Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி: 2021 ஆம் ஆண்டில் 726 பில்லியன் வெளிநாட்டு கடனை செலுத்த வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி: 2021 ஆம் ஆண்டில் 726 பில்லியன் வெளிநாட்டு கடனை செலுத்த வேண்டும்

      by : Jeyachandran Vithushan

http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/03/ajith-nivard-cabraal.jpg

ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் 2021 ஆம் ஆண்டில் 726 பில்லியன் வெளிநாட்டு கடனை வழங்க வேண்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்.மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

அத்தோடு ரூபாயின் பரிமாற்ற வீதம் சீராக இல்லாதமை காரணமாக கடனின் மதிப்பு அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தற்போதுள்ள கடன்களை திருப்பி செலுத்துவதற்கு அரசாங்கம் அதிக வெளிநாட்டுக் கடனை பெற்றுக்கொள்ளுமா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் விற்பனை விலை 191 ரூபாயாக காணப்படுவதாக மத்திய வங்கியின் தரவு காட்டுகிறமை குறிப்பிடத்தக்கது

ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி: 2021 ஆம் ஆண்டில் 726 பில்லியன் வெளிநாட்டு கடனை செலுத்த வேண்டும் | Athavan News

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவும், இந்தியாவும்.... எப்படியும் ஶ்ரீலங்காவுக்கு உதவி செய்வார்கள். 😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, தமிழ் சிறி said:

சீனாவும், இந்தியாவும்.... எப்படியும் ஶ்ரீலங்காவுக்கு உதவி செய்வார்கள். 😎

சிறித்தம்பி!  தங்கப்பவுண்  சிங்கள சிறிலங்காவை மரியாதை குறைவாய் சொன்னால் எனக்கு கெட்ட கோவம் வரும் கண்டியளோ...😄

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பி!  தங்கப்பவுண்  சிங்கள சிறிலங்காவை மரியாதை குறைவாய் சொன்னால் எனக்கு கெட்ட கோவம் வரும் கண்டியளோ...😄

குமாரசாமி அண்ணை.... சிறிலங்கா இந்த வருசத்துக்குள்ளை, 
726 பில்லியன் கட்டி முடிக்க வேணும்,  எண்ட கவலையிலை  இருக்கிறன்.
நீங்கள்... கோவம் வரும், கீவம் வரும் எண்டு... சொல்லுறியள்.

அந்தக் காசை... தலதா மாளிகையில் உள்ள, 
புத்தரின் பல்லை வித்துத்தான், கட்ட வேணும் போலை இருக்கு. 😜

ஒரு பில்லியன் --- 1,000,000,000 
ஒண்டுக்கு  பக்கத்திலை,  ஒன்பது சைவர் அண்ணே... :)

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

இதுக்குத்தான் காசை  அச்சடித்து விடுகினம் அநேகமா அடுத்தவருடமளவில்  சொறிலங்காவில் சிலவேளை ஒருவருடம் கூடலாம் 50ஆயிரம் தாள் புழக்கத்தில் வந்துவிடும் அப்படி வரும் நாளில் பால்சோறு பொங்கி சன்ரைஸ் பப்பில் இங்குள்ள சிங்களவர்களுக்கு கொடுக்கணும் மே  18  இங்குள்ளவையுளும்  சும்மாவா இருந்தவையல். 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

இதுக்குத்தான் காசை  அச்சடித்து விடுகினம் அநேகமா அடுத்தவருடமளவில்  சொறிலங்காவில் சிலவேளை ஒருவருடம் கூடலாம் 50ஆயிரம் தாள் புழக்கத்தில் வந்துவிடும் அப்படி வரும் நாளில் பால்சோறு பொங்கி சன்ரைஸ் பப்பில் இங்குள்ள சிங்களவர்களுக்கு கொடுக்கணும் மே  18  இங்குள்ளவையுளும்  சும்மாவா இருந்தவையல். 

வரப்  போகின்ற... 50,000 ரூபாய் தாளில்,
மகிந்த & கோத்தா  படம் போட்டு அடிப்பார்கள் தானே.... 🤣

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, தமிழ் சிறி said:

புத்தரின் பல்லை வித்துத்தான், கட்ட வேணும் போலை இருக்கு.

அதென்ன சுறாமீனின் பல்லு  போல் இருக்கு என்று இங்குள்ள சிங்களவர் ஒருத்தரை கேட்டேன் பாவி பயல் சிரிக்காமல் சொல்றான் அது வளர்ந்துகொண்டு இருக்காம் .😁

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உணவு, , ’01/01/2020 vs 31/12/2020 160/= 1200/= FUN BEGINS HERE 35/= 120/= Force SINCE Akurana 2017 300/= 7000/= 6000/= 20,000/’ எனச்சொல்லும் உரை

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பெருமாள் said:

இதுக்குத்தான் காசை  அச்சடித்து விடுகினம் அநேகமா அடுத்தவருடமளவில்  சொறிலங்காவில் சிலவேளை ஒருவருடம் கூடலாம் 50ஆயிரம் தாள் புழக்கத்தில் வந்துவிடும் அப்படி வரும் நாளில் பால்சோறு பொங்கி சன்ரைஸ் பப்பில் இங்குள்ள சிங்களவர்களுக்கு கொடுக்கணும் மே  18  இங்குள்ளவையுளும்  சும்மாவா இருந்தவையல். 

படிப்படியா தான் போகும், 5,10,20,50 ஆயிரம் என்று தான் அடிப்பாங்கள் என்று நினைக்கிறேன்.

'முழுச் சிங்கள அரசு' தம்மை முழுமையாக ஆட்சி செய்யவேண்டும் என்று என்று சிங்கள மக்கள் நினைத்து வாக்களித்தனரோ அதே சிங்கள அரசு நாட்டை இனி மீட்கவே முடியாத நிலைக்கு கொண்டு வந்து விடுகின்றது. 65 இலட்சம் சிங்கள மக்களால் வாக்களித்து ஆட்சிக்கு வந்த அரசு, எல்லாருக்கும் வாய்க்கரிசி போடப் போகின்றது.

பெளத்த பேரினவாதம் அது செல்லக் கூடிய அதி உச்சி வரைக்கும் அடைந்த பின் கீழே விழத் தொடங்கி இருக்கு. Curve இனி flat ஆகி பின் இல்லாமல் போகக் கூடிய காலம் விரைவில் வரும்.

ஆனால் அப்படி விழும் போது அதன் பாதிப்புகள் தமிழ் மக்களின் தலையில் இரட்டிப்பாக விழும் என்பது தான் கவலைக்குரிய விடயம். புலம்பெயர் தமிழ் மக்களால் அனுப்பப்படும் காசு மற்றும் பொருளாதார உதவிகள் மட்டுமே ஓரளவுக்கு அவர்களின் பாதிப்பை எல்லை மீறாதவாறு காப்பாற்றும்

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பெருமாள் said:

அதென்ன சுறாமீனின் பல்லு  போல் இருக்கு என்று இங்குள்ள சிங்களவர் ஒருத்தரை கேட்டேன் பாவி பயல் சிரிக்காமல் சொல்றான் அது வளர்ந்துகொண்டு இருக்காம் .😁

அந்தளவுக்கு... சிங்களவனை, ஆமத்துறுக்கள்.....
மூளைச் சலவை  (பிறேய்ன் வாஷ்) செய்து வைத்திருக்கின்றார்கள்.   🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, நிழலி said:

'முழுச் சிங்கள அரசு' தம்மை முழுமையாக ஆட்சி செய்யவேண்டும் என்று என்று சிங்கள மக்கள் நினைத்து வாக்களித்தனரோ அதே சிங்கள அரசு நாட்டை இனி மீட்கவே முடியாத நிலைக்கு கொண்டு வந்து விடுகின்றது. 65 இலட்சம் சிங்கள மக்களால் வாக்களித்து ஆட்சிக்கு வந்த அரசு, எல்லாருக்கும் வாய்க்கரிசி போடப் போகின்றது.

பெளத்த பேரினவாதம் அது செல்லக் கூடிய அதி உச்சி வரைக்கும் அடைந்த பின் கீழே விழத் தொடங்கி இருக்கு. Curve இனி flat ஆகி பின் இல்லாமல் போகக் கூடிய காலம் விரைவில் வரும்.

ஆனால் அப்படி விழும் போது அதன் பாதிப்புகள் தமிழ் மக்களின் தலையில் இரட்டிப்பாக விழும் என்பது தான் கவலைக்குரிய விடயம். புலம்பெயர் தமிழ் மக்களால் அனுப்பப்படும் காசு மற்றும் பொருளாதார உதவிகள் மட்டுமே ஓரளவுக்கு அவர்களின் பாதிப்பை எல்லை மீறாதவாறு காப்பாற்றும்

நான் இதையே  எழுதினால்

நீங்க  இப்படியே எழுதிக்கொண்டிருங்க

சிங்களவன்  எங்கோயோ போய் நிற்கிறான்  என்று  பதில்  வரும்

அதனால்  உங்களுக்கு  ஒரு  லைக்குடன்  நகர்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நிழலி said:

'முழுச் சிங்கள அரசு' தம்மை முழுமையாக ஆட்சி செய்யவேண்டும் என்று என்று சிங்கள மக்கள் நினைத்து வாக்களித்தனரோ அதே சிங்கள அரசு நாட்டை இனி மீட்கவே முடியாத நிலைக்கு கொண்டு வந்து விடுகின்றது. 65 இலட்சம் சிங்கள மக்களால் வாக்களித்து ஆட்சிக்கு வந்த அரசு, எல்லாருக்கும் வாய்க்கரிசி போடப் போகின்றது.

பெளத்த பேரினவாதம் அது செல்லக் கூடிய அதி உச்சி வரைக்கும் அடைந்த பின் கீழே விழத் தொடங்கி இருக்கு. Curve இனி flat ஆகி பின் இல்லாமல் போகக் கூடிய காலம் விரைவில் வரும்.

ஆனால் அப்படி விழும் போது அதன் பாதிப்புகள் தமிழ் மக்களின் தலையில் இரட்டிப்பாக விழும் என்பது தான் கவலைக்குரிய விடயம். புலம்பெயர் தமிழ் மக்களால் அனுப்பப்படும் காசு மற்றும் பொருளாதார உதவிகள் மட்டுமே ஓரளவுக்கு அவர்களின் பாதிப்பை எல்லை மீறாதவாறு காப்பாற்றும்

உண்மைதான்... நிழலி,
இனப் பிரச்சினையை... 1958´ம்  ஆண்டிலேயே,
பேசி... ஒரு சுமூகமான, தீர்வுக்கு வந்திருந்தால்....
இவ்வளவு உயிர் இழப்பும், பொருளாதார இழப்பும் இல்லாமால்...
ஆசியாவிலேயே... சிலவேளை, உலகத்திலேயே.... முதன்மையான நாடாக,
இலங்கை இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நிழலி said:

'முழுச் சிங்கள அரசு' தம்மை முழுமையாக ஆட்சி செய்யவேண்டும் என்று என்று சிங்கள மக்கள் நினைத்து வாக்களித்தனரோ அதே சிங்கள அரசு நாட்டை இனி மீட்கவே முடியாத நிலைக்கு கொண்டு வந்து விடுகின்றது. 65 இலட்சம் சிங்கள மக்களால் வாக்களித்து ஆட்சிக்கு வந்த அரசு, எல்லாருக்கும் வாய்க்கரிசி போடப் போகின்றது.

பெளத்த பேரினவாதம் அது செல்லக் கூடிய அதி உச்சி வரைக்கும் அடைந்த பின் கீழே விழத் தொடங்கி இருக்கு. Curve இனி flat ஆகி பின் இல்லாமல் போகக் கூடிய காலம் விரைவில் வரும்.

ஆனால் அப்படி விழும் போது அதன் பாதிப்புகள் தமிழ் மக்களின் தலையில் இரட்டிப்பாக விழும் என்பது தான் கவலைக்குரிய விடயம். புலம்பெயர் தமிழ் மக்களால் அனுப்பப்படும் காசு மற்றும் பொருளாதார உதவிகள் மட்டுமே ஓரளவுக்கு அவர்களின் பாதிப்பை எல்லை மீறாதவாறு காப்பாற்றும்

5000 ரூபா காசு மாற்றினால் அடுத்த நொடி கையில் இல்லை ஒரு மாதிரியாக வாழ்க்கை ஓடுகிறது இங்கே கொரோனா நிலமை சீரடைந்தால் , சம்பளமற்ற விடுமுறையில் மத்திய கிழக்கு சென்றால்தான் வீடாவது கட்டி குடும்பத்தோடு கொஞ்சமாவது நிம்மதியாக இருக்கலாம் போல இருக்கு .

பொருளாதார நிலை அப்படி மேலுள்ள படம்  விளக்கும் தேங்காய் 120 ரூபா , கொச்சிக்காய் கிலோ 400 ரூபாய் , அன்றாடம் தினக்கூலிகளின் நிலை அதோ கெதிதான் 

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

5000 ரூபா காசு மாற்றினால் அடுத்த நொடி கையில் இல்லை ஒரு மாதிரியாக வாழ்க்கை ஓடுகிறது இங்கே கொரோனா நிலமை சீரடைந்தால் , சம்பளமற்ற விடுமுறையில் மத்திய கிழக்கு சென்றால்தான் வீடாவது கட்டி குடும்பத்தோடு கொஞ்சமாவது நிம்மதியாக இருக்கலாம் போல இருக்கு .

பொருளாதார நிலை அப்படி மேலுள்ள படம்  விளக்கும் தேங்காய் 120 ரூபா , கொச்சிக்காய் கிலோ 400 ரூபாய் , அன்றாடம் தினக்கூலிகளின் நிலை அதோ கெதிதான் 

மெல்ல மெல்ல  பத்துவருடங்களில் நடக்க வேண்டிய விடயங்கள் கொரனோவால் இவ்வளவு விரைவாக நெருங்கியுள்ளது சுய பொருளாதார நிவர்த்தி யை நோக்கி மக்கள் நகரனும் திரும்ப திரும்ப பிரச்சனைகளை நோக்கி மக்களை  தள்ளுவது வேறு பல விபரீதங்களை கொண்டுவந்து விடும். கொரனோ  விடயத்தில் கோத்தா கடைசியில் கையை விரித்தமாதிரி பொருளாதாரத்திலும் கடைசியில் சிம்பிளா சொல்வார் இப்பவும் ஆள் மாறவில்லை கோவிட்  நிதி என்ற பெயரில் இலங்கை முஸ்லிம்களுக்கு தீவிரவாத பணம் பரிமாறப்படுது என்று ரஷ்ய காரர் திரியை கொளுத்தி போட்டு இருக்கினம் கிட்டடியில் கலவரம் எதிர்பார்க்கலாம் நீங்கள்  கவனமாக இருக்கவும் .https://island.lk/russia-warns-lanka-of-islamic-extremists-channeling-funds-to-local-counterparts/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

அந்தக் காசை... தலதா மாளிகையில் உள்ள, 
புத்தரின் பல்லை வித்துத்தான், கட்ட வேணும் போலை இருக்கு. 😜

எவன் அதை வாங்குவான்? 😎
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அந்தளவுக்கு... சிங்களவனை, ஆமத்துறுக்கள்.....
மூளைச் சலவை  (பிறேய்ன் வாஷ்) செய்து வைத்திருக்கின்றார்கள்.   🤣

இவையல் பெட்டிக்கு வெளியில் அந்த சுறா பல்லை எடுப்பதில்லை இன்னுமொரு பல்லு  சிங்கப்பூரில் உள்ள புத்த மடாலயத்தில் பார்வைக்கு வைத்து உள்ளார்கள் .

r/creepy - Buddha's tooth 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

இவையல் பெட்டிக்கு வெளியில் அந்த சுறா பல்லை எடுப்பதில்லை இன்னுமொரு பல்லு  சிங்கப்பூரில் உள்ள புத்த மடாலயத்தில் பார்வைக்கு வைத்து உள்ளார்கள் .

r/creepy - Buddha's tooth 

அட.... இது நல்ல, வியாபாரம்  (பிஸ்னஸ்) போல இருக்கே...
நீங்கள் இங்கிலாந்திலும், நாங்கள்  ஜேர்மனியிலும் ... ஆரம்பிப்போமா? :grin:

ஏற்கெனவே... நேபாளம், புத்தரின்.. மயிர் (தலைமுடி) இருக்கு என்று சொல்கிறார்கள். 

சிலோன், புத்த பிக்குகள் தான், பாவங்கள்.  
தலைக்கும்... சேர்த்து,  "சேவ்" எடுத்துக் கொண்டு, திரியுறாங்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை.... சிறிலங்கா இந்த வருசத்துக்குள்ளை, 
726 பில்லியன் கட்டி முடிக்க வேணும்,  எண்ட கவலையிலை  இருக்கிறன்.
நீங்கள்... கோவம் வரும், கீவம் வரும் எண்டு... சொல்லுறியள்.

அந்தக் காசை... தலதா மாளிகையில் உள்ள, 
புத்தரின் பல்லை வித்துத்தான், கட்ட வேணும் போலை இருக்கு. 😜

ஒரு பில்லியன் --- 1,000,000,000 
ஒண்டுக்கு  பக்கத்திலை,  ஒன்பது சைவர் அண்ணே... :)

புத்தரின் பல்லு குண்டு வெடிப்பில் அழிந்துவிட்டது. அது சிறியருக்குத் தெரியுமோ.. 😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

5000 ரூபா காசு மாற்றினால் அடுத்த நொடி கையில் இல்லை ஒரு மாதிரியாக வாழ்க்கை ஓடுகிறது இங்கே கொரோனா நிலமை சீரடைந்தால் , சம்பளமற்ற விடுமுறையில் மத்திய கிழக்கு சென்றால்தான் வீடாவது கட்டி குடும்பத்தோடு கொஞ்சமாவது நிம்மதியாக இருக்கலாம் போல இருக்கு .

பொருளாதார நிலை அப்படி மேலுள்ள படம்  விளக்கும் தேங்காய் 120 ரூபா , கொச்சிக்காய் கிலோ 400 ரூபாய் , அன்றாடம் தினக்கூலிகளின் நிலை அதோ கெதிதான் 

இந்த கொரோனா வந்ததின் பின்னர் பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகளே திண்டாட்டத்திற்கு வந்துகொண்டிருக்கு...

இதில் சிறிலங்கா....????  

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

புத்தரின் பல்லு குண்டு வெடிப்பில் அழிந்துவிட்டது. அது சிறியருக்குத் தெரியுமோ.. 😀

உண்மையாகவா.... கபிதன்,
இதுக்கே... வெடி கொழுத்தி, கொண்டாட வேணும் போலை கிடக்கே... 

புலிகள் ... எப்பவும், புலிகள்தான்...

சிங்கம்,  சோம்பேறி  மிருகம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

உண்மையாகவா.... கபிதன்,
இதுக்கே... வெடி கொழுத்தி, கொண்டாட வேணும் போலை கிடக்கே... 

புலிகள் ... எப்பவும், புலிகள்தான்...

சிங்கம்,  சோம்பேறி  மிருகம்.

ஆம். இது உண்மை. உறுதிப்படுத்தப்பட்டது. புலிகளின் நோக்கமும் அதுவாகத்தான் இருந்தது. 

ஏனென்றால்  புத்த பெருமகனாரின் புனிதப் பல்லு யாரிடம் உள்ளதோ அவர்களே இந்த நாட்டை ஆளும் வல்லமையும் தகுதியும் உள்ளவர்கள் என்பது சிங்களவர்களின் அதீத நம்பிக்கை.

இலங்கை மீது மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புக்களின்போதெல்லாம் இந்தப் புனிதப் பல்லைக் கைப்பற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தது வரலாறு.

அந்த நம்பிக்கையை தகர்ப்பதற்காகவே இந்தத் தாக்குதலும் நடாத்தப்பட்டு அந்த இலக்கும் அடையப்பெற்றது. கருணா அம்மானின் மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அறிந்தேன்.

இதனை அரசாங்கம் மூடி மறைத்துவிட்டது. ஆனாலும் உண்மை ஒருநாள் வெளிவரும் பார்த்திருங்கள். 👍

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

இங்கிலாந்தின் பொருளாதார நிலை தற்போது என்ன மாதிரி பெருமாள் 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

இங்கிலாந்தின் பொருளாதார நிலை தற்போது என்ன மாதிரி பெருமாள் 

அந்த கார்டூன் அளவில் உள்ள அளவுக்கு கேவலமாய் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இங்கிலாந்தின் பொருளாதார நிலை தற்போது என்ன மாதிரி பெருமாள்

அடிப்படை பொருளாதாரத்தை பொழுதுபோக்காவேனும் படியுங்கள்.

1 hour ago, பெருமாள் said:

அந்த கார்டூன் அளவில் உள்ள அளவுக்கு கேவலமாய் இல்லை .

ஒப்பிட முடியுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.