Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் வசந்தன் - சிறுகதை - நிவேதா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவின் அன்பான அழைப்பும் துயில் எழுப்பலும் எதுவும் இல்லை. தங்கையின் அலட்டல் ஆர்ப்பாட்டம் இல்லை. அப்பாவின் கம்பீரக் குரல் இல்லை. எனக்குப் பிடித்த இன்னும் பலதும் இங்கில்லைத்தான். ஆனாலும் அவர்கள் எல்லோருடனும் இருக்கும்போது இல்லாத ஒருவித நிம்மதியும் அதனூடே தெரியும்  வெறுமையுமே இப்ப எனக்கு இருந்தாலும் சுவாசக் காற்றில் எதோ ஒரு சுகத்தை கவலையினூடும் என்னால் உணர முடியிது.

நான் இரண்டு நாட்களாக என் அறையில் ஒருவித இலயிப்போடு சுருண்டு படுத்திருக்கிறேன். ஏழாம் மாடியின் அறை ஒன்றில் திரைச்சீலையற்ற யன்னலினூடே தெரியும் வானத்தையும் அப்பப்போ கடந்து போகும் மேகங்களையும் சில பறவைகளையும் கூட பல காலத்துக்குப் பின்னர் இப்பிடிப் படுத்தபடியே பார்த்து இரசிக்க முடியும் என்று ஒரு இரு மாதங்களுக்கு முன்புவரை நான் கனவில் கூட எண்ணியதில்லை.

அம்மா அப்பா தங்கை எல்லோரையும் விட்டுவிட்டு இந்த அறைக்கு நான் வந்து ஒரு வாரம் தான் ஆகிறது. வீட்டில் இடம் இல்லாமலோ அல்லது அம்மா அப்பாவோட பிரச்சனை என்றோ நான் வீட்டை விட்டு வரவில்லை. எத்தினை நாட்களுக்குத்தான் அவைக்கு என் விடயம் தெரிஞ்சிடுமோ தெரிஞ்சிடுமோ என்று பயந்து பயந்து இருக்கிறது. மற்றவைக்காக என் உணர்வுகளையும் மகிழ்ச்சியையும் ஏன் நான் விட்டுட்டு இருக்கோணும்.

சிலநேரம் அம்மாவோ அப்பாவோ என் பிரச்சனையைச் சொன்னால் விளங்கிக்கொண்டிருப்பினம் தான். ஆனால் சொன்ன பிறகு அவை அதிர்ச்சியில ஏதும் சொல்லிவிட்டால் என்னால அதைத் தாங்கேலாமல் இருந்திருக்கும். அதால நான் எடுத்த முடிவு சரிதான் என்று என் மனம் சொன்னதை ஏற்றுக்கொண்டுவிட்டேன்.

நான் வசந்தன். வயது 24. நல்ல உயரமான ஆண் அழகன். என்னைப் பற்றி  நானே பீத்திறன் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. என்னோட கதைக்க ஆசைப்படும் பெண்களை வரிசையில் நிக்கவைக்கலாம். நான் கேட்காட்டிக் கூட பெண்கள் விடாமல் என்னைத் துரத்தினால் நான் அழகன் தானே. ஆறடிக்கு மேல் இருப்பேன். தலை நிறைந்த அடர் முடி. கருப்பும் இல்லாமல் மா நிறமும் இல்லாமல் நல்ல ஒரு நிறம் எனக்கு. அம்மாவின் நிறம் தான் நீ என்று என் தங்கை குறைப்பட்டுக்கொள்வாள். அதற்குக்  காரணமும் இல்லாமல் இல்லை.

பெண் பிள்ளைகள் வெள்ளையாக இருந்தால் தானே எங்கள் பெடியளுக்குப் பிடிக்கும். என் தங்கையோ அப்பாவைப் போல கருமை நிறம். அதற்காக அவளுக்கு என்னிலோ எனக்கு அவளிலோ எள்ளளவும் எரிச்சலோ கோபமோ இருந்ததில்லை. என்னிலும் பார்க்க என்றுதான் சொல்லமுடியும்…. அவளுக்கு என்னில் அளவுகடந்த பாசம். ஒருநாள் கூட பகிடிக்குத் தன்னும் நான் அவளின் நிறம்பற்றிக் கதைத்தது கிடையாது. அம்மாதான் திவாவுக்கு உன்ர நிறம் வந்து உனக்கு அப்பாவின்ர  நிறம் வந்திருக்கலாம். ஆம்பிளையள் கறுப்பாய் இருக்கிறதுதான் களை என்று  தங்கை இல்லாத நேரம் என்னிடம் தன் ஆதங்கத்தைக் கொட்டும்போது எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கும். இருந்தாலும் அதை மறைத்துக்கொண்டு என்னம்மா கதைக்கிறீங்கள். தங்கச்சி என்னிலும் எவ்வளவு வடிவு  என்பேன். அம்மா ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு நீ தங்கச்சியை விட்டுக்கொடுக்க மாட்டாய் என்பார்.

எனக்கு சின்னனா நினைவு தெரிஞ்ச நாள்முதல் பெட்டையள் எண்டாலே சரியான விருப்பம். என் அயலட்டையில் ஆறேழு சின்னன்சிறிசுகள் இருக்கினம் தான். மீனாவோடையும் செல்லாவோடயும் சேர்ந்து விளையாடுவதுதான் விருப்பம் எனக்கு. அதிலும் அந்த மீனாவோடையே எப்போதும் இருக்கவேணும்போல, கதைக்கவேணும் போல என் உள்ளக்கிடக்கையைச் சொல்லவேணும்போல ஆசையா இருக்கும். ஆனா அம்மா ஏன்ரா பெட்டையளுக்குப் பின்னால திரியிறாய் என்று அவளவைக்கு முன்னாலேயே ஏசேக்குள்ள அளவேணும்போல இருக்க கண்ணெல்லாம் குளமாயிடும். பொம்பிளைப்பிள்ளை போல அழாதை என்று சொன்னதும் கண்ணீரும் வெளியில வராமல் நிண்டிடும்.

பள்ளிக்கூடம் போனாலும் பெட்டையளோடயே கதைக்கவேணும்போல இருக்கும். ஆனா பெடியள் என்னை இழுத்துக்கொண்டு போவிடுவாங்கள். அதிலும் அந்தக் கரன் அடிக்கடி என்னைக் கட்டிப்பிடிச்சு கடுப்பேத்துவான். என்பாட்டில ஒரு பக்கமாய் போய் நிண்டாலும் விடான். எடேய் வாடா எண்டு என்னைப்  பந்தடிக்க கூட்டிக்கொண்டு போயிடுவான். இருந்தாலும் மார்க்கண்டு வாத்திக்கும் அம்மாவுக்கும் பயந்து விருப்பம் இல்லாமல் விளையாடிக் கொண்டிருப்பன். வாத்தி அம்மாவின் ஒன்றுவிட்ட சகோதரன். தான் தான் எனக்குப் பள்ளிகூடத்தில் காவல்போல அம்மாவைக் காணும்நேரம் ஏதும் வத்திவைப்பார். அதுக்குப் பயந்து அவதானமாக இருப்பன்.

அப்பா வெளிநாடுபோய் எங்களையும் ஸ்பொன்சரில கூப்பிட்ட பிறகு ஊரும் இல்லை அயலுமில்லாமல் நான் சரியாக் கஷ்டப்பட்டுப்போனன். இங்க வந்து மொழி படிக்கிறது கஷ்டம் எண்டா ஒரு சின்ன வீட்டுக்குள்ள அக்கம்பக்கம் எங்கடை ஆட்களும் இல்லாமல்….. அதுகும் ஒருவகையில நின்மதியாத்தான் இருந்துது.

படிக்கட்டும் பிள்ளை எண்டு அப்பா வாங்கித் தந்த கணனியாலதான் என்ர சலிப்பான சிறிய  உலகமே மாறிப்போச்சு. அதுக்காக நான் படிப்பைக் கோட்டை விடேல்லை. அப்பா தான் பாவம். இரண்டு வேலை செய்து என்னையும் தங்கையையும் டியூசனுக்கு அனுப்பி ........ நான் அவையின் நம்பிக்கையைக் கெடுக்காமல் ஒருமாதிரிப் படிச்சு யூனியும் முடிக்கப்போறன். இவ்வளவு நாளும் அரசாங்கம் படிக்கக் காசு தந்தாலும் அம்மாவோடையே மூண்டு வருடங்களும் இருந்து கொஞ்சக் காசும் மிச்சம் பிடிச்சிட்டன். அதிலேதான் இனி மாஸ்டர்ஸ் செய்யவேணும். வீட்டில இருக்கிறது பல விதத்தில நன்மை. சாப்பாடு அந்தந்த நேரத்துக்கு பாசத்தோடு வரும். ஒதுக்குற வேலை, உடுப்புத் தோய்க்கிற வேலை, அதை அயர்ண் பண்ணுற வேலை எதுமே இல்லை. ஆனா ஆம்பிளைப் பிள்ளையாய் பிறந்திட்டு நெடுக அம்மா அப்பாவின் காசில வாழக் கூடாதுதானே. 

இப்ப பகுதி நேர வேலையும் செய்துகொண்டு தான் படிக்கிறன். அந்த வேலை செய்யப் போய்த்தான் எனக்கு அகிலோட பழக்கம் ஏற்பட்டுது. நாங்கள் இருவரும் ஒரே உணவகத்தில் பகுதிநேர வேலை செய்ய ஆரம்பிக்க, என்னுடன் தானே வந்து வலியக் கதைக்கவாரம்பிச்சது அகில்தான். பார்க்கப் பார்க்கப் பாத்துக்கொண்டே இருக்கலாம் போல் அழகு. நல்ல சுருள் முடி. எகிப்து நாட்டின் ஒரு தங்க நிறமும் உயரமும் கூர்மையும் என்னை மட்டுமல்ல யாரையுமே ஈர்க்கத்தான் செய்யும். வேலை முடிந்த பின்னரும் இருவரும் எங்காவது அமர்ந்து ஏதாவது குடித்தபடி பேசவாரம்பித்தது படிப்படியாக அதிகரித்து நான் வீட்டில் வந்து இரவு தூங்கிவிட்டு காலையில் மட்டும் வீட்டில் உணவருந்துவது என்றாகி இப்ப கொஞ்ச நாட்களாக அம்மாவும் தங்கையும் கூட "நீ இப்ப முன்னை மாதிரி இல்லை" என்று சொல்லுமளவு அகிலின் நெருக்கம் அதிகமாகி ...... அப்போதுதான் அகிலுடனேயே எந்நேரமும் இருக்கவேண்டும் என்ற எண்ணமும் ஏற்பட்டுப்போனது. 

அகிலின் எண்ணம் எதுவென வடிவாத் தெரியாது நானாக வாய் திறந்து ஏதும் கேட்டு அது தப்பாகி அகிலின் நட்பையே இழந்திடுவேனோ என்ற பயமும் கூடவே இருக்க, அன்று என் அதிட்டம்... நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது அகிலே என்னை அணைத்து முத்தமிட்டபோது எல்லாமே எங்கள் இருவருக்கும் புரிந்துபோனது.

அதன் பின்தான் அகிலே நாங்கள் இருவரும் ஒரு தனி வீடு எடுத்து இருந்தால் என்ன என்று கேட்டபோது குப்பென்று மனதில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சியை நான் உணர்ந்தேன். அப்பவும் மனம் பயத்தில் திக் திக் என்று அடித்துக்கொண்டதுதான். தங்கை இருக்கிறாள். அம்மா என்னைத் தனியா இருக்க விடுவாவோ? அவர்களைவிட்டு வந்து இருப்பது சரிதானா? என்று ஒருவாரமாக மண்டையைப் போட்டு உருட்டியதில்த்தான் அந்த ஐடியாவை அகிலே தந்தது. ஆனாலும் அகிலைப் பிரிந்து இருப்பதிலும் பார்க்க பெற்றோரையும் தங்கையையும் பிரிந்து இருக்க முடியும் என்று மனம் அல்லாடிப் பின் வெல்ல, சரி இரண்டுபேரும் தனியாக வாழ ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்ததுதான். எனது மாஸ்டர்ஸ் படிப்பை தூரவாக ஓர் இடத்தில் தெரிவு செய்து அங்கு எனக்கு இடமும் கிடைத்தது என் நல்ல காலம்.

அழைப்பு மணி அடிக்க அகிலுக்கு  இதே வேலையாய் போச்சு என்று மனதுக்குள் திட்டியபடி கதவைத் திறக்கிறேன்.

"நான் எங்காவது போயிருந்தால் என்ன செய்வாய்? திறப்பை மறக்காமல் எடுத்துக் போ என்று எத்தனை தடவை சொன்னாலும் கேட்கமாட்டியா" 

"நான் எப்ப வருவேன் என்று நீ எனக்காகக் காத்திருப்பாய் என்று எனக்குத் தெரியுமே" என்றபடி வசந்தனை ஆசை தீர இறுக அணைக்கிறான் அகில்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இதுபோன்ற உறவுகளை ஜீரணித்து பலகாலமாகி விட்டது ....கதை நல்லாயிருக்கு.....!   😁

இதை காலத்தின் மாற்றம் என்பதா அல்லது கொடுமை என்பதா புரியவில்லை.. கதையின் கருவில் குழப்பம் இருந்தாலும் அதை சொன்ன விதம் அழகு...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 26/12/2020 at 12:45, சுவைப்பிரியன் said:

உணர்வுகள் பல விதம்.

வருகைக்கு நன்றி சுவைப்பிரியன். கடுமையான விமர்சனங்களை எதிர்பார்த்தேன். ஆனால் ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கடுமையான விமர்சனங்களை எதிர்பார்த்தேன். ஆனால் ....

கடுமையாய் கடிபடுற ஆக்களுக்கு நேரமில்லை... நேரமில்லை... நேரமில்லை... நேரமில்லை... நேரமில்லை... நேரமில்லை...  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 26/12/2020 at 20:49, suvy said:

இதுபோன்ற உறவுகளை ஜீரணித்து பலகாலமாகி விட்டது ....கதை நல்லாயிருக்கு.....!   😁

கருத்துக்கு நன்றி அண்ணா

3 hours ago, nige said:

இதை காலத்தின் மாற்றம் என்பதா அல்லது கொடுமை என்பதா புரியவில்லை.. கதையின் கருவில் குழப்பம் இருந்தாலும் அதை சொன்ன விதம் அழகு...

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி நிகே

18 minutes ago, குமாரசாமி said:

கடுமையாய் கடிபடுற ஆக்களுக்கு நேரமில்லை... நேரமில்லை... நேரமில்லை... நேரமில்லை... நேரமில்லை... நேரமில்லை...  😁

உங்குதான் எல்லாம் பூட்டியாச்சே. வீட்டில சும்மாதானே இருக்கு சனம் 😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்குதான் எல்லாம் பூட்டியாச்சே. வீட்டில சும்மாதானே இருக்கு சனம் 😀

வீட்டிலை நிக்கிறதும் சரி ஜெயில்லை நிக்கிறதும் சரி....அவையின்ரை கண்டிசன் கொன்றோல் இருக்கே சொல்லி வேலையில்லை....😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

வீட்டிலை நிக்கிறதும் சரி ஜெயில்லை நிக்கிறதும் சரி....அவையின்ரை கண்டிசன் கொன்றோல் இருக்கே சொல்லி வேலையில்லை....😎

😂

எனக்கு மனிசன் எப்படா வேலைக்குப் போவார் என்றிருக்கு. நின்மதியா ஒண்டையும் சாப்பிடக்கூட விடுறார் இல்லை.😃

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

😂

எனக்கு மனிசன் எப்படா வேலைக்குப் போவார் என்றிருக்கு. நின்மதியா ஒண்டையும் சாப்பிடக்கூட விடுறார் இல்லை.😃

கதையின் பெயரை. நான்  உதயன். எனறு. மாற்றிவிடுங்கள். நீங்கள் விரும்பியதைசாப்பிடவிடுவார் .முற்றும.  வளரும.  யாவும்கற்பனை.   உண்மைக்கதை. போட்டுருந்தல் நல்லது.  கதை நன்றகவுள்ளது.....😜👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, Kandiah57 said:

கதையின் பெயரை. நான்  உதயன். எனறு. மாற்றிவிடுங்கள். நீங்கள் விரும்பியதைசாப்பிடவிடுவார் .முற்றும.  வளரும.  யாவும்கற்பனை.   உண்மைக்கதை. போட்டுருந்தல் நல்லது.  கதை நன்றகவுள்ளது.....😜👍

யோவ் கந்தையர்! பின்னீட்டீர்...😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
40 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்கு மனிசன் எப்படா வேலைக்குப் போவார் என்றிருக்கு. நின்மதியா ஒண்டையும் சாப்பிடக்கூட விடுறார் இல்லை.😃

மனுசிமாருக்கு ஒண்டு எண்டால் மன்னர்மார் கலங்கிப்போவது  பாசம் எல்லோ...:cool:

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

யோவ் கந்தையர்! பின்னீட்டீர்...😁

நன்றி குமாரசாமியண்ணை வணக்கம். மீண்டும்  நாளை சந்திப்போம்😁👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Kandiah57 said:

கதையின் பெயரை. நான்  உதயன். எனறு. மாற்றிவிடுங்கள். நீங்கள் விரும்பியதைசாப்பிடவிடுவார் .முற்றும.  வளரும.  யாவும்கற்பனை.   உண்மைக்கதை. போட்டுருந்தல் நல்லது.  கதை நன்றகவுள்ளது.....😜👍

இது போற்றுதலா தூற்றுதலா என்று தெரியுதே  இல்லையே 🙁

 

3 minutes ago, குமாரசாமி said:

மனுசிமாருக்கு ஒண்டு எண்டால் மன்னர்மார் கலங்கிப்போவது  பாசம் எல்லோ...:cool:

தொல்லை 🙂

  • கருத்துக்கள உறவுகள்

நான் இரண்டாம் பந்தி படிக்கும் போது ஒருவித லயிப்போடு அறையில் படுத்து இருக்கிறேன் என்ற வரிகளை கண்டதும் மேற்கொண்டு படிக் விருப்பம் இலல்லாது போயிற்று.காரணம் முதல் கறிவேப்பிலை இப்போ என்ன கசாயம் குடித்துத்துட்டு இருக்கிறீர்களோ...மிகுதி சொல்ல தோன்றவில்லை மனங்கள் பலவிதம்...😀

  • கருத்துக்கள உறவுகள்

அருமை.. 👌பகிர்விற்கு நன்றி..!👍

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 கடுமையான விமர்சனங்களை எதிர்பார்த்தேன். ஆனால் ....

நீங்கள் கொஞ்சம் லேட்.😃

Funny Boy , Roobha என்று படங்கள் எல்லாம் பார்த்திருக்கின்றம். அதனால் இந்தக் கதையில மேலோட்டமாக சொன்னது கடுமையாக குத்தாது.

அடுத்தது, ஆண்களை வர்ணிக்க நீங்கள் உங்கள் மனசை முழுமையாகத் திறக்கவேண்டும்😆. அப்போதுதான் வர்ணனை கடிவாளம் இல்லாத குதிரை மாதிரி தெறித்து ஓடும்😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நீங்கள் கொஞ்சம் லேட்.😃

 

அடுத்தது, ஆண்களை வர்ணிக்க நீங்கள் உங்கள் மனசை முழுமையாகத் திறக்கவேண்டும்😆. அப்போதுதான் வர்ணனை கடிவாளம் இல்லாத குதிரை மாதிரி தெறித்து ஓடும்😁

உண்மைதான். அந்தத் தற்துணிவு எனக்கு இல்லை

11 hours ago, யாயினி said:

நான் இரண்டாம் பந்தி படிக்கும் போது ஒருவித லயிப்போடு அறையில் படுத்து இருக்கிறேன் என்ற வரிகளை கண்டதும் மேற்கொண்டு படிக் விருப்பம் இலல்லாது போயிற்று.காரணம் முதல் கறிவேப்பிலை இப்போ என்ன கசாயம் குடித்துத்துட்டு இருக்கிறீர்களோ...மிகுதி சொல்ல தோன்றவில்லை மனங்கள் பலவிதம்...😀

இப்பவெல்லாம் எந்தக் காசாயமும் குடிப்பதில்லை.😂

3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அருமை.. 👌பகிர்விற்கு நன்றி..!👍

நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

கதையை வாசிக்கும் போதே இப்படித் தான் போகும் என்று ஊகித்து விட்டேன் ...நான் இது வரைக்கும் வேற நாட்டு ஓரின சேர்க்கையாளர்களை கண்டு இருக்கிறேனே தவிர எங்கட தமிழர்களை இது வரைக்கும் கண்டதில்லை 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 27/12/2020 at 23:36, மெசொபொத்தேமியா சுமேரியர் said:
On 27/12/2020 at 23:36, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இது போற்றுதலா தூற்றுதலா என்று தெரியுதே  இல்லையே 🙁

தூற்றப்படும் எழுத்தளான்தான்.  போற்றப்படும் எழுத்தளானகவரமுடியும்...ஆனால் நான் உங்களைத்தூற்றவில்லை.😁👍

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

கதையை வாசிக்கும் போதே இப்படித் தான் போகும் என்று ஊகித்து விட்டேன் ...நான் இது வரைக்கும் வேற நாட்டு ஓரின சேர்க்கையாளர்களை கண்டு இருக்கிறேனே தவிர எங்கட தமிழர்களை இது வரைக்கும் கண்டதில்லை 

 

இப்ப அதுவும் கூடிக்கொண்டு வருது

8 hours ago, Kandiah57 said:

 

நீங்கள் தூற்றினால் கூட எனக்கு எதுவும் இல்லை 😃

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.