தப்பட்டதாகக்கூறப்படும் இந்த பத்திரிக்கையாளர் மாநாட்டில் கருணாவுக்கு ராணுவம் பாதுகாப்பினையும், ஆயுதங்களையும் வழங்கிவருவதற்கான உறுதியான ன சாட்சியங்கள் தம்மிடம் இருப்பதாகக் கூறினார்.  புலிகளின் இணையத்தளமான தமிழ்நெட்டின் செய்தியின்படி கருணாவினால் கொழும்பில் கைவிடப்பட்ட நான்கு பெண்போராளிகளின் தகவல்களின்படியே தமக்கு இந்த ஆதாரங்கள் கிடைத்ததாகக் கூறியிருந்தாலும்கூட அவை எவையென்பதை ரமேஷ் கூறியிருக்கவில்லை. தம்மிடம் சரணடைந்தவர்கள் என்று புலிகளால் கூறப்பட்ட நான்கு பெண்போராளிகளின் பெயர் விபரங்களைக் கூற புலிகள் மறுத்துவிட்ட நிலையில், இவர்கள் உன்மையிலேயே கருணாவின் தோழிகளா அல்லது சாதாரண பெண்களா என்று பத்திரிக்கையாளர்களால் இதுவரையில் உறுதிசெய்யப்படமுடியாது போய்விட்டது.

தமிழ்நெட்டின்படி, தமக்கும் கருணாவுக்குமிடையிலான முறுகல் நிலைபற்றி சில சர்வதேச செய்திச்சேவைகள் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு வருவதாக ரமேஷ் கூறியதாக  இந்தப் போலியான மாநாட்டுச் செய்தியை தமிழ்நெட் வெளியிட்டிருக்கிறது.

மேலும், இந்த மாநாட்டில் பேசிய ரமேஷ் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புலிகளின் அரசியல்த்துறைப் போராளிகள் மேல் நடத்தப்பட்டுவரும் படுகொலைகளை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை தமது இயக்கம் ஆரம்பித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதுவே முதல்தடவையாக புலிகள் தமது போராளிகள் கருணாவிணால் கொல்லப்படுவதாக கூறும் சம்பவம் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால், ஆயுதம் தரித்த புலிகளின் போராளிகள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நடமாட அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், தமது போராளிகள் மீதான தாக்குதல்களை புலிகள் எவ்வாறு தடுத்து நிறுத்தமுடியும் என்பது கேள்விக்குறிதான்.

மேலும், தமிழ்னெட்டின் இன்னொரு செய்திக்குறிப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளர் ஜி எல் பீரிஸை மேர்கோள் காட்டி "புலிகள் அரசு மேற்கொண்டுவரும் தந்திரோபாய செயற்பாடுகளால், சமாதானப் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையினை இழந்துவருவதாகவும்"  குறிப்பிட்டிருக்கிறது.

முற்றும்

http://www.lankaweb.com/news/items04/200604-7.html


 

  • Like 1
  • Thanks 2
  • Replies 587
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

ஒரு துரோகத்தின் நாட்காட்டி  தமிழினம் தனது சரித்திரத்தில் பல தியாகிகளை, வரலாற்று நாயகர்களை, வீர மறவர்களைக் கண்டிருக்கிறது. ராஜ ராஜ சோழன் முதல் பாண்டியர்கள், வன்னியர்கள் என்று பல தமிழ் எழுச்சி வரலா

ரஞ்சித்

இதனைப் படிக்கும் அனைவருக்கும் வணக்கம், நான் எழுதுவதை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. இதனை ஒரு ஆவனமாக பதிய வேண்டும் என்பதற்காகவே எழுதிவருகிறேன். கருணாவின் துரோகம் பற்றிய ச

ரஞ்சித்

கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதல் நடந்த காலத்தை முன்வைத்துத்தான் இந்த செய்தி நான் குறிப்பிட்ட இணையத்தில் வெளியாகியிருந்தது. இதற்கு முன்னர் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சிவிலியன்கள் மீதான தாக்குதல்கள் பற்ற

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

னக்கோ அல்லது எனது போராளிகளுக்கோ பிரபாகரன் கேடு விளைவிக்க நினைத்தால் நாம் நிச்சயமாகத் திருப்பித் தாக்குவோம், நாம் எதற்கும் அஞ்சப்போவதில்லை - கருணா அம்மான், கருணாவின் பின்னால் நிற்கும் இந்தியா - அரசியல் அவதானிகள் !

ஆக்கம் : வோல்ட்டர் ஜயவர்டென

காலம் : கருணா புலிகளால் விலக்கப்பட்டு ராணுவத்துடன்  சேர்ந்து இயங்கிக்கொண்டிருந்த காலம்

இலங்கையின் பயங்கரவாத இயக்கமான புலிகளுக்குள் ஏற்பட்ட மிகப்பெரிய பிளவினை முதன் முதலில் வெளியுலகிற்குக் கொண்டுவந்த செய்தியாளர் சிமாலீ சேனநாயக்க கிழக்கு மாகாணத்தின் புலிகள் பிரிவின் தலைவர் கேணல் கருணாவை அண்மையில் சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போதே தன் மீதோ அல்லது தனது வீரர்கள் மீதோ பிரபாகரன் தாக்குதல் நடத்த முயற்சித்தால் தாம் நிச்சயம் திருப்பித் தாக்குவோம், நாம் அவருக்கு அஞ்சவில்லை என்று கருணா கூறினார்.

அண்மையில் லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் வானொலிச் சேவை ஒன்றிற்கு பேட்டியளித்த ஷிமாலீ புலிகள் மீது திருப்பித் தாக்கும் முடிவுடன் கருணா இருப்பதாக தெரிவித்தார்.

பிரபாகரனின் நடவடிக்கைகளுக்கு நிச்சயம் எதிர் நடவடிக்கைகளை எடுப்பேன் என்று கருணா கூறுவதுவது, இலங்கையின் தமிழ்ப் பயங்கரவாதிகளின் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த நாட்களில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்களையும், பாரிய படுகொலைகளையும் எமக்கு நினைவுபடுத்துகிறது. குறிப்பாக புலிகள் இயக்கத்திற்கும், டெலோ இயக்கத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதல்களின்போது அவ்வியக்கத்தின் தலைவர் சிறி சபாரட்ணம் உட்பட பல தலைவர்கள் புலிகளிடம் சரணடைந்தபின்னர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.

கருணாவின் இந்த எச்சரிக்கையும் மிகவும் சிக்கலான நேரத்தில்த்தான் வந்திருக்கிறது. புலிகள் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் தமது பயங்கரவாத நடவடிக்கைகளை மறைத்து, ஜனநாயக அரசியலில் நாட்டம் கொண்டவர்களாக தம்மைக் காட்டுவதற்காக தமது பினாமிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைக் களமிறக்கி, தமிழ் மக்களுக்கான ஏக பிரதிநிதிகள் தாமே என்று காட்டுவதற்குப் பகீரதப் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கும்  நிலையில் கருணாவின் இந்த எச்சரிக்கை வந்திருக்கிறது.

பல தசாப்த்தங்களாக புலிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தையும் தவிடு பொடியாக்கும் வகையில் தற்போதைய பிளவு அமைந்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். புலிகளின் தலைமைக்கு எதிராகத் துரோகமிழைத்தார் என்கிற குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்டு பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் மரண தண்டனை வழங்கப்பட்ட புலிகளின் முன்னாள் பிரதித் தலைவர் மாத்தையாவின் பிளவினைக் காட்டிலும் மிகப் பாரியளவு தாக்கத்தினையும், அழிவையும் கருணாவின் விலகல் ஏற்படுத்தியிருக்கிறது என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். மாத்தையாவின் துரோகத்தின்போது அவர் வன்னியில் இருந்ததனால் அவரை புலிகளால் இலகுவில் தண்டிக்க முடிந்ததென்றும், ஆனால் கருணாவோ வன்னிக்கு வெளியில், தனது வீரர்களின் அதியுச்ச பாதுகாப்பில் இருப்பதால் பிரபாகரனினால் அவரை நெருங்கக் கூட முடியவில்லை என்றும் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

கருணாவை கிழக்கு மாகாணத்திற்குச் சென்று சந்தித்த முதல்ப் பத்திரிக்கையாளரான சிமாலீ சேனநாயக்கவை பி பி ஸி யின் சிங்களச் சேவை சந்தேஷய பேட்டி கண்டது. அப்பேட்டியில் ஷிமாலி பேசும்போது பிரபாகரன் தனது சொந்தத் தேவைக்காக கிழக்கு மாகாணப் போராளிகளைப் பலிகொடுத்து வருகிறார் என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார். கருணா மேலும் கூறும்போது கிழக்கிலிருந்து ஆயிரம் போராளிகளை வன்னிக்கு அனுப்பிவைக்குமாறு பிரபாகரன் தன்னிடம் கேட்டபோது தான் உடனேயே மறுத்துவிட்டதாகவும், வடமாகாணத்தில் நீங்கள் சகல சுகங்களையும் அனுபவித்துக்கொண்டு பாதுகாப்பாக வாழ்வதற்கு கிழக்கு மாகாணப் போராளிகளைப் பலிகொடுக்க முடியாது என்று தான் கூறியதாகவும் கூறியிருக்கிறார். கருணா மேலும் பேசும்போது பிரபாகரனின் உயிரைக் காப்பதற்காக இதுவரையில் 2300 போராளிகள்  பலியிடப்பட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

Edited by ரஞ்சித்
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கருணா மேலும் ஷிமாலியிடம் பேசும்போது பிரபாகரனின் புலநாய்வுப் பொறுப்பாளர் தனக்குத் தெரியாமல் கிழக்கில் பல அரசியல்ப் படுகொலைகளை அரங்கேற்றி வந்ததாகவும், இதனால் இக்கொலைகள் தொடர்பாக சர்வதேசத்தில் இருந்து வந்த கேள்விகளுக்கும், நோர்வேஜியர்களின் தலைமையில் இயங்கிவந்த யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரின் கேள்விகளுக்கும் தானே பதில்சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறியிருக்கிறார். ஐக்கிய தேசிய முன்னணியின் மட்டக்களப்பு வேட்பாளரை மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைத்துப் புலிகள் கொன்றதையும், ஈ பி டி பி கட்சியின் உறுப்பினர் ஒருவரை வாழைச்சேனையில் வைத்து புலிகள் கொன்றதையும் இதற்கு உதாரணமாக  கருணா குறிப்பிட்டிருந்தார்.

மேலும் கருணா ஷிமாலியிடம் பேசும்போது, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின்மூலம் பொருளாதார உதவிகள் என்று வழங்கப்பட்ட எவையுமே கிழக்கு மாகாணத்திற்கு வழங்கப்படவில்லையென்று குற்றஞ்சாட்டினார். வெளிநாட்டுப் பணத்திலிருந்து அதி சொகுசு வாகனங்களை இறக்குமதிசெய்த புலிகளின் தலைவர்கள் வன்னியில் அவற்றில் பவனிவருவதாகவும், கிளிநொச்சியைச் சுற்றி பாரிய நகர அபிவிருத்தித் திட்டங்களை அவர்கள் மேற்கொண்டுவரும் அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தை முற்றாக அவர்கள் கைகழுவி விட்டார்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். நோர்வேயிடமிருந்தும் சுவீடனிடமிருந்தும் புலிகளுக்கு வழங்கப்பட்ட பெருமளவு நிதி ஒருபோதுமே மட்டக்களப்பை நோக்கி வரவில்லையென்றும்  அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக பிரபாகரனுக்குத் தான் அனுப்பிய பல கடிதங்களுக்கு அவர் பதில் அனுப்பவில்லையென்றும் அவர் கூறினார்.

புலிகளின் தலைமைக்காக பல கடுமையான போர்க்களங்களைத் தான் வென்று கொடுத்திருப்பதாகவும், அதனால் பிரபாகரனிடம் இருந்து வரும் எந்தச் சவாலையும் தன்னால் முறியடிக்க முடியும் என்றும் கருணா பெருமிதத்துடன் கூறினார். அதேவேளை தனக்கோ அல்லது தனது வீரர்களுக்கோ பிரபாகரனினால் ஆபத்து ஏற்படுமிடத்து அதற்கான பொறுப்பினை சர்வதேசமே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும், ஆனால் இதற்குப் பதிலடியாக புலிகள் மீது மிகக் கடுமையான தாக்குதல்களை தான் முன்னெடுக்கப்போவதாகவும் அவர் எச்சரித்தார். 

இது இவ்வாறிருக்க கொழும்பில் உள்ள சர்வதேச மற்றும் உள்ளூர் அரசியல் மற்றும் ராணுவ அவதானிகளின் கருத்துப்படி கருணாவின் பிளவின் பின்னால் இந்தியாவே இருப்பதாக தெரிகிறது. தமிழ்ப் பிரிவினைவாதிகளுடன் நெடுங்காலமாகத் தொடர்புகளைப் பேணிவந்த இந்தியா தற்போதைய புலிகளின் தலைமையுடனான தனது பகைமையினையடுத்தே இந்தப் பிளவில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

கருணாவிற்குப் பின்னால் இந்தியா நிற்பதும், புலிகளின் தலைமைப் பீடத்தின் ரகசியங்கள் பலவற்றை அவர் அறிந்தவர் என்கிற வகையிலும் பிரபாகரனுக்கும் கருணாவுக்கும் இடையிலான இந்தப் போர் மிக நீண்டதாகவும், பாரிய அழிவினைக் கொண்டுவருவதாகவும் இருக்கப்போகிறது என்றும் அந்த அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

முற்றும்.

 

http://www.lankaweb.com/news/items04/060304-1.html

Edited by ரஞ்சித்
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொப்பிகல (குடும்பிமலை) புலிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்த 10 நாள் அவகாசம் கேட்ட கருணா , தொப்பிகல  பிரதேசத்தை கருணாவின் உதவியில்லாமலேயே நாம் கைப்பற்றினோம் - இலங்கை ராணுவம்

மூலம் : வோல்ட்டர் ஜயவர்டின

இணையம் : லங்கா வெப் மற்றும் ஏசியன் ட்ரிபியூன்

காலம் : கருணா பிள்ளையான் துணைராணுவக் குழுக்களுக்கிடையே பிளவுகள் தோன்றியிருந்த காலம்

தொப்பிகல காட்டுப்பகுதியில் இன்னமும் எஞ்சியிருக்கும் புலிகளின் அணிகளை அப்புறப்படுத்தும் ராணுவ நடவடிக்கையின் முன்னோடி கொமாண்டோ நடவடிக்கைக்காக கருணாவை இன்னும் எதிர்பார்ப்பது பயனற்றது எனும் முடிவிற்கு இலங்கை ராணூவமும் விசேட அதிரடிப்படையும் வந்திருப்பதாகத் தெரியவருகிறது. 

ஏசியன் ட்ரிபியூன் செய்திகளின்படி கருணா தனது படைகளை ராணுவ அணிக்கு முன்னோடியாக தொப்பிகல பகுதிக்குள் அனுப்பி புலிகள் மீதான கொமாண்டோ பாணியிலான தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் மே மாதம் 4 ஆம் திகதி பிள்ளையானுக்கும் கருணாவுக்கும் இடையே ஏற்பட்ட பிளவினையடுத்து அத்திட்டம் பிற்போடப்பட்டிருக்கலாம் என்றும் அறியவருகிறது.


கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையே ஏற்பட்ட மோதலினையடுத்து சுமார் 850 கருணா விசுவாசிகள் பிள்ளையானுடன் போய்ச் சேர்ந்து திருகோணமலையில் நிலைகொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது. தற்போது கருணாவிடம் வெறும் 300 போராளிகளே  இருப்பதாகவும், இவர்களில் பெரும்பாலானவர்கள் அண்மைய நாட்களில் கருணாவால் வலுக்கட்டாயமாக துணைராணுவக்குழுவில் இணைத்துக்கொள்ளப்பட்ட சிறுவர்கள் ஆகும் என்றும் ஏசியன் ட்ரிபியூன் கூறுகிறது. கருணாவின் நெருங்கிய சகாக்களான ஜீவேந்திரம் மற்றும் திலீபன் ஆகியோரே இந்தச் சிறுவர்களை அண்மையில் கடத்திவந்து கருணாவின் படையில் இணைத்ததாக அந்த இணையத்தளம் மேலும் தெரிவிக்கிறது.

தனது குழந்தைகள் படையணியைக் கொண்டு தான் வாக்களித்த தொப்பிகல முன்னோடி தாக்குதல் நடவடிக்கையினை மேற்கொள்ள முடியாது  என்பதை உணர்ந்துள்ள கருணா, தான் மீளவும் ஆட்களைச் சேர்த்துக்கொண்டு தாக்குதலை ஆரம்பிக்க மேலும் 10 நாள் அவகாசத்தினை ராணுவத்தினரிடம் கேட்டிருப்பதாகவும் தெரியவருகிறது. கருணா உண்மையிலேயே ராணுவத்திற்கு உதவியாக தனது படையணியை காட்டிற்குள் அனுப்பி புலிகள் மேல் அதிரடித் தாக்குதலை நடத்தி அவர்களை நிலைகுலைய வைத்தபின்னர் ஏனைய ராணுவ அணிகளுக்கு களம் அமைத்துக்கொடுக்கும் விருப்பத்துடன் இருந்தபோதும், அவருடைய இன்றைய நிலை துரதிஷ்ட்டவசமானது என்று ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனாலும், கருணா தொப்பிகல மீதான தாக்குதலுக்கு தன்னை ஈடுபடுத்துமாறும், இதற்கு 10 நாள் அவகாசம் தரும்படியும் ராணுவத்தை வேண்டிவருவதாகத் தெரிகிறது.


சில தினங்களுக்கு முன்னர் கருணா தனது தளபதிகளான மகிலன், ஜீவேந்திரன், மங்களன் மற்றும் சின்னத்தம்பி ஆகியோரை விசேட அதிரடிப்படையின் உயர் அதிகாரிகளைச் சந்தித்து இதுதொடர்பாக கலந்துரையாடுவதற்கு அக்கரைப்பற்றிற்கு அனுப்பியிருந்தார். இச்சந்திப்பின்போது சலிப்படைந்து காணப்பட்ட அதிரடிப்படைத் தளபதிகள், தொப்பிகல காட்டுப்பகுதியிலிருந்து மீதமிருக்கும் புலிகளை விரட்டும் நடவடிக்கை கருணாவினால் தேவையில்லாமல் தள்ளிப் போடப்படுகிறது என்பதை அவரிடம் கூறுங்கள் என்று கேட்டுக்கொண்டதாக தெரியவருகிறது.

மேலும், கருணாவின் தளபதிகளிடம் வேறு ஒருவிடயத்தினையும் விசேட அதிரடிப்படைத் தளபதிகள் கூறியுள்ளனர். அதாவது, தொப்பிகல மீதான திட்டமிட்ட ராணுவ நடவடிக்கை திட்டமிட்டதன்படி நடைபெறும் என்றும், கருணா இல்லாவிட்டால் திருகோணமலை அணியினரைப் பாவித்து தாம் தாக்குதலை அங்கிருந்தே ஆரம்பிப்போம் என்றும் கூறியிருக்கின்றனர்.   திருகோணமலை அணியென்று விசேட அதிரடிப்படை குறிப்பிட்டது பிள்ளையான் அணியினரைத்தான் என்பது குறிப்பிடத் தக்கது. 

தாம் எதிர்பார்த்தபடி  விசேட அதிரடிப்படை தளபதிகளை தமது 10 நாள் அவகாசத்திற்குச் சம்மதிக்க வைக்கமுடியாத நிலையில் கருணாவின் தளபதிகள் கருணாவுடன் அங்கிருந்தே நேரடியாகத் தொடர்புகொண்டுள்ளனர். கருணா அவர்களிடம் மீண்டும் 10 நாள் அவகாசத்தினைக் கெஞ்சிக் கேட்டுப் பாருங்கள் என்ரு கூறியபோதும்,  விசேட அதிரடிப்படைத் தளபதிகள் கருணாவின் வேண்டுகோளினை ஏற்றுக்கொள்ளவில்லை என்றே தெரியவருகிறது.

இது இவ்வாறிருக்க, அண்மையில் தொப்பிகல காட்டுப்பகுதியில் நடைபெற்ற சில ராணுவ நடவடிக்கைளைப் பார்க்கும்போது கிழக்கிலிருந்து புலிகளை முற்றாகவே அப்புறப்படுத்தும் ஏதுநிலை உருவாகியிருப்பதாகவே தோன்றுவதாக ராணுவத்தின் கொமாண்டோ படையணியும், காலாட்படைகளும் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றன. 

இத்தாக்குதல்களில் புலிகளின் நான்கு முகாம்கள் கைப்பற்றப்பட்டதாகவும், சுமார் 30 புலிகள் வரை கொல்லப்பட்டதாகவும் இன்னும் மூன்று புலிகள் ராணுவத்தினரின் முன்னிலையிலேயே சயனைட் அருந்தி இறந்ததாகவும் ராணுவப் பேச்சாளர் பாதுகாப்பு விடயங்களை அறிவிக்கும் பத்திரிக்கையாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

மேலும் ராணுவத்தினர் பங்குடாவெளி வடக்கு, நாரக்கமுல்லை தெற்கு ஆகிய தொப்பிகலைக் காட்டுப்பகுதியில் வெற்றிகரமான ராணுவ நடவடிக்கையொன்றினை ஜூன் மாதம் 9 ஆம் திகதி மேற்கொண்டதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

காலாற்படை, விசேட கொமாண்டோ பிரிவு, ஆட்டிலெறிச் சூட்டாதரவு ஆகியவற்றுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த வெற்றிகரமான ராணுவ நடவடிக்கையில் இப்பன்வில, வேப்பன்வெளி, அக்கரைத்தீவு மற்றும் மாவடியோடை ஆகிய பகுதிகளில் இருந்த புலிகளின் முகாம்களே கைப்பற்றப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

காட்டுப்பகுதியில் நடந்த கடுமையான சண்டைகளில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டதாகவும் இன்னும் 17 பேர் காயமடைந்ததாகவும் ராணூவப் பேச்சாளர் மேலும் கூறினார்.

இச்சண்டைகளில் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் 8 உடல்களை பொலீஸார் மூலம் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்திடம் தாம் கையளித்திருப்பதாகவும் ராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

புலிகளின் தொலைத்தொடர்புகளை வழிமறித்துக் கேட்ட ராணுவத்தினர், வன்னியிலிருந்து உடனடியாக ஆயுத, ஆள்ப்பல உதவிகளை வழங்குமாறு தொப்பிகலக் காட்டிலிருந்து புலிகள் வேண்டிக்கொண்டபோதும்கூட வன்னியிலிருந்து உதவிகளோ அல்லது பதில்த் தகவல்களோ எதுவும் வரவில்லையென்றும் ராணுவத்தினர் கூறுகின்றனர்.

இத்தாக்குதலில் புலிகளிடமிருந்து பெருமளவு ஆயுத தளபாடங்களைத் தாம் கைப்பற்றியதாக நீண்ட பட்டியல் ஒன்றினையும் ராணுவம் வெளியிட்டிருந்தது.

http://www.lankaweb.com/news/items07/120607-6.html


 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழர்களின் ஏக தலைவனாக கருணாவை முன்னிறுத்தும் சிங்களப் பேரினவாதம்

மூலம் : சிங்கள இனவாத கல்வியாளர்கள் தளமான லங்கா வெப்பின் ஆசிரியர் தலையங்கம்

காலம்: கருணா சிங்களப்பேரினவாதத்தின் கட்டளையின்படி சமாதான பேச்சுவார்த்தைகளைத் தடம்புரளச் செய்யும் நாசகார வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த காலம்.

இலங்கையில் தமிழர்களுக்கான விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்டு மொத்த நாட்டையுமே புரட்டிப்போட்டு வந்த பயங்கரவாதிகளின் தலைவனான பிரபாகரனின் அந்திம காலம் நெருங்குவது, தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் முழு இலங்கைக்குமே பெரும் உவகையினை கொண்டுவரப்போகிறது என்பதில் சந்தேகமில்லை. அதேவேளை பிரபாகரனின் அழிவை உறுதிப்படுத்தியபடியே தமிழர்களுக்கென்று  புதியதாக ஒரு தலைமைத்துவம் உருவாகி வருகிறது என்பதும் நாம் நம்பிக்கையுடன் பார்க்கவேண்டிய இன்னொரு விடயமாகும்.

கருணா அம்மான் தலைமையில் உருவாகிவரும் இந்த புதிய ஏக தமிழ் தலைமைத்துவம், தமிழ் மக்களுக்கான நண்மைகளை சிங்கள பெளத்த பெரும்பான்மையினத்தினை சாந்தப்படுத்தி, இலங்கை  ஒரு முழு சிங்கள பெளத்த நாடு என்பதனை ஏற்றுக்கொண்டு, முழு நாட்டின் மீதான சிங்களவர்களின் அதிகாரத்தினை ஏற்றுக்கொண்டு, அவர்களின் இன, மத அதிகாரத்தினை பாதிக்காத வகையில், ஒன்றுபட்ட நாட்டினுள், அதன் பூகோள இஸ்த்திரத்தனைமையினையும் அதன் இறையாண்மையினையும் பாதிக்காதவாறு, அரசியல் யாப்பிற்கு சகலவிதத்திலும் உட்பட்டு  பெற்றுக்கொள்ள முடியும் என்பதை அது உறுதிப்படுத்தியிருக்கிறது.

பிரபாகரன் எனும் யுத்த வெறிபிடித்த கொலைகாரப் பயங்கரவாதியின் ஈழம் எனும் மாயைக்குள் பலவந்தமாக திணிக்கப்பட்டு, அந்த மாயையினை எதிர்ப்போரெல்லாம் அழிக்கப்பட்டு, சுதந்திரம் அற்று இருந்த தமிழ் மக்களுக்கு, ஒரு மென்போக்கான, அரசியலை நன்கு உணர்ந்துகொண்ட, சிங்களவர்களை அனுசரித்து, அவர்களின் இந்த நாட்டின்மீதான கேள்வியற்ற அதிகாரத்தினை முழுமையாக ஏற்றுக்கொண்டு, மகிழ்வாக சேர்ந்து பயணிக்கக்கூடிய ஒரு தலைமைத்துவம் கருணாவின் மூலம் கிடைத்திருக்கிறது.

அன்டன் பாலசிங்கம் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகிய தந்திரசாலிகளின் பசப்பல்களுக்குப் பின்னால் தமது கொலைவெறியாட்டத்தைத் தொடர்ந்தும் நடத்திவரும் வன்னிப் புலிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனும் அவர்களின் அரசியல் பிணாமிகளை ஒருபுறம் முன்னிறுத்தி, தாம் சமாதானத்தில் நாட்டம் கொண்டவர்களாகக் காட்டிவரும் அபத்தத்தினையும், அவர்களின் பேச்சுவார்த்தை நாடகத்தினையும்  நிச்சயம் நாம் முறியடிக்கவேண்டும் என்று கருணா அம்மான் கேட்டிருக்கிறார்.

பயங்கரவாதப் புலிகளுக்கும் கருணா அமைப்பிற்கும் இடையிலுள்ள வேறுபாட்டினை இப்போது மொத்தத் தமிழர்களும் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழர்களை அடிமைப்படுத்தி, யுத்த அழிவுகளுக்குள் தொடர்ச்சியாக வைத்திருக்கும் வன்னிப் புலிகளுடன் ஒப்பிடும்பொழுது, மென்போக்கான, மக்கள் அவலங்கலைப் புரிந்துகொண்ட, மக்களின் நலனில் அக்கறைகொண்ட, மக்களுக்கு நம்பிக்கையான  வாழ்வினை ஏற்படுத்த சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் மக்களுடன் நெருங்கிப் பழகும் கருணா அம்மானை அவர்களை தமது தலைமையாகக் காண விரும்புகிறார்கள்.

கருணா அம்மானை தமது ஏக தலைமையாக அங்கீகரிக்கும் இலங்கையின் தமிழர்களின் இந்த ஒருமித்த முடிவு புலம்பெயர் நாடுகளிலிருந்துகொண்டு இன்றுவரை புலிப் பயங்கரவாதிகாளுக்கு பெருமளவு பாணத்தினை வாரி வழங்கி நாட்டில் அழிவுகளை மட்டுமே ஏற்படுத்திவரும் தமிழர்களை நிச்சயம் சிந்திக்க வைக்கும் என்று நம்பலாம். புலம்பெயர் தமிழர்கள் செய்யவேண்டியது யாதெனில், இலங்கைத் தமிழர்களுடன் சேர்ந்து, கருணாவின் தலைமைத்துவத்தின்கீழ் அணிதிரண்டு, தமது வளங்களை அவருக்கு அர்ப்பணித்து, கொலைகாரப் பிரபாகரனையும் பயங்கரவாதப் புலிகள் இயக்கத்தையும் இந்த நாட்டிலிருந்து முற்றாகத் துடைத்திட உதவ வேண்டும்.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 எமது தாய்நாட்டின் போற்றுதற்குரிய, எமது நாட்டின் அரசியலைத் தீர்மானிக்கும் பெருஞ்சக்தியான  பெளத்த மகா சங்கத்தினர் மற்றும்  ஆளும் சுந்தந்திர ஐக்கிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளான மக்கள் விடுதலை முன்னாணி, சிஹல உறுமய மற்றும் பொதுவான சிங்கள மக்களின் வேண்டுகோளாக இருந்துவரும் இந்த நாட்டினைப் புலிப் பயங்கரவாதிகளுக்குப் பிரித்துக் கொடுக்கும் நோக்கில் செய்துகொள்ளப்பட்ட நோர்வேஜியர்களின் தலைமையிலான பேச்சுவார்த்தையினை உடனடியாக நிறுத்தவேண்டும் எனும் அதே கோரிக்கையினை கருணா அம்மானும், அவரின் பின்னால் திரளும் மக்களும் முன்வைத்துவருகிறார்கள் என்பது மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படவேண்டும். 

இதுவரை காலமும் இலங்கையில் சமாதானத்தைக் கொண்டுவருகிறோம் என்கிற போர்வையில் நோர்வேஜியர்கள் ஆடிவரும் நாடகத்தின் மூலம் இதுவரையில் பயங்கரவாதப் புலிகளின் நாசகாரத் தாக்குதல்களையோ, அரசியல்ப் படுகொலைகளையோ தடுக்க முடியாமல்ப் போயுள்ளதுடன், அந்தப் பயங்கரவாதிகளை ஜனநாயக நீரோட்டத்தினுள் கொண்டுவந்து அனைத்துக் கட்சி அரசியலில் பங்குபற்றும் நிலையினையோ இதுவரை ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது. அதுமட்டுமல்லாமல் புலிப் பயங்கரவாதிகளுக்குப் பக்கபலமாக நின்று, அவர்களை ஆதரிப்பதைத்தான் இந்த நோர்வேஜியர்களின் சமதானப் பேச்சுவார்த்தை நாடகம் இன்றுவரை செய்துவருகிறது. 

கருணா அம்மான் அண்மையில் இப்பேச்சுவார்த்தைகளில் பங்குகொள்ளும் அனைத்துத்தரப்பினருக்கும் எழுதிய பகிரங்கக் கடிதத்தில் நோர்வேஜியர்களால் புலிப் பயங்கரவாதிகளுக்கு வழங்கப்பட்ட 250,000 பிரித்தானியப் பவுண்ட்ஸ், கனரக ஆயுதங்கள், நவீன இலத்திரனியல் சாதனங்கள், தொலைத் தொடர்புக் கருவிகள் என்பனவற்றை புலிகள் தமது அரசியல் பகையாளிகளைக் கொல்லவே பாவித்து வருகின்றனர் என்று நோர்வேஜியர்களின் உண்மையான பின்னணியைப் போட்டுடைத்திருக்கிறார்.

கருணா அம்மானின் தகவல்களை நோக்கும்போது, நோர்வேஜியர்கள் தொடர்ச்சியாகவே புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுத்து வருவதோடு, சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலம் சமாதானத்தையும், தமிழர்களுக்கான விடுதலையினையும் எடுத்துத் தருவதற்குப் பதிலாக, புலிப்பயங்கரவாதிகளைத் தொடர்ச்சியாகப் பலப்படுத்தி, தமிழர்களை இன்னும் இன்னும் அவர்களின் சர்வாதிகாரப் பிடிக்குள் தள்ளிவிட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. 

கருணாவின் இந்த மக்கள் நலன் சார்ந்த சிந்தனையே அவரது அரசியல் முதிர்ச்சியினைக் காட்டுகிறது. ஆகவே அவரது தலைமையின்கீழ் இலங்கையில் சமாதானத்தை விரும்பும் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, சுதந்திரமான, சுபீட்சமான வாழ்வினை முன்னெடுப்பதன் மூலம், இதுவரையில் தமிழர்களுக்கு அழிவினையும், இழப்பினையும் மட்டுமே தந்துகொண்டிருக்கும் கொலைகாரப் பயங்கரவாதியான பிரபாகரனையும், புலிகளையும் முற்றாகப் புறக்கணித்து நாட்டின் பெரும்பான்மையினத்துடன் ஒருமித்துப் பயணிக்க முன்வரவேண்டும்.

உலகின் புற்றுநோயாக மாறிவரும் பயங்கரவாதத்தினையும், தீவிரவாதத்தினையும் முற்றாக அழித்து, உலகினை காக்கும் நோக்கத்தோடு புதிய உலக ஒழுங்கு செயற்பட்டுவரும் இன்றைய நிலையில், இலங்கையில் நோர்வேஜியர்கள் செய்துவருவது இந்தப் புதிய உலக ஒழுங்கிற்கு முற்றிலும் முரணான ஒரு நாசகார நடவடிக்கையென்றால் அது மிகையில்லை. அதுமட்டுமல்லாமல் நோர்வேஜியர்களைத் தமது கவசமாகப் பாவித்துவரும் புலிகள் , அவர்கள் முன்னிலையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மீறி, இன்றுவரை மிலேச்சத்தனமான படுகொலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். 

தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தருகிறேன் என்கிற பெயரில் அவர்களைத் தொடர்ச்சியாக அழித்துவரும் பிரபாகரனுடன் ஒப்பிடும்போது, வடக்குக் கிழக்கில் வாழும் சமாதானத்தினை விரும்பும் தமிழ் மக்களுக்காகன உரிமைகளுக்காகவும், அமைதியான வாழ்வுக்காகவும் குரல்கொடுக்கும், மென்போக்கான, ஜனநாயக அரசியலை நேசிக்கின்ற, இலங்கைத் திருநாட்டின் நலனில் உண்மையான அக்கறைகொண்ட கருணாவின் இன்றைய வேண்டுகோளினை நாம் அனைவரும் செவிமடுக்க வேண்டும். அத்துடன், பிரபாகரனையும் அவரது பயங்கரவாத இயக்கத்தையும் முற்றாக அழிப்பேன் என்று திடசங்கற்பம் பூண்டிருக்கும் கருணா, அதேவேளை தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாமல் முழு நாட்டிற்குமே அமைதியையும், சமாதானத்தினையும், ஒற்றுமையினையும் கொண்டுவருவேன் என்று சபதம் எடுத்திருக்கிறார். 

கருணாவின் இந்த நிலைப்பாடு நாட்டின் பெரும்பான்மையின மக்களின் ஏகோபித்த ஆதரவினையும், வரவேற்பினையும் கொண்டிருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

முற்றும்
 

http://www.lankaweb.com/news/editorial/251004-1.html

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதனைப் படிக்கும் அனைவருக்கும் வணக்கம்,

நான் எழுதுவதை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. இதனை ஒரு ஆவனமாக பதிய வேண்டும் என்பதற்காகவே எழுதிவருகிறேன்.

கருணாவின் துரோகம் பற்றிய செய்திகளை தமிழ்த் தேசிய ஊடகங்களிலிருந்தும், சிங்களத் தேசிய ஊடகங்களிலிருந்தும் இணைத்துவருகிறேன்.

இதில், சிங்களப் பேரினவாத ஊடகங்களிலிருந்து நான் பதிவுகளை இணைப்பதன் நோக்கம், கருணாவின் துரோகம் சிங்களவர்களுக்கு எந்தவகையில் உதவியது, எவ்வளவு முக்கியமானது என்பதைக் காட்டத்தான். ஆனால், இதற்கான தேடல்களின்போது கருணாவுக்கு சிங்களவர்களால் வழங்கப்பட்ட முக்கியத்துவம் மட்டுமல்லாமல், தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, எப்படியாவது கருணாவின் துணைகொண்டு அழித்துவிடவேண்டும் எனும் அவாவும், தமீழீழத் தேசியத் தலைமையினை முடிந்தளவிற்குத் தரம் தாழ்த்தி, கொச்சைப்படுத்தி, எமது போராட்டத்தை வெறும் கொலைகளுக்கான போராட்டம் என்று நிறுவும் கைங்கரியமும் தெரிந்தது. 

கருணா செய்த துரோகம் உண்மையானது. இதனை எவரும் மறுக்க முடியாது. இன்று அவரின் அரசியலினை ஆதரிப்பவர்களும், "பழையவற்றை ஏன் பேசுகிறீர்கள்" என்கிற கேள்வியோடு கடந்துபோக எத்தனிக்கிறார்களே ஒழிய, அவர் செய்த துரோகத்தினை  மறுக்கவில்லை. 

ஆகவே, கருணாவின் துரோகத்தில் நான் புதிதாக நிரூபிக்கவென்று ஏதாவது இன்னமும் இருக்கிறதா என்ற கேள்விக்கு நான் வந்திருக்கிறேன். 
இதற்கு உங்களின் கருத்துக்கலைப் பகிர்ந்தால், தொடர்ந்து எழுதுவதா அல்லது இத்துடன் இதனை முடித்துக்கொள்வதா என்கிற முடிவிற்கு நான் வரமுடியும்.

இதனை எவரும் பெரிதாகப் படிப்பதில்லையென்றால், முடித்துவிடுவதே சரியானதாக இருக்கும். இதனால் தனிப்பட்ட ரீதியில் எனக்கு ஏற்படும் மனவழுத்தமும் இதற்கு ஒரு காரணம்.

ஆனால், இது முக்கியமானதுதான் என்றால், தொடர்ந்து எழுதுவதில் எனக்கு பிரச்சினையில்லை.

நன்றி உங்கள் அனைவருக்கும்.

  • Like 7
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரஞ்சித் said:

ஆனால், இது முக்கியமானதுதான் என்றால், தொடர்ந்து எழுதுவதில் எனக்கு பிரச்சினையில்லை.

ரஞ்சித்
தயவு செய்து எழுதுவதை நிறுத்தாதீர்கள்.

அத்துடன் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஒரு சிறு புத்தகமாக வர வேண்டும்.

இப்போதிருக்கும் தொழில் நுட்பத்தை வைத்து ஈ புத்தகமாக கூட வெளியிடலாம்.

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ரஞ்சித் said:

இதனைப் படிக்கும் அனைவருக்கும் வணக்கம்,

நான் எழுதுவதை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. இதனை ஒரு ஆவனமாக பதிய வேண்டும் என்பதற்காகவே எழுதிவருகிறேன்.

கருணாவின் துரோகம் பற்றிய செய்திகளை தமிழ்த் தேசிய ஊடகங்களிலிருந்தும், சிங்களத் தேசிய ஊடகங்களிலிருந்தும் இணைத்துவருகிறேன்.

இதில், சிங்களப் பேரினவாத ஊடகங்களிலிருந்து நான் பதிவுகளை இணைப்பதன் நோக்கம், கருணாவின் துரோகம் சிங்களவர்களுக்கு எந்தவகையில் உதவியது, எவ்வளவு முக்கியமானது என்பதைக் காட்டத்தான். ஆனால், இதற்கான தேடல்களின்போது கருணாவுக்கு சிங்களவர்களால் வழங்கப்பட்ட முக்கியத்துவம் மட்டுமல்லாமல், தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, எப்படியாவது கருணாவின் துணைகொண்டு அழித்துவிடவேண்டும் எனும் அவாவும், தமீழீழத் தேசியத் தலைமையினை முடிந்தளவிற்குத் தரம் தாழ்த்தி, கொச்சைப்படுத்தி, எமது போராட்டத்தை வெறும் கொலைகளுக்கான போராட்டம் என்று நிறுவும் கைங்கரியமும் தெரிந்தது. 

கருணா செய்த துரோகம் உண்மையானது. இதனை எவரும் மறுக்க முடியாது. இன்று அவரின் அரசியலினை ஆதரிப்பவர்களும், "பழையவற்றை ஏன் பேசுகிறீர்கள்" என்கிற கேள்வியோடு கடந்துபோக எத்தனிக்கிறார்களே ஒழிய, அவர் செய்த துரோகத்தினை  மறுக்கவில்லை. 

ஆகவே, கருணாவின் துரோகத்தில் நான் புதிதாக நிரூபிக்கவென்று ஏதாவது இன்னமும் இருக்கிறதா என்ற கேள்விக்கு நான் வந்திருக்கிறேன். 
இதற்கு உங்களின் கருத்துக்கலைப் பகிர்ந்தால், தொடர்ந்து எழுதுவதா அல்லது இத்துடன் இதனை முடித்துக்கொள்வதா என்கிற முடிவிற்கு நான் வரமுடியும்.

இதனை எவரும் பெரிதாகப் படிப்பதில்லையென்றால், முடித்துவிடுவதே சரியானதாக இருக்கும். இதனால் தனிப்பட்ட ரீதியில் எனக்கு ஏற்படும் மனவழுத்தமும் இதற்கு ஒரு காரணம்.

ஆனால், இது முக்கியமானதுதான் என்றால், தொடர்ந்து எழுதுவதில் எனக்கு பிரச்சினையில்லை.

நன்றி உங்கள் அனைவருக்கும்.

ஈழ பிரியன் அண்ணா சொன்னதுபோல இதை ஒரு புத்தகமாக வடிவமைப்பது நல்லம் என்று எண்ணுகிறேன் 
இதில் இருப்பதுபோல திகதி வாரிய செல்வது நடந்ததை அவ்வாறே பதிவு செய்ய உதவும் எனவும் நம்புகிறேன் 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஞசித் இதை நிறுத்தாதீர்கள்..!

நான் தொடர்ந்து வாசிக்கின்றேன்! கருத்தெழுதி …இதை ஒரு போர்க்களமாக்க விருப்பமில்லை! தொடருங்கள்…!

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஞ்சித் தயவுசெய்து தொடருங்கள், புங்கையூரான் கூறியதே எனது நிலையும். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தொடருங்கள் சகோ.

தொடர்ந்து வாசித்து வருகிறேன்.

பல விடயங்களை மீண்டும் மீண்டும் மறக்க மன்னிக்க முடியாத துரோகங்களை ஞாபகப்படுத்துவது மட்டும் அல்ல அதனை மறக்காமல் இருக்கவும் தூண்டுகிறது.

தொடருங்கள். பலனை உடனே எதிர் பார்க்க தேவையில்லை இது போன்ற பதிவுக்கு. 

Edited by விசுகு
பிழை திருத்தம்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஞ்சித்…. தயவு செய்து இதனை நிறுத்தாதீர்கள்.

இனத் துரோகிகள்… இன்னும் பல இழிவான  செயலை செய்து கொண்டே இருப்பார்கள். எல்லாவற்றையும் அம்பலப் படுத்த வேண்டும்.

அதற்காகத் தன்னும்… எழுதுங்கள். 🙏🏽

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பிரபாகரன் தனது இறுதிமூச்சினை விட்டுக்கொண்டிருக்கிறார் அவரது கண்மூடித்தனமான அக்கிரமங்களுக்கான தண்டனையினை நாம் வழங்கும் காலம் நெருங்கிவிட்டது -கருணா அம்மான்

ஆக்கம் : வோல்ட்டர் ஜயவர்தின (இலங்கை ராணுவ அரச வட்டாரங்களுடன் நெருங்கிய தொடர்பினைப் பேணிவரும் , அமெரிக்கா லொஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் சிங்களவர், அமெரிக்க -இலங்கை கூட்டுறவின் கலிபோர்னியா மாநில ஒருங்கிணைப்பாளர், பிரசித்திபெற்ற வழக்கறிஞரான இவர் ஊடகவியலாளராகவும் பணியாற்றி வருகிறார். இலங்கையில் தமிழருக்கென்று உரிமைகள் வழங்கப்பட்டுவிடக் கூடாதென்று இந்திய ஆக்கிரமிப்பிற்கு முன்பிருந்தே கடுமையாகப் போராடிவந்த இனவாதி, 2020 மே 3 ஆம் திகதி இறந்தார்)

 காலம் : இனவழிப்புப் போரின் இறுதிக்காலம்

விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான் கைது - Former LTTE leader  and Sri lankan minister Karuna Amman arrested | Samayam Tamil

போராட்டத்தில் ஈடுப்பட்டவரும், இன்று அவருக்கெதிரான ராணுவ நடவடிக்கையில் கணிசமான பங்களிப்பைச் செலுத்தியவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் அண்மையில் பத்திரிக்கையாளர் ஒருவருடன் பேசும்போது, " பிரபாகரன் தனது இறுதி மூச்சினை விட்டுக்கொண்டிருக்கிறார், அவர் செய்த மிலேச்சத்தனமான, கண்மூடித்தனமான அக்கிரமங்களுக்கான தண்டனையினை நாம் வழங்கும் காலம் நெருங்கி விட்டது" என்று கூறினார்.

இலங்கையின் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் சிங்களச் செய்தியாளரின் பேட்டிக்கு, தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் கருணா பதிலளித்தார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கருணா அம்மான் தொடர்ந்தும் பேசுகையில், " எனது கருத்துக்களுக்கும், அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்திற்கும் கருத்துக்களுக்கும் பிரபாகரன் செவிசாய்க்கவில்லை. நான் அவருடன் வெளிப்படையாகவே முரண்பட்டுக்கொள்வேன். ஆனால், இயக்கத்தில் இருந்த பல மூத்த தளபதிகளுக்கு அந்தத் தைரியம் கிடையாது. பிரபாகரன் கூறும் அனைத்திற்கும் சம்மதம் தெரிவித்துவிட்டு, அவரின் பின்னால் தமது அதிருப்தியைத் தெரிவிப்பார்கள்" என்று கூறினார்.

அவர் மேலும் பேசுகையில், " முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பாகவும், கண்டி தலதா மாளிகை மீதான குண்டுத்தாக்குதல்தொடர்பாகவும் நான் பிரபாகரனிடம் கேள்வி கேட்டேன். இந்தத் தாக்குதல்கள் புலிகள் மீதான நற்பெயரை உலகளவில் பாதித்துவிட்டதை நீங்கள் உணரவில்லையா என்று கேட்டதற்கு பிரபாகரன் தனக்குத் தெரியாமலேயே இது நடத்தப்பட்டுவிட்டது என்று என்னிடம் கூறினார். ஆனால், பிரபாகரனுக்குத் தெரியாமல் அங்கே எதுவும் நடப்பதில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும், அவர் கூறுவது ஒரு முழுப்பொய் என்று நான் தெரிந்திருந்தேன்".

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா மேலும் கூறும்போது, "பிரபாகரனுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தமொன்றில் ரணில் விக்கிரமசிங்க கைச்சாத்திட்டது ஒரு மாபெரும் வரலாற்றுத் தவறாகும். புலிகளின் ஆட்பலமும், ஆயுத வளமும் மிகக் கடுமையான வீழ்ச்சியினைக் கண்டிருந்த சமயத்திலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி புலிகள் பாரிய நிதிச் சேர்ப்பையும், அதன்மூலம் பெருமளவு ஆயுதங்கலையும், கட்டாய ஆட்சேர்ப்பு மூலம் தமது ராணுவத்தையும் வலப்படுத்திக்கொண்டனர்".

"புலிகளின் தலைவர்கள் என்று சூசை, நடேசன், தயா மாஸ்ட்டர் போன்றவர்களை பலர் புகழ்ந்து பேசுகிறார்கள். இவர்கள் அங்கே தலைவர்களே கிடையாது. இவர்களின் கருத்துக்களைப் பிரபாகரன் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. கடற்புலிகளின் தளபதி என்று கூறிக்கொள்ளும் சூசைக்கு தரையில் சண்டையிடுவது எப்படியென்று எதுவுமே தெரியாது. அவரை எவருமே தலைவராக மதிக்கவேண்டிய அவசியம் இல்லை".

"புலிகளின் அரசியல் அலோசகர் அன்டன் பாலசிங்கம் புலிகளின் தலைவர் பிரபாகரனின் முகத்திற்கு நேரே, நானும் கருணா கூறுவதையும் நீ கேட்கப்போவதில்லை, ஒரு பாசிஸ வெறிபிடித்த சர்வாதிகாரியாக நீ செயற்படுகிறாய் என்று கூறினார். இதற்கு முன்னர் பிரபாகரனின் தாந்தோன்றித்தனமான முடிவுகளைக் கேள்விகேட்ட மாத்தயாவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் நடந்த அநியாயப் படுகொலைகளை நீங்களும் அறிந்திருப்பீர்காள்".

Edited by ரஞ்சித்
  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தான் புலிகள் இயக்கத்தில் இணைந்த காலம்பற்றிக் குறிப்பிடுகையில் கருணா, "எனது குடும்பத்தில் இருந்த அனைவரையும் போல நான் நன்றாகப் படித்து வந்தேன். உயர்தரத்தில் உயிரியல் கற்கை நெறியில் இணைந்து மருத்துவராகி எனது பிரதேச மக்களுக்கு சேவை செய்திட வேண்டும் என்பதே எனது அவாவாக இருந்தது. அந்தக் காலத்தில்தான் புலிகள் 1983 ஆம் ஆண்டு 13 ராணுவத்தினரைக் கொன்று, ஜூலை இனக்கலவரத்திற்குத் தூபமிட்டனர். விளைவாக  பல தமிழர்கள் கொல்லப்பட்டனர். பல தமிழர்கள் கொல்லப்பட்டமையானது இளைஞர்களை புலிகள் போன்ற இயக்கங்களுடன் இணையத் தூண்டியது. கொழும்பிலிருந்து கலவரத்தால் பாதிக்கப்பட்டு மட்டக்களப்பிற்கு வந்திறங்கிய ஏராளமான தமிழர்களுக்கு உதவுவதற்காக நானும் சென்றிருந்தேன். புலிகளுடன் சேர்ந்த சிறுது காலத்திலேயெ இந்தியாவுக்கு ராணுவப் பயிற்சிக்காக அனுப்பப்பட்டேன்" என்றும் அவர் கூறினார்.

"நான் எனது தனிப்பட்ட காரணங்களுக்காக  புலிகளியக்கத்தினை விட்டு வெளியேறி வரவில்லை. ஆனால், ராஜீவ் காந்தி படுகொலை போன்ற முற்றான பயங்கரவாத நடவடிக்கைகளைப் பார்த்தபின், தொடர்ந்தும் அங்கேயிருப்பது பிடிக்கமலேயே விலகி வந்தேன். . நான் ஒஸ்லோவிற்கு அனுப்பப்பட்ட பேச்சுவார்த்தைக் குழுவில் இணைக்கப்பட்டபோது பிரபாகரன் என்னிடம் ஒரு விடயத்தைக் கண்டிப்பாகக் கூறினார், "நீ எந்தத் தீர்வுக்கும் சம்மதிக்கக் கூடாது, சமாதானத்தில் நாம் நாட்டம் கொண்டவர்கள் போலக் காட்டிக்கொண்டு இந்தப் பேச்சுவார்த்தைகளை இன்னும் 5 வருடங்களுக்கு இழுத்தடி, அதற்குள் நான் பனத்தினைச் சேர்த்து ஆட்களையும், ஆயுத தளபாடங்களையும் வாங்கிவிடுவேன், அதன் பின்னர் நாம் யுத்தத்தைத் தொடங்கலாம்" என்று என்னிடம் கூறினார். இப்பேச்சுவார்த்தைகளை உண்மையான முறையில் நடத்தியிருந்தால், வடக்குக் கிழக்கு அபிவிருத்திக்கென்று பெருமளவு வெளிநாட்டு நிதி எமக்குக் கிடைத்திருக்கும், ஆனால் பிரபாகரனுக்கு அதில் நாட்டமிருக்கவில்லை" என்றும் அவர் கூறினார்.

Edited by ரஞ்சித்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

"நான்  புலிகள் இயக்கத்தை விட்டு விலகி வரும்போது அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவுமே இருக்கவில்லை. கெளரவ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் என்னை அரசியலில் இணைந்துகொள்ளுமாறு அழைத்ததன் பின்னரே அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு வந்தது. புலிகளின் பயங்கரவாதத்தைத் எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு முன்னர் துணிவுடன் எதிர்த்து நின்றவர்கள் எவருமே இருந்ததில்லை. அவரே 1983 இல் ஜனாதிபதியாகி இருந்தால் இந்தப் பிரச்சினையினை அன்றே இல்லாதொழித்திருப்பார். எனது 22 வருட கால போராட்ட அனுபவத்தில் மகிந்த ராஜபஷவைப் போன்றதொரு நேர்மையான, தீர்க்கமான முடிவுகளை எடுக்கக் கூடிய ஒரு தலைவரை நான் பார்த்ததில்லை. அவர் இந்தப் போரில் வென்று, வடக்குக் கிழக்குப் பிரச்சினையினை நிச்சயமாகத் தீர்த்துவைப்பார் என்று நான் 100 வீதம் நம்புகிறேன்".

"புலிகள் இயக்கம் ஒரு முழுமையான பயங்கரவாத இயக்கமாக எனக்குத் தெரிந்தது. எல்லோரும் நம்பிக்கொண்டிருந்ததைப் போல  தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டமாக அது எப்போதுமே இருந்ததில்லை, அதனாலேயே எனது வீரர்கள் 6000 பேரையும் கூட்டிக்கொண்டு அந்த இயக்கத்திலிருந்து விலகினேன். அப்பாவி சிங்கள மக்களைக் கொன்று, அனைத்து மதங்களினதும் மத வழிபாட்டுத்தலங்களைத் தாக்கியழித்து, யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றி, அவர்களை சொத்துக்களைச் சூறையாடிய ஒரு அமைப்பு எவ்வாறு மக்களுக்கான விடுதலையினைப் பெற்றுத்தர முடியும்?".

"என்னைப்போலவே, நேர்மையான ஏனைய தளபதிகளையும் நான் இயக்கத்தினை விட்டு வெளியேறிவரவேண்டும் என்று நான் கேட்டேன். திருகோணமலைத் தளபதி பதுமனுடன் இதுபற்றிப் பேசியிருந்தேன், ஆனால் அவர் வன்னியில் அகப்பட்டதனால் அவரால் தப்பி வரமுடியவில்லை".

"முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க புலிப் பயங்கரவாதிகள் மிகவும் பலவீனமான கட்டத்தில் இருந்தபோது அவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டார். 9/11 தாக்குதல்களுக்குப் பின்னர் புலிகளின் வெளியுலக நகர்வுகள் முழுவதுமாக முடக்கப்பட்டிருந்த தருணத்தில், சமாதான பேச்சுவார்த்தைகள் மூலம் அவர்களுக்கு வெளிநாடுகளுக்குச் சுற்றிவரக்கூடிய சுதந்திரம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. அத்துடன் இலங்கை முழுவதும் சுதந்திரமாக, தடைகள் இன்றி பயணிக்க அவர்களால் முடிந்தது. இந்தத் தருணத்தினைப் பாவித்து தெற்கின் பல பகுதிகளுக்கும் அவர்கள் ஆயுதங்களையும், ஆயிரக்கணக்கான கிலோகிராம்கள் வெடிமருந்துகளையும்  கொண்டு வந்து சேர்த்தனர்.".

"ஒருபக்கம் தமிழர்களின் கலாசாரத்தை திட்டமிட்டே அழித்துக்கொண்டிருந்த பிரபாகரன், வாழ்க்கையின் அனைத்து உல்லாசங்களையும் அனுபவித்துக்கொண்டே வந்தார். ஆரம்பத்தில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் திருமணம் முடிக்கக் கூடாது எனும் சட்டத்தை வைத்திருந்தார்கள், ஆனால் தனக்கு திருமண ஆசை வந்தவுடன் தானே கொண்டுவந்த சட்டத்தைத் தூக்கியெறிந்துவிட்டு திருமணம் முடித்துக்கொண்டார்"

"பிரபாகரன் சிங்களவர்களை மட்டுமல்ல, பல்லாயிரக்கனக்கான தமிழர்களையும் படுகொலை செய்தார். உலகில் இருந்த மிகவும் கொடூரமான பயங்கரவாதிகளில் பிரபாகரன் முதன்மையானவர்".

Edited by ரஞ்சித்
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

"பிரபாகரனின் சுயரூபம் தமிழர்களால் நன்கு விளங்கிக்கொள்ளப்பட்டுள்ளது. அவரால் இந்த சமாதான காலத்தைப் பயன்படுத்தி வடக்கில் இருந்து தேவையானளவு போராளிகளை இயக்கத்தில் சேர்க்கமுடியாமற்போய்விட்டது. அதனாலேயே தனது ஆளணி வளத்துக்காக கிழக்கில் தங்கியிருக்கவேண்டிய தேவை அவருக்கு ஏற்பட்டது. வன்னியில் அவரது கட்டுப்பாட்டிற்குள் அகப்பட்டுப்போன மக்களைக் கட்டாயமாக இழுத்துவந்து தனது படையில் அவர் இணைத்தார்".

"இங்கே இயங்கிவரும் சில "ஜனநாயக" தமிழ்க் கட்சிகளின் அரசியலுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியலுக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. உதாரணத்திற்கு வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் ஒருபோதுமே இணைக்கப்படக் கூடாதெனும் முடிவில் நாம் ஆணித்தரமாக இருக்கிறோம், ஆனால் சில தமிழ்க் கட்சிகள் இம்மாகாணங்கள் இணைக்கப்படுவதை விரும்புகின்றன. ஆனால், அது அவர்களது அரசியல் விருப்பம். வேண்டுமானால் கலாசார ரீதியில் வட மாகாணத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் இடையே சில தொடர்புகள் இருப்பதை  நான் அனுமதிப்பேன், ஆனால் அரசியல் ரீதியில் நிச்சயமாக நாம் தனித்தே இயங்குவோம். நான் ஜனநாயக வழியைப் பின்பற்றி இன்று மக்களுக்குச் சேவை செய்வதுபோல பிரபாகரனும் தனது பயங்கரவாதச் செயற்பாடுகளைக் கைவிட்டு, ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு இந்தப் பேட்டியின்மூலம் அவரைக் கேட்டுக்கொள்கிறேன்".

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சியல்ல, மாறாகப் பயங்கரவாதப் புலிகளைப் பிரதிநிதிப்படுத்தும் ஒரு பிணாமிக் கட்சி. கூட்டமைப்பினை உருவாக்குவதில் நானும் கடுமையாக உழைத்திருந்தேன். பிரபாகரனின் அனுமதியில்லாமல் கூட்டமைப்பின் எந்தப் பாராளுமன்ற உறுப்பினரும் வாயே திறக்கமுடியாதிருந்தது. கூட்டமைப்பிற்கான உறுப்பினர்களைத் தெரிவுசெய்ததுகூட பிரபாகரன் தான். புலிப்பயங்கரவாதிகளின் அச்சுருத்தல்களுக்கும், கட்டளைகளுக்கும் அமைவாகவே உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள். இவ்வாறு பிரபாகரனால் தெரிவுசெய்யப்பட்ட பொம்மை உறுப்பினர்களுக்கு வக்களிக்குமாறு தமிழர்கள் பிரபாரனால் ஆயுதமுனையில் அச்சுருத்தப்பட்டனர்".

"வருகிற பொதுத் தேர்தல்களில் எமது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 8 இடங்களைப் பெறும் என்பது உறுதியானது. கூட்டமைப்பு ஒரு ஆசனத்தைத்தன்னும் பெறாது மண் கவ்வும் என்று நம்புகிறேன்".

" இதுவரை காணாத அளவில் கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்களை நாம் ஆரம்பித்திருக்கிறோம். கடந்த 22 வருடங்களில் எமது மக்கள் கண்டிராத பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் இப்போது இப்பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன". 

"புலிப்பயங்கரவாதிகளை முற்றாக அழித்து இப்போரில் எமது படையினர் வெற்றி ஈட்டுவார்கள் என்பது உருதிப்படுத்தப்பட்டு விட்டது. மிகவும் திறமையாக எமது பாதுகாப்புச் செயலாளரால் திட்டமிடப்பட்டு, அத்திட்டம் எமது ராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவால் நடைமுறைப்படுத்தப்பட்டு, இப்போது இலங்கை நாடு புலிப் பயங்கரவாதிகளை முற்றாக அழித்து வெற்றியீட்டும் தருணத்தில் நிற்கிறது".

"பிரபாகரன் தனது இறுதி மூச்சினை விட்டுக்கொண்டிருக்க, நாம் அவரின் கண்மூடித்தனாமன அக்கிரமங்களுக்கான தண்டனையினை வழங்கக் காத்திருக்கிறோம்".

முற்றும் !

http://www.lankaweb.com/news/items08/151208-3.html

Edited by ரஞ்சித்
  • Like 1
  • Sad 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட புலநாய்வுப் பொறுப்பாளர்கலைக் கொன்றது கருணா குழுவே - ராணுவம் தெரிவிப்பு

காலம் : கருணா மட்டக்களப்பிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பின்னர் ராணுவ முகாம்களில் இருந்து செயற்பட்டு வந்த காலம்

மூலம் : சிங்கள இனவாதி வோல்ட்டர் ஜயவர்தின

பிரபாகரனின் புலிகள் பிரிவுக்கும் கருணாவின் பிரிவுக்கும் இடையே கிழக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மோதல்களில் அண்மையில் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட புலநாய்வுப் பொறுப்பாளரும் அவரது நெருங்கிய சகாவும் கருணாவினால் கொல்லப்பட்டுள்லதாக ராணுவத்தினர் கூறியிருக்கின்றனர்.

ராணுவத்தினர் மேலும் தகவல் தருகையில் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட புலநாய்வுப் பொறுப்பாளர் பகலவன் என்றழைக்கப்படும் சிவானந்தன் முரளி மற்றும் அவரின் நெருங்கிய சகாவான வதனன் ஆகிய போராளிகள் கடந்த மே மாதம் 6 ஆம் திகதி பிற்பகல் மட்டக்களப்பின் வடமேற்கே அமைந்திருக்கும் தன்னாமுனைப் பகுதியில் கருணா குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரியவருகிறது.

ராணுவத்தினரின் தகவல்களின்படி பகலவன் பொட்டு அம்மானுடன் நேரடித் தொடர்பில் இருந்து வந்தவர் என்றும், வதனன் அவரின் நடவடிக்கைகளில் உதவிவந்தவர் என்றும் தெரியவருகிறது. மட்டக்களப்புப் பொலீஸாரின் கூற்றுப்படி இவர்களைச் சுட்டுக் கொன்ற ஆயுததாரிகள் தலைமறைவாகிவிட்டதாகவும், அவர்கள்பற்றிய தகவல்கள் தமக்குக் கிடைக்கவில்லையென்றும் கூறியிருக்கின்றனர்.

புலிகளின் இரு புலநாய்வுப் போராளிகளும் தமது மரணத்தினை மட்டக்களப்பு - வாழைச்சேனை நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருக்கும்போதே தழுவிக்கொண்டதாக ராணுவத்தினர் கூறுகின்றனர். ஏறாவூர் பொலீஸ் நிலையப் பொறுப்பாளர் தர்மசேன ரத்நாயக்கவின் கூற்றுப்படி கைத்துப்பாக்கியினால் சுடப்பட்ட இரு போராளிகளும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகத் தெரியவருகிறது.

ஆனால், புலிகளின் ஆங்கிலமூல இணையச் செய்திச் சேவை தமிழ்நெட்டோ கொல்லப்பட்ட இருபோராளிகளும் அரசியல்த் துறையினைச் சேர்ந்தவர்கள் என்றே கூறுகிறது. 

தமிழ்நெட்டின் செய்தியின்படி  இந்த அரசியல்த்துறைப் போராளிகள் இருவரும் ராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் துணைராணுவக் குழுவின் ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது.

இக்கொலைகளை தமது ஆதரவாளரான 49 வயது செல்லையா குமாரசூரியர் என்பவர் புலிகளால் கொல்லப்பட்டமைக்கான பழிவாங்கலாகவே கருணா மேற்கொண்டதாக ராணுவத்தினை நம்புகின்றனர்.

கருணா குட்ழு ஆதரவாளர் குமாரசூரியர் கொல்லப்பட்ட நாளன்று, அவரின் வீட்டிற்குச் சென்ற புலிகளின் பிஸ்ட்டல் குழுவினர் அவரது பெயரைச் சொல்லி அழைத்ததாகவும், அழைத்து 15 நிமிடங்களின் பின்னர் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதாகவும், வெளியே சென்று பார்த்தபோது குமாரசூரியர் கொல்லப்பட்டுக் கிடந்ததாகவும் அவரது மனைவி கூறியிருக்கிறார்.

தமது போராளிகள் இருவர் கொல்லப்பட்டதுபற்றி செய்திவெளியிட்ட தமிழ்நெட், அண்மையில் ஆயித்தியமலைப் பகுதியில் கருணா குழுவினராலும் ராணுவத்தாலும் கொல்லப்பட்ட தமது 7 அரசியல்த்துறைப் போராளிகள்பற்றியும், பெண்டுகல்ச்சேனைப் பகுதியில் கொல்லப்பட்ட இன்னொரு அரசியல்த்துறைப் போராளிபற்றியும் செய்திவெளியிட்டிருந்தது.

புலிகள் மீதான படுகொலைகலை ராணுவத்தினரும் கருணாவும் இணைந்தே நடத்துவதாகப் புலிகள் தெரிவித்திருக்கும் நிலையில், ராணூவமோ கருணா குழு மட்டுமே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்திருப்பது குறிப்பிடத் தக்கது.

http://www.lankaweb.com/news/items04/080504-2.html

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாராளுமன்ற உறுப்பினர் ஆகிய முன்னாள் புலிகளின் தளபதி கருணா அம்மான்.

ஆக்கம் : வோல்ட்டர் ஜயவர்தின

காலம் : கருணா மகிந்தவின் தயவில் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிய காலம்

புலிப்பயங்கரவாதிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாகவிருந்து, பின்னர் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளின்மேல் விசனமடைந்து ராணுவத்துடன் சேர்ந்து செயற்பட்டுவரும் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பாராளுமன்ற ஜனநாயகத்தை முழுதாக ஏற்றுக்கொண்டு பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக்கொண்டார்.

அவரின் பதவியேற்கும் நிகழ்வினை ஐக்கிய தேசியக் கட்சி, புலிப்பயங்கரவாதிகளின் பிணாமிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாக்சிஸ்ட் அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுன ஆகிய கட்சிகள் கருணா பாராளுமன்ற உறுப்பினர் ஆவதை விமர்சித்து, புறக்கணிப்புச் செய்திருந்தன.

தனது பதவியேற்கும் நிகழ்வில் பேசிய கருணா, " புலிப் பயங்கரவாதிகளின் இறுதி ராணுவத் தோல்வி கிளிநொச்சியில் அவர்களுக்கு வெகு விரைவில் வழங்கப்பட்டுவிடும். பல சாவால்களுக்கும் மத்தியில் என்னை சிறிலங்கா சுதந்திரக் கட்சி மூலம் பாராளுமன்ற உறுப்பினராக ஆக்கியமைக்கான கெளரவ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்குக் கிடைத்த மிகப்பெரும் வரப்பிரசாதமாக எனது இப்பாராளுமன்றப் பதவியினை நான் பார்க்கிறேன்" என்று கூறினார். 

இலங்கையின் அரசியலமைப்பினை முழுமையாக ஏற்றுக்கொண்டு, சத்தியப்பிரமானம் செய்து தனது பாராளுமன்றப் பதவியினை ஏற்றுக்கொண்ட கருணா அம்மானின் இந்த நிகழ்வினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணா முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றூம் மட்டக்களப்பு நகர மேயர் சிவசங்கீதா பிரபாகரன் உட்பட அக்கட்சியில் பல பிரமுகர்கள் பொதுமக்கள் கலரியில் இருந்து கண்டுகளித்தனர்.

கருணாவின் பதவியேற்பு நிகழ்வினை எதிர்த்தரப்பு வரிசையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் விமல் வீரவன்ச கண்டுகளித்ததுடன், கருணா அம்மானுக்கு தனது பாராட்டுதல்களையும் வழங்கினார்.

கருணா தொடர்ந்தும் பேசுகையில், " நாம் மிக நீண்டகாலமாக மிகவும் தவறான பாதையில் சிந்தித்து, பயங்கரவாதப் புலிகளுடன் சேர்ந்து செயற்பட்டு வந்தோம். ஆனால், பயங்கரவாதிகளின் தவறான பாதையினை உணர்ந்துகொண்டபின்னர், ஜனநாயகத்தை முற்றாகத் தழுவி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினை உருவாக்கி இலங்கை நாட்டின் ஜனநாயக அரசியலில் இறங்கியிருக்கிறோம்".

"கிழக்கு மாகாணம் புலிப்பயங்கரவாதிகளிடமிருந்து முற்றாக மீட்கப்பட்டு விட்டது. தற்போது அங்கே பாரிய அபிவிருத்திச் செயற்பாடுகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் மாகாணசபை அரசு முன்னெடுத்து வருகிறது. இவை எல்லாவற்றிற்கும் மூல காரணமான எமது கெளரவ ஜனாதிபதி அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்".

"புலிப்பயங்கரவாதிகள், அவர்களது சரித்திரத்தில்  தமது ராணுவ ஆற்றலின் மிகவும் பலவீனமான நிலையினை இப்போது அடைந்துவிட்டார்கள். அரச ராணுவத்தினரின் ராணுவ நடவடிக்கைகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள அப்பாவிப் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக அவர்கள் இப்போது பாவிக்கிறார்கள். பயங்கரவாதிகளின் இறுதி ராணுவத் தோல்வி கிளிநொச்சியில் வைத்து அவர்களுக்கு வழங்கப்படும் சந்தர்ப்பம் நெருங்கிவிட்டது. அதன்பின்னர் கிழக்கு மாகாணத்தைப் போலவே வடக்கும் அபிவிருத்தி செய்யப்படும்" என்றும் கூறினார்.

தனது பதவியேற்பின் பின்னர் பிரதமர் அலுவலகம் அமைந்திருக்கும் அலரி மாளிகைக்கு விஜயம் செய்து மகிந்த ராஜபக்ஷ அவர்களையும் அவர் சந்தித்து பாராட்டுதல்களையும் பெற்றுக்கொண்டார்.

http://www.lankaweb.com/news/items08/081008-3.html

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கை வாழ் தமிழர்களுக்கான உண்மையான விடுதலை என்பது இலங்கையின் அரசியல்த் தலைமையிடமும் ராணுவத்தினரிடமும் கருணா அம்மானின் கைகளிலுமே இன்று இருக்கிறது.

சிங்கள இனவாத புத்திஜீவிகளின் இணையமான லங்கா வெப்பின் ஆசிரியர் தலையங்கம்

காலம் : மாசி 1, 2007

இலங்கைக்குள்ளும் வெளிநாட்டிலும் வாழும் பல விமர்சகர்கள் தற்போது புலிகள் ஒரு பலவீனப்பட்டுப்போன இயங்குநிலையிழந்த ஒரு அமைப்பென்பதை ஏற்றுக்கொள்ள தலைப்பட்டுள்ளனர்.

புலிகள் பலவீனப்படுத்தப்பட்டுவிட்டதனால் அவர்கள் மீது தொடர்ச்சியாக நாம் கொடுத்துவரும் ராணுவ அழுத்தம் எவ்விதத்திலும் தளர்த்தப்படவோ நிறுத்தப்படவோ கூடாது. எமது ராணுவத்தினரின் தொடர்ச்சியான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த  புலிகளின் வெளிநாட்டு அனுதாபிகளும், அரச சார்பற்ற அமைப்புக்களூம், நிதி வழங்குனர்களும், இறுதியாக அமெரிக்க தூதரும் கூட முயற்சிக்கலாம். இலங்கைத் தமிழர்களின் உண்மையான பிரதிநிதிகள் புலிகள்தான் என்று இன்றுவரை கூறிவரும் இவர்கள் தமிழ் மக்களின் விடுதலை என்பது புலிகளை அழிப்பதில்த்தான் ஆரம்பமாகிறது என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்.

உலகப் பயங்கரவாதத்திற்கெதிரான போர் எனும் மகத்தான செயற்பாட்டில் இறங்கியிருக்கும்  நாடான அமெரிக்கா, இலங்கையில் தமிழர்கள் உட்பட அனைத்துச் சமூகங்களுக்கும் தலைவலியாக இருந்துவரும் புலிப் பயங்கரவாதிகளை தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொள்வதும், அவர்களுடன் பேசி தமிழர்களுக்கான தீர்வினை வழங்குங்கள் என்று அரசினைக் கேட்பதும் நகைப்பிற்கிடமானது. அமெரிக்கா செய்யவேண்டியது யாதெனில், புலிப்பயங்கரவாதிகளை அழித்து தமிழ் மக்களுக்கான உண்மையான விடுதலையினை வழங்குவதேயன்றி புலிகளை தமிழர்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்வதல்ல. 

எமது ராணுவத்தினர் எதோச்சதிகார பிரபாகரனின் குழுவுக்கெதிரான அழுத்தத்தினை பலமுனைகளிலும் பிரயோகித்துவரும் நிலையில், எமது அரசுத்தலைவரான மகிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் எமது ராணுவத் தளபதி எமது ராணுவத்தை வெற்றிகரமாக நடத்திவருவதுடன், ராணுவ நடவடிக்கைகளிலும் அவற்றின் வெற்றியிலும் கருணா அம்மானின் அர்ப்பணிப்பும், பங்களிப்பும் அளவிடமுடியாதது.

எமது நாட்டிற்கு  பாரிய உயிரிழப்புக்களை ஏற்படுத்திவரும்  பிரபாகரனின் செயற்பாடுகளுக்கெதிராக கருணா அம்மான் எடுத்துவரும் வெற்றிகரமான ராணுவச் செயற்பாடுகள் வெளிப்படையாக பேசப்படாவிட்டாலும்கூட, எமது நாட்டிற்கு அவர் ஆற்றிவரும் சேவை மெச்சத் தக்கது. கருணா அம்மான் இலங்கை நாட்டு மக்களுக்கு ஆற்றிவரும் இந்த தியாகச் செயலின் உண்மையான அளவினை புலிப் பயங்கரவாதிகளின் பார்வையிலிருந்து பார்க்கும்போதே உணர்ந்துகொள்ளமுடியும். கருணா அமைப்பின் வீரர்களின் நடவடிக்கையினால் புலிப்பயங்கரவாதிகள் உடல்ரீதியிலும், உளரீதியிலும் மிகவும் பாதிக்கப்பட்டு, அச்சமடைந்துபோய் இருக்கிறார்கள். புலிகளின் அனைத்து துறைகளிலும் பாரிய அழிவுகளை ஏற்படுத்திவரும் கருணா வின் வீரர்கள் இறுதியில் புலிகளின் அழிவு என்பது இந்நாட்டின் அனைத்து மக்களின் நல்வாழ்விற்கும் அவசியமானது என்பதையும், புலிகளின் அழிவு என்பது எந்தவிதத்திலும் எவரையும் ஆதிக்கப்போவதில்லையென்பதையும் விரைவில் உணர்த்தத்தான் போகிறார்கள்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிழக்கு மாகாணத்தினை பயங்கரவாதிகளின் கைகளிலிருந்து விடுவித்துள்ள படையினருக்கும் அவர்களுக்கு ஆதரவாக நிற்கும் கருணாவுக்கும் இன்றிருக்கும் மிகப்பெரிய கடமை என்னவென்றால், வடக்கிலும் தமது ராணுவ முயற்சியற்சியினைத் தொடர்ந்து முன்னெடுத்து பிரபாகரனின் பயங்கரவாதிகளின் பிடியில் அகப்பட்டிருக்கும் அம்மக்களை விடுவித்து, பிரபாகரனினதும் அவரது பயங்கரவாதிகளினதும் பாசிஸ கொடுக்குகளை முற்றாக அறுத்தெறிந்து அழிப்பதுதான்.


இந்த நடவடிக்கையானது புலிகளின் வெறியாட்டத்தை அதிகாரபூர்வமாக முடிவிற்குக் கொண்டுவருவதுடன், வடக்கிலும் கிழக்கிலும் வாழும் அப்பாவி மக்களுடன் நிர்வாக அதிகாரங்களை நாம் பகிர்வதன் மூலம், அவர்களையும் எமது அரசுத் தலைவரின் ஆட்சியின் கீழ் கொண்டுவந்து அவர்களின் வாழ்வினை வழமைக்குத் திருப்ப வழிசமைக்கும் என்பது திண்ணம்..


ஆகவே, இந்த நடவடிக்கைகளினை எடுக்கும்பொழுது, அரசும் ராணுவமும் செய்யவேண்டியது யாதெனில், பிரபாகரனையும் அவரது பாசிஸப் பயங்கரவாதிகளையும் முற்றாகவும், இனியொருபோதும் தலையெடுக்காவண்ணமும் அழிப்பதென்பது அம்மக்களின் எதிர்காலத்திற்கும் மொத்தநாட்டினதும் அமைதிக்கும் மிக மிக முக்கியமானது என்பதை உணர்த்துவதோடு, பயங்கரவாதிகளினை இறுதியாக அழிக்கும்போது அவர்களால் நாட்டிற்கு எதுவித கேடும் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்வதும் ஆகும்.

பிரபாகரனின் பயங்கரவாதப் பிடிக்குள் அகப்பட்டு, செய்வதறியாது திகைத்து நிற்கும் இம்மக்களை தமது பக்கம் நோக்கி அழைத்துவருவது நாட்டின் தலைவர்களின் கடமையாகும்.

1975 ஆம் ஆண்டிலிருந்து புலிப் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளினால் இன்றுவரை பாதிக்கப்பட்டுவரும் தமிழ் மக்களைக் காக்க நடவடிக்கைகளை எடுத்துவரும் எமது ராணுவத்தினர் செய்யவேண்டியது யாதெனில் தொடர்ந்தும் தமது ராணுவச் செயற்பாடுகளை பயங்கரவாதிகள் மீது நடாத்தி சட்டத்திற்கு முரணான இப்பயங்கரவாதிகளை முற்றாக சீர்குலைத்து , இறுதியில் அழித்து, கடந்த 32 வருட  சித்திரவதையான காலத்தினை முடிவிற்குக் கொண்டுவந்து இலங்கை நாட்டின் இறையாண்மையினை நிலைநாட்டுவதாகும்.

பிரபாகரனின் ஈழக் கனவினாலும், ராணுவ வெற்றிகளினாலும் மதியிழந்துபோயிருந்த தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் தற்போது தாம் இதுவரை கண்டுவந்தது ஒரு மாயை என்பதை உணரத் தலைப்பட்டுள்ளதுடன், யதார்த்தத்திற்கும் தாம் நினைத்திருந்ததற்கும் இடையே பரிய இடைவெளி இருப்பதையும் உணர்ந்துகொண்டுள்ளனர். இன்று உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் பல தமிழர்கள் இலங்கை நாட்டுடன் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழ விரும்புவதுபோல, இந்த மூளைச்சலவை செய்யப்பட்ட தமிழர்களும் வாழ விரும்புவதுடன், இலங்கை எனும் நாட்டினைப் பயங்கரவாதிகளால் ஒருநாளுமே வெற்றிகொள்ளமுடியாதென்பதையும், பயங்கரவாத நடவடிக்கைகளால் அந்நாட்டினை அசைக்கமுடியாதென்பதையும் முற்றாக விளங்கி ஏற்றுக்கொண்டு வருகின்றனர்.

தாம் இதுவரை கட்டிவளர்த்த ஈழக்கனவு முற்றாக சிதைக்கப்பட்டுவருவதையும், இலங்கை நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் மேம்பட்டுவருவது அவர்களது ஈழக் கனவிற்கு ஆப்பாக இறங்கியிருப்பதையும் வெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் புலிப்பயங்கரவாதிகள் திகைத்துப் போய் நிற்கின்றனர். இன்று அவர்களுக்கு இருப்பதெல்லாம், அழியும் தறுவாயில் இலங்கை நாட்டிற்கு தம்மால் செய்யக்கூடிய நாசகார அழிவுகளை செய்வது மட்டும்தான்.


ஆகவே, பயங்கரவாதிகள் தமது இறுதிக் காலத்தில் நடத்த முயற்சிக்கும் எந்தவிதமான நாசகார நடவடிக்கைகளுக்கும் தம்மைத் தயார்ப்படுத்தி, அநத நாசகார அழிவுகள் நடக்குமுன்னமே அவற்றினைத் தடுத்து நாட்டுமக்களை காக்கவேண்டியது ராணுவத்தினதும், புலநாய்வுத்துறையினரினதும் மிக முக்கிய கடமையாகும். இப்பயங்கரவாதிகளை இந்த நாட்டின் சகல திசைகளிலிருந்து முற்றாக அழித்து இந்நாட்டினை இப்பயங்கரவாதத் தொற்றிலிருந்து முற்றாக சுத்தப்படுத்துவது அவர்களின் கடமையாகும்.


இன்று இலங்கையிலும் வெளிநாட்டிலும் வாழும் அனைத்துத் தமிழர்களும் தாம் கடந்த 32 வருடகாலத்தில் அனுபவித்த சகல கொடுமைகளுக்கும், அழிவுகளுக்கும், கொலைகளுக்கும் ஒரே காரணம் பிரபாகரனும் அவனது பயங்கரவாதிகளும்தான் என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றனர். 

கருணா அம்மான் எனும் தெளிந்த சிந்தனையுள்க தமிழர்களின் தலைவர் கூறிய "வடக்கிலுள்ள, குறிப்பாக யாழ்ப்பாணத்திலுள்ள தமிழர்கள் எப்போதோ தமது அழிவுகளுக்கும், கொலைகளுக்கும் பிரபாகரனின் பயங்கரவாதிகளே காரணம் என்பதை உணர்ந்துகொண்டுவிட்டார்கள்" எனும் கூற்றினை இங்கு அனைவரும் நினைவில் வைத்திருத்தல் சாலச் சிறந்தது.

"செய் அல்லது செத்துமடி" எனும் பயங்கவாதிகளின் மனோநிலையே தமது அனைத்து அழிவுகளுக்கும் காரணம் என்பதை தமிழர்கள் உணரத் தொடங்கிவிட்டனர். ஆகவே தமது விடுதலைக்கான திறவுகோல் அரசத் தலைமையிடமும், ராணுவத்திடமும், கெளரவ கருணா அம்மானிடமும் மட்டுமே இருப்பதை அவர்கள் உண்மையாக நம்புகின்றனர்.

முற்றும்

http://lankaweb.com/news/editorial/020207-1.html

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கை நாடு ஒரு நோயாளி, பிரபாகரனின் பயங்கரவாதிகள் இந்த நாட்டின் வைரஸுக்கள், கருணாவே இவ்வைரஸை அழித்து  உயிர்காக்கும் நிவாரனி !

ஆக்கம் : சிங்கள இனவாதி சார்ள்ஸ் பெரேரா

இணையம் : லங்கா வெப்

எனக்குப் போர் பிடிப்பதில்லை. நான் ஒருபோதும் ஒரு எறும்பிற்குக் கூட தீங்கு விளைவிக்க நினைக்க மாட்டேன். அதனால், அப்பாவி மக்கள் அநியாயமாகக் கொல்லப்படும்போது நான் மிகுந்த கவலையடைகிறேன். இலங்கையின் தமிழ்ப் பயங்கரவாதிகள் உண்மையான கொலைகாரர்கள். மக்களின் உயிரினைப் பறிப்பதுபற்றி அவர்கள் ஒரு கணமேனும் சிந்திப்பதில்லை. அதற்காக வெறிநாய்களைக் கொல்வதுபோல், பயங்கரவாதப் புலிகளையும் கொன்றுவிடுங்கள் என்று நான் யாரையும் கேட்கப்போவதில்லை. அதனாலேயே இப்பயங்கரவாதிகளை  பேச்சுவார்த்தைக்கு அழைப்பதன்மூலம் கொலைகளையாவது தடுத்து நிறுத்தலாம் என்று நான் விரும்பினேன்.

இரத்தவெறிபிடித்த புலிப் பயங்கரவாதிகளுக்கும் , ராணுவத்தினருக்கும் இடையிலான யுத்த நிறுத்த ஒப்பந்தம் இத்தொடர் படுகொலைகளை நிறுத்தும் முதலாவது நோக்கத்துடனேயே நிகழ்த்தப்பட்டது. இந்த யுத்த நிறுத்தம் மூலம் பயங்கரவாதிகளைச் சுடுவதை ராணுவம் நிறுத்திக் கொண்டது. ஆனால் பயங்கரவாதிகளோ ராணுவத்தையும், ராணுவத்தோடு சேர்ந்து இயங்குபவர்களையும், தமிழ் மக்களையும், சிங்கள மக்களையும் , ஏன், தம்முடன் இருந்தோர்களையும் கொல்வதையோ அல்லது கொல்வதற்கான நடவடிக்கைகளைத் திட்டமிடுவதையோ இதுவரை நிறுத்தவில்லை. ஆக, படுகொலைகளை நிறுத்தும் நோக்குடனும், சமாதானத்தை எட்டும் நோக்குடனும் நிகழ்த்தப்பட்ட இந்த யுத்த நிறுத்தத்தின் உண்மையான விளைவு இவை மட்டும்தான்.


இந்த யுத்த நிறுத்தம் மூலம்  கொடூரப் பயங்கரவாதிகள் தம்மை எதிர்த்தவர்களைக் கொல்லவும், சிறுவர்களைக் கடத்திச் சென்று கட்டாயப் பயிற்சியில் ஈடுபடுத்தவும், தமது மனித வெடிகுண்டுகளான கரும்புலிகளின் எண்ணிக்கையினை அதிகரிக்கவும், அரச ராணுவமோ அல்லது அரச அதிகாரிகளோ செல்லமுடியாத தமது அதிகாரத்திற்குற்பட்ட பகுதியென்று ஒரு பகுதியை அடாத்தாக பிரகடணம் செய்யவும் முடிந்திருக்கிறது. இப்பயங்கரவாதிகளை வேட்டையாடி, மக்களைக் காத்துவந்த ராணுவத்தின் கைகள் கட்டப்பட்டு நிற்க , இப்பயங்கரவாதிகள் தமது கொலைக்கலாசாரத்தினை தடையின்றி முன்னெடுக்கவே இந்த யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தைகள் பயங்கரவாதிகள் தமக்கான அதிகாரப் பிரதேசத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை ஏற்றுக்கொள்வதோடு இரு இனங்களுக்கிடையிலான பிளவினையும் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறது.

இந்த நிலைமைகளின் கீழ் என்னைப்போன்ற ஒருவர் தொடர்ச்சியாக போரிற்கு எதிரானவராக தன்னைக் காட்டிக்கொண்டிருப்பது சாத்தியமில்லை. இப்போது, நாசகாரப் பயங்கரவாதிகள் டொடர்ச்சியாக மக்களைக் கொல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ராணுவத்திடம் துப்பாக்கிகள் இருந்தும் இந்த மிலேச்ச பயங்கரவாதிகளைக் கொல்ல முடியாமல் இருக்கிறது. ஆனால், யாராவது இந்தப் பயங்கரவாதிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். அந்த ஒருவர் இந்த முட்டாள்த்தனமான "புரிந்துணர்வு ஒப்பந்தத்தினால்' கட்டுப்படாதவராக இருத்தல்  வேண்டும். 

கொடூரமான புலிப் பயங்கரவாதிகள் தமது கொலைவெறியாட்டத்தில் அப்பாவி கருணா அமைப்பின் உறுப்பினர்களைக் கொல்லும்போது நான் கவலையடைகிறேன். ஆனால், கருணா அம்மான் வன்னிப் பயங்கரவாதிகளைக் கொன்றார் என்று செய்தி கேட்கும்போது வெட்கமறியாத எனது உள்மனம் ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறது. மனிதநேயத்தைப்பொறுத்தவரை ஒரு பயங்கரவாதியைக் கொல்வதுகூடத் தவறாகத் தெரியலாம், ஆனால் இது உயிரைக் கொல்லக்கூடிய ஒரு வைரஸ் கிருமியைக் கொல்வதற்கு ஒப்பானது. நாம் நோயாளியைக் காப்பதற்காக வைரஸைக் கொல்கிறோம். அதேபோல, இன்று அந்த் நோயாளி இலங்கை எனும் நாடு. அந்த நாட்டினைப் பீடித்திருக்கும் உயிர்கொல்லும் வைரஸுக்கள் பாஸிஸப் பயங்கரவாதிகளின் தலைவன் பிரபாகரனும் அவனது கொலைகாரர்களும். பிரபாகரன் எனும் கொடிய வைரஸைக் கொல்லும் உயிர்காக்கும் தடுப்பு மருந்தே எமது கருணா அம்மான் !

முற்றும்!

http://www.lankaweb.com/news/items05/240405-2.html

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிழக்கில் கருணாவால் மேற்கொள்ளப்பட்ட சிறுவர்கள் கடத்தலை புலிகளின் மேல் சுமத்தி, தனது கொலைப்படைக்கு வெள்ளையடிக்கும் சிங்களப் பேரினவாதம்.

ஆக்கம் : இனவாதி வோல்ட்டர் ஜயவர்தின

காலம் : கருணா சிறுவர்களைக் கடத்திச் சென்று தனது துணைராணுவக் கொலைப்படையில் இணைத்துவந்த காலம்

இணையம் : இனவாதப் புத்திஜீவிகளின் லங்கா வெப்

"புலிப் பயங்கரவாதிகளின் ஊதுகுழல் தமிழ்நெட்டும், அவர்களின் பிணாமி கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கருணா அம்மான் சிறுவர்களைக் கடத்திச் செல்வதாக கூப்பாடு போட்டு வரும்வேளையில், புலிப்பயங்கரவாதிகள் கருணாவின் பெயரைப் பயன்படுத்தி ராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் சிறுவர்களைக் கடத்திச்சென்று தமது படையனியில் சேர்த்துவருகிறார்கள் என்று எமது ராணுவத்தினர் கூறுகின்றனர்".

"கருணாவின் அமைப்பு புலிப்பயங்கரவாதிகளிடமிருந்து பிரிந்து சென்று தனியே இயங்குவதும், கிழக்கு மாகாணத்தில் புலிககளை விட மிகவும் பலம்வாய்ந்ததாகவும் அது காணப்படுகிறது". 

"ஐ நா வின் மிகக்குறைந்த மதிப்பீட்டின்படியே குறைந்தது 5000 சிறுவர்கள் அவர்களது படையணியில் இணைக்கப்பட்டிருப்பதாகாக் கணிப்பிடப்பட்டிருக்கிறது. பயங்கரவாதிகளின் பல ரகசிய முகாம்களில் மறைத்துவைக்கப்பட்டிருக்கும் இச்சிறுவர்களின் வாழ்வு மிகவும் கோரமானது என்று ராணுவத்தினர் கூறுகின்றனர். ராணுவத்தினர் மேலும் கூறுகையில் இம்முகாம்களை வெளியார் எவரும் பார்வையிடவோ, நிலைமைகளை ஆராயவோ அனுமதியளிக்கப்படுவதில்லை என்றும் கூறுகின்றனர்".

"ராணுவத்தினர் இக்கடத்தல்கள் பற்றிக் கூறும்போது, பெரும்பாலான கடத்தல்கல் கிழக்கிலேயே இடம்பெறுவதாகக் கூறுகின்றனர். யுனிசெப் அமைப்பினை மேற்கோள் காட்டி செய்திவெளியிட்ட தமிழ்நெட் கருணா குழு சந்திவெளி, கிரான், மாங்கேணி, வாழைச்சேனை, இருதயபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து சிறுவர்களைக் கடத்திச் செல்வதாகக் கூறுகிறது. அத்துடன் புலிகளின் பிணாமிக் கட்சியான கூட்டமைப்பே கிழக்கில் கருணா சிறுவர்கள் கடத்தலில் ஈடுபடுவதாகக் கூறுகிறது என்றும் கூறினார். புலிகளின் அத்துமீறல்களை வெளியிடாத இடதுசாரிச் சிங்களச் சேவையான சந்தேஷய கருணாவின் கடத்தல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிச்சம் போட்டுக் காட்டுவது அவர்களின் புலிகள் மீதான அனுதாபத்தினையே காட்டுகிறது. இருந்தபோதிலும் அரச பேச்சாளர் கெகெலிய ரம்புக்வல்ல கருணா குழுவினர் சிறுவர் கடத்துவது தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது என்றும், அறியத்தந்தால் விசாரணை நடத்துவதாகவும் உறுதிப்படித்தியுள்ளார்".


"ஆனால், கருணா குழுவினரால் சிறுவர்கள் கடத்தபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் அதே அரச கட்டுப்பாட்டுப்பாட்டுப் பகுதிகளிலேயே புலிகளும் சிறுவர்களைக் கடத்திச் செல்கிறார்கள் என்று ராணுவத்தினர் கூறுகின்றனர். இதற்கு உதாரணமாக இம்மாகாணத்தில் அண்மையில் புலிப்பயங்கரவாதிகள் அப்பாவிகள் மீது மேற்கொண்ட தாக்குதலில் 65 பேர் கொல்லப்பட்டதனை அவர்கள் குறிப்பிடுகிறார்கள்". 

"ராணுவத்தினரின் செய்தியின்படி மன்னம்பிட்டிப் பகுதியில் தாமோதரம்பிள்ளையின் வீட்டிற்குள் நுழைந்த பயங்கரவாதிகள் அவரது மகனை இழுத்துச் சென்றனர். அதேபோல கரபொட்ட பகுதியில் கூலித் தொழில் செய்யும் தங்கவேலு என்பவரையும் இழுத்துச் சென்றனர். தாம் இதுபற்றி யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழுவினருக்கு அறியத் தந்ததாகவும் ராணுவத்தினர் கூறுகின்றனர்".

"இவ்வாறே கருணா அம்மானின் பிறந்த இடமான கிரானில் ஆலய முன்றலில் விளையாடிக்கொண்டிருந்த 8 சிறுவர்களை வாகனத்தில் வந்த பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். இச்சிறுவர்களின் பெற்றோர்களில் மூவர் இதுபற்றி பொலீஸில் முறையிட்டதாகவும் ராணுவத்தினர் கூறுகின்றனர்".


"இன்னொரு சந்தர்ப்பத்தில் பாடசாலையிலிருந்து சிறுவர்களைக் கடத்திச் செல்வதனை எதிர்த்த ஆசிரியர் ஒருவர் புலிப் பயங்கரவாதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டபின்னர் துப்பாக்கியால் சுடப்பட்டுக் காயப்படுத்தப்பட்டார் என்றும் ராணுவத்தினர் கூறுகின்றனர். வாழைச்சேனை நகர்ப்பகுதியில் பேரூந்தொன்றில் பயணித்த வேளையிலேயே அந்த ஆசிரியர் தக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது".

"பொத்துவில் பொலீஸ் பிரிவில் அமைந்திருக்கும் பயங்கரவாதிகளின் முகாமிலிருந்து தப்பிவந்த இளைஞர் ஒருவர் கூறுகையில் தன்னைப்போன்ற இன்னும் 13 சிறுவர்கள் புலிகளால் சங்கிலிகளால் கட்டப்பட்டு புலிகளின்  அலுவலகத்தில் அடைத்துவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதாகக் கூறினார். கச்சிக்குடியாறு பகுதியில் அமைந்திருக்கும் தமது முகாமிற்கு அருகில் தன்னை அவர்கள் பிடித்துச் சென்றதாகவும், ஆனால் தான் தப்பிவந்து பொலீஸில் சரணடைந்ததாகவும் அவர் கூறியதாக ராணுவத்தினர் கூறுகின்றனர்".

குறிப்பு : சிங்கள இனவாதியான வோல்ட்டர் ஜயவர்தினவால் எழுதப்படும் இக்கட்டுரை சாதாரண சிங்கள மக்களையும், வெளிநாட்டு வாசகர்களையும் இலக்கு வைத்தே எழுதப்படுகிறது. இங்கு குறிப்பிடப்படும் கடத்தல் இடம்பெற்ற இடங்கள் அனைத்துமே ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகள் என்பதும், கடத்தப்பட்ட சம்பவங்கள் அனைத்துமே கருணா குழுவால் நடத்தப்பட்டவை என்பதை யுனிசெப் மற்றும் அலன் ரொக் போன்ற ஐ நா அமைப்புக்களும் மனிதவுரிமை வாதிகளும் பெற்றோர்களையும் சாட்சிகளையும் நேரில் கண்டு விசாரணைகளை நடத்தியபின் ஐ நா வின் உத்தியோக பூர்வ அறிக்கையின்மூலம் உறுதிப்படுத்தப்பட்டவை என்பதும் குறிப்பிடத் தாக்கது. சிங்கள இனவாதிகள் செய்வதெல்லாம் கருணாவின் குற்றங்களைப் புலிகள் மேல் போட்டுவிட்டு, கருணாவின் குற்றங்களுக்கு வெள்ளையடிப்பதுதான். இதில் வேடிக்கையென்னவென்றால் கருணாவின் துரோகம் தொடங்கிய நாட்களில் மன்னம்பிட்டி, வெலிக்கந்தை, கரப்பொட்ட போன்ற முழுதான ராணுவமயப்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றக் கிராமங்களிலேயே கருணா தனது முகாம்களை அமைத்து சிறுவர்களைக்கடத்திச் சென்று பயிற்சியில் ஈடுபடுத்தி வந்தான் என்பது, ராணுவ முகாம்களுக்கு அருகிலேயே கருணாவின் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்ததை சர்வதேச பத்திரிக்கையாளர்களும், கடத்தப்பட்ட தமது பிள்ளைகளைப் பார்க்கச் சென்ற பெற்றோரும் கண்டதை பல ஊடகங்களும், ஐ நா வின் அறிக்கையும் வெளிச்சம்போட்டுக் காட்டியிருந்தமை குறிப்பிடத் தக்கது.


http://www.lankaweb.com/news/items06/260606-10.html

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ்ச்செல்வனின் படுகொலையில் கருணாவின் பங்கு

மூலம் : அமெரிக்க இலங்கைத் தமிழர் ஒன்றியம்

தம்மீதான இனக்கொலையினை முளையிலிருந்தே அனுபவித்துவரும் தமிழர்களுக்கு சிங்களப் பேரினவாதத்தின் உளவுத்துறையின் பிற்போக்குத்தனமான  நடவடிக்கைகள் பற்றிச் சிறிதளவேனும் சந்தேகம் இருக்கப்போவதில்லையென்பது திண்ணம். ஆகவே அவர்களின் மனதில் இன்று இருக்கும் ஒரே கேள்வி, "இவ்வளவு கையாலாகாத்தனமான சிங்கள உளவுத்துறையினால் தமிழ்ச்செல்வனின் இடத்தினைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடிந்தது எப்படி?" என்பதுதான்.

இதற்கான பதில் அமெரிக்க, பிரித்தானிய, இந்திய செய்மதிகளினால் எடுக்கப்பட்ட உயர் தெளிவுகொண்ட ஒளிப்படங்கள் சிங்கள விமானப்படைக்கு வழங்கப்பட்டதில் இருந்து ஆரம்பிக்கிறது.

தமிழ்ச்செல்வனின் படுகொலை

தமிழர்களின் அரசியல்த்துறைப்பொறுப்பாளரின் படுகொலை என்பது இலங்கையின் பல்வேறு தரப்பினரிடையேயும் வேறுபாடான உணர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. தனது முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டத்தில் கிடைத்த வெற்றிக்கு நிகராக கொழும்பில் சிங்கள அரசும், சாதாரண சிங்களர்களும் தமிழ்ச்செல்வனின் படுகொலையினைக் கொண்டாடுகிறார்கள். சில பிராமணர்களைத் தவிர மொத்தத் தமிழினமுமே தமிழ்ச்செல்வனின் படுகொலைக்காக இரங்கி அழுகிறது. ஆனால், இருபக்க உணர்வுகள் எப்படியானவையாக இருந்தாலும்கூட, இந்த பேச்சுவார்த்தை முயற்சிகளில் ஈடுபட்டுவரும்  பல நடுநிலையாளர்களைப் பொறுத்தவரை செல்வனின் படுகொலையென்பது சமாதான முயற்சிகளில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிக்கப் பெரியது என்பது தெளிவு. இப்படுகொலையின் பின்னர் சமாதான முயற்சிகள் எவ்வழியில் பயணிக்கப்போகின்றன எனும் ஐயம் தமிழர்களை மட்டுமல்லாமல் சிங்களவர்களையும் ஆட்கொண்டிருப்பது தெரிகிறது.


உடனடி அதிர்ச்சியிலிருந்தும், தாங்கொணாத் துயரிலிருந்தும் தன்னைச் சிறுகச் சிறுக விடுவித்துக்கொண்டு சுதாரித்துவரும் தமிழினத்தின் மனதில் எழுந்துவரும் ஒரு கேள்வியென்னவென்றால், தமிழ்ச் செல்வனைப் படுகொலை செய்யுமுன்னர் அவரது ரகசிய வாசஸ்த்தலத்தினை சிங்கள விமானப்படை அறிந்துகொண்டது எவ்வாறு என்பதுதான். தமிழ்ச் செல்வனின் படுகொலையினை பாரிய வெற்றியாகக் கொண்டாடிவரும் சிங்கள அரசியல்வாதிகள் அவ்வப்போது வெளியிட்டுவரும் அறிக்கைகளைப் பார்க்கும்போது நிச்சயமாக இந்த படுகொலை நடவடிக்கையில் வெளிநாட்டு உதவிகள் அவர்களுக்குக் கிடைத்திருப்பதைக் காட்டுகின்றது. 

தமிழரின் போராட்டங்களை ஒத்த சுதந்திரப் போராட்டங்களின் சரித்திரத்தினைப் பார்க்கும்போது மனிதநேயத்திற்குப் புறம்பான, அப்பாவிகளின் அவலங்களை தமது வெளியுறவுக்கொள்கையின் பலன்களுக்காகப் பாவித்துவரும் அமெரிக்க பிரித்தானிய ராஜதந்திரங்களின் கைவண்ணம் இப்படுகொலையிலும் இருப்பது புலனாவதுடன், இந்தியாவின் ஆசீரும், தொழிநுட்ப உதவியும்  இப்படுகொலையில் பங்குகொண்டிருப்பதும் தெரிகிரது. 

சந்திரிக்கா குமாரதுங்க அதிபராக இருந்த காலத்தில் புலிகளின் கட்டுமானங்கள் பற்றியும், அவை நீண்டகால அடிப்படையில் இலங்கையின் பாதுகாப்பிற்கு விளைவிக்கக் கூடிய ஆபத்துக்கள் குறித்தும் அமெரிக்காவின் கொழும்புத் தூதரகம் தொடர்ச்சியான எச்சரிக்கைகளையும், பாதுகாப்பு அறிக்கைகளையும் வெளியிட்டுவந்தது பலருக்கும் நினவிலிருக்கலாம். இவ்வாறான பல பாதுகாப்பு அறிக்கைகளில் அமெரிக்கா புலிகள் தொடர்பான பல உயர் தெளிவுகொண்ட செய்மதிப் படங்களினூடாக சேகரித்த தகவல்களையே இலங்கை அரசுக்கு வழங்கி வந்திருந்தது. அக்காலப்பகுதியில் அமெரிக்காவினால் எடுக்கப்பட்ட செய்மதிப் புகைப்படங்கள் தரையில், கூட்டமாகவும், தனியாகவும் நடமாடும் மனிதர்களைத் துல்லியமாக இனங்காணும் ஆற்றலினை அன்றே பெற்றிருந்ததாக அறியமுடிகிறது.

ஆனால், இன்றோ நிலைமை வேறு. இன்றிருக்கும் செய்மதிப் புகைப்படக் கருவிகள் தரையில் நடமாடும் ஒருவரை மிகவும் துல்லியமாக அடையாளம் காண்பது மட்டுமல்லாமல், அவர் கையில் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தின் வகை மற்றும் அதில் காணப்படும் நேரம் முதற்கொண்டு பல நுண்ணிய தகவல்களை படம்பிடிக்கும் ஆற்றலினைப் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத் தகது. அண்மையில் கூகிள் நிறுவனத்திற்கும் அமெரிக்க அரசுக்கும் இடையிலான செய்மதிப் புகைப்பட சிக்கலொன்றில், கூகிள் நிறுவனம் பாவிக்க எத்தனித்த, அமெரிக்க அரசின் செய்மதி ஒளிப்படத் தரத்தினை மிஞ்சும்  உயர் தெளிவுகொண்ட புகைப்படங்களை அனுமதிப்பதில்லையென்று அமெரிக்க அரசாங்கம் முடிவெடுத்திருந்தது குறிப்பிடத் தக்கது. இதுதொடர்பாக கருத்துவெளிட்ட அமெரிக்காவின் தேசிய செய்மதிமூல புலநாய்வுத்துறையின் தளபதி வைஸ் அட்மிரல் ரொபெட் முர்ரெட், அதி தெளிவுகொண்ட செய்மதி ஒளிப்படங்கள் இணையத்தில் பரவுவதை முற்றாகத் தடைசெய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டதும் குறிப்பிடத் தக்கது. இதன் விளைவாகவே நாம் இன்றிருக்கும் கூகிளின் தெளிவு குறைந்த செய்மதி ஒளிப்படங்களைக் காணவேண்டியேற்பட்டிருக்கிறது. 1999 ஆம் ஆண்டு ஒளிப்படங்களை எடுக்கவென விண்ணிற்கு அனுப்பப்பட்ட செய்மதியான இகோனோஸ் - 2 எனும் செய்மதியூடாகக் கிடைக்கும் தரங்குன்றிய  ஒளிப்படங்களே இன்றுவரை எமக்குக் கிடைத்து வருகின்றன.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொழிநுட்பம் குன்றிய செய்மதியூடான ஒளிப்படங்கள் தரையில் பயணிக்கும் வாகனங்களைத் துல்லியமாகப் படம்பிடிக்க முடியும் என்றால், இன்றிருக்கும் அதி தெளிவுகொண்ட செய்மதிகளினால் எடுக்கப்படும் படங்களின் தெளிவுபற்றி நாம் சந்தேகப்படத் தேவையில்லை. பலம்பொருந்திய நாடுகளின் பாதுகாப்பு உளவுத்துறைகளில் செய்மதியூடான ஒளிப்படங்களின் பாவனையென்பது பாரிய பங்கினைச் செலுத்திவருகிறது என்றால் அது மிகையில்லை. அமெரிக்கா தனது பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கிவரும் வருடாந்த செலவீனத்தில் 43 பில்லியன் டாலர்களை அதிதொழிநுட்ப செய்மதி உளவுக்காக ஒதுக்கியிருப்பதுடன், இதற்கென்று தனியான படையமைப்பினையும் இயக்கிவருகிறது. ஆனால், இதிலுள்ள பலவீனம் என்னவென்றால், எதிரிகள்கூட இந்த தொழிநுட்பத்தினை பாவிக்கமுடியும் என்பதுதான். இதற்காக பலநாடுகள் எதிரிகளின் செய்மதிகளைக் குருடாக்குவதற்காக லேசர் கதிர்களை பாய்ச்சிவருகிறார்கள். மிக அண்மையில் சீனா பூமியைச் சுற்றிவரும் செய்மதிகளை அழிக்கும் ஏவுகனையொன்றினை வெற்றிகரமாக ஏவியதும் இங்கு குறிப்பிடத் தக்கது.

தமிழ்ச்செல்வனின் படுகொலையினை நாம் நோக்கினால், தமிழ்ச்செல்வன் உபயோகிக்கும் அவரது கைத்தடியினை துல்லியமாக இனங்கண்டு கொள்ளும் எந்தவொரு செய்மதியும், அவரை இலக்காக்கியிருக்கலாம் என்பது திண்ணம். அதுமட்டுமல்லாமல் தமிழ்ச்செல்வன் வழமையாக ஏனைய அதிகாரிகளைச் சந்திக்கும் அவரது வாசஸ்த்தலத்தின் அமைவிடம் கூட பரம ரகசியம் கிடையாது. தமிழ்ச்செல்வன் பாவித்துவந்த அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தினை அமெரிக்க செய்மதியூடான புலநாய்வுத்துறையோ, அல்லது பிரித்தானிய புலநாய்வுத்துறையின் செய்மதிப் பிரிவோ அல்லது இந்தியாவினால் அண்மையில் உருவாக்கப்பட்ட செய்மதி உளவுப்பிரிவான ஐ ஆர் எஸ் பிரிவோ தொடர்ச்சியாகக் கண்காணித்து வந்திருக்கலாம் என்று தற்போது தெரியவந்திருக்கிறது. இவற்றிற்கு மேலாக தமிழ்ச்செல்வன் தான் கொல்லப்படும் தருணத்திற்குச் சற்று முன்னர் செய்மதியூடான தொலைத்தொடர்பிற்காக அவர் பாவிக்கும் தொலைபேசியினை உபயோகப்படுத்தியிருந்தால் அதுகூட நிச்சயமாக அவரை இலக்காக மாற்ற உதவியிருக்கலாம். 

ஆனால், இந்த உயர் தொழிநுட்பங்கள் எல்லாம், செல்வனின் இருப்பிடத்தை அவதானிக்கவும், அவர் அருகில் இருக்கும்போது இலக்குவைக்கவுமே உதவக்கூடியவை என்பதும் தெளிவானவது. அதற்குமேல் இவற்றால் கிடைக்கக் கூடிய பயன்கள் மட்டுப்படுத்தப்பட்டவை. குறிப்பிட்ட ஒரு மனிதரின் இருப்பிடம், அவர் அப்பகுதிக்கு வரும் நேரம் என்பன அவ்விடத்தினை மிகவும் துல்லியமாக அறிந்துவைத்திருக்கும் ஒருவரினால் மட்டுமே அடையாளம் காட்டமுடியும் . இங்கிருந்துதான் கருணாவின் பங்களிப்பு இப்படுகொலையில் உள்நுழைந்திருக்கிறது. 

பிரித்தானியாவிற்கு போலியான கடவுச் சீட்டுடன் சென்றிறங்கிய கருணாவை வெறுமனே தடுத்துவைத்து, அவரின் மனிதவுரிமைகளை விசாரிக்க விரும்பாத பிரித்தானிய அரசு, கருணாவை பாதுகாப்பாகப் பத்திரப்படுத்திவைத்திருந்த 9 மாதகாலப் பகுதியில் புலிகளின் உள்வீட்டு ரகசியங்களை நிச்சயமாக அறிந்திருக்கும் என்பது திண்ணம். இந்த 9 மாத காலப்பகுதியில் நான் எல்லோரும் நினைத்திருந்த "பிரித்தானியாவின் கைதி"என்பதைவிடவும் "பிரித்தானிய உளவுத்துறையின் செயற்ப்பாட்டாளர்  கருணா" என்பதே அவருக்குப் பொருத்தமான பெயராக இருந்திருக்கும். அவருக்கு வழங்கப்பட்ட உடனடிப் பணியாக புலிகளின் பிரமுகர்களின் முக்கிய வாசஸ்த்தலங்கள், கூடும் இடங்கள், தங்குமிடங்கள் ஆகியவற்றினைப் பட்டியலிடுதல் அமைந்திருக்கிறது. இவ்வாறு கருணாவிடமிருந்து பெறப்பட்ட மிக முக்கியமான புலிகள் பற்றீய ரகசியத் தகவல்கள் பிரித்தானிய அரசினால் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதே இதிலிருந்து நாம் அறிந்துகொள்ளக்கூடியது. பிரித்தானியாவின் முன்னாள் ராணுவ அதிகாரிகளினால் நடத்தப்பட்ட கீனி மீனி கூலிப்படைகளின் இலங்கை ராணுவத்திற்கான உதவிகளைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒருவருக்கு, கருணாவைப் பாவித்து பிரித்தானியா இலங்கைக்கு உதவியதென்பதை புரிந்துகொள்வது கடிணமாக இருக்கப்போவதில்லை. 

  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.