Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்னை அம்பிகை உணவுத்தவிர்ப்புப் போராட்டம் மாபெரும் வெற்றி கண்டுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை அம்பிகை உணவுத்தவிர்ப்புப் போராட்டம் மாபெரும் வெற்றி கண்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வெற்றி கண்டது அன்னை அம்பிகையின் அறப்போர்

PHOTO-2021-03-05-17-47-38-1.jpg
 76 Views

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி கோரி பிரித்தானியாவில் அம்பிகை செல்வகுமார் முன்னெடுத்த அகிம்சைவழி உண்ணாவிரதப்போராட்டம் மாபெரும் வெற்றி கண்டுள்ளது.

ஒன்றுக்கு மேற்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றபட்டுள்ள நிலையில் பிரித்தானியாவில் நேற்று கிளர்ந்தெழுந்த புலம்பெயர் தமிழர்களின் வேண்டுதலாகவும் உலகெமெங்குமுள்ள ஒட்டுமொத்த தமிழினத்தினதும் அமைப்புக்கள் கட்சிகளினதும் வேண்டுகோளையும் ஏற்று அம்பிகையின் உண்ணாவிரதப்போராட்டம் இன்றுடன் (15.03.2021) முடிவுக்கு கொண்டு வரப்படவுள்ளது.

பிரித்தானிய அரசிடம் 4 அம்சக்கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி அவற்றில் ஒன்றையேனும் நிறைவேற்றினால் போராட்டத்தை கைவிடுவேன் என இன்றுடன் 17 நாட்கள் பசித்திருந்த அம்பிகை கோரிக்கைகளில் ஒன்று முழுமையாவும் இன்னொன்று அண்ணளவாகவும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலேயே வெற்றியுடன் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறு பிரித்தானிய அரசாலும், பாராளுமன்ற உறுப்பினர்களாலும் அனைத்து தமிழ் மக்களாலும் கேட்கப்பட்டுள்ளார்.

அம்பிகை முன்வைத்த அனைத்துலக சுயாதீன விசாரணை பொறிமுறையை உருவாக்குதல்(IIIM), அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) விசாரித்தல், சிறிலங்காவுக்கான தனியான அறிக்கையாளரை நியமித்தல் மற்றும் வடக்கு-கிழக்கு மாகாணத்தில் கருத்து கணிப்பு வாக்கெடுப்புக்கான ஐ.நா வின் பரிந்துரைத்தல் ஆகிய நான்கு அம்சக்கோரிக்கைகளில் பிரித்தானியாவின் ஐ.நா.வுக்கான இறுதி வரைபில் ஒரு புதிய விதமான அனைத்துலக சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்று (IIM இன் முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய) உள்ளடக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிரந்த ஐநா கண்காணிப்பளருக்கு பதிலாக, தொடர்ச்சியாண கண்காணிப்பு நடைமுறை ஓன்றும் உருவாக்கப்படவுள்ளது.

இந்நிலையிலேயே, மனித உரிமை செயற்பாட்டாளர் அம்பிகை மாபெரும் வெற்றியுடன் இன்று பிரித்தானிய நேரம் பி.ப. 3.00 -5.00 மணியளவில் தனது உண்ணாவிரதத்தை, மத தலைவர்கள் மற்றும் அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் முடித்துக்கொள்ள உள்ளார்.

இது நீண்டதொரு தமிழின போராட்ட வரலாற்றில் அகிம்சைவழி மாபெரும் வெற்றியாகும். ஒட்டுமொத்த தமிழினத்தின் ஒற்றைக்குரலாய் அம்பிகை முன்னெடுத்த அறப்போராட்டத்திற்கு கிடைத்துள்ள வெற்றியாகும். அம்பிகையின் கோரிக்கையை நிறைவேற்றி அவரை காப்பாற்றுமாறு நேற்று பிரித்தானியாவில் மாபெரும் பேரணியை நிகழ்த்திய புலம்பெயர் தமிழர்களுக்கும் உலகெங்கும் அவருக்காக குரல் கொடுத்த தமிழினத்தின் ஒற்றுமைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதப்படுகின்றது.

நிகழ்வினை இன்று மாலை இலண்டன் நேரம் 3.00 -5.00 மணிவரை நேரலையாக பின்வரும் இணைப்பில் மெய்நிகர் வழியாக உலெகெங்கும் உள்ள அனைவரும் பார்வையிட்டு அம்பிகைக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கமுடியும்.

https://us02web.zoom.us/j/86153063444?pwd=U1ZiY1lIVjRtZmNwZUFWNGNzV1k1UT09மும்மத தலைவர்களின் ஆசியுரைகளுடன் ஆரம்பமாகவுள்ள குறித்த மெய்நிகர் நிகழ்வில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பன்னாட்டு அரசியல் பிரமுகர்களின் சிறப்புரைகளும் அம்பிகையின் வெற்றியுரையும் இடம்பெறவுள்ளது.

இதனிடையே, நேற்று அம்பிகையின் கோரிக்கையை நிறைவேற்றி அவரை காப்பாற்றக்கோரி அவரது போராட்டத்தளத்தின் முன் ஒன்றுதிரண்ட புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் வழமைபோல் நடைபெறும் அம்பிகையின் ஆதரவு மெய்நிகர் நிகழ்ச்சியிலும் அம்பிகையின் போராட்டம் வெற்றிப்பாதையை அடைந்துள்ளது எனவே போராட்டத்தை நிறைவு செய்யுங்கள் என்ற கோரிக்கைகளுமே வலுப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி – நமது ஈழநாடு

https://www.ilakku.org/?p=44721

  • கருத்துக்கள உறவுகள்

மாபெரும் வெற்றி என்றால் எனக்கு விளங்காமல் போயிட்டுது ?

உள்துறை அமைச்சு ஒப்புக்கொண்டதுக்கு ஏதும்  ஆதாரம் இருக்குதா ?

  • கருத்துக்கள உறவுகள்

அம்பிகையின் உண்ணாவிரத அமைதிவழி முறையீட்டு வேண்டுதல் வெற்றியடைந்ததற்கு வாழ்த்துக்கள்.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் ஒரு நல்ல  செய்தி  தான்

ஆனால்  இதற்கு  காரணம்  எமது  அடுத்த  தலைமுறையினரே...

அவர்கள் தான்  இறதியில்  இதை  கையிலெடுத்திருந்தனர்

அவரர்களது  பலமும்  தரமும் தேவையும் அனைத்து அரசுகளும்  அறியும்

நன்றி  உறவுகளே...

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

காலையில் ஒரு நல்ல  செய்தி  தான்

ஆனால்  இதற்கு  காரணம்  எமது  அடுத்த  தலைமுறையினரே...

அவர்கள் தான்  இறதியில்  இதை  கையிலெடுத்திருந்தனர்

அவரர்களது  பலமும்  தரமும் தேவையும் அனைத்து அரசுகளும்  அறியும்

நன்றி  உறவுகளே...

விசுகு அண்னேய்  லண்டனில் நிறைய தமிழ்  அமைப்புகள் மழைக்கு  முளைத்த காளான்கள்  போல் இந்திய இலங்கை கூட்டுத்தயாரிப்புக்கள் தமிழர் வேடம் போட்டு ஆடுகின்றன ஒரு தலைமை இல்லாத நேரத்தில் தமிழருக்காக என்று யார் கூவினாலும் நாங்கள் பொறுமையாக நின்று சிந்தித்தல்  அவசியம் இல்லயோ இன்னும் இன்னும் படுகுழியில் நாங்கள் விழுவதை தடுக்க முடியாது . 

மேல் உள்ள தலையங்கத்தை பாருங்கள் மாபெரும் வெற்றி ? அப்படியென்ன வெற்றியை பெற்று விட்டார்கள் ? தமிழ் நெட் அம்பிகை அம்மாவை தவறாக வழி  நடத்தியவர்கள் செய்த தில்லுமுல்லை ஆதராத்துடன்  போட்டு இருக்கு திரைகடலோடியில் ஆங்கிலத்தில் இருப்பதால் அங்கு இணைத்துள்ளேன் . ஏன்  இப்படி தில்லுமுல்லு செய்து கொள்கிறார்கள் ஏதோ  இலங்கை இந்திய அரசியலில் எங்களுக்கு எதிராக செய்யப்போகிறார்கள் இது பற்றி குணா போன்றவர்கள் விளக்கம் தந்தால்  நல்லது .

Edited by பெருமாள்
எழுத்து திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

நம்மில் பலர் எடுத்த எடுப்பில் அனைத்தையும் போராட்டம் என்று சொல்லிவிடுகிறோம். போராட்டம் என்று கேள்விப்பட்டவுடன்  நமது உடன்பிறப்புகளும் கையில் கிடைத்த கொடியுடன் ரோட்டில் இறங்கிவிடுவதும் இன்று வழமையாகிவிட்டது. அனைத்தையும் கேலிக் கூத்தாக்கி பலர் வீதியில் நின்று கோஷமிட்டு நின்றதையும் கானொளியில்  பதிவுசெய்திருந்தார்கள்.

அம்பிகை அன்னையின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத பல விடயங்கள் அவரின் கட்டுப்பாட்டையும் தாண்டி மேடைஏறுவதுபோல் ஒரு உணர்வு. அவர் இதுவரை பட்ட  கஷ்டம் வேதனை எல்லாவற்றையும் சாக்கடையில் தூக்கி போட சிலர் களமிறக்கப்பட்டதாகவே  இதை நான் பார்க்கிறேன். வயலில் நெல்மணி விதைத்து நீர்பாய்ச்சி உரியவன் காவலிருக்க வந்தவன் கதிர் அறுத்து கொண்டு சென்ற கதைகள் எமது சரித்திரத்தில் புதிதல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

உண்ணாவிரதம் தோல்வியா? - வினாக்களும் விளக்கங்களும்

ஈழத்தமிழர்களுக்காக 4 அம்சக் கோரிக்கைகளை உள்ளடக்கி உண்ணாவிரதம் இருந்த அம்பிகை அம்மையாரி்ன் போராட்டம் நேற்று வெற்றிகரமாக முடிவடைந்திருந்தது.

இந்த போராட்டம் தொடர்பில் “செய்திகளுக்கு அப்பால்” நிகழ்ச்சியில் ஆராயப்படுகின்றது.

இந்த நிகழ்ச்சியில் கீத் குலசேகரம் மற்றும் குணா கவியழகன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

https://www.ibctamil.com/srilanka/80/161557?ref=home-imp-parsely

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பெண்மணி, டூட்டிங் அம்மன் கோவில் நடத்திய 'சிவயோகம்' சீவரத்தினம் அவர்களது மகள் என்பது சரியானதா?

லண்டனில், அதுவும் அதே டவுன் (முனிசிபல்) ஏரியாவில் வசிப்பதால், இது ஒரு பிரயோசனமில்லாத வேலை என்றே, நான் மட்டுமல்ல, இங்குள்ள பலர் சொல்கிறார்கள்.

ஒரு சாதாரண, குடிமக்கள் வாழும் பகுதியில், தனது சொந்த வீட்டில் உண்ணாவிரதம் செய்கிறேன் என்று சொல்லி, கொடிகளுடன் ஆட்களை வரவைக்கும் அளவுக்கு சென்று, அயலவர்களை, கொரோனா கவலையில் பதற வைத்து, போலீசாரும் வர, இறுதியில், அவசரத்தில், ஏதோ காரணம் சொல்லி, போதுமடா சாமி என்று, முடிவுக்கு கொண்டு வர வேண்டிய நிலை உண்டாக்கியது.

பக்கத்தில் உள்ள தமிழ் குடும்பங்கள், கோரோனோ காலத்தில்,  அதிகளவு ஆட்கள் வரத்தும், போலீசார் வரவும் தமக்கு பதட்டத்தினை தந்ததாக சொல்கின்றனர்.

தம்மிடம், அயலில் உள்ள வேறு குடும்பங்கள், என்ன நடக்கிறது என்று, விசனம் தெரிவித்ததாக, சொல்கின்றனர்.

நோக்கம் சரியாக இருந்தாலும் கூட, கொரோனா காலம் என்பதால், பொறுப்புடன் நடந்து இருக்க வேண்டும் என்பதே பலரது கருத்து. 

பொது இடத்தில நடந்திருக்க வேண்டிய ஒன்றை, தனது வீட்டில் நடத்தியது ஒரு பொறுப்பில்லாத வேலை. அயலவர்கள், முணுமுணுப்பார்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இந்த பெண்மணி, டூட்டிங் அம்மன் கோவில் நடத்திய 'சிவயோகம்' சீவரத்தினம் அவர்களது மகள் என்பது சரியானதா?

லண்டனில், அதுவும் அதே டவுன் (முனிசிபல்) ஏரியாவில் வசிப்பதால், இது ஒரு பிரயோசனமில்லாத வேலை என்றே, நான் மட்டுமல்ல, இங்குள்ள பலர் சொல்கிறார்கள்.

ஒரு சாதாரண, குடிமக்கள் வாழவும் பகுதியில், தனது சொந்த வீட்டில் உண்ணாவிரதம் செய்கிறேன் என்று சொல்லி, கொடிகளுடன் ஆட்களை வரவைக்கும் அளவுக்கு சென்று, அயலவர்களை, கொரோனா கவலையில் பதற வைத்து, போலீசாரும் வர, இறுதியில், அவசரத்தில், ஏதோ காரணம் சொல்லி, போதுமடா சாமி என்று, முடிவுக்கு கொண்டு வர வேண்டிய நிலை உண்டாக்கியது.

பக்கத்தில் உள்ள தமிழ் குடும்பங்கள், கோரோனோ காலத்தில்,  அதிகளவு ஆட்கள் வரத்தும், போலீசார் வரவும் தமக்கு பதட்டத்தினை தந்ததாக சொல்கின்றனர்.

தம்மிடம், அயலில் உள்ள வேறு குடும்பங்கள், என்ன நடக்கிறது என்று, விசனம் தெரிவித்ததாக, சொல்கின்றனர்.

நோக்கம் சரியாக இருந்தாலும் கூட, கொரோனா காலம் என்பதால், பொறுப்புடன் நடந்து இருக்க வேண்டும் என்பதே பலரது கருத்து. 

பொது இடத்தில நடந்திருக்க வேண்டிய ஒன்றை, தனது வீட்டில் நடத்தியது ஒரு பொறுப்பில்லாத வேலை. அயலவர்கள், முணுமுணுப்பார்கள்.

நாதமுனியர் இங்கு முழுவதும் எழுதமுடியாது அவரின் மகள்தான்  அதைவிட பெரியபகிடி அம்மையார் உண்ணாவிரதம் தொடங்கியதே வேறு ஒரு காரணத்துக்கு .

4 hours ago, கிருபன் said:

உண்ணாவிரதம் தோல்வியா? - வினாக்களும் விளக்கங்களும்

ஈழத்தமிழர்களுக்காக 4 அம்சக் கோரிக்கைகளை உள்ளடக்கி உண்ணாவிரதம் இருந்த அம்பிகை அம்மையாரி்ன் போராட்டம் நேற்று வெற்றிகரமாக முடிவடைந்திருந்தது.

இந்த போராட்டம் தொடர்பில் “செய்திகளுக்கு அப்பால்” நிகழ்ச்சியில் ஆராயப்படுகின்றது.

இந்த நிகழ்ச்சியில் கீத் குலசேகரம் மற்றும் குணா கவியழகன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

https://www.ibctamil.com/srilanka/80/161557?ref=home-imp-parsely

நல்லகாலம் கீத் குலசேகரம் குணா மீது செய்த தனிப்பட்ட தாக்குதலை  தமிழ்ச்செல்வன் பார்க்கவில்லை பார்த்து இருந்தால் குப்பி கடித்து இருப்பார் தமிழின் செல்லப்பிள்ளையாக இருந்தவர் இந்த கீத் .

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

கொடிகளுடன் ஆட்களை வரவைக்கும் அளவுக்கு சென்று, அயலவர்களை, கொரோனா கவலையில் பதற வைத்து, போலீசாரும் வர, இறுதியில், அவசரத்தில், ஏதோ காரணம் சொல்லி, போதுமடா சாமி என்று, முடிவுக்கு கொண்டு வர வேண்டிய நிலை உண்டாக்கியது.

உணர்ச்சி அரசியலை தூண்டியதில் யாருக்கு வெற்றி ?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

நாதமுனியர் இங்கு முழுவதும் எழுதமுடியாது அவரின் மகள்தான்  அதைவிட பெரியபகிடி அம்மையார் உண்ணாவிரதம் தொடங்கியதே வேறு ஒரு காரணத்துக்கு .

அதுக்கு மேல சொல்ல ஒன்றும் இல்லை. 

அந்த கோவில் விசயத்தில், நீதிமன்றினால் இழுத்துப் பூட்டப்படும் வரை, அவர் செய்த அடாவடி வேலைகள்.... வேறு ரகம்...🤦‍♂️

என்னை பொறுத்த வரை, மூடன், எதையோ மிதித்தால், முப்பது இடத்துக்கு சேதம் என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.

சும்மா படுத்துக் கிடந்த சிங்களவன், பாருங்கோ.... புலிகள் கொடியுடன் கிளம்பி விட்டார்கள்.... கொரோனா காலம் எல்லாம் பாராமல்.... இப்படித்தான்.... இலங்கையிலும் நடந்தார்கள் என்று.... சமூக வலையுலகில், தொடங்கி விட்டார்கள்.

நல்ல காலம்.... திரையை இழுத்து, முடித்து விட்டார்கள். 🥴

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இங்குள்ள கருத்துக்களை பார்த்துவிட்டு கூகிளில் அன்னை அம்பிகை யார் என்று தேடல் செய்தபோது இந்த வீடியோ வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

நல்ல காலம்.... திரையை இழுத்து, முடித்து விட்டார்கள். 🥴

இல்லை நாதமுனி இத்துடன் நிப்பாட்ட மாட்டார்கள் இனித்தான் பாரிய சாதித்திட்டங்களும் குழி பறிப்பு வேலைகளும்  நடக்க போகின்றன லண்டனில் இல்லாவிட்டாலும் கனடா  ஐரோப்பிய நாடுகளில்  பாரிய குழப்பம் ஏற்படுத்த போகிறார்கள். காரணம் எரிக் சொள்கைம் Erik Solheim   என்ற ***** மீண்டும் களத்தில்  இறக்கி உள்ளார்கள் . இந்த அம்பிகை உண்ணவிரத ஆலோசனையை எரிக் தான் சூம் கொன்பரன்ஸில் கொடுக்கின்றார் அந்த வீடியோ எடிட் பண்ணமுடியுமென்றால் இங்கு இணைத்து விடுகிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

சும்மா படுத்துக் கிடந்த சிங்களவன், பாருங்கோ.... புலிகள் கொடியுடன் கிளம்பி விட்டார்கள்.... கொரோனா காலம் எல்லாம் பாராமல்.... இப்படித்தான்.... இலங்கையிலும் நடந்தார்கள் என்று.... சமூக வலையுலகில், தொடங்கி விட்டார்கள்.

அங்கு பணமதிப்பிழப்பும் விலைவாசி ஏற்றமும் சிங்கள மக்களை கோத்தாவுக்கு எதிரான மனநிலைக்கு கொண்டு செல்வதை தற்காலிகமாக தடுத்து உள்ளது இந்த போராட்டம் .

 Erik Solheim என்ற ****" அழுகையை பாருங்கள் மேல் உள்ள ஒலிநாடாவில் முகநூலில் தந்த நன்பருக்கு நன்றி .

Edited by நிழலி
நீக்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

இல்லை நாதமுனி இத்துடன் நிப்பாட்ட மாட்டார்கள் இனித்தான் பாரிய சாதித்திட்டங்களும் குழி பறிப்பு வேலைகளும்  நடக்க போகின்றன லண்டனில் இல்லாவிட்டாலும் கனடா  ஐரோப்பிய நாடுகளில்  பாரிய குழப்பம் ஏற்படுத்த போகிறார்கள். காரணம் எரிக் சொள்கைம் Erik Solheim   என்ற குள்ளநரியை மீண்டும் களத்தில்  இறக்கி உள்ளார்கள் . இந்த அம்பிகை உண்ணவிரத ஆலோசனையை எரிக் தான் சூம் கொன்பரன்ஸில் கொடுக்கின்றார் அந்த வீடியோ எடிட் பண்ணமுடியுமென்றால் இங்கு இணைத்து விடுகிறேன் .

உந்த உண்ணாவிரத அம்மணியின், தேப்பன், பெரும் கில்லாடி. முதல் மனைவியை  ஊரிலை விட்டு, நைஜீரியா போய், புலிகளுக்கு உதவுபராக லண்டன் வந்து, அவர்களது TR டெக் அமைப்பினுள் நுழைந்து, அங்கே வேலைக்கு வந்த பெண்ணை, தள்ளிக்கொண்டு போய் குடித்தனம் நடத்தி, தென் லண்டன் டூட்டிங் என்ற இடத்தில் அம்மன் கோவிலை கட்டி, காணிக்காரர் எழுப்ப பட்டபாடு தனிக்கதை. 

அந்த முதலாவது மனைவியின் சகோதரம் தான் ஜெயதேவன். இவரும் வட லண்டன், வெம்பிளி பகுதியில் ஈழபதீஸ்வரர் ஆலயத்தினை நடத்தினார்.

ஆனால், மச்சான் மாருக்கு இடையே பெரும் பகை, உந்த சீவரத்தினம், டூட்டிங் கோவில் கொடுக்க வேண்டி வரும் என்று, வெம்பிளியில் ஈழபதீஸ்வரர் ஆலயத்துக்கு, அண்மையாக, போட்டி கோவிலை திறந்தார்.

கடைசியில், இரண்டு மச்சான்மாரும், வெம்பிளியில், கோவில் நடாத்திக் கொண்டு, 'ஆன்மீக' சனத்தினை இன்னும் சுத்துகினம். இரண்டு மச்சான்மாரும் புலிகளுக்காக என்றே ஆரம்பித்து நடத்தினாலும், இறுதியில், அதனை சொந்தமாக்கி கொண்டனர்.

இதில், ஜெயதேவன், கோவில் நிதியில் மோசடிகள் காரணமாக வன்னிக்கு அழைக்கப்பட்டு, புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர். பிரிட்டிஷ் அரசு, தலையிட்டு, பாலசிங்கம் மூலமாக விடிவிக்கப்பட்டார். காரணம், இந்த கோவில் இருந்தது, தொழில் கட்சியின் அலுவலகத்தில். ஆகவே, அந்த தொகுதி எம்பி, உதவினார்.

இந்த 'குடும்ப' லட்சனத்தில், உண்ணாவிரதம்.... பின்னாலை என்ன விடயங்கள்  உள்ளனவோ?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

இல்லை நாதமுனி இத்துடன் நிப்பாட்ட மாட்டார்கள் இனித்தான் பாரிய சாதித்திட்டங்களும் குழி பறிப்பு வேலைகளும்  நடக்க போகின்றன லண்டனில் இல்லாவிட்டாலும் கனடா  ஐரோப்பிய நாடுகளில்  பாரிய குழப்பம் ஏற்படுத்த போகிறார்கள். காரணம் எரிக் சொள்கைம் Erik Solheim   என்ற குள்ளநரியை மீண்டும் களத்தில்  இறக்கி உள்ளார்கள் . இந்த அம்பிகை உண்ணவிரத ஆலோசனையை எரிக் தான் சூம் கொன்பரன்ஸில் கொடுக்கின்றார் அந்த வீடியோ எடிட் பண்ணமுடியுமென்றால் இங்கு இணைத்து விடுகிறேன் .

காரணம் எரிக் சொள்கைம் Erik Solheim   என்ற 

Edited by நிழலி
நீக்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

தியாக தீபம் திலீபனையே கொச்சை படுத்துகிறார்கள் கீழ் உள்ள ஒலிநாடாவில் 24.30 நிமிடத்துக்கு பின் கவனிக்கவும் நிமலன் சொல்வதை .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

எரிக் சொல்கைம் அவர்களிடம் பெண்மணி ஒருவர் கேட்கும் வினாவுக்கு அவர் பதில் கூறுகின்றார். அவரை இங்கே கோபிக்க என்ன உள்ளது.   உலக தலைவர்கள் வரிசையில் இந்தியாவின் மோடியும் கருணை காட்டுவார் என பொருள்படும் பதில்தான் கொடுமை.

5 hours ago, பெருமாள் said:

தியாக தீபம் திலீபனையே கொச்சை படுத்துகிறார்கள் கீழ் உள்ள ஒலிநாடாவில் 24.30 நிமிடத்துக்கு பின் கவனிக்கவும் நிமலன் சொல்வதை .

உண்ணாவிரதம் செய்த பெண்மணியை ஒரு கும்பல் வலிந்து பிரபலப்படுத்துகின்றது. வேறு என்னத்தை கூறுவது.

எரிக் சோல்ஹைம் ஒரு சர்வதேச ராஜதந்திரி. அவர் இலங்கை பிரச்சனையில் வகித்த பாத்திரம் ஒரு அனுசரணையாளர். அவ்வளவே. உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் ஒருங்கிணைப்பின் நிகழ்சசி நிரலில்  அவர் செயற்படுவது இயல்பு. பேச்சுவார்ததையில் ஈடுபட்ட இரு தரப்புமே பிரச்சனைகளை  தீர்கக பொறுப்பற்று முரண்டுபட்டு நடந்து கொண்டதே தமிழரின் அழிவுக்கும்  இன்றைய முழுப்பிரச்சனைக்கும் காரணம். அப்படியிருக்க எரிக் சோல்ஹைம் மீது பழி போடுவதில் எந்த பிரயோசனமும் இல்லை. ஆடத்தெரியதவன் மேடை சரியில்லை என்றானாம்.  

  • கருத்துக்கள உறவுகள்
On 18/3/2021 at 16:02, பெருமாள் said:

தியாக தீபம் திலீபனையே கொச்சை படுத்துகிறார்கள் கீழ் உள்ள ஒலிநாடாவில் 24.30 நிமிடத்துக்கு பின் கவனிக்கவும் நிமலன் சொல்வதை .

17 minutes ago, நந்தன் said:

அம்மாவ அப்பவே அனுப்பியிருந்தா இந்தளவு துன்பம் எங்களுக்கு வந்திராது. 😮

Edited by நந்தன்

  • கருத்துக்கள உறவுகள்
On 19/3/2021 at 08:24, tulpen said:

எரிக் சோல்ஹைம் ஒரு சர்வதேச ராஜதந்திரி. அவர் இலங்கை பிரச்சனையில் வகித்த பாத்திரம் ஒரு அனுசரணையாளர். அவ்வளவே. உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் ஒருங்கிணைப்பின் நிகழ்சசி நிரலில்  அவர் செயற்படுவது இயல்பு. பேச்சுவார்ததையில் ஈடுபட்ட இரு தரப்புமே பிரச்சனைகளை  தீர்கக பொறுப்பற்று முரண்டுபட்டு நடந்து கொண்டதே தமிழரின் அழிவுக்கும்  இன்றைய முழுப்பிரச்சனைக்கும் காரணம். அப்படியிருக்க எரிக் சோல்ஹைம் மீது பழி போடுவதில் எந்த பிரயோசனமும் இல்லை. ஆடத்தெரியதவன் மேடை சரியில்லை என்றானாம்.  

நீங்கள்  சொல்வது இரண்டுதரப்பும் பொறுப்பற்று நடந்து கொண்டது ஓகே ஆனால் அப்படி நடக்க வைத்தவர்களும் இதே அனுசாரணையாக இருந்தவர்களுமே என்பதை நாம் மறந்து விடலாகாது  பழைய கதைகள் திரும்ப திரும்ப சொல்வதால் எதுவும் வரப்போவதில்லை ஆனால் எமது விடயத்தில் தோல்வியடைந்த அனுசாரணையாக இருந்தவர் மீண்டும் மீண்டும் தென்னாசியவின் முக்கிய காலகட்டங்களில் வந்து கருத்துக்களை கூறுவதேன் ? இங்கு ஒரு விடயத்தில் தோல்வி அடைந்தால் கேட்டு கேள்வியின்றி பொது வாழ்க்கையில் இருந்து நேரே வீடுதான் யூரோ பிரிட்டன் பிளவு விடயத்தில் டேவிட் மக்ரோன் தோல்வியை ஒத்துக்கொண்டு வீடு போனார் அதேபோல் அதே விடயத்தில் டெரசே மே  அம்மையார் முயன்று பார்த்தார் முடியவில்லை நேரே வீடுதான் இவர்கள் பிரதமர் பதவியில் இருந்து விடைபெற்ற  பின் இந்த பிரிக்ஸ்ட்  சம்பந்தமாய் வாய் துறப்பதில்லை அதுதான் பண்பாடு இப்படியான மேட்குலகின் நிலை இருக்க அதே இடத்தில் இருந்து வந்த எரிக் படு தோல்வியான நிலைக்குப்பிறகும் எமது விடயத்தில் அவ்வப்போது தேவையற்ற கருத்துக்கள் வைப்பது உங்களுக்கு வலிக்காது ஆனால் முள்ளிவாய்க்காலில் நின்றவனுக்கு வலிக்கும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.