Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலையில் இரவோடு இரவாக இடித்து அழிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவிடம்! பதற்றமான சூழல்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழித்தமை அதிர்ச்சியனிக்கின்றது – வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம்

1-80.jpg
 13 Views

யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டமை கவலையுடன் கூடிய அதிர்ச்சி அளித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் எமது அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம் தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் தலைவரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது பரிதாபமாக உயிர்நீத்த எமது தமிழ் உறவுகளின் ஆத்ம திருப்தியின் அடிப்படையில் இறை மன்றாட்டத்தின் அடிப்படையில் நினைவு கூர்வதற்காக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி 2021 01 7ம் திகதி இரவு வேளையில் தகர்த்து அகற்றப்பட்டமை தொடர்பில் வடமாகாண முஸ்லீம் சமுகம் பெரிதும் கவலையுடன்கூடிய அதிர்ச்சியடைந்துள்ளது.

எவ்வாறான பேரவலங்கள் நிகழ்ந்தாலும் அதன் மூலம் உயிர் நீக்கும் மனித உறவுகளை நினைவு கூர்வது சகல சமூகங்களிலும் மனிதாபிமான ரீதியாக பின்பற்றப்பட்டு வரும் கிரியையாகவே முக்கியப்படுத்தப்படுகின்றது.

இந்த வகையில் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிகழ்ந்த செயற்கை அனர்த்தம் காரணமாக வயது, பால் இனம், மத பாகுபாடுகளுக்கப்பால் பல மனிதப் பிறவிகள் மற்றும்  யாழ் பல்கலைக்கழக சமுகத்தினர்  உயிர் நீத்தமை எமது ஒவ்வொருவரது மனங்களிலும் இன்றுவரை நிழலாடிக்கொண்டே இருக்கின்றது.

இவ்வாறு உயிர் நீத்த சகல மனிதர்களையும் பாகுபாடு அற்ற வகையில் மனிதாபிமான அடிப்படையில் நினைவு கூரும் முகமாக யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியானது பல்கலைக்கழக நிர்வாகத்தின் தீர்மானத்தின் அடிப்படையில் தகர்த்து அகற்றப்பட்டமை தொடர்பில் சமூகத்தினர் உறவுகளுக்காக  பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த மக்களுடன் நாமும் இணைந்து அவர்களது துன்பத்தில் பங்கு பெறுவதுடன் நடைபெற்ற இச்சம்பவத்திற்காக எமது அதிருப்தியையும்  கவலையையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/?p=39084

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிக்கப்படடமை கண்டனத்துக்குரியது-இம்ரான் எம். பி

 
image0-1-696x392.jpeg
 31 Views

யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிக்கப்பட்டமை கண்டனத்துக்குரியது என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார்.

இந்த நினைவு தூபி அழிக்கப்பட்டமை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி என்பது பலியான சகோதர சிவில் தமிழ் உறவுகளை நினைவூட்டும் ஆத்மார்த்த மனிதாபிமான சின்னம். அது பயங்கரவாதம் சார்ந்த அல்லது  படையினரை சாடுகின்ற குறியீடு அல்ல. தென் பகுதியில் அமைந்துள்ள பல்கலைக் கழகங்களில் கூட கடந்த கால அரச எதிர்ப்பு கிளர்ச்சிகளில் பலியானவர்களுக்கான நினைவுத்தூபிகள் உள்ளன.

ஆகவே யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமை கண்டனத்துக்குரியது. இத்தகைய அரசின் இனவாதம் சார் செயற்பாடுகள் ஒருபோதும் நாட்டில் அமைதியை, அபிவிருத்தியை ஏற்படுத்த வழிசமைக்க மாட்டாது.  கடந்த கால வரலாற்றில் அரசு எந்த பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே இந்த உடைத்தல், எரித்தல் போன்ற இனவாதம் சார் அரச செயற்பாடுகள் எடுத்துக் காட்டுகின்றன.

அரசின் பொறுப்பற்ற, இனங்களுக்கிடையே பிரிவினையை வளர்க்கும் செயற்பாடுகளை ஒரு பொறுப்புள்ள அரசியல் பிரதிநிதி என்றவகையில் வன்மையாக கண்டிக்கின்றேன்.” என்று கூறப்பட்டுள்ளது.

https://www.ilakku.org/?p=39014

 

நினைவேந்தல் தூபியானது அழிக்கப்பட்டது ஓர் அடாவடித்தனமான செயல் – தி.சரவணபவன்

 
dfdd-696x464.jpg
 42 Views

தமிழ் இனத்தின் அடையாளங்களை சிதைக்கும் நடவடிக்கைகளின் ஊடாக அடுத்த சந்ததியினருக்கு திரிவுபடுத்தப்பட்ட வரலாறு ஒன்றினை கற்பிக்க இவ்வரசாங்கம் முயல்வதாகவும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபியானது அழிக்கப்பட்டது ஓர் அடாவடித்தனமான செயல் எனவும் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன்  தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடித்து அழிக்கப்பட்ட சம்பவத்திற்கு அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட எத்தனையோ நினைவுச் சின்னங்களும், இலங்கை இராணுவத்தின் அடையாளங்களும் இலங்கையில் பல பாகங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. அதிலும் ஜே.வி.பி கலவரத்தினால் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவு தூபிகளும் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு இருக்க யுத்தத்தினால் உயிரை நீர்த்த தமது உறவுகளை நினைவு கூறுவதற்கு அல்லது நினைவு சின்னங்களை அமைத்து அஞ்சலி செலுத்துவதற்கோ உள்ள அடிப்படை மனித உரிமைகளைக் கூட  இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்க மறுக்கிறது. இதை இந்த அரசாங்கத்துக்கும், அது சார்ந்த கட்சிகளுக்கும் வாக்களித்த மக்களும் புரிந்து கொள்ளவேண்டும்.

அபிவிருத்தி என்னும் போர்வையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் மாவீரர் துயிலும் இல்லங்கள் கூட எதிர்கால சந்ததியினர் அறியக் கூடாது என்பதற்காக இடித்து அழித்திருந்தார்கள். தமிழர்களுக்கு அபிவிருத்தி தான் முக்கியம் என்று அரசாங்கத்தின் கைக்கூலிகள் சிலர்  இவ் அழிப்புகளுக்கு துணையாக செயற்பட்டனர்.

தமிழ் மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் அபிவிருத்தி என்னும் மாயையால் சரி செய்து விட முடியாது.  உயிர் வாழும் தமிழரை மட்டுமல்ல, உயிரிழந்த தமிழரையும் இன்றைய இலங்கை அரசு, இலங்கையராக கருத மறுத்து நிற்கிறது” என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/?p=39017

அநீதிகள் ஊடாக சிறுபான்மை மக்களை அடக்க முடியாது -இரா.சாணக்கியன்

 
1-69-696x435.jpg
 34 Views

அநீதிகள் ஊடாக சிறுபான்மை மக்களை அடக்க முடியாது என்ற செய்தியினை சர்வதேசத்திற்கு சொல்ல வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விசேட காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள அவர்,

“எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஹர்த்தாலுக்கு வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து மக்களினதும் பூரண ஆதரவினை எதிர்பார்த்து நிற்கின்றோம்.

அன்றைய தினம் கடைகளை அடைத்து தற்போதைய அரசாங்கம் தொடர்ச்சியாக சிறுபான்மை மக்களுக்கு எதிராக செய்கின்ற அநீதிகளுக்கு நாம் அனைவரும் ஒருமித்த குரலாக எதிர்ப்பினை வெளியிட வேண்டும்.

நேற்றைய தினம் கூட யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் உடைக்கப்பட்டுள்ளமையானது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.

அதைப்போல பல்வேறு விடயங்களில் சிறுபான்மை மக்களை இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக தாக்கிக்கொண்டு வருகின்றது. நாங்கள் எங்களுடைய எதிர்ப்பினை இந்த இடத்தில் நிச்சயமாக தெரிவிக்க வேண்டும்.

அந்தவகையில் கடந்த காலத்தில் எங்களுடைய அரசியல் கருத்துக்கள் வித்தியாசமாக இருந்தாலும். வடக்கு, கிழக்கில் வாழும் அனைவரும் ஒருமித்த குரலுடன் இந்த விடயத்திற்கு ஆதரவு தர வேண்டும்.

கடந்த தேர்தலில், கடந்த காலத்தில் எங்களுடைய அரசியல் கருத்துக்கள், அரசியல் பின்னணிகள் வேறாக இருந்தாலும் கூட, இந்த விடயத்தில் எங்களுடைய அன்பார்ந்த, பணிவான ஒரு வேண்டுகோள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஒருமித்த குரலாக இந்த ஹர்த்தாலை நடத்த வேண்டும்.

இது இந்த அரசாங்கத்திற்கு ஒரு தெளிவான பதிலினை சொல்லும் ஒரு விடயமாக இருக்கும். இன்று கூட நான் பார்த்திருந்தேன். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சொல்லியிருந்தார், தனக்கு இரு பெயர்கள் உள்ளனவாம். ஒன்று நந்தசேன மற்றையது கோட்டாபய என இரண்டு பெயர்கள் உள்ளனவாம். இரண்டு பேரும் இரண்டு விதமாக இருப்பார்கள் என கூறியுள்ளார்.

தான் கடந்த காலத்தில் நந்தசேன என்றவர் ஜனாதிபதி என்ற வகையில் நடந்து கொண்டவர், இனி வரும் காலங்களில் தான் விரும்பினால் கோட்டாபய என்ற பாதுகாப்பு செயலாளராக இருந்தவர் போல நடவடிக்கைகளை எடுக்கலாம் எனவும் சொல்லியுள்ளார்.

இது எல்லாம் எங்களை அச்சுறுத்தி, எங்களை பயமுறுத்தி, எங்களை அடக்குவதற்காக சொல்லும் விடயங்களாகவே காணப்படுகின்றன. இதற்கெல்லாம் நாங்கள் பயப்படக் கூடாது.

Video Player
 
00:00
 
02:23

நாங்கள் ஒருமித்த குரலோடு இந்த விடயத்திற்கு அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிகரமாக முடிக்க வேண்டும். 11ஆம் திகதி காலையில் அனைத்து கடைகளையும் அடைத்து வடக்கு, கிழக்கு முழுவதும் பூரணமான ஹர்த்தாலினை கடைப்பிடித்து சர்வதேச சமூகம் வரைக்கும் நாங்கள் எங்களுடைய நாட்டில் நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக சிறுபான்மை மக்களை அடக்க முடியாது என்ற செய்தியினை சொல்ல வேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

 

https://www.ilakku.org/?p=39020

  • Replies 132
  • Views 11.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் தூபியை தகர்த்தமை படுபாதகச் செயலாகும்’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் கண்டனம்!

 
1-71-696x435.jpg
 49 Views

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிஇ இரவோடிரவாக தகர்க்கப்பட்டமை அநகாரிக செயல் என்றும்இ இதற்கு தனது பலத்த கண்டனத்தை வெளியிடுவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘யுத்தத்தால் உயிரிழந்த தமிழ்ச் சகோதரர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை நினைவுகூரும் வகையில், இந்த நினைவுத்தூபி யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

பல்கலைக்கழக வளாகத்தில் இத்தனை வருடங்களாக இருந்து வந்த இந்த நினைவுத்தூபியை இப்போது அவசர அவசரமாகத் தகர்த்து, அதனை முழுமையாக அழிக்க வேண்டுமென்ற தீய நோக்கம் ஏன் ஏற்பட்டது? இனவாதிகளையும், கடும்போக்காளர்களையும் திருப்திப்படுத்துவதற்காகவேயொழிய, வேறு எந்தக் காரணமும் இதில் இருக்க முடியாது.

PHOTO-2021-01-09-20-32-10.jpg

இந்த நாட்டிலே சிறுபான்மையினர் மீதான இனவாதம் பெருவீச்சில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளமையின் வெளிப்பாடுகள்தான் உடல்களை எரித்தலும், ஞாபகச் சின்னங்களை தகர்த்தலும் ஆகும்.

இந்த வகையான இனவாத செயற்பாடுகளை மானுட நேயமுள்ள எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ‘இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம்’ என வாய்ச்சொல்லில் மட்டும் கூறிக்கொண்டு, சிறுபான்மை மக்களான தமிழர்களையும் முஸ்லிம்களையும் தொடர்ந்தும் வஞ்சம் தீர்ப்பதிலேயே இந்த அரசாங்கம், தமது காலத்தையும் நேரத்தையும் வீணடிக்கின்றது.

‘தனக்கு மேலிடத்திலிருந்து வந்த அழுத்தங்கள் காரணமாகவே, பல்கலைக்கழக நிர்வாகம் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை தகர்த்து, அழித்ததாக’ உபவேந்தர் தெரிவித்திருக்கும் கூற்றின் மூலம், அரசின் உண்மையான சுயரூபம் வெட்டவெளிச்சமாகியுள்ளது.

சிறுபான்மை மக்களின் உடைமைகளை நொருக்குவதன் மூலமும்இ உள்ளங்களை உடைப்பதன் மூலமும் இனவாதிகளை குஷிப்படுத்தி, நாட்டை மேம்படுத்தலாம் என இவர்கள் எண்ணுகிறார்கள் போலும்.

எனவே, யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இந்த அநாகரிக சம்பவத்தை, வட மாகாணத்தைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும், சிறுபான்மைக் கட்சியொன்றின் தலைவர் என்ற ரீதியிலும் வெகுவாகக் கண்டிக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

https://www.ilakku.org/?p=39030

இறந்தவர்களை கூட நினைவுகூரமுடியாத நிலையில் தமிழர்கள்- தமிழ் மக்கள் பேரவை 

 
1-72.jpg
 35 Views

முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் அழிக்கப்பட்டது ஈழத்தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழ்சமூகத்தினர்க்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது என தமிழ் மக்கள் பேரவை  தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள கண்டன அறிக்கையில்,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 2009 இறுதிப் போரில் உயிரிழந்தவர்களின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் புல்டோசர் கொண்டு கடந்த (08.01.2021) அன்று இரவோடு இரவாக  இடித்தழிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சிதரும் சம்பவமாகும்.

இச்சம்பவம் பேரினவாத நிகழ்ச்சி நிரலின் கீழ் பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது மிகக் கவலையளிப்பதாகவும் வேதனையைத் தருவதாகவும் இருக்கின்றது.

இந்த சம்பவத்தினையும் இதனை மேற்கொண்ட பல்கலைக்கழக நிர்வாகத்தினர் உள்ளிட்ட பேரினவாத அரச இயந்திரத்தினையும் தமிழ்மக்கள் பேரவையானது வன்மையாகக் கண்டிக்கின்றது.

“போரில் கொல்லப்பட்ட பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள், மற்றும் மாணவர்களின் நினைவாக இது அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது”.

இந்த நினைவுச்சின்னம் அழிக்கப்பட்டது ஈழத்தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழ்சமூகத்தினர்க்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. தமிழர்களை பொறுத்தவரை பல்கலைக்கழகம் ஒர் அடையாளம் மட்டுமல்ல அது வரலாற்றை கடத்துகின்ற இடமாகவும் இருக்கின்றது. அங்கே இந்த சம்பவம் நடந்தேறி இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. குறைந்தபட்சம் இறந்தவர்களை கூட நினைவுகூரமுடியாத நிலைமைக்கு தமிழர்களாகிய நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

இச் சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர் உள்ளிட்ட பல்கலைக்கழக சமூகத்தினர் பொது அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் முன்னெடுக்கும் அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளிற்கும் தமிழ் மக்கள் பேரவையின் ஆதரவினை தெரிவிப்பதோடு தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வினையாற்றுமாறும் தமிழ் மக்கள் பேரவை வேண்டி நிற்கின்றது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/?p=39034

வரலாற்றை நினைவுகூர்வதே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் – பிரித்தானியா

 
UK-FCO-Minister-Lord-Ahmad-UNHRC-696x447
 32 Views

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் முகமாக யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னத்தை அழித்தது தனக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியிருப்பதாக பிரித்தானியாவின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலக அமைச்சர் அஹமட் தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூர்வதன் மூலமே பாதிக்கப்பட்டவர்களின் காயங்களை ஆற்றுப்படுத்துவதுடன், இனநல்லணக்கப்பாடுகளையும் ஏற்படுத முடியும் என அவர் தனது ருவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

https://www.ilakku.org/?p=39054

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அனுமதிகளையும் தாண்டி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும்; நினைவுத் தூபி இடிப்புச் சம்பவத்திற்கு அங்கஜன் எம்.பி கண்டனம்.
அனுமதிகளையும் தாண்டி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்திருக்க வேண்டுமென யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைப்புச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு வழங்கியுள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
"நான் மக்களின் பிரதிநிதியே தவிர அரசின் பிரதிநிதி அல்ல; மக்களுக்கு ஓர் பிரச்சனை என்றால் எனது பதவியைக் கூட ராஜினாமா செய்வேன் என கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் யாழ் பல்கலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த போது குறிப்பிட்டிருந்தேன்.அந்தவகையில் தமிழ் மக்களின் அடையாளச் சின்னம் ஒன்று தகர்க்கப்பட்டிருக்கும் இவ்விடயத்தில் என்னால் கரிசனை காட்டாமல் இருந்து விட முடியாது. ஓர் நினைவுத் தூபியை அழிப்பதென்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் அது பேரிழப்பாக அமையும். யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த முள்ளி வாய்க்கால் நினைவுத் தூபி அழிப்புச் சம்பவமும் தமிழ் மக்கள் மனங்களில் ஓர் வடுவாக மாறியுள்ளது.
கடந்த கால அரசியல் தலைமைகள் நினைத்திருந்தால் தூபிக்கான அனுமதியை அன்றே பெற்றுக் கொடுத்திருக்க முடியும்.
அனுமதி என்ற விடயத்தில் அன்று விடப்பட்ட தவறு இன்று ஓர் அடையாளச் சின்னம் அழிக்கப்படக் காரணமாக அமைந்துவிட்டது.
இந்த நினைவுச் சின்னம் இன மத பேதங்களுக்கு அப்பால் இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த அனைவருக்கும் பொதுவான ஒன்று.
நினைவுத் தூபியை இடிக்க வேண்டும் என அழுத்தம் பிரயோகிக்கப்பட்டமை தொடர்பில் எமக்கு எந்தவொரு தகவலும் கல்விச் சமூகத்தால் தெரிவிக்கப்படவில்லை. அடையாளச் சின்னம் அழிக்கப்பட்ட பின்னரே இவ் விடயம் தொடர்பில் எம்மால் அறிய முடிந்தது.இது தொடர்பில் முன்பாகவே எமக்கு தெரியப்படுத்தியிருந்தால் இன்று அந்த தமிழ் மக்களின் அடையாளச் சின்னம் அழிவின்றி இருந்திருக்கும்.
எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகளுக்கு களம் அமைத்துக் கொடுத்து இளைய சமுதாயம் திசை மாறிச் செல்வதனையும், இனங்களுக்கிடையே முரண்பாடுகள் வளர்க்கப்படுவதனையும் அடியோடு தடுத்து நிறுத்த வேண்டும்.
பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்க்கப்பட வேண்டிய விடயம் ஒன்று இன்று வன்முறை வரை வளர்ந்து நிற்பது வருத்தமளிக்கின்றது.
அங்கஜன் இராமநாதன்
பாராளுமன்ற உறுப்பினர்
யாழ் மாவட்டம்.
136350032_10164471350200567_817054779513
 
 
136946620_10164471349840567_121232435214
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இனத்திற்கு எதிரானவர்களை புறக்கணிக்க தயாராக வேண்டும்

 
satgu.jpg
 14 Views
 

யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவுத்தூபி பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையில் இரவு வேளை திருட்டுத்தனமாக இடித்தழிக்கப்பட்டது. அதன் பின்னர் இடம் பெறும் சம்பவங்கள் அனைத்தையும் நாம் அனைவருமே அவதானித்துக் கொண்டிருக்கிறோம்.

நாம் பல சந்தரப்பங்களில் இவ்வாறான பல பிரச்சினைகளையும் அதற்கு எதிரான போராட்டங்களையும் போராட்டங்கள் முடிவில்லாமல் கைவிடப்பட்ட சந்தரப்பங்களையும் கடந்து வந்திருக்கிறோம். ஏறக்குறைய சோடா காஸ் போல ஆரம்பத்தில் பொங்கி பின்னர் மெதுவாக அடங்கி அதை கடந்திருக்கிறோம்.

இதுவும் கடந்து போகும்.

சாதாரணமாக இதையும் போராடி முடிவில்லாமல் ஓய்ந்து போகும் சாத்தியங்களே அதிகம். அப்படி இல்லையாயின் ஒரே இனத்தவரான நாங்களே ஒருவர் முகத்தில் ஒருவராக காரி உமிழ்ந்து கொண்டிருக்கப் போகிறோம். பதவி ஆசை பிடித்தவர்கள் தமது பதவிகளை தக்கவைத்துக் கொள்ள எஜமானார்களின் கால்களை நக்குவது இது தான் முதல் தடவையல்ல. இலங்கையில் சிறுபான்மை இனங்களைச்சேர்ந்த சிலர் தமமை உயர்த்திக்காட்டுவதற்காக இப்படியான கேவலமான ஜந்துகள் பலவற்றை பார்த்திருக்கிறோம்.

ஆனால் இப்படிப்பட்ட ஜந்துகளுக்கு இனம்சார்ந்து எவ்வாறு தண்டனை வழங்கப்போகிறோம். அதற்கு ஒரு வழி இருக்கிறது. இப்போது போராட்டத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகளும் கல்வியியலாளர்களும், சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு வாழ் நாள் தண்டனை வழங்கலாம்.

அது எவ்வாரெனில் துணைவேந்தர் சிறப்பு வருந்தினராகவோ,முதன்மை விருந்தினராகவோ அல்லது அவரது தலைமையில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் புறக்கணிக்க தயாராக வேண்டும். அவ்வாறு எல்லோரும் செய்வார்களேயானால் அவர் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்படுவார்.

அவ்வாறு அவர் தனிமைப்படுத்தப்படுவதால் வாழ் நாளில் அவருக்கு மிகப்பெரிய தண்டனை கிடைக்கும். அதே வேளை பதவிக்காகவும் பட்டத்துக்காகவும் இன உணர்வை மறப்பவர்களுக்கும் இது பாடமாக அமையும். ஆனால் அதை செய்வதற்கு ஏனையோர் தயாரா என்பதே இப்போதுள்ள கேள்வி.

நன்றி: சிவகரன்

https://www.ilakku.org/?p=39058

 

ஜனநாயக படுகொலைகளுக்கு எதிராக ஒன்றுபடுவோம்!

 
6-696x464.jpg
 32 Views

தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகள் மீதும் உணர்வுகள் மீதும்    ஏவி விடப்படும் அடக்கு முறைகள் இந்த நாட்டின் ஒருமைப்பாடு, நல்லிணக்கம், நீதித்துறை, ஊடகத்துறை மீதான  ஜனநாயகத்தை படுகொலை செய்வதாக அமைந்துள்ளது.

இந்த ஜனநாயக படுகொலைகளுக்கு எதிராக தமிழ் பேசும் மக்கள் ஒன்று செயற்பட்டு குரல் கொடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில்,

“பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக செயற்படும் ஊடகவியலாளர்கள் என்ற வகையில் சிறுபான்மை இனங்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறைகளையும் அதனை வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்கள்,ஊடக நிறுவனங்களை அடக்கி ஆள நினைக்கும் பேரினவாத செயற்பாடுகளை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் நடைபெறும் பண்ணையாளர்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர்கள் விசாரணை செய்யப்பட்டமை, மட்டக்களப்பு மாவட்டத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபடும் ஊடகவியலாளர் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படுகின்றமை, மட்டக்களப்பு ஊடகவியலாளர் கோகிலதாசன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை, யாழ் ஊடக நிறுவனம் ஒன்றின் மீது பயங்கரவாதச் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை, முஸ்லீம் சமூகத்தின்  ஜனாசா எரிப்புக்கு எதிரான கருத்துக்களை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மீது விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் என தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் சிறுபான்மை இனங்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களின் தொடர்ச்சியாக யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபியும் இடிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவங்களுக்கு எதிரான போராட்டங்களையும் அதனை செய்திகளாக்கும் ஊடகவியலாளர்கள் மீதான கைதுகள்,விசாரணைகள், மற்றும் மறைமுக அழுத்தங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

பாதிக்கப்படும் சமூகங்களின் உண்மைகள் வெளிவருவதை தடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்வது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை ஆகும் எனவே சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஜனநாயக படுகொலைகளை கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வன்மையாக கண்டிக்கின்றது.

இந்த ஜனநாயக படுகொலைகளுக்கு எதிராக  ஒன்று திரண்டு ஓரணியில் செயற்படும் மக்களுடன் மக்களாக ஊடகவியலாளர்களாகிய நாம் பக்க பலமாக நிற்போம் என உறுதி கூறுகின்றோம். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’” என்று கூறப்பட்டுள்ளது.

https://www.ilakku.org/?p=39062

நாம் மக்களிடம் மன்னிப்பு கோரவும் கடமைப்பட்டுள்ளோம் -பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிக்கை

 
 37 Views

எமது பல்கலைக்கழகத்தில் 08-01-2021 வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற, “இறந்தோர் நினைவுச் சின்னம்” இடித்தகற்றப்பட்டமை அதிர்ச்சி தரும் விடயமாகும். இந்த சம்பவத்தை தொடர்ந்து சமூகத்தின் மத்தியில் எழுந்துள்ள உணர்வலைகளை நாம் ஆழமாக புரிந்து கொண்டுள்ளோம் என பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கட்டிடங்களை அகற்றுவதற்கு விடுக்கப்பட்ட பணிப்புரை வெளிப்படையான முறையில் பரவலான கலந்தாலோசனை மூலம் அணுகப்பட்டிருக்க வேண்டுமென நாம் கருதுகின்றோம் என்று கூறியுள்ள பல்கலைக்கழக ஊழியர் சங்கம், இந்தப் பணிப்புரை தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு துணைவேந்தரால் பணிக்கப்பட்டவர்கள் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.
அன்றைய இரவில் பல்கலைக்கழகத்தை சார்ந்தவர்கள் குறிப்பாக எமது அங்கத்தவர்கள் எவராவது மனித நேய உணர்வாளர்களை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருந்தால் நாம் மக்களிடம் மன்னிப்பு கோரவும் கடமைப்பட்டுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகமானது சமூகத்துடன் இணைந்து இயங்க வேண்டியது மிகவும் அவசியமாகும். நாம் சமூகத்தை புறந்தள்ளி மமதையுடன் செயற்பட முடியாது. இது தொடர்பில் நாளை  திங்கட்கிழமை வடக்கு கிழக்கு தழுவிய நிலையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பூரண வழமை மறுப்பிற்கு எமது பரிபூரண ஆதரவையும் வழங்குகின்றோம் என்றும்  எனினும் பல்கலைக்கழகத்தில் பரீட்சை கடமைகளிலும் அதனுடன் இணைந்த கடமைகளிலும் ஈடுபடும் ஊழியர்களை பரீட்சைகள் இடம்பெறுமாயின் அதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டுகின்றோம்என்று பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
 
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்க‌ப்ப‌ட்ட‌மைக்காக‌ வ‌ட‌க்கு கிழ‌க்கு த‌மிழ் ம‌க்க‌ள் ஹ‌ர்த்தால் செய்ய‌லாம். அது அவ‌ர்க‌ளின் ஜ‌ன‌நாய‌க‌ உரிமை.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்க‌ப்ப‌ட்ட‌மைக்காக‌ வ‌ட‌க்கு கிழ‌க்கு த‌மிழ் ம‌க்க‌ள் ஹ‌ர்த்தால் செய்ய‌லாம். அது அவ‌ர்க‌ளின் ஜ‌ன‌நாய‌க‌ உரிமை.

 

2021-01-10-17-42-08-895.jpg

 

 

 
ஆனால் இந்த‌ ஹ‌ர்த்தாலுக்கு முஸ்லிம்க‌ளும் த‌ம் க‌டைக‌ளை மூடி ஆத‌ர‌வ‌ளிக்க‌ வேண்டும் என‌ த‌மிழ் க‌ட்சிக‌ள் ஒன்றிணைந்து முஸ்லிம்க‌ளை கோர‌த‌ நிலையில் முஸ்லிம் க‌ட்சிக‌ளும், முஸ்லிம் பொது ம‌க்க‌ளும் விழுந்த‌டித்துக்கொண்டு ஹ‌ர்த்தாலுக்கு ஒத்துழைக்கும் ப‌டி கோருவ‌து பிழையான‌ அர‌சிய‌லாகும். இந்த‌ ஹ‌ர்த்தால் என்ப‌து த‌மிழ் பொது ம‌க்க‌ளுக்கு ஏற்ப‌ட்ட‌ அநீதி ஒன்றுக்கான‌து என்றால், அல்லது ஒரு இந்துக்கோயில் உடைக்க‌ப்ப‌ட்டிருந்தால் நிச்ச‌ய‌ம் முஸ்லிம்க‌ளும் முன்வ‌ந்து ஒத்துழைக்க‌லாம். ஆனால் யுத்த‌ம் முடிக்க‌ப்ப‌ட்ட‌தை எதிர்த்து ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ நினைவு தூபி உடைக்க‌ப்ப‌ட்ட‌த‌ற்காக‌ முஸ்லிம்க‌ள் ஹ‌ர்த்தாலுக்கு ஒத்துழைக்க‌ தேவையுமில்லை, அதை எதிர்க்க‌ தேவையுமில்லை. சிங்க‌ள‌ ஆட்சியாள‌ருட‌ன் இருக்கும் கோப‌த்துக்காக‌ முஸ்லிம் ச‌மூக‌த்தை தொட‌ர்ந்தும் பிழையான‌ அர‌சிய‌லில் த‌ள்ள‌ முடியாது.
 
- உல‌மா க‌ட்சி ஏ எ முபாரக்
 
  • கருத்துக்கள உறவுகள்

மேலிடத்திலிருந்து அழுத்தங்கள் வந்தது- நினைவுத்தூபியை மீளஉருவாக்கிதர தயார் – துணைவேந்தர்

Digital News Team

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மேலிடத்தின் உத்தரவின் பேரிலேயே இடிக்கப்பட்டது அதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்துவேன் என யாழ்பல்கலைகழக துணைவேந்தர் தெரிவித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ErONSUSXYAAxEyo-1-300x225.jpg
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை சந்தித்தவேளை தமிழ்நாடாளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்தார் என மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மாணவர்களை சந்திப்பதற்கு முன்னர் துணைவேந்தரை தான் சந்தித்ததாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நினைவுத்தூபியை இடிப்பதற்கு எனக்கு அழுத்தம் தந்தார்கள்,ஆனால் தற்போது தாங்கள் அழுத்தம் கொடுக்கவில்லை என தெரிவிக்கின்றனர் எனதுணைவேந்தர்தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார்.
அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன அதனை பல்கலைகழக பேரவை கூட்டத்தில் வெளிப்படுத்துவேன் எனவும் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
தூபியை இடித்தது எனக்கும் கவலைதான் அதனை மீள உருவாக்க தயாராயிருக்கின்றேன் எனவும் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

யாழ்பல்கலைகழக நிர்வாகம் தனது தவறை திருத்தி மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றமொன்றை அமைத்து தரவேண்டும்-பல்கலைகழக மாணவர் ஒன்றியம்

Digital News Team

யாழ்பல்கலைகழக நிர்வாகம் தனது தவறை திருத்தி யாழ்பல்கலைகழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றமொன்றை அமைத்து தரவேண்டும் என யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

jaffna-uni-students-union-230x300.jpg
நினைவுத்தூபி அழிக்கப்பட்டமைக்கு கண்டனத்தை வெளிப்படுத்துவதற்காகவும் நினைவுத்தூபி மீண்டும் அமைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும் நாளை வடக்கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ள யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் வர்த்தக சங்கங்கள் போக்குவரத்து சங்கங்கள் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஸ்ரீலங்கா அரசின் கைக்கூலிகள் போல பல்கலைகழக நிர்வாகமும் துணைவேந்தரும் செயற்பட்டிருப்பது ஆழந்;த விசனத்தை தருகின்றது எனவும் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த செயல் பல்கலைகழக மாணவர்களை மாத்திரமல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிக்கும் செயல் எனவும் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இது ஒரு மக்கள் இனத்திற்குரிய நினைகூருவதற்கான உரிமையை மதிக்கும் செயல் எனவும் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Thinakkural.lk

 
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, யாயினி said:

மேலிடத்திலிருந்து அழுத்தங்கள் வந்தது- நினைவுத்தூபியை மீளஉருவாக்கிதர தயார் – துணைவேந்தர்

Digital News Team

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மேலிடத்தின் உத்தரவின் பேரிலேயே இடிக்கப்பட்டது அதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்துவேன் என யாழ்பல்கலைகழக துணைவேந்தர் தெரிவித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ErONSUSXYAAxEyo-1-300x225.jpg
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை சந்தித்தவேளை தமிழ்நாடாளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்தார் என மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மாணவர்களை சந்திப்பதற்கு முன்னர் துணைவேந்தரை தான் சந்தித்ததாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நினைவுத்தூபியை இடிப்பதற்கு எனக்கு அழுத்தம் தந்தார்கள்,ஆனால் தற்போது தாங்கள் அழுத்தம் கொடுக்கவில்லை என தெரிவிக்கின்றனர் எனதுணைவேந்தர்தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார்.
அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன அதனை பல்கலைகழக பேரவை கூட்டத்தில் வெளிப்படுத்துவேன் எனவும் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
தூபியை இடித்தது எனக்கும் கவலைதான் அதனை மீள உருவாக்க தயாராயிருக்கின்றேன் எனவும் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

யாரந்த அரசியல்வாதி... 🤥

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

யாரந்த அரசியல்வாதி... 🤥

non regestered reporter மாரிடம் இந்த மாதிரி கேள்விகள் எல்லாம் கேட்கப்படாது.😆

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு எந்த தொடர்பும் இல்லை! சுரேன் ராகவன்..

Report us Jeslin 3 hours ago

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டதற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

தனது முகநூலில் இட்டுள்ள பதிவில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

போரின் போது உயிரிழந்த பல்கலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களை நினைவுகூரும் பொருட்டு யாழ். பல்கலை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி நேற்று முன்தினம் இரவு இடித்து அழிக்கப்பட்டது.

இதற்கு இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட தமிழ் மக்கள் வாழும் புலம்பெயர் நாடுகளிலிருந்து பல்வேறு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் என பலரும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

குறித்த நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு நாட்களாக பல்கலை வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்ட விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனுக்கு நேரடித் தொடர்பிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/266099?ref=home-top-trending

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

non regestered reporter மாரிடம் இந்த மாதிரி கேள்விகள் எல்லாம் கேட்கப்படாது.😆

துணை வேந்தர் பதவி விலகுவதற்கு ஆயத்தம் என்று ஒரு கதை அடிபடுகுது. ஆனால் அதற்கான சாத்தியம் குறைவு. 

பனையால விழுந்தவன மாடேறி மிதிச்ச நிலைதான் துணை வேந்தருக்கு. ☹️

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: , ’யாரையும் பழிவாங்க நினைக்காதே..! உன்னை ஏமாற்றியவர்கள், தன் கர்மவினையை அடைந்தே தீருவர்.. sനോe நீ அதிர்ஷ்டசாலியாக இருந்தால், அவை உன் கண் முன்னே நிகழும்..’ எனச்சொல்லும் உரை

என்ன குமாரசாமியண்ணை?.  இது என் சொந்தப்பிரச்சனையில்லை பொதுப்பிரச்சனை.  இன்றைய சூழலில் இலங்கையரசு செய்துயிருக்காது எனக் கற்பகதரு கூறுகிறர்  அதனை நான் ஒரளவு நம்புகிறேன். பூரணமாக நம்பவேண்டுமெனில் குற்றவாளி தண்டிக்கப்பட்டால் மட்டும் நம்பலாம். தண்டனையில்  பல வகையுண்டு.  பணம் அறவிடலாம்....தூபியைக்கட்டச்சொல்லலாம்...சோசியல் வேலை செய்யவிடலாம்....துனைவேந்தரை பதவியிலிருந்து அகற்றலாம்...இப்படிப் பலவகையுண்டு.  மறாக அடி...உதை...சுடு..அல்ல....😜😜😜😜👍👍👍

                       உதாரணம் ஜேர்மானியில் பிழையான. கார் தரிப்புக்கு வருடம் பல மில்லியன் யூரோ அறவிடப்படுகிறது.  தமிழ் மன்னன் ஒருவன் பசுவுக்கு நீதி வழங்க தன் சொந்தப்பிள்ளையை தேரினால் ஏற்றி தண்டணையை நிறைவு செய்தான்.  😎😎

             

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kapithan said:

துணை வேந்தர் பதவி விலகுவதற்கு ஆயத்தம் என்று ஒரு கதை அடிபடுகுது. ஆனால் அதற்கான சாத்தியம் குறைவு. 

பனையால விழுந்தவன மாடேறி மிதிச்ச நிலைதான் துணை வேந்தருக்கு. ☹️

கல்வி கற்க போகும் மாணவர்களை கடித்தும் விறாண்டியும் இப்படி எத்தனையோ இடர்களை செய்த துணை வேந்தர் வீடு செல்வது நன்று தானே ஏன் கவலை..மாணவர்களுக்கு இடையில் பிரச்சினை என்றால் அது என்ன தானும் பிள்ளைகளை வதைப்பது.அதுவும் வளர்ந்த பிள்ளைகளை..

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பெருமாள் said:

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டதற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இவர் ஏன் அவசரப்படுறார்....?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

Edited by Ahasthiyan

  • கருத்துக்கள உறவுகள்

துணை வேந்தரின் அறிக்கை, அறிவு சார்ந்த அறிக்கையாக தெரியவில்லை.
நல்லொரு கேள்வி கடந்த 40 ஆண்டுகளில் கட்டப்பட வீடுகள் அனுமதி பெற்றா  கட்டபட்டது, துணை வேந்தரின் வீடு உட்பட. அப்படியானால் முதலில் இடிக்கப்பட வேண்டியது அவருடைய வீடுதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலையில் நினைவுத் தூபி தகர்க்கப்பட்டமையால்....! கனடாவில் பாரிய அளவில் போராட்டம்

Report us Dias 1 hour ago

2009ஆம் ஆண்டு தமிழர்களிற்கு இடம் பெற்ற இனப்படுகொலையை நினைவு கூரும் வகையில் யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டதற்காக இலங்கை அரசைக் கண்டித்து 1,000க்கு மேற்பட்ட வாகனங்கள் கனேடிய ஈழ உணர்வளர்களால் பேரணியாக கொண்டு செல்லப்பட்டுள்ளன.

கனேடிய மக்களின் எதிர்ப்பை சுட்டிக்காட்டி மேற்கொள்ளப்பட்ட இந்த பேரணியானது கனடா நேரம் மதியம் 2:45 மணிக்கு குயின்ஸ்பார்க்கில் நிறைவடைந்துள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டதனைக் கண்டித்து கனடாவின் Toronto நகரில் Ontario சட்டசபையினை நோக்கி இந்த வாகன பேரணி இடம்பெற்று வருகிறது.

தொடர்ச்சியாக இலங்கை அரசின் தொடரும் இன அழிப்பில் யாழ். பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டிருக்கின்றது.

இதை வன்மையாக கண்டிக்கும் முகமாக கனடாவில் வாழும் தமிழ் இன உணர்வாளர்களால் இக் கண்டன பேரணி முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத் தக்கது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

https://www.tamilwin.com/canada/01/266149?ref=imp-news

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தரின் பொய்கள் அம்பலம் – கொழும்பின் உயர் மட்டத் தகவல்

Report us Dias 24 hours ago

பல்கலைக்கழக உபவேந்தரின் தீர்மானத்துக்கு அமையவே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி அகற்றப்பட்டதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

நினைவுத்தூபி அகற்றப்பட்டமை தொடர்பில் கொழும்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழக ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவிக்கையில்,

2018 ஆம் ஆண்டுகாலப் பகுதிகளில் நினைவுத் தூபி அமைப்பதற்கு பல்வேறு தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தத் தூபியில் காலத்துக்குக் காலம் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வந்ததாக அறிகிறோம்.

உண்மையில் சொல்வதானால், இந்தத் தூபியானது வடக்கு - தெற்கு நல்லிணக்கத்துக்கு தடையாக இருக்கக் கூடும்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக உபவேந்தர் ஸ்ரீ சற்குணராஜா, இலங்கையில் உள்ள மிகச் சிறந்த நிபுணத்துவமிக்கவர்களில் ஒருவராவார், அதேபோல் மிகத் திறமைவாய்ந்த நிர்வாகி என்பதுடன் அண்மைக்காலத்தில் நான் பார்த்தவர்களில் மிகச் நிறந்த உபவேந்தராகவும் திகழ்கிறார்.

அந்த நினைவுத்தூபி நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் பொருத்தமற்றது என்பதால் அதனை அகற்றுவதற்கு அவர் தீர்மானித்தார்.

இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் பிள்ளைகள், யுத்தம் நிறைவடையும் காலப்பகுயில் தரம் 9,10,11 இல் பாடசாலைகளில் கல்வி பயின்றவர்களாவர். சிங்களம், தமிழ், முஸ்லிம் என எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாயினும் அவர்கள் எமது நாட்டின் பிள்ளைகள். இப்போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் ஆயிரத்து 500 பேர் கல்வி நடவடிக்கைகளை தொடருகின்றனர் என்பதை மகிழ்ச்சியுடன் பதிவு செய்ய விரும்புகிறேன்.

அதேபோல் தெற்கு பல்கலைக்கழகங்களில் சுமார் 500-600 பேர் வரையில், விசேடமாக வடக்கு-கிழக்கு பகுதியைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் கல்வி பயில்கின்றார்கள்.

இந்த மாணவர்களுக்கு கடந்த காலத்தில்நடந்தது போன்ற கசப்பான அனுபவங்கள் கிடைக்கக் கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

இதுவரை காலமும் அவர்கள் பேதங்கள் எதுவுமின்றி கல்வி பயின்று வருகிறார்கள், ஆதலால், இவ்வாறான காரணங்களைக் கருத்திற்கொண்டு யாழ். பல்கலைக்கழக உபவேந்தரின் தீர்மானத்துக்கு அமைவாக பல்கலைக்கழகத்தின் நினைவுத்தூபி நேற்றிரவு அகற்றப்பட்டது.

நமக்கு யுத்த மார்க்கம் இப்போது அவசியப்படாது, சமாதான மார்க்கமே அவசியப்படுகிறது. ஆதலால் அதற்கேற்ற வகையில் செயற்பட வேண்டியது அவசியமாகும் எனத் தெரிவித்துள்ளார்.

https://www.tamilwin.com/srilanka/01/266029?ref=rightsidebar

2 minutes ago, பெருமாள் said:

பல்கலைக்கழக உபவேந்தரின் தீர்மானத்துக்கு அமையவே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி அகற்றப்பட்டதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

ஓவொருத்தரும் தாங்கள்  இல்லை என்றால் யார்தான் உடைக்க சொன்னது ?

  • கருத்துக்கள உறவுகள்

 

 

136415121_10157545602471822_463274762920

சிறிதரனின் ஸ்ரண்ட்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, யாயினி said:

கல்வி கற்க போகும் மாணவர்களை கடித்தும் விறாண்டியும் இப்படி எத்தனையோ இடர்களை செய்த துணை வேந்தர்

துணைவேந்தர் சைவம், அதனால் மாட்டெலும்பை கடிக்கும் சந்தர்ப்பம் அவருக்கு இல்லை. ஆகவே மாணவர்களை கடித்தார். புலிகள் இப்போது இல்லாதபடியால் இவர்தானே மாணவர்களை விறாண்ட வேண்டி இருக்கிறது? இது எல்லாம் ஏதோ முக்கியமான சங்கதி போல தூக்கிப்பிடிக்கிறீர்களே?

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ ஒடுக்குமுறைக் கோரத்தின் வெளிப்பாடே பல்கலைக்கழக சம்பவம் நினைவுத் தூபி இடிப்பு குறித்து விக்னேஸ்வரன் அறிக்கை

 
531370.jpg
 65 Views

“தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக – அவர்களுடைய அன்புக்குரிய உறவுகளை நினைவு கூருவதற்காக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டதுதான் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம். இராணுவப் பாதுகாப்புடன் இதனை நிர்மூலமாக்குவது தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்குவதற்கு ஒப்பானது” எனத் தெரிவித்திருக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், “பல்கலைக்கழகப் பகுதியில் இராணுவத்தைக் குவிக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. உடனடியாக இராணுவம் அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும்” எனவும் வலியுறுத்தியிருக்கின்றார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் தற்போது உருவாகியிருக்கும் நிலைமைகள் தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு விக்னேஸ்வரன் தெரிவித்தார். அவர் இது குறித்து மேலும் தெரிவித்தவை வருமாறு;

“இப்போது இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி. யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் மற்றும் அவர்களின் உறவுகளுக்காக அமைக்கப்பட்டது. மாணவர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் என அனைத்துத் தரப்பினரும் இணைந்தே இதனை அமைத்தார்கள். இதனை நிர்மூலமாக்க வேண்டும் என்ற அரசின் உயர் தரப்பினரின் அழுத்தங்களையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம், இராணுவப் பாதுகாப்புடன் இதனை அகற்றியிருக்கின்றது.

கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், அவர்கள் மீதான படுகொலைகள் போன்றவற்றின் நினைவுகளை முழுமையாக அகற்றிவிட வேண்டும் என்பது தற்போதைய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றது. அதன் ஒரு அங்கமாகத்தான் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் முன்னெடுக்கும் மிகவும் ஆபத்தான வேலைத் திட்டங்களில்  இதுவும் ஒன்று. இது போன்ற பல திட்டங்கள் இந்த அரசிடம் இருப்பதாகத் தெரிகின்றது.

பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் தமது உணர்வுகளின் வெளிப்பாடாக, தமது அன்புக்குரிய உறவுகளை நினைவுகூர்வதற்காக அமைத்த நினைவுத் தூபியை ஒரே இரவில் அராஜகமாகத் தகர்த்தெறிவது என்பது தமிழ் மக்களின் உணர்வுகளைச் சீண்டி நசுக்குவதற்கு ஒப்பானது. இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் ஒருபோதும் நல்லெண்ணத்தை ஏற்படுத்திவிட முடியாது. இது இராணுவ ஒடுக்குமுறைக் கோரத்தின் வெளிப்பாடாகத்தான் இருக்கின்றது. அத்துடன் எம்மவரின் பயத்தின் உச்சகட்டமாகவும் காணப்படுகின்றது.

பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியில் இராணுவம், அதிரப்படையினரைக் குவித்து துப்பாக்கி முனையில் மாணவர்களையும், பொதுமக்களையும் அச்சுறுத்திப் பணியவைப்பதானது இராணுவ அடக்குமுறையின் அசிங்க முகத்தையே வெளிப்படுத்துகின்றது. இந்தப் பகுதியில் இராணுவத்தைக் குவிக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. உடனடியாக இராணுவம் அங்கிருந்து திரும்பப் பெறப்பட வேண்டும். இப்பொழுது இங்கு நடப்பது வெகுவிரைவில் சிங்களப் பகுதிகளிலும் ஏதோ ஒரு விதத்தில் நடைபெறப் போகின்றது என்பதை எமது சிங்கள சகோதர சகோதரிகள் உணர்வார்களாக!

அதேவேளை, இந்த நினைவுத் தூபி இடிப்பு விடயத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் நடந்து கொண்ட முறைமை குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒரு இழிவான செயலை செய்துவிட்டு அதனை மேலிடத்து உத்தரவு என்று காரணம் கூற முடியாது. ஒரு தவறான காரியத்தை செய்யுமாறு  மேலிடத்து உத்தரவு வருமானால், அதனை செய்வதில் உள்ள பிழை அல்லது அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் ஆகியவற்றை மேலிடத்துக்கு எடுத்துக்கூறி புரிய வைப்பது சம்பந்தப்பட்டவர்களின் கடமை. இது இந்த விடயத்தில் எந்தளவுக்கு நடைபெற்றிருக்கிறது என்பது எனக்கு தெரியாது.  எது எப்படி இருந்தாலும், இதுவரை காலமும் இந்த நினைவுத் தூபியை அகற்றுவதற்கு பல்கலைக்கழகத்தின் முன்னைய இரண்டு நிர்வாகங்களும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது கருத்தில் கொள்ளப்படவேண்டும்.”

 

https://www.ilakku.org/?p=39108

மேலிடத்திலிருந்து அழுத்தங்கள் வந்தது- நினைவுத்தூபியை மீளஉருவாக்கிதர தயார் – துணைவேந்தர்

Digital News Team

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மேலிடத்தின் உத்தரவின் பேரிலேயே இடிக்கப்பட்டது அதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்துவேன் என யாழ்பல்கலைகழக துணைவேந்தர் தெரிவித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ErONSUSXYAAxEyo-1-300x225.jpg
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை சந்தித்தவேளை தமிழ்நாடாளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்தார் என மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மாணவர்களை சந்திப்பதற்கு முன்னர் துணைவேந்தரை தான் சந்தித்ததாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நினைவுத்தூபியை இடிப்பதற்கு எனக்கு அழுத்தம் தந்தார்கள்,ஆனால் தற்போது தாங்கள் அழுத்தம் கொடுக்கவில்லை என தெரிவிக்கின்றனர் எனதுணைவேந்தர்தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார்.
அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன அதனை பல்கலைகழக பேரவை கூட்டத்தில் வெளிப்படுத்துவேன் எனவும் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
தூபியை இடித்தது எனக்கும் கவலைதான் அதனை மீள உருவாக்க தயாராயிருக்கின்றேன் எனவும் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

 

https://thinakkural.lk/article/103924

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

ஓவொருத்தரும் தாங்கள்  இல்லை என்றால் யார்தான் உடைக்க சொன்னது ?

படித்த முடடாள் பதவிக்கு ஆசைப்பட்டு கோத்தாவின் கட்டளையை நிறைவேற்றியுள்ளார். இவர் எப்படி வருங்கால சந்ததியை வழிநடத்தப் போகிறார்? இப்படி தன்னைப்போல் விதண்டாவாதமாய்.....?.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்? மனோ கணேசன்

 
Mano-01-696x365.jpg
 45 Views

யாழ்ப்பாண மாணவர்கள், ஊழியர்கள், உறவுகள் நினைவு கூற பல்கலைக்கழ பூமியின் உள்ளேயே நிர்மாணிக்கப்பட்ட நினைவு தூபியை உடைத்து அழித்ததன் மூலம், உயிர் வாழும் மற்றும் உயிர் இழந்த தமிழ் இலங்கையர்களை இந்த அரசு அவமானப்படுத்தி உள்ளது.

யுத்தத்தை நாம் மறக்க வேண்டும். அதுபற்றி விவாதம் இல்லை. இரண்டு பேச்சு இல்லை. ஏனெனில் இந்த யுத்தம் இன்னொரு நாட்டுடன் நடைபெறவில்லை. அது உள்நாட்டு பிரச்சினையாகும். அதை மறந்து முன்னாலே செல்வோம். பிரச்சனை இல்லை. அப்படியானால் அது இரண்டு புறமும் நிகழ வேண்டும்.

வடமாகாணம் முழுக்க எங்களுக்கு இராணுவ வீரர்களின் வெற்றி தூபிகள் காணக்கிடைக்கின்றன. இராணுவ வீர்களின் உருவங்கள் துப்பாக்கியை காட்டியபடி, உயர்த்தியபடி, ஆயுதங்களை காட்டியபடி இருக்கின்றன. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா மாவட்டங்களில் காணக்கிடக்கின்றன.

இந்நிலையில் தமிழர்களின் யுத்த நினைவு சின்னங்களை மாத்திரம் அழிப்பதில் என்ன நியாயம் உள்ளது? என கொழும்பு மாவட்ட எம்பி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் இன்று கொழும்பில் நடத்திய விசேட ஊடக மாநாட்டில் கேள்வி எழுப்பி உள்ளார்.

எம்பி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

தெற்கில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில், வயம்ப பல்கலைக்கழகத்தில், அக்காலத்தில் ஆயுத போராட்டம் செய்த ஜேவீபி போராளிகளின் நினைவு தூபிகள் இருக்கின்றன. அப்படியானால், ஏன் ஒருபுறம் மட்டும் ஒரு சட்டம்?

இப்போது பார்க்கப்போனால், துறைசார் அமைச்சர் சரத் வீரசேகர, இதில் அரசுக்கு தொடர்பு இல்லை என்று தன்னை காப்பற்றிக்கொள்கிறார். பொலிஸ் அங்கு சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவே சென்றது என்கிறார். இது விகாரமான நகைச்சுவை.

அதுபோல, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தலைவர், ஐயோ, எமக்கு இதனுடன் தொடர்பில்லை என்கிறார். இதை செய்தது, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் என்கிறார். அப்படி சொல்லிவிட்டு நிறுத்தவில்லை. நான் சொன்னது போல, யுத்த நினைவுகள் எங்களுக்கு தேவையில்லை. யுத்தத்தை ஞாபகப்படுத்தும் நினைவு தூபிகள் அவசியமில்லை என்கிறார்.

அவசியமில்லைதான், ஆணைக்குழு தலைவரே! ஆனால், இப்படியான நினைவு தூபிகள் நாட்டின் ஏனைய பல்கலைக்கழகங்களில் உள்ளனவே. நாட்டின் ஏனைய இடங்களில் உள்ளனவே. யுத்தம் எங்களுக்கு தேவையில்லைதான். நாம் பேச்சுவார்த்தைக்கு செல்வோம். யுத்தம் என்பது துரதிஷ்டவசமானது. யுத்தம் என்பது ஒரு குற்றம். சிங்கள, தமிழர் என இருபுறமும் நாம் சண்டையிட்டோம். இருபுறமும் மக்கள் இறந்தார்கள். அது எமக்கு தேவையில்லை. அவற்றை நாம் மறப்போம்.

ஆனால், அப்படி செய்யும் போது நாம் அதை ஒரே சட்டத்தின் கீழ் செய்வோம். நான் இந்த அரசுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன். தயவுசெய்து இந்த ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற கூச்சலை நிறுத்துங்கள். ஒரே நாடு என்பது எமக்கும் சரி. ஆனால், ஒரே சட்டம் என்ற அந்த “ஜோக்கை” விகாரமான “ஜோக்கை” நிறுத்துங்கள். தயவுசெய்து நாட்டில் இன்று இருக்கும் சட்டத்தையாவது ஒழுங்காக அமுல் செய்யுங்கள். எல்லோருக்கும் ஒரே சமத்துவமாக அமுல் செய்யுங்கள். தமிழருக்கு ஒன்று, சிங்களவருக்கு வேறொன்று, முஸ்லிம்களுக்கு இன்னொன்று என்று செய்ய வேண்டாம், என நாட்டி பிளவுபடுத்த வேண்டாம். நாட்டை பிளவு படுத்த வேண்டாம் நாம் கூறுகிறோம்,

இலங்கை சட்டம் எமக்கு தேவை. பேச்சுவார்த்தையை ஆரம்பியுங்கள். அப்படியானால், இப்படியான காரியங்களை செய்யாதீர்கள். தமிழ் மக்களின் மனங்களை உடைக்க வேண்டாம். நாம் கவலையடைந்துள்ளோம். மரணித்த எம் தாய்மார்கள், தந்தைமார்கள், சகோதர, சகோதரிகள், அண்ணன், தம்பிகள், தங்கைகள் ஆகியோரை நினைவு கூற எமக்கு முடியாதா? எமக்கு முடியாதா?

ஏன்?, தென்னிலங்கை பல்கலைக்கழகங்களின் சிங்கள மாணவர்களுக்கு வழங்கப்படும் உரிமையும், நீதியும், வடக்கு பல்கலைக்கழகங்களின் தமிழ் மாணவர்களுக்கு, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என நான் கேள்வி எழுப்ப விரும்புகிறேன்.

 

https://www.ilakku.org/?p=39087

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

படித்த முடடாள் பதவிக்கு ஆசைப்பட்டு கோத்தாவின் கட்டளையை நிறைவேற்றியுள்ளார். இவர் எப்படி வருங்கால சந்ததியை வழிநடத்தப் போகிறார்? இப்படி தன்னைப்போல் விதண்டாவாதமாய்.....?.

கோத்தாவின் நோக்கமே தமிழில் படித்த மேதைகளை  சாதாரண தமிழ் மக்களிடம் இருந்து பிரிப்பதே  முக்கியமாய் புலி ஆதரவாளர்களிடம் இருந்து.

டீன்  அவரே  இரந்து  சொல்கிறார் தனக்கு தெரிந்து உடைக்க சொன்னவர்களை தான் பொது கூட்டத்தில் சொல்கிறேன் என்று தயுவு செய்து கொஞ்சம் பொறுமை கொள்ளுங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

இவர் ஏன் அவசரப்படுறார்....?

 இவர் "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்கிறார்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.