Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, இணையவன் said:

நன்றி உடையார்,

செல்லக் குட்டி என்றது பேரப்பிள்ளை என்று நினைக்கிறேன் 🙂. நடையை ஓட்டமாக மாற்றுங்கள், நீங்களும் பிள்ளையாகவே மாறிவிடலாம்.

இணையவன் வேண்டுமேன்றே அதுவும் புதுவருடப்பிறப்பில் என்னை பழிவாங்கிவீட்டீர்களே😭, பேரபிள்ளை காணும் வயதா எனக்கும் இன்னும் 50 தே தாண்டவில்லை, செல்லகுட்டி -  நான் வளர்க்கும் செல்ல பிராணி,

நீங்கள் சொன்ன மாதிரி இடைக்கிடை மொல்ல ஓடுவது பின் நடப்பது, நான்றாக இருக்கின்றது

  • Replies 130
  • Views 17k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • இணையவன்
    இணையவன்

    ஒரு வளியாக இந்த வருடம் பரிசில் நடைபெற்ற மரதன் போட்டியில் கலந்து கொள்ள முடிந்தது. 3 மாத கடும் பயிற்சியின் பின் சென்ற ஞாயிறு ஓடி முடித்துள்ளேன். கோவிட் காரணமாக இந்தத் தடவை சுமார் 30000 பேர் மட்டுமே

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • இணையவன்
    இணையவன்

    இரவுச் சாப்பாடு மனித வழக்கத்தில் இல்லாததாகச் சொல்லப்படுகிறது. விளக்கு எரிப்பதற்கான எண்ணை, மின்சாரம் வீடுகளுக்கு வந்தபின்னர்தான் இரவுச் சாப்பாடு முக்கியத்துவம் அடைந்தது. பகலில் குறிப்பிட்ட நேரம் கட்டாய

Posted Images

  • தொடங்கியவர்
On 8/4/2021 at 23:36, குமாரசாமி said:

நீங்கள் என்ன சாப்பிடுகின்றீர்கள் என நான் கேட்க மாட்டேன். 😁
இருந்தாலும் காலை மதியம் மாலை எப்படியான சாப்பாடுகளை சாப்பிடலாம்? 
இரவில் எதுவுமே சாப்பிடாமல் இருந்தால் உடலுக்கும் இருதயத்திற்கும் நல்லதென கூறுகின்றார்கள். இது உண்மையா?

இரவுச் சாப்பாடு மனித வழக்கத்தில் இல்லாததாகச் சொல்லப்படுகிறது. விளக்கு எரிப்பதற்கான எண்ணை, மின்சாரம் வீடுகளுக்கு வந்தபின்னர்தான் இரவுச் சாப்பாடு முக்கியத்துவம் அடைந்தது. பகலில் குறிப்பிட்ட நேரம் கட்டாயம் வேலை செய்ய வேண்டி வந்தபோது இரவில் சாப்பிடுவதை ஒரு மகிழ்வான வழக்கமாக ஆக்கிக் கொண்டோம். 

இரவில் குறைவாக உண்ண வேண்டும் என்பதற்கான சரியான காரணம் தெரியவில்லை. தூங்கும்போதும் சமிபாட்டுத் தொகுதி சுவாசப்பை இதயம் ஈரல் போன்ற பல உறுப்புகள் செயல்பட்டவாறே இருக்கும். ஆகவே சக்தியும் தேவைப்படும். ஆகவே முற்றாகச் சாப்பிடாமல் தூங்குவது சரியானதாகத் தெரியவில்லை. 

நான் அனுபவத்தில் கண்டது, இரவில் அதிகமாகச் சாப்பிட்டால் அந்த இரவு முழுவதும் இதயம் வழமையை விட சற்று அதிகமாகத் துடிக்கிறது. பொதுப்படையாக இது எந்த அளவு உண்மையோ தெரியாது.

***

எனது உணவு
காலை 
எழுந்தவுடன் 2 கிளாஸ் நீருடன் பாதி எலுமிச்சம் பழச் சாறு

அரை மணி நேரத்தின் பின் 3 அவித்த முட்டைகள் அல்லது சிறிய பாண் துண்டுடன் 100 கிராம் சீஸ் அல்லது புரதம் நிறைந்த ஏதாவது

10, 11 மணியளவில் ஒரு வாழைப்பழம் அல்லது அப்பிள் +  கோப்பி அல்லது நசித்த இஞ்சி போட்ட சுடுநீர்

மதிய உணவு

ஒரு அகப்பைச் சோறு, அதிகமான மரக்கறி வகைகள், கொஞ்சம் இறைச்சி அல்லது மீன் + 4 மேசைக் கரண்டி தாவர எண்ணைகள்

4, 5 மணிக்கு கடலை, விதை வகைகள் (amend, nuts, seeds), dark chocolate 
அல்லது வடை, எள்ளுப்பாகு போன்ற பலகாரம் 
+ கோப்பி அல்லது தேனீர்

இரவுச் சாப்பாட்டுக்கு 1மணி நேரத்துக்கு முன்வாழைப்பழம் தவிர்ந்த வேறு ஏதாவது பழம்

இரவுச் சாப்பாடு
மரக்கறிகளை அரை அவியலாக அவித்து அல்லது எண்ணையில் அரை அவியலாகப் பிரட்டி அத்துடன் கொஞ்சம் அவித்த கடலை, பருப்பு வகைகள் + 2 மேசைக் கரண்டி தாவர எண்ணைகள்

உடற்பயிற்சி செய்யும் நாட்களைப் பொறுத்து உணவு அளவுகள் கூடிக் குறையும். குறைவான உணவு முதலில் அவஸ்தயாக இருந்தாலும் நாளடைவில் பழகிவிடும்.

சீனி அல்லது carbohydrate உணவுகள் (சோறு, மா, சீனி) சாப்பிட வயிறு நிறைந்தாலும் உடல் அதனை மென்மேலும் தேவைக்கதிகமாக எதிர்பார்க்கும். புரத உணவு பசி தீர்ந்த உணர்வைத் தரும். புரத உணவினைச் சற்று அதிகமாக்கினால் நிறைவாக உண்ட உணர்வு தோன்றும். மேலதிக புரதம் சக்தியாகப் பயன்படுத்தப்படும்.

 விசேட நாட்கள் அல்லது விருந்துகளுக்குப் போனால் வயிறு புடைக்கச் சாப்பிடத் தயங்குவதில்லை. 😀

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, இணையவன் said:

குட் டயட் அண்ணா 🤭😄👋

  • தொடங்கியவர்
On 8/4/2021 at 23:26, putthan said:

இதை வாசிக்கும் பொழுது ஓடவேணும் போல இருக்கு ஆனால் .....இன்று தொடக்கம் ஓட வேண்டும்...நன்றி இணையவன்

நன்றி புத்தன்.

ஓடுங்கள். 'கலா' காலத்திலிருந்து நவீன காலத்துக்கு உங்கள் கற்பனைகள் வளரட்டும். 😀

  • தொடங்கியவர்
On 13/4/2021 at 23:17, குமாரசாமி said:

வணக்கம் இணையவன்! 
உங்களிடம் ஒரு கேள்வி?  ஒருவர் ஓடும் போது அல்லது வேக நடை/ சாதாரண நடைகளுக்கு மூச்சு எப்படி  உள்வாங்கி வெளி விட வேண்டும்?   சில வேளைகளில் அந்தரப்பட்டு மூச்சை இழுத்து விடுவதாலும் இருதயம் கூட அடிப்பது போல் பிரமை.

இதற்கென மூச்சு பயிற்சிகள் ஏதாவது உண்டா?

மூச்சு எப்படி விட வேண்டும் என்று தெரியாது. எனக்கு ஆஸ்மா இருந்தபடியால் ஓடும்போது அதிமாக சத்தத்துடன் மூச்சு வாங்கும். 😀

இதயம் கூடுதலாக அடிப்பது உங்கள் கற்பனையாக இருக்கலாம். இருந்தாலும் அளவுக்கு மீறி இதயம் துடித்தால் ஓடவோ நடக்கவோ வேண்டாம். இப்போது குறைந்த விலையில் இதயத் துடிப்பை அறியும் கைக்கடிகாரங்கள் உள்ளன. துல்லியமாக அளக்க வேண்டுமானால் நெஞ்சில் கட்டிக் கொள்ளும் பட்டி 40யூரோவிலிருந்து கிடைக்கும்.

வயதைப் பொறுத்து ஒருவரது அதிகப்படியான இதயத் துடிப்பு வேறுபடும். 
பெண்களுக்கு BPM = 226 - வயது
ஆண்களுக்கு BPM = 220 - வயது 
(உதாரணமாக உங்களுக்கு 40 வயதென்று வைத்துக் கொண்டால் : 220 - 40 = 180 BPM) 

On 14/4/2021 at 12:06, உடையார் said:

இணையவன் வேண்டுமேன்றே அதுவும் புதுவருடப்பிறப்பில் என்னை பழிவாங்கிவீட்டீர்களே😭, பேரபிள்ளை காணும் வயதா எனக்கும் இன்னும் 50 தே தாண்டவில்லை, செல்லகுட்டி -  நான் வளர்க்கும் செல்ல பிராணி,

நீங்கள் சொன்ன மாதிரி இடைக்கிடை மொல்ல ஓடுவது பின் நடப்பது, நான்றாக இருக்கின்றது

மன்னிக்கவும் உடையார். 

அப்படியானால் தயங்காமல் ஓடுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, யாயினி said:

குட் டயட் அண்ணா 🤭😄👋

இணையவனுக்கு சிலிம் சிம்ரன் மாதிரி  உடம்பு இருந்த படியாலைதான் இரண்டு கேள்வியை இழுத்து விட்டனான்....... 😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, இணையவன் said:

இரவுச் சாப்பாடு மனித வழக்கத்தில் இல்லாததாகச் சொல்லப்படுகிறது. விளக்கு எரிப்பதற்கான எண்ணை, மின்சாரம் வீடுகளுக்கு வந்தபின்னர்தான் இரவுச் சாப்பாடு முக்கியத்துவம் அடைந்தது. பகலில் குறிப்பிட்ட நேரம் கட்டாயம் வேலை செய்ய வேண்டி வந்தபோது இரவில் சாப்பிடுவதை ஒரு மகிழ்வான வழக்கமாக ஆக்கிக் கொண்டோம். 

2 hours ago, இணையவன் said:

இதயம் கூடுதலாக அடிப்பது உங்கள் கற்பனையாக இருக்கலாம். இருந்தாலும் அளவுக்கு மீறி இதயம் துடித்தால் ஓடவோ நடக்கவோ வேண்டாம். இப்போது குறைந்த விலையில் இதயத் துடிப்பை அறியும் கைக்கடிகாரங்கள் உள்ளன. துல்லியமாக அளக்க வேண்டுமானால் நெஞ்சில் கட்டிக் கொள்ளும் பட்டி 40யூரோவிலிருந்து கிடைக்கும்.

நேரம் ஒதுக்கி பதில் தந்த இணையவனுக்கு மிக்க நன்றி. 🙏🏽

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

இணையவனுக்கு சிலிம் சிம்ரன் மாதிரி  உடம்பு இருந்த படியாலைதான் இரண்டு கேள்வியை இழுத்து விட்டனான்....... 😁

"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா" என்றொரு பழமொழி உண்டு. முறிந்து முறிந்து கருத்தெழுதி, சிம்ரனை எண்ணிக் குனிய நினைத்தால் நிமிர முடியாது கவனம் சாமியார். 😂 

  • கருத்துக்கள உறவுகள்
On 8/4/2021 at 18:44, ஈழப்பிரியன் said:

உண்மை தான் மனது எப்போதும் இளமையாகவே இருக்கும்.

எல்லாம் சரி எப்ப ஓடத்தொடங்கப் போறியள்? 😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, shanthy said:

எல்லாம் சரி எப்ப ஓடத்தொடங்கப் போறியள்? 😀

அவர் எங்கை ஓடுறது? சும்மா ஒரு இதுக்கெல்லோ கேட்டு வைச்சவர்.😁

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

அவர் எங்கை ஓடுறது? சும்மா ஒரு இதுக்கெல்லோ கேட்டு வைச்சவர்.😁

ஈழப்பிரியன் உங்கள் ஓட்டத்தை குமாரசாமி விரும்பவில்லை 😀என்பதை இத்தால் அறியத்தருகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, shanthy said:

ஈழப்பிரியன் உங்கள் ஓட்டத்தை குமாரசாமி விரும்பவில்லை 😀என்பதை இத்தால் அறியத்தருகிறார்.

Running Tips: How to Run with a Girlfriend - YouTube

சாந்தி  அக்கா.... ஈழப்பிரியன் ஓடினால்,
ஆரையும்  கூட்டிக்  கொண்டு,  ஒரே ஓட்டமாக....  ஓடி விடுவார் என்று,
குமாராசாமி  அண்ணை,  பயப்பிடுகிறார் போலுள்ளது.  🤣 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, இணையவன் said:

இரவுச் சாப்பாடு மனித வழக்கத்தில் இல்லாததாகச் சொல்லப்படுகிறது. விளக்கு எரிப்பதற்கான எண்ணை, மின்சாரம் வீடுகளுக்கு வந்தபின்னர்தான் இரவுச் சாப்பாடு முக்கியத்துவம் அடைந்தது. பகலில் குறிப்பிட்ட நேரம் கட்டாயம் வேலை செய்ய வேண்டி வந்தபோது இரவில் சாப்பிடுவதை ஒரு மகிழ்வான வழக்கமாக ஆக்கிக் கொண்டோம். 

இரவில் குறைவாக உண்ண வேண்டும் என்பதற்கான சரியான காரணம் தெரியவில்லை. தூங்கும்போதும் சமிபாட்டுத் தொகுதி சுவாசப்பை இதயம் ஈரல் போன்ற பல உறுப்புகள் செயல்பட்டவாறே இருக்கும். ஆகவே சக்தியும் தேவைப்படும். ஆகவே முற்றாகச் சாப்பிடாமல் தூங்குவது சரியானதாகத் தெரியவில்லை. 

நான் அனுபவத்தில் கண்டது, இரவில் அதிகமாகச் சாப்பிட்டால் அந்த இரவு முழுவதும் இதயம் வழமையை விட சற்று அதிகமாகத் துடிக்கிறது. பொதுப்படையாக இது எந்த அளவு உண்மையோ தெரியாது.

***

எனது உணவு
காலை 
எழுந்தவுடன் 2 கிளாஸ் நீருடன் பாதி எலுமிச்சம் பழச் சாறு

அரை மணி நேரத்தின் பின் 3 அவித்த முட்டைகள் அல்லது சிறிய பாண் துண்டுடன் 100 கிராம் சீஸ் அல்லது புரதம் நிறைந்த ஏதாவது

10, 11 மணியளவில் ஒரு வாழைப்பழம் அல்லது அப்பிள் +  கோப்பி அல்லது நசித்த இஞ்சி போட்ட சுடுநீர்

மதிய உணவு

ஒரு அகப்பைச் சோறு, அதிகமான மரக்கறி வகைகள், கொஞ்சம் இறைச்சி அல்லது மீன் + 4 மேசைக் கரண்டி தாவர எண்ணைகள்

4, 5 மணிக்கு கடலை, விதை வகைகள் (amend, nuts, seeds), dark chocolate 
அல்லது வடை, எள்ளுப்பாகு போன்ற பலகாரம் 
+ கோப்பி அல்லது தேனீர்

இரவுச் சாப்பாட்டுக்கு 1மணி நேரத்துக்கு முன்வாழைப்பழம் தவிர்ந்த வேறு ஏதாவது பழம்

இரவுச் சாப்பாடு
மரக்கறிகளை அரை அவியலாக அவித்து அல்லது எண்ணையில் அரை அவியலாகப் பிரட்டி அத்துடன் கொஞ்சம் அவித்த கடலை, பருப்பு வகைகள் + 2 மேசைக் கரண்டி தாவர எண்ணைகள்

உடற்பயிற்சி செய்யும் நாட்களைப் பொறுத்து உணவு அளவுகள் கூடிக் குறையும். குறைவான உணவு முதலில் அவஸ்தயாக இருந்தாலும் நாளடைவில் பழகிவிடும்.

சீனி அல்லது carbohydrate உணவுகள் (சோறு, மா, சீனி) சாப்பிட வயிறு நிறைந்தாலும் உடல் அதனை மென்மேலும் தேவைக்கதிகமாக எதிர்பார்க்கும். புரத உணவு பசி தீர்ந்த உணர்வைத் தரும். புரத உணவினைச் சற்று அதிகமாக்கினால் நிறைவாக உண்ட உணர்வு தோன்றும். மேலதிக புரதம் சக்தியாகப் பயன்படுத்தப்படும்.

 விசேட நாட்கள் அல்லது விருந்துகளுக்குப் போனால் வயிறு புடைக்கச் சாப்பிடத் தயங்குவதில்லை. 😀

Tamizhan Pride Tamil Culture Jallikattu T-Shirt For Men – TEEZ.in

இணையவன்.... நீங்கள் ஒரு குறிக்கோளுடன், 
மிகக்  கடினமானதும், செலவு மிக்கதுமான... உணவுக் கட்டுப் பாட்டை  
கடைப் பிடிப்பதனை  மெச்சுகின்றேன். 👍

அந்தக் கடைசி வரி... என்னை சிரிக்க வைத்ததாலும்,
நீங்கள் ஒறிஜினல்  தமிழன் என்று... சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபித்து விட்டது. 🤣

அதற்காக...  "நாம் தமிழர் கட்சியில்"  சேருங்கள் என்று வற்புறுத்த  மாட்டோம்.  😜

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, தமிழ் சிறி said:

Running Tips: How to Run with a Girlfriend - YouTube

சாந்தி  அக்கா.... ஈழப்பிரியன் ஓடினால்,
ஆரையும்  கூட்டிக்  கொண்டு,  ஒரே ஓட்டமாக....  ஓடி விடுவார் என்று,
குமாராசாமி  அண்ணை,  பயப்பிடுகிறார் போலுள்ளது.  🤣 

குமாரசாமி உங்கள் பயம் உண்மையோ😀

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அவர் எங்கை ஓடுறது? சும்மா ஒரு இதுக்கெல்லோ கேட்டு வைச்சவர்.😁

3 hours ago, shanthy said:

ஈழப்பிரியன் உங்கள் ஓட்டத்தை குமாரசாமி விரும்பவில்லை 😀என்பதை இத்தால் அறியத்தருகிறார்.

சோடிமாடு இப்படி காட்டிக் கொடுக்குதே.

3 hours ago, தமிழ் சிறி said:

Running Tips: How to Run with a Girlfriend - YouTube

சாந்தி  அக்கா.... ஈழப்பிரியன் ஓடினால்,
ஆரையும்  கூட்டிக்  கொண்டு,  ஒரே ஓட்டமாக....  ஓடி விடுவார் என்று,
குமாராசாமி  அண்ணை,  பயப்பிடுகிறார் போலுள்ளது.  🤣 

தானும் செய்ய மாட்டான்.
மற்றவனையும் விடமாட்டான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, shanthy said:

ஈழப்பிரியன் உங்கள் ஓட்டத்தை குமாரசாமி விரும்பவில்லை 😀என்பதை இத்தால் அறியத்தருகிறார்.

இப்பத்தையான் தமிழ் சீரியல்களை பாத்து கெட்டுப்போனியள். 😎

10 hours ago, தமிழ் சிறி said:

சாந்தி  அக்கா.... ஈழப்பிரியன் ஓடினால்,
ஆரையும்  கூட்டிக்  கொண்டு,  ஒரே ஓட்டமாக....  ஓடி விடுவார் என்று,
குமாராசாமி  அண்ணை,  பயப்பிடுகிறார் போலுள்ளது.  🤣 

என்ன.......அவர் ஒரே ஓட்டமாய் ஓடி???????   இல்லை தெரியாமல் கேக்கிறன் ஒரே ஓட்டமாய் ஓடி என்ன தடக்குப்பட்டு விழவோ எண்டு கேக்கிறன்? 😄

Running Tips: How to Run with a Girlfriend - YouTube

  • கருத்துக்கள உறவுகள்
On 15/4/2021 at 14:31, இணையவன் said:

இரவுச் சாப்பாடு மனித வழக்கத்தில் இல்லாததாகச் சொல்லப்படுகிறது. விளக்கு எரிப்பதற்கான எண்ணை, மின்சாரம் வீடுகளுக்கு வந்தபின்னர்தான் இரவுச் சாப்பாடு முக்கியத்துவம் அடைந்தது. பகலில் குறிப்பிட்ட நேரம் கட்டாயம் வேலை செய்ய வேண்டி வந்தபோது இரவில் சாப்பிடுவதை ஒரு மகிழ்வான வழக்கமாக ஆக்கிக் கொண்டோம். 

இரவில் குறைவாக உண்ண வேண்டும் என்பதற்கான சரியான காரணம் தெரியவில்லை. தூங்கும்போதும் சமிபாட்டுத் தொகுதி சுவாசப்பை இதயம் ஈரல் போன்ற பல உறுப்புகள் செயல்பட்டவாறே இருக்கும். ஆகவே சக்தியும் தேவைப்படும். ஆகவே முற்றாகச் சாப்பிடாமல் தூங்குவது சரியானதாகத் தெரியவில்லை. 

நான் அனுபவத்தில் கண்டது, இரவில் அதிகமாகச் சாப்பிட்டால் அந்த இரவு முழுவதும் இதயம் வழமையை விட சற்று அதிகமாகத் துடிக்கிறது. பொதுப்படையாக இது எந்த அளவு உண்மையோ தெரியாது.

***

எனது உணவு
காலை 
எழுந்தவுடன் 2 கிளாஸ் நீருடன் பாதி எலுமிச்சம் பழச் சாறு

அரை மணி நேரத்தின் பின் 3 அவித்த முட்டைகள் அல்லது சிறிய பாண் துண்டுடன் 100 கிராம் சீஸ் அல்லது புரதம் நிறைந்த ஏதாவது

10, 11 மணியளவில் ஒரு வாழைப்பழம் அல்லது அப்பிள் +  கோப்பி அல்லது நசித்த இஞ்சி போட்ட சுடுநீர்

மதிய உணவு

ஒரு அகப்பைச் சோறு, அதிகமான மரக்கறி வகைகள், கொஞ்சம் இறைச்சி அல்லது மீன் + 4 மேசைக் கரண்டி தாவர எண்ணைகள்

4, 5 மணிக்கு கடலை, விதை வகைகள் (amend, nuts, seeds), dark chocolate 
அல்லது வடை, எள்ளுப்பாகு போன்ற பலகாரம் 
+ கோப்பி அல்லது தேனீர்

இரவுச் சாப்பாட்டுக்கு 1மணி நேரத்துக்கு முன்வாழைப்பழம் தவிர்ந்த வேறு ஏதாவது பழம்

இரவுச் சாப்பாடு
மரக்கறிகளை அரை அவியலாக அவித்து அல்லது எண்ணையில் அரை அவியலாகப் பிரட்டி அத்துடன் கொஞ்சம் அவித்த கடலை, பருப்பு வகைகள் + 2 மேசைக் கரண்டி தாவர எண்ணைகள்

உடற்பயிற்சி செய்யும் நாட்களைப் பொறுத்து உணவு அளவுகள் கூடிக் குறையும். குறைவான உணவு முதலில் அவஸ்தயாக இருந்தாலும் நாளடைவில் பழகிவிடும்.

சீனி அல்லது carbohydrate உணவுகள் (சோறு, மா, சீனி) சாப்பிட வயிறு நிறைந்தாலும் உடல் அதனை மென்மேலும் தேவைக்கதிகமாக எதிர்பார்க்கும். புரத உணவு பசி தீர்ந்த உணர்வைத் தரும். புரத உணவினைச் சற்று அதிகமாக்கினால் நிறைவாக உண்ட உணர்வு தோன்றும். மேலதிக புரதம் சக்தியாகப் பயன்படுத்தப்படும்.

 விசேட நாட்கள் அல்லது விருந்துகளுக்குப் போனால் வயிறு புடைக்கச் சாப்பிடத் தயங்குவதில்லை. 😀

ஒரு நாளுக்கு மூன்று அவித்த முட்டைகள் கொஞ்சம் அதிகமாக இருக்கே... இதில குறைவான  உணவு என்று வேற 😉

  • கருத்துக்கள உறவுகள்
On 16/4/2021 at 22:01, குமாரசாமி said:

என்ன.......அவர் ஒரே ஓட்டமாய் ஓடி???????   இல்லை தெரியாமல் கேக்கிறன் ஒரே ஓட்டமாய் ஓடி என்ன தடக்குப்பட்டு விழவோ எண்டு கேக்கிறன்? 😄

Running Tips: How to Run with a Girlfriend - YouTube

ஈழப்பிரியன் என்றும் பதினாறு 😀 உங்கினை யாரோ சொல்ல கேட்டது🤣

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கமான மவுண்டன் சைக்கிளுக்கு ஓய்வு குடுத்து விட்டு நாளை ஞாயிரு  இணையவனின் உந்துதலில் பல ஆண்டுகளுக்கு பின் ஓடி பார்க்க போறன் என்ன நடக்குது என்று பார்ப்பம் .😁

17 minutes ago, shanthy said:

ஈழப்பிரியன் என்றும் பதினாறு 😀 உங்கினை யாரோ சொல்ல கேட்டது🤣

உங்களுக்கு மறக்கவில்லை😁 பார்ப்பம்  சாமியார் என்ன செய்யிறார் என்று !.................

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பெருமாள் said:

வழக்கமான மவுண்டன் சைக்கிளுக்கு ஓய்வு குடுத்து விட்டு நாளை ஞாயிரு  இணையவனின் உந்துதலில் பல ஆண்டுகளுக்கு பின் ஓடி பார்க்க போறன் என்ன நடக்குது என்று பார்ப்பம் .😁

ஓடீட்டு வந்து ரிசல்ட் என்ன என்பதை எழுதுங்கோ.😎

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பெருமாள் said:

வழக்கமான மவுண்டன் சைக்கிளுக்கு ஓய்வு குடுத்து விட்டு நாளை ஞாயிரு  இணையவனின் உந்துதலில் பல ஆண்டுகளுக்கு பின் ஓடி பார்க்க போறன் என்ன நடக்குது என்று பார்ப்பம் .😁

31 minutes ago, shanthy said:

ஓடீட்டு வந்து ரிசல்ட் என்ன என்பதை எழுதுங்கோ.😎

சாந்தி.... இன்று காலை முழுக்க,  பெருமாள் யாழ். களத்தில் நின்றவர். :)
மத்தியானத்துக்கு பிறகு... ஆளை இங்கு காணவில்லை.
ஓடப் போயிட்டார் போலை கிடக்கு... 🏃‍♂️
இல்லாட்டி.... 🤔
.
.
.
.
.
.
.
.
.
.
.
மத்தியானம் நல்லாய் சாப்பிட்டுட்டு...   "நித்தா கொள்கிறாரோ"  தெரியவில்லை. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

சாந்தி.... இன்று காலை முழுக்க,  பெருமாள் யாழ். களத்தில் நின்றவர். :)
மத்தியானத்துக்கு பிறகு... ஆளை இங்கு காணவில்லை.
ஓடப் போயிட்டார் போலை கிடக்கு... 🏃‍♂️
இல்லாட்டி.... 🤔
.
.
.
.
.
.
.
.
.
.
.
மத்தியானம் நல்லாய் சாப்பிட்டுட்டு...   "நித்தா கொள்கிறாரோ"  தெரியவில்லை. :grin:

ஓடப்போன இடத்தில் ஏதாவது கோப்பிக்கடை கண்டு அங்கை ஐக்கியமாகியிருக்கவும் வாய்ப்பு உள்ளது. 🍰😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, shanthy said:

ஓடப்போன இடத்தில் ஏதாவது கோப்பிக்கடை கண்டு அங்கை ஐக்கியமாகியிருக்கவும் வாய்ப்பு உள்ளது. 🍰😂

பட்டும் படாமல் ஒரு  முரட்டு குத்து.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

மத்தியானம் நல்லாய் சாப்பிட்டுட்டு...   "நித்தா கொள்கிறாரோ"  தெரியவில்லை. 

 44 வயது மட்டும் உதைபந்து விளையாட்டு தெரியாதவர்களை  விளையாடவைத்து பல வெற்றி கேடயங்களை இப்பவும் பெற வைத்த  பயிற்சியாளரிடம் ஓடுவதுக்கு  பயிற்சி என்றதும் விரும்பி நேரம் ஒதுக்கி பயிற்சி தந்தார் பரவாயில்லை களைப்பில் தூங்கி எழும்பி பார்க்க விடிகாலை 1.15 ஆகியிட்டுது இனி ஞாயிறுகளில் ஓட்டம்தான் .

3 hours ago, shanthy said:

ஓடப்போன இடத்தில் ஏதாவது கோப்பிக்கடை கண்டு அங்கை ஐக்கியமாகியிருக்கவும் வாய்ப்பு உள்ளது.

போன இடத்தில் இருந்தது சனம்  கூடவாக  இருந்தபடியால் இந்தியன் கொரனோ பயத்தில் நெருங்கவில்லை 😀

3 hours ago, குமாரசாமி said:

பட்டும் படாமல் ஒரு  முரட்டு குத்து.:cool:

யாழில் ஒராளை காணவில்லை என்றால் அவ்வளவுதான் மலர்வளையமும் வைத்துவிடுவார்கள் இனி போனில் போட்டுக்கொள்ளவேனும் 😁

10 hours ago, shanthy said:

ஓடீட்டு வந்து ரிசல்ட் என்ன என்பதை எழுதுங்கோ.

எங்கள்  இஷ்டத்துக்கு ஓடி காலை வதம் பண்ணாமல் பயிற்சி யாளருடன் தொடங்குவது மிகவும் இலகுவாக உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2021 at 02:05, வாத்தியார் said:

பலருக்கும் பயனுள்ள ஆக்கம்

36  வயது வரை உதைபந்தாட்டத்தில் ஈடுபட்டுப்
பின்னர்  பொழுது போக்குக்காக பந்தடியில் ஈடுபட்டு வருகின்றேன்
அதை விட 25  வருடங்கள் ஞாயிறுகளில் பந்தடியில் நடுவராகவும் ஓடிக்கொண்டிருந்தேன்
இந்தக் கொரோனாவால் எல்லாம் தடைப்பட்டுவிட்டது

இப்பவும் விளையாடிக்கொண்டு இருக்கிறேன் நானும்  உதைபந்தாட்டம் இந்த கொரோனாவால் தடைபட்டு இருக்கிறது ஆனால் மாலை 7 மணிக்கு பிறகு தினமும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன் அதனால் தான் என்னமோ இன்னும் இளந்தாரி போலவே இருக்கிறன் 

இணையவன் அண்னருக்கு இதையே மெயின்றைன் பண்ணுங்கள்  உடலுக்கு மருந்து ம், மாத்திரைகளும் தேவைப்படாது எனக்கு மைதானம் செல்லாவிட்டால் நித்திரை வராது  போய் வந்தால் நித்திரையோ நித்திரை நிம்மதியான நித்திரை மட்டும்  இதைவிட என்ன வேண்டும் 
ஆனால் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு நேரம் கிடைக்குமா எல்லோருக்கும்  என்பதே பெரிய பிரச்சினையாக இருக்குமென நினைக்கிறன் 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.