Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறை மீண்டார் பிள்ளையான்! பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 24/11/2020 at 22:17, குமாரசாமி said:

இனி  மட்டக்களப்பின்ரை அபிவிருத்தியை அணைகட்டினாலும் தடுத்து நிப்பாட்டேலாது.😎

இது மாவீரர் வாரம். அவர்களுக்கு தீபம் ஏற்றவேண்டாம், அவர்கள் ஆன்மா சாந்தியடைய அவர்கள் தியாகங்களை மதித்து ஓரிரு வார்த்தைகள் பகிரங்கமாக  பேசட்டும், அதன்பின் அபிவிருத்தியைபற்றிப் பேசுவோம். உதை காட்டி வாழ்நாளெல்லாம் மக்களை மேய்த்துக்கொண்டிருப்பார்கள். எங்கள் உரிமையை தந்தால்  எங்கள் நாட்டை அபிவிருத்தி செய்ய எங்களுக்கு தெரியும். ஒருவரும் அபிவிருத்தி பற்றி எங்களுக்கு பாடம் எடுக்கத் தேவையில்லை. எங்கள் அபிவிருத்தியை கண்டு மனம் பொறுக்காமல், திட்டமிட்டு அழித்ததெல்லாம் இந்நாள்வரை  எங்களின் உடமையை,  உழைப்பை  அனுபவித்துக்கொண்டு அபிவிருத்தி பற்றிபேசுது.

  • Replies 133
  • Views 13.3k
  • Created
  • Last Reply
On 26/11/2020 at 00:54, valavan said:

பிரதேசவாதத்தை கிளப்பி கிழக்கு மக்களை ஒன்றுபட்ட தாயக உணர்விலிருந்து  அந்நியபடுத்திவிடலாம் என்று கனவுகண்ட கருணாவே வாய்விட்டு புலம்பும் அளவிற்கு அவர்களை புறக்கணித்து தமிழ்தேசிய கூட்டமைப்பை தேர்வு செய்திருக்கிறது, ஆனால் அவர்கள அந்த மக்களுக்காக ஆற்றிய துயர் துடைப்புதான் என்ன?

மண்டையன்குழு என்ற பெயரில் பல படுகொலைகளையும் படுபாதக செயல்களையும் செய்து  தமிழர் தாயகத்தை இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கு காட்டிக்கொடுத்து , அசோகா ஹோட்டலில் பல போராளிகளையும் , ஆதரவாளர்களையும் அடித்தே கொன்று மலகுழியில் போட்டு மூடி மிலேச்சத்தனமான வாழ்வு வாழ்ந்த சுரேஷ் பிரேமசந்திரனை புலிகள் கூட காலத்தின் தேவை கருதி தமிழ்கூட்டமைப்புக்குள் உள்வாங்கி கிளிநொச்சியில் தலைவர் முன்னாடியே அமர செய்து பேசியதும்,

இன்று புலிகள்மீதும் தமிழர்மீதான அராஜகம்மீதும் உச்சம் தொட்ட அவரை   வடபகுதி மக்கள் மன்னித்து அவரை தமிழர் தாயக பிரதிநிதிகளில் ஒருவராய் ஏற்றுக்கொண்டதுமான நிலமை இருக்கும்போது,

சிங்களவனுக்கும் முஸ்லீமுக்கும் வறுமைக்கும் நடுவில் சிக்கி தவிக்கும் மக்கள்  பிள்ளையானை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றால் அதில் என்ன தவறு இருக்க போகிறது?

 வெளியார் விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு அவர்கள் தமக்கான ஒரு வாழ்வை தேட தொடங்கிவிட்டார்கள்  அதனை நாங்கள்  விமர்சிக்க முடியும் ஆனால் அவர்கள் முடிவை தடுக்க முடியாது.

இங்கே பிள்ளையானுக்கும் மண்டையனுக்கும் உள்ள வேறுபாடு அவர் வேறு இயக்கத்திலிருந்தார், ஆனால் பிள்ளையான் புலிகளுக்குள் இருந்தே போராட்டத்தை உடைத்தார்.

சுரேஷ்பிரேமசந்திரனை நாங்கள் நம்பி இருந்ததில்லை, ஆனால் பிள்ளையான்மீது ஒருகாலம் நம்பிக்கை வைத்திருந்தோம், அந்த நம்பிக்கைக்கு அவர் செய்த துரோகமே இன்றுவரை வலியாக புலம்பெயர் தமிழர் மனசில் தொடர்கிறது, அது எந்த காலமும் மன்னிக்கப்பட முடியாத குற்றமாகவே மனசில் இருக்கும்

அதே நேரம் ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்தபின்னர் புலிகளின் புலம்பெயர்  பிரதிநிதிகளாய் வலம்வந்த பலர் எந்த துரோகமுமே பண்ணவில்லையா என்ன?

இது துரோகத்துக்கான ஆதரவல்ல, ஆனால் எங்களாலும் அந்த மக்களுக்கு ஏதும் பண்ண முடியவில்லை, அவர்களாக ஏதும் முடிவெடுத்தால் அதையும் ஏற்றுகொள்ளும் நிலையில் இல்லையென்றால் கிழக்கு 100% இஸ்லாமியர்களின் தேசமாகவும், இஸ்லாமியர்களிடம் கையேந்தும் பிரதேசமாகவும்,கனக லட்சுமி கறுப்பு துணியை தலையில் கட்டிக்கொண்டு கலீமாவாகவும், முகுந்தன் மீசையை மழித்துவிட்டு தாடி மட்டும் வைத்துக்கொண்டு முஹமதுவாகவும் மாறபோவதைஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தயாராகவே இருக்கவேண்டும்.

அதற்காக பிள்ளையான் வந்து பெரிய விடிவை அந்த மக்களுக்கு தருவார் என்றில்லை அதை அவர்கள் தெரிந்தே வைத்திருக்கிறார்கள், ஆனால் வேறு வழி ,தலைமை ஏதும் அவர்களுக்கு இருக்கிறதா?

மண்டையன் குழுவும் ஒரு காலத்தில் அரசில் இருந்தவர்கள்தான். சுரேஷ் இந்த அரசின் மீன்பிடி அமைச்சராக இருந்த இந்திக்கு குணவர்தனவின் ஆலோசகராக செயட்படடவர். அந்த காலத்தில் இருந்த அரச அதிகாரிகளை தனது பதவியை வைத்து பயமுறுத்தி பிழையாக செயட்பட முயச்சித்ததாகவும் தகவல். ஆனால் மக்களுக்கு எந்த சேவையையும் செய்ததில்லை.

மக்கள் இனி வேறு வகையில் சிந்தித்து தங்கள் வாழவதாரத்தையும் இருப்பையும் தக்கவைத்துக்கொள்ள தீர்மானித்துவிடடார்கள். எனவே அது பிள்ளையானாக, வியாழேந்திரனாக , கருணாவாக இருந்தாலும் பிரச்சினை இல்லை. அரசியல் பிரச்சினை இருந்தாலும் வாழ்வாதார பிரச்சினையும் முக்கியம்தான். எனவே உங்கள் கருத்தை வரவேட்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 26/11/2020 at 04:13, தனிக்காட்டு ராஜா said:

ஆயிரக்கணக்கானவர் நேர்முகத்தேர்வுக்கு சென்று பங்கு பற்றி அழைப்புக்கு காத்திருக்கிறார்கள் நாளை இலங்கை ராணுவம் என இந்த தமிழ் ராணுவத்தினரையும் சேர்ந்து திட்டுவார்கள். 

ரணில் ஒருமுறை சொன்னது நினைவில் வருகிறது. இனிமேல் சிங்கள இராணுவம் புலிகளுடன் சண்டையிடாது. அமெரிக்க, இந்திய இராணுவமே போரிடும் என்று அந்த நாடுகளுடன் ஒப்பந்தம் செய்தபின் கூறினார். தன் விரலை எடுத்து தன் கண்ணையே குத்தும் தந்திரத்தில் சிங்களவனை வெல்ல யாராலும் முடியாது. எங்கள் தொழிலையும், நிலங்களையும் எங்களிடம் இருந்து பறித்து தன் திட்டத்தை நிறைவேற்றுவதோடு தன் கையையும் சுத்தமாக்கிக் கொள்வான். உங்களுக்கும் சந்தோஷம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

யுத்த நிறுத்த காலத்தில் அரசு பேசிய டீலை ஒத்துக் கொண்டிருந்தால் இந்த இழப்பு வந்திருக்காது ஆனால் நாம்தானே யார் சொல்வதையும் ஏற்றுக்கொள்வதில்லை நம்ம திமிர் அப்படி.  கேட்டால் வீரத்தமிழர்கள் என்று சொல்லி கொள்வது 😊😊😇

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் பேசியதில் எதை நிறைவேற்றினான் இதுவரையில்? வரலாற்றைப் பிரட்டிப் பாருங்கள். அவன் நீதியாய் நடந்திருந்தால் இவ்வளவு உயிரிழப்புகள் அழிவுகள் நிகழ்ந்திருக்காது எம்மினத்துக்கு. திட்டமிட்டு சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து ஏமாற்றியது தான் வரலாறு. செல்வநாயகம், தமிழரை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று அவரிலேயே பாரத்தைப்போட்டுவிட்டு விலகிக்கொண்டார்.        

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

யுத்த நிறுத்த காலத்தில் அரசு பேசிய டீலை ஒத்துக் கொண்டிருந்தால் இந்த இழப்பு வந்திருக்காது ஆனால் நாம்தானே யார் சொல்வதையும் ஏற்றுக்கொள்வதில்லை நம்ம திமிர் அப்படி.  கேட்டால் வீரத்தமிழர்கள் என்று சொல்லி கொள்வது 😊😊😇

நீங்களுமா???

வரலாற்றுடன் பயணித்தவர்  என்று  நினைத்திருந்தேன்  இதுவரை????

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

நீங்களுமா???

வரலாற்றுடன் பயணித்தவர்  என்று  நினைத்திருந்தேன்  இதுவரை????

இப்போதுதான் வெளியே வருகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

நீங்களுமா???

வரலாற்றுடன் பயணித்தவர்  என்று  நினைத்திருந்தேன்  இதுவரை????

பதிவுகளிலிருந்து  புரியவில்லையா? உள்ளத்தின் நிறைவே வாய்பேசும்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

நீங்களுமா???

வரலாற்றுடன் பயணித்தவர்  என்று  நினைத்திருந்தேன்  இதுவரை????

அண்ணை, 

2004ஆம் ஆண்டு, மார்ச் மாதம், இனத்துரோகி கருணா தேசிய விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து சில நாட்களின் பின்பு பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருந்தவேளை, கிழக்கு மாகாணத்திலிருந்து பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடவிருந்த அனைத்து கூட்டமைப்பு பிரதிநிதிகளையும் கொக்கட்டிச் சோலைக்கு அழைத்திருந்தான். அங்கே அவன் கூறிய ஒரே விடயம், "நீங்கள் இனிமேல் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி பற்றி மட்டும்தான் பேச முடியும், பாராளுமன்றத்திற்குத் தெரிவாகும் ஒவ்வொருவரும் அரசாங்கத்துடன் சேர்ந்தே வேலை செய்யவேண்டும், எவராவது வன்னித்தலைக்கு ஆதரவாகப் பேசினால் கொல்லப்படுவீர்கள்" என்று வெளிப்படையாகக் கட்டளையிட்டிருந்தான். அங்கிருந்த உறுப்பினர்களில் அமரர் யோசேப் பரராஜசிங்கத்தைத் தவிர அனைவரும் கருணாவின் கட்டளைக்கு ஒத்துக்கொள்ள, பரராஜசிங்கம் மட்டும் தமிழ்த் தேசியத்திற்கான தனது ஆதரவை வெளிப்படுத்தினார். இறுதியில் அவரை ஆலய வழிபாட்டில் வைத்து இனத்துரோகி கருணாவின் அடியாள் பிள்ளையான் அருகிலிருந்து சுட்டுக் கொன்றான்.

அன்று இனத்துரோகிகள் பேசிய அதே வார்த்தைகளும், கூக்குரல்களும் இப்போதும் ஒலிக்கின்றன. "கிழக்கு மாகாண அபிவிருத்தி, சலுகைகள், அரசாங்கத்துடன் சேர்ந்து பயணிப்பது". இவற்றை இன்று சொல்வது யாரென்று பார்த்தால் உங்களுக்கு அவர்கள் யாரென்பதும், அவர்களின் பின்புலம் எதுவென்பதும் விளங்கும். ஒரு இனத்துரோகியை, எமது விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து, அதனை அழிக்கத் துணை போன கயவர்களை இத்தளத்தில் வெளிப்படையாகவே ஒருவரால் வாழ்த்த  முடிகிறதென்றால், இவர்கள் யாரென்று புரிந்துகொள்வது கடிணமாக இருக்கப்போவதில்லை.

அநியாயத்திற்கு அப்பாவியாக இருக்கிறீர்களே அண்ணை? திருந்துங்கோ, சொல்லவருவதை வெளிப்படையாக, தைரியமாகச் சொல்லுங்கோ. ஒரு துரோகியை வெளிப்படையாக வாழ்த்தி, ஆதரித்துப் பேச சிலருக்கு தைரியம் இருக்கும்போது, எமது கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்ல நீங்கள் இன்னும் தயங்குவதேன்?

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரஞ்சித் said:

ஒரு துரோகியை வெளிப்படையாக வாழ்த்தி, ஆதரித்துப் பேச சிலருக்கு தைரியம் இருக்கும்போது, எமது கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்ல நீங்கள் இன்னும் தயங்குவதேன்?

குணம் குணத்தோடுதான் சேரும். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரஞ்சித் said:

அண்ணை, 

2004ஆம் ஆண்டு, மார்ச் மாதம், இனத்துரோகி கருணா தேசிய விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து சில நாட்களின் பின்பு பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருந்தவேளை, கிழக்கு மாகாணத்திலிருந்து பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடவிருந்த அனைத்து கூட்டமைப்பு பிரதிநிதிகளையும் கொக்கட்டிச் சோலைக்கு அழைத்திருந்தான். அங்கே அவன் கூறிய ஒரே விடயம், "நீங்கள் இனிமேல் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி பற்றி மட்டும்தான் பேச முடியும், பாராளுமன்றத்திற்குத் தெரிவாகும் ஒவ்வொருவரும் அரசாங்கத்துடன் சேர்ந்தே வேலை செய்யவேண்டும், எவராவது வன்னித்தலைக்கு ஆதரவாகப் பேசினால் கொல்லப்படுவீர்கள்" என்று வெளிப்படையாகக் கட்டளையிட்டிருந்தான். அங்கிருந்த உறுப்பினர்களில் அமரர் யோசேப் பரராஜசிங்கத்தைத் தவிர அனைவரும் கருணாவின் கட்டளைக்கு ஒத்துக்கொள்ள, பரராஜசிங்கம் மட்டும் தமிழ்த் தேசியத்திற்கான தனது ஆதரவை வெளிப்படுத்தினார். இறுதியில் அவரை ஆலய வழிபாட்டில் வைத்து இனத்துரோகி கருணாவின் அடியாள் பிள்ளையான் அருகிலிருந்து சுட்டுக் கொன்றான்.

அன்று இனத்துரோகிகள் பேசிய அதே வார்த்தைகளும், கூக்குரல்களும் இப்போதும் ஒலிக்கின்றன. "கிழக்கு மாகாண அபிவிருத்தி, சலுகைகள், அரசாங்கத்துடன் சேர்ந்து பயணிப்பது". இவற்றை இன்று சொல்வது யாரென்று பார்த்தால் உங்களுக்கு அவர்கள் யாரென்பதும், அவர்களின் பின்புலம் எதுவென்பதும் விளங்கும். ஒரு இனத்துரோகியை, எமது விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து, அதனை அழிக்கத் துணை போன கயவர்களை இத்தளத்தில் வெளிப்படையாகவே ஒருவரால் வாழ்த்த  முடிகிறதென்றால், இவர்கள் யாரென்று புரிந்துகொள்வது கடிணமாக இருக்கப்போவதில்லை.

அநியாயத்திற்கு அப்பாவியாக இருக்கிறீர்களே அண்ணை? திருந்துங்கோ, சொல்லவருவதை வெளிப்படையாக, தைரியமாகச் சொல்லுங்கோ. ஒரு துரோகியை வெளிப்படையாக வாழ்த்தி, ஆதரித்துப் பேச சிலருக்கு தைரியம் இருக்கும்போது, எமது கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்ல நீங்கள் இன்னும் தயங்குவதேன்?

இது பற்றி  எழுதுவதானால் பெரிய  புத்தகமாகிவிடும்

எனக்கொரு  கனவு  உண்டு

தூர நோக்கோடான பாதையது

அப்பாவித்தனம்  என உங்களுக்கு  படுமளவுக்கு  கூட  சில  பொறுப்புக்களிலிருந்தவன்  என்ற ரீதியில் இப்படியான பொறுப்பும் கனமும் வந்து  விட்டது

ஆனால் யாழில் நான்  நிற்கின்ற  நேர்கோட்டில் எவரும் நின்றதில்லை  என்கின்ற அளவுக்கு 

தலைவரை, மாவீரரை, புலிகளை, அதன் செயற்பாட்டாளர்களை தொட்டவரை தூக்கி எறிய பின்னின்றதில்லை.

இதுவும் கடந்து போகும் ரகு...

நாம் கண்டவை சந்தித்தவை குறுக்காலபோனவை  என்பதுடன்  ஒப்பிட்டால்

இதெல்லாம் வெறும்?????

  • கருத்துக்கள உறவுகள்

ஜோசப் பரராஜசிங்கம் பற்றி கவலை படுவர்களுக்கு நிமலன் செளந்தரநாயகம் பற்றி தெரியுமா?...யார், எதுக்கு கொலை செய்தார்கள் என்றாவது தெரியுமா ?....ஜோசப்பிற்காய் நீலிக் கண்ணீர் வடிக்க வேண்டாம் 

  • கருத்துக்கள உறவுகள்

யோசேப்பிற்காக நீலிக்கண்ணீர் வடிக்கவில்லை, உண்மையாகவே கண்ணிர் வடிக்கிறோம். 

தமிழ்த்தேசியத்தை இறுதிவரை ஆதரித்து நின்றதற்காக பிரதேசவாதம் கக்கிய இனத்துரோகிகளால் கொல்லப்பட்டதற்காய் உண்மையாகவே கண்ணீர் வடிக்கிறோம்.

துரோகிகளுக்கும், பிரதேசவதப் பிசாசுகளுக்கும் வெள்ளையடிக்கப் பாடுபடும் அடிவருடிகளுக்கு அது நீலிக்கண்ணீராய்த் தெரிவது வியப்பில்லை.

1 hour ago, ரதி said:

ஜோசப் பரராஜசிங்கம் பற்றி கவலை படுவர்களுக்கு நிமலன் செளந்தரநாயகம் பற்றி தெரியுமா?...யார், எதுக்கு கொலை செய்தார்கள் என்றாவது தெரியுமா ?....ஜோசப்பிற்காய் நீலிக் கண்ணீர் வடிக்க வேண்டாம் 

யார் நிமலன் செளந்தரநாயகம்? எதற்காக கொலை செய்யப்பட்டார்?  இதுவரை அறியாததால் கேட்கிறேன் ரதி. 

20 hours ago, தனிக்காட்டு ராஜா said:

யுத்த நிறுத்த காலத்தில் அரசு பேசிய டீலை ஒத்துக் கொண்டிருந்தால் இந்த இழப்பு வந்திருக்காது ஆனால் நாம்தானே யார் சொல்வதையும் ஏற்றுக்கொள்வதில்லை நம்ம திமிர் அப்படி.  கேட்டால் வீரத்தமிழர்கள் என்று சொல்லி கொள்வது 😊😊😇

அப்பொழுது வந்த தீர்வுக்குரிய அளவுக்கு எந்த ஒரு தீர்வும் இனி கிடைக்கப்போவதில்லை. இப்போதிருக்கும் 13 மைனஸை காப்பாற்றினாலே பெரிய காரியம். கத்தியை மட்டும் தீட்டக்கூடாது, புத்தியையும் தீடட வேண்டும். இல்லாவிடடாள் இருப்பதையும் இழக்க நேரிடும்.

3 hours ago, tulpen said:

யார் நிமலன் செளந்தரநாயகம்? எதற்காக கொலை செய்யப்பட்டார்?  இதுவரை அறியாததால் கேட்கிறேன் ரதி. 

நான் நினைக்கிறேன் நிமலன் மயில்வாகனத்தை சொல்லுகிறாற்போல. இவர் யாழ்ப்பாணத்தில் ஈபிடிபி இனரால் கொல்லப்படட ஊடகவியலார். இருந்தாலும் அக்கா வேறு யாரையும் குறிப்பிடுகிறாரோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

ஜோசப் பரராஜசிங்கம் பற்றி கவலை படுவர்களுக்கு நிமலன் செளந்தரநாயகம் பற்றி தெரியுமா?...யார், எதுக்கு கொலை செய்தார்கள் என்றாவது தெரியுமா ?....ஜோசப்பிற்காய் நீலிக் கண்ணீர் வடிக்க வேண்டாம் 

தெரிஞ்சா சொல்லுவோம் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

ஜோசப் பரராஜசிங்கம் பற்றி கவலை படுவர்களுக்கு நிமலன் செளந்தரநாயகம் பற்றி தெரியுமா?...யார், எதுக்கு கொலை செய்தார்கள் என்றாவது தெரியுமா ?....ஜோசப்பிற்காய் நீலிக் கண்ணீர் வடிக்க வேண்டாம் 

கும்மானின் உத்தரவின்படி கிரான் சங்கக்கடைக்கு முன்னால் 2000 ஆண்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். கொழும்பிற்கு ஒருவரை கூட்டி செல்ல மறுத்ததற்காக.

பி.கு: இதற்கும் பொட்டம்மானுக்கும் தொடர்பு என்டு மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள்.

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, tulpen said:

யார் நிமலன் செளந்தரநாயகம்? எதற்காக கொலை செய்யப்பட்டார்?  இதுவரை அறியாததால் கேட்கிறேன் ரதி. 

4 hours ago, MEERA said:

கும்மானின் உத்தரவின்படி கிரான் சங்கக்கடைக்கு முன்னால் 2000 ஆண்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். கொழும்பிற்கு ஒருவரை கூட்டி செல்ல மறுத்ததற்காக.

பி.கு: இதற்கும் பொட்டம்மானுக்கும் தொடர்பு என்டு மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள்.

இவர் 2000 ஆண்டளவில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார் ... கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு, போட்டியிட்ட முதல் தேர்தலியே வென்றார் ...மிகுந்த ஆங்கில அறிவு கொண்டவர் ....ஆங்கில ஆசிரியராய் இருந்தவர்...உண்மையிலயே மக்களுக்காய் சேவையாற்ற கூடிய ஒருவர்.
வென்று முதல் ,முதலில் பாராளுமன்றம் போவதற்கு ஓர் ,இரு கிழமைகள் இருக்கும் முன் பேச்சு வார்த்தைக்கு புலிகளால் அழைக்கப்பட்டு இருந்தார் .. நாகேஸ் என்பவர் தான் இவரை கூப்பிட்டு கதைத்தவர் ...அவர் மோ.சைக்கிளில் தான் பேச்சு வார்த்தைக்கு சென்றார்...முடிந்து வரும் போது  இடையில் அவர் தனக்கு தெரிந்தவர்களோடு நின்று கதைத்திருக்கிறார்...அப்போது தனக்கு புலிகள் ஹெல்மெட்[நீலமோ,சுகப்போ நினைவில் இல்லை.] பரிசளித்தாய் சொல்லி காட்டியிருக்கிறார்...அவர் அதில் கதைத்து விட்டு கொஞ்ச தூரம் கூட போயிருக்க மாட்டார்....சுட்டுத் தள்ளப்பட்டார்....ஹெல்மேட்  புலிகள் கொடுத்தது இலகுவார் அவரை போட்டுத் தள்ள...சுட்ட புலி பெடியன்கள் யாரென்று கூட அந்த சந்தியில் நின்றவர்கள் பாத்து இருக்கிறார்கள் . 
 நாகேஷ் அவர் நேரடியாய் புலிகளது புலனாய்வு கடடமைப்போடு செயற்படுபவர்...விசுகு என்பவர் கட்டளையின் கீழ் அவர் சுட்டுக் கொல்லப்படாராம் ...தமக்கு வேண்டிய ஒரு புலி உறுப்பினரை அவரது வாகனத்தில் கொழும்பிற்கு கூட்டி செல்லும் படி கேட்கப்பட்டு மறுக்க பட்ட்தாலே அவர் கொல்லப்பட்டார் என்று அந்த நேரத்தில் கதை அடிபட்ட்து ...இந்த கொலையில் புலிகளோடு சேர்த்து திட்டம் தீட்டியது  முன்னால்  பாராளுமன்ற உறுப்பினர் ...அவர் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார்.
கருணா  அத காலப் பகுதியில் வன்னியில் இருந்தார்...இதில் அவரது பங்கு இருந்ததா/ இல்லையா என்பது பற்றி எனக்குத் தெரியாது [இவருடைய பங்கு இந்த கொலையில்  இல்லை என்று தான் சொல்கிறார்கள்.] ...அவர் சொல்லி தான் இவரை போட்டு தள்ளி இருந்தாலும் , அந்த நேரத்தில் கருணாவிற்கு யார் தலைவர்?

அங்கிருக்கும் மக்களுக்கு எதுவுமே செய்யாமல் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்ற ஜோசப்பிற்காய் கண்ணீர் வடிக்கும் சிலர் புலிகள் , மக்களுக்கு சேவை செய்யக் கூடிய எத்தகைய ஆளுமைகளை போட்டு தள்ளியதை மறந்து விடுகின்றனர் ... எனக்கு தேவை என்றால் ரத்தம் ,உனக்கு தேவை என்றால் தக்காளி என்ட நிலை தான் 

மீரா , கொழும்பிற்கு குண்டு வைப்பதற்கு ஒருவரை கூட்டி செல்ல வேண்டிய தேவை கருணாவிற்கு இல்லை ...அது புலனாய்வோடு சம்மந்தப்பட்ட விடயம் என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை 

நிமலன் உடன் இன்னொருவர் தேர்தவு செய்யப்பட்டிருந்தாரே... அந்த மற்றவர் யார்?

40 minutes ago, ரதி said:

மீரா , கொழும்பிற்கு குண்டு வைப்பதற்கு ஒருவரை கூட்டி செல்ல வேண்டிய தேவை கருணாவிற்கு இல்லை ...அது புலனாய்வோடு சம்மந்தப்பட்ட விடயம் என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை 

கிழக்கினூடாக குறிப்பாக மட்டுவினூடாகவே பலர் தென்பகுதிக்கு சென்றனர்.. மட்டு அம்பாறை 100% கும்மானின் கட்டுப்பாட்டில் இருந்தது, அதனாலேயே பல முரண்பாடுகள் ஏற்பட்டது. அங்கு நின்று செயற்பட்டவர்களுக்கு தெரியும்

1 hour ago, ரதி said:

இவர் 2000 ஆண்டளவில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார் ... கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு, போட்டியிட்ட முதல் தேர்தலியே வென்றார் ...மிகுந்த ஆங்கில அறிவு கொண்டவர் ....ஆங்கில ஆசிரியராய் இருந்தவர்...உண்மையிலயே மக்களுக்காய் சேவையாற்ற கூடிய ஒருவர்.
வென்று முதல் ,முதலில் பாராளுமன்றம் போவதற்கு ஓர் ,இரு கிழமைகள் இருக்கும் முன் பேச்சு வார்த்தைக்கு புலிகளால் அழைக்கப்பட்டு இருந்தார் .. நாகேஸ் என்பவர் தான் இவரை கூப்பிட்டு கதைத்தவர் ...அவர் மோ.சைக்கிளில் தான் பேச்சு வார்த்தைக்கு சென்றார்...முடிந்து வரும் போது  இடையில் அவர் தனக்கு தெரிந்தவர்களோடு நின்று கதைத்திருக்கிறார்...அப்போது தனக்கு புலிகள் ஹெல்மெட்[நீலமோ,சுகப்போ நினைவில் இல்லை.] பரிசளித்தாய் சொல்லி காட்டியிருக்கிறார்...அவர் அதில் கதைத்து விட்டு கொஞ்ச தூரம் கூட போயிருக்க மாட்டார்....சுட்டுத் தள்ளப்பட்டார்....ஹெல்மேட்  புலிகள் கொடுத்தது இலகுவார் அவரை போட்டுத் தள்ள...சுட்ட புலி பெடியன்கள் யாரென்று கூட அந்த சந்தியில் நின்றவர்கள் பாத்து இருக்கிறார்கள் . 
 நாகேஷ் அவர் நேரடியாய் புலிகளது புலனாய்வு கடடமைப்போடு செயற்படுபவர்...விசுகு என்பவர் கட்டளையின் கீழ் அவர் சுட்டுக் கொல்லப்படாராம் ...தமக்கு வேண்டிய ஒரு புலி உறுப்பினரை அவரது வாகனத்தில் கொழும்பிற்கு கூட்டி செல்லும் படி கேட்கப்பட்டு மறுக்க பட்ட்தாலே அவர் கொல்லப்பட்டார் என்று அந்த நேரத்தில் கதை அடிபட்ட்து ...இந்த கொலையில் புலிகளோடு சேர்த்து திட்டம் தீட்டியது  முன்னால்  பாராளுமன்ற உறுப்பினர் ...அவர் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார்.
கருணா  அத காலப் பகுதியில் வன்னியில் இருந்தார்...இதில் அவரது பங்கு இருந்ததா/ இல்லையா என்பது பற்றி எனக்குத் தெரியாது [இவருடைய பங்கு இந்த கொலையில்  இல்லை என்று தான் சொல்கிறார்கள்.] ...அவர் சொல்லி தான் இவரை போட்டு தள்ளி இருந்தாலும் , அந்த நேரத்தில் கருணாவிற்கு யார் தலைவர்?

அங்கிருக்கும் மக்களுக்கு எதுவுமே செய்யாமல் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்ற ஜோசப்பிற்காய் கண்ணீர் வடிக்கும் சிலர் புலிகள் , மக்களுக்கு சேவை செய்யக் கூடிய எத்தகைய ஆளுமைகளை போட்டு தள்ளியதை மறந்து விடுகின்றனர் ... எனக்கு தேவை என்றால் ரத்தம் ,உனக்கு தேவை என்றால் தக்காளி என்ட நிலை தான் 

தகவலுக்கு நன்றி ரதி.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

அங்கிருக்கும் மக்களுக்கு எதுவுமே செய்யாமல் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்ற ஜோசப்பிற்காய் கண்ணீர் வடிக்கும் சிலர் 
 
அவர் 2004 ஆம்  ஆண்டில் நடந்த தேர்தலில் மட்டும்தான் தேசியப்பட்டியலில் சென்றார் அதற்கு முன்பெல்லாம் தெரிவுசெய்யப்பட்டே சென்றார்! வரலாற்றை உங்களுக்கேற்றவாறு மாற்றமுடியாது ரதி!

  • கருத்துக்கள உறவுகள்
On 27/11/2020 at 14:30, விசுகு said:

நீங்களுமா???

வரலாற்றுடன் பயணித்தவர்  என்று  நினைத்திருந்தேன்  இதுவரை????

வரலாறு சில சந்தர்ப்பங்களை தரும் விட்டால் பிடித்துக்கொள்ள முடியாது 

சில சமயம் வீரத்தை விட விவேகம் வெற்றியை தரும்

ஒன்றும் உதவாத மாவிலாறு பிடிப்பு இன்று நம்மை இந்த நிலையில் வைத்திருக்கு

On 27/11/2020 at 14:39, satan said:

பதிவுகளிலிருந்து  புரியவில்லையா? உள்ளத்தின் நிறைவே வாய்பேசும்.

அநேகமாக உங்கள் கதைகளை பார்க்கும் போது அடுத்த கட்ட ஈழப் போர் ஆரம்பித்து அடிக்க இருக்கிற ஆட்கள் போல இருக்கிறது என்று 😊😊

  • கருத்துக்கள உறவுகள்
On 27/11/2020 at 14:50, ரஞ்சித் said:

அண்ணை, 

2004ஆம் ஆண்டு, மார்ச் மாதம், இனத்துரோகி கருணா தேசிய விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து சில நாட்களின் பின்பு பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருந்தவேளை, கிழக்கு மாகாணத்திலிருந்து பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடவிருந்த அனைத்து கூட்டமைப்பு பிரதிநிதிகளையும் கொக்கட்டிச் சோலைக்கு அழைத்திருந்தான். அங்கே அவன் கூறிய ஒரே விடயம், "நீங்கள் இனிமேல் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி பற்றி மட்டும்தான் பேச முடியும், பாராளுமன்றத்திற்குத் தெரிவாகும் ஒவ்வொருவரும் அரசாங்கத்துடன் சேர்ந்தே வேலை செய்யவேண்டும், எவராவது வன்னித்தலைக்கு ஆதரவாகப் பேசினால் கொல்லப்படுவீர்கள்" என்று வெளிப்படையாகக் கட்டளையிட்டிருந்தான். அங்கிருந்த உறுப்பினர்களில் அமரர் யோசேப் பரராஜசிங்கத்தைத் தவிர அனைவரும் கருணாவின் கட்டளைக்கு ஒத்துக்கொள்ள, பரராஜசிங்கம் மட்டும் தமிழ்த் தேசியத்திற்கான தனது ஆதரவை வெளிப்படுத்தினார். இறுதியில் அவரை ஆலய வழிபாட்டில் வைத்து இனத்துரோகி கருணாவின் அடியாள் பிள்ளையான் அருகிலிருந்து சுட்டுக் கொன்றான்.

அன்று இனத்துரோகிகள் பேசிய அதே வார்த்தைகளும், கூக்குரல்களும் இப்போதும் ஒலிக்கின்றன. "கிழக்கு மாகாண அபிவிருத்தி, சலுகைகள், அரசாங்கத்துடன் சேர்ந்து பயணிப்பது". இவற்றை இன்று சொல்வது யாரென்று பார்த்தால் உங்களுக்கு அவர்கள் யாரென்பதும், அவர்களின் பின்புலம் எதுவென்பதும் விளங்கும். ஒரு இனத்துரோகியை, எமது விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து, அதனை அழிக்கத் துணை போன கயவர்களை இத்தளத்தில் வெளிப்படையாகவே ஒருவரால் வாழ்த்த  முடிகிறதென்றால், இவர்கள் யாரென்று புரிந்துகொள்வது கடிணமாக இருக்கப்போவதில்லை.

அநியாயத்திற்கு அப்பாவியாக இருக்கிறீர்களே அண்ணை? திருந்துங்கோ, சொல்லவருவதை வெளிப்படையாக, தைரியமாகச் சொல்லுங்கோ. ஒரு துரோகியை வெளிப்படையாக வாழ்த்தி, ஆதரித்துப் பேச சிலருக்கு தைரியம் இருக்கும்போது, எமது கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்ல நீங்கள் இன்னும் தயங்குவதேன்?

மிக்க மகிழ்ச்சி 

பரராஜசிங்கம் ஐயாவை சுடும்போது பக்கத்தில் இருந்து பார்த்தமாதிரியே பீலா விடுவதா ரகுநாதன் 😊

அடுத்தவனை துரோகியாக்கி பார்த்து பழகிவிட்டது நீங்கள் சொன்னால் என்ன சொல்லாவிட்டால் எனக்கென்ன எனது கருத்தைநேர்பட பேசுகிறேன். உங்களுக்கு நான் தேசிய வாதி,தேசதுரோகி என்று நிருபிக்க அவசியமும் இல்லை 😊🙃

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.