Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடை - அமைப்புக்களின் விபரம் இதோ!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடைவிதிக்குமாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அமைப்புகளை தடைபெற்றுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதியளித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

banned.jpg

 

இவ்வாறு தடைசெய்யப்பட்டுள்ள 11 இஸ்லாமிய அமைப்புகள் வருமாறு,

 

1. யுனைடெட் தௌஹீத்  ஜமாஅத் - United Thowheed Jamaath (UTJ)

2. சிலோன் தௌஹீத் ஜமாஅத் - Ceylon Thowheed Jamaath (CTJ)

3. இலங்கை தௌஹீத்  ஜமாஅத் - Sri Lanka Thowheed Jamaath (SLTJ)

4. அனைத்து இலங்கை தௌஹீத் ஜமாஅத் - All Ceylon Thowheed Jamaath (ACTJ)

5. ஜமியத்துல் அன்சாரி சுன்னத்துல் மொஹமதியா - Jamiyyathul Ansaari Sunnaththul Mohomadiya (JASM)

6. தாருல் ஆதார் @ ஜமியுல் ஆதர் - Dharul Adhar @ Jamiul Adhar

7. இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கம் - Sri Lanka Islamic Student Movement (SLISM)

8. இஸ்லாமிய அரசு ஈராக் & சிரியா (ஐ.எஸ்.ஐ.எஸ்) - Islamic State of Iraq & Syria (ISIS)

9. அல்கொய்தா - Al-Qaeda

10. சேவ் த பேர்ள்ஸ்  Save the Pearls

11. சூப்பர் முஸ்லீம் - Super Muslim

 

11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடை - அமைப்புக்களின் விபரம் இதோ! | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

மல்வத்தை, அஸ்கிரிய பீடங்களை எப்ப தடை பண்ணுவீங்க ஆபிசர் :grin:

1 hour ago, பிழம்பு said:

அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடைவிதிக்குமாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அமைப்புகளை தடைபெற்றுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதியளித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

banned.jpg

 

இவ்வாறு தடைசெய்யப்பட்டுள்ள 11 இஸ்லாமிய அமைப்புகள் வருமாறு,

 

1. யுனைடெட் தௌஹீத்  ஜமாஅத் - United Thowheed Jamaath (UTJ)

2. சிலோன் தௌஹீத் ஜமாஅத் - Ceylon Thowheed Jamaath (CTJ)

3. இலங்கை தௌஹீத்  ஜமாஅத் - Sri Lanka Thowheed Jamaath (SLTJ)

4. அனைத்து இலங்கை தௌஹீத் ஜமாஅத் - All Ceylon Thowheed Jamaath (ACTJ)

 

இந்த பெயர்கள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கு. பெயர் வைக்க ஷரியா சட்டத்தில் தட்டுப்பாடு போல...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11 இஸ்லாமியவாத அமைப்புகளுக்கு தடை விதிக்க அனுமதி: 'இனவாத சிங்கள அமைப்புகளுக்கு தடை இல்லை'

இனவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமியவாத அமைப்புகளுக்கு தடை விதிக்க இலங்கையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா இதற்கான அனுமதியை வழங்கியதாக சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் இணைப்பு அதிகாரி, அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளுக்கு அமையவே இந்தத் தடை செய்யப்பட்டிருந்தாலும், அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இனவாதமாக செயற்படும் சிங்கள அமைப்புகள் ஏன் தடை செய்யப்படவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஐக்கிய தவ்ஹீத் ஜமாத், சிலோன் தவ்ஹீத் ஜமாத், ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத், அனைத்து இலங்கை தவ்ஹீத் ஜமாத், ஜம்யதுல் அன்சாரி சுன்னதுல் மொஹொமதியா, தாருல் அதர் எட் ஜம் உப் ஆதர், ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவ சங்கம், ஐ.எஸ்.ஐ.எஸ், அல்-கைடா, சேவ் த பர்ல்ஸ் மற்றும் சுபர் முஸ்லிம் ஆகிய அமைப்புக்களுக்கே தடை விதிக்க சட்ட மாஅதிபர் அனுமதி வழங்கியுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில் ஜனநாயக ரீதியான தங்கள் அமைப்பும் தடைக்கு உள்ளாகியுள்ளதாக இந்தப் பட்டியலில் உள்ள ஓர் அமைப்பு கூறியுள்ளது. தடைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் அந்தத் அமைப்பு கூறுகிறது.

இலங்கையில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலின் பின்னரான காலப் பகுதியில் இஸ்லாமியவாத அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றது.

கடந்த காலங்களிலும் முகத்தை முழுமையாக மூடும் வகையிலான ஆடைகளை அணிவதற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார்.

SARATH WEERASEKARA

பட மூலாதாரம்,SARATH WEERASEKARA'S FACEBOOK

 
படக்குறிப்பு,

சரத் வீரசேகர

அதேபோன்று, இனவாத கொள்கைகளுடன் செயற்படும் மத்ரஸா பாடசாலைகளுக்கும் தடை விதிக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியிருந்தார்.

இந்த விடயம் உள்நாட்டில் மாத்திரமன்றி, சர்வதேச ரீதியிலும் அதிகளவில் பேசப்பட்டது.

இவ்வாறான நிலையில், இலங்கைக்குள் மாத்திரமன்றி, வெளிநாடுகளிலும் செயற்படும் இஸ்லாமியவாத அமைப்புகளுக்கு தடை விதிக்க இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நவுபர் மௌலவி மற்றும் ஹஜ்ஜீல் அக்பர் ஆகியோரே, ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் எனவும் அவர் கூறுகிறார்.

பிரதான சூத்திரதாரியான நவுபர் மௌலவி தற்போது கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

குறித்த நபர் 2014ம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் கொள்கைகளை இலங்கைக்குள் கொண்டு வந்து, அதனை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

சஹ்ரான் ஹாஷிம்
 
படக்குறிப்பு,

சஹ்ரான் ஹாஷிம்

2019ம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் தற்கொலை செய்துக்கொண்ட சஹ்ரான் ஹாஷிம், 2016ம் ஆண்டு, நவுபர் மௌலவியின் இனவாத கொள்கைகளுடன் இணைந்து செயற்பட்டுள்ளதாகவும், நவுபர் மௌலவியே, சஹ்ரானுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் சரத் வீரசேகர கூறுகிறார்.

இதேவேளை, ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய 32 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், 211 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, 75 பேர் தொடர்ந்தும் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கிறார்.

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் எதிர்வினை

பயங்கரவாதத்திற்கு எதிராகவும், தீவிரவாதத்தை அடியோடு இல்லாது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலும் செயற்படும் ஜனநாயக ரீதியான தமது அமைப்பை தடை செய்வதானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தெரிவிக்கிறது.

சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு, வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது அமைப்பு உள்ளிட்ட 6 தவ்ஹீத் அமைப்புகளுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.

சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பானது, 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னரே, பாதுகாப்பு துறைக்கு சஹரான் ஹஷிமின் பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் தகவல்களை வழங்கியதாகவும் அந்த அமைப்பு குறிப்பிடுகின்றது.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னரான காலத்தில் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியவற்றின் விசாரணைகளுக்கு தமது அமைப்பு பூரண ஒத்துழைப்புக்களை வழங்கியதாகவும் சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தெரிவிக்கின்றது.

இந்த விசாரணைகளில் தமது அமைப்பின் கொள்கைகள், செயற்பாடுகள், சமூக பணிகள் உள்ளிட்டவற்றை, ஆதாரங்களுடன் தாம் முன்வைத்திருந்ததாகவும் அந்த அமைப்பு குறிப்பிடுகின்றது.

இவ்வாறு தமது முழுமையான கொள்கைகளை வெளிப்படுத்தியுள்ள போதிலும், சட்ட மாஅதிபர் இவ்வாறான தீர்மானத்தை எட்டியுள்ளமை, அடிப்படையற்றது என அந்த அமைப்பு, விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய அமைப்புகளை தடை செய்வதற்கு தாம் ஆட்சேபனை கிடையாது எனவும் சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு கூறுகின்றது.

எனினும், பயங்கரவாதத்திற்கு எதிராக செயற்படும் ஓர் அமைப்பை தடை செய்வதானது, ஜனநாயகத்திற்கு விரோதமானது என அந்த அமைப்பு குறிப்பிடுகின்றது.

எவ்வாறாயினும், அரசாங்கத்தின் இந்த தீர்மானத்திற்கு எதிராக தாம் நீதிமன்றத்தை நாடி, நியாயத்தை பெற்றுக்கொள்ளவுள்ளதாக சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தெரிவிக்கின்றது.

இனவாதமாக செயற்படும் சிங்கள அமைப்புகள் தடை செய்யப்படவில்லை?

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளுக்கு அமையவே, அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹுமான் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹுமான் (கோப்புப்படம்)

பட மூலாதாரம்,MUJUBUR RAHMAN'S FACEBOOK PAGE

 
படக்குறிப்பு,

நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹுமான் (கோப்புப்படம்)

எனினும், இனவாத கொள்கைகளை கொண்ட பெரும்பான்மை சிங்கள அமைப்புக்களும் இந்த பட்டியலில் காணப்பட்ட போதிலும், அந்த இனவாத அமைப்புகளை தடை செய்யாது, இஸ்லாமிய அமைப்புகளை மாத்திரம் தடை செய்வதானது ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் கூறுகின்றார்.

இந்த நடவடிக்கையின் ஊடாக, சட்டத்தில் பிரச்னை உள்ளமை தெளிவாகின்றது என அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த நாட்டிலுள்ள சட்டம் சிறுபான்மை சமூகத்திற்கு ஒரு விதமாகவும், பெரும்பான்மை மக்களுக்கு வேறொரு விதமாகவும் செயற்படுகின்றது என்பது இதனூடாக உறுதிப்படுத்தப்படுகின்றது என அவர் கூறுகின்றார்.

இந்த நடவடிக்கையானது, அநீதியான நடவடிக்கை என்பதுடன், எதிர்காலத்தில் இதனூடாக பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவில் சிறுபான்மை சமூகத்தின் பிரசன்னம் கிடையாது என கூறிய அவர், அதனால், ஆணைக்குழுவின் பரிந்துரைகள் எந்தளவிற்கு நியாயமானது என்ற கேள்வி எழுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பான்மை சமூகத்தை வைத்து கொண்டு, அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் ஊடாக, சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை பேசுவதாகவும் முஜுபூர் ரஹுமான் தெரிவிக்கின்றார்.

இந்த பெரும்பான்மை சிங்கள அதிகாரிகளுக்கு, இஸ்லாமிய கொள்கைகள் எவ்வாறு தெரியும் என அவர் கேள்வி எழுப்பினார்.

வெள்ளைகாரர்கள், இலங்கை தொடர்பில் தீர்மானங்களை எடுத்ததை போன்றே, தற்போதைய அரசாங்கம் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக தீர்மானங்களை எடுத்து வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹுமான் குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் 11 இஸ்லாமியவாத அமைப்புகளுக்கு தடை விதிக்க அனுமதி: 'இனவாத சிங்கள அமைப்புகளுக்கு தடை இல்லை' - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

இந்த பெயர்கள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கு. பெயர் வைக்க ஷரியா சட்டத்தில் தட்டுப்பாடு போல...

adaderanaenglish.s3.amazonaws.com/1558079079-Ta...

TNTJ NORTH CHENNAI (@tntjncnews) | Twitter

 

Tamil Nadu Thowheed Jamath Koothanallur - Home | Facebook

 

Thoothukudi thowheed jamath - Home | Facebook

 

United States Thowheed Jamath - USTJ - Home | Facebook

Gravitas: Is National Thowheed Jamath responsible for Sri Lanka bomb blasts  - YouTube

Activists Sri Lankas Thowheed Jamaath organization shout Editorial Stock  Photo - Stock Image | Shutterstock

 

Sri Lanka Thowheed Jamath denies involvement in blasts – NewsIn.Asia

 

எல்லோரும் ஒரே ஆட்கள் போலத்தான் எனக்கு இருக்கிறது 
ஒரே கொடிதான் வேறு வேறு இடங்கள் நபர்கள் மூலம் 
ஒரே கொள்கை முன்னெடுக்க படுகிறது என்று எண்ணுகிறேன் 
அதனால்தான் ஒரே மாதிரியான பெயரும் 
 

 

  • கருத்துக்கள உறவுகள்

சுன்னத்து அமைப்பொன்றும் இருக்கு,  என்ன செய்வார்கள் அவர்கள்.... 😧

38 minutes ago, Maruthankerny said:

adaderanaenglish.s3.amazonaws.com/1558079079-Ta...

TNTJ NORTH CHENNAI (@tntjncnews) | Twitter

 

Tamil Nadu Thowheed Jamath Koothanallur - Home | Facebook

 

Thoothukudi thowheed jamath - Home | Facebook

 

United States Thowheed Jamath - USTJ - Home | Facebook

Gravitas: Is National Thowheed Jamath responsible for Sri Lanka bomb blasts  - YouTube

Activists Sri Lankas Thowheed Jamaath organization shout Editorial Stock  Photo - Stock Image | Shutterstock

 

Sri Lanka Thowheed Jamath denies involvement in blasts – NewsIn.Asia

 

எல்லோரும் ஒரே ஆட்கள் போலத்தான் எனக்கு இருக்கிறது 
ஒரே கொடிதான் வேறு வேறு இடங்கள் நபர்கள் மூலம் 
ஒரே கொள்கை முன்னெடுக்க படுகிறது என்று எண்ணுகிறேன் 
அதனால்தான் ஒரே மாதிரியான பெயரும் 
 

 

அங்கேயுமா?

லூசுக் கூட்டத்துக்கு எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி பெயர்கள் போல. 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பிழம்பு said:

இவ்வாறு தடைசெய்யப்பட்டுள்ள 11 இஸ்லாமிய அமைப்புகள் வருமாறு,

1. யுனைடெட் தௌஹீத்  ஜமாஅத் - United Thowheed Jamaath (UTJ)

2. சிலோன் தௌஹீத் ஜமாஅத் - Ceylon Thowheed Jamaath (CTJ)

3. இலங்கை தௌஹீத்  ஜமாஅத் - Sri Lanka Thowheed Jamaath (SLTJ)

4. அனைத்து இலங்கை தௌஹீத் ஜமாஅத் - All Ceylon Thowheed Jamaath (ACTJ)

5. ஜமியத்துல் அன்சாரி சுன்னத்துல் மொஹமதியா - Jamiyyathul Ansaari Sunnaththul Mohomadiya (JASM)

6. தாருல் ஆதார் @ ஜமியுல் ஆதர் - Dharul Adhar @ Jamiul Adhar

7. இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கம் - Sri Lanka Islamic Student Movement (SLISM)

8. இஸ்லாமிய அரசு ஈராக் & சிரியா (ஐ.எஸ்.ஐ.எஸ்) - Islamic State of Iraq & Syria (ISIS)

9. அல்கொய்தா - Al-Qaeda

10. சேவ் த பேர்ள்ஸ்  Save the Pearls

11. சூப்பர் முஸ்லீம் - Super Muslim

 

11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடை - அமைப்புக்களின் விபரம் இதோ! | Virakesari.lk

f.s.h5.jpg

உலமா கட்சி  என்று... கோத்தாவுக்கு செம்பு தூக்கிக் கொண்டு,
தமிழரை இழிவு படுத்தி... அறிக்கை விடும்,  
உல‌மா க‌ட்சி தலைவர்  மௌலவி முபாறக் அப்துல் மஜீத் அவர்களின் கட்சியை  தடை செய்ய வில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

க‌டித்த‌ நுள‌ம்பு எது என‌ தெரியாத‌ போது, அனைத்து நுள‌ம்புகளும் அடி வாங்க‌த்தான் செய்யும்.

625.500.560.350.160.300.053.800.900.160.90.jpg

இல‌ங்கையில் ப‌ல‌ ஜ‌மாஅத்துக்க‌ள் அமைப்புக்க‌ள் உள்ள‌ன‌. இவ‌ற்றின் முக்கிய‌ நோக்க‌ம் என்ப‌து முஸ்லிம்க‌ளுக்கு

ந‌ல்ல‌தை சொல்வ‌தும் அவ‌ர்க‌ளின் தேவைக‌ளை தீர்க்கும் முக‌மாக‌ ந‌ல‌ன்புரி சேவைக‌ளை செய்வ‌துமாகும்.

 

 

இவ்வாறு ந‌ல‌ன்புரியை நோக்காக‌ கொண்ட‌ அமைப்புக்க‌ள் ஊர் ஊராக‌ கிளைக‌ளை ஆர‌ம்பிப்ப‌தால் இவை ப‌ற்றிய‌ ச‌ந்தேக‌ங்க‌ள் எழுகின்ற‌ன‌.

 

அண்மைக்கால‌மாக‌ இஸ்லாத்தைப்பேசும் ஜ‌மாஅத்துக்க‌ளை ப‌ற்றிய‌ ச‌ந்தேக‌ம் உல‌க‌ளாவிய‌ ரீதியில் பேச‌ப்ப‌டுகிற‌து. என்னைப்பொறுத்த‌ வ‌ரை இது பூனைக‌ளை புலியாக‌ காட்டுவ‌தாக‌வே தெரிகிற‌து. ஸ‌ஹ்ரான் என்ப‌வ‌ன் த‌வ்ஹீத் ஜ‌மாஅத் என்ப‌த‌ற்காக‌ அனைத்து த‌வ்ஹீத் அமைப்புக்க‌ளும் ச‌ந்தேக‌ம் கொண்டு பார்க்க‌ப்ப‌டுகிற‌து. அர‌சாங்க‌ம் பெரும்பாலும் சிங்க‌ள‌ ம‌க்க‌ளை கொண்ட‌து என்ப‌தால் அவ‌ர்க‌ள் ப‌க்க‌மும் நியாய‌ம் உண்டு. 

க‌டித்த‌ நுள‌ம்பு எது என‌ தெரியாத‌ போது அனைத்து நுள‌ம்பும் அடி வாங்க‌த்தான் செய்யும்.

 

விடுத‌லைப்புலிக‌ள் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ இய‌க்க‌ம் என‌ த‌டைசெய்ய‌ப்ப‌டுமுன் அவ‌ர்க‌ள் த‌ம‌து இய‌க்க‌த்தை அர‌சிய‌ல் க‌ட்சியாக‌ ப‌திவு செய்திருந்த‌ன‌ர். பின்ன‌ர் புலி இய‌க்க‌ம் த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌ போதும் புலிக‌ளின் க‌ட்சி த‌டை செய்ய‌ப்ப‌ட‌வில்லை.

 

அதே போல் புலிக‌ள் என்ற‌ பெய‌ரில் அர‌சிய‌ல் க‌ட்சி ப‌திய‌ப்ப‌டுவ‌தும் த‌டை செய்ய‌ப்ப‌டவில்லை. ப‌ய‌ங்க‌ர‌வாதியாக‌ இருந்து ஜ‌ன‌நாய‌க‌த்துக்கு வ‌ந்து த‌மிழ் ம‌க்க‌ள் விடுத‌லைப்புலிக‌ள் க‌ட்சியை உருவாக்கி இன்று பாராளும‌ன்றில் இருக்கும் பிள்ளையானைப்பார்த்து முஸ்லிம் இய‌க்க‌ங்க‌ள் ப‌டிப்பினை பெற‌ வேண்டும். இத‌னை ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ நான் சொல்லிவ‌ருகிறேன்.

 

ஒரு ந‌ல‌ன்புரி அமைப்பால் என்ன‌தான் சேவை செய்ய‌ முடியும்?

வெளிநாட்டு ப‌ண‌ம் பெற்று சில‌ வீடுக‌ள், கிண‌றுக‌ள், ப‌ள்ளிக‌ள், அனாதைக‌ளுக்கு உத‌வுத‌ல் போன்ற‌வ‌ற்றைத்தான் செய்ய‌ முடியும். இதை ம‌க்க‌ள் ஆணை பெற்ற‌, இறைவ‌னுக்கு ப‌ய‌ந்த‌ இஸ்லாமிய‌வாதிக‌ளைக்கொண்ட‌, ஊழ‌ல் செய்ய‌ விரும்பாத‌  ஜ‌ன‌நாய‌க‌ அர‌சிய‌ல் க‌ட்சியால் செய்ய‌ முடியும். 

 

ஒரு ந‌ல‌ன்புரி அமைப்புக்கு வெளிநாட்டில் இருந்து ப‌ண‌ம் வ‌ந்தால் ஏன் எத‌ற்கு என்ற‌ கேள்விக‌ள் இருக்கும். பாராளும‌ன்ற‌ ப‌ல‌ம் வாய்ந்த‌ அர‌சிய‌ல் க‌ட்சியாயின் அர‌சின் உத‌வியுட‌ன் இவ‌ற்றை செய்ய‌ முடியும்.

 

முன்னாள் அமைச்ச‌ர் பேரிய‌ல் அஷ்ர‌ப் க‌ல்முனையில் ப‌ல‌ வீட‌மைப்புத்திட்ட‌ங்க‌ளை அர‌சின் அணுச‌ர‌ணையுட‌ன் செய்தார். அத‌ற்குரிய‌ க‌ண‌க்குக‌ள் அர‌சாங்க‌த்திட‌மே உள்ள‌தால் அது ப‌ற்றி யாரும் பிர‌ச்சினை ப‌ட‌ முடியாது.

வெளிநாட்டு உத‌வியுட‌ன் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ வீடுக‌ள் இன்ன‌மும் பிர‌ச்சினையில் உள்ள‌ன‌.

 

ஆக‌வே இந்த‌ நாட்டில் துப்பாக்கி தூக்கிய‌ ஜேவிபி, புலிக‌ள் போன்றோர் அர‌சிய‌ல் செய்து சாதிக்கும் போது துப்பாக்கி தூக்காத‌ இஸ்லாமிய‌வாதிக‌ள் வெறும‌னே ச‌மூக‌த்துள் க‌ருத்துக்க‌ளை விதைத்து குழ‌ப்ப‌ங்க‌ளை ஏற்ப‌டுத்தி, ச‌மூக‌த்தில் பிள‌வுக‌ளை உண்டாக்காம‌ல் அனைவ‌ரும் இந்த‌ நாட்டின் ஜ‌ன‌நாய‌க‌ அர‌சிய‌லை ஏற்று உண்மை, நேர்மை, வாய்மை கொண்ட‌ அர‌சிய‌ல் க‌ட்சியாக‌ பிர‌க‌ட‌ன‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு ச‌மூக‌த்தை ஒற்றுமைப்ப‌டுத்த‌ முன் வ‌ர‌வேண்டும்.

 

ச‌ண்டித்த‌ன‌ம், ஆயுத‌ங்க‌ளால் எதையும் இங்கு சாதிக்க‌ முடியாது. ம‌க்க‌ள் த‌ரும் அர‌சிய‌ல் ப‌ல‌த்தால் நிச்ச‌ய‌ம் சாதிக்க‌ முடியும்.

இன்று ந‌ம் நாட்டில் பாராளும‌ன்றில் உள்ள‌  அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் ஊழ‌ல், மோச‌டி, ஏமாற்று, பாட்டு, கூத்து, ம‌து, மாது, சூது என‌ ஆகிவிட்ட‌ன‌. இந்த‌ நிலையில் இவற்றை விரும்பாத‌ இஸ்லாமிய‌ த‌லைவ‌ர்க‌ள் எம‌து க‌ருத்தை ஏற்று நேர‌டி அர‌சிய‌லுக்கு வ‌ர‌ வேண்டும் என‌  ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி ( உல‌மா க‌ட்சி) அன்பான‌ அழைப்பை விடுக்கிற‌து.

 

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

7.4.2021

https://www.madawalaenews.com/2021/04/blog-post_869.html

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பிழம்பு said:

யுனைடெட் தௌஹீத்  ஜமாஅத் - United Thowheed Jamaath (UTJ)

2. சிலோன் தௌஹீத் ஜமாஅத் - Ceylon Thowheed Jamaath (CTJ)

3. இலங்கை தௌஹீத்  ஜமாஅத் - Sri Lanka Thowheed Jamaath (SLTJ)

4. அனைத்து இலங்கை தௌஹீத் ஜமாஅத் - All Ceylon Thowheed Jamaath (ACTJ)

பல பெயரில் ஒருவர் (நடமாடுகிறார்)தலைமை தாங்கி நடத்துகிறார் போலும்.

 

3 hours ago, தமிழ் சிறி said:

f.s.h5.jpg

உலமா கட்சி  என்று... கோத்தாவுக்கு செம்பு தூக்கிக் கொண்டு,
தமிழரை இழிவு படுத்தி... அறிக்கை விடும்,  
உல‌மா க‌ட்சி தலைவர்  மௌலவி முபாறக் அப்துல் மஜீத் அவர்களின் கட்சியை  தடை செய்ய வில்லையா?

தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மீண்டும் முஸ்லீம்களை சாடி, தன்னை புனிதனாக காட்ட முயற்சிக்கிறார். இதுவும் ஒரு பிறவி.....? 

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிப்பு: அரசு அதிகாரபூர்வமாக அறிவிப்பு

4 மணி நேரங்களுக்கு முன்னர்
கோப்புப்படம்

பட மூலாதாரம், GETTY IMAGES

 
படக்குறிப்பு, கோப்புப்படம்

இலங்கை அரசு 11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்வதாக தெரிவித்து, வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று (புதன்கிழமை, ஏப்ரல் 13) நள்ளிரவு வெளியிட்டுள்ளது.

குறித்த அமைப்புகளை தடைசெய்வதற்கான அனுமதியினை சட்ட மா அதிபர் கடந்த வாரம் வழங்கியிருந்த நிலையிலேயே, தற்போது அந்த அமைப்புகளை தடைசெய்யும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியாகியுள்ளது.

1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ், 11 அமைப்புகளும் தடைசெய்யப்படுவதாக, அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்டுள்ள அமைப்புகள்

1. ஐக்கிய தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (UTJ)

2. சிலோன் தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (CTJ)

3. சிறீலங்கா தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (SLTJ)

4. அகில இலங்கை தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (ACTJ)

கோட்டாபய ராஜபக்ஷ

பட மூலாதாரம், GETTY IMAGES

 
படக்குறிப்பு, கோட்டாபய ராஜபக்ஷ

5. ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா (JASM) மறுபெயர் ஜம்மாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹமதியா ஒழுங்கமைப்பு மறுபெயர் அகில இலங்கை ஜம் - ஈ - அது அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா மறுபெயர் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா கழகம் மறுபெயர் ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா

6. தாறுல் அதர் மறுபெயர் ஜாமிஉல் அதர் பள்ளிவாசல் மறுபெயர் தாறுல் அதர் குரான் மத்ரச மறுபெயர் தாறுல் அதர் அத்தபாவிய்யா

7. சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (SLISM) மறுபெயர் ஜம்இய்யா

8. இராக் மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு (ISIS) மறுபெயர் அல் - தௌலா அல் - இஸ்லாமியா தௌலா இஸ்லாமியா

9. அல்கய்தா அமைப்பு

10. சேவ் த பேர்ள்ஸ் அமைப்பு மறுபெயர் சேவ் த பேர்ள் சங்கம்

11. சுப்பர் முஸ்லிம் அமைப்பு

ஆகியவை நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடைசெய்யப்பட்டுள்ளன.

நாட்டின் சமாதானத்தைத் தொடர்வதை உறுதிப்படுத்தும் பொருட்டு நன்நோக்குடனும் தேசிய பாதுகாப்பு, பொதுமக்கள் ஒழுங்கு மற்றும் சட்டவாட்சி என்பவற்றின் நலனிலும் மேற்கொள்ளப்பட்ட இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளை முன்னெடுப்பதில், மேற்படி அமைப்புகள் தடைசெய்யப்படுவதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019 ஈஸ்டர் தாக்குதலுக்கு பின் இஸ்லாமியவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது

பட மூலாதாரம், GETTY IMAGES

 
படக்குறிப்பு, 2019 ஈஸ்டர் தாக்குதலுக்கு பின் இஸ்லாமியவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது

செய்யக் கூடாதவை

தடைவிதிக்கப்பட்டுள்ள அமைப்புகளின் அல்லது அமைப்புகளைப் பிரதிநிதிப்படுத்துகின்ற அல்லது அதன் சார்பில் செயலாற்றுகின்ற வேறேதேனும் அமைப்பின்,

(அ) உறுப்பினரொருவராக அல்லது அங்கத்தவரொருவராக இருத்தலாகாது.

(ஆ) அதற்குத் தலைமைத்துவம் அளித்தலாகாது.

(இ) சீருடையை, உடையை, சின்னத்தை, தனிக்குறியை அல்லது கொடியை அணிதலோ, வெளிக்காட்டுதலோ, ஏந்துதலோஅல்லது உடைமையில் வைத்திருத்தலோ ஆகாது,

(ஈ) கூட்டமொன்றை அழைத்தலோ, கூட்டுதலோ, நடாத்துதலோ அல்லது அதில் பங்குபற்றுதலோ ஆகாது.

(உ) உறுப்பாண்மையைப் பெறுதலோ அல்லது அதைச் சேருதலோ ஆகாது.

(ஊ) ஓர் உறுப்பினருக்கு, அங்கத்தவருக்கு அல்லது வேறெவரேனும் இணையாளருக்குப் புகலிடமளித்தலோ, அவரை மறைத்துவைத்தலோ அல்லது அவருக்கு உதவுதலோ ஆகாது.

(எ) மேம்பாட்டுக்கு உதவுதலோ, அதனை ஊக்குவித்தலோ, அதற்கு ஆதரவளித்தலோ, மதியுரையளித்தலோ, உதவுதலோ அல்லது அதன் சார்பில் செயலாற்றுதலோ ஆகாது.

(ஏ) ஏதேனும் செயற்பாட்டை அல்லது நிகழ்வை ஒழுங்குபடுத்தலோ அல்லது அதில் பங்குபற்றுதலோ ஆகாது.

(ஐ) பணத்தை அல்லது பொருட்களை நன்கொடையளித்தலோ அல்லது உதவுதொகையளித்தலோ ஆகாது.

(ஒ) அதற்காக அல்லது அதன் பொருட்களைப் பெறுதலோ, களஞ்சியப்படுத்தலோ, இடம்பெயர்த்தலோ, உடைமையில்வைத்திருத்தலோ அல்லது விநியோகித்தலோ ஆகாது,

(ஓ) நோக்கத்தை ஊக்குவித்தலோ அல்லது பிரதிநிதித்துவப்படுத்தலோ ஆகாது.

(ஒள) அதனோடு ஏதேனும் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுதலாகாது, அல்லது

(ஃ) அதன் சார்பில் தகவலைப் பரப்புவித்தலாகாது.

எனவும் மேற்படி வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வினைகள்

கோப்புப்படம்

பட மூலாதாரம், GETTY IMAGES

 
படக்குறிப்பு, கோப்புப்படம்

இது இவ்வாறிருக்க, தடைசெய்யப்பட்டுள்ள அமைப்புகளான சிலோன் தௌஹீத் ஜமாஅத் மற்றும் சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் ஆகியவை, தாம் தடைசெய்யப்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக கடந்த வாரம் அறிவித்திருந்தன.

எவ்வாறாயினும் சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் தடைசெய்யப்பட்டால், நீதிமன்றம் தீர்மானிக்கும் வரை தமது சகல செயற்பாடுகளையும் நிறுத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் அந்த இயக்கம் கடந்த வாரம் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையொன்றில் தெரிவித்திருந்தது. 

மேலும் ஈஸ்டர் தினத் தாக்குதலை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழு, எவ்வித நியாயமான ஆதாரங்களுமின்றி தமது இயக்கத்தை ஒரு தீவிரவாத இயக்கமென அடையாளப்படுத்தி இருப்பதையிட்டு தாம் விசனமடைவதாகவும், தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க தாம் ஒரு தடவையேனும் அழைக்கப்படவில்லை என்றும், இது உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இயற்கை நீதியின் நியமங்களுக்கு முரணானதாகும் எனவும் சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் குறிப்பிட்டிருந்தது.

அதேவேளை தம்மீதான தடையை, இலங்கை முஸ்லிம் சிவில் சமூகத்துக்கு எதிரான நடவடிக்கையாகவே தாம் கருதுவதாகவும் சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

https://www.bbc.com/tamil/sri-lanka-56741831

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை – வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

 

ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா உட்பட பதினொரு இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று (புதன்கிழமை, அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

குறித்த அமைப்புகளை தடைசெய்வதற்கான அனுமதியினை சட்ட மா அதிபர் கடந்த சில வழங்கியிருந்தார்.

இந்நிலையில் தற்போது அந்த அமைப்புகளை தடைசெய்யும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொழுத்துடன் வெளியாகியுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ், 11 அமைப்புகளும் தடை செய்யப்படுவதாக, குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, யுனைடெட் தௌஹீத் ஜமாத், சிலோன் தௌஹீத் ஜமாத், இலங்கை தௌஹீத் ஜமாத், அனைத்து இலங்கை தௌஹீத் ஜமாத், ஜமியத்துல் அன்சாரி சுன்னத்துல் மொஹமதியா போன்ற அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

அத்தோடு தாருல் ஆதார் @ ஜமியுல் ஆதர், இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கம், ஈராக் மற்றும் சிரியா ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு, அல்கொய்தா, சேவ் த பேர்லஸ் மற்றும் சூப்பர் முஸ்லீம் போன்ற அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

 

இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை – வர்த்தமானி அறிவிப்பு வெளியானது – Athavan News

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிப்பு: அரசு அதிகாரபூர்வமாக அறிவிப்பு

 
Banned-696x365.jpg
 20 Views

இலங்கை அரசு 11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்வதாக தெரிவித்து, வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று புதன்கிழமை, ஏப்ரல் 13 நள்ளிரவு வெளியிட்டுள்ளது.

குறித்த அமைப்புகளை தடைசெய்வதற்கான அனுமதியினை சட்ட மா அதிபர் கடந்த வாரம் வழங்கியிருந்த நிலையிலேயே, தற்போது அந்த அமைப்புகளை தடைசெய்யும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியாகியுள்ளது.

1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ், 11 அமைப்புகளும் தடைசெய்யப்படுவதாக, அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்டுள்ள அமைப்புகள்

1. ஐக்கிய தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (UTJ)

2. சிலோன் தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (CTJ)

3. சிறீலங்கா தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (SLTJ)

4. அகில இலங்கை தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (ACTJ)

5. ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா (JASM) மறுபெயர் ஜம்மாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹமதியா ஒழுங்கமைப்பு மறுபெயர் அகில இலங்கை ஜம் – ஈ – அது அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா மறுபெயர் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா கழகம் மறுபெயர் ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா

6. தாறுல் அதர் மறுபெயர் ஜாமிஉல் அதர் பள்ளிவாசல் மறுபெயர் தாறுல் அதர் குரான் மத்ரச மறுபெயர் தாறுல் அதர் அத்தபாவிய்யா

7. சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (SLISM) மறுபெயர் ஜம்இய்யா

8. இராக் மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு (ISIS) மறுபெயர் அல் – தௌலா அல் – இஸ்லாமியா தௌலா இஸ்லாமியா

9. அல்கய்தா அமைப்பு

10. சேவ் த பேர்ள்ஸ் அமைப்பு மறுபெயர் சேவ் த பேர்ள் சங்கம்

11. சுப்பர் முஸ்லிம் அமைப்பு

ஆகியவை நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடைசெய்யப்பட்டுள்ளன.

நாட்டின் சமாதானத்தைத் தொடர்வதை உறுதிப்படுத்தும் பொருட்டு நன்நோக்குடனும் தேசிய பாதுகாப்பு, பொதுமக்கள் ஒழுங்கு மற்றும் சட்டவாட்சி என்பவற்றின் நலனிலும் மேற்கொள்ளப்பட்ட இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளை முன்னெடுப்பதில், மேற்படி அமைப்புகள் தடைசெய்யப்படுவதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019 ஈஸ்டர் தாக்குதலுக்கு பின் இஸ்லாமியவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.

 

https://www.ilakku.org/?p=47290

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.