Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குருந்தூர் மலையில் மீண்டன தாரா லிங்கமும் கருவறையும்! விகாரை என்கிறது தொல்லியல் தரப்பு.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர் மலையில் மீண்டன தாரா லிங்கமும் கருவறையும்! விகாரை என்கிறது தொல்லியல் தரப்பு.!

Screenshot-2021-02-10-17-05-14-070-com-a 

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட குருந்தூர் மலையில் தொல்லியல் திணைக்களத்தினர் மேற்கொண்டுவரும் அகழாய்வு நடவடிக்கையில் இந்தியாவின் பல்லவர் காலத்து (கி.பி. 275–கி.பி. 897) பயன்பாட்டு வடிவமைப்புக்களில் ஒன்றான தாரா லிங்கம் எனப்படுகின்ற அமைப்பினை உடைய உருவச் சிலை ஒன்றும் அது பிரதிஸ்டை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்ற கட்டட இடிபாடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த சிலையுடன் செங்கற்கள் அல்லது அதனை ஒத்த கற்களாலான கருவறை என்று கருதப்படும் கட்டட இடிபாடுகளும் மீட்கப்பட்டுள்ளன.

கொழும்பு தொல்லியல் திணைக்களத்தினரும் யாழ்ப்பாணத்தின் தொல்லியல் திணைக்களத்தினரும் இணைந்து குருந்தூர் மலையில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அகழ்வு நடவடிக்கைகள் குறித்த ஒளிப்படங்களை தொல்லியல் திணைக்களம் தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தது.

Screenshot-2021-02-10-17-06-14-872-com-a 

இதனை பௌத்த விகாரை எச்சங்கள் வன்னியில் மீட்கப்பட்டுள்ளதாக திவயின உட்பட்ட சிங்கள இனவாத பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனிடையே,

குறித்த உருவத்தின் அமைப்பு சிவலிங்கத்துக்கு ஒத்ததாக காணப்படுகின்ற நிலையில் அது தொடர்பில் தமிழகத்தில் இருக்கின்ற தொல்லியல் அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

குறித்த உருவத்திலான சிவலிங்க வழிபாடு பல்லவர் காலத்துக்கு உரியது என்றும், அந்த வடிவ லிங்கம் தாரா லிங்கம் என்றும் அரிதாகவே அந்த லிங்க உருவங்கள் காணப்படுவதாகவும் சொல்கிறார்கள்.

தாரா லிங்கம் பற்றி தமிழகத்தின் தங்கம் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள பதிவில் இருந்து

முக லிங்கங்களைப் போன்றே தனிச் சிறப்பு வாய்ந்தவை தாரா லிங்கங்கள். லிங்கத்தின் பாணப்பகுதியில் முகங்களுக்கு பதிலாக அழகிய பட்டைகள் அமைந்தவை தாரா லிங்கங்கள். பல்லவ அரசர்கள் வெகு சிறப்பாக தாரா லிங்கங்கள் அமைத்தனர் என்பதை வரலாற்றுக் குறிப்புகளின் மூலம் அறிய முடிகிறது. இந்த வகை லிங்கங்களின் பாணப் பகுதியில் 4, 8, 16, 32, 64 ஆகிய எண்ணிக்கையில் ஐந்து வகையாக பட்டைகள் அமைந்திருக்கும். இந்தப் பட்டைகள் ‘தாரா’ எனப்படும்.

இதில் நான்கு பட்டைகள் கொண்டது ‘வேத லிங்கம்’. பாடல் பெற்ற திருத்தலமான சக்ரப்பள்ளியில் வேத லிங்கத்தைக் காணலாம்.

எண் பட்டை (அஷ்ட தாரா) லிங்கம் பல்லவர்களால் கட்டப்பட்ட ஆலயங்கள் அனைத்திலும் உள்ளன. காஞ்சிபுரம் கயிலாயநாதர் ஆலயம், திருவதிகை வீரட்டானேசுவரர் ஆலயம் ஆகியவற்றில் இந்த வகையான லிங்கங்கள் இடம்பெற்றுள்ளன.

பதினாறு பட்டை (ஷோடச தாரா) லிங்கம், சந்திரனின் பதினாறு கலைகளையும் பதினாறு பட்டை களாகக் கொண்டது. ஆகையால் ‘சந்திர கலாலிங்கம்’ என்றும் இதை அழைப்பர். சிதம்பரம் நவலிங்க சந்நிதியின் மையத்தில் அமைந்த லிங் கம் மற்றும் காஞ்சி கயிலாயநாதர் ஆல யத்தின் சுற்றாலயத்தில் உள்ள லிங்கம் ஆகியவை இந்த வகையானதே.

முப்பத்திரண்டு பட்டை(தர்ம தாரா)லிங்கம், தர்மத்தின் 32 வகையைக் குறிப்பிடுவது. எனவே, இது ‘தர்ம லிங்கம்’ என்றும் அழைக்கப்படும். காமாட்சி அம்பிகை 32 அறங்களை வளர்த்த காஞ்சிபுரத்தில், வயல் வெளியில் 32 பட்டைகளைக் கொண்ட கலை நயமிக்க ஒரு லிங்கம் அமைந்துள்ளது.

அறுபத்துநான்கு பட்டை (சதுஷ்சஷ்டி) லிங்கம், சிவபெருமானின் 64 லீலா விநோதங் களை விளக்கும் வகையில் 64 பட்டைகள் கொண்டது. எனவே, இது ‘சிவலீலா சமர்த்த லிங்கம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சிவலிங்கத்தின் 64 பட்டைகள் 64 யோகினி சக்திகளைக் குறிக்கும் என்றும் கூறுவர். இந்த தாரா லிங்கங்களை வணங்குவதால் இறைவனோடு இரண்டறக் கலக்கும் பேறு பெறலாம் என்பர்.

தாரா லிங்கங்களின் மீது தாரா பாத்திரத்தை வைத்து அபிஷேகம் செய்யும்போது, அபிஷேக நீர் பட்டைகளின் வழியே பல கிளைகளாகப் பிரிந்து வழிந்தோடுவது கண்ணுக்கு இன்பம் அளிப்பதுடன், இறைவனின் அருள் சுரப்பதையும் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.

http://aruvi.com/article/tam/2021/02/10/22486/

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தொல்லியல் அமைப்பில.... இடி விழ. 😡

  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர்மலை பகுதியில் சிவலிங்கத்தை ஒத்த தொல்லியல் சிதைவுகள் மீட்பு

 
kurunthur_jpg___5_-360x480-1.jpg
 2 Views

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர்மலையில் தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவரும் பகுதியில் சிவலிங்கத்தை ஒத்த சந்தேகத்துக்கிடமான தொல்லியல் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன.

2-2.jpg

கடந்த மாதம் 18ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவால் குருந்தூர் மலையில் குருந்தாவசோக புராதன விகாரையின் சிதைவுகள் இருப்பதாக தெரிவித்து தொல்லியல் ஆய்வுப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

3-1.jpg

அதனைத் தொடர்ந்து, தொல்லியல் திணைக்களத்தோடு இராணுவம் இணைந்து தொல்லியல் அகழ்வாராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே இந்த சந்தேகத்துக்கிடமான சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன.

எனினும் இது சிவலிங்கமா அல்லது வேறு தொல்லியல் சிதைவுகளா என்பது குறித்து தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் இதுவரையில் எந்தவிதமான உத்தியோகபூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை.

 

https://www.ilakku.org/?p=41899

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
45 minutes ago, உடையார் said:

குருந்தூர்மலை பகுதியில் சிவலிங்கத்தை ஒத்த தொல்லியல் சிதைவுகள் மீட்பு

 
kurunthur_jpg___5_-360x480-1.jpg

 உது புத்தர்ரை தலை எண்டு சொன்னாலும் சொல்லுவாங்கள் 😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

Bild

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

Bild

Bild

நான் வேறு  ஒரு திரியில் முன்பு எழுதி இருந்தேன் 
வங்கத்தில் இருந்து வந்தவர்கள் பல்லவர்கள் என்று பல்லவர்கள்தான் 
ஆரம்ப காலத்தில் ஆதி சோழருக்கு முன்பே பலமான ஆட்ச்சி கொண்டவர்கள் 
அவர்கள் வங்கத்துக்கு படையெடுத்து அங்கு ஆடசி புரிந்து வந்தார்கள் 
அங்கிருந்து இலங்கைக்கு வந்தார்கள். தமிழ் கிரந்தத்தை மொழியாக கொண்டவர்கள் அதில் இருந்துதான் பின்பு துளு தெலுங்கு பாளி கர்நாட போன்ற மொழிகள் தோன்றின. பல்லவர்களை சரியாக ஆய்வு செய்தாலே போதும் சம்ஸ்கிருதம் பின் தோன்றிய மொழி என்பதை நிறுவிட 

பல்லவர்களின் கிரந்தத்தை அடிப்படையாக கொண்டே 
கெமர்களின் மொழி  பழையகாலத்து தாய்லாந்து (தாய்) மொழி எல்லாம் உருவாக்கி இருக்கின்றன 
தற்போதைய மியன்மாரின் பர்மிஸ் மொழி வியட்னாமிஸ் மொழி எல்லாவற்றுக்கும் அடித்தளம் பல்லவ 
கிரந்தம்தான் 

  • கருத்துக்கள உறவுகள்

தூங்கிக் கொண்டிருந்த யாழ். பல்கலைக்கழக தொல்லியல் பேராசிரியரை தட்டியெழுப்பியவன் யார்?

குருந்தூர் மலையேறிய சிங்கள பிக்கு.

    - அதோடு பின்னால் வந்து சைவக் கோவில்களுக்கும் சோனிகளுக்கும் வழக்கு வென்று கொடுக்கும் கிறீஸ்தவ “துரோகி” சுமந்திரன்.

  • கருத்துக்கள உறவுகள்

கிணறு வெட்டப் பூதம் கிளம்புது. தொடர்ந்து இவ்வாறே கிளம்பும். உள்ளது தானே வெளிவரும். புதுக்கதைகள் எழுதினால்  புதுசின்னங்களா கிளம்ப இது ஒன்றும் ஷீ பூக்கம்பா கதையல்ல. இதோடு மூடிவிட்டு வந்தவழியே மூட்டை கட்டுவது இவர்களுக்கு நல்லது அல்லது தொல்பொருளியல் அகழ்வின் போது சர்வதேச, யாழ் பொருளியல் கண்காணிப்பு முழுவதுமாக இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மலையில் இருந்து கற்பனைக்கதை, காணிப்பிடிப்புக் கதை எழுதியிருக்கிறார் பிக்கு காணிப்பிடிப்புக்கு முன்னோடியாக.  இவர்களுடைய போலிக்கதைகளை  சிங்கள மக்களுக்கும், சர்வதேசத்துக்கும் ஆதாரத்துடன் வெளிப்படுத்தப்படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர் மலையில் கண்டெடுக்கப்பட்டது ‘தாரா லிங்கம்’ என வரலாற்று ஆய்வாளர் உறுதி – சிறிதரன்

 
1-89.jpg
 32 Views

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர் கால எட்டுப்பட்டை (எட்டு முகம்) தாரா லிங்கம் என்பதை வரலாற்று ஆய்வாளர் NKS.திருச்செல்வம் உறுதிப்படுத்தியுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவருடைய ட்விட்டர் பக்கத்தில்,  “முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நடைபெற்ற அகழ்வாய்ச்சியில் கிடைத்த தொல்லியல் சிதைவுகளில் காணப்படும் சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர் கால எட்டுப்பட்டை (எட்டு முகம்) தாரா லிங்கம் என்பதை வரலாற்று ஆய்வாளர் திரு.NKS திருச்செல்வம் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்” என பதிவிட்டுள்ளார்.

 

மேலும் பல்லவர் கால கட்டட வடிவமைப்புக்களின் சாட்சியாக இருக்கும் அஷ்ட தார லிங்கம். தமிழ் நாட்டின் கும்ப கோணத்தை சேர்ந்த கூந்தூர் முருகன் ஆலயம் மற்றும் ஈழத்தின் குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் கோவிலிலும் உள்ளதான அஷ்ட தார லிங்கம்.

Image

குருந்தூர் – கூந்தூர் பெயர் கூட ஒத்ததாகவே இருக்கிறது என்றும் சிறிதரனின் ட்விட்டர் பதிவில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/?p=41916

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீ லங்காவில் மேலே தோண்டினால் புத்தர், ஆழ தோண்டினால் சிவலிங்கம். இதையும் புத்தரிண்டை கால் என்று சொன்னாலும் சொல்வார்கள். ஹோமாகம, களனி விகாரையிலும்  ஆழ தோண்ட வேண்டும். முன்பு சிவன் கோயில் இருந்ததாக கூறுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர் மலையில் மீட்கப்பட்ட தொல்பொருள் அநுராதபுர காலத்திற்குரியவை-தொல்பொருள் திணைக்களம்

 
3-1-1-696x365.jpg
 18 Views

முல்லைத்தீவு – தண்ணீறூற்று குருந்தூர் மலையில் மீட்கப்பட்ட தொல்பொருள் சிதைவுகள், அநுராதபுர காலத்திற்குரியவை என தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் லிங்கத்தை ஒத்த சின்னங்கள் உள்ளிட்ட சில தொல்பொருட்கள் அடையாளம் காணப்பட்டன.

குருந்தூர் மலையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராச்சியின்போதே இவை மீட்கப்பட்டதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த சிதைவுகள் அநுராதபுர காலத்திற்குரியவை என்றும் அங்கு பௌத்த தூபி காணப்பட்டமைக்கான சான்றுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கு அமைய, கடந்த ஜனவரி மாதம் 18ஆம் திகதி குருந்தூர் மலையில் அகழ்வாராய்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த அகழ்வுப் பணிகள் இம்மாத இறுதியில் நிறைவு செய்யப்படும் என தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முல்லைத்தீவு குருந்தூர் மலையில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர் கால எட்டுப்பட்டை (எட்டு முகம்) தாரா லிங்கம் என்பதை வரலாற்று ஆய்வாளர் NKS.திருச்செல்வம் உறுதிப்படுத்தியுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் நேற்று தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அரச மரத்தில் புத்தர் என்றால் குருந்தூர் மலையில் சிவனே இருக்க முடியும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று  உரையாற்றும்போதே அவர் இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.

மேலும், குருந்தமரம் இருந்த அந்த குருந்த மலையிலே சிவபெருமானின் ஆலயம்தான் கிடைக்கும் ஏனென்றால், குருந்தமரம் சிவபெருமானுக்கு மிகவும் வேண்டியதொரு மரம்.

அரச மரம் எந்தளவுக்கு புத்த பெருமானுடன் தொடர்புபட்டதோ, எங்கெங்கெல்லாம் அரச மரம் இருக்கிறதோ அங்கங்கெல்லாம் நீங்கள் புத்தர் சிலையை வைக்கின்றீர்கள்.

அதேபோன்று குருந்தமரம் சிவபெருமானுக்கு மிகவும் வேண்டியதொரு மரம். குருந்தமர நிழலில் இருந்துதான் சிவபெருமான் மாணிக்கவாசகரை ஆட்கொண்டதாக வரலாறுகள் கூறுகின்றன.

அதேபோன்று வெடுக்குறாரி, குசேனார் மலை, பங்குடாவெளி, கன்னியா போன்ற இந்துக்களுக்கு சொந்தமான இடங்கள் தொல்பொருள் ஆராய்ச்சி என்ற ரீதியில் அபகரிக்கப்படுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

https://www.ilakku.org/?p=41982

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
39 minutes ago, Ahasthiyan said:

ஸ்ரீ லங்காவில் மேலே தோண்டினால் புத்தர், ஆழ தோண்டினால் சிவலிங்கம். இதையும் புத்தரிண்டை கால் என்று சொன்னாலும் சொல்வார்கள். ஹோமாகம, களனி விகாரையிலும்  ஆழ தோண்ட வேண்டும். முன்பு சிவன் கோயில் இருந்ததாக கூறுகிறார்கள்.

நாங்கள் ஏன் கனக்க கதைப்பான்....அனுராதபுரத்திலை சும்மா உழவாரத்தாலை புல்லு செருக்கவே சிவலிங்கங்கள் தான் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர் மலையில் காணப்படுவது சிவலிங்கம் இல்லை.

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு -  குருந்தூர் மலையில்  இனங்காணப்பட்ட கல் சிவலிங்கம் இல்லை எனவும் இது, அநுராதபுர காலத்துக்குரிய பாரிய தூபியின் முடிப்பகுதி எனவும், சிங்கள  நாளிதழ் ஒன்று, செய்தி வெளியிட்டுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் முகமாக, தொல்பொருள் திணைக்கள இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, தனது பேஸ்புக்கில், இது தொடர்பான தரவுகளைப் பதிவேற்றியுள்ளார்.

Tamilmirror Online || .குருந்தூர் மலையில் காணப்படுவது சிவலிங்கம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, உடையார் said:

குறித்த சிதைவுகள் அநுராதபுர காலத்திற்குரியவை என்றும் அங்கு பௌத்த தூபி காணப்பட்டமைக்கான சான்றுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

இப்படித்தான் எல்லா விடயத்திலும். இல்லாத புனைகதைகளையும், பொய்களையும் கூறி சிங்கள மக்களை ஏமாற்றி, உசுப்பிவிடுவது தமிழருக்கெதிராக. தாங்கள் தான் பவுத்தத்தின் காவலர்கள் என்று காண்பித்து. 

8 hours ago, பிழம்பு said:

குருந்தூர் மலையில் காணப்படுவது சிவலிங்கம் இல்லை.

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு -  குருந்தூர் மலையில்  இனங்காணப்பட்ட கல் சிவலிங்கம் இல்லை எனவும் இது, அநுராதபுர காலத்துக்குரிய பாரிய தூபியின் முடிப்பகுதி எனவும், சிங்கள  நாளிதழ் ஒன்று, செய்தி வெளியிட்டுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் முகமாக, தொல்பொருள் திணைக்கள இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, தனது பேஸ்புக்கில், இது தொடர்பான தரவுகளைப் பதிவேற்றியுள்ளார்.

Tamilmirror Online || .குருந்தூர் மலையில் காணப்படுவது சிவலிங்கம் இல்லை.

ஐயா அவர்களின் நோக்கமே சிங்களவர்கள் இருந்தார்கள் என்றும், பவுத்தர்கள் வாழ்ந்தார்கள் என்றும் நிறுவுததுதான் இந்த தொல்லியல் திணைக்களத்தின் முழு நோக்கமும். எனவே என்னதான் மாற்று மதத்தவரின் பொருட்கள் கண்டுபிடித்தாலும் எல்லாமுமே அவர்களுக்கு ஏற்ற விதமாகவே விளக்கம் கொடுக்கப்படும். கோணேஸ்வரம் , திருக்கேதீஸ்வரம் எல்லாம் பவுத்த விகாரைகள் இருந்த இடமென்றும் அங்கும் இந்த வேலையே தொடங்கப்போகிறார்கள். திருக்கேதீஸ்வரத்தில் மிகப்பெரிய விகாரை கட்டி இந்த தொல்பொருள் திணைக்களத்துக்குரிய வேலைகள் ஆரம்பிக்கப்போகிறார்கள். அவர்கள் சொல்வது, அவர்கள் நினைத்துதான் அங்கு பதியப்படும் ஒழிய வேறொன்றும் நடக்கப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 10/2/2021 at 19:16, கற்பகதரு said:

தூங்கிக் கொண்டிருந்த யாழ். பல்கலைக்கழக தொல்லியல் பேராசிரியரை தட்டியெழுப்பியவன் யார்?

குருந்தூர் மலையேறிய சிங்கள பிக்கு.

அந்த பேராசியரை பற்றி அறியாமல் சொல்கிறீர்கள் என்று எண்ணவேண்டி இருக்கிறது.

 பனிக்கன் குளத்தில் வேட்டையாட சென்ற ஊரவர் கொடுத்த தொல்பொருள் எச்சங்கள் பற்றிய  தகவலின் இரகசியத்தை  பாதுகாப்பாத்தது, தனிப்பட்ட அச்சுறுத்தல் மத்தியிலும் தனியாக  பனிக்கன் குளத்தில் குறிப்பிட இடம் சென்று தொல்பொருள் சான்றுகளை சேகரித்தவர்.

செப்டம்பர் - அக்டோபர் 2020 இல் நாகடுவானில் தோல் பொருள் ஆராயிச்சி மேற்க்கொண்டவர்.

இவை சில உதாரணங்கள் மட்டுமே. 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

குருந்தூரில் கண்டுபிடிக்கப்பட்டது சிவலிங்கமா? விகாரையின் ஸ்தூபமா? தெளிவுபடுத்துகிறார் பேராசிரியர் புஸ்பரட்ணம்! குருந்தூர் மலையில் காணப்படும் எட்டுப் படை உள்ள தூணின் உதிரிப் பாகங்கள் இல்லாத பட்சத்தில் அதனை சிவலிங்கம் என்று கருதுவதில் தவறு இல்லை என்று தெரிவித்தார்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.